Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே மொழி 7

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 7

மங்கிய மாலை பொழுதின் சூரிய ஒளி அந்த அப்பாட்மெண்டை குளிப்பாட்ட கண்ணாடி தடுப்பால் திரையிடப்பட்ட பால்கனியில் வழக்கமாக அமரும் சாய்வு இருக்கையில் அமர்ந்து கால்களை ஆட்டியபடி இருந்தான் ஹர்ஷா. அவனது உடல் தான் இங்கு இருந்தது. மனம் எங்கோ பறக்க மற்றதை கவனிக்க தவறியவனாக இருந்தான்.

"சார்..." இத்தோடு நான்காவது முறையாக அழைத்த கவினுக்கு அலுப்பாக இருந்தது. ஆனால் இந்த முறை ஹர்ஷாவின் நிலையில் மாற்றம் தெரிந்தது. நிமிரந்து அமர்ந்தவன் "கவின்.. இப்போ கத்தரிக்கா என்ன பண்ணிட்டு இருப்பா?" என்றதும் கவினின் கண்கள் விட்டால் இருப்பிடத்தை தாண்டி குதித்திருக்கும் அவ்வளவு பெரிதாக முழித்தான்.

ஹர்ஷா அவனது திகைப்பை பார்த்தபடி இருக்க "இத தான் இவ்ளோ நேரம் யோசிச்சுட்டு இருந்தீங்களா சார்?" என்று கேட்க தோளை குலுக்கிய ஹர்ஷா எழுந்து அமர கவின் " நான் கூட நீங்க அந்த சந்தோஷ பத்தி யோசிச்சுட்டு இருப்பீங்கன்னு நெனச்சேன்." என்றான்.

" கவின்.. நீ ஏன் அப்டி நெனச்ச. உனக்கு ஒரு விஷயம் புரியல. சந்தோஷ் எனக்கு தொழில் முறையில எதிரி. சோ அவன் என்ன கார்னர் பண்ண நினைக்கிறது நார்மல் தான்.அத நான் வேற மாதிரி டீல் பண்ணனும். அத விட்டுட்டு அதையே நெனச்சுட்டே இருந்தா எனக்கு அதுல எந்த யூசும் இருக்காது" என்றான்.

"உங்களுக்கு கோவமே வரலையா. உங்க கூட நல்லா பழகுன ஃபிரண்ட். லிட்ரலி.. இது ஒரு துரோகம். ஆனா நீங்க அத ரொம்ப கேஷுவலா எடுத்துக்கிட்டீங்க. அட்லீஸ்ட் அத பத்தின யோசனையில இருப்பீங்கன்னு நெனச்சேன். ம்ஹூம்.. உங்கள என்னால புரிஞ்சுக்க முடியல சார்" என்றான்.

"ஏன் சார் உங்க கிட்ட ஒன்னு கேட்பேன். உண்மையான ரீசன் சொல்லுவீங்களா?" பீடகை போட "கேளு" என்றான் ஹர்ஷா. "இஷாரா மேம எந்த நம்பிக்கையில அந்த அருள் கிட்ட..." அவன் முடிக்காமல் இழுக்க " உனக்கு அருள் மேல நம்பிக்கை வரலையா கவின்? இல்ல.. வேற ஏதாவது காரணம் இருக்கா?" புருவம் உயர்த்தினான். அருளை கவினுக்கு பிடிக்காமல் போனதற்கான காரணம் ஹர்ஷா அறிந்ததே.

ஹர்ஷா "அருள நான் முழுசா நம்புறேன்னு சொல்ல முடியாது. பட்... இஷியோட கேரக்டர்க்கு அருள் மாதிரி ஆளு தான் கரெக்டா இருப்பான். மனசுல நினைக்கிறத பயப்படாம தைரியமா சொல்றது சாதாரண விஷயம் இல்ல கவின்..பட் அருள் பேசுவான். அந்த சின்ன தைரியம் என்ன இம்ப்ரஸ் பண்ணிருச்சு.இப்போ உன்னவே எடுத்துக்கோ... உன்னோட சுஷ்மிதா. எதிர்த்த வீட்டுல தான இருக்கா. அவகிட்ட போய் தைரியமா பேச முடியுமா உன்னால?" என்றான்.

கவின் " அட ஆமால்ல? நீங்க சொல்றது சரிதான் சார்." அவன் முகத்தை குவிக்க அவனது தோளில் தட்டியவன் "இல்லையா பின்ன.. டெய்லி பார்க்குற. அந்த பொண்ணுக்கு தெரியலன்னா பரவாயில்ல. அவளுக்கும் தெரிஞ்சு போச்சு. அவளும் உன்ன பார்க்குறான்னு உனக்கும் தெரியுது. இன்னும் நீ ஏன் விலகி நிக்கிற கவின். இதுவே அருளா இருந்தா இந்த சைட்டிங் டேடிங்கா மாறி இப்போ கரெண்டா பேரன்ட்ஸ் மீட்டிங் வரைக்கும் போயிருக்கும்" அவன் முடிக்கும் முன் " சோ.. நீங்க நெக்ஸ்ட் டைம் கத்தரிக்காவ பார்த்தா மனசுல இருக்கத சொல்லிடுவீங்க ரைட்?" என்று ஹர்ஷாவை திணற வைத்திருந்தான் கவின்.

"வாவ்..ஐடியா நல்லா இருக்கே. சரி வண்டிய எடு இப்போவே போய் பேசிட்டு வந்துருவோம்?" என்று அடுத்த குண்டை வீச கவினின் நிலையோ மயக்கம் வராத குறை தான். "சார்.. நீங்கள் தெரிஞ்சு தான் பேசுறீங்களா. இது யூ.எஸ் இல்ல...இந்தியா. அப்டிலாம் நெனச்சதும் போய் ஒரு பொண்ணு வீட்டு வாசல்ல நிக்க முடியாது. யோசிக்காம புடிச்சா தூக்கி ஜெயில்ல போட்டுருவாங்க" தன்னால் முடிந்தவரை எடுத்து சொன்னவன் ஹர்ஷாவை பார்க்க அவனது வசனங்கள் அத்தனையும் வீணாக போனதை அப்போது தான் உணர்ந்தான்.

"கன்ட்ரி எதுவா இருந்தா என்ன கவின் காதல் ஒன்னு தான" சிலாகிப்பாக சொல்ல "எது லவ்வா?" வாயை பிளந்தான் கவின். ஹர்ஷா புன்னகை முகமாக நின்றபடி வானை அளவிட "நேத்து தான் பார்த்தீங்க. அதுவும் முழுசா முனு நிமிஷம் கூட இருக்காது. அப்றம் எப்டி சார் இது லவ்ன்னு சொல்றீங்க..ஐயோ... எனக்கு ஒன்னுமே புரியல " என்றவன் தலையை சொரிய ஹர்ஷா சிரித்தவன் பேச வாய் திறக்கும் முன் மொபைல் சிணுங்கியது. அதை கையில் எடுத்தபடி ஸ்கிரீனை பார்க்க இஷியின் பெயர் பர்பில் ஹார்டுடன் மின்னியது.

காலை தயவு தாட்சண்யம் பாராமல் கட் செய்தவன் திரும்பி கவினை பார்த்தபடி "பார்த்து பேசி பழகி வரது தான் லவ்ன்னா உலகம் ஒரு டிவர்ஸ் கேஸ கூட மீட் பண்ணாது. கவின் உனக்கு ஒரு ஃபிரி அட்வைஸ் குடுக்காவா. நீ அந்த பொண்ணுகிட்ட பேசு. உன் லவ்வோட நெக்ஸ்ட் ஸ்டெப்க்கு போ. லைஃப் ரொம்ப அழகான விஷயம். அத எட்ட நின்னு பார்த்துட்டே இருக்கது முட்டாள்தனம்." என்றவன் அருகில் அமர்ந்து கொள்ள கவின் முகம் சொல்ல தகுந்தவாறு இல்லை.

"என்ன ஆச்சு.. நான் சொன்னது உனக்கு?" அவன் கேள்வியை முன் வைக்க "ச்சே.. ச்சே... இல்ல சார் நீங்க சொல்லறது சரிதான். பட் என் தயக்கத்துக்கு காரணம் நான் தான். வாழ்க்கைய அனுபவிச்சு வாழுனும்.. பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். எனக்கும் இருக்கு. ஆனா.. அந்த பொண்ணுகிட்ட நெருங்கி பேச முடியாம ஏதோ தடுக்குது சார்"

" உங்கிட்ட சொல்றதுக்கு என்ன. மாசம் முப்பதாயிரம் சம்பளம் வாங்குற சாதாரண மிடில் கிளாஸ் பையன் சார் நானு. என் சம்பளத்த வச்சு வீட்ட பார்க்கனும். அப்பாக்கு மெடிக்கல் செலவு... தம்பி இன்னும் படிச்சு முடிக்கல. அம்மா ஒருத்தங்க எல்லாத்தையும் சமாளிக்கிறாங்க. வீட்டுக்கு மூத்த பையன்னு பொறுப்பா இல்லாம நானும் காதல் கத்தரிக்கான்னு கண்டதையும் மனசுல நெனச்சுட்டு சுத்துனா சரி வருமான்னு யோசனையா இருக்கு சார். அதுவும் அந்த பொண்ணு என்ன மாதிரி இல்ல. தங்க தட்டுல சாப்பிடுற அவ எங்க? சம்பளம் போட்டா தான் சாப்பிட முடியுங்கிற நிலைமையில இருக்க நான் எங்க" விரக்தியாக சிரிப்பை விரித்தபடி கூறி முடித்துவிட்டு மூச்சு விட்டுக்கொண்டான்.

ஹர்ஷா கவினின் பேச்சில் மொத்தமாக மூழ்கி போனான். அவனது காதுகளில் "மாசம் சம்பளம் வாங்குறவன் நிலைமை அவனுக்கு தான் தெரியும்" என்ற அவன் தந்தையின் வார்த்தைகள் அலையாக எழுந்து அடங்கியது. "ம்ம்...யூ ஆர் டூ லேட் கவின். இதெல்லாம் நீ அந்த பொண்ண பார்த்து அவ மனசுல ஆசைய வளர்க்குறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கலாம்." என்றான்.

கவின் முகம் மாறாதவனாக இருக்க ஹர்ஷாவே தொடர்ந்தான் " கவின்..பிராப்ளம் இல்லாத மனுஷன் யாரு இருக்கா சொல்லு. இப்போ என்னவே எடுத்துக்கோ..இது வேணும் அது வேணும்னு நான் அசைப்பட்டதா எனக்கு நியாபகமே இல்ல. காரணம்.. பணக்கார அப்பாக்கு ஒரே பையன்...ஆண் வாரிசு. என்ன சுத்தி நடக்குற சதியும் விதியும் நினைக்கும் போது... என்னடா வாழ்க்கைன்னு கடுப்பா இருக்கும். நாளைக்கு முழிச்சு உலகத்த பார்ப்பேனான்னு தெரியாம... எதுக்காக ஓடுரேன்னு புரியாத என் லைஃப விடவா உன்னோடது கஷ்டம்." என்றவன் நிறுத்தினான்.

கவின் அமைதியாக இருக்க " பணம் தான் எல்லாத்தையும் முடிவு பண்ணும்னா.. இந்த செக்கென்ட் ஹர்ஷா தான் உலகத்துலயே ஹாப்பியஸ்ட் பெர்ஷன். பட் அன்ஃபார்டுனேட்லி.. தட் இஸ் நாட் தி ஃபேக்ட் " பெருமூச்சுடன் கூறி முடித்தான் ஹர்ஷா.

கவின் யோசனை வயப்பட்டவனாக இருக்க ஹர்ஷா அவனை தோளை தொட்டு தேற்ற முயன்றபடி "ஒரே ஒரு லைஃப் தான். உனக்கு பிடிச்ச மாதிரி அத அமச்சுக்க பாரு கவின். யூஸ்லெஸ் தாட்காக வாழ்க்கைய மிஸ் பண்ணிட்டா திரும்ப கிடைக்காது" என்றவன் " நாளைக்கு பார்க்கலாம் பை" என்றபடி அவனது தோளை தட்டிவிட்டு எழுந்து சென்றான்.

ஹர்ஷா சொல்லி சென்றதை மனதில் நிறுத்தி அதை அசைபோட்டபடி இருந்தான் கவின். அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் வெளியேறிய ஹர்ஷா நீளமான தாழ்வாரத்தில் நடக்க "என்னங்க ஒரு நிமிஷம்" என்ற சத்ததில் நின்றுவிட்டான்.

'யார் அது' என்ற எண்ணத்துடன் திரும்பியவனின் உதடுகள் இன்ஸ்டன்டாக மலர்ந்தது. கருஞ்சிவப்பு நிற அனார்கலி உடலை முழுவதுமாக போர்த்தியிருக்க நெஞ்சை மறைத்திருக்கும் கார் கூந்தல் இப்போது கிளிப்பில் அடங்கி கிடந்தது. வெண் சங்கு கழுத்தில் சின்ன பொன்சங்கிலி. காதுகளில் ஆடும் ஜிமிக்கி. அதே மந்திர புன்னகை. அவள் தான்...அவளே தான். ஹர்ஷா மீண்டும் ஒரு முறை உலகை மறந்தான்.

" ஹாய் " அவனுக்கு கையசைத்தாள் காதம்பரி. ஹர்ஷா தன்னை சுற்றி ஒருமுறை பார்வையை சுழலவிட்டவன் "என்னையா?" என்று சந்தேகமாக கேட்க "இங்க நீங்களும் நானும் தான இருக்கோம்" என்றாள் அவள். ஹர்ஷாவின் மனம் இறக்கை இல்லாமல் வானில் பறக்க முயன்றது. நேரம் கெட்ட நேரத்தில் நாக்கும் அன்னத்துடன் ஒட்டிக்கொள்ள பேச்சற்று நின்றான்.

"என்ன உங்களுக்கு தெரியாது. ஆனா எனக்கு உங்கள நல்லா தெரியும்." சொல்லிவிட்டு சுற்றி பார்வையை சுழற்றியவள் " நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும். இங்க நின்னு பேச முடியாது. ஆப்பார்ட்மெண்ட்க்கு கீழ இருக்க சில்ட்ரன்ஸ் பார்க்குக்கு வர முடியுமா? விஷயம் கொஞ்சம் சீரியஸ். ப்ளீஸ் முடியாதுன்னு சொல்லிடாதீங்க" உள்ளே சென்ற குரலில் சொல்லிவிட்டு அவள் கண்களை சுருக்கி கெஞ்ச ஹர்ஷாவின் மனம் குத்தாட்டம் போட தலை தன்னிச்சையாக அசைந்து 'சரி' என்றது. அவனது சம்மதம் கிடைத்துவிட்ட குஷியில் காதுவும் தலையை அசைத்தபடி ஆழமாக புன்னகைத்தவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஹர்ஷா அவள் பார்வையை விட்டு மறையும் வரை பார்த்தபடி இருந்தவன் "டேய் கவின் " என்று உற்சாகமாக சொன்னபடி ஃபிளாட்டை நோக்கி ஓடினான். அவனது சைகையை மறைந்து நின்றபடி பார்த்த காதம்பரி வாயை மூடியபடி சிரிக்க அவளது முதுகில் தட்டினாள் சுஷ்மிதா.

" ப்ச்.. காது என்னடி பண்ணுற. எதுக்கு இப்போ அவர பார்க்குக்கு வர சொல்லியிருக்க. எனக்கு என்னமோ இது சரியா வரும்ன்னு தோணல. வேண்டாம் காது ப்ளீஸ்." என்றவளை வாயில் விரல் வைத்து அடக்கியவள் " இங்க பாரு இதுல நீ தலையிடாத. இது உன் ஃபிரண்டுக்கும்.. உன் ஆளோட ஃபிரண்டுக்கும் நடுவுல இருக்க டீலிங். இத நாங்க பார்த்துகுவோம். நீ உன் வேலைய பாரு" என்றாள்.

சுஷ்மிதா முகத்தை தூக்கி பிடித்தபடி அழுகைக்கு தயாராக அதை கவனித்த காதம்பரி " சுஷ்.. பேபி ஒரு பழமொழி கேள்வி பட்டிருக்கியா? சொல்லாத காதல் சொர்க்கத்துல கூட சேராதுன்னு சொல்லுவாங்க. உனக்கு கவின பிடிச்சிருக்குள்ள?" அவள் கேள்வியாக கேட்க கண்கள் கண்ணீரை சிந்த தலையை அசைத்தாள் சுஷ்மிதா.

"ஸ் ஸ் ஸ்... அழ கூடாது. எதுக்கு டி இப்போ கண்ண புழியுறவ. உனக்கு என்ன தான் ப்ராப்ளம் சுஷ்" காட்டமாக கேட்க கண்ணீரை துடைத்துக் கொண்டவள் "அவருக்கு என்ன பிடிக்குமா?" என்று குழையும் தமிழில் கேட்க அவளது நெற்றியில் தட்டியவள் "பிடிக்காம தான் பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்க்குற மாதிரி உன்னையே குறுகுறுன்னு பார்க்குறானா? ப்ச்.. எல்லாத்துக்கும் அழுறத முதல்ல நிறுத்து..அவன் ஃபிரண்ட் கிட்ட பேசுவோம். என்ன நம்பு சுஷ்.. உனக்கு நான் இருக்கேன். தைரியமா என்கூட வா. நான் அன்னிக்கு சொன்ன மாதிரி உன்ன கவின் கூட சேர்த்து வைக்கிறது என் பொறுப்பு " கைகளை உள்ளங்கையில் புதைத்தபடி கண்களை மூடித் திறந்து தைரியம் சொன்னாள் காதம்பரி.

"சுஷ்மி.." என்ற அவளது தாயின் அழைப்பை கேட்டதும் இருவரும் உள்ளே வர "காது பேட்டா.. நீ எப்போ வந்த." கனிவாக விசாரித்தார் சுஷ்மிதாவின் தாயார் சரளா. சுஷ்மிதா பதட்ட நிலையில் இருக்க காது அவளது கையை பிடித்து அழுத்தம் கொடுத்தவள் "நான் இப்போ தான் வந்தேன் ஆன்டி. சுஷ் கிட்ட நோட்ஸ் இல்லன்னு சொன்னா. அதான் குடுத்துட்டு போலாம்ன்னு வந்தேன்" என்றவள் சமாளிக்க சுஷ்மிதாவும் தலையை அசைத்து வைத்தாள்.
அதை முழுவதுமாக நம்பிய சரளா "அச்சா.. டீகே பேட்டா" என்றபடி அங்கிருந்து சென்றுவிட நிம்மதி பெருமூச்சு விட்டனர் தோழிகள் இருவரும்.

ஹர்ஷா இவற்றை அறியாதவன் "கவின்.. கத்தரிக்கா!" என்றதும் "சார் இன்னுமா அதே நினைப்போட இருக்கீங்க. அந்த பொண்ணுக்கு உங்கள நியாபகம் இருக்கோ இல்லையோ... நீங்க என்னடான்னா" என்றபடி அவன் எழ அவனது தோளை பிடித்து நிறுத்தியவன் "கவின்.. கத்தரிக்கா எனக்காக கீழ பார்க்ல வெயிட் பண்ணிட்டு இருக்கா" என்றதும் கவின் தலையை இடம் வலமாக அசைத்தவன் "சார்...நம்ம இருக்குறது போலீஸ் குவாட்ரஸ் இல்ல.. அப்பார்ட்மெண்ட். இங்க எப்டி அந்த பொண்ணு வருவா" அவன் பேசிக்கொண்டே நிற்க ஹர்ஷா கடுப்பானவன் " உன்கிட்ட நான் விளக்கம் கேட்டேனா?" என்றான்.

கவின் 'இல்லை' என்று தலையை அசைக்க "அப்போ மூடுக்கிட்டு என்கூட வா" என்றபடி இழுத்து செல்ல வேறு வழியில்லாத கவினும் அவன் இழுத்த இழுப்பிற்கு நடந்தான்.
மேலைநாட்டு கலாச்சார தாக்கமாக மூளைக்கு ஒன்றாக திறந்து கிடக்கும் நைட் கிளப் ஒன்று வண்ண விளக்கின் உதவியுடன் ஜொலிக்க அதன் வாயிலில் காருடன் காத்திருந்தான் அருள். உள்ளே சென்று வெகு நேரம் கடந்திருந்தும் இஷியின் வருகைக்கான அறிகுறிகள் தெரியாமல் போக கடிகாரத்தையும் வாசலையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தவனின் பொறுமை மெல்ல மெல்ல காற்றில் கரைந்தது.

அவனது பொறுமையை சோதனை செய்பவளோ "நீ சொன்ன மாதிரி அவன வெயிட் பண்ண சொல்லிட்டு நான் உள்ள வந்துட்டேன். பாவம் எனக்காக வெயிட் பண்ணி கடுப்பாக போறான். இப்போ அவன் முகம் எப்டி இருக்கும் தெரியுமா..ப்பா..அத நினைக்கிறப்போவே ஐஸ் மழையில நெனஞ்ச மாதிரி குளுகுளு ன்னு இருக்கு" என்று உற்சாகமாக தோழிகளிடம் கதை அளந்து கொண்டிருக்க வானம் நிலவை தனக்குள் இழுத்துக்கொள்ள இருள் மூண்டது.

 
ஏன் இல்ல ஏன் இப்படி.... ரெண்டு பேரையும் அந்தரத்தில் நிக்க வச்சிட்டு போறீங்க
 
Top