Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 14

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 14
அபி அழுது கரைந்து கொண்டு நின்றது சில கணங்களே, பின்னர் இது இப்படி கலங்கி நிற்பதற்கான நேரம் இல்லை, செய்த தவறை சரி செய்வதற்கான நேரம் என்பதை உணர்ந்து ஒரு உறுதியுடன் கண்ணீரை துடைத்து கொண்டுஅருணைத் தேடி சென்றாள்..
அருண் அவர்களது மீட்டிங் அறையில் இருந்தான் ஒரு நீளமான டேபிளின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு,கண்களில் தீவிரத்துடன் தனது லாப் டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்..
இவள் பேசாமடந்தை போல் அவன் எதிரில் சென்றுஅமைதியாக நின்றாள்.. அவளின் வருகையை அறிந்தும், எந்தவித சலனமும் இல்லாமல் அவளை துளியும் மதிக்காமல் தன் வேலையிலேயே ஆழ்ந்திருந்தான்.
அருண் தன்னை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்வதைக்கண்டு குரல்வளையில் முள் சிக்கியது போல வலித்தது, அந்த உணர்வை மிகுந்த சிரமத்துடன் விழுங்கிக்கொண்டு ,
"சாரி "என்றாள் தீனமான குரலில்..
பொறுமையிழந்த வேகமூச்சுடன் ,
"கிளையண்ட்ஸ் உன்னோட ‘சாரி’ ய வாங்க மாட்டாங்க அபி " என்றான் கடுமையாக…
"எனக்கு மட்டும் தெரியுமா இப்படிலாம் ஆகும்னு? ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டேன், அதுக்காக நீ என் கூட பேசமாட்டியா? ஒரேடியா என்னை வெறுத்துடுவியா? நான் பண்ண தப்புக்காக எவ்ளோ பீல் பண்ணறேன் தெரியுமா? என்னை மன்னிக்க கூடாதா? நான் எப்பவும் உன்னை லெட் டவுன் பண்ண மாட்டேன் அருண், இந்த ப்ராப்ளம் சரி செய்ய முடியலைன்னா கூட அதுக்கு பொறுப்பேத்துகிட்டு நான் வேலையை விட்டே போயிடுறேன்..” என்று தொடர்ந்து பேசியவளின் குரல் கடைசியாக உடைந்து விம்மலாக ஒலிக்கவும்,அருண் சட்டென்று அவளை ஏறிட்டுப்பார்த்தான், அவள் வெடித்து வரும் அழுகையை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருப்பதை கண்டு ,ஒரு கணம் கழிவிரக்கத்தில் கண் மூடி திறந்தான்..
மனதின் ஒரு மூலையில் ஏற்கனவே அபியிடம் கடுமையாக பேசியதற்காக வருந்தி கொண்டு தான் இருந்தான் ,இப்பொழுது அவளது இந்த பரிதவித்த நிலையை கண்டு அவள்பால் உள்ளம் உருகி கரைந்து போனான்…
இருப்பினும் அவன் மனதின் ஒருபாதி அவ்வளவு எளிதாக அவனை இளக விடவில்லை, அபியிடம் சமாதானமாக ஒரு வார்த்தை பேசக்கூட விடாமல் அவனது ஈகோ தடுத்தது..
அவள் மனம் திறந்து மன்னிப்பு கேட்ட பிறகும் அதற்க்கு ஒரு சிறு எதிர்வினை கூட இல்லாமல் அவன்பாட்டில் தன் வேலையை தொடரவும், அபி தன் மனதை சமனப்படுத்திக்கொண்டு இனி இந்த கல் நெஞ்சுக்காரன் முன்பு ஒரு துளி கண்ணீர் கூட சிந்தக்கூடாது என்று முடிவெடுத்தாள்..
அவனாக பேசுவான் என்று சிறிது நேரம் காத்திருந்து விட்டு அந்த கல் கரையாது என்பது உறைக்க வேறுவழியில்லாமல் அவளே பேசினாள்..
“என்ன பண்ண போற அருண்?” நம்ம டீம் ஹெட்க்கு இன்பார்ம் பண்ண வேண்டாமா? அவங்க டெக்கினிக்கல் சப்போர்ட் கேப்பாங்கல? சர்வர்ல பாக்அப் இருக்கும் ,லாஸ்ட் டூ டேஸ் ஒர்க் மட்டும் அப்லோட் பண்ணலை, அது கூட ஓவர் நைட் ஒர்க் பண்ணா முடிச்சிடலாம் ,நம்ம டீம்மேட்ஸ்க்கு வேணா நான் கால் பண்ணவா ??”
“ஜஸ்ட் ஷாட் அப் அபி…
“என்று கத்தினான் அருண்..
“ப்ராஜெக்ட் ஹெட் கிட்ட போனா அப்புறம் நீ மூட்டையை கட்டிக்கிட்டு வீட்டுக்கு போக வேண்டியது தான், எல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ கெளம்பு..” என்று எரிந்து விழுந்தான்
அவளும் உள்ளுக்குள் புகைந்து கொண்டுதான் இருந்தாள்..
“நான் பண்ண தப்ப சரி செய்யதானே ட்ரை பண்றேன் ,பெரிய இவனாட்டம் பேசுறான்.. என்கிட்ட எப்படி இவனால் இவ்ளோ ஹார்ஷா பேசமுடியுது?”
"நான் போக மாட்டேன் ,உன்கூட இருந்து ஹெல்ப் பண்ண போறேன்” என்றாள் பிடிவாதமாக..
"அது உன்னோட இஷ்டம் ,நிஜமாவே ஏதாவது ஹெல்ப் பண்ணனும்னு நெனைச்சா கொஞ்சம் பேசாம இரு அதுதான் எனக்கு பெரிய ஹெல்ப்..”
பேசமாதானே இருக்கனும் சரி பேசாம இருக்கிறேன்..” என்று மனதில் கருவிக்கொண்டு ,கையை குறுக்கே கட்டி கொண்டு,கண்களாலே ஊடுருவுவது போல அவனையே வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருந்தாள்..
அருணால் எவ்வளவு முயன்றும் அந்த கூறிய பார்வை அம்பை உதாசீனப்படுத்தமுடியவில்லை,கடைசியாக தோல்வியுற்றவனாக அவளை நிமிர்ந்து பார்த்து,
“என்ன…?” என்றான் எரிச்சலாக
“ஏன் நான் சும்மா தானே இருக்கேன்..” என்றாள் அப்பாவியாக
“இப்ப என்ன வேணும் உனக்கு…” என்றவனின் குரலில் எரிச்சலும், அவளது பார்வையில் அலைபாய்ந்து வேலையில் மனதை ஒருமுகப்படுத்தமுடியாமல் போனதால் தன் மீதே கொண்டே அலுப்பும் ஒருங்கே ஒலித்தது..
ஒருவழியாக அவனது கோபம் சிறிது குறைந்தது போல தோன்றவும் ,அந்த வாய்ப்பைவிடாமல்
"நீயே எப்படி சரி பண்ணுவ அருண்?” என்று அவ்வளவு நேரமும் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்வியை கேட்டாள்..
“சின்ன வயசுல இருந்தே கம்ப்யூட்டர்ல தான் எனக்கு ஆர்வம், அதனால அதை பத்தி எந்த விஷயமா இருந்தாலும் தேடி புடிச்சி கத்துக்குவேன்.. சாப்ட்வேர் ஹார்வேர், ஹேக்கிங் டெக்னீக்ஸ் எல்லாமே அத்துபடி ,இந்த மாதிரி டேட்டா ரிட்ரைவல்லாம் நெறைய பண்ணி இருக்கேன்..”
அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது…
“அப்போ உனக்கு முன்னாடியே தெரியும் டேட்டா ரிட்ரைவ் பண்ணிடலாம்னு?”
ஆமாம் என்று தலையசைத்தான்
“அப்புறம் எதுக்கு என்மேல கோபப்பட்டு அப்படி திட்டின?” என்று கோபம் காட்டினாள்..
“பின்ன, எல்லாம் ஓகே நாளைக்கு ப்ரசன்ட்டேஷன்னு வரும்போது கடைசி நேரத்துல இப்படி சொதப்பினா எரிச்சல் வராதா? அதுவும் நீ? வேற யாராவது பண்ணிஇருந்தா கூட பரவாயில்லை..”
அவனுடைய குரலில் அவனது ஏமாற்றம் தெளிவாக தெரிந்தது…
“ ‘அதுவும் நீ’ ன்னா என்ன அர்த்தம்?”
குற்றவுணர்வு கொள்வதற்கு பதிலாக அவள் மனம் குதூகலிக்க தொடங்கியது…
“நான் என்ன அவ்ளோ ஸ்பெஷல் அவனுக்கு? என்னை எவ்ளோ நம்பி இருந்தா, நான் தப்பு செஞ்சதை கூட அவனால ஏத்துக்க முடியமா போய் இருக்கும்?”
இப்போது புரிந்தது அவன் ஆத்திரமும் கோபமும், அவள் மேல் அவன் வைத்த அளவுகடந்த அன்பினாலும் நம்பிக்கையினாலும் வந்தது என்று…
“என் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கான், நான் இவ்ளோ மோசமா சொதப்பிட்டேனே?” என்று குற்றவுணர்வு மீண்டும் தலைதூக்க, அதற்குமேல் எதுவும் பேசாமல் அவன் வேலை செய்வதை பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்..
அருணின் வேலை வெகுநேரம் இழுத்தது, செய்வதற்கு எதுவும் இல்லாமல் அவனுடைய இரண்டாம் நிழலைபோல அந்த அறையில் காத்திருந்தாள் அபி…
அவளுக்கு அருண் இன்னும் முழுமையாக சமாதானம் ஆகவில்லை என்று நன்றாக தெரிந்தது, அதனால் மேலும் அவனை கேள்விகளால் துளைக்காமல் அவன் போக்கில் விட்டுவிட்டாள்,
அருணுக்கு, அபி தான் செய்த தவறுக்காக வருந்துவதும், அவனுடைய கடுமையான வார்த்தைகளால் காயமடைந்திருப்பதும் புரியாமல் இல்லை, ஆனால் இப்போது அவளை சமாதான படுத்துவற்கான சமயமில்லை, அதற்கான அவகாசமும் இல்லை, இந்த சிக்கலில் அவனது தலைமை பொறுப்பு கேள்விக்குறி ஆகும் என்பதை விட , அபியின் வேலைபோகும் அபாயமும் இருந்தது , அது நடக்காமல் தடுக்கவேண்டும் அதைத்தான் தன் முதன்மையான கடமையாக கருதினான்.. இந்த வேலை வேறு எவ்வளவு நேரம் இழுக்குமோ தெரியாது, அதனால் அபியிடம் எதையும் உறுதியாக கூறவும் முடியவில்லை, முதலில் அவசர பிரச்சனையை சரி செய்துவிட்டு மற்ற விஷயங்களைப்பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினான்..
ஒரு மணிநேரத்திற்கு பிறகு டின்னர் ஆர்டர் செய்து வரவழைத்தாள்.. இருவரும் உண்டு முடித்தபின், அவன் வேலையை தொடர அபி டேபிளை சுத்தம் செய்தாள், மணி பன்னிரெண்டை நெருங்கும் போது, காபி மெஷினில் காபி தயாரித்துகொண்டுவந்து நீட்டினாள், அவன் பேசாமல் வாங்கி பருகிவிட்டு வேலையில் ஆழ்ந்தான்…
அவன் அழிந்துபோன டேட்டா பைல்கள் எல்லாவற்றையும் மீட்டெடுத்து முடிக்கும் சமயம், லேப்டாப்பில் பேட்டரி குறைய சார்ஜரை தேடினால், ஏதோ அவன் மனதை படித்தவள் போல அவன் முன்பு சார்ஜரை எடுத்து நீட்டினாள் அபி, , அவன் அதை வாங்கி கனெக்ட் செய்த சமயம், சட்டென்று மின்சாரம் துண்டிக்கப்பட…
“ச்ச..” என்று எரிச்சலாக டேபிளை தட்டினான், அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்திருக்க, தன்னுடைய செல்போனின் விளக்கை ஒளிரவிட்டான் எதிரில் அபி அவள் இருக்கையில் இல்லாததை கண்டு சற்று திடுக்கிட்டவனாக நாலாபுறமும் டார்ச்சை சுழற்றினான், அங்கும் இங்கும் அலைந்த ஒளிவட்டம் ஜன்னல் அருகில் நின்ற அபியின் உருவத்தில் வந்து நிலைத்தது…
அவள் ஜன்னலை திறந்து விட, வெளிக்காற்று வேகமாக பாய்ந்து வந்து அந்த அறை முழுதும் நிறைத்தது..
குளிர்காற்று ஜில்லென்று உடலை தாக்கவும் அபி உடல் சிலிர்த்து கைகளை குறுக்கே கட்டிக்கொண்டாள்..
அந்த மங்கிய ஒளியில், கூந்தல் கற்றைகள் காற்றில் பறக்க ,ஜன்னலின் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒரு தேவதையை போல்நின்ற அபியை பார்த்து மெய்மறந்து சொக்கிப்போய் தேவலோகத்தில் இருப்பது போல் உணர்ந்தான் அருண்..
காற்றில் மண்வாசனை கலந்து வந்து நாசியை தொட்டது ,மழை வரும் போல ,என்று மனம் நினைத்தது ,அவனது நினைப்பை மெய்யாக்குவது போல ,சடசட வென்று மழை கொட்டத்தொடங்கியது ,அபி இருகைகளையும் வெளியே நீட்டி,மழைநீரை அதில் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள்..
அருண் அகன்ற விழிகள் நிறைய அவள் அழகை பார்த்து ரசித்தபடியே சிலையாக வீற்றிருந்தான்,பார்க்கக் பார்க்க அவள் அழகு கூடிக்கொண்டே போவது போன்ற பிரம்மை தோன்றியது.. கால்கள் அனிச்சையாக அவளிடம் இழுத்துச்செல்ல, அவள் பின்புறமாக தன் அகன்ற மார்பை கொண்டு அவள் மெல்லிய தேகத்தை அரண் அமைத்து காப்பது போல அவள் உருவத்தை தன்னுள் மறைத்தபடி ஒட்டி நின்றான், இருவர் உடலும் தொட்டுகொள்ளவில்லை ,ஆனால் அவனுடைய உடலிலிருந்து எழுந்த அனல் தன் முதுகை சுட்டெரிப்பது போல் உணர்ந்தாள் அபி, இதயம் படபடக்க மூச்சுவிடவும் மறந்து அவள் உறைய , தன் கைகள் இரண்டையும் நீட்டி வெளியே நீண்டிருந்த அவளின் கரங்களை பற்றினான், அந்த மென்தீண்டலில் அவள் உடல் சிலிர்க்க, அந்த மென்கரங்களை கீழிறக்கி அவள் இடையை சுற்றி வளைத்து அவள் பூவுடலை தன் மார்போடு சேர்த்து இறுக்க அணைத்தான், அபி ஒரு வேக உள்மூச்சிழுப்பில் அந்த ஸ்பரிசத்தை உணரும் போதே ,அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து வாசம் பிடித்து அவளை மேலும் நிலைகுலையச்செய்தான், இதயம் பந்தயக்குதிரைபோல் தடதடக்க அவள் கண்மூடி மெய்மறந்திருக்க.. அவன் தன் தகிக்கும் உதடுகளை அவளின் தண்ணென்ற வெண்தோள்களில் அழுத்தமாக பதித்தான்…
பின்னர் மெதுவாக அவளை தன்புறமாக திருப்பி அவள் பூமுகத்தை தன் இருக்கைகளில் ஏந்தினான்..
அவன் கண்கள் அவளது பேரழகை ஆவலுடன் பருகியபடியே பயணித்தது, களைந்த கூந்தல் அலங்கரித்த பிறை நெற்றி, நாணமும் ஆவலுமாக மூடிய கண்கள், லேசாக சிவந்த கன்னங்கள், சில்லிட்ட நாசி, கடைசியில் அவனை முத்தமிட அழைக்கும் அவள் சிவந்த அதரங்களில் வந்து நிலைத்தது ,அருண் அனிச்சையாக குனிந்து அவள் இதழ்களை முத்தமிட போகும் சமயம் , சில்லென்ற குளிர்ந்த நீர் முகத்தில் படவும் ஒரு சின்ன தலை சிலுப்பலில் சுயஉணர்வு பெற்று விழித்தான், அவன் அவனது இருக்கையிலேயே அமர்ந்திருக்க அபி அவன் மீது மழை நீரை பிடித்து தெளித்து விளையாடிக்கொண்டிருந்தாள்..
ஒருமுறை கண்களை அழுந்த மூடி திறந்து தன் மனக்கண் முன் தோன்றிய அந்த கற்பனை காட்சிகளை விரட்ட முயன்றான்…
“பார்க்காத… அவ பக்கமா பார்க்காத..” என்று தன்னை மீறி அவள் புறம் பாய்ந்த தன் விழிகளுக்கு கடிவாளமிடமுயன்றான்..
ச்ச.. என்னமாதிரி மூன்றாம் தர சிந்தனை எனக்குள்ள..? என்னை நம்பி அந்த பொண்ணு நடுராத்திரில தனியா என் கூட இருக்கா, நான் என்னடான்னா இப்படி வரம்புமீறி கற்பனை பண்ணிட்டு இருக்கேன்..”என்று தனக்குத் தானே மனதிற்குள் குட்டுவைத்துக்கொண்டான்…
அவன் கட்டுக்கடங்காமல் தரிகெட்டுஓடும் தன் எண்ணஓட்டத்தை, கட்டுக்குள் வைக்க போராடும் போதும்,இதை பற்றி துளியும் அறியாமல் அபி அவனை அருகில் வருமாறு அழைத்தாள்
“அருண் இங்க வந்து பாரேன், ஆலங்கட்டி மழை..” என்று விழிவிரித்தாள்
என் மனசுல என்ன ஓடுதுன்னு தெரியாம இப்படி அப்பாவியா கூப்பிடுறாளே என்று அவள் மேல் பரிதாபம் கொள்வதா…இல்லை தன்னை மீறி நடக்கும் ஹார்மோன்களின் சித்து விளையாட்டை தடுக்க அவன் படும்பாட்டை எண்ணி தன்னையே நொந்துகொள்வதா என்று அவனுக்கே தெரியவில்லை..
இருந்தும் அவள் அழைத்ததற்காக எழுந்து சென்று அவள் பக்கத்தில் நன்றாக இடைவெளி விட்டு தள்ளி நின்று கொண்டு மழையை பார்ப்பதுபோல் பாவனை செய்தான்..
குளிரிந்த காற்று அவனுள்ளே எறியும் அனலை தணிப்பது போல இதமாக வீச அதை கண் மூடி அனுபவித்தான் … அப்போது திடீரென்று கண்ணைப்பறிக்கும் மின்னலை தொடர்ந்து காதை பிளக்கும் பேரிடி இடிக்கவும் அபி உடல் நடுங்க சற்று இவன் புறமாக ஒட்டிநின்றாள் அருகில்அசைவை உணர்ந்து கண்திறந்தவன் ,அபி நெருங்கி வந்திருப்பதை அறிந்தான் ,
“இப்போ இது மட்டும் தான் பாக்கி… இவளும் சேர்ந்து என்னை ரொம்ப சோதிக்கிறாளே..” என்று நினைத்தவாறு அவளை நன்றாக திரும்பி பார்த்தான் அவள் கண்கள் மூடியிருக்க ,உதடுகள் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது ,கூர்ந்து கேட்டபோது ,ஒவ்வொரு இடி சாதத்திற்கும் , அபி ,வாய்க்குள் “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்று உருபோட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது…
“இந்த கார்ப்பரேட் காலத்து பெண்கள் கூட இந்த மாதிரி விஷயங்களை நம்புகிறீர்களா?” அவன் அவளை ஆச்சரியமாக பார்க்க ,அவள் அவன் பார்வையை உணர்ந்து லேசாக அசடு வழிந்தாள்..
“இடி இடிச்சா வீட்டுக்கு தலைச்சான் பிள்ளைக்கு ஆகாதுன்னு எங்க அம்மா சொல்லுவாங்க ,அதனால எப்ப இடி மின்னல் வந்தாலும் அர்ஜுனா அர்ஜுனா சொல்ல சொல்லிக்கொடுத்துட்டாங்க… சின்னவயசு பழக்கம் அதான் விட முடியலை…”என்று தன் போக்கில் சொல்லிக்கொண்டே போனவன் ஏதோ நினைவில் கண்கள் கலங்க உதட்டை கடித்து பேச்சை நிறுத்தினாள்… உடனேயே அவள் முகம் உணர்ச்சி துடைத்து இறுகிப்போனது ..
“என்ன ஆச்சு இவளுக்கு..? கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் நல்லாதானே இருந்தா, இப்ப திடீர்னு முகம் வாடி போச்சி..!!!
நிச்சயமாக அவள் மனதிற்குள் ஏதோ ஒரு வலி அரித்துக்கொண்டிருப்பதும் அது அவளுடைய குடும்பம் சம்பந்தப்பட்டது என்பதை மட்டும் அவனால் ஊகிக்க முடிந்தது ,ஆனால் அது என்னவாக இருக்கும்என்று தெரியவில்லை,ஏதுவாக இருந்தாலும் அபியே தன்னிடம் சொல்லும்வரை காத்திருக்க முடிவுசெய்தேன்..
“கண்டிப்பாக ஒருநாள் அவள் என்னை முழுசா நம்பி எல்லா உண்மையையும் என்கிட்ட சொல்லுவா, அந்தநாள் வரைக்கும் நான் காத்திருப்பேன் " என்று உறுதிகொண்டான்..
அதே நேரம் மின்னிணைப்பு திரும்பி வரவே அருண் வேலையை தொடர்ந்தான் , ஒருவழியாக அவன் எல்லா பையில்களையும் மீட்டெடுத்து முடித்து ஒரு நிம்மதி பெருமூச்சுடன் சோம்பல் முறிக்கும் போது, அபி அங்கே இருந்த சிறிய சோபாவில் கைகால்களை முடக்கிக்கொண்டு அயர்ந்து உறங்கி போயிருந்தாள்..
அவளது குழந்தை போன்ற மாசுமருவற்ற முகம் அவன் கண்களை கனியச்செய்தது, குளிரில் லேசாக நடுங்கிய அவள் மீது தன் சட்டையை கழற்றி போட்டுவிட்டான், குளிருக்கு இதமாக கதகதப்பாக இருக்கவே அபி தூக்கத்திலேயே அவன் சட்டையை இழுத்து நன்றாக போர்த்திக்கொண்டாள்.. அருண் அவளருகில் அமர்ந்து அபியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்..
"ஹே அழகி ,சாரி டி நான் உன்னை ரொம்ப அழவச்சிட்டேன்..”
ஏதோ துர்சொப்பனம் கண்டவள் போல் அபி தூக்கத்தில் புருவம் சுளிக்கவும், அவள் முகத்தில் கலைந்து விழுந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு நெற்றியில் இதமாக இதழ் பதித்தான்…
“உனக்கு என்னடி பிரச்சனை..? எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கறேன்,நீ நிம்மதியா தூங்கு..”
இமை பொழுதும் நீங்காமல் உன்னை
கண்ணில் வைத்து காப்பேன் கண்மணியே
என்று உறுதிபூண்டவனாக.. அவள் அருகிலேயே சாய்ந்து கண்ணயர்ந்தான்…
தொடரும்….


Author’s note
Makkale ,naan munnadiye sonna maadhiri naan IT professional kedaiyaadhu ,so indha data retrival laam yedhaavadhu logic illama irundhaa ,thayavu seidhu ignore seidhu vidavum ,idhai verum oru kadhai punaivaaga mattum ninaithu padikkavum
Nandri …
 
ஹப்பாடா....அருண் எல்லாத்தையும் ரீடிரைவ் பன்னிட்டான்...வினோத் மூஞ்சிலயும் நித்தி மூஞ்சிலயும் கரியப் பூசப்போறானுங்க
 
Top