Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 9

Admin

Admin
Member


பகுதி – 9

ரிஷியும் சாதனாவும் வீடு வந்து சேர்ந்த போது... மாலை நான்கு மணி ஆகிவிட்டது. உறவினர்கள் அனைவரும் கிளம்பிக் கொண்டு இருந்தனர்.


“நீங்க வேணா கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுத்திட்டு வாங்க...” உறவினர்கள் கிளம்பியதும், ரிஷி சாதனா இருவரையும் பார்த்து ஜோதி சொல்ல.... சரியென்று இருவரும் தங்கள் அறைக்குச் சென்றனர்.

ரிஷி சென்று கட்டிலில் படுத்து விட.... சாதனா டிரெஸ்ஸிங் டேபிள் முன்பு அமர்ந்து நகைகளைக் கழட்டிக் கொண்டே... ஒரு பாடலை மெதுவாகப் பாடிக்கொண்டு இருந்தாள்.

நெற்றியில் கைவைத்து கண்மூடி படுத்திருந்த ரிஷி “கொஞ்சம் சத்தமா தான் பாடேன்.” என்றான்.

அவள் அவனைத் திரும்பி பார்க்க... அப்போதும் அவன் கண் மூடி தான் படுத்திருந்தான்.

சாதனா எழுந்து கட்டிலுக்கு வந்தவள், ரிஷியின் அருகில் முழங்காலைக் கட்டிக்கொண்டு கொண்டு அமர்ந்தாள்.

ரிஷி அவள் என்ன செய்கிறாள் என லேசாக விழிகளைத் திறந்து பார்த்தவன், அவள் தன் அருகில் அமர்ந்திருப்பதைப் பார்த்து “ம்ம்... பாடு...” என்றான்.

பாட மாட்டேன் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் சாதனா பாட ஆரம்பித்தாள்.

“ஹ்ம்ம்ம் ...ஹ்ஹ்ஹ்ம் ..ஹ்ம்ம்ம் ..ஹ்ம்ம் ...
ஹ்ம்ம்ம் ...ஹ்ஹ்ஹ்ம் ..ஹ்ம்ம்ம் ..ஹ்ம்ம் ...

உன் சிரிப்பினில்
உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக

உன் இமைகளின்
கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

ஹ்ம்ம் ..இன்று நேற்று
என்று இல்லை
என் இந்த நிலை

ஹ்ம்ம் ..உன்னை கண்ட
நாளிளின்றே
நான் செய்யும் பிழை”

சாதனாவிற்கு மிகவும் இனிமையான குரல் என்று சொல்ல முடியாது. அதே சமயம் கேட்க முடியாதபடியும் இல்லை.... அவள் நன்றாகத் தான் பாடினாள். ஆனால் வேண்டுமென்றே ரிஷி அவளை வம்பிழுத்தான்.

“கதவு சாத்தி இருக்கா சாதனா... உள்ள கழுதை வந்திட போகுது.”

“ம்ம்.... ஒரு கழுதை இருக்கும் போது... இன்னொன்னு வராது ரிஷி.”

“ஓ... நீ இங்க இருக்கும் போது வராது தான்.” என்றான் அவனும் விடாமல்...

“அதை விடுங்க.... பாட்டு உங்களுக்குப் பிடிச்சிருந்ததா...”

“வேற பாடு....” ரிஷி சொல்ல....

“என் கண்ணழகா கால் அழகா
பொன் அழகா பெண் அழகா
எங்கேயோ தேடிச் செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்துக் கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உன்னை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உன்னை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி”


“என்ன பாட்டெல்லாம் ஒரு மார்கமா இருக்கு...”

“உங்களுக்குத் தான் அப்படித் தோணுது....இதெல்லாம் நல்ல பாட்டு தான். ஒரு மார்கமான பாட்டுன்னா என்ன தெரியுமா....” ரிஷியிடம் கேட்ட சாதனா அடுத்தப் பாடலை பாட ஆரம்பித்தாள்.

“ஹிம்ம்ம்....ஹும்ஹீம்...ஹிம்ம்ம்....
ஹும்ஹும்.. இம்ஹும்
சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி தொடங்கும்போது...ஹோ
பனி ராத்திரி ஓ...ஓ.....பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ...ஓ......புது மாதிரி
விடிய விடிய சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி….”

அவள் கிறக்கமான குரலில் பாட.... ரிஷிக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை....

“நீ இன்னைக்கு ஒரு மார்கமா தான் இருக்க....” என்றான் புன்னகையுடன்.

நான் மட்டும் அப்படி இருந்து என்ன ஆகப்போகுது என மனதிற்குள் நினைத்தவள், ரிஷியை பார்த்துக் கஷ்ட்டப்பட்டுச் சிரித்து வைத்தாள்.

“பரவாயில்லை நல்லா தான் பாடுற... தூக்கம் வரலைன்னா உன்னைப் பாட வச்சு கேட்கலாம்.”

ரிஷி சொன்னதைக் கேட்ட சாதனா, எல்லாம் நேரம்... இவன்கிட்ட போய்... நான் ரொமாண்டிக்கா பாடினேன் பாரு என்னைச் சொல்லணும் என நினைத்தவள், எழுந்து அதே அறையில் இருந்த உடை மாற்றும் பகுதிக்கு சென்று கட்டி இருந்த பட்டுப்புடவையைக் கழட்டிவிட்டு, கீழே போகும் போது மாற்றிக்கொள்ளலாம் என நினைத்து, இரவு உடையை அணிந்து கொண்டு வந்தாள்.

அவள் வருவதற்குள் ரிஷி உறங்கி இருந்தான். அவன் படுத்திருந்த கட்டிலில் படுக்கச் சாதனாவிற்கு த் தயக்கமாக இருந்தது.

காலையில அவன் உன் மேலேயே படுத்துட்டான். நீ அவன் பக்கத்தில படுத்தா என்ன என நினைத்தவள், அவன் அருகில் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

படுத்த சிறிது நேரத்திலேயே நன்றாக உறங்கியும் விட்டாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை யாரோ பிடித்து உலுக்க... கஷ்ட்டப்பட்டுக் கண் திறந்தவள், அவளை உலுக்கிக் கொண்டு இருந்தது ரிஷி எனத் தெரிந்ததும் எழுந்து அமர்ந்தாள்.

“ஹப்பா.... எவ்வளவு நேரமா எழுப்புறேன். சரியான கும்பகர்ணி.” என்றவன் “மணி என்ன தெரியுமா... ஏழு. அம்மா போன் பண்ணாங்க. உன்னைக் கீழ வர சொன்னாங்க.” என்றான்.

சாதனாவிற்கு அப்போதும் தூக்கம் தெளியவில்லை.... அவள் உட்கார்ந்தபடியே உறங்க...

“சாதனா...” ரிஷி அதட்டலாக அழைக்க....

“எனக்கு ரொம்பத் தூக்கமா வருது. இப்ப என்னால புடவை எல்லாம் கட்டிட்டு கீழ போக முடியாது.” என்றாள் அலுப்பாக.

“சரி... புடவை வேண்டாம். சுடிதார் போட்டுட்டு போ....” என்றான்.

அவள் குளியல் அறைக்குள் சென்று முகம் கழுவி வந்த போது... ரிஷி வெளியே செல்வது போல் உடை அணிந்து தயாராக இருந்தான்.

டிரெஸ்ஸிங் டேபிள் முன்பு அமர்ந்த சாதனா முகத்திற்கு லேசான ஒப்பனை செய்து கொண்டு, தலைவார ஆரம்பிக்க.... அவள் பின்னே வந்து நின்ற ரிஷி தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டான்.

“அழகா தான் இருக்கீங்க.” சாதனா புன்னகைக்க...

“தேங்க்ஸ்.... ப்ரண்ட்ஸுக்கு இன்னைக்கு ட்ரீட். நான் நைட் வர நேரம் ஆகும்.” என்றான் ரிஷி.

“ட்ரீட்டுக்கு என்னை எல்லாம் கூடிட்டு போக மாட்டீங்களா...”

“ஏய் ! தண்ணி பார்ட்டி டி...”

“நீங்க குடிபீங்களா ரிஷி...”

“ம்ம்... எப்பவாவது.”

“எப்பவாவது செஞ்சாலும் தப்புத் தப்பு தான் ரிஷி.”

“நான் தப்பா சரியான்னு உன்கிட்ட கேட்டேனா... உன் வேலையை மட்டும் பாரு...” ரிஷி முகத்தில் அடித்தது போல் பதில் கொடுத்துவிட்டு வெளியே செல்ல...
“ஹப்பா... எவ்வளவு கோபம் வருது.” என நினைத்தவள், அவன்தான் சென்று விட்டானே என்ற எண்ணத்தில், சுடிதாரை எடுத்துக்கொண்டு வந்து கண்ணாடியின் முன்பு நின்றே உடை மாற்ற ஆரம்பித்தாள்.

முதலில் கால் சட்டையை அணிந்தவள், அணிந்திருந்த இரவு உடையைக் கழட்டி விட்டு, சுடிதாரை எடுக்கக் கைநீட்டும் நேரத்தில் சரியாக ரிஷி கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

இதை எதிர்பார்க்காததால் இருவருமே ஒருநொடி திகைத்து போய் நின்று விட.... முதலில் இருக்கும் நிலை உணர்ந்த சாதனா... வேகமாகக் கையில் கிடைத்த துணியை எடுத்து தன் மேல் போர்த்திக்கொள்ள.... ரிஷியும் கதவை மூடியபடி வெளியே சென்றான்.

ஐயோ ! இன்னைக்குக் காலையில இருந்தே எல்லாமே தப்பு தப்பா நடக்குதே என நினைத்த ரிஷி, கதவை தட்டி விட்டு உள்ளே சென்ற போது... அறையில் சாதனா இல்லை.

உடை மாற்றும் அறையில் இருக்கலாம் என நினைத்தவன், கட்டிலில் கிடந்த தன் செல் போன்னை எடுத்தபடி “போன் இங்கயே வச்சிட்டு போயிட்டேன்.” எனத் தான் திரும்ப வந்ததிற்கான காரணம் சொன்னவன் “நீ சீக்கிரம் கீழ வா...” எனச் சொல்லிவிட்டு சென்று விட....

நிஜமாகவே சென்று விட்டானா என அங்கிருந்தே எட்டி பார்த்த சாதனா.... ரிஷி இல்லையென்றதும் அறையில் இருந்து வெளியே வந்தவள், தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

மேற்கொண்டு எதையும் யோசிக்க இப்போது நேரமில்லாததால்... வேகமாகத் துப்பட்டா எடுத்து அணிந்து கொண்டு கீழே சென்றாள்.

ரிஷி வெளியில் சென்றிருப்பான் என நினைத்து வந்தவளுக்கு, அவன் அங்கேயே இருக்கவும், அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கமாக இருந்தது. அதனால் அவனைப் பார்க்காதது போல் ஜோதியிடம் சென்று நின்றாள்.

“சாரி அத்தை நல்லா தூங்கிட்டேன்.”

“இருக்கட்டும்மா... விளக்கு ஏத்துற நேரம் தூங்க கூடாது. அதுதான் எழுப்ப சொன்னேன். போய் விளக்கேத்திட்டு வா....” ஜோதி சொன்னதும், சாதனா சரி என்று பூஜை அறைக்குச் சென்றாள்.

அவள் விளக்கேற்றி விட்டு வந்த போது... ரிஷியின் பாட்டி அமிர்தா “இந்த நேரத்திலையா விளக்கு ஏத்துவாங்க.” என சிடுசிடுக்க....

“அவ மாடிக்கு போகும் போதே சாயந்தரம் ஆகிடுச்சு. ஒருநாள் லேட் ஆனா ஒன்னும் இல்லை...” ஜோதி சமாளிக்க....

“இதெல்லாம் அவ அம்மா இருந்திருந்தா சொல்லி குடுத்து வளர்த்திருப்பாங்க. நம்ம ப்ரீதா பாரு எவ்வளவு பொறுப்பா இருக்கா...” எனவும் சாதனாவிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

அவள் பாவமாக ஜோதியை பார்க்க.... “நீ போய் ஹால்ல உட்காரு சாதனா... நான் உனக்குக் காபி அனுப்புறேன்.” என்றார் அவர்.

“இருக்கட்டும் அத்தை, மதியம் சாப்பிட்டதே இன்னும் இறங்கலை....அதனால நான் கொஞ்ச நேரம் கழிச்சு நைட் டிபன் சாப்டுக்கிறேன்.” என்றுவிட்டு ஹாலுக்கு வந்தாள்.

அவளைப் பார்த்ததும், அவள் நின்ற கோலம் ரிஷிக்கு நினைவு வர.... அவன் பக்கென்று சிரித்து விட....சாதனா அவனை முறைத்தாள்.

“அம்மா, உங்க மருமகள் விளக்கு ஏத்திட்டா இல்லையா... அப்ப நான் கிளம்புறேன்.” எனச் சாதனாவை பார்த்துச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

“ஹப்பாடா.. போய்ட்டான்.” என நிம்மதி அடைந்த சாதனா ஹாலில் இருந்த உமாவின் அருகே சென்று அமர்ந்தாள். அவர் மட்டும் தான் இருந்தார். மற்றவர்கள் அனைவரும் கிளம்பி இருந்தனர்.

அங்கே வெற்றி ப்ரீத்தாவின் பின்னாலே சுற்றிக்கொண்டு இருந்தான். அங்கேயும் விருந்தினர்கள் எல்லோரும் கிளம்பி இருந்தனர். அவனின் பெரியம்மா, பெரியப்பா மட்டும் தான் இருந்தனர்.

ரிஷியும் சாதனாவும் மறுவீட்டு விருந்துக்கு வந்துவிட்டு சென்றதும், அவர்களும் கிளம்பலாம் என்று இருந்தனர்.

“ப்ரீதா, இன்னைக்கு மதியம் கொஞ்ச நேரம் கூடப் படுக்காதது ரொம்ப அலுப்பா இருக்கு மா... நானும் அவரும் சீக்கிரமே படுக்கப் போறோம். வெற்றி லேட்டாத்தான் சாப்பிடுவான். அவன் சாப்பிட்டதும் நீங்களும் போய்ப் படுங்க.” எனச் சொல்லிவிட்டு சென்றார்.

“ப்ரீதா இன்னைக்காவது உண்டா... இன்னைக்கும் வேண்டாம்னு சொல்ல மாட்ட இல்ல...” வெற்றி ப்ரீதாவிடம் கிசுகிசுப்பாகக் கேட்க....

“உங்களுக்கு அந்த நினைப்பு தானா... வேற ஒன்னும் நினைக்கத் தோணாதா...” என்றாள் அவள்.

“புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு வேற என்ன நினைப்பு இருக்கும். நீ முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு... உண்டா இல்லையா... நேத்து மாதிரி ஆசை காட்டி ஏமாத்தாத.” வெற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே.... சந்தானம் வந்து விட.... நெருக்கமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த இருவரும் அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றனர்.

“சாப்பாடு எடுத்து வைக்கவா மாமா....”

“என்ன டிபன் மா...”

“தோசை மாமா...”

“மதியம் சாப்பிட்டதே அதிகம்.” அவர் யோசிக்க...

“நான் இட்லி ஊத்த சொல்றேன் மாமா.... நைட் சாப்பிடாம தூங்க கூடாது.”

“சரி மா... மூன்னு இட்லி போதும். நான் போய்க் குளிச்சிட்டு வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டுச் சந்தானம் சென்றுவிட.... ப்ரீதா சமையல் அறைக்குச் சென்றாள்.

சந்தானம் குளித்து விட்டு வந்ததும், ப்ரீதாவே அருகில் நின்று அவருக்குப் பரிமாறினாள்.

“கொத்தமல்லி சட்னி வச்சுக்கோங்க. சீக்கிரம் ஜீரணம் ஆகும்.” என்று அவள் பார்த்துப் பார்த்து பரிமாருவதையே வெற்றிப் பார்த்திருந்தான்.

ஒன்பது மணி ஆனதும், வெற்றியும் ப்ரீதாவும் சாப்பிட்டு விட்டுத் தங்கள் அறைக்கு வந்தனர். கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன் ப்ரீதாவையும் இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான்.

“தேங்க்ஸ் ப்ரீதா...”

அவன் திடிரென்று இப்படிச் சொன்னதும், எதுக்கு என்று புரியாமல் ப்ரீதா பார்க்க....
“அப்பாவை நீ நல்லா கவனிச்சிகிட்டதுக்கு. அவரை நாம எப்பவுமே நல்லா பார்த்துக்கணும். எங்க அம்மா இருந்திருந்தா வேற.... எங்க அப்பாவா எதுவும் வாய்விட்டு கேட்க மாட்டார். அதனால நாம தான் அவரைப் பார்த்துக்கணும்.” என்றான் வெற்றி நெகிழ்ச்சியாக....

“கண்டிப்பா வெற்றி.... நீங்க உங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்றீங்களா...”

“எப்படி மிஸ் பண்ணாம இருப்பேன். பசங்க அப்பாவை விட அம்மாகிட்ட க்ளோஸா இருப்பாங்க இல்லையா.... நானும் அப்படித்தான்.”

“அம்மா இறந்ததும், அப்பா சாதனாவை ஹாஸ்டல்ல சேர்த்துட்டார்.”

“அம்மா இருந்தவரை சாதனா ரொம்பப் பேசுவா... அதுக்கு அப்புறம் பேச்சு குறைஞ்சு போச்சு. அவளும் இல்லாம அம்மாவும் இல்லாம எனக்கு வீட்ல இருக்கவே பிடிக்காது. நான் ப்ரண்ட்ஸ் கூடத தான் எப்பவும் இருப்பேன்.”

“அப்பா முழுசா அரசியல்ல இறங்கிட்டார். அம்மா இருந்தவரை நாங்களும் சந்தோஷமா ஒரு குடும்பமா இருந்தோம். அதுக்கு அப்புறம் ஆளுக்கு ஒரு பக்கம் போய்ட்டோம்.”

“சாதனா திரும்ப வீட்டுக்கு வந்ததும் தான் வீடு வீடா ஆச்சு.”

“எங்க அண்ணனை எப்படித் தெரியும்.”

“அப்பா என்னை அவரோட பிஸ்னெஸ் பார்க்க ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தார். நான் காதுல வாங்காம ஊர் சுத்திட்டு இருந்தேன். அப்பதான் உங்க அண்ணன் வெளிநாட்டில படிச்சு முடிச்சிட்டு உங்க அப்பா பிஸ்னெஸ் பார்க்க வந்தான்.”

“ரிஷி வந்ததும், எங்க தொழிலுக்குப் போட்டியா நிறையச் செஞ்சான். இவனை விடக்கூடாதுன்னு நானும் வந்தேன். அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் தொழில்ல மோதிக்க ஆரம்பிச்சோம்.”

“அவன்கிட்ட போட்டி போட்டு ஜெயிக்க எனக்கு ரொம்பப் பிடிச்சது.”

“அப்ப எங்க அண்ணன் உங்களுக்கு நல்லது தான் செஞ்சிருக்கு. ஆனா நீங்க இன்னும் அதுமேல கோபமா தான் இருக்கீங்க இல்லையா...”
“எனக்கு இப்ப அவன் மேல எந்தக் கோபமும் இல்லை.... அவனால தான் எனக்கு நீ கிடைச்ச.... உண்மையா சொல்றேன் ப்ரீதா... ரிஷியோட தங்கைகிட்ட நான் இப்படி மயங்கி போவேன்னு நினைக்கவே இல்லை....” வெற்றி ஆச்சரய்ப்பட....

“யாரு? நீங்க மயங்கிடீங்க....”ப்ரீதா சந்தேகமாக இழுக்க....

“ஆமாம் டி என் பொண்டாட்டி.... வா.. நான் உன்னையும் மயங்க வைக்கிறேன்.” என அவளை ஆசையாகத் தழுவிக்கொண்டான்.
 
SINDHU NARAYANAN

Well-known member
Member
:love::love::love:

நல்ல வேளை சாதனா இந்த பாட்டு பாடல... :p :p

கண்ண தொறக்கணும் சாமி……
கைய புடிக்கணும் சாமி…..
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
 
Last edited:
Advertisement

Advertisement

Top