Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 6 1

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 6


சாதனா எதையும் யாரிடமும் சொல்ல முடியாமல் மனதிற்குள் வைத்து புழுங்கியபடி இருந்தாள். ரிஷி நிச்சய மோதிரத்தை திருப்பிக் கொடுத்ததற்கு என்ன அர்த்தம் என்றே அவளுக்கு விளங்கவில்லை....

தனக்குத் திருமணமாகப்போகிறது என்று மனதில் துளி கூடச் சந்தோஷமில்லை. ஆனால் அவளுக்கு அப்படியே நேர்மாறாக வெற்றி இருந்தான்.

அவன் காதோடு எப்போதும் கைப்பேசி இருந்தது. சாப்பிடும் போது கூடப் பேசிக்கொண்டே தான் சாப்பிடுவான். நிச்சயம் முடிந்து வந்த அன்றிலிருந்து இப்படித்தான்.

ப்ரீதாவிற்கு வெற்றியை மிகவும் பிடித்து விட.... வெற்றி அவளை முதலில் அழைக்க வேண்டும் என்று எல்லாம் அவள் காத்திருக்கவில்லை. அவளே அழைத்துப் பேச ஆரம்பித்தாள்.

வெற்றி கைப்பேசியை எடுக்கத் தாமதம் ஆனாலோ.... அல்லது எதாவது வேலையில் எடுக்கவில்லை என்றாலோ.... உடனே கோபித்துக் கொள்வாள்.

ஒரு ஆண்னிடம் அதிக உரிமை பாராட்டுவது தாயும் தாரமும் தான். அவன் தாய் அவனது இள வயதில் இறந்து விட.... இப்போது தாய் போல் தாங்கும் ப்ரீத்தாவிடம் வெற்றி விட்டுக்கொடுத்தே போவான். அதோடு அவள் அவனிடம் உரிமையாகப் பழகுவது அவனுக்கு மிகவும் பிடித்தது.

எப்போதும் உர்ரென்று இருக்கும் அண்ணன் சிரித்த முகமாக வளைய வருவது சாதனாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. தனக்காக அண்ணன் திருமணத்திற்குச் சம்மதித்தானே... ப்ரீதாவிடம் எப்படி நடந்து கொள்வானோ என்ற கவலை அவளுக்கு மனதில் இருந்தது. ஆனால் இப்போது வெற்றியை பார்க்கும் போது நிம்மதியாக இருந்தது.

வெற்றி கைபேசியில் பேசியபடியே வந்து சாப்பிட அமர.... சாதனா புன்னகையுடன் உணவை பரிமாறினாள். அன்று சந்தானம் இல்லை.... கல்யாண வேலையாக வெளியே சென்றிருந்தார்.

தங்கையின் சிரிப்பை பார்த்த வெற்றி, என்ன என்று அவளிடம் ஜாடையாகக் கேட்க.... சாதனா ஒன்றும் இல்லை என்று தலையசைக்க....

“ப்ரீதா நான் சாப்டிட்டு உனக்குப் போன் பண்றேன்.” வெற்றி கைபேசியில் சொல்ல....

“சீக்கிரம் சாப்டிட்டு பண்ணனும்... இல்லைனா நானே பண்ணிடுவேன்.” என்று மிரட்டி விட்டே ப்ரீதா போன்னை வைத்தாள்.

“என்ன உனக்கு அப்படிச் சிரிப்பு?” வெற்றி சாதனாவை பார்த்து கேட்க....

“எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்ட....அது தான் நினைச்சேன் சிரிப்பு வந்தது.”

தங்கையின் சிரிப்பு அண்ணனையும் தொற்றிக்கொள்ள.....

“ஏய் ! உதை வாங்க போற.... என்னைத் தான் நீ நோட் பண்ணிட்டு இருக்கியா....நீயும் ரிஷியோட பேச வேண்டியது தான...” வெற்றிச் சொன்னதும்,

அவன் தானே பேசிட்டு தான் மறுவேலை பார்ப்பான். கல்யாணமே நடக்குமான்னு தெரியலை....என மனதிற்குள் நினைத்தவள், வெளியே அண்ணனை பார்த்து சிரித்து வைத்தாள்.

“எப்படின்னு எனக்கே தெரியலை சாதனா? ரிஷியோட தங்கையை எனக்குப் பிடிக்கவே பிடிக்காதுன்னு தான் நினைச்சேன். ஆனா ப்ரீதா ரிஷி மாதிரி இல்லை... என்கிட்டே ரொம்ப ஒட்டிகிட்டா....” வெற்றிச் சொன்னதும்,

“அவளுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ அவளை எப்பவும் நல்லா வச்சுக்கணும்.” என்றாள் சாதனா.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே ப்ரீதா வெற்றியை அழைத்து விட்டாள்.

“நான் இப்ப எடுக்கலைன்னா மேடம் ரொம்ப டென்ஷன் ஆகிடுவாங்க.” என்றபடி வெற்றி அலைபேசியை எடுக்க... அவனுக்குத் தனிமை கொடுத்து சாதனா அங்கிருந்து சென்றாள்.

தன் அறைக்குள் வந்த சாதனா எதற்கும் தானும் ரிஷியை அழைத்துத் தான் பார்ப்போமே என நினைத்து, அவன் செல்லுக்கு அழைக்க.... அந்தப் பக்கம் ரிஷி அழைப்பை எடுக்காமல் துண்டித்தான்.

சுத்தம்... தெரிஞ்ச கதை தானே... என நினைத்த சாதனாவிற்கு யோசிக்க யோசிக்கக் குழப்பமே மிஞ்சியது. இந்தத் திருமணம் பிடிக்கவில்லை என ரிஷி வெளிப்படையாகவே காட்டிய பிறகு தான் அவனைத் திருமணம் செய்வது நன்றாக இருக்குமா....

சாதனாவிற்கு த் திருமணத்தில் பெரிதாக விருப்பம் இல்லை. ரிஷி தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் மறுக்கத் தோன்றவில்லை.... அவன் இன்னொரு பெண்ணை விரும்புகிறான் எனத் தெரிந்தும், தான் இந்தத் திருமணதிற்குச் சம்மதம் சொன்னது தவறோ என இப்போது தோன்றியது.

அவள் இப்படிக் குழப்பத்துடனே இருக்க... மறுநாள் அவளைப் பார்க்க ஜோதி வந்தார். அவர் வந்த போது... வீட்டில் வேறு யாரும் இல்லை. அதனால் அவருடன் சாதனாவால் மனம் விட்டு பேச முடிந்தது.

“இந்த வாரம் காஞ்சிபுரத்துல இருந்து பட்டு புடவைங்க நம்ம வீட்டுக்கு வருது. நீ அங்க வந்திடு சாதனா.... நாம சேர்ந்து கல்யாணத்துக்கும், வரவேற்புக்கும் எடுக்கலாம். வரும் போது அண்ணனையும் கூடிட்டு வா....”

அவர் சொல்ல சம்மதமாகத் தலையசைத்த சாதனாவின் முகத்தில் துளி கூடச் சந்தோஷமே இல்லை.... அதைக் கவனித்த ஜோதி “ஏன் சாதனா ஒருமாதிரி இருக்க.... உடம்பு முடியலையா....” என்றதும், எழுந்து உள்ளே சென்றவள், திரும்பி வந்து அவரிடம் தன் கையை விரித்துக் காட்ட.... அதில் ரிஷியின் மோதிரம் இருந்தது.

“இது எப்படி உன்கிட்ட வந்தது?”

“நிச்சயத்து அன்னைக்குப் போகும் போது... அவங்க தான் அத்தை என் கையில கொடுத்துட்டு போய்ட்டாங்க. இதுக்கு என்ன அர்த்தம் அத்தை?”

“அவன் தான் எதோ கிறுக்கன் மாதிரி பண்ணி இருக்கான்னா.... நீ அதுக்கு விளக்கம் வேற கேட்கிற.... நீ இதெல்லாம் எதுவும் மனசுல வச்சுக்காத சாதனா....”

“அவருக்கு இந்தக் கல்யாணத்துல சுத்தமா இஷ்ட்டமே இல்லை.... இந்தக் கல்யாணம் தேவையா.... பேசாம அண்ணனுக்கும் ப்ரீதவுக்கும் மட்டும் கல்யாணம் பண்ணுங்க.” சாதனா சொன்னதற்கு,

“உனக்கு அவனைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்ட்டம் இல்லையா....” என ஜோதி கேட்க....

“எனக்கு இஷ்ட்டம் தான். ஆனா அவங்களுக்கு இஷ்ட்டம் இல்லையே.... இதெல்லாம் என்னோட தப்பு தான். நான் மட்டும் அன்னைக்கு அவங்களைத் தேடி போகலைன்னா இதெல்லாம் நடந்திருக்காது.” சாதனா தன்னையே வருத்திக்கொள்ள....

“நீ அப்படியெல்லாம் நினைக்காத சாதனா... நீ உண்மையிலேயே அவனுக்கு நல்லது தான் பண்ணி இருக்க...” ஜோதி உறுதியாகச் சொல்ல... சாதனா அவரைப் புரியாமல் பார்த்தார்.

“ரிஷி ஒரு பெண்ணை அதுவும் நடிகையை விரும்புறான்னு தெரிஞ்சதும், நான் அவளை நேர்ல போய்ப் பார்த்தேன்.”

“ரிஷியோட அம்மான்னு தெரிஞ்சும், அவ என் முன்னாடி ஒரு சின்ன டிராயர்தான் போட்டுட்டு வந்து உட்கார்ந்தா.... அதுவும் எவ்வளவு திமிரா பேசினா தெரியுமா... கொஞ்சம் கூட மரியாதையே இல்லை....”

“சினிமாவுல அப்படி இப்படி நடிக்கிறாங்க அதைக் கூடப் பொறுத்துக்கலாம். ஆனா வீட்ல அதுவும் வருங்கால மாமியார்ன்னு தெரிஞ்சும் என் முன்னாடி அப்படி நடந்துக்கலாமா....”

“அவ ரிஷியை உண்மையா காதலிக்கலை.... காதலிச்சு இருந்தா.... என்கிட்டே மரியாதையா நடந்திருப்பா....”

“எனக்கு மனசு விட்டு போச்சு... நான் அவளைப் போய்ப் பார்த்ததை யார்கிட்டயும் சொல்லலை.... ப்ரீதாவிற்கு மட்டும் தான் தெரியும். அவளும் என்னோட வந்திருந்தா.... நேகா ரிஷிகிட்ட சொல்வான்னு நினைச்சேன் அவளும் சொல்லலை....”

“அவ ரிஷி முன்னாடி எப்படி நடந்துப்பாளோ தெரியலை.... இவன் குணத்துக்கும் அவ குணத்துக்கும் சுத்தமா ஒத்து வராது. கல்யாணம் பண்ணாலும் நாளைக்கு விவகாரத்துல போய்த் தான் நிற்பாங்க.”

“என்ன டா செய்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்ப தான் நீ வந்த.... எல்லாமே மாறுச்சு. இப்ப சொல்லு இந்தக் கல்யாணம் நிக்கனுமா....”

“நீங்க சொல்றது சரிதான் அத்தை. ஆனா ரிஷி, அவங்களுக்கு விருப்பம் இல்லையே....”

“உனக்குப் புரியிற மாதிரியே சொல்றேன். ஒரு குழந்தை உடம்பு சரியில்லாம உன்கிட்ட வந்தா... நீ என்ன பண்ணுவ?.... ஊசி போடுவ தான.... இல்லை அந்தக் குழந்தைகிட்ட அதோட விருப்பத்தைக் கேட்டுட்டு இருப்பியா.....அந்த குழந்தை நல்லா ஆகனும்னா ஊசி போட்டு தான ஆகணும். அது போலத் தான் இதுவும். நாம ரிஷியோட நல்லதுக்குத் தான் செய்றோம்.”

“இன்னைக்கு இல்லைனாலும் ஒருநாள் அவன் இதைப் புரிஞ்சிப்பான்.”

ஜோதி பேசி முடித்ததும் சாதனா சிரித்து விட்டாள். “நல்லா பேசுறீங்க அத்தை. மாமா இல்லை நீங்க தான் அரசியலுக்கு வந்திருக்கணும். உங்க பேச்சை கேட்டா எதிர்கட்சி எல்லாம் தெறிச்சு ஓடிடுவாங்க.”

“இதை உங்க மாமாகிட்ட சொல்லு...அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.” சிரித்துக்கொண்டே சொன்ன ஜோதி.... எழுந்து விடைபெற.... சாதனாவும் அவரைத் தெளிந்த மனதுடனே அனுப்பி வைத்தாள்.

இதுவரை ரிஷிக்கு விருப்பம் இல்லாத திருமணம் செய்ய வேண்டுமா என்ற கவலையில் இருந்த சாதனாவிற்கு, ஜோதி வந்து இந்தத் திருமணம் நடப்பது நல்லதுக்குத்தான் என்றதும், மனம் சந்தோஷ கும்மாலமிட்டது.

சாதனாவும் ஜோதியும் எதோ ரிஷியை நேகாவிடம் இருந்து காப்பதற்காகவே இந்தத் திருமணம் என்பது போல் நினைக்க.... ஆனால் இது புரிய வேண்டியவனுக்குப் புரிய வேண்டுமே......

அந்த வார ஞாயிற்றுக் கிழமை வெற்றியும் சாதனாவும் தங்கள் வருங்கால மாமியார் வீட்டுக்கு சென்றனர். சாதனா கூடச் சீக்கிரம் கிளம்பி விட்டாள். ஆனால் வெற்றி கிளம்புவதற்குதான் அதிக நேரம் எடுத்துக்கொண்டான்.

தயார் ஆகி வந்த தன் அண்ணனை பார்த்த சாதனா “கலக்குற அண்ணா....” எனக் கேலி செய்ய.... வெற்றி அசடு வழிந்தான்.

“உங்க அண்ணன் இப்படி மாறுவான்னு நான் கூட எதிர்பார்க்கலை....” சந்தானமும் தன் மகளுடன் கேலி செய்ய.....

“அப்பா நீங்களுமா....” வெற்றி பொய்யாகக் கோபிக்க....
“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா.... நீ எதுவும் நினைச்சுக்காத... எனக்குத் தான் உங்க அம்மாவோட கடைசிவரை வாழ கொடுத்து வைக்கலை.... என் பிள்ளைங்க இப்ப போல எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.”

சந்தானம் பேசியது இருவருக்கும் தங்கள் அன்னையின் நினைவை தூண்டி விட.... இருவரின் முகமும் வாடியது. அதைக் கவனித்த சந்தானம் “சரி... சரி... நல்ல நேரத்தில கிளம்புங்க. அவங்க வீட்ல உங்களுக்காகக் காத்திருப்பாங்க.” என்று இருவரையும் கிளப்பி அனுப்பி வைத்தார்.

வெற்றி நிச்சயத்தன்று ப்ரீதாவை சந்தித்தது. பிறகு இன்று தான் நேரில் பார்க்க போகிறான். அதனால் மிகவும் ஆவலாக இருந்தான்.

சாதனாவிற்கு மனதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.... அவள் வருவது தெரிந்தால் ரிஷி அங்கே இருக்கக் கூட மாட்டான் என்று நினைத்தாள்.

இவர்கள் சென்ற போது... ராஜ்மோகன் வாசலுக்கே வந்து இருவரையும் வரவேற்று அழைத்துச் சென்றார்.
உள்ளே நுழைந்தவர்களை, “வாங்க மாப்பிள்ளை... வா மா சாதனா....” என ஜோதியும் அவர் பங்குக்கு வரவேற்க.... இவர்கள் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்ததும், ப்ரீதா கையில் பழச்சாறு கொண்டு வந்தாள்.

ராஜ்மோகனோடு பேசிக்கொண்டிருந்த வெற்றி ப்ரீதாவை பார்த்ததும் புன்னகைக்க.... அவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாக இருந்தது. அதனால் அவனைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.

அதைப் பார்த்து வெற்றியின் புன்னகை மேலும் விரிந்தது. அவன் கையில் பழசாரை எடுத்துக்கொள்ள.... தானும் எடுத்துக்கொண்ட சாதனா ப்ரீதாவை தன் அருகிலேயே உட்கார வைத்துக்கொண்டாள்.
 
Top