Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 2

ஹர்ஷா நடைபாதையில் கவனத்தை வைக்காது பரந்து விரிந்திருந்த அந்த வராந்தாவை கடந்தவன் " ப்பா.. ப்பா.. ப்ளீஸ் போதும் ப்பா...நிறுத்து. நீ இங்க என்ன வர சொன்ன நானும் வந்துட்டேன் அதுக்காக உன்னோட சோ கால்ட் பொண்டாட்டிய என்னால பொறுத்துக்க முடியாது. அவங்க என் வழியில வந்தா நான் வாய மூடிட்டு போக மாட்டேன்.. உனக்கு புரியும்ன்னு நெனைக்கிறேன் " காரசாரமாக பேசியபடி அறைக்குள் நுழைய அவனது பின்னந்தலையில் பிஸ்டலின் கனத்தை உணர்ந்து அசையாமல் நின்றான்

முடிகளுக்கு நடுவே மூக்கின் நுனி புடைக்க அவனது மூளையை துளைக்க காத்திருக்கும் துப்பாக்கியின் முனையை உணர்ந்தவனது அட்ரினலின் அவசரமாக சுரக்க அதற்கு ரெட் சிக்னல் போட்டது அவளது குரல். "டோண்ட் மூவ்" என்ற அந்த பெண் குரலுக்கு சொந்தமானவளை நினைத்த ஹர்ஷாவின் உதடுகளில் இன்ஸ்டன்டாக மலர்ந்தது.

"பிஸ்டல கையில பிடிக்கும் போது கையோட மனசையும் ஸ்ட்ராங்கா வைக்கனும். அப்றம் சிங்கல் கேண்ட் யூஸ் பண்ணுறது புத்திசாலி தனம். மோஸ்ட் இம்பார்டண்ட் திங்...கை நடுங்க கூடாது இஷி." அமைதியாக சொல்லிவிட்டு அசால்ட்டாக திரும்ப அவனால் இஷி என்று அழைக்கப்பட்டவளோ கண்களில் லாவா குழம்பு கொப்பளிக்க நின்றாள்.

ஹர்ஷா அவளது முகம் பார்த்து நிற்க இப்போது பிஸ்டலை நெற்றியில் பதித்தவள் "வாவ்.. குட் லெசன். ஆனா எனக்கு எங்க்ஸ்டர பார்தத்தும் லெசன்ஸ் எடுக்குறது சுத்தமா பிடிக்காது மிஸ்டர் பூமர்...நீ இதுக்கு தான் ஸ்பைஸ் ஜெட் ஏறி வந்தியா??" முகத்தை சுருக்கி சொன்னவள் மறந்தும் துப்பாக்கியை இறக்கவில்லை.

"ஏய் குட்டி சாத்தான். அங்க நம்ம ராஜமாத்தா பத்மாவதிதேவி நீ தான் இந்த ராஜ்யத்த கட்டி காப்பாத்த போறன்னு சொல்லிட்டு இருக்காங்க நீ குழந்தை மாதிரி தீவாளி துப்பாக்கி வச்சு விளையாட்டிட்டு இருக்க" சொல்லிவிட்டு அவன் தலையை ஆட்டி சிரிக்க " எது இது தீவாளி துப்பாக்கியா. நல்லா சிரிச்சுக்கோ மகனே.. ஏன்னா இந்த துப்பாக்காயாள நான் சுட்டு நீ காபாலம் கலங்கி அகால மரணம் அடையனும்னு விதி இருக்கு. அத யாரால மாத்த முடியும் " என்றவள் ட்ரிகரை அழுத்த ஹர்ஷா அசைவதாக இல்லை.

இஷாராவின் அழுத்தத்தின் பயனாக பிஸ்டல் துடித்து அடங்க அதை கை வைத்து கீழே இறக்கியவன் " அட பைத்தியமே.. ஏன் உனக்கு இந்த கொல வெறி ?" அவன் இழுத்து சொல்ல "உனக்கு காரணம் தெரியாதா??" கண்களை இடுக்கி முறைத்தாள் இஷாரா.

இஷாரா பதின் கடந்த இருபத்தி மூன்று வயது பதுமை. காந்தமாக ஈர்க்கும் கருவிழிகள் இரண்டையும் தெவிட்ட தெவிட்ட அஞ்சம் ஆக்கிரமிப்பு செய்திருக்க... களைத்தாலும் களைய மறுக்கும் தலை முடியை களைத்து விளையாட பார்ப்பவர்களுக்கு ஒரு நொடியாவது ஆவல் எழ தான் செய்யும். அளவான உயரம் அழகான நிறம். அன்னை பத்மாவதியின் கெடுபிடியால் இளைத்திருந்த தேகம். நாசியின் கூர்மை.. சிவந்த உதடுகள் அவளுக்கு பிறப்பிலேயே அழகு இடையில் காஸ்ட்லி மேக்கப்பின் கை வண்ணமும் எட்டிப்பார்த்தது. கோபம் தாங்கிய கண்களும் கவிதை தான்.

ஹர்ஷா "ரிலாக்ஸ் இஷி. நானும் நாலு வருஷமா இங்க வரேன். நீயும் வர நேரம் எல்லாம் இப்டி தான் மூக்க தூக்குற. சோ?" என்றான் யோசனையாக. இஷாரா கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டியபடி அவனை தீர்மானமாக பார்த்தவள் " சோ.. எத்தன நாள் வெகேஷன். ஒன் வீக் ஆர் டூ" கேட்டுவிட்டு அவனை தாண்டி சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

ஹர்ஷா எதிரில் கிடந்த சாம்பல் நிற கவுச்சில் அமர்ந்தவன் " வீக்ஸ் இல்ல மந்த்.. டூ மந்த்ஸ் நான் இங்க தான் இருக்க பேறேன் இஷி. உனக்கு என்கிட்ட சண்ட போட நெறைய நேரம் இருக்கு. நம்ம பொறுமையா ஆர அமர சண்டை போடலாம்." என்றான்.

இஷாரா அவனை நம்பாத பார்வை பார்த்தவள் "ஆர் யூ ஷோர்? பட் ஒய்? என்னால ஏன் இத ஏத்துக்க முடியல ஹர்ஷா. இட் இஸ் சோ அன்ரியல்" என்றவள் தோளை குலுக்க "பட் இட்ஸ் ட்ரூ" என்றவன் கால் மீது காலை போட்டபடி சாவகாசமாக சாய்ந்து கொண்டான்.
"ம்ம்.. மாச கணக்கா இந்தியால தங்குறது உன் லிஸ்ட்லயே இல்லாத ஒன்னாச்சே. கண்டிப்பா இது மிஸ்டர் ராஜாரத்தினம் வேலையா தான் இருக்கும். அவர் சொல்றது மட்டும் தான உன் காதுல ஏறும்" வார்த்தையில் உஷ்ணம் ஏறியிருக்க ஹர்ஷா உணர்ச்சிகள் முற்றிலுமாக துடைத்த முகத்துடன் இருந்தான்.

"நீ மாறவே மாட்டியா இஷி. அவரு நம்ம அப்பா. அவரு எது செஞ்சாலும் நமக்காக தான் செய்வாரு" என்றவனை பொய்யான சிரிப்புடன் ஏறிட்டவள் "ஹர்ஷா.. அப்போ எனக்கு ஆறு வயசு. அவர் கைய பிடிச்சுட்டு ஸ்கூல் போகனும். பார்க்குற எல்லார்கிட்டயும் இவர் தான் என் அப்பான்னு சொல்லனும்ன்னு அவ்ளோ ஆசை. ப்ச்.. ப்ளீஸ் அவர பத்தி பேச வேணாம்" என்றபடி எழுந்தாள்.

அவனிடம் பேசியபடி மிரர் டேபிளை நோட்டம் விட அதில் சட்டமாக நின்ற பெயர் பலகையை விரல்களால் வருடிகள் "ஹர்ஷா எம்.பி.ஏ....ஸவுண்ட்ஸ் குட்.. இந்த எம்.பி.ஏவ இந்தியால பண்ணியிருக்கலாமே? ஸ்டான்ட்ஃபோர்ட் வரைக்கும் ஏன் போன ஹர்ஷா. இதுக்கும் அவர் தான் காரணம். ஹீ இஸ் சோ மீன்" எப்போதும் அவள் கேட்கும் அதே கேள்வி..பதிலும் ஒன்று தான் ஆனால் ஒவ்வொரு முறையும் கேள்வியை சற்றே மாற்றி கேட்பாள்.

ஹர்ஷா " இல்ல இஷி..ஹர்ஷா எம்.பி.ஏ.னு சொல்றது நார்மல்.. ஹர்ஷவர்தன் எம்.பி.ஏ ஃபிரம் ஸ்டான்ஃபோர்டுங்கிறது ஸ்டாண்டர்ட்.. இது அப்பாவோட ஆச இல்ல. அவர விட்டுடு"
" ஆச தோச அப்பளம் வட ஆசப்பட்டத செய் செய் செய்" நக்கலாக பாடியபடி அவன் அருகில் வந்தவள் "அவரு ஆசைக்கு நீ வாழுற. அப்போ உன் ஆசைக்கு வாழ யாரு தம்பி இருக்கா.. ஜஸ்ட் திங்க் அபவுட் இட். அவர காப்பாத்த ஓவரை ட்ரை பண்ணுற மாதிரி இருக்கு. பட் யூ காண்ட் ஹர்ஷா... சரி எனக்கு டைம் ஆச்சு பை" என்றபடி கிளம்ப "எங்க" என்றான் ஹர்ஷா.

கண்களை அகலமாக விரித்து ஆச்சரியம் காட்டியவள் நெற்றியில் பட்டென்று அடித்தபடி "போறப்போ என்ன ஹர்ஷா கேள்வி இது. காலேஜ்க்கு போறேன் ப்பா." முகத்தை சுருக்க "நான் வேணும்னா ட்ராப் பண்ணவா?" அவன் உதவும் எண்ணத்துடன் கேட்டபடி பதிலுக்காக காத்திருக்க "ஹானஸ்ட்லி ஸ்பீக்கிங்.. வேண்டாம்... உன் அக்கறை ரெண்டு மாசம் தாங்குமா? அதுக்கு அப்றம் என் நிலைமை. சோ.... நோ" விரலை இடம் புறமாக ஆட்டியபடி சொல்லிவிட்டு அவள் வெளியேற ஹர்ஷா கை உயர்த்தி "டேக் கேர் இஷி" என்றதும் அதை மறுக்காமல் தலையை ஆட்டியபடி ஏற்றுக் கொண்டவள் கீழே நடந்தாள்.

படிகளில் தாவியவள் உணவு இருக்கையை தவிர்த்தபடி நடக்க "பாப்பா டிஃபின்" என்றாள் சரளா. நடையின் வேகத்தை குறைத்த இஷாரா "சரளாம்மா இன்னிக்கு என்ன டே?" என்று கேட்க "வியாழன் பாப்பா" அவர் சொன்னதும் "ஓஹ் காட்.. எனக்கு வேண்டாம்" என்றவள் நடக்க சரளா அவளை பின் தொடர்ந்தபடி "பாப்பா அம்மா உங்கள சாப்பிடாம அனுப்ப கூடாதுன்னு சொல்லிருக்காங்க. நீங்க சாப்பிடாம போனது தெரிஞ்சா..." அவர் முடிக்கும் முன் தலையில் அடித்துக்கொண்டாள் இஷாரா.

" சரளாம்மா ப்ளீஸ் எனக்கு இந்த வெந்த சூப் வேகாத சாலட் இதெல்லாம் வெறுத்து போச்சு. பிடிக்கல...விடுங்களேன்" என்றவள் சிடுசிடுக்க "ஆனா பாப்பா.. இன்னிக்கு சாலட்டும் இல்ல சூப்பும் இல்ல. ஹர்ஷா தம்பி கேட்டாருன்னு பொங்கல் வடை தான் பண்ணிருக்கோம்" என்றார்.

"வாட்.. பொங்கல் வடையா" ஆர்வமாக கேட்டவள் அவர் தலையை அசைக்க " சொல்லிட்டு இப்டியே நிக்கிறீங்கள்..ப்ளேட் எடுத்து வைங்க சரளாம்மா... சீக்கிரம்" என்று அவசரப்படுத்தியபடி அவரது தோளை தொட்டு தள்ள சரளாவும் சிரித்தபடி உள்ளே சென்றார்.

ஹர்ஷா இஷாராவின் சைகைகளை கவனித்தபடி நின்றவன் செல்ஃபோனை கையில் எடுத்தபடி "அப்பா.. நான் ஒன் மந்த் இல்ல டூ மந்த்ஸ் இங்க தான் இருக்க போறேன். இஷிய நான் சப்போர்ட் பண்ணனும்.அவ கூட நான் இருந்தே ஆகனும் ப்பா. உங்க செல்ல மக சாப்பிடுற அழக பாருங்க" என்று வாயிஸ் நோட்டை தட்டிவிட்டவன் மஞ்சள் நிற டீஷர்டின் ஸ்லீவை மடித்து விட்டபடி தங்கை பொங்கலை சாம்பாரில் குளைத்து உண்ணும் அழகை புகைப்படமாக பதிவு செய்து அதை தந்தைக்கு அனுப்பி வைக்கவும் மறக்கவில்லை.

நகருக்கு மத்தியில் செங்கற்களால் எழுப்பப்பட்ட ஆர்ச் ஒன்று காவலர் குடியிருப்பு என்ற செந்நிற எழுத்துக்களை தாங்கி நிற்க உள்ளே நான்கைந்து உயரமான கட்டிடங்கள் உருவ ஒற்றுமையில் ஒரே போல இருந்தது. காலை வேலை என்பதால் மனித நடமாட்டம் சற்றே அதிகமாக இருக்க பேய் அடி அடித்து ஓய்ந்து சாலை குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தது.

தெற்கே இருந்த ' சி ' பிளாக்கில் கிரவுண்ட் ஃபுலோர் வீட்டின் கதவு திறந்து கிடக்க வெளியே நின்றபடி "நர்மதா... நர்மதா" என்று குரல் கொடுத்தார் பெண் ஒருத்தி. அவளது சத்தம் கேட்டு எதிர் வீட்டு வாசலில் உறங்கி கொண்டிருந்த லேப்ரடார் இரண்டு முறை குறைத்ததே தவிர நர்மதா விடை தருவதாக இல்லை.

" என்ன ஒரு சத்தத்தையும் காணோம் " என்று வாய்விட்டு சொன்னபடி உள்ளே எட்டி பார்க்க வாயில் சிப்சும் கையில் ரிமோட்டுமாக பள்ளி சீருடையுடன் அமர்ந்திருந்தாள் நர்மதாவின் மகள் விசித்ரா. "விசி அம்மா இல்லம்மா?" என்று அந்த பெண் குரல் கொடுக்க "இல்ல சுமி ஆண்டி வெளிய போயிருக்காங்க" என்றவள் மீண்டும் கண்களை டிவியில் பதித்தாள் அந்த சிறு பெண்.

அதை காதில் வாங்கியபடி "அம்மா வந்தா நான் வந்துட்டு போனேன்னு சொல்லு விசி" என்றபடி அவர் திரும்ப வாளியுடன் மாடி படிக்கட்டுகளில் இறங்கினாள் நர்மதா. இடுப்பு சேலையை உதறி சரி செய்தபடி "என்ன சுமித்ரா.. வந்துட்டு கிளம்புற." என்று அவள் தொடங்க "நர்மதா.. இந்தா இந்த மாசம் சீட்டு காசு. இதோட பதினொரு மாசம் கணக்கு" அவள் பணத்தை நீட்ட அதை வாங்கியபடி வாளியை கீழே வைத்துவிட்டு "உள்ள வா சுமித்ரா" என்று உபச்சாரம் செய்தாள் நர்மதா.
"இல்ல நர்மதா அவருக்கு இன்னிக்கு ஆஃப் வீட்டுல தான் இருக்காரு. ஜெகன் வேற ஸ்கூல் விட்டு வந்திருப்பான் தேடுவான். நான் போயிட்டு அப்பறம் வறேன்" என்றபடி அவள் கிளம்ப மீண்டும் வாளியை கையோடு எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் நர்மதா.

"ஏன்டி.. வந்ததும் வாரததுமா டிவிய போட்டு உக்காந்து இருக்க. வீட்டுக்கு ஆள் வந்திருக்காங்க உள்ள வாங்கன்னு கூப்பிட்டு உக்கார வைக்க தெரியாத? வயசு பதிமூனு ஆகுது. உன்னலாம் நான் வளர்த்து ஒருத்தன் கையில பிடிச்சு குடுக்குறதுக்குள்ள என்ன பாடு பட போறேனோ." மகளை வசை மொழிந்தபடி அவர் சமையல் அறைக்குள் நுழைய மகளோ "போம்மா நீ இப்டி தான் சொல்லுவ. அப்றம் நான் கூப்பிட்டு வீட்டுக்குள்ள உக்கார வச்சா அன்னிக்கு மாதிரி திட்டுவ." முகத்தை சுருக்கினாள்.

"அடியேய் அதுக்காக வீட்டுக்கு வர கெஸ்ட் யாரு யாசகம் கேட்க வரவங்க யாருன்னு கூடவா அடையாளம் தெரியாது உனக்கு. எல்லாம் இந்த டிவியால வரது. முதல்ல உன் அப்பாகிட்ட சொல்லி கேபிள் கனெக்ஷன புடுங்கி போட சொல்றேன் இரு." என்றதும் " அட பாவமே.. அப்போ டான்னு ஒன்பதரைக்கு எதிர்நீச்சல் போடுவானே. அதுக்கு என்னக்கா பண்ணுவ" தமக்கையை வாரியபடி வீட்டுக்குள் நுழைந்தவளை "காது " என்ற கூவலுடன் ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள் விசித்ரா.

நர்மதாவின் கணவன் ஸ்ரீதர் காவல்துறையில் பணிபுரிகிறான். அவனது பணியிடை மாற்றம் காரணமாக சென்னைக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்து வருடங்கள் கடந்திருந்தது. நர்மதாவின் சித்தி வயிற்று பிள்ளை காது என்கிற காதம்பரி. கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவி. காதம்பரி தந்தை முகம் அறியாதவள் தாய் ரஞ்சிதா சொந்த மண்ணை பிரிய மனமில்லாமல் இருக்க தங்கையின் படிப்பை தன் பொறுப்பாக கையில் எடுத்துக் கொண்டு அவளை சென்னை அழைத்து வந்திருந்தான் அண்ணன் அருள். இருவரும் தங்க வீடு வசதி செய்து கொடுத்து பார்த்துக்கொண்டது ஸ்ரீதர் நர்மதா தம்பதி.

நர்மதா " வாடி... தனியாவா வந்த?" அவளிடம் கேட்டுவிட்டு வாயிலை பெரியவள் ஆராய்ச்சி செய்ய " அவன் கூட தான் வந்தேன் அக்கா. முக்கியமான வேலை இருக்கு நைட் வர முடியாதுன்னு சொல்லி கொண்டாந்து விட்டுட்டு போறான்." என்றவள் கையில் வைத்திருந்த பையை சின்னவளிடம் கொடுத்து "இந்த அருள் மாமா குடுத்தான். உனக்கு தான்" சிரிப்புடன் கொடுக்க கையில் வாங்கியபடி உள்ளே நடந்தாள் விசித்ரா.

நர்மதா " ஏனாம் துரைக்கு வாசல் வரை தான் வழி தெரியுமோ. வீட்டுக்குள்ள என்ன பாம்பா கெடக்கு. போக்கிரி பைய" தம்பி வீடு தங்காக ஆதங்கம் அருவியாக கொட்ட அவளது தோளில் கை வைத்து அணைத்த காதம்பரி " அக்கா.. விடுக்கா. உனக்கு தான் அவன பத்தி தெரியும்ல. அத்தான் வேத்து மனுஷன். அவன தெரியாது.. நீயும் புரிஞ்சுகாம அவன திட்டிட்ட. அதுல அவனுக்கு கொஞ்சம் வருத்தம் க்கா..ப்ச்..சரி ஆயிடுவான். நீ சங்கடப்படாத" என்றவள் அப்போதைக்கு நிலையை சமாளிக்க வழியை கண்டறிந்தபடி "மதியம் என்னக்கா சமச்ச. காலேஜ் முடிஞ்சதும் நேர வந்துட்டேன் பசி அல்லைய கிள்ளுது" என்றபடி கிச்சனை நோக்கி நடையை கட்ட அப்போதைய அனைத்தையும் புறம் தள்ளியவளாக பின்னோடு நடந்தாள் நர்மதா.

" எங்க காக்கி... இன்னுமா வீட்டுக்கு வரல. பொறுப்பே இல்லப்பா இந்த மீசை காரருக்கு" மாமனை கலாய்த்தபடி பானையை திறந்தவள் "ஐஐ.... பால் கொழுக்கட்ட" கண்களை விரித்து உற்சாகமாக சொல்லிவிட்டு அவள் கிண்ணத்தை தேட"அருளுக்கு தான் ரொம்ப புடிக்கும். உள்ள வந்து ஒரு வாய் சாப்பிட்டு போனா என்ன குறையாம். பெருசா முறுக்கிக்கிறான்" குறைபட்டுக்கொள்ள இது எதையும் அறியாத அருள் நனைந்து ஆடையில் ஈரம் சொட்ட முன்னுச்சியில் முத்தாக தண்ணீர் துளிகள் பூத்திருக்க ஏற இறங்க மூச்சு வாங்கியபடி எதிரில் அவனை போலவே மூச்சு வாங்க அமர்ந்திருக்கும் ஹர்ஷாவை முறைத்தான்.

அவனுக்கு சற்றும் சளைக்காமல் முறைத்த ஹர்ஷாவும் "என்ன ஏன் முறைக்கிற நியாயமா பார்த்தா நான் தான் மேன் உன்ன முறைக்கனும்" என்றவன் தலை முடியை சீர் செய்தான்.

 
ரொம்ப நல்லா இருக்கு.. அண்ணனும் தங்கை ஒத்துமையா தான் இருக்காங்க.. இங்க ப்ராப்ளம் பதமா தான் போலவே.. ஹர்ஷாவும் அருளும் ஃபிரண்ட்ஸ் யா..

கொஞ்சம் font இங்க்ரீஸ் பண்ணுங்க மா.. எபி no டைட்டிலேயே போட்ட நல்லா இருக்கும் .. எது எந்த எபினு கண்டுபிடிக்க முடியல.. கொஞ்சமே கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதையும் சரி பண்ணா ரொம்ப நல்லது
 
இந்த ரெண்டு பிள்ளைகள்
இணக்கமா தான் இருக்காங்க
 
Top