Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே மொழி 5

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 5


"என்ன நீங்க கத்தரிக்காய்க்கு விலை கேட்டா கத்தரிக்கா தோட்டத்து குத்தகைக்கு விலை சொல்லுரீங்க." இடுப்பில் கை வைத்தபடி புருவம் நெரிய முறைத்தவளின் உயரம் நான்கடி. அவளது கூந்தல் நெஞ்சை மறைத்திருக்க உதடுகளை கூப்பி அடம்பிடிக்கும் அவளது அழகு ஹர்ஷாவின் மனதை சுண்டி இழுத்தது.



" கத்தரிக்கா தோட்டத்த எந்த ஊர்லம்மா பாஞ்சுருபாய்க்கு குத்தகைக்கு விடுவாங்க. சொன்னா உன் புண்ணியத்துல நானும் நாலு ஏக்கர் வாங்கிக்குவேன் " என்று இடக்காக பேசிய காய்கனி வியாபாரியிடம் மல்லுக்கு நின்றவள் "ப்ச்.. சொல்லி குடுங்க ண்ணே" என்றவள் "வெண்டைக்கா முத்தலா தெரியுதே?" என்றபடி காம்பை ஒடித்து பார்க்க அவளது சாதரணமான காய்கறி வாங்கும் படலம் அவனது கண்களுக்கு காண கிடைக்காத அறிய காட்சியாக தோன்ற காருக்கு முன்னால் நின்று தொண்டை வறல கத்தும் குண்டு பெண்மணி கண்களுக்கு புலனாகவில்லை.



அந்த பெண்ணிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நின்றது என்னவோ கவின் தான். "சார்..." பொறுமையை இழந்து அவன் கத்த ரசனை களைந்தான் ஹர்ஷா. "ஆன்.. எதுக்குடா கத்துற?" எரிச்சலாக கேட்க விரலை மட்டும் வைத்து சுட்டி காட்டியவன் " அந்த அம்மாவோட குரல் உங்களுக்கு கேட்கவே இல்லல்ல?" என்றான்.



"யாரு இந்த அம்மா?" என்ற ஹர்ஷாவின் கேள்வியில் தலை சுற்றி போனான் கவின். "சரி எனக்கு டைம் இல்ல நீ இறங்கி போய் பேசி அனுப்பு" என்று அவனை விரட்டியவன் அவளை கண்களால் தேட அந்த பெண் அங்கிருந்து சென்றிருந்தாள்.



ஹர்ஷா தலையை சீட்டில் சாய்த்தவன் "ச்ச மிஸ் பண்ணிட்டேன். எல்லாம் இவனால வந்தது. எங்க அவன்.. " கவினை வரசொல்லி ஹார்ன் அடிக்க கை கூப்பி கண்ணீர் வடிக்காத குறையாக நின்ற கவின் விட்டால் போதும் என ஓடி வந்து காரில் புகுந்தபடி மூச்சு வாங்கினான். ஹர்ஷா அவனை முறைக்க கவின் "சார்.. அப்டி பார்க்காதீங்க. நியாயமா பார்த்தா நான் தான் உங்கள அப்டி பார்க்கனும். கொஞ்சம் விட்டிருந்தா அந்தம்மா என்ன வெட்டி கொழம்பு வச்சிருக்கும். இந்த ஏரியால உயிருக்கே உத்தரவாதம் இல்ல.. ஆத்தீ" நெஞ்சில் கை வைத்து பேசியபடி குடியிருப்பை சுற்றி பார்வையை பதித்தான்.



ஹர்ஷா அவனது புலம்பலை காதில் வாங்கியபடி " அப்டி சொல்ல முடியாது கவின். இந்த இடம் கூட பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா.. பசுமையா தான் தெரியுது " என்றபடி ஆர்சை கடக்க "பசுமையா... சார் இது என்ன ஹில் ஸ்டேஷனா பசுமையா இருக்க. அந்த ஸ்கைபுளூ சுடிதார் பொண்ண தவிர இங்க பசுமையா வேற என்ன இருக்கு?" என்று முணுமுணுக்க ஹர்ஷா உதடுகளை சிரமமின்றி வளைத்தவன் "ஹில் ஸ்டேஷன் போக அந்த ஸ்கைபுளூ சுடிதார் மாதிரி மனச நெரைய வைக்க ஒரு பொண்ணு வேணும் கவின்." என்றான்.



"அப்போ முடிவே பண்ணிட்டீங்களா?"



"ஓய் நாட்?"



"பட் சார்.. அந்த பொண்ணு ஒரு கத்தரிக்காய் விக்கிரவனையே கழட்டி மாட்டுறா. ஹஸ்பண்டா போனா உயிருக்கு உழை வச்சாலும் ஆச்சரியப்பட ஒன்னுமே இல்ல... இது டிஸ்கிளைமர் தான். அதுக்கு மேல உங்க இஷ்டம்" என்றவன் சீட் பெல்டை கலட்ட இருவரும் காரை பார்க் செய்துவிட்டு இறங்கினர்.



ஹர்ஷா சுற்றிலும் பார்வையை சுழல விட அவனது கண்களுக்கு பெண் பதுமை தென்படவில்லை ஆனால் மொட்டை மாடியில் தீவிர முக பாவனையை கொண்டவனாக நின்ற அருளை கண்டுகொண்டான்.



கவின் "சார்.. கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. எதுக்கு சார் நம்ம அந்த கிரிமினல பாக்க வந்திருக்கோம்?" மனதில் பட்டதை கேட்க ஹர்ஷா தோளை குலுக்கியவன் "ஏன் நீ இவ்ளோ இன்செக்கியர்டா ஃபீல் பண்ணுற. உன் இடத்த அவன் பிடிச்சுடுவான்னா?" அசால்டாக கேட்க அதிர்ந்த கவின் "தெய்வமே ஏன் தெய்வமே.. எதுக்கு... அங்க சுத்தி இங்க சுத்தி என் தலையில கை வைக்கிறீங்களே நியாயமா?" வராத கண்ணீரை துடைக்க ஹர்ஷா அவனது தோளில் கை போட்டவன் "பயப்படாத நம்ம இங்க வந்தது வேற விஷயத்துக்காக" என்று சொல்லிவிட்டு அருளை சுட்டி காட்டியபடி "வந்து நடக்குறத பாரு கவின். எல்லாத்தையும் முன்னாடியே தெரிஞ்சுக்க ஆசப்படாத" என்றவன் முன்னே நடக்க கவின் அவனை பின் தொடர்ந்தான்.



இருவரும் படிகளில் ஏறியபடி அவன் முன் சென்று நிற்க "வா சார்.. நேத்து தான் மீட் பண்ணோம். இன்னிக்கு என் வீடு தேடி வந்திருக்க. என்ன விஷயம்?" கேட்டுவிட்டு திண்டில் சாய்ந்தபடி கைகளை கட்டிக்கொள்ள அவனை போலவே சாய்ந்து நின்றுகொண்டு ஹர்ஷா பேசும் முன் " நீ என்ன பிரைம் மிஸ்டரா.. உன்ன பார்க்க வர ஸ்பெஷல் பெர்மிஷன் எதுவும் வாங்கனுமோ" நக்கலாக கேட்டான் கவின்.



" நீயும் உன் பாஸும் என்ன பார்க்க வந்திருக்கீங்க. அப்டி பார்த்தா என்கிட்ட உங்களுக்கு ஏதோ காரியம் ஆகனும். பிரைம் மிஸ்டர் கிட்ட அது கிடைக்க வாய்ப்பில்ல. இப்போ உங்களுக்கு நான் பிரைம் மினிஸ்டர்க்கும் மேல" கெத்தாக புருவம் உயர்த்தி கர்வத்துடன் சொன்னவன் " உன்ன அடிச்சு இதோ இந்த பேப்பர்ல சைன் வாங்கி தர சொல்லி எனக்கு ரெண்டு லக்ஷம் குடுத்தாங்க. நான் வேலைய சரியா செய்யல...நைட்டே பணத்தையும் குடுத்துட்டு பத்திரத்தையும் கையோட எறிச்சுட்டேன் " என்றான்.



"உன்னால எனக்கு டூ லாக் லாஸ்" என்றவன் திரும்ப ஹர்ஷா யோசனை தாங்கிய முகத்துடன் "நீ கேட்டாலும் சொல்ல மாட்ட ஆனா எனக்கு பதில் தெரிஞ்சே ஆகனும் அருண்" என்றவனை இடைவெட்டி "அருள்" என்று திருத்தினான்.



"ஃபைன் அருள்" அவன் சரியாக திருத்திச் சொல்ல " உன்ன அடிக்க சொன்னது எஸ்.என் குரூபோட சேர்மேன் நாராயணசாமியோட ஓரே பையன் சந்தோஷ்" தயக்கமோ பயமோ துளியும் இன்றி சொன்னவனை புரியாத பார்வை பார்த்தான் ஹர்ஷா.



"வாட்.. சந்தோஷா?" அவனது ஆச்சரியத்தின் காரணம் அருளுக்கு விளங்கவில்லை என்றாளும் கவின் உணரந்துகொண்டபடி கண்களை ஆச்சரியத்தில் விரித்தான். "அவன உனக்கு தெரியுமா சார்?" என்றான் அருள்.



"ம்ம்.. ஹீ இஸ் மை ஃபிரண்ட். நானும் அவனும் ஒரே ஸ்கூல்ல படிச்சோம். திக் லைக் பிளட். அந்தளவுக்கு க்ளோஸ்" என்றதும் அருள் உதட்டோரமாக சிரித்தவன் " புலி தோள் போர்த்திய ஆடு.. காசுக்கு முன்னாடி ஃபிரண்ட்ஷிப்... லவ் எதுக்கமே ஒர்த் இல்ல சார்.. ஃபீல் பண்ணாத ஃபிரியா விடு" என்றான்.



ஹர்ஷா "இசியா சொல்லிட்ட.. ஓகே அத விடு. நான் நேத்து உன்கிட்ட யாரு அனுப்புனதுன்னு கேட்டபோ நீ சொல்லல்ல. இப்போ எப்டி?" அவன் கேட்க பிடறியை தேத்தவன் "அவனுக்கும் எனக்கும் நேத்தே கணக்கு தீர்ந்துடுச்சு...தீர்த்துட்டேன். அவன் காசு குடுத்தான்.. ஒத்துக்குறேன் வேலை சொதப்பிடுச்சு.என் தப்பு தான். அதுக்காக என் மேல கை வைப்பானா. அதன் அவன் பி.ஏ கைய ஒடச்சுட்டேன்." அருள் சொன்ன விதத்தில் கவின் கையில் உண்டியல் சத்தம் உணர்ந்தான்.
கவின் மருண்டு விழிக்க அருள் தொடர்ந்தான் "அவனுக்கும் எனக்கும் பிரச்சினை..அதுனால உன்கிட்ட சொன்னேன்னு தப்பா நினைச்சுடாத.. உயிரே போனாலும் அருள் யாரையும் காட்டி குடுக்க மாட்டான். நேத்து உன்ன அடிக்க வந்தவன் நான். ஆனா நீ என்மேல வெறுப்ப காட்டல. என்ன போலிஸ்ல காட்டி குடுக்கல.எல்லாத்துக்கும் மேல பணம் இருக்குன்னு பந்தாவா சீன் போடல."



"அது எனக்கு புடிச்சிருந்துச்சு. அருள தேடி வந்த நீ சும்மா திரும்பி போக கூடாது. நான் எத்தனையோ பணக்காரங்கள பார்த்திருக்கேன். எவனும் உன்ன மாதிரி இல்ல சார். நல்லவனுக்கு நாற்காலி கூட எதிரின்னு சொல்லுவாங்க. நீ ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும் சார்...பூராம் களவாணி பயழுக" என்றான்.



ஹர்ஷா முறுவலித்தவன் "என்ன நான் பார்த்துக்குவேன்னு நீ நம்புற...ஐம் ஹாப்பி. நான் உன்கிட்ட வந்த விஷயமே வேற அருள். எனக்கு உன்னோட உதவி தேவ." என்று நிறுத்தினான்.



" சொல்லு சார். என் தகுதிக்கு ஏத்த வேலையா இருந்தா சிரம் தாழ்த்தி ஏத்துக்குறேன்" என்றவன் தலையை தாழ்த்தி உயர்த்த ஹர்ஷா தொண்டையை சரி செய்தபடி வந்த வேலையை கூறி முடித்தான்.



அனைத்தையும் பொறுமையாக கேட்ட அருள் "சோ.. ஒரு பெண்ணுக்கு என்ன பாடி கார்ட் வேலை பார்க்க சொல்ற. நான் இத ஒத்துக்குவேன்னு நீ எப்டி நெனச்ச?" தாடையை தேய்த்தபடி கேட்க கவின் "ஏன் பாடி கார்ட் வேலைன்னா பார்க்க மாட்டியா? வேலை செய்ய போற காச வாங்கிக்க போற. செய்ன்னு சொன்னா செஞ்சு முடிக்க ஆயிரம் பேர் இருக்காங்க. ஏதோ சார்க்கு பர்ஸ்னலா உன்ன அப்பாயிண்ட் பண்ணனும்னு ஒரு எண்ணம்.. அவ்ளோதான். உடனே உன்ன நீயே ரொம்ப பெரியவனா பீல் பண்ணி பில்டப் பண்ணிகாத" என்று கடுகடுத்தான்.



அருள் "நான் கூலி படை தான். ஆன எனக்குன்னு சில எத்திக்ஸ் இருக்கு. உன்ன மாறி கூஜா தூக்கிட்டு அழைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லன்னு சொன்னா என்ன பண்ணுவ?" புருவம் உயர்த்த "அருளே" என்ற அழைப்புல் மூவரும் படிக்கட்டுகளை பார்த்தனர்.



அதே ஸ்கைபுளூ சுடிதார்.. அதே உயரம் அது அவளே தான். ஹர்ஷாவின் உதடுகள் "கத்தரிக்கா" என்று தானாக முணுமுணுத்துக் கொண்டது. அவன் வாய் பிளக்காத குறையாக பார்க்க கவின் அதை புரிந்து பார்க்க அருள் புரியாமல் மனதில் குறித்துக்கொண்டான்.



கவின் அருளை பார்த்தவன் ஹர்ஷாவை சுரண்டி "சார்.. உணர்ச்சி வசத்த கட்டுப்படுத்துங்க. அவன் உங்கள தான் பார்க்குறான் " காதை கடிக்க முயன்று மனதை மாற்றியவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.



காதம்பரி அருளை தேடி வந்தவள் " உன் ஃபோன் அடுச்சுட்டே இருக்கு. நீ என்ன ரொம்ப நேரமா கீழ வராம இருக்..." என்று பேச்சை முடிக்கும் முன்பே புதியவர்கள் அவளது பார்வையில் விழுந்து விட்டனர். வரவழைக்கப்பட்ட சிரிப்பை உதிர்த்தபடி தமயனிடம் ஃபோனை நீட்டியவள் "சமச்சுட்டேன்.. போட்டு சாப்பிட்டுக்கோ நானும் பாப்பாவும் வெளியில கெளம்பிட்டோம்" என்று படபடவென்று சொல்லிவிட்டு அதே சிரிப்புடன் விடைபெற்று சென்றாள்.



அவள் கொடுத்த தகவல் ஹர்ஷாவின் மூளையை சூடேற்றி பார்க்க அருளுக்கு கத்தரிக்கா என்ன உறவாக இருக்கும் என்ற அய்யம் எழுந்தது. "அருள் இப்போ போறங்களே அந்த பொண்ணு உனக்கு..." அவன் இழுக்க மனமோ அவ்வாறு இருக்க கூடாது என அவனது யூகத்தை பழித்தது.



" என் தங்கச்சி." அழுத்தமாக விழுந்தது வார்த்தைகள். அவனது கடுமை கவினுக்கு உள்ளே குளிரை பரப்ப ஹர்ஷா எதற்கும் அலட்டிக்கொள்பவன் இல்லையே.



"இவங்களுக்கு ஏதாச்சும் ஆபத்து இருக்குன்னு உனக்கு தெரிஞ்சுச்சுன்னு வையேன். நீ என்ன பண்ணுவ? "



"வெட்டி போட்டுருவேன்"



" அதே மாதிரி தான் நானும். இஷிக்கு எதாவது ஒன்னுனா.. ம்ஹூம் இல்ல. அவளுக்கு எதுவும் ஆக கூடாது. அருள்... என்ன சுத்தி இப்போ பல பிரச்சனை இருக்கு. அத நான் தான் சமாளிக்கனும். அட் தி சேம் டைம் நான் இஷிய பாதுகாப்பா வைக்கனும். இது ரெண்டுமே நடக்கனும்னா.. அது உன்னால மட்டும் தான் முடியும். நீ இஷி கூட இருந்தா.. நான் எந்த டென்ஷனும் இல்லாம இருப்பேன். உன்ன நம்பி வந்துட்டேன் யோசிச்சு சொல்லு அருள். இது என் கார்ட். நம்பர் மாறாது. ஒரே நம்பர் தான்" கண்சிமிட்டி சொல்லிவிட்டு கார்டை கையில் திணித்தபடி அவன் படியை நோக்கி நடக்க கவினும் உடன் நடந்தான்.



வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கார்டை இரண்டு முறை திருப்பி பார்த்தவன் "சார்.." என்றதும் ஹர்ஷா அவனை ஏறிட்டுப் பார்த்தவன் " நீயும் ஒரு அண்ணன். என் நிலமைய யோசிச்சு முடிவெடு. இஷியும் உன் தங்கச்சியும் உனக்கு வேறையா தெரிய மாட்டாங்க" என்றவன் கீழே இறங்க அவன் காப்பாற்ற துடிக்கும் இஷி என்பவளோ வம்பை வட்டியும் முதலுமாக வசூல் செய்து கொண்டிருந்தாள்.



நெடு நெடு வென்று வளர்ந்த ஒருவனை காது சவ்வு கிழியும் பதத்திற்கு ' பளார் ' என்று கன்னத்தில் ஒன்று வைக்க இடியாக விழுந்த அடி சத்தத்தில் அந்த மொத்த பப்பும் அவளது செயலில் ஈ ஆடது போனது.



அடி வாங்கியவன் அவளை முறைக்க "என்ன பார்க்குற.. இந்த அடி எதுக்கு தெரியுமா.. நீ லில்லிகிட்ட மிஸ் பிஹேவ் பண்ணதுக்கு மட்டும் இல்ல. இனி ஒரு தடவ எந்த பொண்ணுகிட்டயும் மரியாதை இல்லாம நடந்துக்க கூடாதுன்னு தான்" விரல் நீட்டி பத்திரம் காட்டியவள் தீயாக முறைத்தபடி தோழி லில்லியுடன் ரேம்பை விடுத்து வாயிலை நோக்கி நடந்தாள் இஷாரா.
 
அருமை.. அருள் நீ கொடுத்த இன்ஸ்டா id வச்சி வீடு கண்டுபிடிச்சி வர அளவுக்கு வீக் யா இருந்தா எப்படி இந்த தொழில் செய்ய முடியும் அது உன் கூட இருக்குற உன் குடும்பத்துக்கு ஆபத்து தானே..

இப்போ நீ உண்மையை சொல்லிட்ட அந்த சந்தோஷ் உன்னை சும்மா விடுவானா..

thank u so much font பெரிசா இருக்கு படிக்க கம்ஃபர்ட் யா இருக்கு
 
Top