Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன்வசந்தன் -அத்தியாயம் 3

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன்வசந்தன்

அத்தியாயம் 3

இன்போடெக் சிஸ்டம்ஸ்

அபியும் விக்கியும் அவர்களது கேபினில் அருகருகில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்ததனர்.வரிசையாக அமைந்திருந்த கேபின்களில் முதலில் அபி ,அடுத்து விக்கி ,அவனை தொடர்ந்து நித்யா,என்ற வரிசையில் அமர்ந்திருந்தனர் .சிறிது நேரம் டைப் செய்யப்படும் ஒலி மட்டுமே அந்த தளம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது .

சீராக டைப் செய்து கொண்டிருந்த அபியின் விரல்கள் மெதுவாக தயங்க அவள் யோசனையோடு திரும்பி பக்கவாட்டில் விக்கியை பார்த்தாள்

"விக்கி…"என்றுசன்ன குரலில் அழைத்தாள்.

"என்ன அபி ...."என்றான் அவனும் அவளது குரலையே பின்பற்றி,

"மீட்டிங் முடிஞ்சிருக்குமா ..?"சந்தேகமாக கேட்டாள்

“தெரியல அபி ..ஏன்கேக்குறீங்க ?

"இல்லை, சும்மாவே சர்மா சார் கூட மீட்டிங்னா உதறும், இப்போ டெமோ ப்ரெசென்ட்டேஷன் வேற ,ஏதாவது சொதப்பிட்டா ?அதான் கொஞ்சம் பிபி ஏறுது..”
என்றாள் கவலை குரலில்…

"ச்ச ச்ச..நாம பக்கவா ரெடி பண்ணிருக்கோம் .அதெல்லாம் ஒன்னும் சொதப்பாது.பீ கூல் அபி ..”என்று அவளுக்கு தைரியமூட்டும் விதமாக தனது இரு கட்டைவிரல்களையும் உயர்த்திக்காட்டினான் .

உதட்டளவில் சிரித்தாலும் அபிக்கு ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது .

சிறிது நேரம் கழித்து ,மீண்டும்

"விக்கி ..."என்று அழைத்தாள்

அவனும் "அபி ..."என்றான்

கூப்பிட்டுவிட்டு அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்,அதே சமயம் விக்கி அவளது பதிலுக்காக காத்திருப்பதும் புரிய ,

"உங்க ஃப்ரெண்ட் எங்க விக்கி ஆளையே காணோம் ..?" என்று வாய்க்கு வந்ததை உளறிவிட்டு ,நாக்கை கடித்துக்கொண்டாள்.

"தெரியல அபி ,நான் வேணா போன் பண்ணி வர சொல்லவா..? "என்று சிரியாமல் அப்பாவி போல குறும்பாக கேட்டான்.

அவளுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது

"இல்லை..இல்லை.வேணாம் நான் சும்மா தான் கேட்டேன் ." என்று அவள் அவசரமாக மறுப்பதைப்பார்த்தவன் சத்தமாக சிரித்தான்.

அதே சமயம் அவனது குரலின் எதிரொலி போல மேசை மேல் இருந்த போன் கருவியும் ஒலியெழுப்பியது,

விக்கி எடுத்து பேசியவன் ,அபியிடம் திரும்பி .

“வாங்க அபி போலாம் ,மீட்டிங்கு டீம் மெம்பெர்ஸ் ஐயும் வர சொல்றாங்க”

எனவும்..அபியின் இதயம் தடதடக்கத்தொடங்கியது .

அணியின் மூவரும் மீட்டிங் ரூமை அடைந்தபோது அங்கே சர்மா நடுநாயகமாக வீற்றிருக்க ,விவேக் ,பூர்ணா,அருண் மூவரும் டேபிளின் ஒரு புறமாக அமர்ந்திருந்தனர் . இன்னும் சில வேறு டீம் ஆட்களும் இருந்தனர் .

அபி ,அருணின் நேர் எதிரில் அமரும்படி ஆனது ,ஒரு கணம் இருவர் பார்வையும் மோதிக்கொண்டது ,அபி உடனே தன் பார்வையை விக்கிக்கொண்டாள் .

சர்மா பேசத்தொடங்கினார் ,அவர் பிறப்பால் வடமாநிலத்தவர் ஆனாலும் சென்னையில் செட்டில் ஆகி பல ஆண்டுகள் ஆனதால் தமிழ் நன்றாக பேசினார்
.

"குட் ஈவினிங் ஆல் ,உங்க எல்லாரையும் நான் அடிக்கடி மீட் பண்றதில்லை ,சோ உங்க பேரெல்லாம் தெரியாட்டியும் ,நீங்க என்ன ஒர்க் பண்ணிட்டு இருக்கீங்கன்னு உங்க ப்ராஜெக்ட் மேனேஜர் விவேக் மூலமா நான் அப்டேட் பண்ணிட்டு தான் இருக்கேன் . ,

உங்க டீம் எஸ் பேங்க் ப்ரொஜெக்ட ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க , கிளெய்ன்ட்ஸ்கு ரொம்பவே திருப்தியா இருக்கும்னு நம்பறேன் .,காங்கிராஜுலேஷன்ஸ் விவேக் ….பூர்ணா நீயும் ரொம்ப நல்லா டீமை கோ ஆர்டினேட் பண்ணி இருக்க ,டீம் மெம்பெர்ஸ்க்கும் வாழ்த்துக்கள் நீங்க எல்லாருமே உங்க வேலைய சிறப்பா செஞ்சிருக்கீங்க ,குட் ஜாப் கைஸ், கீப் இட் அப் ..”
என்று அவர் வாழ்த்த ,

“தங்க யூ சார்,…”என்று ஒரே குரலில் உரைத்தனர்..” ஓகே,நெஸ்க்ட் நாம பேசப்போற டாபிக்,உங்களோட அடுத்த ப்ராஜெக்ட் அனௌன்ஸ்மென்ட்

Spectrum project இது ஒரு கேபிள் டிவி நெட்ஒர்க், யூ எஸ் பேஸ்ட்டு கம்பெனி, அதை பத்தி டீடெயில்ஸ் உங்களுக்கு அப்புறமா உங்க ப்ராஜெக்ட் மேனேஜர் எக்ஸ்பிளேன் பண்ணுவாரு ,

இது ஒரு பெரிய ப்ரொஜெக்ட்ங்கறதால இன்னும் கொஞ்சம் மேன் பவர் தேவை படும் ,சோ இப்போ இருக்கற டீம ரெண்டா பிரிக்க போறோம் , ஒரு டீம் லீடர் பூர்ணா ,இன்னொரு டீம் லீடர் புதுசா டீம்ல ஜாயின் பண்ணி இருக்கற அருண்… இவங்க ரெண்டு பேரும் விவேக்கு ரிப்போர்ட் பண்ணுவாங்க ...ஓகே ?

அருண் நம்ம மும்பை பிரான்ச்ல இருந்து இங்க வந்திருக்காரு , ஷார்ட் டைம்ல ரொம்ப நல்ல பேர் வாங்கி இருக்காரு… வெரி டேலன்ட் அட் யங் மேன் ,சோ அவரை ஒரு டீம் லீடரா ப்ரொமோட் பண்றோம் ,உங்க ஃபுல் சப்போர்ட்ட அவருக்கு தருவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்... நவ் ஓவர் டூ அருண் ..”
என்று அருணை பார்த்தார் ,அவரது வார்த்தையை ஒரு தலையசைவுடன் ஏற்று ,

அருண் ,எழுந்தான் ,"ஹாய் ஐ அம் அருண் குமார் ,சார் சொன்னமாதிரி மும்பை ப்ராஞ்சுல இருந்துவந்திருக்கேன்,மொதல்ல இந்த ப்ரோமோஷனை நான் எதிர் பார்க்கவே இல்லை , தாங்க் யூ சார் ,எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு குடுத்ததுக்கு ,நான் கண்டிப்பா என்னோட பெஸ்ட்ட ,குடுப்பேன் ,உங்க எல்லாரோட ஒர்க் பண்ணவும் நெறைய புது விஷயங்களை கத்துக்கவும் ஆர்வமா இருக்கேன் ..நீங்க எல்லாரும் என்னை சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நம்பறேன் ...தாங்க் யூ சோ மச்.."பேசி முடித்து அமர்ந்தான் .

மற்றவர்களின் சம்பிரதாய கைத்தட்டலில்,அதிர்ந்து அமர்ந்திருந்த அபிக்கு சுயஉணர்வு வந்தது ... ஐயோ இப்போ இவன் டீம் லீடரா வந்து என் தலைக்கு மேல உக்கார போறானா? கடவுளே இது தெரியாம நான் அவன் கூட சண்டைபோட்டது மட்டுமில்லாம ,மோசமா வேற திட்டிட்டேனே !!!எப்படி சொதப்பி வச்சிருக்கிற அபி நீ?’ என்று அவள் தன்னை தானே கடிந்து கொண்டிருக்கும் போது ..

இப்போது விவேக் உங்க டீமை அறிவிப்பார் என்று சர்மா சார் சொன்னதும் ,அபியின் மனம் வேகமாக யோசித்தது ,கடவுள் திரும்ப எனக்கு ஒரு வாய்ப்பு குடுக்கறார் போல , விவேக் பெயர்களை வாசிக்கதொடங்கியதும் அபி கண் மூடி "கடவுளே நான் அந்த அருண் டீம்க்கு மட்டும் போய்ட கூடாது..பூர்ணா டீம்க்கு போகணும் "என்று மனமார வேண்டினாள் .

“விக்கி ,ஜானகி , ஜோதி ...பூர்ணா டீம்ல இருப்பாங்க ..

நித்யா,பத்ரீ ,அபி… அருண் டீம்லயிருப்பாங்க…
“என்று விவேக் முடிக்கவும் ,சட்டென்று திறந்த அவளது விழிகள் எதிரில் அமர்ந்திருந்த அருணின் நிச்சலமான கண்களை சந்தித்தது,கடைசி நம்பிக்கையையும் இழந்த ஏமாற்றத்தில் , ‘இவன் மட்டும் எப்படி முகத்தில் ஒரு உணர்ச்சியும் காட்டாமல் சிலை மாதிரி இருக்கிறான்? நான் மட்டும் இங்கு தவிக்கிறேன் என்று அதையும் ஒரு குற்றமாக்கி அவன் மீது தேவையில்லாமல் கோபம் கொண்டாள்.

இப்படி நடக்க போவதை தான் அவளுடைய உள்ளுணர்வு அச்சுறுத்திக்கொண்டே இருந்ததோ?

“கடைசியில் நான் பயந்த மாதிரியே நடந்திடுச்சி ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்

எனக்கு ஆப்பு ஈஸ் ஆன் தா வே …”என்று கவலையுடன் நினைத்துக்கொண்டாள்.

…………………………………….​

“புது ஆபீஸ்.. புது ப்ராஜெக்ட்… புது ப்ரோமோஷன்… கலக்கறேள் அருண் ஜி…”என்று விக்கி அருணை கலாய்த்துக்கொண்டிருந்தான் ,இருவரும் கேன்டீனில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது.

“டேய் போதும் டா… நீ விளம்பரம் ஓட்டினது…”என்று அலுத்துக்கொண்டாலும் அருணின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

“மச்சான்… நீ சென்னைக்கு வந்ததுக்கே பார்ட்டி தரணும்…இப்போ டீஎல் வேற ஆகி இருக்க சோ டபிள்ட்ரீட் வேணும் டா…” என்றான் உற்சாகமாக.

அதெல்லாம் கலக்கிடலாம் விடுடா..”என்று அவனுக்கு உறுதியளித்தான்.

அதே சமயம் அங்கு வந்த பூர்ணா அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்,

“ஹாய் விக்கி! ஹாய் அருண்! என்ன ரெண்டு பேரும் ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ற மாதிரி தெரியுது?” என்று கேட்டுகொண்டே சகஜமாக அவர்களின் உரையாடலில் கலந்துகொண்டாள்.

“அது ஒன்னும் இல்லை பூர்ணா..நான் டீஎல் ஆனதுக்கு ட்ரீட் கேக்குறான் விக்கி…”

“அப்போ எங்களுக்கெல்லாம் ட்ரீட் கிடையாதா…”
என்று பொய் கோபத்துடன் கேட்டாள் பூர்ணா.

“ஐயையோ பூர்ணா…உங்களுக்கு இல்லாமலா…?கண்டிப்பா வச்சிடலாம்…எப்போன்னு மட்டும் சொல்லுங்க…”என்று அவசரமாக கேட்டான்.

விக்கிஅவன் காதோரம் குனிந்து ,"டேய் அது என் ஆளு ,நீ பீலிங்ச கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு…”என்று கிசுகிசுத்தான்…

"டேய்.. அதான் நான் பூர்ணாவ என்னோட சிஸ்டர்னு சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன?" என்று சிரித்தான்…

“ஹே.. அங்க என்ன ரகசியம் பேசுறீங்க ?” என்றாள் பூர்ணா சந்தேகமாக பார்த்து,,

"ஒண்ணுமில்லை பூர்ணா ,வெறும் பாய்ஸ் டாக் அவ்ளோதான்…”

என்று சமாளித்தான் அருண்….அதை நம்பாத போதும்,மேலும் துருவாமல் விட்டுவிட்டு ,

"எனி வேஸ் ,டீம் லீடர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் அருண் "என்று கைகுலுக்கினாள்.

"நன்றி பூர்ணா ,என்று அவளது வாழ்த்தை ஏற்றவன் ,

"நல்லா வேலை செய்றவங்களை எல்லாம் உங்க டீம்ல எடுத்துடீங்க போல "என்று குறும்பாக கேட்டான்

லேசாக சிரித்துவிட்டு ,

"விக்கி ,என் டீம்ல இருக்கிறதை பார்த்தும் இந்த கேள்வியை கேக்கலாமா அருண்? என்று பதிலுக்கு அவள் திருப்பி கேட்க , விக்கி ,"பூர்ணா என்று கோபமாக முறைக்க ,மற்ற இருவரும் சத்தமாக சிரித்தனர் ,சிரிப்பின் இடையில் ,"சாரி பூர்ணா நான் இதை மறந்துட்டேன்..” என்று கூறி விக்கியின் காலை மேலும் வாரினான்.

"ரைட்டு இப்பவும் நான் தான் அவுட்டா,,,” என்று தன்தோல்வியை ஒப்புக் கொண்டு விக்கி பெருமூச்சு விட மேலும் நகையொலி கிளம்பியது.

“சரி பேசிகிட்டு இருங்க நான் போய் காபி வாங்கிட்டு வரேன்..” என்று விக்கி கிளம்பினான்.

அவன் சென்றதும் ,பூர்ணா அருணிடம் "அருண் ,இந்த டீம் பிரிச்சது ,அதுல இவங்க தான் இருக்கனும்னு முடிவுபண்ணது எல்லாமே சர்மா சார் தான், யாருக்கு என்ன வேலை கொடுக்கறது…ஒருத்தருகிட்ட எப்படி வேலை வாங்கறது இதெல்லாம் எல்லாரையும் விட அவருக்கு நல்லா தெரியும் …என்று சீரியஸ் குரலில் கூறினாள்,

"அபிதான் உன்னோட டீம்ல இருக்காளே ,அப்புறம் உனக்கென்ன கவலை ?அவ நல்ல திறமைசாலி,சின்சியர் சிகாமணி, அவ உனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருப்பா..” என்று சேர்த்து கூறினாள்

‘அந்த ஆங்கிரி பார்ட்டுக்கு வேலை செய்யகூட வருமா?’ என்று மனதிற்குள் வியந்துவிட்டு ஏதோ நினைவு வரவே

"ஆனா காலைல விவேக் திட்டினா மாதிரி இருந்தது ,ஏதோ வேலைய நேரத்துக்கு முடிக்கலைனு " என்று சிறு ஏளனத்துடன் வினவினான்….

அருணுக்கு ,அபியின் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை என்பது பூர்ணாவுக்கு புரிந்தது ,இருவருக்கும் ஏற்கனவே தனிப்பட்டவகையில் சிறு உரசல் நேர்ந்திருக்கிறது ,இந்த நிலையில் ஒரே டீமில் வேலை செய்ய நேர்ந்தால் அது இருவருக்குமே சங்கடத்தையும் பிரச்சனையையும் தரும் என்று அறிந்தே இருந்தாள்…இவன் மனதில் அபியை பற்றிய தவறான எண்ணத்தை போக்க வேண்டும் என்ற முனைப்பு அவளுக்கு இருந்தது,ஏனெனில் அந்த குறுகிய கால பழக்கத்திலும் அபியின் மேல் அவளுக்கு மிகுந்த அன்பும் பரிவும் ஏற்பட்டிருந்தது,,,அதனால் அவள் அறிந்த வரையில் உண்மையை அவனிடம் சொல்ல நினைத்தாள்,ஒரு வேலை அபியின் நிலை அறிந்தால் இவன் அவளுக்கு உதவக்கூடும் ,இல்லாவிட்டாலும் தனிப்பட்ட வெறுப்பையேனும் வேலையில் காட்டாமல் இருந்தால் போதும் என்று நினைத்து… “அருண் ,அபி ஒரு நல்ல புரோகிராமர் ,வேலைய சட்டுன்னு புரிஞ்சிகிட்டு பண்ற திறமை அவகிட்ட இருக்கு, வேலையும் கச்சிதமா இருக்கும் ,சோ விவேக்அவளுக்கு அதிகப்படி வேலை குடுப்பான், சில நேரம் அவனோட பாதி வேலைய இவ தலைல கட்டிடுவான் ..இப்படி அதிகப்படி வேலை செய்யறதால ,சில நேரம் அவளோட வேலைய டெட்லைன் குள்ள முடிக்க முடியாம போயிடுது ,வெளிப்படையா சொல்லனும்னா ,விவேக் தன்னோட பதவியை யூஸ் பண்ணி அவ தலைல மொளகா அரைக்கிறான்,இது தான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும்….மத்தபடி மீதி விஷயங்கள் நீயே போக போக தெரிஞ்சிக்குவ…”

பூர்ணா எதையோ சொல்லாமல்மறைப்பது போன்று தோன்றியது அருணுக்கு ,

காபி கோப்பையுடன் திரும்பி வந்த விக்கி தன் வழக்கம் போல வளவளத்துக்கொண்டிருந்தான் ,ஆனால் அருணின் மனம் பூர்ணா சொல்லிய விஷயத்திலேயே உழன்று கொண்டிருந்தது.

பூர்ணா சென்ற பிறகு ,விக்கி…

"மச்சான் ஏண்டா ஒரு மாதிரி இருக்க? நான் காபி வாங்க போகும்போது நல்லா தானே இருந்த? காபி வாங்குற கேப்ல என்னடா ஆச்சி உனக்கு ?”என்றான் அக்கறையாக

அருண்,பூர்ணா அபியை பற்றி கூறியதை அவனிடம் பகிர்ந்தான்.

"மச்சி ,அந்த விவேக்குக்கு அபி மேல ஒரு கண்ணுடா அதான் இப்படி எல்லாம் பன்றான்" என்று விக்கி அலட்சியமாக கூற…."வாய மூடுடா ,ஒரு பொண்ண பத்தி இப்படி தப்பா பேசுறியே உனக்கு அறிவு இருக்கா ?”என்று எரிந்து விழுந்தான்.

“டேய்…நான் அபியை பத்தி எங்கடா தப்பாபேசினேன் ?அந்த விவேக்கை பத்தி தானேடா பேசினேன்?" விக்கிகு அருணின் இந்த எதிர்பாராத கோபத்திற்கு காரணம் புரியவே இல்லை. ,

"ரெண்டும் ஒன்னுதான், நம்மளோட டீம்ல இருக்கற பொண்ண பத்தி நாமே தப்பா பேசலாமா? அதுவும் கொஞ்சம் கூட உண்மை இல்லாம?" என்று இன்னும் கோபம் தணியாமல் கேட்டான்.

டேய், நாம எப்பவும் பேசுற மாதிரிதானேடா பேசினேன்? நீகூட தான் காலையில அவளை பத்தி மோசமா திட்டின…இப்போமட்டும் என்னடா உனக்கு இந்த திடீர் ஞானோதயம் ?”என்று புரியாமல் கேட்டான்.

"நான் சொன்ன சென்ஸ் வேற… நீ சொல்ற சென்ஸே வேற.. இதெல்லாம் சொன்னாலும் உனக்கு புரியாது…" என்றான் அலுப்பும் கோபமுமாக…

"ஆமாடா…எனக்கு புரியாது..நீ வந்து கிளாஸ் எடு…” என்றான் விக்கி ஏளனமாக,

பதிலாக அருண்அவனை முறைத்துப்பார்க்கவும்,

"இப்போ உனக்கு என்ன பிரச்சனை? நான் பொண்ணுங்கள பத்தி தப்பா பேச கூடாதா.. இல்லை அபியை பத்தி தப்பா பேசக்கூடாதா ?”

"பொண்ணுங்கள பத்தி பேசாத அதுவும் குறிப்பா அபியை பத்தி வாயே தொறக்காத போதுமா?”
என்றுவிட்டு ,கோபமாக அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான்.

"இவன்ஏன் இப்படி கொந்தளிக்கிறான்? ஏதோ தப்பா இருக்கே? விக்கி.. உன்னோட செவென்த் சென்ஸ்க்கு வேலை வந்துடிச்சிடா " என்று உள்ளூர எண்ணிக்கொண்டான்…

தொடரும்
 
Last edited:
Top