Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே மொழி 6

Advertisement

TNWcontestwriter049

Member
Member


மொழி 6

கண்கள் காணும் இடமெல்லாம் மாணவர்கள் கூட்டம் சலசலப்பை ஏற்படுத்தியபடி கடந்து செல்ல அதை சற்றும் பொருட்படுத்தாமல் நடந்து வந்தது மூவர் அணி. "ப்ச்.. இஷி எதுக்குடி இப்டி மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்க. நடந்தது நடந்து போச்சு. அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்காம உர்..ன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு சுத்துற" அவளது தோளில் கை போட்டபடி கேட்டாள் இஷாராவின் தோழி ஃபரா.



அணிந்திருக்கும் ஹிஜாப் மடிப்பு மாறாமல் இருக்க முட்டை கண்கள் இரண்டு அஞ்ஜனத்தில் அமிழ்ந்து கிடந்தது. இஷாராவின் முகம் இன்னும் தெளியாமல் இருக்க "விடு ஃபரி. அவள பத்தி உனக்கு தெரியாதா என்ன. அவளுக்கு ஒரு விஷயம் பிடிக்கலன்னா டிஸ்ட்ரப் ஆயிடுவா" தோழியின் மனதை கணித்தவளாக சொன்னாள் லில்லி. அல்லியை போலவே சிவந்த முகம். வாரி சீவிய போனிடைல். இரு புருவத்திற்கும் நடுவே கூர்மையான விழிகளுக்கு மட்டுமே அகப்படும் கருப்பு பொட்டு. இவர்கள் தான் இஷாராவின் தோழிகள். மூவருக்கும் ஒற்றுமை அவர்களின் நட்பு. கஷ்டமான சூழ்நிலையிலும் மூவரும் ஒருவரை ஒருவர் அரவணைத்து ஆறுதலாக இருப்பதும் கூட நட்பியல் தான்.



" ம்ம்... ச்ச" என்று இஷி கால்களை தரையில் உதைத்த விழுக்கென நிமிர்ந்து கொண்டாள் ஃபரா "என்ன தான் டி உன் பிரச்சின?" அவள் அலுத்தவளாக கேட்க சிணுங்கி இஷாரா "அவன எனக்கு சுத்தமா பிடிக்கல ஃபிரிம்மா.. அவன்... அவன் ஒரு டார்ச்சர். என்ன எப்டி டாமினேட் பண்ணுறான் தெரியுமா? ஐ ஜஸட் ஹேட் தட் இடியட்." என்றவளை பாவமாக பார்த்தாள் ஃபரா.



"இஷி காம் டவுன்.. என்ன ஆச்சு இப்போ. மூனு நாளாவே நீ சரியில்ல. கேட்டா பாடிகார்ட்... இடியட்ன்னு சொல்ற.சரி நீயா சொல்லுவன்னு நானும் விட்டேன். இப்போவாச்சும் வாய தெற இஷி" அவளது தாடையை விரலை கொண்டு உயர்த்த இஷியின் வாடிய வதனம் தான் காண கிடைத்தது.



" ஹர்ஷா எனக்கு ஒரு பெர்ஷனல் பாடி கார்ட அப்பாயிண்ட் பண்ணியிருக்கான் ஃபரா.. அங்க தான் எல்லாமே ஸ்டார்ட் ஆச்சு." என்றவள் மூன்று நாட்களுக்கு முன் பயணித்தாள். அலாரம் செய்த சதியால் மணி எட்டை காட்ட அவசரமாக எழுந்து இஷாரா அரைகுறையாக குளித்துவிட்டு தலையை துவட்டியும் துவட்டாமலும் உயர்த்தி கொண்டையிட்டபடி கிரீம் நிற ஆஃப் ஷோல்டர் டீ ஷர்டும் ரிப்ட் டெனிமுமாக தயாரானவள் கீழே செல்ல அவளது வருகைக்காகவே காத்திருந்தவன் போல அமர்ந்திருந்தான் ஹர்ஷா. இஷியின் இயந்திரத்தனமான வாழ்க்கை ஹர்ஷாவின் கடின நடவடிக்கையால் சற்றே மேம்பட்டிருந்தது.



ஹர்ஷாவை பார்த்ததும் முதலில் முகம் மலர்ந்தவள் "நீ எனக்காகவா வெயிட் பண்ணுற?" கண்களை சுருக்கி சந்தேகமாக கேட்க தலையை ஆமோதிப்பாக ஆட்டிய ஹர்ஷா "உன்கிட்ட கொஞ்சம் பேசனும். ஹைலி இம்பார்டண்ட்" என்றவனின் பீடிகையே அவளுக்கு உள்ளே 'ஏதோ சரியில்லை' என்று பச்சி சொல்லியது.



" நீ பேசு.. பட் இப்டி பெருசா பில்டப் பண்ணாம டைரெக்டா பேசுனா நல்லா இருக்கும்" சொல்லிவிட்டு ஹர்ஷாவை பார்க்க அவன் "ம்ம்.. நேத்து பப்ல ஒருத்தன அறைஞ்சியே யாரு அவன்?" என்றதும் முதலில் உதட்டை வளைத்தவள் "அறைஞ்ச வரைக்கும் உனக்கு தெரிஞ்சிருக்கு. எதுக்குனு தெரியலையா. ஃபைன்... அவன் ஒரு வெத்து வேட்டு. லில்லிகிட்ட அவன் வேலைய காட்ட ட்ரை பண்ணுனான். அதான் நான் ரெண்டு காட்டு காட்டுனேன்" பற்களை கடித்தபடி அவள் சொல்ல ஹர்ஷா நிதானமாக கேட்டபடி இருந்தான்.



"ரீசன்ட் டேஸ்ல.. உன்ன ஃபாலோ பண்ணுற மாதிரி... இல்லனா எதாவது ரேண்டமா..." அவன் முடிக்காமல் தொடர " எப்டி ஹர்ஷா.. நேர்ல பார்த்த மாதிரி சொல்ற. உன்கிட்ட சொல்றதுக்கு என்ன. ஒரு போஸ்ட் மரத்துக்கு பொறந்த பையன் நான் எங்க போனாலும் பின்னாடியே வருவான். நான் கூட இது அம்மா வேலையா இருக்கும்ன்னு நெனச்சேன். ஆனா போக போக அது இல்லன்னு தெரிஞ்சுக்கிட்டேன்." என்றவள் சற்று நிறுத்த ஹர்ஷா "சோ.. உனக்கே தெரியுது. உன்ன சுத்தி ஏதோ சரியில்ல. அப்டிதான?" என்றதும் "மே பி" என்று அசட்டையாக தோளை குலுக்கினாள் இஷி.



" சரி.. உன்ன நானே காலேஜ்ல ட்ராப் பண்ணுறேன் இஷி" என்றபடி முன்னால் நடக்கும் தமயனை நிறுத்த எண்ணம் கொண்டவளாக "வாட்.. ஹர்ஷா நீ சீரியசாவ சொல்ற" கேட்க சட்டென்று நின்றவன் அவள் முகம் பார்த்தபடி "நான் விளையாட்டுற மூட்ல இல்ல இஷி. யூ ஆர் இன் டாம் டேஞ்சர். கேள்வி கேட்காம கூட வரியா. ப்ளீஸ்" என்றவனை புதிர் விளங்கா பார்வை பார்த்தாள் இஷாரா.



"ஹர்ஷா நீ சின்ன விஷயத்துக்கு ஓவரா ரியாக்ட் பண்ணுறியோன்னு தோணுது" என்றதும் அதை ஏற்றுக்கொண்டவன் "எது ஒருத்தன் உன்ன ஃபாலோ பண்ணுறது சின்ன விஷயமா?..உனக்கு எப்டியோ இஷி எனக்கு இது சின்ன விஷயம் இல்ல. ஆர்கியூ பண்ண எனக்கு டைமும் இல்ல புரிஞ்சுக்கோ இஷி" பேசியபடி இருவரும் கார்டனை நெருங்கினர்.



ஹர்ஷா ஃபோனை கையில் எடுக்க "சார்" என்ற சத்தம் கேட்டு திரும்பினான். கேட்டில் இருந்து வீட்டை இணைக்கும் சிமெண்ட் பாதையில் நடந்து வந்தான் அருள். ஹர்ஷா அவனை அறிந்து கொண்டவன் சிரிக்க மாறாக இஷாராவின் முகம் கடுகடுப்பை தத்தெடுத்தது.



"வா அருள்" அவன் வரவேற்க அவனது அருகில் வந்து நின்றவன் "என்ன சார் நீ பாட்டுல கார்ட கையில குடுத்துட்டு வந்துட்ட. நீ சொன்னத நெனச்சு ராத்திரி தூக்கம் போச்சு சார். நமக்கு இந்த பொண்ணுங்க.... செட்டாகாது சார் " என்றதும் "ஓஹ்.. பொண்ணுங்க செட்டாகாம தான் மூனு மாசமா என்ன ஏதோ மாதிரி ஃபாலோ பண்ணுனியா மேன்?" காட்டமாக வார்த்தைகள் வந்து விழ அருள் இப்போது தான் ஹர்ஷாவை விடுத்து அவள் புறம் திரும்பினான்.



மூக்கின் நுனி சிவக்க அவனை முறைக்கும் இஷாரா அவனுக்கு புதிதல்ல. அவளை மேலிருந்து கீழாக ஒருமுறை பார்த்தவன் “அட..அட..அட.." என்றபடி கைகளை தட்டியவன் ஹர்ஷாவை நெருங்கி "ஏன் சார் இந்த புள்ளையா உன் தங்கச்சி?" தாடையை தேய்த்தபடி கேட்டவனின் பார்வை இன்னும் இஷியிடம் தான் இருந்தது.



ஹர்ஷா " ஆமா..இஷிய உனக்கு முன்னாடியே தெரியுமா அருள்?" அவன் தெறிந்து கொள்வதற்காக கேட்க "அத நான் சொல்றேன் ஹர்ஷா. சார் பெரிய ரோமியோ.. ரோட்டுல போற ஒரு பொண்ண விட மாட்டாரு. பொண்ணுங்க பின்னாடி சுத்துறது தான் அவரோட ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி." நக்கல் சிரிப்புடன் சொல்ல அருள் பேண்ட் பாக்கெட்டில் கையை திணித்தவன் "தெரிஞ்சவங்க சொல்றாங்க கேட்டுக்கோ சார்...போயும் போயும் இந்த புள்ளைக்கா பாடி கார்ட் தேடுற நீ?" என்றான் அவன்.



"ஏய்" அவள் விரல் நீட்ட அவளது விரலை பிடித்து வளைத்தவன் "ஐய்யய்ய.. சும்மா கத்தாதம்மா. சார்.. ம்ஹூம்.. இது சரிபட்டு வராது. உன் தங்கச்சிக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்ல. உன் தங்கச்சிகிட்ட இருந்து தான் இங்க நெறைய பசங்களுக்கு பாதுகாப்பு தேவைபடுது."



"சொல்றேன்னு தப்பா நினைக்காத சார்.. இது வீட்டுல தங்குனத விட பப்பு பார்ட்டினு சுத்தினது தான் அதிகம். இதெல்லாம் எனக்கு எப்டி தெரியும்னு தான பார்க்குற?" அவனே சொல்லிவிட்டு அவனே கேள்வியையும் கேட்க ஹர்ஷா கடமைக்கு தலையை அசைத்தான்.



"எனக்கு பொண்ணுங்க மேல இருக்க மதிப்பு போக காரணமே இதோ இந்த புள்ள தான். இத ஃபாலோ பண்ணுற வேலைய குடுத்தாலும் குடுத்தாங்கே கிளப்புல மப்புலன்னு என்ன லோலோன்னு அலைய விட்டுருச்சு." என்றவன் குற்றம் சாட்ட விரலை போராடி அவன் பிடியில் இருந்து மீட்டவள் "ஸ்ஸ்.. பொண்ணுங்க பின்னாடி சுத்துறதே தப்பு. இதுல பெருமை பேச்சு வேற. சுத்த இடியட்டா இருக்கான்...இவன் கூட உனக்கு என்ன டீலிங் ஹர்ஷா?" கடுகடுப்புடன் கேட்டவள் விரலை தேய்த்துக் கொண்டாள்.



"ஆமா.. இந்தம்மா ரதிதேவி.. அப்டியே ஃபாலோ பண்ணிட்டாலும். அம்மாடி தேவத. உன் பின்னாடி நான் இல்ல மானமுள்ள எந்த ஆம்பிளையும் சுத்த மாட்டான்" என்றான்.



"ஹர்ஷா திஸ் இஸ் த லிமிட். அவன் பேசிட்டே போறான் நீ சைலன்டா நிக்கிற?" குற்றம் சாடினாள். ஹர்ஷா நிதானமாக நிமிர்ந்தவன் "இஷி போதும்..அருள நான் தான் வர சொன்னேன். அவன உன் பாடிகார்டா அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். இனிமே அவன் தான் உன்ன வெளியில கூட்டிட்டு போவான். நீ எங்க போனாலும் சரி அருளோட புரொடக்ஷன் இல்லாம போக கூடாது." அவரால் இஷியின் தலையில் இடையே இறக்கினான்.



இஷி வாய் திறக்கும் முன் முந்திக்கொண்ட அருள் "தப்பு சார்.. நான் இங்க வந்ததே உன்கிட்ட என் நிலைமைய புரிய வச்சு இது சரிவராதுன்னு சொல்லிட்டு போக தான். அப்றம் இந்த பொண்ணுக்கு பாடிகார்ட் வேலை பார்க்குறத இந்த அருள் அவமானமா நினைக்கிறான். நான் வந்த வேலை முடிஞ்சுது..வரேன் சார்." என்றபடி அவன் திரும்ப இஷியின் ஏளனம் அவனை அடுத்த அடி எடுத்து வைக்க விடவில்லை.



"போ மேன் போ.. நீ என்ன வேணாம்னு சொல்றது. நானே சொல்றேன்.. ஹர்ஷா எனக்கு பாடி கார்டா இருக்க என்ன தகுதி இருக்கு இந்த இடியட்க்கு. லுக் மிஸ்டர்..என் ஸ்டேட்டஸ் தெரியாம என் முன்னாடி வந்து நின்னு பேசிட்ட.. ஏதோ நான் நல்ல மூட்ல இருக்கேன். அதுனால தப்பிச்ச. இல்லனா இந்த இஷி யாருன்னு நீ பார்த்திருப்ப" கோணலாக சிரித்தபடி சொன்னவள் அறியவில்லை அது தான் அவள் செய்த மிகப்பெரிய தவறு என்பதை.



"அடிப்பாவி... அவனே வேணாம்னு போயிருக்கான். நீ எதுக்குடி தேவையில்லாத டயலாக்லாம் பேசுற?" என்றாள் லில்லி. இஷி "பின்ன அவன பார்த்தாலே எனக்கு பத்திக்கிட்டு வருது டி. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல அதான் திட்டிட்டேன்" கோபமாக தொடங்கியவள் முகத்தை கூம்பியபடி முடித்தாள்.



ஃபரா "அப்றம் என்ன ஆச்சு" கன்னம் தாங்கி கதை கேட்க அவளது கையில் இடித்தவள் "எரும மாடு நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்" என்று திட்டியவள் லில்லியும் ஊக்க மீண்டும் தொடர்ந்தாள்.



இஷியின் பேச்சில் இருந்த ஏளனம் மிளகாய் நெடியாக உரைக்க அருள் மீண்டும் நடந்து ஹர்ஷாவின் அருகில் வந்தவன் இஷியை கூறு போடும் பார்வை பார்க்க "ப்ச்.. நீ இன்னுமா போல.. ஹர்ஷா நீ ஏன் உன்னோட இந்த அல்ட்ரா லெஜண்ட் ஃபிரண்ட அவரு வீட்டுல ட்ராப் பண்ண கூடாது. போன வேகத்துல திரும்பி வந்தத பார்த்தா சம்திங் ஃபிஷி..பாவம் அவருக்கு என்ன கஷ்டமோ. நீ பாரு..காலேஜ்க்கு நான் ட்ரைவர் கூட போயிக்கிறேன்" என்றவள் கார் கீயை கேட்டு கையை நீட்ட ஹர்ஷா "இல்ல இஷி. நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன். நீ அருள் கூட இருக்குறது தான் உனக்கு நல்லது" என்றான்.



"ஹர்ஷா.. ஹர்ஷா.. ப்ளீஸ். உனக்கு புரியலையா.. என்னால கண்டவன் கூட டிராவல் பண்ண முடியாது. மீறி நீ பிடிவாதம் பிடிச்சா ஐ வோண்ட் கெட் இன் டூ த கார்"பிடிவாதமாக சொல்லிவிட்டு கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக்கொண்டவள் அருளை முறைக்க அவளுக்கு சற்றும் சளைக்காத பார்வை பார்த்தவன் ஹர்ஷாவின் முன் கையை நீட்டியபடி "நீ சாவி குடு சார்... மேடம் கார்ல ஏறுவாங்க" என்றான்.



ஹர்ஷா அருள் சொல்வதை உள்வாங்கி ஜீரணித்தவன் "தாங்க் காட்" என்றபடி சாவியை அருளிடம் தர இஷியின் மூளையின் பல்ப் சற்றே தாமதமாக எறிந்தது. "ஹர்ஷா நோ. குடுக்காத வேண்டாம்" எச்சரித்தாள்.



அவளது பேச்சை ஹர்ஷா காதில் வாங்கியதாக தெரியவில்லை. சாவியை அருளிடம் நீட்ட " ஓஹ்.. அப்டியா. ஓகே " என்றவள் தோளை குலுக்கியபடி ஒதுங்கி நிற்க ஹர்ஷா "இஷி.. டோண்ட் பீ சில்லி." என்றதும் அவனை இடை வெட்டிய அருள் "சார்.. நீ இங்த நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம உள்ள போ. உன் சிஸ்டர் என் பொறுப்பு. இப்போ மேடம் கார்ல ஏறுவாங்க.." என்றான் பிடிவாத குரலில்



" இல்லனா?" இறுக்கமான குரலில் அவள் கேட்க அருள் "இல்லனா கார் மேடம் மேல ஏறும்" சொல்லிவிட்டு அவளை போலவே கோணலாக சிரித்து காட்டினான். இஷி "யூ.." என்று தொடங்க காரின் கதவை திறந்து உள்ளே நுழைந்து கொண்டவன் அவனது முழு வேகத்தையும் காட்ட ஹர்ஷா "இஷி.. அவன் ஒரு மாதிரி. சொன்னா செஞ்சுடுவான். லூசு பையன் பார்த்து நடந்துக்கோ" என்றபடி உள்ளே செல்ல "ஹர்ஷா.. ஹர்ஷா.... அடப்பாவி" என்றவள் பாவமாக முகத்தை வைத்தபடி திரும்ப அருள் கண்களை சுருக்கி பார்த்தான்.



இஷி நடந்ததை கூறி முடிக்க விழுந்து விழுந்து சிரித்தனர் தோழிகள் இருவரும். "தேவையா உனக்கு. வழியில போன ஓநாய எடுத்து ஸ்கர்ட்ல விட்டுட்ட." என்ற லில்லியை இஷி முறைக்க ஃபரா "லில்லி அது ஓநாய் இல்லடி. ஓணான்..." தோழியை திருத்தியபடி அவளும் சிரிக்க இஷி முகத்தை தூக்கி பிடித்தபடி "நல்லா சிரிங்க.. என்ன பார்த்தா எல்லாருக்கும் சிரிப்பா தான் இருக்கு. நீங்க ஏதாச்சும் வழி சொல்லுவிங்கன்னு பார்த்தா நீங்களும் சிரிக்கிறீங்க.. போங்கடி..உங்களுக்கு அந்த இடியட்டே பரவாயில்ல" என்றவளை தேத்தினர் தோழிகள் இருவரும்.



"இஷிம்மா ரிலாக்ஸ்.. இப்போ என்ன அவன் வேலைய விட்டு போகனும் அவ்ளோ தான. அதுக்கு எதாவது வழி இருக்காதா என்ன."



"கரெக்ட் ஃபரா.. நம்ம எதுக்கு இருக்கோம். ப்ளான் பண்ணுறோம். தட்டுறோம்... தூக்குறோம். என்ன ஓகே வா" என்றபடி இருவரும் அணைத்துக்கொள்ள மூன்று முறை அடித்து அமர்ந்த ஹாரன் சத்தம் இஷாராவின் இரத்த அழுத்தத்தை சோதித்து பார்த்தது. பற்களை நரநரவென கடித்தவள் "நான் கௌம்புறேன் டி. முதல்ல இவன தொறத்த ஐடியா சொல்லிட்டு அப்றமா இந்த கட்டிப்பிடி வைத்தியத்த பார்க்கலாம்" என்றபடி அங்கிருந்து எழுந்தவள் வாய்க்குள் முணுமுணுத்தபடி பார்கிங்கை நோக்கி நடக்க தோழிகள் இருவரும் அவளை கையசைத்து விடை கொடுத்தனர்.

விடுவிடுவென வேக நடையுடன் காரை நெருங்கிய இஷி "எதுக்கு சும்மா சும்மா ஹார்ன் அடிக்கிற. நீ எனக்கு சம்பளம் தரியா.. இல்ல நான் உனக்கு தரேனா.?" ஆங்காரமாக கேட்க அருள் அசால்ட்டாக காரில் சாய்ந்து நின்றவன் "எனக்கு சம்பளம் தரது ஹர்ஷா.. அவர தவிர வேற எந்த கொம்பனுக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.. காலேஜ் டைம் முடிஞ்சா கெளம்புற வழிய பாரு. சும்மா நொய் நொய்ன்னு" என்றவன் காரை எடுக்க தலையில் அடித்துக்கொண்ட இஷிக்கு வேறு வழி இல்லை. கடுப்புடன் காரில் ஏற காரும் வேகமெடுத்தது.

 
arumai....முன்னாடி இஷாவை ஃபாலோ பண்ண சொன்னது யாருணு கேட்கவே இல்ல ஹர்ஷா.. அப்போ அது யாருணு ஹர்ஷாக்கு தெரியுமா..

இஷி அருள் ரெண்டும் செம பீஸ்.. டாம் அண்ட் ஜெர்ரி யா இருக்கு போகுதா இல்ல ரோமியோ ஜூலியட் யா இருக்க போகுதா
 
Top