Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிழல்முகம் 2

Sesily Viyagappan

Well-known member
Member
அத்தியாயம்:2
இது தான் ராக்கியா?அதிர்சியாய் கேட்டனர்... அங்கு அடிபட்டு கிடந்த நாயை பார்த்து,...


என்னாது நாயா?வாய பெனாயிலு ஊத்தி கழுவுங்க..என்றவள் அதனின் தலையை வருடியபடியே"இது என்னோட தம்பி"என்னோட சந்தோஷத்துலயும் ,சோகத்துலையும் யங்கூடவே இருப்பான்..அப்பா ,அம்மா இல்லாத யனக்கு தொனையேஇவன் தான்..இப்போ அடிபட்டு கெடக்கான்..என்று கூறியவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது...


அதுவரை அவள் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த ப்ரனேஷிற்கு ஆச்சரியமாய் இருந்தது..ஒரு மனிதன் அடிபட்டு கிடந்தாலே கண்டு கொள்ளாமல் போகிறவருக்கு மத்தியில் ஒரு ஐந்தறிவு படைத்த வாயில்லா ஜீவனிற்காக அவள் கண்ணீர் சிந்துவது அவனுக்க வியப்பாய் இருந்தது..இதுவரை அவளது கண்களை மட்டுமே பார்த்து பேசியவன் இப்போது அவளை இமைக்க மறந்து பார்த்தான்...அவளை அணு அணுவாய் ரசிக்க தொடங்கினான்..மையின்றி பெரிதாய் இருந்த மான் விழிகளில் வந்து போன மாற்றங்கள் அவனுக்கு பிடித்திருந்தது...எந்தவித ஒப்பனையும் இன்றி பளிங்கு போல் மின்னிய அவளது நிலாமுகம் அவனுக்கு பிடித்திருந்தது..அந்த முகத்தில் இருந்த ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது..அது என்ன என்று அவனால் கணிக்க முடியவில்லை..ஒட்டு மொத்தமாய் அவளை அவனுக்கு மிக மிக பிடித்திருந்தது..இந்த நிமிடமே அவளது கரம் பற்றி அவளை தோளில் சாய்த்து "உனக்கு நானிருக்கிறேன்"என்று ஆறுதல் சொல்ல அவனது உள்மனம் உந்தியது..இப்படி அவளை ரசித்தவன் மனதில் அவன் அனுமதியின்றியே அவள் இதயம் புகுந்தாள்...

டேய் பிரனா "ஏன்டா அந்த பொண்ண இப்படி வச்ச கண்ணு வாங்காம பாக்குற"அவ முகத்துல எதாவது எழுதி ஒட்டியிருக்கா என்ன, என்று கேட்டவன் அவளது முகத்தை குறுகுறுவென பார்த்தவன்"என் கண்ணுக்கு ஒன்னும் தெரியலையே"என்றவனை முறைத்த ப்ரனேஷ்"அவள் வேதனை படுவதை பொறுக்க முடியாதவன்"டாக்டர் எவ்வளவு செலவானாலும் பராவால்ல...நீங்க ராக்கிய எப்படியாவது காப்பாத்திடுங்க" என்றவன் கவிலாஷின் பாக்கெட்டிலிருந்து பர்ச்சை எடுத்து"அதிலிருந்த பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தான்...இதுவரை அவ்வளவு பணத்தை மொத்தமாய் பார்க்காத அவர்கள் தன் கண்களை உருட்டி அந்த பணத்தை முறைத்து பார்த்தனர்....

கவிலாஷ் அவனை வெட்டவா ,குத்தவா என்பதை போல் பார்த்தான்..

மன்னிச்சுக்கோ தல உன் மனசு தெரியாம திட்டி புட்டேன்..என்றவள் இருவரிடமும் மன்னிப்பு கேக்க...

பணத்த பாத்ததும் எப்படி பேசுறா..என்று சிலுத்து கொண்டான் கவிலாஷ்..

இந்தா இதான் என்னோட நம்பர்..எதாவது வேணுனா கோல் பன்னு என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப முயல..ஒரு நிமிஷம் என்றவள் பிரனேஷின் கையில் அவன் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க, அவன் புரியாமல் பார்த்தான்..தல உன்ன இங்க இட்டாந்தது பணம் பறிக்க இல்ல..உங்க கவன கொறவால இன்னா நடந்ததுனு காட்ட தான்..நீ நெனக்கலாம் இன்னாட ஒரு நாயிக்காக வேண்டி இவ்ளோ பேசுறாளேனு..அதும் உசுரு தான..உசுரோட மதிப்பு இன்னானு எனக்கும் தெரியும் தல...என்று வலியோடு கூற ப்ரனேஷ் மொத்தமாய் அவளிடம் சரணடைந்தான்...

பரவாயில்ல இத நீயே வச்சிக்கோ ..என்று வற்புறுத்த..ஒழைக்காம துண்ணுற காசு உடம்புல ஒட்டாது தல..என்று பெரிய தத்துவத்தை கூற...

சரி நீ என்ன வேலை பாக்குற என்றான்..

நான் இன்னா கலக்டெருக்கா படிச்சேன்..ஏழாப்பு படிச்சேன்..இங்க ஒரு தள்ளுவண்டில ஆயா இட்லி கட போடும்..அதுக்கு தொனையா நின்னா ஒரு நாளைக்கு நூறுவா குடுக்கும்..இன்னா பொழப்பு தல...துண்ண வர நாயெல்லாம் மொறச்சி மொறச்சி பாக்க சொல்லோ அடி வயித்துல எதோ உருளும்..அதுமட்டுமா தல எத்தினி தபா துன்ன வரவனுவோ என்னான்ட பிரச்சன பண்ணினுகானுவோ தெரியுமா...அந்த கெழவி இதெல்லாம் கண்டுக்காது...அதுக்கு யாவாரம் தான் முக்கியம்..இஷ்டமுனா பாரு இல்லனா போனு சொல்லும்.. அதனால யாராண்டையும் எது கேட்டுனுகிறது இல்ல..நாள பின்ன பிரச்சனையாகி தப்பா எதும் நடந்துட கூடாதுல ..அதனால தான் என்று நெருங்கி பழகியவனிடம் கூறுவது போல் கூறினாள்...

ஒரு நிமிடம் அவள் கூறியதை கேட்டு வருந்தியவன். நாளைக்கு எனக்கு கோல் பண்ணு..இந்த பணத்துக்கு புது துணி எடுத்துக்கோ...என்றான்..


தல நீ இன்னா சொல்ற..எனக்கு ஒன்னிமே புரியல...நான் எதுக்கு புது சொக்கா எடுக்கனும்...

இங்க பாரு..நாளையிலேருந்து உனக்கு என்னோட கம்பெனில வேலை...அதுக்கு அட்வான்ஸா இத வச்சிக்க என்றான்...இன்னா சொல்ற பாசு ..மெய்யாலுமா..இன்னால நம்பவே முடில்ல..என்று தன் முட்டை கண்ணை விரித்து அவள் கேட்ட அழகில் சொக்கி போனான்...பாசு இன்னா வேலை பாசு..என்றாள் ஆர்வமாய்...


நீ படிச்ச ஏழாப்புக்கு உனக்கு கலக்டர் வேலையா குடுப்பாங்க..என்றான் கவிலேஷ் நக்கலாய்...

டேய் சும்மா இருடா..என்று அவனை அடக்கியவன்,நீ நாளையிலிருந்து என்னோட செகரட்ரி...

இன்னா செகரொட்டியா...அப்படினா..?

அப்படினா என்ன சொல்றது..யோசித்தவன்,நீ என்னோட பிரண்ட் மாதிரி..நான் எங்க போனாலும் கூட வரனும்,நான் எது கேட்டாலும் அது செஞ்சு கொடுக்கனும்..மொத்தத்துல என்ன கவனிச்சிக்க வேண்டிய முழு பொறுப்பு உன்னோடது தான்....

மெய்யாலுமா....என்றாள்....

ரொம்ப ஷாக் ஆகாத..காலையில மறக்காம கோல் பண்ணு என்று கூற..தன் நண்பனின் மனதை அறிந்த கவிலாஷ் கடவுளே!இது எங்க போய் முடிய போகுதோ!என்று நினைக்க இருவரும் அங்கிருந்து கிளம்பினர்....


ப்ரனேஷ் உல்லாசமாய் விசிலடித்தபடி காரை ஒட்ட.."பிரியாணி வாங்கி வர சொல்லும் போதே எனக்கு டவுட் தான்...எதோ பிளான் பண்றானு..நான் நெனச்ச மாதிரி தான் நடந்தது.அதுக்கும் மேல நான் நினைக்காததும் நடந்தது.. என்று ப்ரனேஷை முறைத்து கொண்டே தனது பணம் போன வருத்தத்தில் புலம்பினான் கவிலாஷ்...


காரை ஒட்டியவன் சட்டென நிறுத்த "ச்ச எப்படி மறந்தேன்"என்று ஸ்டேரிங்கை குத்த..கவிலாஷ் புரியாமல் பார்த்தான்..

என்னடா.எத மறந்த....

மச்சான் அவ பேர கேக்க மறந்துட்டேன்டா,என்றவனை அடி வெளுத்து விட்டான் கவிலாஷ்...அடி வாங்கியவன் கொஞ்சமும் சொரனை இல்லாமல் "மச்சான் அவ சொல்லலனா என்னா நானே செல்ல பேரு வைக்கிறேன்" என்று கூற கவிலாஷ் இப்போது தன் தலையிலயே அடித்துக் கொண்டான்.

டேய் முடியலடா..கார எடு என்றான் கடுப்பாகி...


சிறிது நேரம் கழித்து.. குல்பி என்றான்...ப்ரனா நல்லா தான இருக்க..என்று அவனது உடலை தொட்டு பார்க்க...கைய எடுடா என்றவன்,கவி எனக்கு ஒரு சந்தேகம் என்று வினவ,கேளுடா....என்றான்..

எல்லாருக்கும் லப்பு டப்புனு துடிக்கிற இதயம் எனக்கு மட்டும் குல்பி குல்பினு துடிக்குது...
என்னது குல்பி குல்பின துடிக்குதா...அதிர்ந்தான்

ஆமான்டா..அவளுக்கு நான் வச்ச செல்ல பேரு... குல்பி..அதனால தான்


டேய் முடியல டா.. இதெல்லாம் கடவுளுக்கே பொறுக்காதுடா....விட்டுடு..என்று கெஞ்சி அவனது காலில் விழ போக...அவனை தடுத்தவன் அதற்கு மேல் எதுவும் கூறாமல் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றான்....

கதிரவன் தனது கடமைகளை ஆற்றிவிட்டு நிலா பெண்ணோடு கொஞ்சி குழாவி அசதியில் உறங்கி கொண்டிருக்கும் நள்ளிரவு அது..ஷாரிகா போர்வையை இழுத்து போத்தி கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்தாள்...அப்போது இரண்டு ஜோடி கால்கள் அவளை நெருங்கி வந்தன..அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்..மெதுவாக அடி மேல் அடி வைத்தவர்கள் அவளை நெருங்கி,ஒருவன் காலை பிடிக்க,மற்றவன் அவள் கைகளை பிடித்து தூக்க,விழித்து கொண்டாள் ஷாரிகா...டேய் யாருடா நீங்க..விடுங்கடா விடுங்கடா என்று கத்தினாள்..அவள் கத்துவதை காதில் வாங்காமல் அவளை தூக்கி கொண்டு கீழே வந்தனர்...அப்போது விளக்குகள் அனைத்தும் போடப்பட்டு அந்த இருளை வெளிச்சமாக்கியது....டேய் கவி,பிரனா போதும் டா என் பொண்ண பயம் காட்டியது என்று சிரித்து கொண்டே தாமோதர் கூற...

என்னது இரண்டு பேரும் வந்துட்டாங்களா!என்று ஆச்சரிய பட்டவள் அவர்கள் முகத்தில் இருந்த முகமூடியை கழட்டவும்,டொய்ங்..டொய்ங்..என்று கடிகார முள் பணிரெண்டை காட்டவும்,ஹாப்பி பர்த்டே டூ யூ...ஹாப்பி பர்த்டே ஷாரிகா டியர் என்று இருவரும் கோரஷாக பாட...சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள் ஷாரிகா...இருக்காத பின்ன இவள் பிறந்ததிலிருந்து அவளுடைய பிறந்த நாளுக்கு இருவரும் தான் முதலில் வாழ்த்து கூறுவார்கள்..இந்த முறை இருவரும் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருக்க,நேற்றிலிருந்து கோல் செய்கிறாள்..அவர்கள் போனை எடுக்கவே இல்லை..கண்டிப்பாக இந்த முறை அவர்கள் தனக்கு வாழ்த்து சொல்ல மாட்டார்கள் என்று அவள் நினைத்திருக்க, இப்படி இன்ப அதிர்ச்சி கொடுப்பார்கள் என்று அவள் நினைக்க வில்லை..

ஆமாடா..உனக்கு சர்பிரைஸ் கொடுக்க எங்கள ஒரு வழி ஆக்கிட்டானுங்க...என்றாள் ஷாரிகாவின் தாய் சுபத்ரா...

டேய் இதெல்லாம் உன்னோட வேலை தான என்றவள் ப்ரனேஷை அணைத்து கொள்ள,இங்க ஒருத்தன் இருக்கேன் என்று கவிலாஷ் தன் இருப்பை உணர்த்த,மூவரும் அணைத்து கொண்டனர்...


போதும் போதும் உங்க பாசத்த பாத்து கண்ணு வேர்க்குது...மொதல்ல கேக் கட் பண்ணுங்க என்று சுபத்ரா கூற,கேக்கை கட் பண்ணி முதலில் ப்ரனேஷ்க்கு ஊட்ட போக, இடையில் புகுந்து கவிலாஷ் அதை வாங்கி கொண்டான்...டேய் ஏன்டா இப்படி பறக்குற என்று அவனை திட்டிய ப்ரனேஷ் ஒரு பீஸ் எடுத்து அவளுக்கு ஊட்டினான்...அதன்பிறகு கேக்கை அவள் முகத்தில் பூசி அந்த வீட்டையே ரணகள படுத்தினர்...

டேய் பிரனா நாளைக்கு ஒரு பார்ட்டி அரேஜ் பண்ணிருக்கேன்..கண்டிப்பா வந்துடுங்க..என்ற தாமோதரனிடம்..

என்ன பார்ட்டி அங்கிள் என்றான் கவிலாஷ்

பர்த்டே பார்ட்டி அன்ட் ஷாரிகா என்கேஜ்மெண்ட் அனவுன்ஸ் பார்டி...

வாட்......?என்றனர் இருவரும் அதிர்ச்சியாய்...

எதுக்கு இவ்ளோ ஷாக்?அவளுக்கு தான் கல்யாண வயசு வந்துடுச்சே?

அது இல்ல அங்கிள் எங்களுக்கு தெரியாம இதெல்லாம் எப்போ நடந்தது...பையன் யாருனு சொல்லவே இல்லையே?

அது நாளைக்கு தெரியும்..என்று கூறிவிட்டு செல்ல..அவர்கள் ஷாரிகாவின் காலில் விழாத குறையாக கேட்டு பார்த்தார்கள்..அவள் கடைசி வரை கூறவே இல்லை...

டேய் பிரனா நாம இவளுக்கு ஷாக் குடுத்தா... இவ நமக்கு பெரிய ஷாக்கா கொடுத்துட்டா ...என்று புலம்பி கொண்டே மீதம் இருந்த பீஸை காலியாக்கினான்...

அடியேய் பேரிக்கா.. எங்களுக்கு தெரியாம எவனயாவது உஷார் பண்ணிட்டியா..?கேட்ட ப்ரனேஷ்ஷிற்கு அழகாய் ஒரு வெட்கம் கலந்த புன்னகையை மட்டும் பரிசாய் கொடுக்க, டேய் கவி இங்க பாருடா,இந்த பொண்ணு வெக்கமெல்லாம் படுது என்று கூறி அவளை கலாய்க்க,பதிலுக்கு அவள் இருவருக்கும் சில பல அடிகளை கொடுத்தாள்....


அதேநேரம் உறக்கம் வராமல் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் மித்ரா..பொலிவில்லாத முகம்,முகத்தில் ஒரு வெறுமை....”தான் ஏன் பிறந்தோம்”என்று நினைத்தவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது..நான் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறேன்?இது இன்று நேற்று அல்ல..பல வருடங்களாக அவள் மனதை அறித்து கொண்டிருக்கும் கேள்வி..”என் குடும்பம் என் கண்முன்னே”அதற்கு மேல் அவளால் அதை நினைக்க முடியவில்லை..கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது..

ஏய் மித்ரா நீ இன்னும் தூங்கலையா?கேட்டபடி அங்கு வந்தாள் அவளுடைய தோழி …

அவள் முகத்தில் வெற்று புன்னகை..அந்த சிரிப்பில் உயிர் இல்லை.

இங்க பாரு மித்ரா இன்னும் நடந்ததையே எத்தன வருஷத்துக்கு நெனச்சி கஷ்டபடுவ.. நீ நடந்ததையே நெனச்சு கவலை படுறதால எதுவாவது மாற போகுதா..இல்லையே?பின்ன ஏன் உன்னையே நீ வருத்திகிற...முதல்ல பழைய சம்பவங்கள குப்பையா நெனச்சு தூக்கி போடு? உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு.
.உன்னோட கடந்த காலத்த பத்தி யோசிக்காம இனிமே நடக்க போறத யோசி..உனக்குனு ஒரு அழகான வாழ்க்கை காத்து இருக்கு..


"அழகான வாழ்க்கை”
..விரக்தியில் சிரித்தாள்..அவள் கண்முன்னே தன் காதலுக்காக காத்து கிடக்கும் அவனின் முகம் வந்து போனது..அது அவளை மேலும் வறுத்தியது..

மித்ரா ப்ளீஸ் டி...எல்லாத்தையும் மறக்க முயற்சி பண்ணு..உன்னால சந்தோஷமா இருக்க முடியாது தான்?எனக்கு தெரியும்..ஆனா அதுக்காக இப்படியே இருக்க போறியா?சந்தோஷமா இருக்குற மாதிரி நடிக்கவாது செய்யுடி..நம்மல மாதிரி பாவபட்ட பெண்கள அந்த ஆண்டவன் படச்சதே தப்பு.. ஒரு மாற்றத்துக்கா தான இங்க வந்தோம்.. …இங்க வந்தும் இப்படி இருந்தா என்ன அர்த்தம்..எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா வாழ பாரு என்றவள்...”நீ கொஞ்ச நேரம் உட்காந்து யோசி”நான் கீழ போறேன்..அதுக்காக ரொம்ப நேரம் எடுத்துக்காத ..நாளைக்கு என் பிரண்டோட பர்த்டே பார்ட்டிக்கு போகனும்,என்றவள் அங்கிருந்து சென்றாள்…

அவள் சென்ற பிறகும் யோசித்து கொண்டிருந்தாள் மித்ரா...அவளுடைய கடந்த காலம் அவளை நிலை குலைய செய்தது...தன் கடந்த காலத்தை நினைத்து பார்த்தாள்..அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது...தன் குடும்பத்தை இழந்த பிறகு இவளுக்கு கிடைத்த ஒரு உறவு தான் சுகன்யா...யாருமில்லாமல் அனாதையாய் நின்றவளுக்கு இப்போதைக்கு சுகன்யா மட்டுமே உறவு...அவள் எது கூறினாலும் அதில் இவளுக்கு நன்மை மட்டுமே இருக்கும்...அவள் மட்டும் இல்லை என்றாள் இவள் என்றோ புழுங்கி புழுங்கி இறந்திருப்பாள்...
அவள் கூறுவதும் உண்மை தானே?என் குடும்பத்தை அழித்தவர்கள் எல்லாம்
சந்தோஷமாய் இருக்கும் போது நான் மட்டும் ஏன் கவலை பட வேண்டும் என்று நினைத்தள்..மனம் சமாதானம் அடைந்தாலும் அதனை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..என் மனம் சமாதானம் அடைய வேண்டுமென்றால் நான் இப்படி அழக்கூடாது.. என் குடும்பத்தையும்,என்னையும் இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் முன்பு நான் வாழ்ந்து காட்ட வேண்டும்...என்று நினைத்தவள் ஒரு முடிவெடுத்தவளாய் கீழே சென்றாள்...பாவம் அவள் அறியவில்லை..அவளது ஆசைக்கு ஆயுள் குறைவு என்று!.....
Nice ud
 
Top