Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 15

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 15
அதிகாலையில் வீசிய பனிக்காற்று முகத்தில் சில்லென்று மோத ,லேசாக குளிரில் நடுங்கியபடி போர்வையை நன்றாக இழுத்து போர்த்தியபடி பக்கத்தில் இருந்த தன் தலையணையை கெட்டியாக அணைத்துக்கொண்டாள் அபி…
“என்ன தலையணை இவ்ளோ கெட்டியா இருக்கு…? அதுவுமில்லாமல் என்னதிது கைக்குள்ள ஏதோ ஊர்ந்து நகருது மாதிரி இருக்கு..?” மேலும் அந்த தலையணை தன் உடலில் பட்டு ஊரும் இடத்திலெல்லாம் மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்வில் சட்டென்று கண்விழித்து பார்த்தாள் அபி.. அருணின் தோளில் தலை சாய்த்து அவனை கட்டிக்கொண்டு தான் இருந்த நிலையை உணர்ந்து கண்கள் ஆச்சர்யத்தில் விரிய நெருப்பை தொட்டாற்போல் உடனே விலகினாள்.
ஒருகணம் ஒன்றுமே புரியவில்லை..”நான் எப்படி இங்கே இவன் பக்கத்தில்?நைட் தூங்கும் போது நான் மட்டும்தானே இங்கே இருந்தேன், இவன் எப்ப வந்து பக்கத்துல படுத்தான்?”
எதுவும் புரியாமல் குழப்பத்துடன் அருணை நோக்கி பார்வையை திருப்பினால், அவன் எதுவும் அறியா குழந்தை போல் அமைதியாக உறங்குவதைக்கண்டு சிறிது மனநிம்மதி அடைந்தாள் ,பிறகு மெதுவாக தைரியம் தலைதூக்க ,அவன் புறமாக லேசாக குனிந்து அவனது தூங்கும் கோலத்தை ஆராய்ந்தாள்..
முழித்துக்கொண்டிருக்கும் போது அவன் முகத்தை நேராக பார்ப்பதே பெரும் பாடாக இருக்கும் இதில் அவன் முக லட்சணத்தை ரசிப்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது, இப்போது அவன் தூங்குவதை சாக்காகக்கொண்டு மனமார அவனை பார்த்துரசித்துக்கொள்ளலாம் ..
முக இறுக்கமெல்லாம் தளர்ந்து ,சிறு பிள்ளைபோல் அவன் தூங்குவதை கண்கொட்டாமல் பார்த்து அவனது ஒவ்வொரு அங்க லாவண்யங்களையும் மனதில் பதித்துக்கொண்டாள் அபி..
அலைஅலையான கேசம் ,அகன்ற நெற்றி ,அடர்ந்த புருவம்,ஆழ்ந்த பெரும்கண்களை மூடிய இமைகள்,பெண்களைவிட நீண்ட அழகான இமை மயிர்கள் ,நேர் நாசி ,செதுக்கியது போன்ற மோவாய் ,இளஞ்சிவப்பில் வடிவான உதடுகள் ,அழகே உருவான கிரேக்க கடவுளைப்போன்ற கட்டுமஸ்தான உடல் என்று பயணித்தவளின் கண்கள் அவனது வெற்றுத் தோள்களில் வந்து நிலைத்தது.. தன்னை மீறி முகம் சிவக்க கன்னங்கள் சூடேறியது..
“என்ன பண்ணிட்டு இருக்கேன் நான்? தூங்கிட்டு இருக்கற ஒரு ஆண் மகனை அவனறியாமல் கள்ளத்தனமாக சைட் அடித்துக்கொண்டிருக்கிறேன்.. நல்லவேளை அவன் முழிச்சிட்டு இல்லை ,இருந்திருந்தா என்னை ஒரு ஜொள்ளுன்னு நெனைச்சிருப்பான் ..”
இப்படி நினைத்து சங்கடத்துடன் கண்களை அவன் முகத்திற்கு திரும்பியவள் அவன் விழிப்பதற்கு அறிகுறியாக அசைவதை கண்டு ,உடனே திடுக்கிட்டு ,வேகமாக எழும்ப முயன்றாள், அவளுடைய குர்தா டாப் அவனுடைய உடலுக்கு அடியில் மாட்டிக்கொண்டிருக்கவே, எழுமியவேகத்தில் நிலைதடுமாறி மீண்டும் அவன் மேலேயே விழுந்தாள்…
அதற்குள் கண்விழித்திருந்த அருணின் கைகள் அனிச்சையாக செயல்பட்டு, அவள் இடையை இருபுறமும் தாங்கி அவள் அவன் மேலே விழாதவாறு தடுத்து நிறுத்தியது,அபி தன் இரு கைகளாலும் அருணின் தோள்களை கெட்டியாக பற்றி அவன் மேல் விழாதவாறு சமாளித்தாள்.
அருணின் கைபட்டு அழுத்திய இடத்தில் பூகம்பமே நிகழ, அவள் அவனை அதிர்ந்து போய் பார்த்தாள்..
அருணுக்கு ஒன்றுமே புரியவில்லை ,அபி எப்படி தன் மேல் விழுந்தாள் என்று தெரியவில்லை,இருப்பினும் இருவரும் இருந்த அசந்தர்பமான நிலையை உணர்ந்து ,உடனடியாக எழுந்து , அபியையும் விழாதவாறு எழுப்பி நிறுத்தினான்.. இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதை தவிர்த்து வேறு எங்கோ பார்த்தனர்..
“ஐயோ.. அவன் என்னை பத்தி என்ன நினைப்பான்..?எப்படியும் நல்லதா நினைச்சிருக்க மாட்டான்.. பின்ன, தூங்கிட்டு இருக்கும்போது மேலே வந்து விழுந்தா எப்படி நல்லவிதமான நினைக்க தோணும்..”என்று ஏதேதோ யோசித்து தர்மசங்கடமாக உணரும் போது..
“போலாமா..” என்றான் அருண்..
“எங்கே?”என்றாள் அபி..
"இன்னும் அஞ்சு மணி கூட ஆகலை, வீட்டுக்கு போய் ஃபிரெஷ் அப் ஆகிட்டு வரலாம்..” என்று கூறிவிட்டு முன்னோக்கி நடக்க அவள் அமைதியாக அவனை பின் தொடர்ந்தாள்..
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அபி பரபரப்பாக இங்கும் அங்கும் நடந்தவாறு ,கான்பரென்ஸ் ரூமுக்கு வெளியே நின்று கொண்டு உள்ளே என்ன நடக்கிறதோ.. எதுவும் சொதப்பி விடக்கூடாது, என்று தான் அறிந்த எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டு ஒரு நிலைகொள்ளாமல் தவித்திருந்தாள்..
அவளது அமைதியற்ற தோற்றத்தைக் கண்ட விக்கி ,
"என்ன அபி ,லேபர் வார்ட்ல ஒய்ஃப் அ அட்மிட் பண்ண ஹஸ்பண்ட் மாதிரி குறுக்கும் நெடுக்குமா நடந்துட்டு இருக்கீங்க ?என்றான்.
“விளையாடாதீங்க விக்கி நானே ரொம்ப டென்ஷனா இருக்கேன்..”
“அதான் கேக்குறேன், எதுக்கு டென்ஷன்? நாம தான் ப்ராஜெக்ட்ட கரெக்ட்டா முடிச்சிட்டோமே?”
என்று புரியாமல் கேட்க
“அதில்லை...” என்று ஏதோ சொல்ல தொடங்கியவள் ஒருகணம் தயங்கி,
“இல்லை கிளையண்ட்ஸ்கு பிடிக்கணும்ல அதான்..” என்று சமாளித்தாள்.
எந்த கிளையண்ட் தான் நாம பண்ற ப்ராஜெக்ட்ட அப்படியே ஓகே பண்ணி இருக்கான்? அபி… கிளைண்ட்ஸ்ங்கிறவங்க மாமியார் மாதிரி, அவங்க நாம எது பண்ணாலும் ஏதாவது ஒரு குறை சொல்லிட்டே தான் இருப்பாங்க, நாமளும் மருமக மாதிரி கண்டுக்காம இருந்துக்கணும்..” என்று கூறி சிரித்தான் விக்கி
அதேநேரம், “என்னடா இங்க மீட்டிங்கு..” என்றபடி வந்து சேர்ந்தான் அருண்..
“அது ஒன்னும் இல்லை மச்சி… அபி ரொம்ப டென்ஷன் ஆ இருந்தாங்க அதான் அவங்களை ஜோக் சொல்லி கூல் பண்ணிட்டுஇருந்தேன்… இல்லையா அபி?” என்று அவளையும் துணைக்கு அழைத்தான்..
"இல்லை… அருண்,இந்த விக்கி காமெடிங்கிற பேர்ல கடுப்பேத்திட்டு இருக்கார்..” என்று அபி சேம்சைடு கோல் போடவும் ,விக்கி மொக்கை வாங்கினான்.
“ஆமாங்க இப்ப நாங்க பேசுறதெல்லாம் உங்களுக்கு மொக்கையா தான் இருக்கும், அதான் உங்க சர்வரோக நிவாரணி வந்துட்டாரில்லை, இனிமேல் நான் எதுக்கு..?” என்றபடி அங்கிருந்து கிளம்பிச்சென்றான்..
“என்ன ஆச்சி அபி..?” என்றான் அருண் அக்கறையாக..
“ஏதாவது சொதப்பிட்டா?”
என்றாள் கவலைதோய்ந்த முகத்துடன்..
“அதெல்லாம் ஒன்னும்சொதப்பாது..” என்றான் அழுத்தத்துடன்…
“நிஜமா…?” என்று அபி சந்தேகமும் கவலையாக கேட்க
“நிஜமா..” என்று அவளை நேராக பார்த்து கண்களை அழுந்தமூடி திறந்து உறுதியளித்தான்.
அவன் தந்த உறுதியில் அவள் பதற்றம் சிறிது தணிந்தது…
“உனக்கு இப்பவும் பயமா இருந்தா என் கையை புடிச்சிக்கோ..” என்றான் விளையாட்டாக
ஐயோ ரொம்ப தான்.. எனக்கு பயம்லாம் இல்லை கொஞ்சம் நெர்வஸ்ஸா இருந்தது அவ்ளோதான்…” என்று அழகுகாட்டினாள்..
அபி நம்பிக்கையும் அவநம்பிக்கையுமாக காத்திருக்க, மற்ற டீம் மேட்ஸ்சும் வந்து சேர்ந்தனர்..
ஒருவழியாக மீட்டிங் முடிந்து கிளையண்ட்ஸுடன் கைகுலுக்கி விடைபெற்றுக்கொண்டு விவேக் கனத்த முகத்துடன் வெளியே வந்தான்..அவன் முகத்தை பார்த்த அபியின் படபடப்பு உச்சத்தைத் தொட்டது..
பதற்றத்தில் அபி அருணின் கையை பற்றினாள், ஆச்சர்யமாக பார்த்த அருண், அவளின் கலங்கிய முகத்தைக்கண்டு ,அவள் கையை அழுந்த பற்றி தைரியமூட்டினான்..
விவேக் இவர்களை நெருங்கி வரவும் அனைவரையும் முந்திக்கொண்டு பூர்ணா "எப்படி போச்சி விவேக் ?"என்றாள்..
"எவரித்திங் வெண்ட் வெல்.. கிளையண்ட்ஸ் ரொம்ப ஹாப்பி, சில இம்ப்ரூவைசேஷன்ஸ் சொல்லி இருக்காங்க.. மத்தபடி எல்லாம் ஓகே..” என்றான்..
அனைவரது முகமும் மழிழ்ச்சியில் மலர
"அதுக்கு ஏன் சார்.. ஏதோ துக்கத்துக்கு போன மாதிரி முகத்தை இப்படி சோகமா வச்சிருக்கீங்க? ஒரு நிமிஷம் வயித்துல புளிய கரைச்சிடீங்க..” என்றான் விக்கி..
“நோ..நோ.. நாம எதிர்பார்த்தமாதிரியே எல்லாம் நல்லவிதமா முடிஞ்சுது.. சர்மா சார் கூட ரொம்ப ஹாப்பிஆகிட்டாரு.. அவரு உங்களை எல்லாரையும் ரொம்பவே அப்ரிஷியேட் பண்ணாரு..” என்று மற்றவர்களிடம் சிரித்தாலும், பிறர் அறியாமல் நித்தியை மட்டும் கோபக்கனல் பொங்க முறைத்தான்..அவள் முகத்தில் பீதியுடன் தலைகுனிந்தாள்..
மறுநாள் அபி வழிமேல் விழிவைத்து அருணின் வரவுக்காக காத்திருந்தாள்..அவன் தனது வழக்கமான வேக நடையுடன் உள்ளேநுழைவதை பார்த்தவள்.. அவசரமாக பார்வையை விலக்கிக்கொண்டு வேலைசெய்வது போல் நடித்தாள்.
அருண் நேரே அவளது இடத்திற்கு வந்து.. “என்ன அபி, சிஸ்டம ஆன் பண்ணாம இருக்க..” என்று கேட்கவும், திடுக்கிட்டு அனிச்சையாக ஸிஸ்டமை ஆன் செய்ய கை நீள, மறுகணம் சிஸ்டம் ஏற்கனவே ஆன் இல் தான் இருப்பது உறைக்க அவள் அவனை பார்த்து முறைத்தாள், அவளது முகத்தை பார்த்து சிரித்துக்கொண்டே அவளருகில் விக்கியின் இடத்தில் அமர்ந்தான்…
“ஹே இங்க ஏன் உக்காருற? விக்கி வந்துடுவார்.. “
“அவன் என்னிக்கு டைம்க்கு வந்திருக்கான் வரட்டும் பார்த்துக்கலாம்..”
என்று அலட்சியமாக தோள் குலுக்கிவிட்டு..
“சரி, நான் வரும் போது நீ யாரையோ தேடிட்டு இருந்த மாதிரி இருந்ததே..யாரை..?” என்றான் அப்பாவி போல்..
“அப்படிலாம் ஒன்னும் இல்லையே..” என்று மறுத்தாள் அவசரமாக,
“பொய் சொல்லாத என்னை தானே தேடின..?”
“ரொம்ப ஆசைதான், அதெல்லாம் உன்னை யாரும் தேடலை..”

அப்போ நான் தான் ரொம்ப எதிர்பார்த்திட்டேனோ ?சரி இனிமேல் இங்கே இருந்து என்ன பிரயோஜனம் நான் கிளம்பறேன்…” என்று அவன் சோகம் போல கிளம்பவும், அவனை அவசரமாக தடுத்து ,
"அருண் ஒரு நிமிஷம் " என்றாள்.
அப்போ நீ என்னைதான் தேடினேன்னு ஒத்துக்கோ” என்றான் பிடிவாதமாக
“ஆமாம் உன்னை தான் தேடினேன் போதுமா?” எனவும், சட்டென்று அவன் முகம் மலர்ந்தது,
“ரொம்ப கற்பனை பண்ணாத இதை உனக்கு குடுக்க தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..” என்று ஒரு சிறு கிஃப்ட் பெட்டியை நீட்டினாள்
“எதுக்கு இப்போ கிஃப்ட்டு..?”
“நான் முதல்முறையா ஒரு
கிஃப்ட் தரேன் வாங்கிக்க மாட்டியா அருண்?” என்று அபி குறைபடவும்…
“யாரு சொன்னா நான் வாங்க மாட்டேன்னு..”என்று அதை அவள் கையிலிருந்து பிடுங்காத குறையாக வாங்கினான்..
“ஓபன் பண்ணி பாரு..”
சந்தேகமாக நோக்கி..“இதுல எதுவும் டிவிடி இல்லையே..” அவன் என்று கேட்கவும்,
பதிலுக்கு அவனை முறைத்துவிட்டு, “நான் அபி.. அருண் இல்லை கலாய்க்கறதுக்கு..” என்றாள்
லேசாக சிரித்துவிட்டு ,பெட்டியை திறந்து பார்த்தான்..
அழகான ஒரு பிட்னெஸ் பேண்டும் அதோடு சேர்த்து ஒரு தாங்க் யூ கார்டும் இருந்தது..
அவன் முகபாவனையையே கூர்ந்து நோக்கியபடி
“பிடிச்சிருக்கா..” என்று ஆர்வமாக கேட்டாள் அபி.
“ரொம்ப புடிச்சிருக்கு அபி..” என்று சொன்னதும் அவள் முகம் பூவாய் மலர்ந்தது
“சரி போட்டுக்காட்டு அருண்..” என்று அவனை ஊக்கினாள்.
“நீயே போட்டுவிடு..” என்று அவளிடமே கையை நீட்டினான் ,லேசாக முகம் சிவக்க அவன் கையில் பேண்ட்டை போட்டுவிட்டாள், அதே நேரம்
“கெட்டிமேளம்.. கெட்டி மேளம்..” என்ற சத்தத்துடன் விக்கி வருகை தந்தான்..
“டேய் என்னடா நடக்குது இங்க? காலையிலேயே ஆரம்பிச்சிடீங்களா? நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலைடா..” என்று பாவனையுடன் பேச
"டேய் அபி எனக்கு ஒரு சின்ன கிஃப்ட் குடுத்தா அதுக்கு ஏன்டா ஓவர் சீன் போடுற?என்று அலுத்துக்கொண்டான் அருண், அவர்களது தனிமையில் விக்கி குறுக்கிட்ட எரிச்சல் அவனது குரலில் நன்றாக தெரிந்தது..
“என்னாது கிஃப்ட்டா.. ? டேய் மச்சான்.. இன்னிக்கு உன்னோட பர்த்டே வா சொல்லவே இல்லை.. ?ட்ரீட் குடுடா மச்சி..”
“டேய் நீயெல்லாம் எனக்கு ஒரு பிரெண்டு? என்னோட பர்த்டே கூட என்னிக்குன்னு உனக்கு தெரியாதா?”
“இல்லைடா தெரியும்.. அபி கிஃப்ட்லாம் குடுக்கறாங்களேன்னு கொஞ்சம் கன்பியூஸ் ஆகிட்டேன்..”
என்று விக்கி அசடு வழியவும்..
அருண் பதிலுக்கு முறைக்கவும்
“முறைக்காத டா…சரி இப்போ எதுக்கு இந்த கிஃப்ட்னு சொல்லு எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்..”
“அதெல்லாம் ஃப்ரண்ட்ஸ்க்குள்ள சீக்ரெட் உனக்கெல்லாம் சொல்ல முடியாது..”
“அபி உன்னோட ஃப்ரண்ட்ன்னா.. அப்போ நான் யாரு டா..?”

என்று விக்கி புகைந்தான்..
“ஆமா.. நீ யாருடா..?” என்று அருண் அவனையே திருப்பி கேட்க அங்கே ஒரு சிரிப்பொலி கிளம்பியது..
“போடா நான் கோபமா கிளம்பறேன்..” என்று விக்கி பொய் கோபத்துடன் கிளம்பவும், அருண்அவனை அழைத்தபடி அவனை பின்தொடர்ந்தான்
"டேய் விக்கி.. இருடா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..”
----------------------------------------------------------------------------------------------------------------------------------
“டேய்.. என்னடா சொல்ற, ஏதோ சினிமா ஸ்டோரி மாதிரி இருக்கு, என்னால நம்பவே முடியலை, எப்படிடா இப்படிலாம் நடக்கும்..?” என்று அதிசயத்துக்கொண்டிருந்தான் விக்கி..
அருண் அவனிடம் எல்லா உண்மையையும் சொல்லி இருந்தான்..
“ஆமாண்டா கண்டிப்பா யாரோ வேணும்னு தான் பிளான் பண்ணி பண்ணிஇருக்காங்க, யாருன்னு கண்டுபுடிக்கணும், நான் மட்டும் சரியான நேரத்துல அந்த ப்ராப்ளம சரி பண்ணாம இருந்திருந்தா கண்டிப்பா அபியோட வேலை போய் இருக்கும் ,என்னோட பேரும் டேமேஜ் ஆகி இருக்கும்..”
“யாருடா பண்ணி இருப்பா? ரைவல் கம்பெனிகாரங்க பண்ணி இருப்பாங்களோ..?”
“இல்லைடா என்னையும் அபியையும் பிடிக்காத யாரோ தான் பண்ணி இருப்பாங்கன்னு தோணுது..”
“சரிடா இப்போ என்ன பண்றது?”
என்றான் விக்கி
“சிசிடிவி பூட்டேஜ் பார்த்தா ஏதாவது க்ளூ கிடைக்கும்னு நினைக்கறேன் ,ஆனா அதுக்கு நமக்கு பர்மிஷன் கிடைக்குமா தெரியலை..”
என்றான் அருண் யோசனையாக,
“டேய், வேணா நம்ம விவேக் கிட்ட சொல்லி ஹெல்ப் கேக்கலாமா?” என்றான் விக்கி.
“யாருடா இவன்.. எனக்கு டவுட்டே அவன் மேல தான்டா ,அன்னபிஷியலா ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கணும்..”
“ஓஹ் அப்படியா ,நீ கவலை படாதாடா அஃபிஷியல்ன்னா தான் கஷ்டம்.. அன்னஃபிஷியல்ன்னா நம்ம கைவசம் செக்யூரிட்டி சர்வீஸ்ல மணிகண்டன்னு ஒரு பையன் இருக்கான் ..”
“டேய்.. அவன் இதுக்கு ஒதுக்குவானா டா ?”
என்றான் அருண்சந்தேகமாக..
“எல்லாம் ஒத்துப்பான், அவனே டிவிசீரியல் ,மாதிரி எல்லாரும் ஸ்லொவ்மோஷன்ல நடக்கறதை பார்த்து நொந்து போய் இருப்பான் ,இந்த மாதிரி டிடெக்ட்டிவ் வேலைனா ஆர்வமா செய்வான்..”
“சரிடா ஆனால் அவன் கிட்ட உண்மையை சொல்லவேண்டாம் வேற ஏதாவது கதை தான் சொல்லணும்..”
என்றான் அருண்.
விக்கி கூறிய மணிகண்டனிடம், அருண் தன் செல்போன் தொலைந்து விட்டது என்றும் ,அதை எங்கோ கைமறதியாக வைத்துவிட்டேன் ,இப்போது எங்கே என்று தெரியவில்லை, கூட வேலை பார்ப்பவர்களையும் சந்தேகப்படமுடியாது அதனால் உதவுமாறு ஒரு கதையை கூறவும் அவனும் உதவி செய்ய முன் வந்தான் , விக்கியும் அருணும் சிசிடிவி வீடியோவை பார்த்தபோது, அபி இல்லாத நேரம் நித்தி அவளது சிஸ்டெமில் ஏதோ செய்வது தெளிவாக தெரிந்தது..
“ என்னடா இது..?” என்று விக்கிஅதிர்ச்சியை காட்டவும்
“டேய் வாயை மூடு..” என்று அடிக்குரலில் அவனை எச்சரித்துவிட்டு ,அந்த செக்யூரிட்டி ஆளிடம் நன்றி கூறிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்..
வெளியே வந்ததும் அதற்குமேல் பொறுக்க முடியாமல் விக்கிபொங்கிவிட்டான்
டேய்.. நம்ம நித்தியா இப்படி..?என்னால நம்பவே முடியலை அவளுக்கு என்ன ஒரு தைரியம்..?”
“ஷ்..ஷ் விக்கி, நித்தி வெறும் அம்பு தான் அவளை ஆபரேட் பண்றது வேற யாரோ..”
என்றான் யோசனையாக..
“யாரோ என்ன யாரோ..?அது யாருன்னு உனக்கு தெரியாதா? “என்றான் கோபமாக
“நீ கொஞ்சம் பொறுமையா இருடா , இப்ப போய் நாம இதை சொன்னாலும் நித்தி தான் தப்பு பன்னான்னு அவளை வேலைய விட்டு தூக்குவாங்க ,இல்லாட்டி நாம சொல்றதையே யாரும் நம்ப மாட்டாங்க, ஏன்னா சிஸ்டம் க்ராஷ் ஆனது யாருக்குமே தெரியாது ,இதுல நெறைய ப்ராபளம் இருக்கு..”
“என்னடா அப்போ தப்பு பண்ணவங்கள அப்படியே சும்மா விடுறதா?”

“கண்டிப்பா மாட்டுவாங்க நான் பார்த்துக்கறேன், அதுவரைக்கும் நீ உன்னோட ஓட்டை வாயை வச்சிக்கிட்டு யாருகிட்டயும் உளறாம இரு அது போதும்..”
என்று விக்கியை அமைதி படுத்தினான்..
அருண் நித்தியை காஃபிடீரியாவில் சந்தித்தான்..
“என்ன சொல்ற அருண்.. எனக்கு நீ என்ன சொல்றேண்ணே புரியலை..” என்று அப்பாவியாக நடித்தாள்..
அவன் அசையாமல் இருப்பதை பார்த்து.. “ஆமா நான் அபி கம்ப்யூட்டரை யூஸ் பண்ணினேன்... ஆனா நான் ஃபைல்ஸ் காப்பி பண்ணினேன் அவ்ளோதான்.. அந்த அபி ஏதோ தப்பு பண்ணிட்டு இப்போ என்னை மாட்டிவிட பாக்குறா..” என்று அபியை குற்றம் சாற்றினாள்.
“அபி எதுவுமே சொல்லலை, என்கிட்ட நீ தான் பண்ணினேங்கறதுக்கு ஆதாரம் இருக்கு..” என்றான் அழுத்தத்துடன் ,அந்த குரலே அச்சுறுத்த.. சிறிது திடுக்குற்றாள் நித்தி.. பயத்தில் அவளது நெற்றியில் வியர்வை துளிர்த்தது..
“கவலைபடாத , நான் யார்கிட்டையும் சொல்லமாட்டேன்..நீ எப்படியோ தெரியாது ஆனா நான் இன்னும் உன்னை ஒருநல்ல ஃப்ரண்ட்டா தான் நினைக்குறேன்..
எனக்கு தெரிஞ்ச நித்யா இப்படி பட்டவ கிடையாதே ,சின்ன சின்ன குறும்பு பண்ணுவா ,கொஞ்சம் பொசெசிவ்ஆ இருப்பா ,ஆனால் ஒரு நாளும் தப்பு வழில போகமாட்டா ,நம்பிக்கை துரோகம் பண்ண மாட்டா ..இப்படி பழிவாங்குற அளவுக்கு உனக்கு என் மேல என்ன கோபம் ?”
“எனக்கு உன்மேல கோபம் இல்லை அருண்…”
“அப்போ?”
“அந்த அபி அவதான் நமக்கு நடுவுல வந்துட்டா..”
என்று வெறுப்புடன் கூறவும் அருண்திகைத்துப்போனான்..
“என்ன பார்க்குற..? நான் ஒருத்தி உன்மேல பைத்தியமா இருக்கேன், நீ நேத்து வந்த அந்த அபி பின்னாடி போனா எனக்கு எப்படி இருக்கும்? என்னை ஃப்ரண்ட்டுன்னு சொல்றியே எப்பவாது என்னோட ஃபீலிங்ஸ புரிஞ்சிட்டு இருக்கியா ?உன்னை பொறுத்தவரைக்கும் நான் ஒரு காமெடி பீஸ் அப்படி தானே?” என்று கண்களில் நீர்திரையுடன் உணர்ச்சிபூர்வமாக பேசவும் அருண்தான் வாயடைத்துப்போனான் ,
எப்போதும் நித்தி தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக காட்டிய போதும் அதை அவன் பெரிய விஷயமாக கருதியதில்லை,மேலும் அவள் விளையாட்டுத்தனமாக தான் இதெல்லாம் செய்கிறாள் என்று எண்ணி இருந்தான் ஆனால் அவள் இவ்வளவு சீரியஸ் ஆகா இருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை..
“ஏன் இப்போ பேசமாட்டேங்குற? உனக்கு வேணா என்னோட ஃபீலிங்ஸ் காமெடிஆ இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை என்னோட லவ் உண்மையானது, ஏன் நான்லாம் லவ் பண்ணகூடாதா? அதுக்கு எனக்கு தகுதி இல்லையா?” என்று கண்ணீருடன் கேட்டாள்.
முதல் முறையாக அருண், தான் தவறு செய்து விட்டோமோ என்று வருந்தினான்.. நித்யாவிடம் கண்டிப்பாக முதலிலேயே சொல்லி இருக்கவேண்டும் தனக்கு அவள் மேல் எந்த வகையான நாட்டமும் இல்லை என்று ,ஆனால் ஒரு நல்ல பெண்ணை மனம் வருந்த செய்யவேண்டாம், அவளாகவே அவனது ஒதுக்கத்தை உணர்ந்து விலகிவிடுவாள் என்று எண்ணியது தவறு என்று இப்போது உரைத்தது.
“உனக்கு லவ் பண்றதுக்கு எல்லா தகுதியும் இருக்கு நித்தி, ஆனா அதுக்கு தகுந்த ஆள் நான் இல்லை ,இவ்ளோ நாள் என் கூட பழகி இருக்க ,என்னிக்காவது நான் உன்கிட்ட அந்த மாதிரி ஆர்வம் பிடித்தம்னு காட்டி இருக்கேனா? நீயே சொல்லு.. ஒரு ஃப்ரண்ட்டுங்கறதுக்கு மேல உன்னை நான் நெனைச்சதே இல்லை, இதை புரிஞ்சிக்க உனக்கு ஒரு நிமிஷம் போதும், ஆனால் உன்னோட மனசு அதை ஏத்துக்க தயாரா இல்லை, அதான் நான் அபி வந்ததால உன்னை வெறுக்கறேன்னு நீயே கற்பனை பண்ணிக்கற ,அபி இல்லைனாலும் என்னால எப்பவுமே உன்னை லவ் பண்ண முடியாது நித்தி…
நான் பண்ண ஒரே தப்பு ,உன்னோட மூஞ்சில அடிச்ச மாதிரி முடியாதுன்னு சொல்லாம இருந்தது தான் ,அதுவும் நீ என்னோட ஃப்ரண்ட்,உன்னை காயப்படுத்த கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல தான்.. ஆனால் உன்னோட இந்த எந்த காரணமும் நீ பண்ண துரோகத்தை நியாயபடுத்தாது..”
என்று கடுமையாக கூறி முடித்தான்.
அவள் பேசாமல் அதிர்ந்துபோய் இருக்கக்கண்டு அவனே தொடர்ந்து
“சரி உனக்கு என்மேல, அபிமேல கோபம்.. அதுக்காக கம்பெனி ப்ரொஜெக்ட கொலாப்ஸ் பண்ணுவியா? அது நம்ம டீமோட ஒரு மாச உழைப்பு ,நம்ம கம்பெனியோட எதிர்காலம், நீயும் கூட அதுல கஷ்ட்டப்பட்டு வேலை செஞ்சிருக்க அதுகூட உரைக்கலையா..? அப்படி என்ன பழிவாங்குற வெறி உனக்கு..?” என்று கோபமும் ,வெறுப்புமாக பேசினான்..
நித்யா இயல்பில் மோசமான பெண் இல்லை ,சகவாசதோஷமும் ,அருணின் மேல் இருந்த கண்மூடித்தனமான காதலும் தான் அவளின் அறிவை மறைத்திருந்தது, இப்போது அருண் அவளை ஒரேடியாக வெறுத்து ஒதுக்குவது போல் பேசவும் அவள் அவமானத்தில் கூனிகுறுகிப்போனாள். அதுவரை அபியை விலக்கிவிட்டால் அருணை அடைவதற்கு தடையில்லை என்று நினைத்து அதற்காக ஏதோ செய்யப்போக.. இன்று அபி இல்லாவிட்டால் கூட அருண் ஒருபோதும் அவளை விரும்பப்போவதில்லை என்பதை அறிந்ததும் அதுவரை தான் சரி என்று நினைத்திருந்த நியாயங்கள் அனைத்தும் அபத்தமாக தோன்ற ,அவனை நிமிர்ந்தும் பார்க்க முடியாமல் தவித்தாள்..
“லவ்வரா இல்லைனா கூட, ஒரு ஃப்ரண்ட்டா ஒரு நல்ல இடத்துல தான் உன்னை நினைச்சிருந்தேன், இப்போஅந்த ஸ்தானத்தை கூட நீ இழந்துட்ட..”என்று கைப்புடன் கூறவும்
அதற்குமேல் பொறுக்க முடியாமல் உடைந்துவிட்டா நித்யா
“அப்படிலாம் சொல்லாத அருண் ..எனக்கு உன்னோட ஃப்ரண்ட்ஷிப் எப்போதும் வேணும், ஏதோ பழிவாங்குறேன்னு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் ஐ அம் ரியலி சாரி…”
“உனக்கு என்ன தான் கோபமா இருந்தாலும்.. நீ இவ்வளவு கீழ்த்தனமான வேலையை பண்ணி இருக்க மாட்ட.. உனக்கு அவ்ளோமோசமான புத்தி இல்லை எனக்கு தெரியும்.. உனக்கு பின்னாடி யாரோ இருக்காங்க அது யாரு..?” என்றான் கொக்கி பார்வையுடன்.
“அதெல்லாம் யாருமில்லை நானே தான்..” என்று அவசரமாக மறுத்தாள் நித்யா.
“பொய் சொல்லாத.. எனக்கு தெரியும் நான் சொல்லட்டுமா.. ?”என்று அவளை ஒரு முறை ஆழப்பார்த்துவிட்டு
“விவேக்..” என்று கூறினான்..
அவன் பெயரை கேட்டதும் ,பேயை கண்டவள் போல அரண்டு விழித்தாள் நித்யா
“அருண் ப்ளீஸ் ,இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா அந்த விவேக் என்னை கொன்னே போட்டுடுவான், வேலை போனா வரும்.. ஆனால் உயிர் போனா வருமா?” என்றாள் கிலியுடன்,
பயப்படாத, நான் யார் கிட்டையும் சொல்லமாட்டேன், அந்த விவேக்தான் தெளிவா உன்னை முன்னாடி நிறுத்தி காய் நகர்த்தி இருக்கானே.. மாட்டினா நீ தான் சிக்குவ.. நீ எவ்ளோ தான் எனக்கு கேட்டது செஞ்சாலும் ,என்னால உனக்கு கெடுதல் நினைக்க முடியலை, எப்படி இருந்தாலும் ஒரு காலத்துல என்னோட ஃப்ரண்ட் இல்லையா..?”
“அப்படி இறந்தகாலத்துல சொல்லாத அருண்.. நான் தான் எதுவும் சரியா புரிஞ்சிக்காம தப்பு பண்ணிட்டேன் ,இப்போ உன்னோட மனசுல எனக்கு இடம் இல்லைனு நல்லா புரியுது , அட்லீஸ்ட் ஒரு நல்ல ஃப்ரண்ட்டாவாது எனக்கு உன்னோட மனசுல ஒரு இடம் வேணும் அருண் என்னை வெறுத்துடாத ப்ளஸ்..”
என்று கெஞ்சினாள் நித்தி.
“உன்னை வெறுக்கறதா இருந்தா உன்கிட்ட உக்காந்து இப்படி பேசிட்டு இருக்கமாட்டேன் நித்தி..நீ எப்பவுமே எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட்தான்..” எனவும்.. நித்தி கண் கலங்கிவிட்டாள்
“நான் இவ்ளோ துரோகம் பண்ணதுக்கப்புறமும் உன்னால மட்டும் தான் இப்படி மன்னிக்கமுடியும்,என்னை நெனைச்சா எனக்கு அவமானமா இருக்கு..”
“ஷ்ஷ்.. நித்தி அழாத யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..
” என்று அவள் கையை பற்றி ஆறுதலாக அழுத்தினான்.
கண்களில் நீர்த்திரையினிடையே அவனை பார்த்து லேசாக சிரித்து,
"ஐ லவ் யூ அருண்..” என்றாள்.
“ஐ லவ் யூ டூ..” என்றான் அருண் ,ஒரு சிறு அமைதியின் பின் ,அவள் ஆசுவாசமடைந்தபின்,
“ஆனா நீ நெனைக்கற சென்ஸ்ல இல்லைன்னு உனக்கே தெரியும், ஐ லவ் யூ அஸ் அ ஃப்ரண்ட்.”
சம்மதமாக தலையாட்டினாள் நித்தி
“ புரியுது அருண் இனிமேல் என்னால உனக்கு எந்த தொந்தரவும் வராது போதுமா?ஆனா அந்த விவேக் ரொம்ப மோசமானவன் ,அவன் கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இரு..” என்று அவனை எச்சரிக்கவும் தவறவில்லை நித்யா..
“ம்ம் அதை நான் பார்த்துக்கறேன்..” என்றான் அருண்..
“அப்புறம் ஒரு விஷயம்.. நீ அபியை லவ் பண்றியா ?”
“தெரியலை.. பட் ஷி ஐஸ் மோர் தான் அ ஃப்ரண்ட் டு மீ.. "
என்றன் அருண்..
அபியின் நினைவிலேயே முகம் மலர்ந்து சிரித்தான், அடுத்து வீசப்போகும் சூறாவளியை அறியாமல்…
தொடரும்
 
Top