Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 5 2

Advertisement

Admin

Admin
Member
“அத்தை அப்படிப் போட சொல்லி இருப்பாங்க. எங்க அம்மா இருந்திருந்தா எனக்கும் தான் எல்லாத்தையும் போட்டு விட்டிருப்பாங்க.” இயல்பாகச் சொல்வது போல் இருந்தாலும், அவள் தன் அம்மா இல்லாததை நினைத்து வருந்துகிறாள் என்று அனைவருக்குமே புரிந்தது.

“அம்மா இல்லாம கஷ்ட்டமா இருக்கா...” சத்யா கேட்க....

“ரொம்பவே... அப்படிப் பண்ணு இப்படிப் பண்ணுன்னு ஆளுக்கு ஒன்னு சொல்றாங்க. யாரு சொல்றதை கேட்கிறதுன்னே தெரியலை....”

“அம்மா இருந்திருந்தா நான் வேற யார் பேச்சையும் கேட்க வேண்டியது இல்லை இல்ல....” இதைச் சொல்லும் போதே சாதனாவிற்கு த் தொண்டை அடைத்தது.

“விடு சரி ஆகிடும். உனக்குக் கல்யாணம் ஆன பிறகு உன் மாமியார் இருக்காங்க, அவங்க பார்த்துப்பாங்க. நீ கவலை இல்லாம இருக்கலாம்.” சத்யா சொல்ல... சாதனா அதை ஏற்றுக்கொண்டு தலையசைத்தாள்.

சிறிது நேரம் சென்று “டைம் ஆகிடுச்சு.... ஹாஸ்பிடல் போகணும் சாதனா.... நாங்க கிளம்புறோம்.” சத்யா சொல்ல.... மற்றவர்களும் எழுந்து கொண்டனர்.

“சரி சாப்டிட்டு போங்க...” சாதனா சொன்னதும்,

“கண்டிப்பா அதுக்குத் தான வந்ததே.... சாப்பாடு நல்லா ரிச்சா இருக்குமே மிஸ் பண்ணுவோமா....” என்ற தன் தோழியின் முதுகில் சிரித்தபடி அடித்த சாதனா அவர்களை வழியனுப்பினாள்.

அவர்கள் சென்றதும் எங்கே செல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.... மேடைக்குச் செல்வதா... அல்லது அவளுடைய அறைக்குச் செல்வதா என்று தெரியவில்லை.... ஒரு நொடி யோசித்தவள், அங்கிருந்து எழுந்து மெதுவாக வெளிவாயிலை நோக்கி நடந்தாள்.
அவன் விரும்பவில்லை என்றாலும் ரிஷியின் பார்வை அடிக்கடி சாதனா என்ன செய்கிறாள் என்று கவனித்துக் கொண்டு தான் இருந்தது.

இவ எங்கப் போறா என்பது போல் அவன் பார்த்திருக்க... அப்போது ஜோதியும் சாதனாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.

ரிஷியையும் சாதனாவையும் மேடைக்கு அழைப்போமா என அவர் நினைக்கும் போதே.... அதுவரை நேராகச் சென்று கொண்டிருந்தவள் திரும்பி ரிஷியிடம் சென்றாள்.

“நான் இங்க உட்கார்ந்துகட்டுமா....” அவள் ரிஷியை பார்த்து கேட்க.... உடனே பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவன் நண்பன் எழுந்து அவள் உட்கார இடம் விட....

“நான் வேண்டாம்னு சொன்னா போய்ட போறியா என்ன? இப்ப எல்லோரும் நம்மளை தான் பார்கிறாங்க. ரொம்ப சீன் போடாம உட்காரு....” என்றான் ரிஷி.

அவன் அருகில் உட்கார்ந்தவள் “சிம்பிள்ளா உட்காருன்னு சொல்ல வேண்டியது தான.... ஹப்பா எவ்வளவு பேசுறான். பாவம் டி சாதனா நீ....” என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

சாதனா ரிஷியிடம் சென்று அமரவும், ஜோதியும் நிம்மதியாக அவர் வேலையைப் பார்க்க சென்றார்.

ரிஷியின் நண்பர்கள் அங்கே இருப்பதா... போவதா என்பது போல் பார்க்க..... “நீங்க ஏன்டா நிற்கறீங்க? உட்காருங்க டா...” ரிஷி சொன்னதும் அவர்களும் அமர்ந்தனர்.

சாதனா அவர்களைப் பார்த்து புன்னகைத்தவள் “இவங்க எல்லாம் உங்க ப்ரண்ட்ஸா...” என்றாள் ரிஷியை பார்த்து.

“பார்த்தா எப்படித் தெரியுது....” ரிஷி பதில் கேள்வி கேட்க....

அப்படிக் கேட்டால் அவன் நண்பர்களை அவளுக்கு அறிமுகப்படுத்தாவான் என நினைத்துச் சாதனா கேட்க.... அவன் திரும்ப இப்படிப் பதில் கேள்வி கேட்டால்.... அவள் என்ன சொல்லுவாள்?

“சும்மா தான் கேட்டேன்.” என்றாள்.

அவர்கள் பேசுவதைக் கேட்ட ரிஷியின் நண்பன் தீனா... அவனே தன் மற்ற நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தான்.

“நான் தீனா, இவன் மகேஷ், இவன் சுந்தரம், இவன் குரு. நாங்க எல்லாம் எப்பவும் ஒண்ணா தான் இருப்போம்.” தீனா சொல்ல.... சாதனா அவர்களைப் பற்றி அவர்கள் குடும்பத்தைப் பற்றி எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டாள்.

ஜோதி சென்று தன் கணவரிடம் ரிஷியையும், சாதனாவையும் மேடைக்கு அழைத்து நிற்க வைப்போமா எனக் கேட்டதற்கு,

“வேண்டாம், நானே ரிஷி எந்த நேரம் என்ன பண்ணுவான்னு தெரியாம இருக்கேன். நீ வேற அவனைப் போய்த் தூண்டி விடாத.... இப்ப அவனும் சாதனாவும் சேர்ந்து தான உட்கார்ந்திருக்காங்க அப்படியே இருக்கட்டும் விட்டுட்டு...” என்றார்.

“பேரு தான் பெரிய அரசியல்வாதி... ஆனா உங்க பையனுக்கு இப்படிப் பயப்படுறீங்க.” ஜோதி கேலி செய்ய....

“நீ தானே அப்படி ஒரு பையனை பெத்து வச்சிருக்க....நான் வேற என்ன பண்றது?” என்றபடி ராஜ்மோகன் அங்கிருந்து சென்றார்.

உணவு அருந்திவிட்டு வந்த உறவினர்களும் நண்பர்களும் ரிஷி சாதனாவிடம் சொல்லிக்கொண்டே சென்றனர்.

“ஏன் இந்த ஜோடி மட்டும் கீழ இருக்காங்க. இவங்களையும் மேடை ஏத்தி விட வேண்டியது தான....” உறவினர் ஒருவர் கேட்க....

“வேண்டாம் ரெண்டு ஜோடியும் சேர்ந்து நின்னா.... கண்ணு படும். இப்படியே இருக்கட்டும்.” அமிர்தா பாட்டி சொல்ல... மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் கிளம்பி சென்ற பின்னரே.... இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உணவு அருந்த சென்றனர்.

“சரி அப்ப நாங்களும் கிளம்புறோம்.” ரிஷி எதோ யார் வீட்டு விழாவுக்கோ வந்தது போல் கிளம்ப....

“என்ன அதுக்குள்ள கிளம்புறீங்க சாப்பிடலையா....” சாதனா கேட்க....

“வந்ததுக்கு ரெண்டு மணி நேரம் நல்லா பொழுது போச்சு.... சாப்பாடு வேற போடுறாங்களா.... சரி இங்கயே சாப்பிடுவோம்.” என்ற ரிஷி தன் நண்பர்களைப் பார்த்து.
“இங்கயே சாப்பிடலாமா டா....” என்றதும், அவன் நண்பர்கள் சாதனாவை சங்கடமாகப் பார்க்க....

இவன் என்ன இப்படிப் பேசுறான் என்பது போல்... அவள் குழம்பிப்போய் இருந்தாள்.

“என்ன இங்கயே நிற்கிற... சாப்பாடு நம்மளை தேடி வராது மா.... நாம தான் போகணும்.” என்றபடி ரிஷி உணவு கூடத்தை நோக்கி நடக்க... சாதனாவும் அவனுடன் சென்றாள்.

இவர்கள் உள்ளே சென்றபோது.... அங்கே ஏற்கனவே வெற்றியும் ப்ரீதாவும் இருந்தனர். அவர்கள் அருகில் இல்லாமல் எதிர்பக்கம் ரிஷி செல்ல... சாதனாவும் அவனுடன் சென்றாள்.

இருவரும் அருகருகே அமர.... ரிஷியின் மறுபக்கம் அவன் நண்பர்கள் உட்கார.... “நான் என் மருமகளோட உட்கார்ந்துகிறேன்.” என்றபடி சாதனாவின் அருகே ஜோதி உட்கார்ந்தார். அவருக்கு அடுத்து உட்கார்ந்த ராஜ்மோகன், தனது அருகே சந்தானத்தை உட்கார வைத்துக்கொண்டார்.

ஜோதி சாதனாவோடு பேசிக்கொண்டே சாப்பிட.... ரிஷி எதிரில் இருந்த வெற்றியை பார்த்தான். வெற்றி ப்ரீத்தாவுடன் எதோ பேசி சிரித்தபடி சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

இலையில் என்ன இருக்கிறது என்பது கூட அவனுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.... அவன் கவனமெல்லாம் ப்ரீதாவிடமே இருந்தது. அதைச் சாதனாவும் கவனித்தாள். அவளுக்குத் தன் அண்ணனை இப்படிப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

ஆனால் ரிஷியோ எதிர்மறையாக நினைத்தான். என்னோட காதலை கொன்னுட்டு.. இவன் மட்டும் சதோஷமா இருக்கிறதா....என மனதிற்குள் வெம்பியபடி இருந்தான்.

அவனுக்கு எரிச்சலாக வந்தது. அவன் பார்வையைத் தன் தாயின் பக்கம் திருப்பியவன் “அம்மா, இது என்னமா சாப்பாடு. உங்க வீட்டுகாருகிட்ட சொல்லி கல்யாணத்துக்காவது நல்ல சாப்பாடு போட சொல்லுங்க.” எனத் தன் தாயை வம்பிழுக்க....

“ம்ம்... இந்தச் சாப்பாடுக்கு என்ன நல்லா தான் இருக்கு.” என்றார் அவர்.

“அப்ப நீங்களே சாப்பிடுங்க.” என்றபடி அவன் தனது இலையை மூடிவிட.... அவன் சிறிது கூடச் சாப்பிடவில்லை... சாதனாவிற்கு அதைப் பார்த்து வருத்தமாக இருந்தது.

அங்கிருந்து எழுந்துகொள்ள நினைத்த ரிஷி தன் நண்பர்களுக்காக அங்கேயே அமர்ந்து இருந்தான். உணவை வீணாக்குவது சாதனாவிற்கு ச் சுத்தமாகப் பிடிக்காது. அதனால் அவள் இலையில் இருந்தததை வேகமாக விழுங்கி வைத்தாள்.

தன் நண்பர்கள் உணவு அருந்தி முடித்ததும் ரிஷி அங்கிருந்து எழுந்து கொண்டான். கை கழுவும் போது....அவன் விரலில் இருந்த மோதிரம் கண்ணில் பட.... தன் பின்னே கைகழுவ வந்த சாதனா கைகழுவும் வரை காத்திருந்தவன், அவள் வந்ததும் “இந்தா இதை வச்சுக்கோ...” என அவளின் கையில் அதைத் திணித்து விட்டு அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டான்.

என்னது இது என்பது போல் தன் கையைத் திறந்து பார்த்தவள், அதில் அவள் ரிஷிக்கு போட்ட நிச்சய மோதிரத்தை பார்த்ததும் அதிர்ச்சியில் அதே இடத்தில் நின்றுவிட்டாள்.

ஜோதி யாருடனோ பேசிக்கொண்டே வருவதைப் பார்த்ததும், அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

நிச்சய மோதிரத்தை திருப்பிக் கொடுத்தால் என்ன அர்த்தம்? இந்தத் திருமணம் நடக்குமா நடக்காதா.... ஏன் இப்படிச் செஞ்சாங்க? எனக் குழப்பமே மிஞ்சியது.

இந்தத் திருமணம் நடக்காதோ என நினைக்கும் போதே... கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
 
மோதிரம் கழற்றி கொடுத்து எவ்வளவு வருத்தம் பட வைத்து விட்டான்....
சாதனா பாவம்....
யாரிடமும் சொல்ல கூட முடியாமல்....
எப்படி தான் தாங்குவாளோ.....

Very interesting...
 
Last edited:
Top