Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-10 (நடன நிகழ்ச்சி)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
அந்த மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மேடையின் மத்தியில் இடது பாதத்தை தூக்கி ஆடும் நடராஜர் சிலை இருந்தது.

இரண்டு பக்கம் சுடர்விட்டு எரியும் குத்து விளக்குகள்.

விட்டதிலிருந்து தொங்கிய தொம்பை எனப்படும் அலங்காரத் துணித் தூண்கள்...

பெரிய ஜமீன்தார் இசைஅமுதன்
காந்தமணி அகத்தியன் முன் வரிசையில் வந்து அமர்ந்திருந்தனர்.

திரை மறைவில் இருந்து வெளிப்பட்ட கனி ஸ்ரீ அடுத்து வந்த இரண்டு மணி நேரம் அனைத்தையும் அபகரித்துக் கொண்டாள்.

இரு கைகளிலும் உதிரிப் பூக்கள் ஏந்தி நாட்டிய மணிகளுக்கு உரிய மிடுக்குடன் வந்து நடராஜர் பாதத்தில் பூக்களை சமர்ப்பித்தாள்.

சபையோரை பார்த்துவிட்டு தட்டு கும்பிட்டு... குருவே வணங்கி..... சரசரவென்று மேடையின் நடுவே வந்து கைகளை கச்சிதமாய் தோலுக்கு சரியாய் பக்கவாட்டில் நீட்டினாள்.

"சுரு திருமகளின் விக்ன விநாயகா...

வினைகள் அகற்றிடும்

கணபதி ஜெய ஜெய..." என்று கனேஷ கவுத்துவத்துக்கு அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள்.

அகத்தியன் மெய்மறந்து போய் விட்டான்.

வட்டாரப் பத்திரிக்கையில்...‌ அவளது டான்ஸ் புரோக்ராம் பற்றிய விளம்பரம் வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தான் அகத்தியன்.

அது மட்டுமல்ல... பெரிய பெரிய சுவரொட்டிகள் அரண்மனை வளாகத்தில் நடைபெறும் அவளது நடன கச்சேரி பற்றி விளம்பரம் வைத்து..... ஆங்காங்கே சுவரில் ஓட்டுவதற்கும் உத்தரவு பிறப்பித்தான்.

இந்த புரோக்ராமிற்கு அனுஷ்யும் வந்த விட்டான். அவனும் ஒரு வி.ஐபி. என்பதால் .... முன்வரிசை சீட்டை இடம் பிடித்து விட்டான்.

கனி ஸ்ரீ வின் ஒரு புரோகிராமை கூட அவன் பார்க்காமல் தவற விட்டதே இல்லையே?

மேடையில்... அவள் தனது விழிகளை சுழற்றியதும்..... அகத்தியன் கண்களில் சொருக மயங்கினான்.

அவன் முத்திரை காட்டி திரும்பி பார்த்து வெட்டி ஜாதிகளை போட்டதும்.... இவன் நீர் ஊற்றாக உயரே கிளம்பி ஆர்ப்பரித்தான்.

பறவையாக பறந்தான். மேகமாக மிதந்தான். உருகினான். ஒன்றுமே இல்லாமல் கரைந்து போனான்.

அந்த முகம், பாவங்கள்.... வளைவு, நெளிவு, அபிநயங்கள், அந்த நளினம், அந்த அழகு ,அந்த இடை, அந்த கவர்ச்சி, அந்த லாவகம்......

அகத்தியன் தன்னை மறந்து லயித்து இருந்து தான். அவனே மேடையிலிருந்து நேர்க்கு நேர் பார்த்ததும்..... கனி ஸ்ரீ தான் உருகி தான் போனாள்.

"வேதனை துயர் இனி நான் சகியேனே.....‌

பெரும் கல்லோ....?

அவர் மனம் கசிந்துருகாதோ.‌‌....?"

பிரிவின் துயரால்..... எப்படி எல்லாம் காவிய நாயகி அல்லல் படிக்கிறாள் என்பதை துல்லியமாக..... மூச்சை இழுத்துப் பிடித்து நிற்க வைக்கும் அபாய கற்பனையுடன் கனி ஸ்ரீ விவரித்ததை பார்த்தபோது....‌ அந்த தவிப்பும், ஏக்கமும், வேதனையும் தாள மாட்டாதாய் என்று தோன்ற.... ஓடிச் சென்று அவளை ஆரத் தழுவி அணைத்து
' நான் இருக்கேன் உனக்கு' என்று தேற்ற வேண்டும் போல..... ஒரே பரபரப்பு உடம்பை உதறி போட வைத்தது நிஜம்.

ஒரே வரியை அவள் திரும்பி திரும்பி நிரவல் செய்ய... காம்போதி ராகம் கன கம்பீரமாய் வரவேற்றது.

இனிமையான குரல் தட்டு குச்சி இசையோடு இணைந்து ஒலித்தது. அதற்கேற்ப அச்சுப்பிசகாமல் அபிநயம் பிடித்து விதம் ..‌‌... அவனது மூச்சு நிறுத்தியது.

இடைவிடாமல் மூச்சிரைக்காமல்.... முகத்தில் கலைப்பின் சாயல் சிறிதும் படியாமல்..... துள்ளித் துள்ளி அவள் ஆடிய .... பிரம்மிப்பூட்டுவதாய் இருந்தது.

என்னதான் கனி ஸ்ரீ வின் நடனத்தில் நீ மறந்து போனாலும்... அகத்தியன் அவ்வப்போது அனுஷ் கவனிக்கத் தவறவில்லை.

அதே சமயம்.... அவனுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் பிரகாசமாய் இருந்து.

அந்த நடனத்தின் மூலம்.... கனி ஸ்ரீ வின் காதல் வெளிப்பட்டு விட்டது.

ஒருவேளை... அத்தனை தத்ரூபமாய் காதல் வயப்பட்ட காவிய நாயகன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாளோ?

ஊகம்.... இல்லை.... இல்லை.... அவளது பார்வை என்னைவிட்டு அகலவில்லை.

எனக்கு மட்டும் தான் இந்த உணர்வு ஏற்படுகிறதா? அந்த அனுஷ் கூட மெய் மறந்து வந்து இருக்கிறானே ? அவனுக்கும் அதே போல் தோன்றி இருக்குமோ? சேச்சே ! அப்படி இருக்காது.

கனி ஸ்ரீ வின் மனதில் நான் தான் இருக்கிறேன்.

நான் மட்டும் தான் இருக்கிறேன்.

எனது அறையில் உள்ள புகைப் படங்களைப் பார்த்துவிட்டு அதிர்ந்துதான் போனாள்?

நான் மரணத்தைப் பற்றி பேசியதும்.... அவளது விழிகளில் கடலளவு காதல் ஒரு கணம் மிதந்ததே?

இனிமேல் ......என்னால் ஒரு கணம் கூட அவளை விட்டு பிரிய இயலாது.

அப்பாவிடமும் காந்தமணி அத்தையிடமும் உடைத்து பயிரிட வேண்டியதுதான்....

அவர்கள் அத்தனை சுலபத்தில் திருமணத்தை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.

ஒப்புக்கொள்ளும் வரை பிடிவாதமாய் வைராக்கியமாய் இருந்து வழிக்கு கொண்டுவர வேண்டும்.

இந்த அனுஷ் பயல் .... நடனத்தைப் பார்ப்பதற்காக கம்பத்தில் இருந்து கிளம்பி வந்திருக்கிறானே?

அவளை இவன் நேசிக்கிறானா?

ஆளை விழுங்கி விடுவது போல்... பார்த்துக் கொண்டிருக்கிறானே?

அன்றிலிருந்து நானும் கவனித்து விட்டேன். விடாமல் தவறாமல் இவளது புரோக்ராமிற்கு வந்து கொண்டிருக்கிறானே?

சென்றமுறை மனதில் நெருடல் ஏற்பட்டது... எனது பி .ஏ .விடம் இவனைக் காட்டி விசாரித்தபோது.... இவனைப் பற்றி அனைத்து விவரங்களும் பி.ஏ தெரிவித்து விட்டானே ?

நாட்டியத்தின் மட்டும்தான் ரசிக்கிறானா ? இல்லை அவளையும் ரசிக்கிறானா ? என்று தெரியவில்லையே?

சே...! உள்ளுர பற்றிக்கொண்டு வருகிறதே ?

சிறுவயதிலிருந்து பொறாமை உணர்வு எனக்கு சிறிதும் இருந்ததில்லையே ?

ஆனால் .... கனி ஸ்ரீ வின் மேல் காதல் வயப்பட்ட பின்... அவளை யாராவது ரசித்தால் ... உள்ளூர மனம் பொங்குகிறதே?

போய்த் தொலையட்டும்...! சிறிது நேரத்தில் நடனம் முடிந்து விடுமே ?

என் கனி ஸ்ரீ மேடை விட்டு இறங்கி போய் விடுவாளோ ?

என் கண்ணே.....! என்னை விட்டு இனி நீ ஒரு நொடி கூட அகலாதே....

'உயிரே உயிரே பிரியாதே....!' என்று பாட வேண்டும் போல் இருக்கின்றது?

ஐயோ....! நடனம் முடிவு பெற்று விட்டதே?

அவனது முகம் சோகம் முலாம் பூசிக் கொண்டது. இதுவரை புதுப் புலனாய் பொங்கி பிரகாசித்த சந்தோஷம்.... சற்றென்று மங்கி மறைந்தது....

ஜமீன் குடும்பத்தில் சார்பில்.. பாட்டோ நடனமோ.... கச்சேரி முடிந்ததும் அந்தக் கலைஞரை கவுரவிக்கும் விதத்தில்... பட்டாடையும் சந்தன மாலை அணிவிக்கப்படும்.

பேசிய சம்பளம் போக... சன்மானமாய் ஒரு கட்டுப் பணம், ஒரு பவுன் தங்கம் உபரியாக வழங்கப்படும்.

இசைஅமுதன்க்கு வயதாகி விட்டதால்... அகத்தின் தான் கலைஞருக்கு பட்டாடை போர்த்தி கவுரவிப்பது வழக்கம்...!

இன்றும் அப்படித்தான்.

அவளுக்கு பட்டாலே சாற்றி சந்தனமாலை தன் கையால் கழுத்தில் சூட்டி விடலாம் என்று ஆசையுடன் அவன் எழுந்தபோது இசை அமுதன் அவனது கரத்தைப் பற்றி தடுத்தார்.

கொஞ்சம் பொரு அகத்தியா....!
காந்தமணி அந்தப் பொண்ணுக்கு மாலை போடட்டும்.... நீ பட்டாடை மட்டும் சாத்திட்டு வா...!

அ... அப்பா!

திகைத்துப்போய் அப்பாவை ஊன்றிப் பார்த்தான்.

பார்த்து சின்ன பொண்ணு மாதிரி தெரியுது இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணுக்கு..... உன் கையால சபரிய மாலை சூட்ட கூடாதுப்பா புரிஞ்சுக்கோ.

நல்ல கலை.....! அற்புதமா ஆடினா.... இப்ப நான் இந்த மாதிரி நாட்டியத்தை பார்க்கிறதே அபூர்வமாய் இருக்கிறது ? இப்படிப்பட்ட கலைஞர்களுக்கு நம்ம தான் ஊக்கப் படுத்தணும்.

தேவ லோகத்தில் ரம்பை மேனகை ஊர்வசி இவங்கள்லாம் ஒருத்தி திடீரென்று நம்ம அரண்மனை அரங்கேற்றம் மேடையில் வந்து ஆடினாள் போல் இருந்துச்சு.

டான்ஸ் ரொம்ப பிரமாதம்... ! இந்த கனி ஸ்ரீ யும் அவளோட குருப்பையும்... ஊருக்குப் புறப்படும் முன்னாடி நம்ம அரண்மனைக்கு வர சொல்லு...!

மேற்கொண்டு நிறைய சன்மானம் தந்து கௌரவப்படுத்தி அனுப்பி வைக்கலாம் சரியா ?

தனது மனதிற்கு புகுந்தவலே அப்பா பாராட்டிப் பேசுவது கேட்டதும்.. அகத்தியனுக்கு உள்ளுர மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

"சரிப்பா...."

"வாங்க அத்தே...."

காந்தமணி அகத்தியனும் மேடை ஏறினார்கள்.

உதவியாளர் அவசரமாய் பின் தொடர்ந்து... மைக்கை கையில் எடுத்தான்.

" இப்போது நாட்டிய தாரகை செல்வி. கனி ஸ்ரீவுக்கு.... டாக்டர். திருமதி. காந்தமணி அம்மையார் சந்தன மாலை சூட்டி கவலைப்படுவார்கள்...." என்று மைக்கில் அறிவித்தான்.

காந்தமணி இமை கொட்டாமல் கனி ஸ்ரீ வின் அழகு முகத்தை உற்றுப் பார்த்தபடி.... சந்தன மாலை சாற்றினாள் ‌.

பலத்த கரவொலி கிளம்பியது.

"அடுத்ததாக இளைய ஜமீன்தார் அகத்தியன் அவர்கள், செல்விபட்டாடை போர்த்தி சன்மானம் வழங்கி கவுரவிக்க போகிறார்..."

அந்த அறிவிப்பைக் கேட்டதும் மீண்டும் பலத்த கைதட்டல் ஓசை எழுப்பியது.

விழிகளில் காதல் பொங்கி வழிய.... அவளது பார்வையில் உருவியபடி அருகில் வந்தால் அகத்தியன். பட்டாணி அவள் தோள்களில் போத்தினான்.

ஒரு கட்டுப்பணம் ,ஒரு பவுன் தங்க நாணயத்தை கையில் தந்தான்.

கரவொலி விண்ணை முட்டியது.

?அடுத்ததாக ... யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடைபெற போகிறது ?

? தான் காதல் அகத்தியன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிப்பார்களா ??

? வீதி விளையாட்டுக்கு என்னவாக இருக்கும் ??
 
Top