Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே!

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 1

நெருப்பாய் தகிக்கும் கிரகண கைகளால் வானை தீண்டி தீ மூட்ட செய்து அதில் திருப்தி அடைந்தவனாக முகம் கொள்ளா புன்னகையுடன் மேலே எழுந்தான் ஆதவன். உலகம் மற்றொரு இனிய விடியலை கை விரித்து வரவேற்றது. சீராக வெட்டப்பட்ட புதர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க பிங்கும் மஞ்சளுமாக பூக்கள் அங்காங்கே சிதறி கிடந்தது.



செடிகளுக்கு தண்ணீரை விட்டபடி இருந்த வேலையாளை நோக்கி வேகமாக நடந்து வந்தாள் பெண் ஒருத்தி. மூச்சிரைக்க இடுப்பில் கை வைத்தபடி வேலையாளை முறைத்தவள் "நீலகண்டன். நேத்து மார்கெட் போனீங்களா?" என்று கேட்டபடி நெற்றியில் இறைந்த முடியை சரி செய்தபடி கேட்க அந்த வேலையாள் தண்ணீர் கொட்டும் பைப்பை சேதாரமின்றி கீழே போட்டுவிட்டு "ஆமா மேடம்.. நான் தான் போயிருந்தேன்" பவ்யமாக வந்தது பதில்.



" லிஸ்ட்ல இருக்க எல்லா பொருளும் வாங்கியாச்சா?" ஒற்றை புருவம் உயர்த்தி அதிகார குரலில் கேட்க அவர் தலையை சொரிந்தபடி "அது...நீங்க எழுதி குடுத்தத நான் அப்டியே கடையில குடுத்தேன் மேடம்." என்றார் அப்பாவியாக.



"ஓஹ்.. அப்போ நீங்க பார்த்து எடுக்காம நான் உங்களுக்கு குடுத்த வேலைய நீங்க கடை காரருக்கு குடுத்திருக்கீங்க. அப்டி தான?" அவள் சீற கார்டனில் நடப்பவற்றை கூர்மையாக கவனித்தபடி நின்றது ஒரு நெடிய உருவம்.



அந்த வெள்ளந்தி மனிதரின் முகத்தை பார்த்தும் மனம் இளகாத அந்த மேடமோ " மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் மெனுல முக்கியமானது அவகேடோவும் ஃபெட்டாவும் தான். அது ரெண்டும் இப்போ மிஸ்ஸிங்..கடை காரர்கிட்ட லிஸ்ட குடுத்தேன்னு ரொம்ப கேஷுவலா சொல்ற. லிஸ்ட குடுக்கும் போதே எந்த பொருளும் மிஸ் ஆக கூடாதுன்னு நான் உன்ன வார்ன் பண்ணேனா? இல்லையா? அப்போ மண்டைய மண்டைய ஆட்டிட்டு.. கடைசி நேரத்துல வந்து தலைய சொரிஞ்சுட்டு நிக்கிற. ஒரு வேலையும் ஒழுங்கா செய்ய முடியாதா உன்னால... யூஸ்லெஸ்..நீ செஞ்ச தப்பால மேடமோட டே டைம் ரோடீன்ல பதினஞ்சு நிமிஷம் லேட் ஆகும். அதோட மதிப்பு என்னன்னு தெரியுமா மேன் உனக்கு?" அவள் காட்டு கத்தல் கத்த அந்த மனிதர் வாய் திறக்கவில்லை.



ஆனால் அவளது முதுகுப்புற மிருந்து அவளது திமிர் பேச்சிற்கு ஏற்ற பதிலடியை பெற்றவளின் உதடுகள் அசைய மறுத்து அப்படியே நின்றது. "உங்க மேடம்க்கு தெரிஞ்சது சாப்பிடுறதும் தூங்குறதும் தான். அத பதினஞ்சு நிமிஷம் லேட்டா செய்றதுல அவங்க ஒரு அவுன்ஸ் குறைஞ்சுட போறாங்களா என்ன" என்ற குரலுக்கு சொந்தமானவனை அவனது பெர்ஃபியூம் நறுமணத்தை வைத்தே அறிந்திருந்தாள் பிவுலா.



'போச்சு மாட்னோம். போயும் போயும் காலங்காத்தல இவர் கண்ணுலயா நான் பட்டு தொலைக்கனும். மனுஷன் சும்மாவே என்ன வறுத்து எடுப்பான். நான் வேற வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம சலங்கைய கட்டி விட்டிருக்கேன். ஆடி தீர்ப்பாரே' மனதில் எண்ணியபடி குரல் வந்த திசையில் திரும்பினாள்.



பிஸ்தா நிற டீசர்ட் உடலை இறுக்கமாக பற்றி இருக்க உடையின் வழுவை தாண்டியும் உடலின் கட்டமைப்பு நன்றாகவே கண்களுக்கு புலம்பட்டது. பேண்ட் பாக்கெட்டில் கைகளை திணித்தபடி தலை சரித்து புருவம் உயர்த்தி நக்கல் சிரிப்பை உதடுகளில் தேக்கி வைத்தபடி அவளது முகம் பார்த்து நிற்பவன் தான் ஹர்ஷா.



குரலை கேட்டதும் வயிற்றில் உருள துவங்கிய பயப்பந்து இப்போது ரோலாகி ரோலாகி தொண்டையை அடைத்திருந்தது அவளுக்கு. திருதிருவன விழித்தபடி அவள் சமாளிக்க வழி தேட மனதை படித்தவன் போல "என்னடா இது போயும் போயும் இவன்கிட்ட சிக்கிட்டோமே.. என்ன சொல்லி சமாளிக்கலாம்ன்னு தானே யோசிக்கிறீங்க?" என்றவன் கேட்டுவிட்டு மாய புன்னகையை சிந்த பிவுலா வெறும் விரல்களை பிசைய துவங்கினாள்.



"டைமோட மதிப்ப பத்தி அவருக்கு கிளாஸ் எடுக்குறத விட்டுட்டு முதல்ல உங்க மேடமோட மதிப்பு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன்."முகத்தில் எந்த மாற்றமும் காட்டாது சொன்னவனின் வார்த்தைகளில் அவ்வளவு அழுத்தம்.



பிவுலா செய்வது அறியாமல் நிற்க " நீலகண்டன்.. செடிங்க எல்லாத்துக்கும் தண்ணி ஊத்தி முடிச்சுட்டீங்களா?" என்று அவரிடம் கேட்க "இதோ.. இப்ப முடிஞ்சுடும் சார்." என்றார் பதட்டமாக. "அட பரவாயில்ல நீலகண்டன். நீங்க பொறுமையா வேலைய பாருங்க. நீங்க டெய்லி தண்ணி ஊத்தி வளர்க்குற செடிங்க தான் நம்மல இன்னும் சுத்தமான காத்த சுவாசிக்க வைக்கிது. சிலர் எத வளர்குறதுன்னு தெரியாம நஞ்சையும் நல்ல பாம்பையும் ஃபெட்டாவும் அவகேடோவும் குடுத்து வளர்க்குறாங்க. ஹவ் சில்லி" என்றவனின் வார்த்தைகளில் ஏளனம் தெரித்தது.



"என்ன பிவுலா.சைலன்ட் ஆகிட்டீங்க. நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?" என்றவன் அவளது முகத்தை உற்று பார்க்க "சா.. சாரி சார்" என்றாள் அவள். அவளது தோற்றம் விட்டால் அழுது விடுவாள் போல பாவமாக இருக்க அதை உணர்ந்து கொண்ட ஹர்ஷா " யூ ஆர் டோட்டலி ராங் பிவுலா. உங்க மேடம்க்கு நியூட்ரீஷனிஸ்ட் நீங்களா இல்ல நீலகண்டனா?" என்றதும் எச்சிலை விழுங்கியவள் "நான் தான்.. சார்" தேவைக்கு அதிகமாகவே தந்தி அடிக்க துவங்கியது.



" ம்ம்.. அப்போ அவகேடோ வாங்குற வேலை யாரோடது?"



"என்னோடது தான் சார்"



"குட்..கேட்குற கேள்விக்கு டப்பு டப்புன்னு பதில் பதில் சொல்றீங்க. ஐ லைக் இட். சோ இது நீங்க செய்ய வேண்டிய உங்களோட வேலை ரைட். ஆனாலும் அது நீங்க செய்யாம இவர செய்ய சொல்லிருக்கீங்க. இப்போ தெரியுதா..இந்த வீட்டுல வேலைய உருப்படியா செய்யாம ஓப்பி ஆடிச்சுட்டு சுத்துற யூஸ்லெஸ் யாருன்னு.." தலையை ஆட்டியபடி சொல்லிவிட்டு "சாரி கேளுங்க" கண்களால் நீலகண்டனை காட்ட பிவுலா "சாரி ண்ணா" என்றாள் உள்ளே சென்ற குரலில். நீலகண்டன் அமைதியாக நிற்க "அடேங்கப்பா.. திட்டும் போது சத்தம் ஃபர்ஸ்ட் ஃபுலோர் வரைக்கும் கேட்டுச்சு சாரியில ஒரு பவர் இல்லையே?" கேட்டுவிட்டு அவன் உதட்டை வளைத்தபடி நக்கலாக கேட்க பிவுலா "சாரி ண்ணா" என்றாள் சத்தமாக.



அவளது சாரி திருப்தியை தரவே "நீலகண்டன்.. பிவுலா அவங்க தப்ப உணர்ந்து சாரி கேட்குறாங்க. என்ன மன்னிச்சுடலாமா?" என்றான்.



நீலகண்டன் நடப்பதை புரியாமல் பார்த்தபடி "வேணாங்க சார்..என்கிட்ட போய் மன்னிப்பெல்லாம்... சொன்ன வேலைய நான் தான் சார் சரியா செய்யலங்க" என்றார். அவரது தோளில் கை போட்ட ஹர்ஷா "ம்ஹூம் தப்பு நீலகண்டன். யாரு வேலை சொன்னாலும் செய்றதுக்கு நான் உங்கள அப்பாய்ண்ட் பண்ணல. உங்க வேலை தோட்டத்த பார்க்குறது. அதுல குறை இருந்து திருத்திக்க சொன்னா நீங்க தாராளமா செய்யலாம். ஆனா மத்தவங்க வேலைய உங்க மேல திணிக்கிற உரிமை யாருக்கும் இல்ல... அப்டி சொல்றவங்க யாரா இருந்தாலும் சரி. அவங்களுக்கு என் வீட்ல இடம் இல்ல. இப்போ சொல்லுங்க இந்த பொண்ண மன்னிக்கலாமா வேணாமா? " என்றான்.



நீலகண்டன் பிவுலாவை பார்த்தவர் என்ன நினைத்தாரோ "மன்னிச்சுடலாம் சார்." என்றார். பிவுலா தலையை நிமிராமல் அவரை பார்க்க "பெரிய மனசு நீலகண்டன் உங்களுக்கு.. பார்த்தீங்களா பிவுலா..இந்த நல்ல மனச புரிஞ்சுக்காம வாயை போயான்னு... பச்.. தப்பில்ல" என்றவனின் பார்வை அவளை குற்றம் சாட்டியது.



"நீங்க போங்க நீலகண்டன். ஆன் ஒரு சின்ன உதவி அந்த ஃபவுண்டேன் லைட் சரியா ஒர்க் ஆகல. எலக்ட்ரீஷன வர சொல்லுங்க..சரி பண்ணனும்" என்றபடி அனுப்பி வைத்து விட்டு அவளை நெருங்கியவன் கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டியபடி தீர்க்கமாக பார்த்தான்.



பிவுலா 'பேசலனா வேற தப்பாயிடும். என்ன கேட்க போறாருன்னு தெரியலயே.' என்று முணுமுணுக்க அவளது முகத்திற்கு முன் சொடுக்கினான் ஹர்ஷா. "சார்" என்றபடி பதட்டமாக அவள் நிமிர "மிஸ் பிவுலா.. ரிலாக்ஸ்.. டீஃபிரீஸ் பண்ணாத ஃபிரீசர் மாதிரி உறைஞ்சு போய் நிக்கிறீங்க. உங்கள லேயாஃப் பண்ணுற ஐடியாலாம் எனக்கு இப்போதைக்கு இல்ல."



" நீங்க என்ன நெனச்சீங்க?? நீங்க படிச்சு வாங்கின டிகிரிக்கு எதுவும் சூப்பர் பவர் இருக்குன்னா?? ம்ஹும்..என் முன்னாடி உங்க படிப்பு நத்திங் மிஸ் பிவுலா. கர்வத்த கால்ல போடுற செருப்பா வச்சுக்கனும்.. அத மிதிச்சு மிதிச்சு மேல வாங்க. அதுல கிடைக்கிறது தான் நிஜமான சக்சஸ். அண்ட் ஒன் மோர் திங்...அதோ தெரியுது பாருங்க கேட் அத தாண்டி வெளியில போற வரைக்கும் நீங்களும் நீலகண்டனும் இங்க ஒன்னு தான். ரொம்ப பட்டரியா பேசுறேனோ. ஜஸ்ட் அ பீஸ் ஆவ் மைண்ட்...வேற வழி இல்லாம காதுல போட்டுப்பீங்கன்னு தெரியும்..ம்ம்.. அதோட நிறுத்தாம புரிஞ்சுகிட்டா இன்னும் பெட்டரா இருக்கும்." என்றவன் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றவே மூச்சு வாங்கி போனது அவளுக்கு.



அவன் 'போ' என்று கண்களை காட்டும் வரையில் இதயத்தை கையில் சுமந்தபடி நின்றவள் அந்த கண்ணசைவை கட்டளையாக பெற்றபடி அங்கிருந்து ஓட முற்பட "ஆன்.. உங்க மேடம்.. டையட்ல கொஞ்சம் எக்ஸ்ட்ரா சால்ட் ஆட் பண்ணுங்க. சூடு சொரணைக்கு நல்லது. அவங்களுக்கு சொன்னேன்" என்றவன் பிவுலாவின் முக மாற்றத்தை மனதார ரசித்தபடி கார்டனை காலி செய்திருந்தான் ஹர்ஷா.



பிவுலா பெருமூச்சை வெளியேற்றியவள் " அட ச்சை.. என்ன குடும்பம் இது. மகனுக்கு அம்மாவ பிடிக்கல. மகளுக்கு அப்பாவ பிடிக்கல. அம்மாக்கு மகன கண்டா ஆகல. அப்பா மகள விஷமா பார்க்குறாரு. தோட்ட வேலை செய்யிறவனுக்கு குடுக்குற மரியாதைய அம்மாக்கு குடுக்க மாட்டாறம். ஆனா வாய் மட்டும் வக்கனையா பேசுறாரு.அது சரி தான் பாக்கெட்டில இருக்க ஓட்டைய யாரு தான் தைக்க பார்க்குறாங்க எல்லாம் ஊருக்கு தான் உபதேசம் " முணுமுணுத்தபடி கிச்சனை நெருங்கிய பிவுலா " என்ன டாக்டர் தனியா புலம்ப விட்டுட்டானா?." வெங்கல குரலில் கேட்டபடி அவள் முன் நின்றாள் பத்மாவதி.



இத்தனை நேரம் ஹர்ஷாவின் வசவுகள் முழுவதும் இவருக்கே சமர்ப்பனம். ஹர்ஷாவின் தாய்.. ஆனால் அவனை கருவுற்று மசக்கையில் மாங்காய் கடித்து.. பிரசவத்தின் போது துடித்து குருதி சிந்தி பெற்றெடுக்கவில்லை. ஹர்ஷாவின் தந்தை ராஜரத்தினத்தின் சம்சாரம். பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதை விதியின் வசத்தால் கைப்பற்றி இப்போது தலைக்கனத்திற்கு பெயர் போன ஆடம்பர வாழ்கையை அனுபவிப்பவர் தான் பத்மாவதி.



" என்ன சொல்றான் என் புருஷனோட சீமந்த புத்திரன் " என்று அவர் இழுக்க "இல்ல மேடம் தோட்டக்காரர் கிட்ட மார்கெட் போக சொன்னேன். அதான்.. சார் என்ன" அவர் தயக்கமாக சொல்ல "ஓஹ்... தோட்டக்காரனுக்காக என்கிட்ட வேலை செய்ற உன்னையே கேள்வி கேட்குறானா அவன்?" அவர் குரல் மேலே எழ "என்ன இங்க சத்தம்" என்றபடி ஆஜரானான் ஹர்ஷா.



ஒன்றை புருவம் உயர்ந்திருந்தாலும் கைகளை கட்டியபடி நிற்பவன் துளியும் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. பத்மாவதி ஒரு நிமிடம் பார்வையை உயர்த்தியவர் ஹர்ஷாவின் ஒற்றை பார்வையில் உடனடியாக தாழ்த்திக்கொண்டபடி "அடடே ஹர்ஷா. வாப்பா எப்போ வந்த" என்று நலம் விசாரிப்புக்கு தாவ பிவுலாவிற்கு உலகம் சுழன்றது.



" அதாவது நான் வந்தது உங்களுக்கு தெரியாது அப்டிதான? ம்ம்.. ஃபைன். உங்க நடிப்புக்கு ஏன் என் டாடி பெரிய ஃபேனா இருக்காருன்னு இப்போ தான் எனக்கு புரியுது." என்று வஞ்சப்புகழ்ச்சி பாட "அது.. நான் டாக்டர் கிட்ட பேசிட்டு இருந்ததுல.. கவனிக்க..." அவர் முடிக்கும் முன் " கேட்டுச்சு.. உங்க புருஷனோட சீமந்த புத்திரன பத்தி.. நீங்க அக்கறையா விசாரிக்கும் போதே நான் வந்துட்டேன். அது சரி ரெண்டு நாளாவா டாக்டர் கிட்ட பேசிட்டே இருக்கீங்க..ஹும்.. நான் இங்க வந்து டூ டேஸ் ஆச்சு " கத்திபோல உயர்ந்தது புருவம்.

பத்மாவதி சமாளிக்க வழியை தேட பிவுலா தன்னை மறந்து சிரித்துவிடாமல் இருக்க போராடினாள் "வீட்டுல எல்லா வேலைக்கும் ஆள் இருக்காங்க போலிருக்கு. ஆனாலும் வேலை இல்லாம வெட்டியா அதிகாரம் பண்ணி கொழுப்பேறி சுத்துற நிறைய பேர் என் கண்ணுல படுறாங்க. சரியில்லையே.
ஓகே.. இப்போ தான் நான் வந்துட்டேனே..நான் என் ஸ்டையில்ல கவனிக்கனும்னு டாடி நினைச்சிருக்காரு. ஹீ இஸ் ரியலி கிரேட்" என்றவன் சொன்ன தோரணையே பத்மாவதிக்கு கிழியை கிழப்பியது.



" அப்பா ஆசைய புள்ள தான நிறைவேத்தனும். என்ன இருந்தாலும் சொந்த ரெத்தம் துடிக்க தான செய்யும்.. கரெக்ட் தான மிஸ் பிவுலா?" என்றதும் ஏன் எதற்கு என்பதே தெரியாமல் தலையை அசைத்து வைத்தாள் பிவுலா. பத்மாவதி அவனது பேச்சு ஏற்றிவிட்ட சூட்டை தணிக்க முடியாமல் பற்களை கடித்தபடி அமைதியாக நின்றவர் சிரிக்கவும் தவறவில்லை. வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட அந்த சிரிப்பு ஏனோ அவனுக்கு உவப்பாக இல்லை.



" நைஸ் ஸ்மைல்.. ஆனா இந்த ஸ்வீட் ஸ்மைல் எல்லா நேரமும் உங்களுக்கு கை குடுக்க வாய்ப்பில்ல.யாரு கை ஓங்கி இருக்கோ.. அவங்க கத்தி பேசனும்னு அவசியம் இல்ல. கண்ணோட அசைவு போதும்.. நெனச்சத நடத்தி முடிச்சிடலாம்ன்னு இல்லயா?" அழுத்தாமாக சொன்னான் ஹர்ஷா.

பத்மாவதி பேசவில்லை " என்னாச்சு எங்கேயங் கேட்ட மாதிரி இருக்கா? நீங்க சொன்னது தான் பத்மாம்மா..இதோ இங்க.. இங்க பதிஞ்சு இருக்கு. நான் பழச மறக்குறவன் இல்ல." நெஞ்சை தொட்டு காட்டி சொன்னவன் ஒரு நிமிடம் அவரை உற்று பார்த்தபடி " இப்போ யார் கை மேல இருக்குன்னு ஒரு சின்ன டெமோ காட்டவா?" என்றவன் அதோடு நிறுத்தாமல் "மிஸ் பிவுலா.. நான் இங்க இருக்க போற ஒரு மாசமும் நான் சொல்றது தான் மெனு. நோ மோர் டையட்... இன்னிக்கு மெனு நோட் பண்ணிக்கோங்க சூடா...நெய் மணக்க வெண் பொங்கல். முந்திரிய மழை சாரல் மாதிரி தூவ சொல்லுங்க. ஆன்...வடையும் பால் பாயசமும் மஸ்ட்.. பாயத்துல சக்கரையோட லெவல் ஓங்கி இருக்கனும்..என்ன மாதிரி...ஐ லவ் ஸ்வீட்னஸ்... அப்றம் நான் சொன்ன உப்பு மேட்டர் நியாபகத்துல இருக்கட்டும்." என்றவன் பத்மாவதியை நக்கலாக ஒரு பார்வை பார்த்தபடி அவரை தாண்டி சென்று படிகளில் தாவினான்.



ஹர்ஷா அவர் முன் வந்து நின்றது முதல் அவன் சொல்லி சென்ற அனைத்தையும் ஒரு முறை மீண்டும் மனதில் ஓட்டி பார்த்தவருக்கு ரத்த அழுத்தம் உயர தான் செய்தது "உனக்கு எதுவும் மறக்காதுன்னு அப்போவே தெரிஞ்சிருந்தா.. நீ இன்னிக்கு இல்லாத மாதிரி பண்ணிருப்பேன். ஆனா உன்னால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கே." சொல்லிவிட்டு குரூரமான சிரிப்பை உதட்டில் நெளியவிட்டவர் "சரளா.." என்று சத்தம் போட ஹர்ஷா நகராமல் நின்றான்.

சரளா அமைதியே உருவமாக அவர் முன் வந்து ஆஜராக "இஷாரா எழுந்துட்டாளா?" கேள்வியாக கேட்க "இல்ல மேடம்" என்ற பதிலை பெற்றபடி "ஒரு அவசரமும் இல்ல ஆற அமர அவளே எழுந்துப்பா. என் பொண்ணு ஆழ பொறந்தவளாச்சே..அசதி அதிகமா இருக்கும் நீ போ." வார்த்தை கர்வத்தில் நனைந்திருக்க ஹர்ஷா அதை சட்டை செய்வதாக இல்லை.



அவளது முக மாற்றத்தில் அதை புரிந்து கொண்ட பத்மாவதி "ஆன்..டாக்டர ப்ரேக் ஃபாஸ்ட்க்கு என் பையன் ஆசையா கேட்டதே சமச்சிடுங்க.. ஆனா எனக்கு அது வேணாம்.. லஞ்ச்க்கு மட்டன் பிரியாணி செய்ய சொல்லுங்க... நான் என் பையன் விருப்பத்த மதிக்கிறவ சோ உப்பு கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும். இன்னிக்கு ஒரு புடி புடிக்கனும்னு மனசு சொல்லுது" வஞ்சத்தை மனதில் எரியவிட்டபடி சொன்னவரின் பார்வை இன்னும் படிகளில் நிற்கும் ஹர்ஷாவை தான் முறைத்தது.



ஹர்ஷா உதட்டோர புன்னகையுடன் நின்றவன் தலையை இடம் வலமாக அசைத்தபடி படிகளில் ஏறினான். அவன் கண்ணை விட்டு மறையும் வரை உதட்டை அலங்காரித்திருந்த புன்னகை இப்போது மாயமாகி இருக்க பத்மாவின் முகம் கடுகடுப்பை தத்தெடுத்தது.



நீலமான நடைபாதையை கடந்த ஹர்ஷா அவனது அறைக்குள் பிரவேசிக்க பின்னால் இருந்து அவனது கைகளை சிறை செய்த உருவம் ஒன்று பின்னந்தலையில் பில்டலை வைத்தபடி "டோண்ட் மூ" என்றது மிரட்டலாக.
 
வாவ்.. இண்டரெஸ்ட்டிங் .. கொஞ்சம் font பெருசா வைங்க பா.. படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. ஹர்ஷா ரொம்ப ஹார்ஷா பேச காரணம் பத்மா தான் போலவே பொண்ணு அவுங்களை மாதிரி தான் போல அது தான் அப்பா கக்கு பிடிக்கல.. பியுலா வா இல்ல பிவுலா வா..
 
Top