Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-22- நினைவு தினம்

Advertisement

Crazy Queen

Well-known member
Member
அரண்மனை வளாகம் விழாக்கோலம் ஆக இருந்தது.

சுந்தரியின் பூஜை முடிந்ததும் தானம் வழங்கப்பட்டது அன்றுமாலை கனி ஸ்ரீ நாட்டியத்தைக் கண்டு கழிப்பதற்காக கூட்டம் ஆர்வமாய் காத்திருந்தது.

அகத்தியனுக்கு வைராக்கியம் ஜாஸ்தி...!

பிசியோதெரபி பயிற்சிக்கு அவர் மிகவும் ஒத்துழைத்ததோடு...
அவ்வப்போது பல்லை கடித்துக்கொண்டு எழுந்து நடப்பதற்கு முயற்சித்தான்.

முயற்சி திருவினையாக்கும் அல்லவா?

காந்த மணி ஆச்சிரியப்படும் அளவிக்கு... சக்கரை நாற்காலியை தவிர்த்து விட்டு... தாங்கு கட்டையை தாங்கியபடி நடக்க ஆரம்பித்தான்.

விழாவிற்கு... மற்றவர்களின் உதவியைத்.... தடுமாறிய படி தாங்கு கட்டை உபயோகத்தில் அவனாகவே முன் வரிசையில் வந்து அமர்ந்தான்.

அவனைப் பின்தொடர்ந்து பதற்றத்துடன் வந்த கனி ஸ்ரீ வின் விழிகள் கண்ணீர் சுரந்தது.

இது மட்டும் நீங்களாவே வந்தது... பெரிய விஷயம்ங்க.உங்க நிலைமையில் வேறு யாராவது இருந்தா மாச கணக்குல பெட்டுலேயே கிடந்திருப்பாங்க...கூடிய விரைவில் கம்பீரமாக நடந்து வர போறீங்க.... எனக்கு சந்தோஷமா இருக்குங்க.... " என்றாள்.

"ஆல் ரைட்....! உனக்கு டைம் ஆகுது ..... மேடைக்கு போ....!"

மேடை ஏறி குருவணக்கம் செய்துவிட்டு தட்டுவனார் ஜதி சொல்ல நாட்டியத்தை தொடங்கினாள்.

"தா கிட்டத்தக்க ஜம், தரி கிட்டத் தக்க
தத்தித் தகணக ஜம், தரி கிட்டத்தக்க...."

அவள் ஜதிக்கு ஏற்ப பாதங்களை தரையில் தட்டுவதும் சலங்கை ஒலியும் ஒருசேர கச்சிதமாய் ஆடினாள்.

கூட்டத்திலிருந்து பலத்த கரவொலி எழுப்பியது. ஆடி முடிந்ததும் பாதச் சலங்கைகள் சப்திக்கம் மேடையை விட்டு இறங்கி வந்தாள்.

நாட்டியத்தை காண்பதற்காக அனுஷ் வந்திருந்தான்.

நாட்டியம் முடிந்தது... அவள் இறங்குவதற்கு பார்த்துவிட்டு... அவளிடம் பேசுவதற்காக வேகமாய் எதிரில் வந்தான்.

பார்வைகளைத் தாழ்ந்த படி சோகமே உருவாய் இறங்கி வந்த கனி ஸ்ரீ.... கவனக்குறைவால் ஒரு படி விட்டு ஒரு படி கால் வைத்துவிட்டால் ...!

தடுமாறி விழப் போனவளை... அனுஷ் அவளது கையைப் பிடித்து தாங்கிக் கொண்டான்.

சாரி..

சட்டென்று தன் கையை உருவிக் கொண்டாள்.

"டான்ஸ் ரொம்ப பிரமாதம்....!"

"தேங்க்ஸ்..."

அமைதியாய் எந்திரத் தனமாய் பதிலளித்து விட்டு ஒதுங்கி நடந்தாள்.

இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அகத்தியன் இந்த காட்சியை கனலை மூட்டி விட்டது.

அவளது நாட்டியத்தை காணும்போது.‌‌...

மயில் மாதிரி ஆடுகிறாளே? முடமாகி தாங்கு கட்டைகளை வைத்த நடப்பவன் நான்..‌

இவ்வளவு போய் இப்படி ஒரு கணவனா? என்று மற்றவர்கள் நினைக்க மாட்டார்களா?' என்று எண்ணி வேதனையில் வெம்பி போனான் அகத்தியன்.

போதாதற்கு... இப்படிப்பட்ட சம்பவம் வேறு....!

இந்த அனுஷ் மறுபடியும் இங்கே வந்து விட்டானே? வட்டாரப் பத்திரிக்கையில் விளம்பரம் பார்த்து விட்டு வந்தானா? அல்லது யாராவது தகவல் சொன்னார்களா ?

சொர்க்கம் போன்ற வாழ்வை கிடைத்ததை நினைத்து பூரித்துப் போயிருந்தேன்?

அந்தப் படங்கள் பார்த்ததிலிருந்து.... வாழ்க்கை நரகமாகி விட்டது போல் இருக்கிறதே ?

மனம் கசந்து போய் சட்டென்று எழுந்தான்.

தாங்கு கட்டைகளைத் தாங்கி நடந்தபடி அரண்மனைக்குள் சென்றுவிட்டான்.

டைரியை எடுத்தான். அகத்தியனுக்கு மனம் சோகமோய் இருக்கும் இப்போது சந்தோஷமாய் இருக்கும் இப்போது டையில் எழுதுவது பழக்கம் சிறுவயதில்யித்து இருந்து.

கனி ஸ்ரீ இப்படிப்பட்டவளா?

எப்படி ஒருவனை நேசித்து விட்டு... இன்னொருவனை அவளால் கையை பிடிக்க முடிந்தது?

அவள் ஒரு நாட்டியக்காரி....!

அதிலும் அந்தப் பரம்பரையில் வந்தவள்.

அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?

பரம்பரை ரத்தம் அவளது உடம்பில் ஓடுகிறதே?

அதனால் தான்.... அவளை மிக சுலபமாக மனதை மாற்றிக் கொள்ள முடிந்திருக்கிறது?

இந்தக் குலத்தில் உதித்தவள் என்று தெரிந்திருந்தும் அவனை நான் நம்பினேனே?

நம்பி இந்த ஜமீன் வம்சத்தை பாரம்பரியத்தையும் கௌரவத்தையும் நினைத்துப் பார்க்காமல் தாலி கட்டினேனே?

மிகப்பெரிய தவறு செய்து விட்டேனே?

தனது மனக்குமுறலை டைரியில் எழுத்து வடிவில் கொட்டி தீர்த்தான்.

கனி ஸ்ரீ பழ ரசத்தை எடுத்து கொண்டு வந்தாள்.

அவளை ஏறிட்டு கூட பார்க்க... அவனுக்கு பிடிக்கவில்லை.

நேற்றிலிருந்து ஏன் இப்படி இருக்கிறார்?

அவள் மனம் குட்டையாய் குழம்பித் தவித்து.

அகத்தியன் பாராமுகம்.... அவளுக்கு மிக வேதனையத் தந்தது.

? இருவருக்குள் நடந்த விரிசலை எப்போது சரி செய்வார்கள்? ?

? அகத்தியன் தன் தப்பை உணர்வான? ?

? இருவரும் பிரிந்து செல்வார்களா??
 
Top