Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி -21 -சந்தேகத்தை பேய்

Advertisement

Crazy Queen

Well-known member
Member
"இப்போதைக்கு எழுந்து நடக்க முடியாது" என்று காந்தமணி கூறியதை கேட்டதும் இடிந்து போய்விட்டான் அகத்தியன்.

சுறுசுறுப்பாய் நடமாடும் ஒருவனுக்கு.... திடீரென்று இப்படி நிலைமை ஏற்பட்டால்.... அதை விடப் பெரிய நகரம் ஒன்று வேறொன்றும் இல்லை என்பது மற்றவர்கள் சொல்லி..‌.. அவன் கேள்விப்பட்டதுண்டு.

தனக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதும்.... அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒருவேளை அத்தை பொய் சொல்கிறாளோ? வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் நான் கிடந்து விடுவேனோ ?

நிரந்தரமாய் நான் உடன் முடவனகி விட்டேனா? உபயம் கவலையும் அவனை ஆட்டிக்கொண்டு.

தைலத்தையும் ஆயின்மென்ட்யும் மாற்றி மாற்றி தடவி.... பிசியோதெரபி பயிற்சி கொடுத்தால் ஸ்ரீ.

"நர்ஸ் யாரும் தேவையில்லை.... உங்ககிட்ட ஆலோசனைக் கேட்டுக்கிட்டு நானே அவரை காண்பிக்கிறேன் என்று கூறிவிட்டாள்.

அவனுக்கு ஜூஸ், கஞ்சி என்று சத்தான ஆகாரங்களை தந்து.... கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார்.

ஹாஸ்பிடலில் இருந்து ஒரு வாரம் இருந்து விட்டு வீடு திரும்பினான் அகத்தியன்.

வீட்டுக்கு வந்ததும் தான் அவனது வேதனை பன் மடங்கு ஆகிவிட்டது.

அரண்மனைக்குத் திரும்பி ஐந்தாறு நாட்கள் கனி ஸ்ரீ ஏகத்திற்கும் இளைத்து விட்டிருந்ததைப் பார்த்த போது... அவனுக்கும் மனசாட்சி அறுத்தது. தனிமையில் இருக்கும்போது வெறித்தனமாக பிசியோதெரபி பயிற்சிகளை முயற்சித்தான்.

"உனக்கு நான் பாரமாகி விட்டேனா கனி ஸ்ரீ? உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்கணும்னு பிரியபட்டேனே?

இப்படி முடமாகி விட்டேனே? என்று புலம்பிக் தள்ளினான்.

நீங்க இந்த மட்டும் பிழைச்சு வந்ததே என்னோட அதிர்ஷ்டம்ங்க...‌ கடவுள் புண்ணியத்துல கம்பீரமான சின்ன யானை மாதிரி நடக்க தான் போறீங்க.... அப்படியெல்லாம் பேசாதீங்க அகத்தியன்!"

ஆறுதல் கூறி வந்தாள் கனி ஸ்ரீ.

"எனக்கு இப்படி ஆயிடுச்சேன்னு.... விழாவை நடத்தாமல் விட்ராதீங்க... அம்மாவுடன் நினைவு தினத்தை முன்னிட்டு சுமங்கலி பூஜையும் மொத்த புரோக்ராமும் கண்டிப்பா நடக்கும்...

இல்லன்னா.... நான் ரொம்ப வருத்தப்படுவேன். சொல்லிட்டேன்...."

அவன் திட்டவட்டமாக பேசியதே பார்த்துவிட்டு...‌ திகைத்துப் போனாள் கனி ஸ்ரீ.

இசை அமுதனும் காந்த மணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்.

வேறு வழியின்றி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டார் இசை அமுதன்.

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

சில நாட்களுக்குப் பிறகு.....

கனி ஸ்ரீ! நாளைக்கு நீ டான்ஸ் ஆடுங்க மில்லயன் பெரிய வி.ஐ.பிகள் எல்லாம் வருவாங்க.... விழாவுக்கு நிறைய கூட்டம் வரும். நீ பிராக்டிஸ் பண்ணலையா ?

"நீங்க கவலைப்படாதீங்க.... புரோகிராம்லே எந்த குறையும் நான் வைக்க மாட்டேன்...." என்று கூறி விட்டு கலங்கிய விழிகளுடன் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.

வாட்ச்மேன் அவசரமாய் பணிவாய் அகத்தியன்யிடம் வந்து ஒரு கவரை நீட்டினான் ‌

"சார்! தபால் உங்க பேருக்கு வந்திருக்கு" அவன் சென்றதும் அந்தக் கவரை பிரித்தான் ‌.

அனுஷ்யும், கனி ஸ்ரீயும் காதலர்கள் போல் நெருக்கமாய் ஜோடியாய் விதம் விதமாய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்....

அகத்தியன் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் இருந்தது.

விழிகள் விரிய திரும்பத் திரும்ப... அந்தப் படங்களை நோட்டமிட்டான்.

இது கேமரா ட்ரிக் மாதிரி தெரியலையே? போட்டோக்கள் மிக இயல்பாய் இருக்கின்றதே ? யார் இதை எனக்கு அனுப்பி வைத்தார்கள்?

அனுஷ் ? அப்படி என்றால்?

கனி ஸ்ரீ, அனுஷ்யை விரும்பியிக்கிறாளோ?

இருவரும் காதலர் போல் தெரிகிறதே?

அதனால் தான் அனுஷ் ஒரு புரோக்ராம் கூட தவறாமல் வந்தானா?

என்? அவளைத் தேடிக்கொண்டு அங்கு வரவில்லையா?

அவனை எதற்காக ஸ்ரீ நிராகரித்தாள் ? ஒரு வேளை.... அவனைவிட அந்தஸ்திலும் செல்வாக்கையும் நான் உயர்ந்தவன் என்று மனத் தராசில் எடை போட்டு என்னை தேர்வு செய்து விட்டாளோ?

அப்படித்தான் இருக்க வேண்டும்...

சந்தேகம் புகுந்துகொண்டு அவனை பாடாய் படுத்தியது.

இனம் புரியாமல் தன் மீது அவளுக்கு வெறுப்பு மண்டிக் கொண்டு வந்தது.

? யார் அந்த தபாலில் போட்டோஸ்கள் அனுப்பி இருப்பார்கள்? ?

? அகத்தியன்க்கும் , ஸ்ரீக்கு மனஸ்தாபங்கள் ஏற்படுமா? ?

? இவர்களைப்பற்றி காந்தாமணி இசை அமுதன்க்கு தெரிய வருமா? ?




 
Top