Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-13

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என்..வெண்ணிலா-13
போ,நிலா அவ ஒண்ணு செட் ஆகல...

ம்ம் நம்பிட்டேன், நிலா சொல்லி சிரிக்க..

உனக்கு தெரியாதடி, நான் அப்ப ரொம்ப வெக்ஸா இருந்தேன்,பர்ஸ்ட் கல்யாணம் வேற சரியா இல்லையா, வெளிய வேறமாதிரி பேச ஆரம்பிச்சாங்க. அப்பறம் இந்த ஷாலு ஷூட்டிங்ல என்னை பார்த்து அப்படியே மயங்கிட்டா தெரியுமா.

க்கும், என்று உதட்டை சுழித்தால் நிலா.

உடனே டேட்டிங் போலாமா என்று கூப்பிட்டா. பார்க்க ஃபிகரா இருக்கா ,சரி நமக்கு இவதான் செட்டாவா நினைச்சு டேட்டிங் போனோம்.

போதும் மகி தன் கைகளை ஈஷ்வர் முன் நீட்டினால், உங்க இரண்டுபேரோட ரொமன்ஸ் கேட்க வரல... என்ன விஷியமோ அத சொல்லு.

சரி நிமிர்ந்து ஈஷ்வர் உட்கார்ந்து, தன் கதையை சொல்ல, இரண்டுபேரும் ஈ.சி.ஆர்ல ரிசார்ட்க்கு போனோமா, சாயந்தரம் மணி ஆறு இருக்கும் , நல்ல குளிரான தென்றல் வீச, அவ பக்கத்தில நான்,சும்மா அப்படியே ஜீவ்வுன்னு இருந்துச்சு நிலா, கிட்ட கிட்ட நெருங்கி உட்கார்ந்தோம். ஷாலு மெல்ல என் தோள்மீது கையை வச்சா.

இன்னும் கிட்ட வா நிலா, நான் என்ன செஞ்சேன் தெரியுமா, அவ என்னையை விழுங்கற மாதிரி பார்த்தாளா, நிலா என்னையே பாரு, நானும் அவளை பார்த்துட்டே இப்படி கண்ணத்தை மெல்லமா தொட்டேனா,நிலாவின் கண்ணத்தை தொட்டான்.

மகி , உன் கையை எடு, நீ எந்த டெமோவும் காட்டதேவையில்ல.

பே, பக்காவா சீன் போயிட்டிருந்தது. நீ கெடுத்திட்ட, அப்பதான் சீன் நடக்கிற மாதிரியிருக்கும் நிலா, அப்படியே அவ லிப்ஸ் கிட்ட போனேனா, ஓரு இன்ச் கேப் ,
அப்படியே நிலா அவனையே பார்த்து மெய் மறந்திருந்தாள்,இன்னும் நெருங்கி அவள் முகத்தின் அருகே சென்றான். இரு கண்களும் சந்தித்துக் கொண்டன, நிலாவின் இதயமே வெளியே குதித்து ஓடிவிடும் அளவுக்கு அடித்துக் கொண்டிருந்த்து.

தொடர்ந்த ஈஷ்வர், கிஸ் அடிக்க போக சொல்ல வாமிட் வந்துடுச்சு எனக்கு...

வாட்-நிலா.

வாமிட் அதான் வாந்தி வந்திடுச்சு ஓடி போய் வாமிட் எடுக்கிறேன், வயிறு குமட்டுது , என்ன பண்ணறதேன்னு தெரியல, எனக்கு பிடிக்காத ஸ்டாபெர்ரி லிப்ஸ்டிக் போட்டிருந்தா நிலா, எனக்கு ஆகாது தெரியுமா. சரி திரும்ப அவகிட்ட போனா வாமிட் வருது, அந்த ஷாலு என்னைய பார்த்து நான் ஓரு ஆம்பளையே இல்ல நினைச்சு போயிடுச்சு, கண்ணத்தில் கையை வைத்தான், இது தெரியாத இந்த மீடியா மாடலிங் பொண்ணுமேல மயக்கம் என்று போட்டானுங்க, எங்க வாமிட் தான் வந்திடுச்சு.

இதை கேட்டு நிலா வயிற்றை பிடித்து புரண்டி புரண்டி சிரித்தாள். அய்யோ மகி சத்தியமா என்னால கண்ட்ரோல் பண்ண முடியில.

அடிப்பாவி, உன் புருஷன, அந்த பொண்ணு கேவலமா நினைச்சிருக்கு நீ சிரிக்கிற போடி அந்தபக்கம்.

நிலா தன்னை சமன் படுத்தி, ஈஷ்வரின் கண்ணங்களை தன் இரு கையால் தாங்கி, எங்கடா இருந்த இவ்வளவு நாளா, இந்த கடவுள் உன்ன முன்னாடியை எங்கிட்ட காண்பிச்சிருந்தா, ஓரு முறை பார்த்தாவே போதும், நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி அப்படியே கிட்நாப் செஞ்சி, நீ ஓகே சொல்லிருந்தா கல்யாணம் பண்ணிருப்பேன் இல்ல ரேப் பண்ணிருப்பேன்.

ஏன் இப்பதான் கல்யாணம் ஆச்சே, இப்ப பண்ணலாமே அத..

புரியாமல் விழிக்க,எதை

அதான் ரேப், ஐம் ரெடி, இரண்டு கைகளை மேலே தூக்கி நெட்டி முறித்து, கம்மான் பேப், சீக்கிரம் ரேப் பண்ணுடி...

போ மகி , நான் என் முதல் கல்யாணத்திற்கு முன் பார்த்தா சொன்னேன். எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு மகி. ஜாலி டைப் நீ, உன்கூட இருந்தா சிரிச்சிட்டே இருப்பேன் நான்.
அப்படி சொல்லாத நிலா, கோவம் வந்தா மகி மகியா இருக்கமாட்டான், ஜஸ்ட் ஆப்போஸிட். இப்போவாது ஒத்துக் கொள்கிறாயா, நான் யாரையும் கிஸ் பண்ணதில்ல. மூட்அவுட் ஆயிட்டான் இந்த ஈஷ்வர், எனக்கு தூக்கம் வருது நான் தூங்கிறேன் நிலா, படுத்துவிட்டான்.

சிறுது நேரம் கழித்து ஈஷ்வரின் நெற்றியில் படர்ந்த முடியை ஒதுக்கி, தன் இதழை குவித்து முத்தத்தை வைத்து நிமிர்ந்தாள். நிலா, நான் இன்னும் தூங்கல, ஈஷ்வர் கண்ணை மூடி பேச.

ச்சே , பேட் பாய் தூங்கு மகி, விட்டத்தை பார்த்து விழித்திருந்தாள், நான் யாருக்கும் கிஸ் பண்ணல சொன்னான், அப்ப மகியோட முதல் கல்யாணம், அவளுடன் எதுவும், நிலா படாறேன்று எழுந்தாள்.

கடவுளே மகி, என்று அவன் முகத்தை பார்க்க, ஈஷ்வர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். உடனே தன் தந்தையின் ரூம் கதவை தட்டினாள் நிலா. உறக்கத்தில் எழுந்து வந்த ராம், என்னடா நிலா என்று கேட்க.

அப்பா, மகி வாழ்கையில எதுவும் அனுபவிக்கல போல, நான் டாக்டர் நான்சியை பார்க்கனும்ப்பா, அவங்கிட்ட பேசனும், எனக்கு என்னுடைய மனநிலை தெரியனும்ப்பா, பீளீஸ்.

அம்மா நிலா, அவங்க அமெரிக்கா போயிருக்காங்க, வந்தவுடனே பார்க்கலாம், இப்ப நீ நல்லா ஆயிட்ட நிலா , அப்பா சொல்லுறேன் இல்ல எதுவும் மனசில நினைச்சிக்காதே போய் தூங்கும்மா. சரி என்று தலையை ஆட்டி சென்றாள்.

அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு ,ஈஷ்வர் எழுந்து பால்கனி முன் நின்று சோம்பல் முறித்து தோட்டத்தை பார்த்தான், அங்கே நீலா பவனை துரத்தி பிடிக்க ஓடினாள். என்னடா நீலாக்குட்டி இப்படி ஓடுறா , நம்ம நெஞ்சு இல்ல படபடக்குது, என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

ஏய் நிலா , பவனை ஏன் துரத்துற,மகி அவனை விடாதே பிடி.

ஈஷ்வர் பவனை பிடிக்க, அண்ணா மாட்டாத ஓடிடு சொல்லும் போதே வந்துவிட்டாள் நிலா,

மாமா, அப்பா சீக்கிரம் வாங்க, இருவரும் அங்கே வர, மாமா பிடிங்க ஈஷ்வரையும்,பவனையும் ... நான் எதுக்கு ஈஷ்வர் கேட்க.

அப்பவே சொன்னே போயிடு அண்ணா என்று, தலையில் எண்ணையை தேய்த்து பெஞ்சில் உட்கார வைத்து உடம்பில் எண்ணையை தேய்த்து மசாஜ் செய்தனர் வேலையாட்கள்.

அழுதுக் கொண்டே உட்கார்ந்திருந்தான் ஈஷ்வர்,ஏய் நிலா இங்க வாடி...

என்ன ஈஷ்வர், ஓரே எண்ணையா இருக்கு, என் தலையெல்லாம் பாரு...

எண்ணையை தேய்ச்சி குளித்தால் உடம்புக்கு நல்லது மகி, நேத்து கண்ட இடத்துக்கு வேற போறே, கண்டதை குடிக்கிற, ம்ம் அமைதியா குளிச்சுட்டு வா.

குளிச்சுட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தான் ஈஷ்வர், தன் புடவை முந்தனையை இடுப்பில் சொருக்கி, டவல் எடுத்து ஈஷ்வரின் தலையை துவட்டினாள், உட்கார்ந்திருந்து தலையை காட்ட, அவன் கண், நிலாவின் வயிற்று பகுதியை பார்த்தது. சற்று தலையை நிமிர்ந்து மேலே பார்க்க ,ச்சே தப்பு என்று கண்ணை மூடிக்கொண்டான், அந்தப்பக்கம் பார்த்தி போக மாமா என்று கூப்பிட்டாள் நிலா ,இன்னிக்கு எப்படின்னா இடுப்ப டச்சு பண்ணனும்.
கண்ணை திறந்து கையை அவள் இடுப்பில் வைக்க, என்ன வெள்ளை பணியனா தெரியுது ஈஷ்வர் நிமிர்ந்து பார்க்க அங்கே பார்த்தி,

அப்பா..பா, ஈஷ்வர் டேன்ஷனா முறைக்க, டேய் சின்ன வயசுல இப்படித்தான் பிடிச்சிப்ப, அந்த பழக்கம் உன்னவிட்டு போகல கையை எடுடா சொல்லவும்.

எதிரே உட்கார்ந்திருந்த விக்கியும்,பவனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள், துண்டை தூக்கி அவர்களின் மேல் எறிந்துவிட்டு ரூமுக்குள் சென்றான்.

ஏன்டா சிரிக்கிறீங்க, அவன் ஏன் இப்படி போறான்,

பின்ன அண்ணிதான துவட்டி விட்டாங்க, நடுவில நீயேன் போனேப்பா.

உள்ளே வேலையிருக்கு உங்க அண்ணி எங்கிட்ட விட்டுட்டு போனா அதுக்கென்ன இப்போ
,
உன்ன எப்படி அம்மா கட்டிக்கிட்டாங்க... தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றான் விக்கி.

நிலத்தையும்,தோட்டத்தையும் பார்க்க காரில் இறங்கினார்கள் ஈஷ்வரும்,நிலாவும். நிலா , இங்க பாரு,இதுதான் நான் படிச்ச ஸ்கூல், நான் விளையாடின ஆலமரம், இங்க தான் நான் சைக்கில்ல விழுந்தேன் சொல்லி போரடிகாதே, சரியா, நிலா அவனை கேவலமா ஓரு பார்வையை பார்த்து இந்த ஊரிலே நான் படிக்கல போதுமா.

வரப்புல நடக்கும் போது செருப்பு போட கூடாது மகி, கார்லே விட்டுடலாம். இருவரும் வரப்பின்மேல் நடக்க ஆரம்பித்தார்கள், நிலா இது ஏன் சின்ன பாதையா போட்டிருக்காங்க, ஸ்லிப் ஆயிடுமோ. மகி பார்த்து வா, என் கையை பிடிச்சிக்கோ.

அவள் கையை பிடித்துக் கொண்டே நடந்து வந்தான். மகி இங்க பாரு எதிர்க்க ஓரு எரும வருது பேரு மாதவன் , அவன கட்டிக்கல கோவம் முறைப்பையன் தான், யாருரா அவன் ?என்று ஈஷ்வர் எட்டி பார்க்க,

எதிரே வரும் பையனை பார்த்து,யாரு இவனா, ஈஷ்வர் சிரித்துவிட்டு ஆறாவது படிப்பானா,
ஆமாம் மகி தள்ளிவிட்டு போயிடுவான், பீ கேர்புல்.

ஏன்டி, நீயே ஓரு டேரர் பீஸ்ஸு, இந்த பொடியனுக்கெல்லாம் பயப்படுற.
கிட்ட மாதவன் வர, என்ன மாது ஸ்கூல் போகல.

அவளை முறைத்து கொண்டே ம்ம் லீவ்வு... அவர்களை தாண்டி நடக்க, அய்யோ நிலா தள்ளிட்டான் ஈஷ்வர் கத்த, இருவரும் பேலன்ஸ் இல்லாமல் நிலத்தின் சேற்றில் விழுந்தார்கள்.

ஏய் எரும மாடு அறிவு இருக்கா,

எல்லாம் இருக்கு, உன் புருஷனா, இவனையா கட்டிக்கிட்ட என்னைவிட சுமார்தான். இந்த மாமனை ஏமாத்திட்ட இல்ல.

மவனே தம்மாதுண்டு இருந்துட்டு என்ன பேச்சு பேசுது, உனக்கு என் பொண்டாட்டி வேணும்மா, சேரை வாரி அந்த பையன்மேல் எறிந்தான் ஈஷ்வர்.

ஹலோ உன்னால முடிஞ்சா இன்னிக்கு நைட் ஆன்லைன் ஃபயர் பீரி கேம்முக்கு வா ,யார் ஜெயிக்கிறாங்க பார்க்கலாம் சொல்லி ஓடி சென்றான்.

வரேன்டா, வரேன்டா ,நீயா நானா பார்க்கலாம் ஈஷ்வர் கத்த, மகி கோவப்படாத முறைப்பையன்னா இப்படிதான் இருப்பான், விடு....

ஏய் இது உனக்கு ஓவரா இல்ல, நீ ஏன் எல்.கே.ஜி லவல்ல இருக்கேன்னு இப்பதான் தெரியுது ....
நிலா டிரஸ் முழுக்க சேறா இருக்கு... என்ன செய்யறது

மகி அங்க பம்புசெட் ஓடுது பாரு, கீளின் செஞ்சிக்கலாம்......
----நிலாவை பிடித்தேன்


,
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஹா ஹா ஹா
ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்டிக் வாசத்திலே உம்மா கொடுக்க முடியாமல் டேட்டிங் போக முடியலையா, மகி?

ஹா ஹா ஹா
மகேஷ்வரனை கிட்நாப் பண்ணி ரேப் பண்ணியிருப்பியா நிலா?

ஹா ஹா ஹா
பொண்டாட்டி நிலான்னு நினைத்து அப்பா பார்த்திபனின் இடுப்பைத் தடவுறியே மகி?

ஹா ஹா ஹா
மாதவன் முறை மாப்பிள்ளையை விட்டுட்டு மகேஷ்வரனை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டே, நிலா?

அதனாலதான் ஆறாவது படிக்கும் நிலாவின் முறைப்பையன் சேற்றில் தள்ளி விட்டுட்டானா?
ஹா ஹா ஹா

அய்யய்யோ
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது லக்ஷு டியர்

ஹா ஹா ஹா
நைட் ஆன்லைன் ஃபையர் பீரி கேம்மில் என்னவெல்லாம் கலாட்டா நடந்ததுன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்கப்பா
 
Last edited:
Top