Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 1௦ 2

Advertisement

Admin

Admin
Member


“சாதனா எழுந்திட்டாளா....”

“இன்னும் இல்லை...”

“அவளை எழுப்பிக் கிளம்பச் சொல்லு...”

“மதியம் போறதுக்கு அவளை எதுக்கு இப்ப எழுப்பனும்? அவ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். நீங்க காலையில டிபன் எங்க ரூமுக்கே அனுப்பிடுங்க.” என்றவன் எழுந்து செல்ல....

அவர்கள் இருவரும் பேசுவதைச் சற்று தள்ளி நின்று கேட்ட ராஜ்மோகன், தன் மனைவியின் அருகே வந்தவர் “என்னவோ பொண்டாட்டியை பிடிக்காத மாதிரி நேத்துப் பேசினான். இப்ப என்னடான்னா அவளை இந்தத் தாங்கு தாங்குறான்.” என்றார் ஆச்சர்யமாக....

“நாம கிழக்குல வந்தா அவன் மேற்குல போவான்.... அவன் எப்பவுமே அப்படித்தான...என்னவோ இன்னைக்குத் தான் உங்க பையன் இப்படி நடந்துக்கிற மாதிரி சொல்றீங்க. ” எனச் சலித்தபடி ஜோதி உள்ளே சென்றார்.

ரிஷி தங்கள் அறைக்கு வந்த போது... சாதனா இன்னும் எழுந்துகொள்ளவில்லை... இவ எதுக்குக் கட்டில்ல படுக்காம சோபாவில படுத்திருக்கா?.... என நினைத்தபடி, அவனும் சென்று திரும்பப் படுத்துக் கொண்டான்.

அங்கே ப்ரீதா காலையில் எழுந்த போது... கட்டிலில் வெற்றி இல்லை... அதுக்குள்ள எந்திரிசிட்டாங்களா... என ஆச்சர்யப்பட்டவள், குளியல் அறைக்குள் சென்று தன் வேலைகளை முடித்துக்கொண்டு வந்து, தன் கணவனைத் தேடிச் சென்றாள்.

அந்த நேரத்திற்கே வீட்டு வேலை செய்பவர்களை வெற்றி வேலை வாங்கிக் கொண்டு இருந்தான்.

“இங்க சோபாவுக்குக் கீழ எல்லாம் நல்லா துடைங்க.” என்றவன், சமையல் அறைக்குச் சென்று மதிய மெனுவை வாங்கிப் பார்த்தான்.

“பாதாம் கீர் வேண்டாம், வந்ததும் மட்டன் சூப் குடுங்க.”

வெற்றி சொன்னதைக் கேட்ட பெரியம்மா “மாப்பிள்ளை முதல் தடவை நம்ப வீட்டுக்கு வர்றார். அதனால ஸ்வீட் தான் குடுக்கணும்.” என்றார்.

“ரிஷிக்கு ஸ்வீட்டே பிடிக்காது பெரியம்மா... அதுவும் கீர் குடிச்சா... வயிறு நிறைஞ்சு வேற ஒன்னும் சாப்பிட முடியாது. அதனால வந்ததும் சாஸ்திரத்துக்கு எதாவது சின்ன ஸ்வீட்டா குடுங்க. அடுத்து சூப் குடுத்திட்டு அரைமணிநேரம் கழிச்சு சாப்பிட சொல்லலாம், சரியா இருக்கும்.”

“காலையில டிபன் எதாவது ஈஸியா பண்ண சொல்லுங்க போதும், மதியத்துக்கு லேட் பண்ணாம சமைக்க ஆரம்பிக்கட்டும்.” வெற்றி சொல்ல... அவன் பெரியம்மாவும் ஒத்துக்கொண்டார்.

வெற்றி சமையல் அறையில் இருந்து திரும்ப... அங்கே ப்ரீதா உணவு மேஜையின் அருகே உட்கார்ந்து இருந்தாள். அவளைப் பார்த்தும் வெற்றி புன்னகைக்க....

“அப்பாடி ! என் அண்ணன் மேல இவ்வளவு பாசமா....” ப்ரீதா ஆச்சர்யத்தில் கண்களைப் பெரிதாகத் திறக்க....

“ம்ம்... உன் அண்ணன் மேல இல்லை... என் தங்கை மேல.... அவளோட புருஷனை எந்தக் குறையும் இல்லாம கவனிக்கணும் இல்ல...இந்த வீட்டு மாப்பிள்ளை ஆச்சே....”

“மாப்பிள்ளையை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கறீங்க.”

“என்ன டி ரொம்பச் சடைக்கிற... உனக்கு என்ன குறை? உன்னையும் வேணா நல்லா கவனிக்கிறேன். ரூமுக்கு வரியா....” வெற்றி கண்சிமிட்டி கேட்க....

அவன் எப்படிக் கவனிப்பான் என்று புரிந்த ப்ரீதா... வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

யாரோ கதவு தட்டும் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்த சாதனா.... தன் ஆடைகளைத் திருத்திக்கொண்டு சென்று கதவை திறக்க... அங்கே யாருமே இல்லை....

என்ன யாரையும் காணோம் என அவள் முழிக்க.... “வெளிய டேபிள் மேல டிபன் இருக்கும் பாரு...” என்றான் ரிஷி.

அவன் சொன்னபடி வெளியே எட்டி பார்க்க... டேபிளில் உணவு வகைகள் இருந்தது.

இவ்வளவு சீக்கிரம், அதுவும் மாடிக்கே... ஏன் டிபன் வந்தது? என நினைத்தபடி குளியல் அறைக்குள் சென்றவள், சிறிது நேரத்தில் பல் விலக்க ப்ரஷோடு வெளியே வந்தாள்.

“சீக்கிரம் பல் விலக்கிட்டு வா... சாப்பிடலாம்.” ரிஷி அழைக்க....

“நீங்க வேணா சாப்பிடுங்க. நான் இவ்வளவு சீக்கிரம் சாப்பிட மாட்டேன். குளிச்சிட்டு தான் சாப்பிடுவேன்.” சாதனா அலட்டலாகப் பதில் சொல்ல....
“ஹோ... ஹோ... பத்து மணிக்கு பல்லு விலகிட்டு பெரிய பகுமானம் தான்.” என்றான் ரிஷி. பதறியடித்துச் சாதனா செல்லில் மணி பார்க்க... நேரம் ஒன்பதரை....

“ஐயோ ! இவ்வளவு நேரமா தூங்கினேன்.” அவள் அதிர்ச்சியாக....

“தினமும் இந்த டயலாக் தான் சொல்ற.... ஆனா சீக்கிரம் எழுந்துகிற வழியைத் தான் காணோம். வேற ஒன்னும் இல்லை... உனக்கு மாமியார் சரியில்லை....அதுதான் இப்படி.” என்றான் ரிஷி.

நேற்றும் தாமதமாகத்தான் எழுந்தாள்... இன்றும் அப்படி ஆனதும், தன் மாமியார் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற கவலையில்... ரிஷியிடம் வழக்காடாமல் உடைகளை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள்.

அவள் குளித்துத் தயாராகி வந்த போது... ரிஷியும் பக்கத்து அறையில் குளித்துவிட்டு வந்திருந்தான்.

இருவரும் எதுவும் பேசாமல் ஹாலில் சென்று சாப்பிட அமர்ந்தனர். உணவு வகைகளை ரிஷி திறந்து பார்க்க.... அதில் இட்லி, வெண் பொங்கல், இரண்டு வகைச் சட்னி மற்றும் சாம்பார் இருந்தது.

இண்டர்காமில் தன் அன்னையை அழைத்தவன் “இது என்ன டிபன்? ஒரே வெஜ்ஜா இருக்கு...” என்றான்.

“இன்னைக்கு மதியம் உனக்கு உங்க மாமனார் வீட்ல விருந்து இல்ல.... அதனால தான் கொஞ்சம் லைட்டா இருக்கட்டுமேன்னு நினைச்சேன்.”

ஜோதி சொல்லும் போதே இடைமறித்தவன் “எனக்குத் தோசை வேணும். சாமியை மேல அனுப்புங்க.” என்றவன், தொடர்பை துண்டித்து விட்டான்.

சாதனா அவன் பண்ணும் அலும்புகளைப் பார்த்துக்கொண்டே சாப்பிட... ரிஷி கொஞ்சமாக வெண் பொங்கல் வைத்துக்கொண்டு கொரிக்கும் போதே... சமையல்காரர் மேலே வந்து விட.... தோசை தான கேட்டான், இவர் எதுக்கு வந்தார்? எனச் சாதனா பார்த்திருந்தாள்.

அவர் வரும் போதே கையில் மாவு பாத்திரத்துடனும், தோசை கல்லுடனும் தான் வந்தார். அவரோடு எடுபிடி வேலை செய்யும் பெண்ணும் எதையோ கொண்டு வந்தாள்.

“நான் அப்பவே அம்மாகிட்ட சொன்னேங்க. தம்பிக்கு இந்த டிபன் பிடிக்காதுன்னு அவங்க தான் பரவாயில்லை இருக்கட்டும்னு சொன்னாங்க.” என்றபடி அங்கே சிறிதாக இருந்த அறைக்குள் சென்றார்.

இவர் இங்கே என்ன செய்யப்போகிறார்? என்று நினைத்த சாதனா எழுந்து சென்று பார்க்க... சாமி அங்கிருந்த அடுப்பில் கல்லை வைத்து, தோசை ஊற்றுவதைப் பார்த்தாள்.

அவளைப் பார்த்ததும் “கீழ இருந்து எடுத்திட்டு வந்தா தோசை ஆறிடும் இல்லையாங்க மா.... அதுக்குத்தான். தம்பிக்கு சூடா இருந்தா தான் பிடிக்கும்.” சாமி சொல்ல... கேட்ட சாதனாவிற்கு இது ரொம்ப அதிகம் என்றே தோன்றியது.

அவள் போய் உட்கார்ந்து சாப்பிட... ரிஷிக்குச் சூடான தோசை கொண்டு வந்து சாமி வைக்க.... “அடுத்து முட்டை தோசை கொண்டு வாங்க அண்ணே...” என்றான் ரிஷி...

“சரிங்க தம்பி...”

“உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை...”

சாதனா கேட்க... தோசையைச் சாப்பிட்டுக் கொண்டே அவளைப் பார்த்தவன் “நம்ம வீட்ல நாம நினைச்சபடி கூட இருக்க முடியலைன்னா..... அப்புறம் இதுக்குப் பேர் வீடா....” என அவன் திரும்ப அவளைக் கேள்வி கேட்டான்.

“ஏன் கீழ போய்ச் சாப்பிட்டா என்னவாம்?”

“கீழா யாராவது வந்திட்டே இருப்பாங்க. ப்ரீயா உட்கார்ந்து சாப்பிட முடியாது. இதெல்லாம் எங்களுக்குப் பழக்கம் தான்.” என்றான் ரிஷி சாதாரணமாக....

“அவர் பாவம் இல்ல...” சாதனா விடுவதாக இல்லை....

“என்ன பாவம்? இது அவர் வேலை தான....”

“அவர் வேலை தான் இருந்தாலும்...”

“அம்மா அவருக்குச் சம்பளமே நிறையத் தருவாங்க. அதோட நானும் தருவேன். ரொம்பப் போட்டு ஆராயக் கூடாது சாதனா... லைப் என்ஜாய் பண்ணி வாழனும்.” என்றான்.

ஒரு சாப்பாடு விஷயத்திலேயே இப்படியென்றால்...அவன் திருமணத்தைப் பற்றி என்னென்ன நினைத்து வைத்திருந்தானோ... என நினைத்தவளுக்கு மனதிற்குள் திக்கென்று இருந்தது.

அதற்குள் சாமி இன்னொரு தோசையோடு வர.... “சாமி. உங்க சின்ன மேடமுக்கும் ஒரு முட்டை தோசை கொண்டு வாங்க.” என்றான்.

“இல்ல எனக்கு வேண்டாம். இதே போதும்.” சாதனா சொல்ல....

அவள் தட்டில் இருந்த இட்லியை எடுத்து வேறு பத்திரத்தில் வைத்தவன் “சூடா ஒரு தோசை சாப்பிடு...” என்றான்.

அப்போது அங்கே வந்த ஜோதி “நானும் உங்களோட சாப்பிடலாம்னு வந்தேன். வரலாமா....” அவர் கேட்க....

“வாங்க.... வாங்க.... என்ன பெர்மிஷன் எல்லாம் கேட்குறீங்க?” என்றான் ரிஷி.

“உட்காருங்க அத்தை...” என்ற சாதனா அவரிடம் ஒரு தட்டை எடுத்து நீட்ட.... ஜோதியும் அவர்களோடு சாப்பிட உட்கார்ந்தார்.

“என்ன அத்தை? ஒரு சாப்பாடு விஷயத்துல உங்க பையன் இவ்வளவு ரகளைப் பண்றார்.”

“அவன் கொஞ்சமாத்தான் சாப்பிடுவான் சாதனா. ஆனா சூடா அதே சமயம் சுவையா இருக்கணும். சின்னதுல இருந்தே அப்படித்தான். இட்லிக்கு கோழி குழம்பு தான் வேணும். ஆனா அந்த இட்லியை வேக வச்சு அப்படியே சூடா இவன் தட்டில போடணும். அப்பத்தான் பிடிக்கும். கொஞ்சம் சூடு ஆறினா கூடச் சாப்பிட மாட்டான்.”

“ஆனாலும் நீங்க இவரை ரொம்பச் செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க.”

சாதனா ரிஷியை பார்த்துக்கொண்டே சொல்ல.... “நீ தான் இப்ப வந்துட்டியே.... இனி நீயே அவனைப் பார்த்துக்கோ...” என்றார் ஜோதி.

ரிஷி சாப்பிட்டு முடித்ததும் “நான் போய் உங்களுக்குத் தோசை ஊத்திட்டு வரேன்.” என எழுந்து சென்றான்.

“அத்தை, நீங்க இனி காலையில எனக்கு இண்டர்காம்ல ஒரு கால் பண்ணி எழுப்பி விட்டுடுங்க. நான் இன்னைக்கும் ரொம்ப நேரம் தூங்கிட்டேன்.”

“எதுக்கு உன் புருஷன் என்னைத் திட்டவா?....”

அவர் சொன்னது புரியாமல் சாதனா பார்க்க.... “நான் ரிஷிகிட்ட உன்னைக் காலையில எழுப்பி விடச் சொன்னதுக்கு.... அவ இப்பவே எழுந்து என்ன செய்யப்போறா?... அவன் தூங்கட்டும். நீங்க டிபன் மாடிக்கே அனுப்பி வைங்கன்னு. காலையில் கீழ வந்த போது... அவன்தான் சொல்லிட்டு வந்தான்.”

ஜோதி சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட சாதனா “என்னத்த நேத்து அப்படி இருந்தார்... இன்னைக்கு இப்படி இருக்கார்.” என்றாள் ஒன்றம் புரியாமல்....

அப்போது தோசையுடன் வந்த ரிஷி “இந்தா முறுகலான நெய் தோசை...” என அவன் சாதனாவிற்கு வைக்க வர....

“எனக்கு வேண்டாம்...” சாதனா மறுக்க....

“சும்மா சாப்பிடு...”

“அத்தைக்கு வைங்க...”

“அவங்களுக்கும் கொண்டு வரேன். நீ இதைச் சாப்பிடு.” என ரிஷி வற்புறுத்த...

“அவன் ஆசையா குடுக்கிறான் இல்ல.... சாப்பிடு சாதனா...” ஜோதி சொல்ல....

ஆசையாவா... இவனா எனச் சாதனா சந்தேகமாக ரிஷியை பார்த்தாள்.
 
சேச்சே ரிஷி நல்ல பையன்
சாப்பாடு விஷயத்தில் விளையாட
மாட்டான்
அவனே சொன்ன மாதிரி நெய் தோசைதான் கொண்டு வந்திருப்பான்
 
Last edited:
Top