Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி -20 வீதியின் விளையாட்டு ஆரம்பம் 1

Advertisement

Crazy Queen

Well-known member
Member
கனி ஸ்ரீ பாதங்களில் சலங்கைகள் எடுத்து கட்டிக்கொண்டு தினமும் பயிற்சி செய்வாள் என்று அகத்தியன் எதிர்பார்த்தான்.

சி.டி.யில் தட்டுவனார் ஜதி சொல்வதை போட்டுக்கொண்டு உன்னிப்பாய் கேட்டு...

சில சமயங்களில் விரல்களை அசைத்து அபிநயம் செய்து கழுத்தை வெட்டி தலையை ஆட்டினாள்.

சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து விழி மூடி லயித்துபடி கேட்டவண்ணம் இருந்தவளே தவிர.... எழுந்து நின்று மான் போல் துள்ளி குதித்து அவள் ஆடவில்லை.

தினமும் எதிர்பார்த்து ஏமாந்து கொண்டு இருந்தான் அகத்தியன்.

"என்னாச்சு இவளுக்கு? ஏன் இப்படி இருக்கா?" என்று முனகியபடி அவன் படியிறங்கி செல்லும்போது... அத்தை காந்த மணி அவ்வப்போது கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

உள்ளூர அவளுக்குப் பெரும் இதமாய் இருந்தது.

"இந்த ஜமீன் குடும்பத்துக்கு மருமகள் ஆகிவிட்டோம். சபாக்களில் இருந்து சென்று நாட்டியம் ஆடினார்.... அது கவுரமாக இருக்காது.

புகுந்த வீட்டுக்கு நம்மால் எந்த விதக் கௌரவ பங்கம் வந்துவிடக்கூடாது என்று கனி ஸ்ரீ நினைக்கிறாள்.

அந்த வைராக்கியத்தை பாராட்டியே ஆகவேண்டும். நான் புரிந்து கொண்ட அளவுக்கு. அகத்தியன் அவளைப் புரிந்து கொள்ளவில்லையே?" என்று நினைத்தாள்.

கனி ஸ்ரீவுக்கு நாட்கள் தள்ளிப் போய் இருந்தது.

ஜமீன் தாரிணி அன்புக்கொடியின் நினைவு தினம் முடிந்து 4 நாட்களில்... அகத்தியரின் பிறந்தநாள் வரும்.

அவளது பிறந்தநாள் அன்று... இந்த இனிப்பான செய்தி சொல்லிக் கொள்ளலாம் என்ற அவள் சர்ப்ரைஸாக (surprise) வைத்திருந்தாள்.

அதனால்தான் அவள் கடுமையான நடன அசைவுகளை தவிர்த்து எளிமையான அசைவுகளை செய்து பயிற்சி மேற்கொண்டு இருந்தாள்.

பத்து நாட்கள் கடந்திருக்கும்.

போடி மெட்டில் உள்ள டீ தொழிற்சாலைகளுக்குச் சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த அகத்தியன்.

காய்கறி மூட்டைகளுடன் இறங்கிக்கொண்டிருந்த டெம்போ... அந்த திருப்பத்தில் எதிர்பாராமல் அவனது கார் மீது மோதியது.

மோதிய வேகத்தில் அகத்தியனின் கார்... சரிவில் உருண்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அகத்தியன்.‌‌... கார் கதவைத் திறந்து கொண்டு சமயோசிதமாய் பக்கவாட்டு குதித்து விட்டான்.

பலத்த வேகத்துடன் விழுந்ததால்... அவனது கால்கள் அடிப்பட்டது.

தலையில் காயம் பட்டதால் வேகமாக மயக்கத்தில் சென்றான்.

நல்ல காலமாய்..... சாலையோரமாய் ஒரு டீக்கடையும், ஒரு பெட்டிக்கடை யும் அங்கிருந்தன.

விபத்தில் நேரில் பார்த்துவிட்டு..... அவர்கள் பதறியடித்து ஓடி வந்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில்.... அகத்தியன் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

விம்மி விம்மி அழுதபடி சோகமாய் உருவம் நின்றிருந்தாள் கனி ஸ்ரீ.



ஐயோ கடவுளே! என்னை கடைபிடித்ததால் தான் எனக்கு இந்த கதி ஏற்பட்டதா?

எல்லாம் என் ராசியா? பாபா! அகத்தியனை காப்பாத்தி குடுங்க.... அவர் இல்லாம என்னால ஒரு கணம் கூட வாழ முடியாது.‌..."

மனமுருகி பிரார்த்தனை செய்துபடி இருந்தாள்.

முகத்தில் இருந்த மாஸ்கை கழற்றியபடி வெளியே வந்தார் டாக்டர் காந்த மணி ‌.

"பயப்படத் தேவையில்லை.... அகத்தியன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை..."

"அப்பாடா..... என் வயிற்றில் பாலை வார்த்தீங்கமா. நான் அடி வச்ச நேரம் தான்.‌‌.... அவரை இந்தக் கதிக்கு ஆளாக்கிச்சுன்னு.... மனசாட்சி உறுத்து தேம்பினாள் கனி ஸ்ரீ.

"சேச்சே! ஏன் நெகட்டிவ்வா(negative) திங்க் பண்ற? உன்னோட தாலி பாக்கியம் தான் அகத்தியன் காப்பாத்தி இருக்குன்னு நான் சொல்லுவேன்...."

"அவருடைய தலையில் அடிபட்டு இருந்துச்சே ....? என்று கவலையுடன் கேட்டார் இசை அமுதன்.

அதுல ஒன்னும் பிரச்சனை இல்ல ரத்த இழப்பு ஏற்பட்டாதால . ரத்தம் ஏத்திட்டு இருக்கும். ஆனா..."

காந்த மினி இழுத்ததும்... கனி ஸ்ரீ வின் அடிவயிற்றில் வேகமாய் பய்ப்பந்து உருண்டது.

"கால்கள்லே அடி.... முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்க..... அதனால அகத்தியன் எழுந்து நடப்பதற்கு டைம் எடுக்கும்.

"கடவுளே! இது என்ன சோதனை ? இது பேசாம என் உயிர் எடுத்துக்கிட்டு போயிருக்கலாமே?"

கதறிவிட்டாள் கனி ஸ்ரீ.

"ஸ்ரீ..... இப்பதானே நீ திடமா இருக்கனும். எமோஷனல் ஆகாவே கூடாது.

கடவுளை நம்பு நம்ம கையில இல்ல எல்லாத்துக்கும் ஒரு தீர்வு உண்டு விடாம பிசியோதெரபி (physio therapy) குடுக்கணும்.


முயற்சி பண்ணி பார்க்கலாம்... நான் இது விஷயமாக சில ஸ்பெஷலிஸ்ட் (specialist)கிட்ட டிஸ்கஸ்(discuss) பண்ண போறேன்...

நீதான் அவனுக்கு தைரியம் சொல்லணும். அவன் மனசு உடைஞ்சு போகாம பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை...!"

அவளது புஜத்தில் தட்டிக் கொடுத்தார் காந்த மணி.

"இன்னும் அரை மணி நேரம் கழிச்சு.... அவன் போய் பார்க்கலாம்...."

இசை அமுதன் அவனை ஒரு கணம் பார்த்து விட்டு.... உடனே வெளியேறி விட்டார்.

அவன் எதிரில் உடைந்த அழுது விடக்கூடாது என்பது மனதை தேற்றிக் கொண்டு... துக்கத்தை விழுங்கியபடி அவனைப் பார்த்தாள் கனி ஸ்ரீ.

விழிகளை அசைத்து அவள் அருகில் அழைத்தான் அகத்தியன்.

என்னதான் கட்டுப்படுத்தினாலும்... அணை உடைப்பெடுத்துக் கொண்டது போல்... இமையை கரை தாண்டி கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.

"ஏண்டா அழறே? கார் சரிவில் உருண்டு ஏதும் மனசு பட்டதும்... உன் முகம் தான் என்னோட மனக்கண்ணில் வந்து நின்னுச்சு....

படீர்னு கதவைத்திறந்து பக்கவாட்டில் குதிச்சுடேன்.... அங்கே திட்டா இருந்ததால் தப்பித்தேன்...

என் சொர்க்கம் நீ.... ! உன்னை விட்டு நான் எங்கடா போவேன் நீதான் என்னைப் பிழைக்க வச்சிருக்கே.... நீ இல்லன்னா நான் இல்லை கனி ஸ்ரீ....!

அவன் அத்துடன் அவளது கரத்தை பற்றினான்.

அவனது கை ஜில்லென்று இருந்தது.

நரம்பை ஊடுருவும் சிலிர்ப்பு... அவளுக்குள் இடமாற்றம் ஆனது.

அவளது பார்வை... கட்டுப் போட்டு இருந்த அவனது கால்களில் படிந்து மீண்டது.

அவள் தொய்ந்து மடங்கி மண்டியிட்டு.... அந்த பெட்டில் முகம் சாய்த்தாள்.

அகத்தியன் ஆதுரமாய் அவளது உச்சந்தலை வருடினான்.

காந்தாமணி உள்ளே வந்து இருவரையும் பார்த்து விட்டு மனம் நெகிழ்ந்து போய்.... வெளியேறினாள்.

*அகத்தியனுக்கு சந்தேகப் பேய் புகுந்து அவனை ஆட்டி வைக்கும் என்று கனவிலும் கருதவில்லை.*

? விதியின் விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது இனி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் ?

? இந்த விபத்து இருவரின் வாழ்க்கையும் புரட்டிப் போடுமா? ?

? ஸ்ரீ விற்கு பிரச்சனை ஏற்படுமா? ?
 
Top