Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 17

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 17

கிட்டத்தட்ட ஒருமணிநேரமாக அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறான், ஆனால் ஏதோ அவன் பார்ப்பதே தெரியாதவள் போல சற்றும் சட்டைசெய்யாமல் ஒரு கணம் கூட நிமிர்ந்து பாராமல் அருணை கவனமாக தவிர்த்தாள் அபி..

நாளுக்கு நாள் அவனிடம் அவளது விட்டேற்றியான போக்கும் அவள் காட்டும் கடுமையும், அவனை எரிச்சலடைய செய்துகொண்டிருந்தது.
“என்னதான் அவளது பிரச்சனை? என்னிடம் பேச விருப்பம் இல்லையா..சரி அது அவளது இஷ்டம்..பேசாமல் இருக்கட்டும், ஆனால் அதற்கான காரணத்தை அறிய முழு உரிமையும் எனக்கு இருக்கிறது, என்னை இப்படி துச்சமாக எண்ணி கடந்து போக முடியாது, போதும் அவளது போக்கில் விட்டது தப்பாக போய்விட்டது, இனிமேலும் பொறுக்க முடியாது, இதை இன்றே பேசி தீர்த்துவிடவேண்டும் என்று முடிவெடுத்தான்.
அருண் அபியை இன்டர்காமில் அழைத்து
"அபி என் கேபினுக்கு வா "என்றான்.
"எதுக்கு..? " என்றாள் அவள் வெடுக்கென்று
ஆத்திரத்தில் வேகமாக மூச்சை உள்ளிழுத்தவன் ,
"பாரு.. நான் உன்னோட டீம் லீடர் பார்க்க வர சொன்னா வரணும், ஏன்னு கேள்வி கேக்குற..? யூ மஸ்ட் பீ இன் மை கேபின் ரைட் நொவ் காட் இட்?” என்று கடுமையாக கூறிவிட்டு ,போனை அறைந்து சாத்தினான்..
அபியும் கொதித்து கொண்டுதான் இருந்தாள்.. “தப்பு பண்ணிட்டு இவனுக்கு கோபம் வேற வருதா..?”
அபி அருணின் கேபினுக்கு சென்ற போது, அருண் தனது லாப்டாப் திரையிலிருந்து பார்வையை விலக்காமல்
அவளை நிமிர்ந்தும் பாராமல் தன் டேபிளின் எதிரில் இருந்த இருக்கையில் அமர சொன்னான் வேலையிலேயே கவனமாக..
"உக்காரு அபி.. "
“நோ தாங்ஸ்..”
என்றாள் அலட்சியமாக..
அவளை நேராக பார்த்து “சிட்..” என்றான் அதட்டலாக..
அந்த குரலில் சிறிது துணுக்குற்று சட்டென்று அமர்ந்தாள்..
அவளது அதிர்ந்து போன முகத்தை பார்த்து, தன் குரலை சற்று சாந்தப்படுத்தி அமைதியாக பேசினான்..
"அபி என்ன ஆச்சு உனக்கு..?என்னை எதுக்கு அவாய்ட் பண்ற?என்னன்னு சொன்னா தானே எனக்கு தெரியும்?
“இதை பேச தான் வர சொன்னீங்களா?”
என்றாள் விறைப்பாக..
“அபி ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட், நான் பண்ண ஏதோ ஒன்னு உனக்கு பிடிக்காம போய் இருக்கு, அது என்னன்னு சொன்னா நான் மாத்திக்குவேன்ல அதை விட்டுட்டு என்ன இது கண்ணாமூச்சி விளையாட்டு..?என்ன ப்ராபளம்னு சொல்லு எதுவா இருந்தாலும் சரி பண்ணிடலாம்..” என்றான் தணிவான குரலில்..
“நீ தான் ப்ராபளம்னு சொன்னா கண்காணாம போய்டுவானா..?”என்று ஏளனமாக நினைத்துவிட்டு,
“நீங்க என்னோட TL ஆ இருக்கலாம், அதுக்காக வேலை நேரத்துல கூப்பிட்டு இப்படி வெட்டி கதை பேசுறதையெல்லாம் கேக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை, வர்க் ரிலேட்டட்ஆ ஏதாவது இருந்தா மட்டும் என்னை கூப்பிடுங்க, மத்தபடி நாம பேசறதுக்கு எதுவும் இல்லை..” என்றாள் கறாராக..
அருண் கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான்.. அவனுக்கும் கோபம் உச்சத்தை தொட்டது..
"என்ன திமிர்..,நான் இவ்ளோ தூரம் இறங்கி வந்து கெஞ்சாத குறையா பேசுறேன், என்கிட்டையே ஆட்டிடியூட் காட்டுறியா? ஆட்டிடியூட்னா என்னனு உனக்கு நான் காட்டுறேன், ப்ரொபெஷனலா நடந்துக்கணுமா ,ஐ வில் டீச் யூ வாட் இஸ் ப்ரொபசஷனலிஸம்..” என்று மனதிற்குள் கறுவிக்கொண்டு,
"ஓகே ஃபைன் நான் நேத்து முடிக்க சொன்ன ரிப்போர்ட்ட முடிச்சி அனுப்பிட்டியா..?”என்றான் அவளை நேராக ஊடுருவி பார்த்து..
அபி எதுவும் புரியாமல் அவனையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவளுக்கு சட்டென்று நினைவு வரவில்லை அவன் எந்த ரிப்போர்ட் பற்றி கேட்கிறான் என்று,
“என்ன ரிப்போர்ட்?”என்று வாய் தானாக உளறியது..
“வாட்? நான் அனுப்பின மெயில்ல நீ இன்னும் ஓபன் பண்ணியே பார்க்கலையா..? இது தான் உன்னோட ப்ரொபெஷனலிஸமா ஹைலி ரிடிக்குலஸ்.. இன்னும்ஒரு மணி நேரத்துல ரிப்போர்ட் ரெடி பண்ணி அனுப்பு, புரியுதா…? யூ மே கோ நொவ்..” என்று அதிகாரதொணியில் கடுமையாக கூறிவிட்டு தனது வேலையை தொடர்ந்தான்..
அவனையே விழி விரிய பார்த்துக்கொண்டிருந்த அபிக்கு அருணின் இதுவரை தான் காணாத முகத்தை கண்டு திகைத்து போய் இருந்தாள்...
அதே சமயம் அவளது கோபமும் பன்மடங்கு அதிகரித்தது...
"தப்பு பண்ணின இவனுக்கே இவ்ளோ கோபம் வருதுன்னா, பாதிக்கப்பட்ட எனக்கு எவ்ளோ கோபம் வரணும்?” என்று அவனை முறைத்து பார்த்தாள்.
“என்னை முறைச்சு பார்க்கறதுல நீ ஆல்ரெடி ஒரு நிமிஷத்தை வேஸ்ட் பண்ணிட்ட..” என்றான் அவளை ஏறெடுத்தும் பாராமல்..
மின்னலாய் அங்கிருந்து வெளியேறினாள் அபி..
கேன்டீனில் அபி தன்னந்தனியாக அமர்ந்திருந்தாள், முகம் ஜீவனிழந்து வாடிப்போயிருந்தது, இப்போதெல்லாம் எல்லாவற்றிலுமே நாட்டமிழந்திருந்தாள் எது செய்யவும் பிடிக்கவில்லை, காலையில் எழுந்தால் ஏன் விடிகிறது என்றிந்தது, சாப்பிடபிடிக்கவில்லை ,வேலை செய்ய கூட ஆர்வமில்லை, எப்போதும் எதையோ பறிகொடுத்தவள் போல் சோகமாக இருந்தாள் ,பூர்ணாவிடம் பேசுவதைக்கூட தவிர்த்துவிட்டு எப்போதும் தனித்திருப்பதையே விரும்பினாள்..., என்ன தான் அருண்மீது கோபம் கொண்டாலும் அவனிடம் பேசாமல்இருப்பது அவனை தவிர்ப்பது எல்லாமே அவளுக்கும் வலித்தது ஏதோ அவளுக்கே அவள் கொடுத்துக்கொள்ளும் தண்டனையைப்போல் தோன்றியது...,இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு தொடருமோ என்று நினைக்கும் போதே மனம் மேலும் சோர்வடைந்து..
இப்படி தன்னிலேயே உளன்று கொண்டு அவள் அமர்ந்திருந்தபோது,
“எக்ஸ் கியூஸ் மீ” என்ற உற்சாகக்குரலில் திரும்பினாள்..
முகம் முழுவதும் பல்லாக ஒருவன் நின்று கொண்டிருந்தான், அவனும் கம்பெனி ID கார்டை அணிந்திருந்தான்..
“யாருடா இவன்..? கொஞ்ச நேரம் தனியா ஃபீல் பண்ண கூட முடியாம தொல்லை..” என்று அபி அவனை கேள்வியாக பார்க்கவும்,அவன் மேலும் புன்னகை விரிய “இங்க உட்காரலாமா..” என்று அவள் எதிரில் இருந்த இருக்கையை காட்டி கேட்டான்..
அவள் எப்படி அவனை தவிர்ப்பது என்று ஒரு கணம் யோசித்து கொண்டிருக்கும் போதே,அவளது மௌனத்தையே சம்மதமாக கருதி அந்த புதியவன் அவள் எதிரே அமர்ந்தான்..
“ஹாய் ஐ அம் ஆகாஷ், டெஸ்டிங் டீம் ல இருக்கேன்.. நீங்க அபி தானே?நான் உங்களை பார்த்திருக்கேன், பட் சந்திச்சதில்லை..சோ இதுதான் நம்ம ஃபர்ஸ்ட் மீட்டிங்..”என்று சகஜமாக பேச தொடங்கவும்,
"இது என்னடா தலைவலி..” என்று அபி எப்படி இந்த தொல்லையிலிருந்து தப்பிப்பது என்ற யோசனையில் அங்கும் இங்கும் பார்வையை சுழற்ற, அப்போது தான் கேண்டீனின் உள்ளே வந்து கொண்டிருந்த அருண்மற்றும் விக்கிஇருவரையும் கண்டாள்…உடனேயே ஒரு வினோதமான எண்ணம் மனதில் தோன்ற அதுவரை அசிரத்தையாக அந்த ஆகாஷ் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அபி, மிகுந்த ஆர்வத்துடன் கேட்பவள் போல முகத்தை வைத்துக்கொண்டாள், அந்த ஆகாஷ்க்கு பேசுவதற்கு தூண்டுகோல் தேவை இல்லைபோல, எதிரில் இருப்பவர் கேட்கிறாரோ இல்லையோ தன் பாட்டில் பேசிக்கொண்டே போவான் போல, ஏதேதோ வளவளத்துக்கொண்டிருந்தான் , அவன் சொன்ன மொக்கை ஜோக்கு கூட அபி வேண்டுமென்றே சத்தமாக சிரித்துவிட்டு ஓரக்கண்ணால் அருணை கவனித்தாள்.
அபியின் சிரிப்பு சத்தம் அருணின் காதுகளில் தேனருவியாய் பாய அவனது வேக நடை தளர்ந்து நின்றது தானாக அத்திசையில் பார்வை சென்றது.. ஆனால் அபி வேறு ஒருவனுடன் அமர்ந்து சிரித்து பேசுவதை கண்டதும் காட்டாற்று வெள்ளம் போல் ஆத்திரம் பொங்கியது அவனுக்கு.. கை முஷ்டியாக இறுக அவளையே வெறித்து நோக்கினான், அபியும் அருணின் ஊடுருவும் பார்வையை உணர்ந்தாள். ஒரு கணம் உள்ளத்தில் ஒரு சிறு குளிர் பரவியது உடனேயே அந்த உணர்வை ஒதுக்கி தள்ளிவிட்டு தனது நாடகத்தை தொடர்ந்தாள்.. நிலைமை எப்படி போகுமோ என்று பயந்த விக்கி அருணின் தோளைத்தொட்டு அவனை நிதானத்துக்கு கொண்டுவந்தான்… அருண் அமர்தலான நடையுடன் அபிக்கு நேர் எதிரே அவள் கண்களுக்கு நன்றாக படும் இடத்தில் அமர்ந்தான்..
அபி எதிர்பார்த்த்து போலவே அருணுக்கு ஆத்திரம் ஜிவ்வென்று ஏறியது..மேலும் அபி தனது வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வதே அவனை வெறுப்பேற்றத்தான் என்பதும் புரிந்தது அந்த வெற்றிக்களிப்பை அவளுக்கு தந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவன் உள்ளே புகைந்த போதும் வெளியே நிச்சலனமாக இருந்தான்..
அபி வேண்டுமென்றே அந்த ஆகாஷிடம் சிரித்து பேசி அவனை மிகவும் சோதித்தாள்.. கடைசியாக ஆகாஷ் “அபி..வீ ஷுட் மீட் சம்டைம் அவுட்சைட் ஆஃபீஸ்..” எனவும் “கண்டிப்பாக..” விடைபெறும் விதமாக இருவரும் கைகுலுக்கினார்.. அபி எதேர்சையாக அருணை பார்க்க,அவனது பார்வையின் தீவிரத்தை தாங்க முடியாமல் ஏதோ தவறிழைத்த உணர்வு தோன்ற அவள் சட்டென்று கண்களை விலக்கிக்கொண்டாள்.
அவர்கள் சென்றதும் அருண்ஆத்திரத்தில் டேபிளை வேகமாக தட்டவும்..
“டேய் கான்டீன் டேபிள் ஐ உடைச்சிடாதடா..” என்றான் விக்கி..
“டேய்..யாருடா அவன்..?”
“யாரு யாரு..?”
என்றான் விக்கி அப்பாவி போல
"ஓங்கி ஒன்னு விட்டா வாய் வெத்தலை பாக்கு போட்டுடும்.. நான் யாரை கேக்குறேன்னு தெரியாதா அபிகிட்ட சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருந்தானே அவன் தான்…”
“டேய்..இந்த கோபத்தையெல்லாம் அங்க காட்ட மாட்டியே,உனக்கு மாட்டினா இளிச்சவாயன் நான் தானே..”
என்றான் விக்கி
பதிலாக அருண் அவனை சுட்டெரிப்பதுபோல் பார்க்கவும்
"சரி மொறைக்காத சொல்றேன்.. அவன் பேருஆகாஷ், டெஸ்டிங்ல இருக்கான்.. சரியான ஃபிலர்ட்னு கேள்வி பட்டிருக்கேன்..”
“அதான் பார்த்தாலே தெரியுதே அவன் ஏன்டா அபிகிட்ட பேசுறான்..?”

என்றான் எரிச்சலாக..
“டேய்.. உன் ஆளும் கூடதான் அவன்கிட்ட வாய் வலிக்க சிரிச்சாங்க..தைரியம் இருந்தா அங்க போய் கேக்க வேண்டியது தானே? என்றான் நக்கலாக..
"டேய் அவ என்னை வெறுப்பேத்தறதுக்காக பண்ணறா டா..”
“தெரியுதுல்ல நீ வெறுப்பாகாத கூல்ஆ இருந்து அவங்கள வெறுப்பேத்து..”
என்றான் விக்கி.
அருண் மனதிற்குள் ஏதோ ஒரு முடிவெடுத்தவன் போல ஆமோதிப்பாக தலையசைத்தான்..
விக்கியும் பூர்ணாவும் பேசிக்கொண்டிருந்தனர்..
“ச்ச.. இந்த காதல் படுத்துறபாடு இருக்கே…”என்று பூர்ணா தொடங்கவும்
“பூர்ணா..” என்று ஆர்வமானான் விக்கி..
“ச்சீ.. நான் அருண்..அபியை பத்தி சொன்னேன்..” எனவும் அவனது முகம் காற்றுப்போன பலூனாக சுருங்கியது.
“அவங்கள தான் சொன்னியா..?”
“ஆமா பின்ன வேற யாரை சொல்லுவாங்க..?”
“நீ நம்மள பத்தி சொல்றியேன்னு..”
என்று விக்கி இழுக்கவும்
“ரொம்ப பறக்காத விக்கி அடங்கு..”
என்று அவனை அடக்கிவிட்டு ,"இங்க பாரு அருணுக்கும் அபிக்கும் நடுவுல ஏதோ பிரச்சனை ஓடுது, அது என்னனு கண்டுபுடிச்சி சரி பண்ணி அவங்களை நாம சேர்த்து வைக்கணும்.. "
“எதுக்கு பூர்ணா நமக்கு இந்த வீண் வேலை, சும்மா விட்டா கொஞ்ச நாள்ல அவங்களே சேர்ந்துடுவாங்க
..”
“அப்படிலாம் விட முடியாது விக்கி… அவங்க நம்ம பிரெண்ட்ஸ், ரெண்டு பேரும் பேசாம இப்படி மூஞ்சிய தூக்கிவச்சிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கு…?”
“என்ன பண்ணலாம்..? ஏன் இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்கீங்க வெயிட் ஆ இருக்கும் கொஞ்சம் இறக்கி வச்சிடுங்கன்னு சொல்லலாமா?”
என்று சொல்லிவிட்டு தன்வழக்கம் போல சிரிக்கவும்.. பூர்ணா அவனை உறுத்துவிழித்தாள்
உடனே விக்கி "சாரி சாரி.. சும்மா விளையாட்டுக்கு..” என்று சமாளித்தான்..
"அது மட்டும் இல்லை அவங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு வேற ஒரு ரீசன்னும் இருக்கு விக்கி..”
“என்ன ரீசன்..?”
“தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்களே கேள்வி பட்டிருக்கியா..?”

எனக்கு ஜோதிகா நடிச்ச ‘மொழி’ தான் தெரியும்.. நான் இந்த பழமொழிலளாம் ரொம்ப வீக்கு நீயே சொல்லிடு பூர்ணா..”
"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்னு..”
“அப்படினா என்ன பூர்ணா…”
விக்கி புரியாமல் கேட்கவும்,
“போடா.. டியூப் லைட்டு..”
உடனே அவளது மறை பொருள் புரிந்தவனாக விக்கி விழிவிரித்து "பூர்ணா "என்று அதிசயித்தான்..
“உடனே ஓவரா பறக்காத…மொதல்ல அவங்கள சேர்த்துவைக்க ஏதாவது பிளான் பண்ணு..”
“ஐடியா.. இந்த வீகெண்ட் ஸ்பெக்ட்ரம் ப்ராஜெக்ட் கம்ப்ளீட் பண்ணதுக்கு பார்ட்டி இருக்குன்னு விவேக் சொல்லி இருக்கான்..நம்ம பிளான்க்கு அந்த பார்ட்டிய யூஸ் பண்ணிக்கிட்டா என்ன..?”
"நல்ல ஐடியா விக்கி, அவங்க தான் ஏற்கனவே ஒரு பார்ட்டில ரொமான்டிக் டான்ஸ் ஆடி அசத்தினங்களே, இப்பவும் சேர்ந்து ஆட வச்சிட்டா போதும்,ரெண்டு பேருக்கும் பத்திக்கும்,சோ நாம அந்த பார்ட்டில அவங்க ஒண்ணா இருக்கற மாதிரி சிட்டுவேஷன் உருவாக்கினா போதும், அப்புறம் அவங்களா பேசி சரிபண்ணிக்குவாங்கன்னு நினைக்கறேன்
.. “
என்று பூர்ணா தன் பாட்டில் திட்டமிட்டுக்கொண்டே போக..விக்கி மனதிற்குள்
"டேய்விக்கி..நீ இப்ப என்ன வேலை பார்த்துட்டு இருக்க தெரியுதா..?” என்று நினைத்துக்கொண்டான்..
"என்ன விக்கி யோசிக்கற..?” என்று பூர்ணா வினவவும்,
"சூப்பர் பிளான்..சான்ஸே இல்லை..” என்று புகழ்ந்தான்..
சரி ரொம்ப வழியாத போய் வேலைய பாரு..” என்றாள் உடனே டீஎல் ரூபம் கொண்டு..
"பூர்ணா…” என்று கையை நீட்டினான் விக்கி..
“என்ன..?” என்றாள் குழப்பத்துடன்..
“நாம இப்போ ஒரு சதி திட்டம் போட்டோம்ல அதுக்கு இப்போ நாம ஹாண்ட் ஷேக் பண்ணிக்கணும், அப்போதான் இந்த சீன் முடியும் நீ பழைய மூவிஸ்லாம் பார்த்தது இல்லை?” என்றான் விக்கி விளையாட்டாக,
அவனது பாவனையில் சிரிப்புவந்த போதும் பூர்ணாவும் அவன் கையின் மீது தன் கையை வைத்தாள் விக்கி அவள் கையை கெட்டியாக பிடித்து குலுக்கினான்.
தொடரும்
 
எவண்டா அவன் ஆகாஷ் புதுசா ஒருத்தன் ஊடால வர்றான்?
அபி பாவம்ப்பா
எலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையாகாமல் இருக்கணும்
 
Last edited:
Top