Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன்வசந்தன்- அத்தியாயம் 2

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்

அத்தியாயம் 2

எங்கோ தூரத்தில் கேட்டது போன்று இருந்த தொடர் அலாரம் சத்ததில், அபியின் தூக்கம் மெல்ல கலைந்தது… அரைத்தூக்கத்தில் போனை எடுத்து நேரம் பார்த்தவளுக்குத் தூக்கிவாரி போட்டது ,"ஐயோ இவ்வளவுநேரம் தூங்கி விட்டேனே .."

விழுந்தடித்துக்கொண்டு வேகமாக ரெடி ஆகி வெளியே வந்தால் மணி 9 .

அவள் முழுதாக ஒரு மணி நேரம் லேட் .

"ஆபீஸ் பஸ் கூட போய் இருக்குமே இப்போ என்ன செய்றது?" அவள் தனக்குள்ளே பேசிக்கொண்டு அவசரமாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்துகொண்டிருக்கும் போது,வேகமாக வந்த பைக் ஒன்று அவளருகில் பிரேக் போட்டு நின்றது ,அவன்தான் எதிர் வீட்டுகாரன் அருண் .

"ஹாய் அபி "என்றுவிட்டு நட்பாக சிரித்தான் .

"ஹாய் " என்றாள் அவள் தயக்கத்துடன் ,இவன் எதுக்கு வலிய வந்து பேசுறான்? தேவை இல்லாம ஏதாவது பேசட்டும் அப்புறம் பார்த்துக்கறேன்,என்று மனதில் நினைத்துக்கொண்டாள் .

"ரொம்ப அவசரமா போகணுமா? நான் வேணா ட்ராப் பண்ணட்டுமா? என்று அக்கறையாகக்கேட்டான் .

"ஹலோ, நீங்க யாருங்க என்ன ட்ராப் பண்ண? நேத்து ஏதோ ஹெல்ப் பண்ணீங்களேன்னு பேசினேன், இதுதான் சாக்குன்னு ரொம்ப ஓவரா உரிமை எடுத்துக்க வேணாம்,எனக்குப் போய்க்க தெரியும்,உங்க வேலைய பாருங்க மிஸ்டர் "சூடாக பதிலளித்தாள் .

முகத்தில் அறை வாங்கியது போல் இருந்தது அருணுக்கு ,'இந்த அடங்காப் பிடாரிக்கு போய் ஹெல்ப் பண்ண வந்தேன் பாரு என்னை சொல்லணும்..'அவளைமுறைத்துப் பார்த்துவிட்டு ,வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.'போனா போறான் எனக்கென்ன ?'என்று அலட்சியமாக தோளைகுலுக்கினாள் அபி .

இன்போடெக் சிஸ்டம்ஸ்

அவசரத்துக்கு டாக்ஸி கிடைக்காமல், ஷேர் ஆட்டோவில் பயணித்து, ஓட்டமும் ,நடையுமாக ,அபி ஆபீஸ் வந்து சேர்ந்து அவளது கார்டை பஞ்ச் செய்யும் போது மணி 10 மேல் ஆகியிருந்தது .

"இன்னைக்கு நான் செத்தேன் .."

உள்ளூர பயந்து கொண்டே அவளது பணியிடம் நோக்கி நடந்தாள்,,அபி ஒரு சாப்ட்வேர் சிஸ்டம் அனலிஸ்ட் ,இன்போடெக் கம்பெனியில் பணிபுரியத்தொடங்கி ஆறுமாதங்கள் ஆகிறது ,சென்னை அவளுக்கு புதிது ,வேலையும் புதிது… ஆரம்பத்தில் அவளுக்கு எல்லாமே வியப்பும் மலைப்புமாக இருந்தது ,இப்போதுதான் ஊரும் வேலையும் கொஞ்சம் பழக்கப்பட்டு கொண்டு வந்தது.

அவள் இருக்கையை அடையும் போதே மேஜை மேல் இண்டர்காம் ஒலித்துக்கொண்டிருந்தது சட்டென்று போன் ஐ எடுத்து "ஹலோ இன்போடெக் சிஸ்டம்ஸ், அபிராமி ஹியர்" என்று அவசர குரலில் பதிலிறுத்தாள்.

"ஹேய் அபி ,எவ்ளோ நேரமாடீ ட்ரை பண்றது ..?விவேக் மூணுவாட்டி கேட்டுட்டான் அபி வந்துட்டாளாணு ?"ஏண்டீ லேட் அதுவும் இன்னிக்கு ?""அவளது டீம்லீடர் பூர்ணா படபடத்தாள். இன்போடெக்கில் இப்போதைக்கு அவளுக்கு இருக்கும் ஒரே தோழி.

"சாரி பூர்ணா,தூங்கிட்டேன் "அழாக்குறையாக பேசினாள்.

"என்னது தூங்கிட்டியா ? இதை அந்த டிராகுலா கிட்ட சொல்ல முடியுமா ?இன்னிக்கு ப்ரோஜக்ட் ஹெட் சர்மா சார் கிட்ட டெமோ ப்ரெசென்ட்டேஷன் இருக்கு தெரியும்ல?இதுல ஏதாவது சொதப்பினா விவேக் ருத்ர தாண்டவம் ஆடிடுவான், நீ ப்ரெசென்ட்டேஷன்ல அவன் சொன்ன கரெக்ஷன்ஸ் பண்ணிட்டியா..இல்லையா ? ?"

"நேத்தே பண்ணி அனுப்பிட்டேன் பூர்ணா "

"சரி நீ ,விவேக்குக்கு உடனே ரிப்போர்ட் பண்ணு இல்லாட்டி அவன் தைய தக்கனு குதிப்பான் .."

"ஓகே பூர்ணா .."


ஒரு பெருமூச்செடுத்து மனதை திட படுத்திக்கொண்டு ப்ராஜெக்ட் மேனேஜர் விவேக்கின் கேபின்க்கு சென்றாள் .

விவேக் வேலையில் மிகவும் கோபக்காரன் ,அவன் நினைத்தவேலை நடக்க வில்லை என்றால் கடுமையாகத் திட்டிவிடுவான் அதுவும் இப்படிபட்ட வசை மொழிகளைக் கேட்டு அறியாத அபி மிகவும் கூனி குறுகி போவாள் ,அதனால் முடிந்தவரை ,தன்பக்கம் இருந்து எந்த தவறும் நிகழாத படி பார்த்துக்கொள்வாள், லேட் நைட் ஆனாலும் அவன் தரும் வேலைகளை முடித்துவிட்டு தான் செல்வாள் ..சும்மாவே ஆடுவான் இன்று கொடுக்கு கிடைத்திருக்கு விடுவானா என்று மனதிற்குள் தாமதமாக விழித்ததற்காகத் தன்னையே சபித்துக்கொண்டு திறந்திருந்த கேபின் டோரை லேசாக அவனுடைய தட்டினாள்.

"குட் மார்னிங் சார் "

"நோ இட்ஸ் எ பேட் மார்னிங் "அவளை முறைதான் ..."இன்னிக்கு எவ்ளோ முக்கியமான நாளுன்னு தெரிஞ்சும் லேட்டா வந்திருக்க? உன்னை மாதிரி ஒரு பொறுப்பில்லாத ஆளை நான் பார்த்ததே இல்லை .." பதில் பேச முடியாமல் வெட்கித் தலை குனிந்தாள் .

"என் மெயிலுக்கு ரிப்ளை பண்ணியா ?"

"எஸ் சார், அந்த கரெக்ஷன்ஸ் பண்ணி அப்போவே ரிப்ளை பண்ணிட்டேன் சார்"

அவன் மெயிலை செக் செய்துவிட்டு ,"இல்லையே எனக்கு எந்த ரிப்ளையும் வரலையே "
என்றான்

"நான் நேத்தே அனுப்பிட்டேன் சார் ,நீங்க நல்லா செக் பண்ணுங்க ?

"வாட் ? நேத்தா? நான் இன்னிக்கு காலைல அனுப்புனா மெயில பத்தி பேசிட்டு இருக்கேன்,நீ இன்னும் அதை பார்க்கவே இல்லையா ?"


"நோ சார் "

"என்ன ஒரு பொறுப்பில்லாத பதில் இது? இன்னிக்கு சர்மா சார் கூட மீட்டிங் இருக்கு ,இன்னும் டெமோவே ரெடி ஆகலை ,எல்லாம் உன்னோட சோம்பேறித்தனத்தால, நீ பண்ண தப்புக்கு ,இன்னிக்கு என் மண்டைய போட்டு உருட்ட போறாங்க "

"சாரி சார் "


"சாரி…நீ என்கிட்ட ஈஸியா சாரின்னு சொல்லிடுவா, நான் போய் அவருகிட்ட சொல்லமுடியுமா? அவருகிட்டலாம் வாயே தொறக்க முடியாது .." விவேக் அவனது எரிச்சலை கொட்டினான்.

"சாரி சார், நான் இன்னும் ஒன் ஹௌர்ல ஒர்க் பினிஷ் பண்ணி மெயில் அனுப்பறேன் சார்,"

"சரி சரி ,இங்க நின்னு டைம வேஸ்ட் பண்ணாம ,போய் வேலைய முடிகிற வழிய பாரு.."
என்றான் எரிச்சல் மறையாத குரலில்.

"ஓகே சார்
"என்று அவசரமாக உரைத்து விட்டு வேகமாக வெளியேறினாள்...

"அப்பாடா தப்பிச்சோம், டிராகுலா இன்னிக்கு கொஞ்சம் நல்ல மூட்ல இருந்தது போல, அதான் கொஞ்சமா திட்டி இருக்கு" ,என்று நினைத்துக்கொண்டு நடந்தாள்,அவள் இடத்தை அடையும்முன் அவளது இன்னொரு டீம் மேட்டானா விக்கியின் உற்சாகக்குரல் அபியின் காதை பிளந்தது, அவன் எப்போதுமே அப்படித்தான் கலாட்டா செய்து கொண்டே இருப்பான் ,அவன் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் .விக்கியின் குதூகலக்குரல் மனதை லேசாக்க ,அங்கு என்ன நடக்கிறது என்று ஆர்வமானாள்.

"டேய் ,மச்சான் வெல்கம் டா ..." என்று விக்கி யாரோ ஒருவனை கட்டி பிடித்துக்கொண்டு இருந்தான் ,அந்த புதியவனின் முகுகுப்புறம் மட்டும் அபிக்கு தெரிந்ததால் அவளால் அவனது முகத்தை பார்க்க முடியவில்லை...

"யாரது...?" என்று அவள் மனம் நினைக்கும் போதே ,விக்கியின் அணைப்பில் இருந்து விடுபட்ட அந்தப் புதியவன் அவள் புறமாக திரும்ப ,அவன் முகம் அவளுக்குப் பளிச்சென்று தெரிந்தது ..

"எதிர் வீட்டுக்காரன் !!!!?"சற்றும் எதிர்பாராமல் அருணை அங்கு பார்த்த அதிர்ச்சியில் அபி நின்ற இடத்திலேயே வேரோடிப்போனாள், இது நிஜமா இல்லை தான் பகல் கனவு காண்கிறோமா என்ற மயக்கம் கூட ஒரு நொடி தோன்றி மறைந்தது.

விக்கி தனது மொபைல்லில் "என் ஃப்ரெண்டைபோல யாரு மச்சான் " பாட்டைப் போட்டு அருணை தோளோடு அணைத்து ஆடினான் ..அந்த தளத்தில்வேலை பார்த்து கொண்டிருந்த அனைவரும் அந்த நாடகத்தை முகத்தில் சிறு நகையுடன் வேடிக்கைப் பார்த்தனர் ..

அதற்குள் அங்குவந்து சேர்ந்திருந்த பூர்ணாவும் இந்த அமளியில் ஆர்வமானாள்..

"அபி ,அங்க என்ன நடக்குது ?"

அபி ஒன்றும் தெரியாது என்பது போல் தோளைகுலுக்கினாள் ,"நோ ஐடியா பூர்ணா,ஆனா சரியான ஷோ ஆஃப் ,எப்படி சீன் போடுறாங்க பாரு "

"ஹேய் சும்மா இருடி, ரொம்ப காமெடியா இருக்கு , சரி வா என்ன விஷயம்னு பார்க்கலாம் "என்று விக்கியிடம் சென்றனர் .

"ஹாய் விக்கி ,என்ன இதெல்லாம் ?ஓவர் சீனா இருக்கு .." என்று சிரித்து கொண்டே கேட்டாள்.

"ஹேய் பூர்ணா,நான் சொன்னேன்ல என்னோட ஃபிரெண்ட் ,மும்பைல இருக்கான்னு ,அது இவன் தான்,பேரு அருண்.. .இங்க மாற்றல் ஆகி வந்திருக்கான் ,ராஸ்கல் என்கிட்ட கூட சொல்லவே இல்லை..."என்று பொய்க்கோபம் காட்டினான் விக்கி.

"உனக்கு சர்ப்ரைஸா இருக்குனும்ன்னு தான்டா சொல்லலை .."அருண் பதிலளித்தான்

"ஓகே டா மச்சி ,மீட் மை டீம் லீடர் ,பூர்ணா ,பூர்ணா மீட் மை ஃபிரெண்ட் அருண், நம்மடீம்க்கு புதுசா வந்திருக்கான் .."

"ஹாய் ,பூர்ணா ,நைஸ் டு மீட் யூ, ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாடீங்களே? நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க "
என்று பாராட்டினான் .

பூர்ணா சிரித்துக்கொண்டே தேங்க்ஸ் என்றாள்.

விக்கி அவன் காதோரம் குனிந்து கிசுகிசுத்தான்,

"டேய் அது என் ஆளுடா...நானே இப்போ தான் ரொம்ப ட்ரை பண்ணி ஃபர்ஸ்ட் கியர்ல போயிட்டு இருக்கேன் நீ அதுக்குள்ள ரிவெர்ஸ் கியர்ல போகவச்சிடாத.. "

"அடப்பாவி, பொண்ணு கொஞ்சம் நல்லா இருக்கேன்னு பார்த்தேன், அதுக்குள்ள இப்படி ஆஃப் பண்றியேடா.."என்று கிண்டலாக கேட்டுவிட்டு...சரி பொழைச்சி போ பூர்
ணாவ என்னோட சிஸ்டரா நான் தத்து எடுத்துக்கறேன்...போதுமா.." என்று முடித்தான்.

"உன்னை பத்தி எனக்கு தெரியும்டா அதான் நான்
என் ரூட்டை கிளியர் பண்ணிக்கறேன் "என்று விக்கி விளையாட்டாக கூறினான் ,இவ்வளவிற்கு நடுவிலும் அருண்,அபியின்பக்கம் கூட திரும்பாமல் அவளை முழுவதுமாகத் தவிர்த்தான் ,அவனுக்கும் அவளைப் பார்த்தது அதிர்ச்சிதான் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் லாவகமாக மறைத்து சாதாரணமாக இருக்க முடிந்தது ,ஆனால் அபியால் முடியவில்லை ,

விக்கி அருணை அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது ,அவன் எந்த வித சலனமும்மின்றி அவளை நேராக பார்க்க, அபிக்குத்தான் முகம் மாறாமல் காப்பது பெரும்பாடாக இருந்தது , தெரிந்தது போல் காட்டிக்கொள்வதா இல்லை தெரியாதது போல் நடிப்பதா? என்று அவள் குழம்பும் போதே ,"அருண் ண்...."என்ற கூச்சலுடன் அவர்களது டீம் மேட் நித்யா ஓடிவந்து அருணைக் கட்டிக்கொண்டாள், ஆச்சரியத்தில் அபி வாய் பிளந்தாள் ..இப்படி எல்லாம் யாரும் பொதுவெளியில் நடந்து கொண்டு அவள் பார்த்தது இல்லை.

"எப்படி இருக்க அருண் ? உன்னைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு ?கடைசியா காலேஜ் பார்வெல்ல மீட் பண்ணது "

அருண் சிறு நகையுடன் ,"எப்படி இருக்க நித்தி?"என்று கேட்டான்

"நீ இல்லாம நான் எப்படி நல்லா இருக்க முடியும் ?"என்று கொஞ்சலாக கேட்டாள் .

அபிக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை,அங்கிருந்து போனால் போதும் என்று இருந்து .

அவள் அசூசையுடன் முகம் சுளிக்கும் போதே , விவேக்கின் அதட்டலான குரல் கேட்டது ...

"என்ன இங்க ஒரே சத்தம்…? இது ஆபீஸா இல்லை ஃபிஷ் மார்க்கெட்டா ?"

"சாரி விவேக், அருண்என்னோட காலேஜ் ஃபிரெண்ட் ரொம்ப நாள் கழிச்சி பார்த்ததால் ஒரு ஆர்வத்துல... "
என்று இழுத்தான் விக்கி .

"சோ வாட்? எல்லாம் ஆபீஸ்க்கு வெளிய வச்சிக்கோ, இது வேலை செய்யற இடம் ,ஃபன்பண்ணற இடம் கிடையாது..."

"சாரி விவேக்.." என்று வாய் கூறியபோதும் ,மனதிற்குள் "வந்துட்டாரு ரூல்ஸ் ராமானுஜம்" என்று நினைத்துக்கொண்டான் விக்கி ..


மற்றவர்களை பார்த்து ,"எல்லாரும் என்ன பராக்கு பார்த்துட்டு இருக்கீங்க,,?ஆல் ஆஃப் யூ கெட் பாக் டு ஒர்க்.." என்று கத்தி விட்டு.."அருண்.. யூ கம் வித் மீ .."என்று அவனை அழைத்துச்சென்றான் .

"அப்பா.. புயல் அடிச்சி ஓஞ்ச மாதிரி இருக்கு ..என்றாள் பூர்ணா இருவரும் கேபினை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போது,



"சரித்திரத்துலையே முதல் முறையாக விவேக் வந்ததை நினைச்சி சந்தோஷ பட்டேன் பூர்ணா, ரொம்ப டூ மச்சா பண்ணாங்க இல்ல .."என்று எரிச்சலாக மொழிந்தாள்.

"ஏண்டி இப்படி சொல்ற? உனக்கு என்ன பிரச்சனை ?

"எனக்கு அந்த அருணை பார்த்தாலே பிடிக்கலை ..."

"அதுக்கு
ள்ளையா...? அவனை இப்பதானே முதல் தடவை பார்க்குற? பார்க்க ஆள் நல்லாதானே இருக்கான் ?

"அவன் சரியான ஜொள்ளு போல இருக்கு, உன்னை பார்த்ததும் எப்படி வழிஞ்சான் பார்த்தியா ?"

"ஹே, அது ஒரு சின்ன காம்ப்ளிமென்ட் ,இதுக்கு போய்
ஏன் டென்ஷன் ஆகுற? ஏன் உன்ன சொல்லலன்னு கோபமா?" என்று பூர்ணா அவளை சீண்டவும், அபி அவளை கோபமாக முறைத்தாள்.

"விளையாடாத பூர்ணா, சரி அதை விடு அந்த நித்திய எப்படி கட்டி புடிச்சான் பார்த்தியா? எல்லாரும் பார்க்கறாங்கனு கூச்சம் கூட இல்லாம?”

"அப்போ யாரும் இல்லாதப்ப பண்ணா உனக்கு ஓகே வா?
என்று சுருக்கென்று கேட்டுவிட்டு ,உடனே தணிந்து

"அபி ,அது ஒரு விஷயமே இல்லை, அவங்க காலேஜ் ஃபிரெண்ட்ஸ் அதான் கேசுவலா பழகறாங்க, இதுல எதுவும் எனக்கு தப்பா தெரியல …"

“அவன் உன்கிட்ட மட்டும் இல்லை, ஃபர்ஸ்ட் பார்க்கும் போது என்னையும் பார்த்து ஈஈ னு சிரிச்சான், எல்லா பொண்ணுங்ககிட்டயும் இப்படிதான் நடந்துக்குவான் போல …”

“ஹை, இது என்ன புதுகதை? அவனை நீ எங்க பார்த்த?”

“அது..வந்து ..அவன் என்னோட எதிர் பிளாட்ல தான் குடி வந்திருக்கான் ..” என்று அவனை சந்தித்தது முதல், காலை வரை நடந்த அனைத்தையும் கூறினாள்.

"அபி, எல்லாத்துக்கும் ஓவரா ரியாக்ட் பண்ணாத ..அவன் ரொம்ப சாதாரணமா தான் பேசி இருக்கான்.. இதுல
எனக்கு ஒன்னும் தப்பா தெரியலை .”

“முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கு யாரும் லிஃப்ட் தரேன்னு சொல்லுவாங்களா? அவன் தப்பானவன் தான் பூர்ணா .."
என்றாள் பிடிவாதமாக,

“ஒரு மண்ணும் இல்லை… நீ அவனோட
எதிர் ஃபிளாட்ல இருக்கற பொண்ணுனு தெரிஞ்சிதான் அவன் உனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கான் …லிப்ட் குடுத்தது கூட ஒரு கர்ட்டஸில தான் ,ஒழுங்கா அவனோட பைக்ல வந்திருந்தா ஆபீஸ்க்கு சீக்கிரம் வந்திருக்கலாம்… அதை விட்டுட்டு வீம்பு புடிச்சி லேட்டா வந்திருக்க லூசு மாதிரி …” என்று அபியை கடிந்தாள்.

பூர்ணா "லேட்டா "என்றதும் வேலை நியாபகம் வர “ஐயோ பூர்ணா ,நான் விவேக் குடுத்த வேலைய முடிக்கணும் ,அதை பண்ணமா உன்கூட வெட்டி அரட்டை அடிக்கறேன்…நாம அப்புறம் பேசலாம் பை …”
அவள் வேலையில் மூழ்கினாள்.

கான்டீன்

"அருண்.... நான் ரொம்ப ஹாப்பியா இருக்கே
ன்டா... நீ திரும்பி வந்த சந்தோஷத்தை நாம கொண்டாடியே ஆகணும் ,இன்னிக்கு ட்ரீட் வைக்கிறோம் சரியா ?

"டபுள் டன் டா..."
என்று சிரித்தான் அருண்.இருவரும் கேன்டீனில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

"அப்புறம் மச்சான், மும்பைல பொண்ணுங்களாம் சூப்பரா இருப்பங்களேடா ,ஏதாவது செட் ஆச்சா ?"

"இல்லைடா, அப்படி யாரையும் எனக்குப் பிடிக்கலை ,நமக்கெல்லாம் நம்ம ஊரு பொண்ணுங்க தாண்டா செட் ஆகும் ,நம்ம மண்வாசனையோட இருக்கற பொண்ணுதான் எனக்கு பிடிக்கும் ..."

"அப்போ மண்பானை செய்யற பொண்ண தான் நீ கட்டிக்கணும், அவங்க தான் மண்வாசனையோடு இருப்பாங்க... "
என்றுவிட்டு விக்கி தனது ட்ரேட் மார்க் சிரிப்பாக கையை உதறி சத்தமாக சிரித்தான் ..

"டேய்...கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதடா .."என்று முறைதான் .

"சரி டா ,டென்சன் ஆகாதா....சிவாஜி ரஜினி மாதிரி, நீ தமிழ் தொட்டபொண்ணு கேக்குற அந்த மாதிரி பொண்ணுங்கலாம் லெமுரியா கண்டத்துலயே வழக்கொழிஞ்சிபோய்ட்டாங்களேடா ..."

"மொக்க போடாதடா விக்கி.."
என்று அலுத்துக்கொண்டான்.

" அது ரொம்ப கஷ்டம் மச்சி, விக்கியையும் மொக்கையயும் பிரிக்கவே முடியாது .."என்று கண்ணடித்துவிட்டு ,திடுமென்று நினைவு வந்தவனாக

"டேய் நம்ம நித்தி இருக்காளேடா "என்று கேட்டான்

"அட போடா,அவளை லவ் பண்றதா இருந்தா நான் காலேஜ் டேஸ்லேயே பண்ணி இருப்பேனே .."

"சரி அப்போ அபி ?"
என்று விக்கி கேட்க ,

"ஐயோ அந்த ஆங்கிரி பார்ட்டா..!!!! வேண்டவே வேண்டாம் ..ஆளவிடுடா சாமி ,அதுக்கு நான் சாமியாராகூட போவேன் ..."

"ஏன்டா இப்படி சொல்ற?"
விக்கி அருணின் படபடப்பை கண்டு வியந்தான்.

"அவ என்னோட எதிர் பிளாட்ல தான்டா இருக்கா அவளை மாதிரி ஒரு ஈகோ புடிச்ச பெண்ணை நான் பார்த்ததேஇல்லை ..."என்று வெறுப்பாக கூறினான் .

"ச்ச..ச்ச..,அவ ரொம்ப நல்ல பொண்ணுடா ,தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பா .."

"யாரு அவளா ?உனக்குத்தெரியாதுடா அவ என்னை எவ்ளோ கேவலமா பேசினா தெரியுமா? அருண்
நடந்த எல்லாவற்றையும் விக்கியிடம் பகிர்ந்தான் நடந்த கதையை கேட்டுவிட்டு விக்கி விழுந்து விழுந்து சிரித்தான் .

"மச்சான் செம பல்பு வாங்கின போல .."

"அதுல உனக்கு ரொம்ப சந்தோஷம் போல .."

"இல்லையா பின்ன, நம்ம பெஸ்ட் ஃபிரெண்ட் பல்பு வாங்குறதை பார்க்கற மாதிரி ஒரு சந்தோஷம் வேற என்ன இருக்கமுடியும் மச்சி?
பதிலுக்கு அருண் முறைப்பதை பார்த்து ,

"சரி டா... மொறைக்காத …அபி இங்க வேலைக்கு சேர்ந்து இந்த ஆறுமாசத்துல ,மொத்தமாவே என்கிட்ட 6 சென்டென்ஸ் தான்டா பேசி இருப்பா ,இவ்ளோ பேசினான்னு நீ சொல்றத என்னால நம்பவே முடியலை டா ”

"அப்போ நான் பொய் சொல்றேனா? அவ எப்படி சண்டைப் போட்டா தெரியுமா ?”

என்று அருண் கூறியதை கேட்டு விக்கி மேலும் சிரித்தான்.

"என்னடா சிரிப்பு..? என்றான் எரிச்சல் மண்டிய குரலில் .

"மச்சான் மோதல்ல ஆரம்பிச்சி அப்புறம் காதல் கரெக்ட்டா ?

"மண்ணாங்கட்டி... நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ என்ன பேசுற ?"
என்று எரிந்து விழுந்தான் .

"கூல் மச்சி ,கூல் நான் சும்மா விளையாட்டுக்கு தான்டா சொன்னேன்.."

"காமெடிக்கு கூட அப்படி சொல்லாதடா அவளை நினைச்சாலே கடுப்பா இருக்கு.."

"சரிடா விடு, காபி சொல்லவா ?"

"ஐயோ ..காபிய பத்தி ஞாபகபடுத்தாதடா ,அவ காபிங்கிற பேருல ஒன்னு குடுத்தா பாரு … கசப்புன்னா கசப்பு அப்படி ஒரு கசப்புடா ,காபில சுகர்ங்கற ஒரு இன்கிரேடியண்ட் ஆட் பண்ணனும்னு யாரும் சொல்லி தரலை போல …ப்பா …இப்ப கூட அந்த கசப்பு உள் நாக்குல ஓட்டிட்டு இருக்குன்னா பாரேன்
..” என்று ஏளனமாக கூறிக்கொண்டே பக்கவாட்டில் திரும்பியவன் அதிர்ந்தான் ...

அபி எதிரில் நின்று கொண்டிருந்தாள்

அபியும் பூர்ணாவும்,கான்டீன்னுக்குள் வரும்போது அருணின் பேச்சு அவர்கள் காதில் தெளிவாக விழுந்தது ,

அபி ஒரு நிமிடம் அதிரிச்சியில் உறைந்தாள்,மெல்லிய கண்ணீர் திரை அவளையும் மீறி விழிகளில் படர்ந்தது ,ஆனால் நொடியில் சமாளித்துக்கொண்டபோதும் ,அருண் அந்த நீர்த்திரையை கண்டுவிட்டான்,குற்ற உணர்வு ஒருகணம் அவனைகுத்தியது ,மறுகணம் ஒருதோள்குலுக்கலில் அதை உதறிவிட்டு ,எழுந்து அவளைத்தாண்டி சென்றான் ..

இருவரும் எதிர்புறமாக இருந்த வேறொரு இருக்கையில் அமர்ந்ததும் அபி படபடவென பொரியத்தொடங்கினாள்,

"பார்த்தியா பூர்ணா ..?அவன் என்னைப்பத்தி எப்படி பேசுறான்னு?அன்னிக்கி காபி ப்ரமாதம்னு சொன்னான் ,ஆனா இன்னிக்கு இவ்ளோ மோசமா திட்றான்? இதுல இருந்தே அவனோட கேரக்ட்டர் புரியுதா உனக்கு ..?" என்று அவளுடைய கருத்தை நிலைநாட்டிடமுயன்றாள் ...

“அபி எனக்கு ஒரு டவுட்? இவ்ளோ நேரமா நீ மட்டும் என்ன பண்ணிட்டு இருந்த ?அவனை பத்தி அர்ச்சனைதானே..?அதையேதான் அவனும் பண்றான் ,ஃபிரெண்ட்ஸ்குள்ள காசிப் பண்ணிக்கறது இஸ் கொயட் நார்மல்,டோன்ட் டேக் இட் டு ஹார்ட்.. ஃப்ரீயா விடு அபி …” பூர்ணா நிலைமையை லேசாக்க முயன்றாள்…

“ஆனா ஒன்னுடீ , உங்க ரெண்டு பேருக்கும் எதுல ஒத்து போகுதோ இல்லையோ ...புரளி பேசுறதுல ரொம்ப நல்லா ஒத்து போகுது..."என்று அவள் காலை வாரினாள்...

அபி அவளை முறைத்து விட்டு “ஒத்துபோகுதா ..?நோ வே…நாங்க ரெண்டு பேரும் எதிரெதிர் துருவங்கள் மாதிரி …”

சோ வாட் ஆப்போசிட் போல்ஸ்தான் ஒன்னை ஒன்னு நல்லா ஈர்க்குமாம் …” பூர்ணா அவளை மேலும் சீண்டினாள்…

“நாங்கஅந்த அறிவியல் விதிக்கும் அப்பாற்பட்டவங்க போதுமா ?" என்று கோபமாக உரைத்து விட்டு வேகமாக வெளியேறினாள் அபி.

தொடரும்
 
Last edited:
Top