Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-19 அடுத்த மாதம் திட்டமிடுதல்

Advertisement

Crazy Queen

Well-known member
Member
ஒரு மாதத்திற்குப் பிறகு.....

அகத்தியன் வற்புறுத்தி..... அன்றாட வேலையை கவனிக்க அனுப்பி வைத்தாள்.

கடந்த இரு வாரங்களாய்....கனி ஸ்ரீ சமைக்க தொடங்கினாள்.

"என் வேலைக்கு வேட்டு வச்சுடாதிங்கம்மா...."

சமையல்காரர் ரொம்பவே தயங்கினார்.

"ஐயா! பல வருஷமா இங்க சமைச்சுட்டு வீட்டோட தங்கி இருக்கீங்க... நீங்களும் இந்த வீட்டுல ஒருத்தர் தான்..... நான் உங்களுக்கு பொண்ணு மாதிரி...

என் ஆசைக்கு தடை போடாதீர்கள்... காந்தமணி அம்மா சொன்ன மாதிரி விருந்தாளிகள் வந்தால் நீங்க தான் சமைக்க போறீங்க.... எனக்கு ஏதாவது வெளியே வேலைகள் வந்துட்டா.... நான் சமைக்க முடியாது.

இப்போ என்ன கிட்ட இருந்து ஹெல்ப் பண்ணிட்டு இருக்கீங்க? அப்புறம் என்ன?"

"இந்த வீட்டு எஜமானி நீங்க..... உங்களுக்கு ஏன் இந்த கஷ்டம்?"

"பொண்ணா பொறந்துட்டு... சமைக்கிறது கஷ்டம் என்று சொன்னா..... அது மகா கேவலம் என்று நினைக்கிறவள் நான்....

"ஐயா! இதுலே எனக்கு கஷ்டம் இல்லை. நான் இஷ்டப்பட்டு தான் சமைக்கிறேன்.... போதுமா?"

வெளியே பரந்த காரில் எதிர் எதிரே அமர்ந்த படி பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த இசை அமுதன் ,காந்த மணி.... இதை கேட்டுவிட்டு பெருமிதத்துடன் ஒருவர் ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்.

ஜாக்கிங்கை முடித்துவிட்டு உள்ளே வந்தான் அகத்தியன் .

"அப்பா! அடுத்த மாதம் அம்மாவுடைய நினைவு தினம் வருது?"

"ஆமா..."

"எப்பவும் அந்த தினத்தில் சுமங்கலி பூஜை நடத்தி.... தொழிலாளர்களை வரவழைச்சு தானம் பண்ணுவோம்...

அன்னதானமும் நடத்துவோம் இல்லையா?"

"அதுமட்டுமா? தொழிலாளர்கள் குடும்பத்தில் கல்யாணம் ஆகற ஸ்டேஜ்லே கன்னிப்பெண்கள் இருந்தா..‌ அவங்களுக்கு தங்கத்துல தாலி, பட்டு புடவை எல்லாம் கொடுத்து.‌.. கல்யாண செலவை ஏற்று நடத்தி வைக்கிறார் உங்கப்பா?" என்றார் காந்த மணி.

"இந்த வருஷத்துல அடிஷனல் (additional) இன்னொரு புரோகிரம் சேர்த்து வைக்கலாம்..‌.. நம்ம ஆடிட்டோரியத்தில் கனி ஸ்ரீ வேடா நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணிடலாம்...."

"தாராளமா..‌‌... பண்ணலாமே? என்றார் இசை அமுதன்.

இவங்கள் பேசிக்கொண்டதை கேட்டுவிட்டு கைகளைக் கழுவிக் கொண்டு... துண்டு கையைத் துடைத்தபடி ஹாலுக்கு வந்தாள் கனி ஸ்ரீ.

"இ.... இல்லை... வேணாம் மாமா...!"

"ஏன் மா வேண்டாங்கிறே! உன்கிட்ட இருக்கா அரிய கலை அப்படியே மடங்கி கூடாதுன்னு தானே..... அகத்தியன் ஆசையாக ஏற்பாடு பண்றான்?"

"திரும்பவும் மேடை ஏறி நாட்டிய ஆடறதுக்கு... எனக்கு என்னமோ... இஷ்டம் இல்லை மாமா....!"

"சுதந்திரமாய் தீ பறக்கக் கூடிய பறவையை பிடிச்சுக்கிட்டு வந்து கூண்டுல அடைச்சு அழகு பாக்கிறதை கொடுமை' ன்னு நினைக்கிறவன் நான்.....

கிட்டத்தட்ட என்ன ஒரு கொடுமை காரன் மாதிரி ஆக்கிட்ட இல்ல?"

கோபமாய் பேசினான் அகத்தியன்.

"ஐயோ....! நீங்க ஏன் வீணா எதை எதையோ கற்பனை பண்ணி பேசுறீங்க ? எனக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம் நீங்க...‌

எனக்கு டான்ஸ் ஆடுவதில் விருப்பம் இல்லைன்னு சொன்னேன்?"

"ஒரு அர்ப்பணிப்பு போட ஆடக்கூடிய நாட்டிய தாரகை பெயர் எடுத்தவ நீ....! உன் வாயால ஏன் இப்படி சொல்ற?

இளைய ஜமீன்தார், கனி ஸ்ரீயோடு நாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரு.‌...

அவளை வீட்டோட முடங்கி போட்டார்ன்னு.... மத்தவங்க என்ன பேசுவதற்கு.. நீ இடம் குடுத்துட்டலா?"

"சேச்சே.... அப்படியெல்லாம் இல்லைங்க..."

"அப்படியொரு பழிபாவம் என்ன வந்து சேரட்டும் என்று நீ நினைக்கிறாயா....?

"இத்தனை அபாண்டம் ? சத்தியமா நான் தமது நினைக்கவே இல்லை..."

"நினைக்கவே இல்ல நா அத நீ ப்ரூவ் பண்ணு!"

"நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க."

"அம்மாவுடன் நினைவு நாளுக்கு மட்டும் அல்ல... அடிக்கடி உன்னோட நாட்டிய நிகழ்ச்சி நம்ம ஆடிட்டோரியத்தில் நடக்கணும்.

பெரிய சபாக்களில் இருந்து ஒன்றை விரும்பி வந்து கூப்பிட்டா.... மறக்காம நீ போய் புரோக்ராம் பண்ணனும்...."

"ச...ரி! ஒத்துக்கறேன். இப்போதைக்கு நம்ம ஆடிட்டோரியத்தில் மட்டும் ஆடவதற்கு ஒத்துக்கிறேன்..."

"மத்த சபாக்கள்லேயும்...." அகத்தியன் பேசும்போது இடைமறித்தார் இசை அமுதன்.

"விடுப்பா... இப்போதைக்கு ஒத்துக்கிட்டா இல்ல..... விடு....! மத்ததை அப்புறம் பேசிக்கலாம் விடு....!" என்றார்.

"இல்லப்பா......நான் என்ன சொல்ல...."

"அகத்தியன்! அவன் நம்ம ஆடிட்டோரியத்தில் மட்டும் ஆடினால் போதும். அவை இந்த வீட்டு மருமகள்.... விருப்பம் இல்லனா.... ஒரேடியாக வற்புறுத்தக்கூடாது. விட்டுவிடு..."

"தேங்க்ஸ் மாமா...!"

அவளது வாடிப்போன முகத்தைப் பார்த்துவிட்டு....

"இன்னைக்கு என்னம்மா டிபன்?" என்று பேச்சை மாற்றினார்.

"கம்பு பொங்கல் , கதம்ப சாம்பார், கடலை சட்னி, ஆப்பம், தேங்காய்ப்பால் , நவரத்தின குருமா...."

"ஆஹா....! கேட்கும் போதே நாக்கில் ஜலம் ஊருதே? எல்லாம் ரெடியா ?சாப்பிட வரலாமா?

"வாங்க மாமா....! இதோ எடுத்து வைக்கிறேன்..."

மலர்ந்த முகத்துடன் கிச்சனுக்குள் பரபரப்பாய் நுழைந்தாள் கனி ஸ்ரீ.

இப்படியே ஒரு விபரீதம் வினையாக போவதை....அந்த அரண்மனையில் யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்பது நிஜம்!

? அப்படி என்ன விபரீதம் நடக்கப்போகிறது? ?

? கனி ஸ்ரீ நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுமா? ?

? பெரிய சபாக்கள் எந்த நாட்டில் நிகழ்ச்சிக்கு அழைத்தால் கனி ஸ்ரீ நாட்டியம் ஆடுவதால??

?அகத்தியனுக்கும் ஸ்ரீ வுக்கும் இதில் பிரச்சனை ஏற்படுமா? ?
 
Top