Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 2 2

Advertisement

Admin

Admin
Member
“சரி நான் என் பையனை சொல்லி வைக்கிறேன். நீங்களும் உங்க பையன்கிட்ட சொல்லி வைங்க. இதை இதோட விட்டுடலாம். ஆனா...”

“என்ன ஆனா? சொல்லு சந்தானம்....”

“என் பொண்ணு அவ பேரை தான் இவங்க ரெண்டு பேரும் தேவை இல்லாம இழுத்து விட்டுடாங்க. அவ பாவம் வெகுளி. அவ காலேஜ் விட்டா வீடு... வீடு விட்டா காலேஜ்னு இருப்பா....”

“நாளைக்கு என்கிட்டே சம்பந்தம் பண்ண வரவங்க இதைப் பத்தி கேட்டா நான் என்ன சொல்வேன்?”

சந்தானம் கேட்பது நியாயமான கேள்வி தானே.... ராஜ்மோகன் திரும்பி ரிஷி வெற்றி இருவரையும் பார்த்தவர் “உங்க பிரச்சனைய உங்களுக்குள்ள வச்சுக்கணும். தேவையில்லாம வீட்டுப் பொம்பளைங்களை உங்க சண்டைக்குள்ள இழுக்கக் கூடாது.”

அவளை யாரு இழுத்தா.... அவ தானே நடுவுல வந்தா.... என ரிஷி வெற்றி இருவருமே நினைத்தனர். ஆனால் வெளியே ஒன்றும் சொல்லவில்லை.

“எனக்கும் தெரியும், சாதனா ரொம்ப நல்ல பொண்ணு.... நமக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். ஆனா இதுல சாதனா பேர் பத்திரிக்கையில வந்தது எனக்கும் வருத்தம் தான். எதாவது பண்ணலாம் சந்தானம்.” ராஜ்மோகன் நம்பிக்கையாகச் சொல்ல...

அவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவதே பெரிய விஷயம் என்பதால்... அதோடு தவறு அவர் பிள்ளைகள் மீதுதான். அதனால் சந்தானமும் அதோடு விட்டுவிட்டார்.

“யாரவது கேட்டா ரெண்டு பேரும் ஸ்கூல்ல இருந்து ப்ரண்ட்ஸ்னு சொல்லிடு.... ரெண்டு பேரும் கொடைக்கானல்ல ஒரே ஸ்கூல்ல தான படிச்சாங்க. அப்ப இருந்து ப்ரண்ட்ஸ்னு சொல்லிடலாம்.”

நண்பர்களாகவே இருக்கட்டும் ஆனால் நடு ராத்திரியில் இருவருக்கும் என்ன வேலை என்று கேட்டால்.... என்ன சொல்வது? என்ற கேள்வி இருவர் மனதிலும் இருந்தாலும்.... அதை வெளியே பேசிக்கொள்ள முடியாமல்.... தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இருவரும் கிளம்பினர்.

காயங்களோடு தன் வீட்டிற்கு வந்த அண்ணனுக்குச் சாதனாவே மருத்துவம் செய்தாள். அவன் காயங்களைச் சுத்தபடுத்தி மருந்திட்டவள் “ரிஷிக்கும் இவ்வளவு அடியா அண்ணா...” அவள் எதார்த்தமாகக் கேட்டு வைக்க....

“தெரிஞ்சு என்ன பண்ண போற? போய் அவனுக்கும் வைத்தியம் பண்ண போறியா...”

வெற்றி முறைத்துக்கொண்டே கேட்க... அவன் கோபத்தைப் பார்த்து சாதனாவிற்கு ச் சிரிப்புதான் வந்தது.

“சும்மா தான் கேட்டேன்.”

“நீ ஒன்னும் கேட்டுட வேண்டாம். நீ ஒன்னு புரிஞ்சிக்கோ சாதனா அவங்களும் நாமும் ஒன்னு சேர முடியாது. நீ தேவையில்லாம உன் மனசுல எந்த ஆசையும் வளர்த்துக்காத....”

“என் மனசுல எந்த ஆசையும் இல்லை....”

“இதை உன் வாய் தான் சொல்லுது, உன் மனசு சொல்லலை...”

“இதே அன்னைக்கு நாங்க அடிக்கப் பிளான் பண்ணது ரிஷி இல்லை வேற யாராவதா இருந்திருந்தா.... நீ என்ன பண்ணி இருப்ப?”

“நான் அப்பவும் சும்மா இருந்திருக்க மாட்டேன்.”

“கண்டிப்பா நீ சும்மா இருந்திருக்க மாட்ட... எனக்கும் அது தெரியும். ஆனா நீயே இப்படிக் கிளம்பி போய் இருப்பியா.....”

இல்லைதான், அவள் தந்தையிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்லி இருப்பாள். அவளாகவே இப்படிக் கிளம்பி சென்றிருக்க மாட்டாள். ரிஷி என்பதால் தான் அவளே கிளம்பி சென்றாள்.

உண்மையை ஒத்துக்கொள்ள முடியாமல் அவள் அமைதியாக இருக்க....

“அன்னைக்கு அவன் யாரை பார்க்க போனான். நேகாவை ! இவன் வெளிநாட்டில படிக்கும் போது... ஷூட்டிங் வந்த அவளை அங்க வச்சு பார்த்திருக்கான். அப்ப இருந்து ரெண்டு பேருக்கும் லவ்.... இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்.”

“வேற ஒருத்தியை அவன் லவ் பண்றான். உனக்கு அது நியாபகம் இருக்கட்டும்.”

இதைச் சொல்லிவிட்டு வெற்றி எழுந்து சென்று விட.... சாதனா எதோ யோசனையில் அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.

ரிஷி தான் அவளிடமே நேகாவை விரும்புகிறேன் எனச் சொல்லிவிட்டானே.... அப்படி இருந்தும் அவளுக்கு அவள் மனம் போகும் திசை புரியவில்லை....

மறுநாள் கல்லூரிக்கு சென்றவளை எல்லோரும் சூழ்ந்து கொண்டு விசாரிக்க.... “என் கார் ரிப்பேர் அவங்க லிப்ட் குடுத்தாங்க பா...” எதோ சொல்லி சமாளித்து விட்டு வந்தவளை, ஆழ்ந்து ஒரு பார்வை மட்டும் பார்த்த சத்யா... அமைதியாக அவனின் வேலைகளைக் கவனிக்க....

அவன் அருகில் வந்த சாதனா “நீ மட்டும் ஏன் பேசாம இருக்க?... நீயும் எதாவது கேளு....” என்றாள்.

“என்ன கேட்க சொல்ற? அவங்களுக்கு எல்லாம் உன்னைத் தெரியாது. அதனால கேட்கிறாங்க. எனக்குத் தான் தெரியுமே.... நீ எட்டாவதுல இருந்து ரிஷியை சைட் அடிச்சது.”

“சும்மா எதாவது சொல்லாத சத்யா....”

“மேடம், நானும் நீயும் ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ் தான் படிச்சோம் ஒகே வா... உன் ரீலை என்கிட்டே சுத்தாத.”

சத்யா எதவும் கேட்காமலே... சாதனாவே அவனிடம் அவள் ரிஷியை தேடி சென்றது, பின்பு நடந்தது எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.

“காதல்னு வந்துட்டா... படிச்சவங்க படிக்காதவங்க எல்லாம் ஒரே மாதிரி தான் நடந்துகிறீங்க இல்ல.... நைட் நேரம் அவனைத் தனியா தேடி போய் இருக்க... உன்னை என்ன சொல்றது?”

“டேய் ! நான் எப்படா அவனை லவ் பண்றேன்னு சொன்னேன்?”

“நீ பண்றது எல்லாம் பார்த்தா அப்படித்தான் இருக்கு.”

“இது தான் லவ்வா டா.... எனக்குத் தெரியலையே.....”

“ஆமாம், இப்ப தான் நீ டீன்ஏஜ் பாரு.... எது லவ்... லவ் இல்லைன்னு தெரியாம இருக்க.... மெடிசன்ல பீஜி பண்ற சாதனா.....”

“அறிவுக்கும் மனசுக்கும் சம்பந்தம் இல்லை சத்யா ...”

“பெரிய கண்டுபிடிப்பு தான்.”

சத்யா சொல்லிவிட்டு அவன் வேலையைப் பார்க்க..... சாதனாவின் நினைவு பின்னோக்கி சென்றது.

சாதனாவின் அம்மா இருந்தவரை.... அவள் வீட்டில் இருந்த தான் படித்தாள். அவள் அம்மா திடிரென்று தவறிவிட....... சந்தானம் அவளைக் கொடைக்கானலில் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்.

அவளுக்கு ஹாஸ்டல் செல்லவே விருப்பம் இல்லை..... புதிதாகப் பள்ளியில் சேர்ந்திருந்தால் நண்பர்களும் இல்லை... பள்ளி வளாகத்தில் தனியே தான் அமர்ந்திருப்பாள்.

ஒருமுறை சீனியர் மாணவன் ஒருவன், அவள் தனியாக இருப்பதைப் பார்த்து அவளிடம் தவறாக நடக்க முயல.... அப்போது அங்கே வந்த ரிஷி அவனை அடித்து விரட்டினான்.

பயத்தில் இருந்த சாதனா ரிஷி வந்ததும் தப்பித்தால் போதும் என்று ஓடி வந்துவிட்டாள். அதனால் ரிஷி அவளைச் சரியாகப் பார்த்திருக்கவில்லை.... ஆனால் சாதனாவின் மனதில் ரிஷியின் முகம் பதிந்து போய்விட்டது.

வெறும் எட்டாம் வகுப்புப் படிக்கிற சின்னப் பெண். அதுவும் தாயுமில்லாத நிலையில் மனதில் திடம் குறைந்திருந்த நேரம் அது... அந்த நேரம் ரிஷி செய்தது பேருதவியாக இருந்ததால்.... அவள் அவனை மறக்காமல் இருந்தாள்.

அதன் பிறகு தான் சத்யாவுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் அன்றிலிருந்து இன்று வரை இணைப்பிரியாத நண்பர்கள். பள்ளியில் தினமும் சாதனா ரிஷியை தேடி சென்று தூரத்தில் இருந்தே பார்த்து விட்டு வருவாள். அது சத்யாவிற்கும் தெரியும்.

ரிஷி பள்ளி படிப்பு முடிந்து. அங்கேயே கல்லூரியும் சேர்ந்து விட..... சாதனாவால் ரிஷியை தினமும் பார்க்க முடிந்து. அதன்பிறகு இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று விட்டனர்.

ரிஷி மேற்படிப்புக்கு வெளிநாடு சென்றுவிட....சாதனா மதுரையில் மருத்துவப் படிப்பு படித்தாள். ரிஷி வெளிநாட்டில் இருந்து திரும்ப வந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது.


அவன் திரும்பி வந்ததில் இருந்து அவனுக்கு வெற்றிக்கும் இடையில் போட்டி ஆரம்பித்தது. வெற்றி தினமும் திட்டுவதற்காவது ரிஷியை பற்றிப் பேசி விடுவான்.

சில நாட்களுக்கு முன்பு தான். சாதனாவிற்கு ரிஷியின் காதல் தெரிய வந்தது. அவள் அப்போது எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை...

இன்னும் அவன் மேல் இருப்பது நன்றி உணர்ச்சியா.... ஈர்ப்பா.... அல்லது காதலா எனத் தெரியாமல் தான் இருந்தாள்.

 
ரிஷியோட லவ்வைப் பத்தி யூவு டோன்ட் ஒர்ரி, சாதனா
அந்த நேகா கூஜால்லாம் ஒரு ஆளா?
அவளும் அவங்கம்மாவும் பணம் புகழ்ன்னு ஆசைப்படும் பேய்கள்
 
Last edited:
Top