Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ தானே என் பொன்வசந்தன்- அத்தியாயம் 4

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member

நீ தானே என் பொன்வசந்தன்

அத்தியாயம் 4



அருண் யாருமில்லாத மீட்டிங் ரூமில் தனியாக அமர்ந்திருந்தான். குழம்பிய நிலையிலிருந்த அவனது உள்ளம் அமைதியடைய இந்த தனிமை அவனுக்கு தேவைப்பட்டது. ‘நான் ஏன் இப்படி சட்டென்று தன்னிலை இழந்து கோபப்படுகிறேன் ?இப்படிலாம் முன்கோபப்படுற ஆள் கிடையாதே நான் ,எப்பவும் டேக் இட் ஈஸினு இருக்கறவன், புயலடித்தாலும் கலங்காமல் பூக்கள் நீட்டுகிறேன்னு சொல்ற டைப் ,ஆனா இப்போ திடீர்ன்னு என்ன ஆச்சு ? இந்த அபி யாரு ?அவளை பத்தி யாரு என்ன நினைச்சா எனக்கு என்ன ?இந்த சின்ன விஷயத்துக்கு போய் தேவை இல்லாம விக்கியா வேற காத்திட்டேன்…இவ்ளோ உணர்ச்சிவசபடுற அளவுக்கு இது அவ்ளோ பெரிய மேட்டர் கிடையாதே நான் ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்குறேன்?இது என்னோட கரெக்ட்டர்க்கு கொஞ்சமும் செட் ஆகலையே!!!!அந்த அபி என்னை பாதிக்கறாளா ? நோ..நெவெர் ,இந்த அருண் ஒன்னும் பலவீனமானவன் கிடையாது ,என்னை யாரும் அஃபக்ட்பண்ண முடியாது,

அருண் , பீ ஸ்டராங் ,போகஸ் பண்ணுடா ,இங்க நீ உன்னோட கேரியர்ல உச்சத்தை தொடணும் ,அதை விட்டுட்டு மனச அலைபாயவிடாத "என்று அவனது மனதிற்கு கடிவாளம் இடும்போதே அவனது தலை தானாக விரைத்து நிமிர்ந்தது ,கண்களில் உறுதி குடியேறியது.

அருண் அவனது புதிய டீமை சந்திப்பதற்கு அழைத்தான் ,

"ஹாய் பிரெண்ட்ஸ் ,நாம இனிமேல் ஒரே டீம் மட்டும் இல்லை நல்ல ஃபிரெண்ட்ஸ்….என்னடா புதுசா வந்திருக்கானே,இவன் எப்படிபட்ட ஆளோன்னு நீங்க யோசிக்கவேண்டாம் ,நான் ஃபிரெண்ட்லியான ஆளு தான் ,சோ எப்பவும் போல நீங்க இருக்கலாம் ,எனக்காக உங்களை மாத்திக்க வேணாம் ,டீமா வர்க் பண்ணலாம் ,,வேலைய பிரிச்சிக்கலாம், சேம் டைம் ஒருத்தருக்கொருத்தர் மியூச்சுவலா ஹெல்ப் பண்ணிக்கலாம் ,நீங்க என்ன ஹெல்ப் வேணாலும் என் கிட்ட தயங்காம கேக்கலாம்...சரி இப்போ உங்களை பத்தி தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கறேன் ,மொதல்ல மிஸ் அபிராமி நீங்க சொல்லுங்க..” என்று,அவளை நேராக பார்த்தான் அருண் .

ஹாய் சார், நான் அபிராமி...ஹேவ் டன் மை பிஈ ஐ டீ இன் ‘பிஎஸ்ஜி’ காலேஜ் , நேட்டிவ் கோயம்பத்தூர் ,இப்போ சென்னை…இன்போடெக் தான் என்னோட ஃபர்ஸ்ட் ஜாப் இங்க ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆகுது.. அவ்ளோ தான்…”என்றுவிட்டு அவனை பார்த்தாள்..

“எல்லாம் ஓகே ,இந்த “சார்” தான் கொஞ்சம் இடிக்குது ,என்னை அருண்னே கூப்பிடலாம் சார் லாம் வேண்டாம்..” என்று சினேகமாக குரலில் கூறினான்

அபி "ஓகே.. "என்றாள் அரை மனதாக ,

"ஓகே... ?"என்று அவன் கேள்வியாக இழுக்கவும்.. வேறு வழியில்லாமல்

"ஓகே..அருண் "என்று தயக்கத்துடன் அவன்பெயரை கூறினாள்..

அவளுடைய குரலில் அவனது பெயர் இனிமையாகவும் தனித்துவமாகவும் ஒலித்தது போன்ற பிரமையில் உள்ளுக்குள் அவன் உடல் சிலிர்க்க ஒருகணம் விடலை பருவத்திற்க்கே மீண்டும் சென்றது போன்ற களிப்பை உணர்ந்தவன் ,மறுகணம் "என்ன பைத்தியக்கார தனம்..”என்று தன்னை தானே திட்டிக்கொண்டு எரிச்சலுடன் அந்த உணர்வை ஒதுக்கித்தள்ளினான் ,

“நித்யா என்னோட காலேஜ் மேட் சோ அவளை பத்தி எனக்கு தெரியும் ,நெக்ஸ்ட் பத்ரீநாராயணன் நீங்க உங்களை பத்தி சொல்லுங்க..” என்றான் .

அண்ணே...என்னை பத்ரீனே கூப்பிடுங்கண்ணே, பத்ரீ நாராயணன்னு... கூப்பிட்டா ஏதோ வயசானவங்கள கூப்பிடுற மாதிரி இருக்கு ..” என்று விட்டு வெள்ளந்தியாக சிரித்தான் . அருணுக்கு தூக்கிவாரி போட்டது , ஒரு ஐடீ ப்ரொபெஷனல் இடம்மிருந்து இப்படி ஒரு ஆட்டிடியூட்ஐ அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை .

அருணின் அதிர்ந்து விழித்த முகத்தை பார்த்து விட்டு அபி மிகசிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

பத்ரீ வஞ்சனை வைக்காத சாப்பாட்டினாலோ .. அல்லது உடல் வாகினாலோ நன்றாக கனத்த சரீரத்துடன் பார்க்க முரட்டு தனமாக இருந்தான் .ஆனால் பேசும்போது சின்னப்பிள்ளைப் போல் அப்பாவியாக தெரிந்தான்.

“பத்ரீ ..நீங்க என்னை அண்ணான்னு கூப்பிடத்தேவை இல்லை .ஜஸ்ட் கால் மீ அருண் . அதுவே போதும்” என்றான் முடிந்தவரையில் பொறுமையான குரலில் .

"அண்ணா நீங்க வயசுல பெரியவங்க ... அது மட்டுமில்லாம ,என்னோட உயரதிகாரி... உங்களை எப்படிண்ணா பேர் சொல்லி கூப்பிடுறது? அது மரியாதையா இருக்காதுண்ணா .." என்று அவன் தொடர்ந்து அடிக்கொரு அண்ணா போடவும்,

“யாருடா இவன் ?” என்று மனதில் நினைத்து கொண்டு நம்ப முடியாத தலையசைப்புடன் அவனை பார்த்தான் .இப்போதைக்கு அவனை அவன் வழியிலேயே விட்டு விட எண்ணி ,

“ பரவால்ல பத்ரீ,உனக்கு புடிச்ச மாதிரியே கூப்பிடு .. ஆனா வேலையில மட்டும் சின்சியாரா இரு அது போதும் ..” என்று புன்னகைத்தான் .

“ அண்ணே என்னை நம்புங்கண்ணே.., என் உயிரை கொடுத்தாவது டெட்லைன் குள்ள ப்ராஜெக்டைமுடிச்சிடுவேன் , நீங்க கவலை படாதீங்க “ என்று ஏதோ வீர வசனம் போல் பத்ரீ பேசவும் , அருண் மேலும் அதிர்ந்து போனான் ..” என்ன கண்ராவிடா இது ..” என்று நினைத்து அவன் முகம் போன போக்கை பார்த்து…

அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல் அபி வெடித்துச்சிரித்தாள்.

அருண் , அபி வாய்விட்டு சிரிப்பதை அப்போது தான் முதல் முதலில் பார்த்தான் .. “ இப்படி மனம் விட்டு சிரிக்கும்போது பார்க்க எவ்ளோ அழகா இருக்கா ?ஏன் அடிக்கடி இப்படி சிரிக்காம மூஞ்ச மொறைப்பா வச்சிக்கிறா ? ஒரு குழந்தை சிரிக்கிறது மாதிரி பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கே “ என்று அவளது சிரிப்பில் மெய்மறந்து லயித்துப்போனான் .

அவனது விழிகளை சந்தித்ததும் அபியின் சிரிப்பு உதட்டினிலே உறைந்தது .பழையபடி முகத்தை சீரியஸ் ஆகா வைத்துக்கொண்டாள்.

"ஐயோ.. இவன் முன்னாடி இப்படி சிரிச்சிருக்க வேணாம் ..” என்று உள்ளுக்குள் சங்கடமாக உணர்ந்தாள் .

அருணும் .நொடியில் தன் கட்டுப்பாட்டை மீறி பறந்த இதயத்தை கட்டுக்குள் அடக்கிவிட்டு ..

"பத்ரீ..நீங்க உயிர விட்டுட்டா ,வேலை யாரு செய்யறது ? சோ நீங்க வேலைய கரெக்டா பண்ணினா போதும் .சரியா.. ?” என்று எஞ்சிருந்த பொறுமையை இழுத்துப்பிடித்து கூறினான்..

"சரிங்கண்ணே....” என்று முழு பல் வரிசை தெரிய சிரித்தான் .

“சரி.. தட்ஸ் ஆல் ஃபார் நௌ...மத்த டீடெயில்ஸ் நான் மெயில் பண்றேன் ..”என்று மீட்டிங் முடிந்ததாக அறிவித்தான். அனைவரும் வெளியேறும் வேளையில் ..அபியின் பெயரை அழைத்து அவளை நிறுத்தினான் .” அபி நீங்க கொஞ்சம் இருங்க உங்களோட கொஞ்சம் பேசணும் ..”

அபி ஒரு நொடி கண்மூடி பெரிய மூச்சை உள்ளிழுத்து தனது படபடக்கும் இதயத்தை சமனப்படுத்தினாள். “இப்போ என்ன ..?எதுக்கு என்னை நிறுத்துறான் ? ஏதாவது பழிவாங்கும் படலாமா ? ஏற்கனவே ஒரு டிராகுலா கிட்ட மாட்டிகிட்டு அவஸ்தை படுறது பத்தாதா ..? இந்த காட்ஜில்லா வேற புதுசா வேணுமா ..? இது என்ன பண்ணுமோ ?” அவன் என்ன சொல்லப்போகிறானோ என்ற தவிப்புடன் அவனை ஏறிட்டாள் .

அவள் மனதின் தவிப்பை முகத்தில் பார்த்தவன் ,

அபி , கொஞ்சம் உக்காருங்க .. நீங்க பதட்டமாக தேவை இல்லை , ரிலாக்ஸா இருங்க..”என்று ஆறுதல் அளித்துவிட்டு , “ தனிப்பட்ட விஷயத்தையும் , வேலையையும் போட்டு குழப்பிக்கற அளவுக்கு இம்மெச்சூர் ஆனா ஆள் நான் கிடையாது ..அது ரெண்டையும் எப்படி தனி தனியா ஹாண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும் .நீங்க என் மேல காட்டுன வெறுப்பை மனசுல வச்சிக்கிட்டு வேலைல உங்ககிட்ட தனிப்பட்ட காழ்புணர்ச்சியோட நடந்துப்பேனோனு நீங்க பயப்பட வேணாம் . நம்ம பிரச்சனையா எல்லாம் விட்டுட்டு ஒரு டீமா வேலை செய்யலாம் ,ஒரு டீம் லீடரா நான் எப்பவும் உங்களுக்கு சப்போர்ட்டிவா இருப்பேன் புரியுதா ?”என்று நீளமாக பேசிமுடித்து அவளது முகபாவத்தை ஆராய்ந்தான்,,, அபிக்கு அவன் என்ன சொல்கிறான் என்பதை உள்வாங்கவே சிறிது நேரம் எடுத்தது ,அவனுடைய வார்த்தைகளை அலசி ஆராய்ந்தவளின் முகம் பிரகாசமடைந்தது,"அப்போ அவன் என் மேல் இருக்கும் கோபத்தில் பழிவாங்கும் நடவடிக்கை எதிலும் ஈடுபடமாட்டான் அவனும் வேலையில்ஒரு நட்புறவையே நாடுகிறான்" என்பது புரிய ,மனபாரம் நீங்கியவளாக ,"எஸ் சார் "என்று மனதார புன்னகைத்தாள் .

அவளது புன்னகையின் எதிரொலி அவனது முகத்திலும் தோன்ற ,"எஸ்.. வாட்.. ?என்று ஒரு புருவம் உயர்த்தி கேட்க ,

"எஸ் அ..ருண் ,"என்று லேசாக சிரித்து விட்டு ,எழுந்து வாயிலை நோக்கி நடக்கத்தொடங்கினாள் .

"இவன் கொஞ்சம் நல்லவன் தான் போல "என்று மனதிற்குள் நினைத்து நிம்மதி பெருமூச்செறியும் போதே ,அவனுடைய கடைசி வார்த்தைகள் காதில் விழுந்து ,அவளது நிம்மதியை முழுதாக துடைத்தெடுத்தது ,"ஒரு நிமிஷம் ,இப்ப சொன்னது முழுக்க முழுக்க ப்ரொபெஷனல் ,இதனாலெல்லாம் நமக்குள்ள பர்சனல் ஈக்குவேஷன் நேர் ஆகிட்டாதா நெனைச்சிக்க வேண்டாம் ,ஆபீஸ்க்கு வெளிய நம்ம பிரச்சனை அப்படியே தான் இருக்கு..”என்று முடிக்கவும்

இவன் மோசமானவன் தான் என்ற முடிவுக்கு மீண்டும் வந்தாள்.

அவள் சென்ற பிறகு அருண்,நடந்த நிகழ்வுகளை நினைத்துப்பார்த்தான் ,

நான் ஏன் அவளை என் பெயரை சொல்லி கூப்பிடவைப்பதில் அவ்வளவு குறியாக இருந்தேன்?சரி எப்படியோ கூப்பிடட்டும் என்று ஒதுக்கி தள்ள முடியாத அளவுக்கு அப்படி என்ன அது அவ்ளோ முக்கியம் எனக்கு ?அருணை பொறுத்தவரைக்கும் இதுநாள் வரை அவனது மனமும் அறிவும் முரண்பட்டதில்லை, இரண்டும் ஆத்ம நண்பர்கள் போல் எப்போதும் ஒரே மொழியே பேசுவார்கள் ,ஆனால் இன்று முதல் முறையாக இருவரும் முரண்படுவதை கண்டு திகைத்தான்.

………………..​

மறுநாள் அபி அலுவலகத்தினுள் நுழையும் போதே,அவளது இருக்கைக்கு எதிராக இருந்த காலி இடம் சுத்தம் செய்யப்பட்டு ,புதிதாக ஒரு கேபின் அமைக்க பட்டிருந்ததை வியந்து நோக்கினாள், பராமரிப்பு பணியாளர்கள் சிலர் ,கேபினுக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தனர் ,”யாரு இந்த இடத்துக்கு வரப்போறாங்க..” என்று அவள் யோசிக்கும் போதே ,விக்கியின் குரல் கேட்டது ,"என்ன சார் ,வாஸ்து சரி இல்லைனு ,எல்லாத்தையும் மாத்திவைக்கிறீங்களா ?”என்று நிர்வாகியிடம் விளையாட்டாக கேட்டு விஷயத்தை அறிய முனைந்தான் …

"இல்லை சார் , உங்க புது டீம் லீடர்க்கு கேபின் ரெடி பண்ணிட்டு இருக்கோம் “என்றார் அந்த பராமரிப்பு நிர்வாகி, இந்த உரையாடலை கேட்டும் கேட்காதவள் போல் அசிரத்தையாக நடந்து வந்து தனது பணியிடத்தில் அமர்ந்து ,எதிரே நிமிர்ந்து நோக்கியவள்,அந்த புது கேபின் அவளுக்கு நேர் எதிராக இருந்ததை கண்டு அதிர்ந்தாள் ,அந்த கேபினில் இருந்து சும்மா நிமிர்ந்து பார்த்தாலே அவள் நேராக தெரிவது போல கண்ணாடி தடுப்பு இருந்தது ,அபிக்கும் அதே நிலைமையே ,அவள் நிமிர்ந்து பார்த்தாலும் அவனது முக தரிசனம் கிடைப்பது போல கச்சிதமான அமைப்பு …

"அட கடவுளே , அவன் இப்படி எதிரிலேயே நந்தி மாதிரி வந்து உட்கார போறானா ?அப்புறம் நான் எப்படி வேலை செய்யறது ?மொதல்ல இந்த இடத்தை மாத்த முடியுமான்னு பார்க்கணும்"என்று மனதில் கவலையுடன் நினைத்துக்கொண்டாள் ..

அதன் பிறகு ,வழக்கம் போல தன்வேலையில் மூழ்கி தனது அந்த நேரத்து கவலையை மறந்தாள்.. வெகு நேரம் கம்ப்யூட்டர் திரையையே வெறித்ததால் கண்கள் வலிக்க எதேர்சையாக விழிகளை திரையிலிருந்து விலக்கி நேரே நிமிர்ந்து பார்த்தாள் ,பார்த்ததும் திகைத்தாள்..அருண் அவளுக்கு நேர் எதிராக…அவனது கேபினில் அமர்ந்து கொண்டு வேலை பார்த்து கொண்டிருந்தான் ..

இருவருக்கும் இடைவெளி ஒரு பத்து அடிஅளவு கூட இருக்காது ,கண்ணாடி தடுப்பை தாண்டி பார்த்தால் அவன் முகம் வெகு தெளிவாக தெரிந்தது..இமைக்க கூட மறந்து வெறித்து நோக்கும் போதே , எதேர்ச்சையாக அவனும் நிமிர்ந்து பார்க்க,இருவர் விழிகளும் கலந்தன ,அந்த நொடி அபி மூளை மரத்து செயலிழந்தது போல் ஆனாள்…

அவளின் திகைத்த தோற்றதை கண்டு அருண் ‘என்ன?’ என்று கேட்பது போல் புருவம் உயர்த்தினான் ,அவனது உதடு அவளது கள்ளத்தனத்தை கண்டுவிட்டேன் என்று கூறுவது போல் குறும்பான சிரிப்பில் வளைந்திருந்தது.. அவனது இந்த தோற்றம் அப்படியே புகைப்படம் போல மனதில் பதிய , அடிவயிற்றின் குறுகுறுப்பையும் ,முகம் கன்றி சிவப்பதையும் ஒன்றாக உணர்ந்தவள் ,சட்டென்று தலை குனிந்து உதட்டை கடித்து முகம் சிவப்பதை தடுத்தாள் ,"என்னாச்சி எனக்கு? ஏன் இப்படி வினோதமே நடந்துக்கறேன் ?அவன் பார்த்தா என்ன? எதுக்காக இப்படி கூச்சப்படணும் ?”புரியாமல் தவித்தாள் .

இந்த நாடகம் அனைத்தையும் மற்றுமொரு ஜோடி கண்களும் வியப்பில் விரிந்த வண்ணம் பார்த்துக்கொண்டிருந்தது ,"ஓ..,கதை அப்படி போகுதா ?” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டது.

தொடரும்


author's note

வணக்கம் மக்களே!!
இப்போ நான் ஒரு டிஸ்கிளைமர் போடணும்னு நினைக்கிறேன். ஆக்சுவலா நான் ஐடி ப்ரொபஷனல் கிடையாது, சோ ஐடி கம்பெனில என்ன பண்ணுவாங்க அப்படின்னு அதெல்லாம் எனக்கு டீடெய்லா தெரியாது .நான் பார்த்தது, படித்தது, கேட்டது இதை வச்சு தான் இந்த ஸ்டோரியை நான் எழுதறேன் . சோ ஏதாவது தப்பு இருந்தா ப்ளீஸ் இக்நோர் பண்ணிடுங்க. இது வெறும் ஒரு ஸ்டோரியா மட்டும் கன்சிடர் பண்ணி படிங்க.
நன்றி
 
Last edited:
Very very interesting episode...all set n settled.. Now their scenes gonna start..Arun n abi's expressions captured beautifully... Waiting for their actions.... Nice kala.
 
Top