Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி ...!” அத்தியாயம்-2

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-2
மலையடிவார இருளில் மாட்டிக்கொண்டது போல் ஒரு உணர்வு கண்களை திறக்க முயற்சி செய்து முடியாமல் போகவே மீண்டும் மீண்டும் முயன்று மிகவும் சிரமப்பட்டு இரண்டு முறை கண்களை அழுத்தி திறக்க முயன்றாள் அபிநயா.

ஒருசில நொடிகளுக்கு பிறகு அந்த முயற்சியில் வெற்றியும் கண்டாள். பசையை போல் ஒட்டிக்கிடந்த இமைகளை மெல்ல திறந்து சிறு கூட்டமாய் தன்னை சூழ்ந்திருந்த மனிதர்களை அடையாளம் காட்டியது. யாரோ ஒருவர் தன்னை உலுக்கி சுயநினைவுக்கு கொண்டுவர முயற்சிப்பதை உணர்ந்தாள்.

ஓரளவுக்கு நிலைமையை புரிந்து கொண்ட அபிநயா தனக்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தாள். நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசைக்காக கடலில் இறங்கி குளிக்க சென்றதும் அதனை தொடர்ந்து அலைகளில் சிக்கிக் கொண்டதும் தன்னை இழுத்து சென்று ஆழி அலை ஆழத்தில் சொருகிய காட்சியையும் கண் முன்னால் கொண்டு வந்தாள். அதன்பிறகு தலை முடியை பற்றி இழுத்து காப்பாற்றிய நபர் வரை அந்த நினைவு நீண்டு சென்றது. எல்லாமே முடிந்து விட்ட நிலையில் ஈர உடலில் ஒட்டிக்கிடந்த உடையும் அதில் சுருண்டு கிடந்த மணல் துகள்களை கவனித்தவள், சிறு முக சுளிப்போடு மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

"இப்ப எப்பிடிகீதும்மா?" சுண்டல் தூக்கோடு நின்றிருந்த பெரியவர் கேட்கவும், தன்னையும் அறியாமல் தலையாட்டி

"பரவாயில்லை... சரியாயிடுச்சு ." என்று பதில் சொன்னாள் அபிநயா.

"நீச்சல் தெரியாத பொண்ணு இப்படி தனியா வந்து கடல்ல மாட்டிகிட்டு இருக்கியே? இது உனக்கே நல்லா இருக்கா? கொஞ்சம் தாமதமாயிருந்தாலும் உன் உசுரு போயிருக்கும். நல்லவேளை இந்த தம்பி வந்து காப்பாத்திச்சீ... இல்லன்னா மூனாநாளு பொணமாத்தான் கரை ஒதுங்கியிருப்பே..." வழித்து சீவிய தலையும் தூக்கி சொருகிய புடவையுமாய் நீட்டி முழங்கி பேசிய அந்த பூக்காரம்மாவின் பேச்சை கேட்ட பின்புதான் தன்னைக் காப்பாற்றிய அந்த நபர் யார் என்று தெரிந்துக்கொள்ளும் ஆவலில் பார்வையைச் சுழல விட்டாள்.

"இதோ இங்கே நிக்குதே இந்தப் புள்ளதான் கடல்ல குதிச்சி உன்னை காப்பாத்தினிச்சி. உன்னை காப்பாத்தனுங்குற எண்ணத்துல அப்படியே கடல்ல குதிச்சிருக்கு பாக்கெட்டில் இருந்த செல் எங்கேயோ நழுவி விழுந்துடுச்சாம்.”

பட்டென்று தலையை திருப்பி பின்னால் நின்றிருந்த அவனை பார்த்தாள். உடலெல்லாம் நனைந்து போய் நின்றிருந்தான். கையில் நனைந்த நூறு ரூபாய் நோட்டுகளை பிரித்துக் கொண்டே இருந்தான்.

"என்ன... காப்பாற்றியதற்கு ரொம்ப ந...நன்றிங்க."

“ஓகே பரவாயில்லை இனிமேலாவது இந்த மாதிரியான ரிஸ்க் எடுக்காதீர்கள்.”
என்று சொன்னவன் “நீங்க எங்க போகணும் யார்கூட வந்தீங்க?” என்று கேட்டான்.

“என்னோட பிரண்டோட வந்தேன். அவ அந்த பைவ்‌ ரதாஸ் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருக்கா.”

“சரி வாங்க அந்த வழியே தான் போவேன் போகும்போது அங்க விட்டுடுறேன்.”
நின்றிருந்த கூட்டம் கலைந்து போக, எழுந்து ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டபடி அவனோடு இணைந்து நடந்தாள். கால்கள் வலுவிழந்து நடப்பதற்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. போகிற வழியில் ஒரு சுக்கு காபிக்காரணை நிறுத்தி இரண்டு கப் காபி வாங்கி அவளிடம் ஒன்று கொடுத்தான். மனதும் உடலும் சோர்ந்து இருக்கவே மறுக்க மனமின்றி நன்றியை உதிர்ந்து விட்டு வாங்கிக்கொண்டாள்.
அவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த ஈர நோட்டை எடுத்து நீட்டவும்,

“அண்ணா... வேணான்ணா உங்க கிட்ட காசா‌... நல்லா இருக்காது...” என்றான் அந்த சுக்கு காப்பிக்காரன்.
பிடிவாதமாக அவனுடைய பாக்கெட்டில் அந்த ஈர நோட்டை திணித்துவிட்டு, “எல்லா பணமும் தண்ணீர்ல நனஞ்சிடிச்சி நைட்டு கடப்பக்கம் வா”
அவன் மறுப்பாக எதையோ சொல்ல முயல, அவன் முதுகை தட்டிகொடுத்தபடி காப்பியோடு முன்னால் நடந்தான்.
இருவரும் காபியை குடித்துவிட்டு இரண்டு ஸ்டெப் தான் நடந்திருப்பார்கள் “அபிநயா...” என்று குரல் கொடுத்துக் கொண்டே எதிரில் ஓட்டமும் நடையுமாக ஓடிவந்தாள் மேகலா .

"ஏய் என்னடி ஆச்சு கடல்ல விழுந்துட்டியாமே...?” என்று கலங்கியவாறு தோழியை மார்போடு தழுவிக் கொண்டாள்

“ஒண்ணுமில்ல.. சும்மா கால் ஸ்லிப்பாகி தண்ணீரில் விழுந்து விட்டேன்.” என்று சொல்லிக்கொண்டே போனவள் இடதுபுறமாக தன்னைக் காப்பாற்றியவனும் மேகலாவின் உட்பி குமரேசனும் கைகுலுக்கி பேசிக்கொண்டிருப்பதை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

“மேகலை...இவன் என்னுடைய ஃப்ரெண்ட் ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்கே சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுதான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு, பேரு மேகலா இது இவங்க மேகலாவோட பிரெண்ட் பேரு அபிநயா.”
மூவரும் மீண்டும் ஒரு முறை அறிமுகமானார்கள்.
ஒருவழியாக குமரேசனும் மேகலாவும் தங்கள் பிரச்சனைகளை நேரில் பேசி சுமூக முடிவுக்கு வந்திருந்தார்கள். பெரியோர்களால் நின்றுபோன திருமணம் இருவரின் புரிதலால் மீண்டும் நடப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த நல்ல செய்தியை இருவரும் அபிநயாவிடம் ஷேர் பண்ணி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

“எனிவே வந்ததுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லி இருக்கிறாய்..” என்று மனமார பாராட்டினாள் அபிநயா.

“ஓகே வாங்க டிபன் காபி சாப்பிட்டுட்டு கிளம்பலாம்.” என்றான் குமரேசன் கூடவந்த வேழவேந்தன் நண்பனிடம் கண் ஜாடை காட்டிவிட்டு “ஃபைவ் மினிட்சில் வரேன்...” என்று கிளம்பினான்.
மூவரும் ஓட்டலுக்குள் நுழைந்து டிபன் ஆர்டர் பண்ணிட்டு வெயிட் பண்ணும் நேரத்தில் வேழவேந்தன் வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்தவுடன் அடேய் நிறத்துக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடணும் டா...உன் நிறத்திலேயே போட்டு இருக்கே!” என்று குமரேசனின் பேச்சில் கிண்டல் இழையோடியது. அதனைத் தொடர்ந்து அவனை ஏறிட்டாள் அபிநயா. பரந்த நெற்றி அகன்ற தோள்கள் ஆறு அடிக்கு குறைவில்லாத உயரம். கூர்மையான கண்கள் என்று ஆணழகனாக கம்பீரமாய் நின்றிருந்தவனை கண்கள் படம் பிடித்தது

ஒரு சில நிமிடங்களே சுயநினைவுக்கு திரும்பியவள் ‘சே’ என்று தன்னையே நொந்துக்கொண்டாள். இவ்வளவு நேரமா பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்கிற மாதிரி பாத்துட்டு இருக்கேனே? என்று தன் தலையில் ஒரு கொட்டு கொட்டிக்கொண்டாள். அவளின் வெட்கம் கலந்த முகத்தை ஓரக்கண்ணால் கண்டு ரசித்தான் வேழவேந்தன். அந்த ஒரு நொடியில்தான் இதயங்கள் இடமாறியிருக்க வேண்டும்.

“போகிற வழியிலதான் என்னுடைய ஷாப் இருக்கு அப்படியே வந்துட்டு போங்களேன்.” என்றான்.
“இல்ல ஆல்ரெடி லேட்டாயிடுச்சு இன்னொரு நாளைக்கு வருகிறோம்.” என்றாள் மேகலா. “

“சிஸ்டர் போற வழி தானே இந்த ஏழையின் இருப்பிடத்திலே மகாராணிகள் கால் வைத்து விட்டு போனால் ராமர் காலடி பட்டு சாபம் நீங்கிய அகலிகை போல என் கஷ்டம் எல்லாம் நீங்கி வருமானம் கூடுதலாக வரும் இல்லையா? அதனால்தான் இந்த அடியேன் தங்களை அழைக்கிறேன்.” அவன் சொன்ன விதம் இரு பெண்களின் முகத்திலும் சிரிப்பை வரவழைத்தது.

“ஓகே ஒரு ரெண்டு நிமிஷம் பார்த்துட்டு போயிடலாம் மேகலா..” என்றான் குமரேசன். இருவரும் தலையசைத்து விட்டு அவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.
தங்கள் பூர்வீக தொழிலான சிலை செதுக்குதல் பற்றி கூறிக்கொண்டே வந்தான்.
சிலை செய்வதற்கான கற்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், அரசே கல்குவாரி திறக்க வேண்டும் என மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்,
பல்லவ மன்னர்களின் குடவரை சிற்பக்கலை நுணுக்கங்களை மாமல்லபுரம் உலகுக்கு பறைசாற்றி வருகிறதை பற்றியும், மாமல்லபுரத்தில் சிற்பங்களை வடிவமைக்கும் பணியில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிற்ப கலைஞர்கள், பரம்பரையாக சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருவதால், வாஸ்து மற்றும் சிற்ப சாஸ்திர அடிப்படையில் உண்மை தோற்றத்தை பிரதிபலிக்கும் கலை நுணுக்க வேலைபாடுகளுடன் சிற்பங்களை செதுக்குகின்றனர்.
இதனால், வெளிநாடு மற்றும் உள்ளூர் சிற்பக் கலைஞர்கள் மாமல்லபுரத்தில் சிற்பக் கலையை ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். தற்போது மாமல்லபுரத்தின் சிற்பக் கலைக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது. ஆனால், சிற்பங்கள் செய்வதற்கான கற்கள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதால், கற்கள் கிடைக்காமல் சிற்பம் செதுக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிற்பிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், முறையான அனுமதியின்றி விற்கப்படும் கற்களை அதிக விலை கொடுத்து வாங்கி சிலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அரசே கல் குவாரி திறக்க வேண்டும் என சிற்பக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில அரசு விருது பெற்ற சிற்பியான எங்க அப்பா என்ன சொல்லுறாறுன்னா, “கல்குவாரிகளை வெளி மாநிலத்தவர்கள் ஏலம் எடுத்துள்ளதால், கட்டுமான பணிகளுக்காக கற்களை வெடிவைத்து உடைத்து ஜல்லிகற்களாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், சிற்ப தொழிலுக்கான மூலப் பொருளாக விளங்கும் தரமான கற்கள் கிடைக்காமல் சிற்பக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில், சிற்பக் கலையை மேம்படுத்த அரசே குவாரிகளில் கற்களை விநியோகம் செய்கின்றன. எனவே, மாமல்லபுரம் சிற்பக் கலையின் நலன் கருதி அரசே கல்குவாரி மூலம் கற்களை விநியோகம் செய்ய வேண்டும். மேலும், தரமான கற்கள் கிடைக்கும் சங்கராபுரம் கல்குவாரி கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அந்த குவாரியை மட்டுமாவது சிற்பக் கலைக்கான குவாரியாக அறிவிக்க வேண்டும்” என்றான்.
கைவினை கலைத்துறை பற்றி சொல்லும்போது, “மாமல்லபுரம் சிற்பிகளுக்கு சிலை செய்வதற்கான கற்கள் கிடைப்பதில் உள்ள பிரச்சினையை தீர்க்க, கைவினைத் துறை சார்பில் சிறப்பான திட்டம் கொண்டு வரப்படும். மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து சர்வதேச சிறப்பு வாய்ந்த, மாமல்லபுரம் சிற்பக் கலையை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

சற்று நேரத்துக்கு பிறகு,
வேழவேந்தனின் ஷாப்புக்கு போன போது மிகவும் பிரமிப்பாக இருந்தது பிளாஸ்டிக் பொம்மைகள் கற்சிலைகள் என பல வகையனா பொருட்கள் கலைநயத்துடன் அடுக்கி வைக்கப்ட்டிருந்தன.

“இந்த சிலைங்கலாம் இப்படி அடிக்கி அடுக்கி வச்சிருக்காங்களே, ஒரு கடையில கூட கஸ்டமரை பார்த்தமாதிரி நினைவில்லையே? யார் எப்போதான் வந்து வாங்குவாங்க?” என்று வெளிப்படியாவே கேட்டான் குமரேசன்.

“என்னடா அப்படி கேட்டுட்ட..? மலேசியா, சிலோன், சிங்கப்பூர், பிரான்ஸ்ன்னு எவ்வளவு நாட்டுக்காரங்க வந்து வாங்கிட்டு போறாங்க தெரியுமா? சில நேரங்கள்ல நாங்களும் எக்ஸ்போர்ட் பண்ணிகிட்டுதான் இருக்கோம்.”

“சிலை செய்றதுக்கு இப்போலாம் கல்லு அவ்ளோ சீக்கிரத்துல கெடைக்க மாட்டுதுன்னு சொல்லிட்டு இருந்தாரு ஒரு பெரியவர்"

"கல்லுலாம் கெடைக்குதுடா. ஆனா ரேட் அதிகமாய்டுச்சு. பாறைங்கள ஏத்திட்டு வர்ற லாரிங்கள செக்போஸ்ட் அங்க இங்கனு போலீஸ்காரங்க புடிச்சு நல்லா வாங்கிர்றாங்க. சில லாரிங்கள ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் நிறுத்தி லம்ப்பா வாங்கிடுவாங்க. அதுக்கெல்லாம் சேத்து நம்மகிட்ட வாங்குறாங்களே...... ரேட்டு கூடாதா..’’ என்று சிரித்தான்.

"போலீஸ்காரங்க புடிக்கிறது எப்பவும் நடக்குறதுதானே"

"நடக்குறதுதா. இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி சிலைக் கடத்தல்கள் அதிகமா ஆய்ட்டதால ரொம்ப கெடுபுடி ஆயிப்போச்சு"

"இந்த சிலைங்கலாம் செய்றதுக்கு எந்த மலையில இருந்து பாறைங்கள கொண்டு வர்றாங்க"

"மத்தவங்க எப்டினு தெரியல. நாங்க பெரும்பாலும் பட்டிமலைக்குப்பம், சிறுதாமூர், திருவக்கரை இங்க இருக்கிற குவாரிங்கள்ல இருந்துதான் கல்லு எடுக்கிறது, அங்கதான் நல்லா இருக்கும்"

"கல்லு, நல்லா இருக்கும்னு எப்டி கண்டு புடிப்பீங்க"

"கல்லுல மொத்தம் மூணு விதம் இருக்கு. ஆண் கல்,பெண் கல், அலி கல். அலினு சொல்லக்கூடாது. நாங்க நபூஷ்ண கல்லுன்னு சொல்லுவோம். இதுல பாத்தீங்கன்னா. ஆண் கல்ல நீங்க உளியால தட்டுனா நாதம் வரும். பெண் கல்ல தட்டுனாலும் வரும். ஆனா வித்தியாசமா இருக்கும். நபூஷ்ண கல்லுல எந்த சத்தமும் வராது. பெரும்பாலும் நாங்க சிலை செய்றது ஆண் கல்லுல தான்" என்றவன்
"கொஞ்ச வெளிய வாங்களேன்" என்று மூவரையும் அழைத்துச் சென்று அங்கே கீழே இருந்த ஒரு உளியை எடுத்து அருகிலிருந்த நந்தி சிலையின் மீது தட்டினான். அவன் தட்டிய ஓசை அடங்க சில விநாடிகள் ஆனது.

"இங்க மொத்தம், இதுமாதிரி எத்தனை சிற்பம் செய்ற இடம் இருக்கு வேழவேந்தன்?"

"மகாபலிபுரத்துல இருக்கவங்களுக்கு சிற்பம் செய்றதுங்கிறது குடிசைத்தொழில் மாதிரி. நூத்துக்கணக்கான கடைகள் இருக்கு இங்க"

"வெளிநாட்டுல இருந்துலாம்கூட இங்க சிலை வாங்க வருவாங்கன்னு கேள்விபட்டிருக்கிறேன்"

"உண்மைதான். சிலை வாங்குறதுக்குனே அங்க இருந்து வர்றவங்களும் இருக்காங்க. நாங்களும் எக்ஸ்போர்ட் பண்ணி அனுப்பி வெப்போம். ஏன் என் அப்பாவே பிரான்ஸ், இங்கிலாந்து, மலேசியா, ஸ்ரீலங்கானு சில நாடுகளுக்கு போய் சிலை செஞ்சி கொடுத்துட்டு வந்திருக்கார்" அங்க கோவில்ல வெக்கிறதுக்குப் போக. வீட்டை அலங்காரப்படுத்த சிலைகள் வாங்குவாங்க. பிரான்ஸ்காரங்களுக்கு நம்ம நாட்டு சிலைங்கன்னா உயிரு"

"நம்ம தமிழ்நாட்ல இருந்தும் சிலைங்கலாம் வாங்குவாங்கல?"

"ஆங் வாங்குவாங்க. வாஸ்துக்காக புத்தர் சிலைங்க வாங்கிட்டு போவாங்க, சீன செட்டியார் சிலை வாங்குவாங்க"

"சீன செட்டியார்னா"

"அதுவா, குபேரன் சிலை தெரியும்ல நாங்க சீன செட்டியார்னு சொல்லுவோம். அப்புறம் பிரமீடு வாங்கிட்டுப் போவாங்க. கருங்கல் சிலைன்னு மட்டும் இல்லாம, இங்க பக்கத்துல ஒரு வுட்ஷாப் இருக்கு அங்க போனீங்கனா, மரம், ஃபைபர்ல் செய்யப்பட்ட நெல்லுப்பானை, புத்தர் விளக்குன்னு வகைவகையாக இருக்கு, பெரிய பெரிய ஹோட்டல்கள அலங்காரப்படுத்த வாங்கிட்டு போவாங்க"

"ஆனா கருங்கல் சிலை செய்றதுதானே கஷ்டம்?"

"ஆமா...ஒரு மூணு அடி சிலை நல்ல வடிவமா செய்யணும்னா கொறஞ்சது ஒரு மாசம் ஆகும்"

"இந்தத் தொழில்ல நீங்க சந்திக்கிற பிரச்னைனு ஏதாவது இருக்கா" இது மேகலா.

"பிரச்னைனுலாம் ஒன்னும் இல்லை. ஆனா, சிற்பத் தொழிலாளர்களுக்குனு ஒரு நலவாரியம் அமைக்கணும். உங்களுக்கு தெரிஞ்ச பத்திரிகைல எழுதிப் போடுங்க"

"உங்களுக்குப் பிறகு உங்க பிள்ளைகளுக்கு இத சொல்லித் தர்றீங்களா?" என்றாள் அபிநயா.

"இதெல்லாம் சொல்லிக் கொடுத்து வர்ற கலை இல்லைங்க. மனசார நீங்க விரும்பிக் கத்துக்கணும். எம் புள்ளைகளுக்கு இதுல விருப்பம் இருந்தா. அதாவது எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து அவங்களுக்கு இதுல விருப்பம் இருந்து கத்துக்கனுன்னு கேட்டாங்கன்னா, சொல்லி தருவோம். விருப்பமில்லாமல் கத்துகிட்டு செய்யிற சிலையில... தோ .....இந்த அம்மன் சிலை இருக்கே.... இவ கண்ணுல தெரியிற உக்கிரம் அவங்க செய்ற சிலையில இருக்காது. கண்ணுல உயிர் இல்லாத சிலை கல்லுக்கு சமம்"

“களையிழக்கும் சிலை செதுக்கும் தொழில்:கண்டுகொள்ளுமா அரசு?” என்ற கேள்வியை முன் வைத்தான் குமரேசன்.

“மதுரையில் சிற்ப தொழிலை நம்பி இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இத்தொழிலை மேம்படுத்த, இயந்திரங்கள் வாங்க கூட நிதியின்றி சிலை செதுக்கும் தொழில் களையிழந்து வருகிறது.
கோரிப்பாளையம் சிற்பக் கலைஞர் ஒருவர் இருக்கிறார் அவர் என்ன சொன்னார் தெரியுமா? 27 ஆண்டுகளாக சிற்பம் செதுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிராறாம். துவக்கத்தில் சிமென்ட், கல், தேக்கு மரச் சிற்பங்களை அதிகம் விரும்பி கேட்டதால் தொழில் நன்றாக இருந்தது. தற்போது சிமென்ட் சிலைகளுக்கு மட்டும் ஆர்டர் வருகிறது. அதுவும் எதிர்பார்த்தளவு வருவதில்லை. வருவாய் குறைந்து விட்டது. இன்றைய நிலையில் சிற்பத் தொழிலில் நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அதற்குரிய உபகரணங்களை வாங்க எங்களை போன்ற சிறு கலைஞர்களிடம் பொருளாதார வசதி இல்லை. சங்கமும் சரியாக செயல்படாததால் குறைகளை தீர்க்க முடியாமல் தவித்து வருகிறோம். சிற்ப கலைஞர்களுக்கு அரசு சார்பில் வங்கி கடன் மற்றும் இடம் கொடுக்க வேண்டும். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும், என்றார்.

அவன் பேச்சில் இருந்த தாக்கத்தை இவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு என்ற ஒரு சிறு அறை இருந்தது. அதில் சுழல் நாற்காலியில் ஒரு டேபிளும் போடப்பட்டிருந்தது. இரண்டு பிளாஸ்டிக் சேரை போட சொல்லி அங்கே தான் இவர்களை அமர வைத்து பேசினான்.

அதன் பிறகு கடையை சுற்றி பார்க்க தொடங்கினார்கள். ஒரு அழகான கற்சிலையை காட்டி இதன் விலை என்ன என்று கேட்டாள். இதன் விலை 20,000 ஆனால் உங்களுக்காக பாதிக்கு பாதி குறித்து தருகிறேன் என்றான். இதை எடுத்துட்டு போறது கஷ்டம் என்று உணர்ந்தவள் எதையாவது வாங்க வேண்டும் என்பதற்காக 5 ஆயிரம் கொடுத்து சிறிய சிலை ஒன்றை வாங்கினாள். சில நிமிடங்களில் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பியபோது மூவருக்கும் தனது விசிட்டிங் கார்டை கொடுத்தான். இதிலிருக்கும் செல் நம்பர் கடல்ல போச்சு அதனால எனக்கு கால் பண்ணுங்க லேன்ட் லயன்ல கால் பண்ணுங்க. நேரம் கிடைக்கும்போது நம்ம கடை பக்கம் வந்துட்டு போங்க என்றவனுக்கு திரும்பவும் ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப, தற்ச்செயலாக திரும்பிய அபிநயாவின் பார்வை வேழவேந்தனின் பார்வையோடு சங்கமித்து பின் விலகியது.

-தொடரும்
 
சிற்பக்கலைப் பற்றிய அறியாத
விவரங்கள்....
சிலை செய்வது மட்டும் கடினமில்லை...
அதற்கான கற்கள் கிடைப்பதும் கடினம் போல ...
நன்றி டெய்சி...
 
Top