Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-15

Advertisement

lakshu

Well-known member
Member
2211
எப்படி வீடு வந்து சேர்ந்தார்கள் என்று இருவரும் உணரவில்லை. ரூமிற்குள் வந்தவுடனே வெடிக்க ஆரம்பித்தாள் நிலா.

ஈஷ்வரின் சட்டையை பிடித்து, எதுக்கு அவனை கூப்பிட்ட மகி... ச்சே இப்பதான் நிம்மதியா இருந்தேன்.

அய்யோ நிலா இப்படி நடக்கும் நான் நினைக்கல...

வேற என்ன நினைச்ச மகி, அவன் கூடவே போயிடுவேன் நினைச்சியோ..
“நிலா” என்று ஈஷ்வர் கத்த..

எதுக்கு நீங்க கத்திரீங்க.., எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா, நீ என்னை பார்த்து ஐ லவ் யூ சொன்னதும், என் வாழ்க்கைக்கு ஓரு அர்த்தம் வந்திடுச்சி நினைச்சேன். எல்லாமே பொய்யா மகி... சும்மா விளையாடின, இல்ல

ஏய் என்ன பேச விடுடி...நான் சொல்ல வரது காது கொடுத்து கேளு..

என்ன கேட்க சொல்லற...சாரிடி சப்ப கதை சொல்லுவே.

“உன்கிட்ட பேசவே முடியாது நான், என்ன சீ..” என்று பெட்டில் போய் உட்கார்ந்து தலையில் கையை வைத்தான்.

“என்ன சீசீ, நான் தான் சொல்லனும்டா ச்சீன்னு, கட்டின பொண்டாட்டிய எவனுக்கோ கூட்டி கொடுக்கிறீயா”.. பளாரு நிலா கண்ணத்தில் அடி விழுந்தது.

ஈஷ்வர் தன் முகத்தை கையால் தேய்த்து, “என்னடி சொன்ன...” அது அது நிலா கண் கலங்க அவனை பார்த்தாள், தப்பா பேசி விட்டோம் தெரிந்துவிட்டது அவளுக்கு கோவத்தில் வந்த வார்த்தைகள். உபயோகித்து விட்டாள் பிறகு யோசித்து என்ன பயன்.கோபத்தில் நாம் பேசும் வார்த்தை மற்றவர்கள் மனதை புண்படுத்தும்.

மறுபடியும் கேட்டான் ஈஷ்வர்,” என்னடி சொன்ன”...

அது தப்பு தான் மகி, ஈஷ்வர் தன் கையை அவள் முன் நீட்டி, நீ வாயை மூடுடி.

“அந்த எரும எப்படியோ என் நம்பர் தெரிந்து போன்போட்டுட்டே இருந்தான், ஏதோ மன்னிப்பு கேட்கனும் சொன்னான். ஆனா அந்த நாயி இப்படி பேசும் நான் நினைக்கல...இன்னும் கூட எனக்கு உங்க பிரச்சனை தெரியாது”.

“எது உன் வாயிலிருந்து வர கூடாது நினைச்சேன்னோ , அது வந்துடுச்சு, உனக்கு என் மேல எந்த பிடிப்பும் இல்லை,நீ என்னைய காதலிக்கல. நான் கிட்ட வரும்போது நீ விலகிதான போனே அப்பவே புரியாத போச்சு”.

“ஓரு மூன்று நாள் சந்தோஷமா இருந்தேனா, போயிடுச்சு”... மகி என்று நிலா பேச வர..
“நோ.. என்கிட்ட வரக்கூடாது நீ இத்தோட முடிச்சிடு..கல்யாண ஆக சொல்ல எப்படி வந்தியோ அப்படியே இரு.. என்மேல உரிமை எடுத்து ஏதாவது செஞ்சே.அசிங்க படுத்திடுவேன்.”

“மகி...”

நான் கிளம்பறேன், தன் பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான். ஹாலில் உட்கார்ந்திருந்த தன் அப்பா பார்த்தியிடம் நான் என் ஃபிரண்டை பார்த்துட்டு ஊருக்கு வந்திடுறேன் .அவர் பதிலை காதில் வாங்காமல் கிளம்பிவிட்டான்.

நிலா ஏன்ம்மா போறான் ,பார்த்தி கேட்க.. “அது மாமா எங்களுக்குள்ள சின்ன பிரச்சனை அதான் கோவிச்சிட்டாங்க. எங்க மாமா போறாரு”.

அண்ணி அண்ணா ஃபிரண்டு பூவரசன், அதாங்க நம்ம சுந்தர பூவரசனின் ஹீரோ. அவர் ஊரு பக்கத்தில தான் ,இரண்டு பேரும் பயங்கற குளோஸ் அண்ணா கூட ஊட்டியில படிச்சாங்க பவன் நிலாவிடம் கூறினான்.

அவருக்கு இப்படி ஓரு பிரண்டா...

அய்யோ அண்ணி நீங்க எவ்வளவோ பரவாயில்ல. நம்ம சுந்தரியில்ல அதான் பூவரசனோட ஓய்ப் செம்மயா இருப்பாங்க தெரியுமா. இவன்தான் வேனும் ஓத்த கால்ல நின்னு கல்யாணம் பண்ணாங்க பாரு. அதயெல்லாம் கேட்டீங்க.

பவன் அவங்கள பத்தி சொல்லேன்... (படிக்காதவங்க அந்த கதையை படிச்சீங்க புரியும்)அனைத்தையும் சொன்னான்.

அண்ணா மாதிரியே தான் அவன் பிரண்டு பூவரசு அண்ணாவும், திருந்த மாட்டாங்க விடுங்க அண்ணி.. வந்துடுவான் இரண்டு நாள்ல...

ஆமாம்மா , அவனுக்கு கஷ்டமா இருந்தா அங்கதான் போவான். நீ கவலை படாதேம்மா.
வேப்பம்பட்டு பண்ணைவீட்டில், மச்சான் என்று ஈஷ்வர் உள்ளே வர, டேய் மச்சான் எப்படிடா இருக்க கட்டி அனைத்துக் கொண்டான் பூவரசு... கிச்சனிலிருந்து பரதா வெளியே வர,மாமா சொல்லி ஈஷ்வர் பரதனை அனைத்துக் கொண்டான்.

ஈஷூ எப்படிப்பா இருக்க... அவன் முக வாட்டத்தை கவனித்த பூவரசு. ஈஷ்வரு முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம். மாமா எல்லாம் வாங்கிட்டு வா என் மச்சான் மனசு சரியில்லாம வந்திருக்கான் போல, முகமே சரியில்ல. அவனுக்கு பிடிச்ச சரக்கு வாங்கு.

இரவு மணி 11.00 முனு பேரும் ஒண்ணா உட்கார்ந்து குடித்தார்கள். மச்சான் எனக்கு வாழவே பிடிக்கலடா.

ஏன்டா தங்கச்சிக்கூட சண்டையா என்றதும், ஆச்சரியமாக ஈஷ்வர் பார்க்க.

ஷாக் குறை மாப்பிள்ள, ஊரில இருக்கிற எல்லா புருஷனுக்கு இதுதான் பிராப்ளம், ஏன் பூவரசே எடுத்துக்கோ...

போதை ஏற ஈஷ்வர் ,பரதா உனக்கு தெரியாது நான் அவளை எவ்வளவு லவ் பண்ணுறேன் தெரியுமா.

எனக்கு தெரியுமுன்னு இல்லடா, நிலாவுக்கு தெரியுமா...

ம்ம் தெரியிலையே மச்சான்...என்னை பார்த்து என்ன கேட்டா தெரியுமா, ஐ பில் வெரி பேட்...எல்லாவற்றையும் சொன்னான்.

தப்பு உன்மேலதான இருக்கு, நீ முன்னாடியே நிலாவுக்கு சொல்லிருக்கனுமில்ல..

அப்பதான் பிரபோஸ் பண்ணேன்டா, எரும இந்த அரவிந் வருவான் நினைக்கவேயில்ல.

டேய் ஈஷு இப்பதான் பிரபோஸ் பண்ணியா,டேய் கல்யாணமாகி மூனு மாசம் ஆயிடுச்சு. இப்பதான் பத்தாவது படிக்கும் பையன் மாதிரி லவ்வ சொல்லுற. இந்நேரம் மேட்டர் முடிச்சு பிள்ளையை கொடுத்திருக்கனும். சரிதான் நீ பூவரசு நன்பன்தான இப்படிதான் இருப்ப...நம்ம சுந்தரி புத்திசாலி..

மாமா அவன பேச விடு...மச்சான் அந்த அரவிந்த என்ன பண்ண...

அதையேன் கேட்கற இருக்கிற கோவத்தில நானும் ரகுவும் போய் இரண்டு மிதி மெதிச்சு, தொட வந்த கையை உடைச்சிட்டுதான் இங்க வந்தேன். பரதா,நான் எவ்வளவு ஜென்டில்மேன் உனக்கு தெரியாது.

அய்யோ ஈஷ்வர் பொண்ணுகளுக்கு ரௌடிய தான் பிடிக்கும். வேணா சொல்லுவாங்க.. அப்படின்னா வேனும் அர்த்தம் அப்படியே மனசிலே வச்சிருப்பாங்க நம்மேல இருக்கும் காதல...-பூவரசு.

பாரு அனுபவஸ்தன் பேசறான் பரதா கவுண்டர் கொடுக்க...

டேய் ஈஷூ, தங்கச்சிய அடிச்சியா..முகத்தை தேய்த்துக் கொண்டு ஈஷ்வர், ஆமாண்டா உனக்கு ஏற்கனவே தெரியும் முதல் கல்யாணம் அது கொடுத்த வடு மறையிலடா மச்சான்.
இது நம்ம பூவரசா இருந்தா ,வெளியே கத்திட்டு உள்ள போய் சுந்தரி கால்ல விழுந்துடுவான் ஈஷூ, உண்மையாயில்லையா கேளு...

ஆமாம் அவ என் உயிரு, நான் என்ன வேணா செய்யுவேன். மூவரும் சிரிக்க. முற்றத்தில் பெட்டை விரித்து படுத்தார்கள். மச்சான் அங்க பாரு கையை நீட்டி மேலே காட்டினான் ஈஷ்வர் , என்ன என்று இருவரும் பார்க்க.

அன்றும் பௌர்னமி நிலா தகிக்க , எழுந்து நின்று தன் கையை நெஞ்சில் வைத்து, நிலா.. என்.. வெண்ணிலா மாமா...

மச்சான் நான் பாட்டுபாடவா...
ஆடு,மாடு, கோழி குருவியெல்லாம் எழுந்திட போதுடா. தன் குரலை ஸ்ருதி ஏற்றி.

“நிலா நிலா ஓடி வா.
நில்லாமல் ஓடி வா.
மலை மீது ஏறிவா.
மகியை கொஞ்ச ஓடி வா...”

டேய் உனக்கு போதை அதிகமாயிடுச்சு...பரதா
சரி வேற பாட்டு பாடுறேன்.

“வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை”

டேய் ஈஷ் என்ன விளையாட்டுடா...பரதா கேட்க

கண்ணை அடித்துக்கொண்டே அப்பா அம்மா விளையாட்டு என் வெண்ணிலா கூட. ஐ லவ் நிலா வெரி மச் மாமா....

ஈஷ்வரை இருவரும் அடக்கி படுக்க வைக்க. பூவரசு என் நிலா சாப்பிட்டாலா தெரியலடா...
போன்போட்டு கேளுடா, ஆனா நான் பேச மாட்டேன், அவ என்னைய புரிஞ்சிக்கல. நிலாவுக்கு போனை போட்டான், ரிங் போக,பூவரசு வாங்கி பேச ஆரம்பித்தான்.

போனை எடுத்தவுடன் மகி சாரி மகி எங்க இருக்க நிலா பேச,தங்கச்சி நான் பூவரசு பேசேறன்ம்மா...அண்ணா அவரு சாப்பிட்டாரா ..

ம்ம்ம் நீ சாப்பிட்டியா கேட்க சொன்னாம்மா.

இல்லண்ணா, நிலா போய் சாப்பிடு, அவன் நாளைக்கு வருவான்.. கோபம் குறைஞ்சா நார்மல் ஆயிடுவான். அவள் அங்கே அழுவ. அழாதாம்மா பூவரசு சொல்ல. அவனை பார்த்துக்கோ வெளியதான் பெரிய தொழிலதிபர் ஆனா சின்ன பிள்ளை மாதிரிம்மா அவன் மனசு. பார்த்துக்கோடா வைக்கவா.

சரியண்ணா.

பரதா உன்மேல கால போடவா ஈஷ்வர் கேட்க.

பரதா, அவனை பார்க்க, தினமும் அவமேல கால போட்டு பழக்கம் அதான். இந்தபக்கம் பூவரசனும் நானும் என்று காலை போட்டான்.நடுவில் படுத்து மாட்டிக் கொண்டான் பரதன்.
காலையில் எழுந்து அவனை சென்னைக்கு பேக் பண்ணி அனுப்பி வைத்தான் பூவரசன். டேய் சுந்தரி குட்டிம்மாவ கேட்டதா சொல்லுடா...மீட்டிங் வேற இருக்குடா ..பாய் என்று கிளம்பினான்.

அடுத்த நாள் அனைவரும் கல்யாணம் முடித்து சென்னைக்கு வந்தனர். தன் கணவனை பார்க்க மேலே ஓடி சென்றாள் நிலா.அவள் குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். ஈஷ்வரை பார்த்தவுடன் தான் அவளுக்கு திருப்தி.

கீழே இறங்கி கமலாம்மாவிடம் அவனுக்கு பிடித்த டிபன் செய்ய சொன்னாள்.

பொறுமையாக கீழே வந்தான், பார்த்தி ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, அவரை பார்த்து எப்ப வந்திங்க என்றான்.

ஆறு மணிக்கு வந்தோம்டா மீண்டும் பேப்பர் படிக்க ஆரம்பித்தார்..நிலா அவனிடம் பேச வர, முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு போனான்.

இப்படியே மூன்று நாட்களாக பேசாமல் ஆட்டம் காட்டினான் நிலாவிடம், இவளும் விட்டுவிட்டாள் கோவம் குறையட்டும் அப்பறம் பார்த்துக் கொள்ளலாம்.

நிலா இன்னிக்கு சீக்கிரம் கிளம்பு , புது கரஸ்பாண்ட் வருவர் நாம்ம தான் இன்வையிட் பண்ணனும்.

போங்கப்பா ஏன் உன் பிரண்ட் அவங்களுக்கு வித்தாங்க, அதுவும் காளியப்பன் MLA வாங்கிட்டாங்க சொல்லுறாங்க. எனக்கு பிடிக்கவேயில்லை.

போய் சீக்கிரம் கிளம்பலாம் வாம்மா , நீயும் வாடா பார்த்தி.

கரஸ்பாண்ட் ரூமில் பார்த்தி,ராம் உட்கார்ந்திருக்க, தலைமை ஆசிரியர் வாழ்த்து சொல்லி விடைபெற்றார். ப்யூன் நிலாவிடம் சென்று , உங்கள ராம் ஸார் கூப்பிட்டாங்க மிஸ் என்றார்.

எதுக்கு இப்ப அப்பா கூப்பிடுறாரு அந்த MLA பையன் பயங்கற பொறுக்கி கேள்விப்பட்டேன். ரூமை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

வாம்மா பார்த்தி உள்ளே கூப்பிட, ஸாருக்கு விஷ் பண்ணும்மா என்றார். இவள் நிமிர்ந்து பார்க்க.. இவங்கதான் மேக்ஸ் மிஸ்ஸா கேட்டு நின்றான் நம்ம ஈஷ்வர்.

கண்களை விரித்து மகி,மாமா நம்மதான் வாங்கினோம்மா. ஆமாம்மா அன்னிக்கு ஈஷ்வர் சென்னைக்கு வந்ததே, இதுக்குதான்ம்மா என்றார் ராம்.

சரி நீங்க பேசிட்டு இருங்க ,நாங்க ரவுண்ட்ஸ் போயிட்டுவரோம்.

நீங்கதான் நிலா மிஸ்ஸா..அவள் அவனை பார்த்துக் கொண்டேயிருக்க, அவளை சுவற்றில் சாய்த்து. என்ன ஒரே கம்பளைன் உன் மேல, ம்ம் பவன் ஸ்டூடண்ட் அண்ணாவ வர வச்சி ஒரே சைட் அடிச்சியாமே...

உனக்கு அவங்க அண்ணனை கணக்கு பண்ண தெரியலையாமே ,ஓரே புகார் உன் மேல. சொல்லுடி ...

வெட்கப்பட்டு நிலா ,அவன் சட்டை பட்டனை திருகி கொண்டே, ஏன் நீங்கதான் வாங்கினிங்க சொல்லலை.

அது சப்ரைஸ்ஸா இருக்குனும். அவள் நான்காவது பட்டனையும் கழட்ட , இதுக்கு கீழே பெல்ட்தான் இருக்கு பரவாயில்லையா நிலா என.

ச்சீ என்று தலையில் அடித்துக் கொண்டாள். அவள் கையை பிடித்தான். கோபம் போயிடுச்சா மகி, அவன்மேல் சாய்ந்து கேட்டாள். புருஷன சமாதானம் செய்ய தெரியில்ல உனக்கு, சலித்துக்கொண்டான்...ஈஷ்வர்.

----நிலாவை பிடித்தேன்.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Nice epi...poovarasan vandhutanga... nila eshwar rendu perum samaathaanam aagitanga...nice....
 
Top