Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 3




நேரம் பின்னிரவை நெருங்கியிருக்க தனக்கு முன் வட்ட வாகில் அமைந்திருக்கும் நீச்சல் குளத்தை ஊடுருவி பார்த்தபடி இருந்தான் ஹர்ஷா. அவனது கவனம் குளத்திலுமில்லை... காற்றின் அழுத்தம் காரணமாக நகரும் நீல நிற குளோரின் தண்ணீரிலுமில்லை. மாறாக அவனது தந்தையிடம் இருந்தது.



"ஹர்ஷா.. நான் உன் விருப்பத்துக்கு மாறா இத செய்ய சொல்றது தப்புன்னு எனக்கு தெரியும். இதுவரைக்கும் உன் பெர்சனல் ஸ்பேஸ்ல நான் அநாவசியமா தலையிட்டது இல்ல. நானே உன்ன இந்தியாக்கு போக சொல்றேன்னா.. உனக்கு விஷயத்தோட சீரியஸ்னஸ் புரியும்ன்னு நினைக்கிறேன்." பொடி வைத்து பேசும் தந்தையின் குரலில் கண்களுக்கு புலம்படாத தவிப்பை அவனும் உணராமல் இல்லை.



" பத்மா.. இஷிய பெத்தாளே தவிர அவளுக்கு வாழ்க்கைக்கு அர்த்தம் தெரியாது ப்பா.. அவள பொறுத்த வரைக்கும் பணம் தான் எதையும் தீர்மானிக்கும்ன்னு அவ நம்புறா. ஆனா இஷியோட பாதுகாப்பு பணத்துல இல்ல." அவர் நிதானமாக மூச்சுவிட " இஷிக்கு பாதுகாப்பு இல்லன்னு நீங்க நினைக்கிறது ரொம்ப கரெக்ட் டாடி. அவளுக்கு முதல் எதிரியே உன் ஒய்ஃப் தான்." என்றான்.



" அவங்க அவங்களோட மைண்ட் செட்ட இஷி மேல திணிக்கிறாங்க டாட். எல்லாத்தையும் விடுங்க ஈவன் ஃபுட்.. சாப்பிடுறதுல கூட அவங்க கண்ட்ரோல் அவ மேல இருக்குங்குறது தான் என்னால ஏத்துக்க முடியல. எப்டிப்பா எல்லாம் தெரிஞ்சும் அமைதியா இருக்கீங்க?" என்றான். அவனது ஆதங்கம் புரிந்த தந்தையோ " பத்மாவ நான் எதாவது சொல்லி திருத்த முயற்சி செஞ்சா அது உனக்கும் இஷிக்கும் தான் ஆபத்து. அவள பத்தி உனக்கு முழுசா தெரியாது ஹர்ஷா."



" சரிப்பா.. நீ சொல்றது சரியாவே இருக்கட்டும். உன்னால அவங்கள கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு சொல்ற. அப்றம் எந்த தைரியத்துல என்ன இங்க அனுப்பி வச்சிருக்க நீ" சற்றே காட்டமாக கேட்க ரத்தினம் சிரித்தவர் "உன்ன நான் அங்க அனுப்பி வச்சது பத்மாவதிய சரி செய்யனு நெனச்சியா ஹர்ஷா? ம்ஹூம்.. இப்போ பத்மாவ விட பெரிய ஆபத்துல இஷி சிக்கியிருக்கா. அவ கழுத்து வரைக்கும் கத்தி வந்துடுச்சு." என்று நிறுத்தினார்.



"டாட்... டாட்... டாட்... நீ பிஸ்னஸ் மேன். உனக்கு ரைவல்ஸ் அதிகம்...அதெல்லாம் ஃபைன். இப்போ இஷிய எதுக்காக டார்கெட் பண்ணும். ஜஸட் கம் டு த பாயிண்ட். எனக்கு தலையே சுத்துது டாட் ப்ளீஸ்." தலை முடியை கொத்தாக பிடித்தபடி சொல்ல சிறிது மௌனத்திற்கு பிறகு.. "நம்ம கம்பெனியோட ரெண்டு பங்கு ஷேர் இஷி பேர்ல இருக்கு ஹர்ஷா." என்றார் .



" ஆல்ரைட் எனக்கு புரிஞ்சுடுச்சு. நீங்களும் அவ அம்மா மாதிரி தான். அங்க சுத்தி இங்க சுத்தி அவ லைஃப்கே வேடி வச்சுட்டீங்க. ஏன் டாட்... மாசம் சம்பளம் வாங்குறவன் வாழ்க்கையில இருக்க நிம்மதி.. ஏன் நமக்கு இல்ல. இ்ப்டியே பணத்த பாதுகாக்க நம்ம நம்மல பாதுகாக்க நாலு பேர்ன்னு வாழ்க்கை முழுக்க ஓடிட்டே தான் இருக்கனுமா?" பெருமூச்சுடன் முடித்தவன் அமைதியானான்.



" ஹர்ஷா காம் டவுன்... நீயும் இஷி மாதிரி யோசிக்கிறத நிறுத்து..பீ ப்ராக்டிகல். லைஃப் இஸ் நாட் அ பெட் ஆஃப் ரோசஸ். மாசம் சம்பளம் வாங்குறவனோட கஷ்டம் அவனுக்கு தான் தெரியும். நான் உன் அப்பா..உன் வயசு என் அனுபவம்" என்றார்.



ஹர்ஷா ஆழமாக மூச்சை உள்ளே இழுத்தவன் "ஓகே டாட்.. இஷிக்கு எதுவும் ஆகாது. ஐ ப்ராமிஸ். அது மட்டும் இல்ல... நான் திரும்ப யூ.எஸ். வரும் போது... உன்னோட ஒய்ஃப் அந்த ஓல்ட் லேடிக்கு லைஃப்னா என்னன்னு புரிய வச்சுட்டு தான் வருவேன்." என்றவனது பதில் எதிர்முனையில் இருப்பவரை பரவசமாடைய செய்தது.



" ஐ நோவ்.." என்றவர் "நீயும் கேர்ஃபுல்லா இருக்கனும் ஹர்ஷா" என்று மறை முகமாக எச்சரிக்க " எனக்கு ப்ராப்ளம் வந்தா.. அது கண்டிப்பா அந்த ஓல்ட் லேடியால தான் இருக்கும்." என்று சிரித்தவன் "ஏன் டாட் தெரியாம கேட்குறேன் இந்த பிரபஞ்சத்துல உனக்கு கல்யாணம் பண்ணிக்கு ஒரு நல்ல பொண்ணு கூடவா கெடைக்கல. உன் செலக்ஷன் ஏன் டாட் இவ்ளோ ஒர்ஸ்டா இருக்கு. தாங்க் காட்.. உன் டேஸ்ட் எனக்கு இல்ல. அப்றம் ப்ளீஸ் எந்த காரணமும் சொல்லிட்டு என் லவ் லைஃப் குள்ள வந்துராத ப்பா.. காரியமே கெட்டுரும் " என்று தந்தையையும் அவரது தாரத்தையும் மனதார கலாய்த்து திருப்தி அடைந்தவன் என் வாழ்க்கை என் விருப்பம் என்பதையும் ஆணித்தரமாக எடுத்து வைத்தான்.



காலம் யாருக்காவும் வளைந்து கொடுக்கும் நாணல் அல்ல. அது எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் எரிமலை. காலம் பல கலரில் சுக துக்கங்களைச் கையில் வைத்துக் காத்துக்க கொண்டிருந்தது. இவற்றை அறியாதவர் பட்டியலில் ஹர்ஷாவின் பெயரும் இருக்கத்தான் செய்தது.



ஃபோனை அனைத்தவன் அப்படியே அங்கே கிடந்த இரும்பு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி தெளிந்த நீரில் பார்வையை ஓட்ட அது அதில் பதிவேன் நான் என்று அடம் பிடித்தது. தங்கை ஒரு புறம். தந்தை மறுபுறம். பத்மாவதியின் பிடிவாதமும் சூழ்ச்சியும் என மாறி மாறி மன திரையில் பதிந்து மீண்டது. ஹர்ஷா நெற்றியில் கை வைத்தபடி தலை சாய்ந்தவன் எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ அவனே அறியான். காற்று மிதமாக உடலை வருட புஜத்தை கையால் தேய்த்துக் கொண்டவன் நினைவு களைந்தவனாக தலையை சிலுப்ப தண்ணீரின் அடியில் நீளமாக விழுந்தது ஒரு பிம்பம்.



ஹர்ஷா உடனே சுதாரித்தவன் அது கையில் வைத்திருந்த ஆயுதத்தை ஓங்கும் முன் கையை பிடித்து முன்னாள் இழுக்க இருவருமாக சேர்ந்து 'பொத்' என்ற சத்தத்துடன் தண்ணீரில் விழுந்தனர். நீர் துளிகள் அங்கும் இங்குமாக சிதர ஹர்ஷா அந்த உருவத்தை பின்னால் இருந்து இறுக்கமாக பிடித்துக்கொண்டான்.



இப்போது தான் கவனிக்கிறான் அது ஒரு ஆண். கிட்டத்தட்ட அவனது உயரம். முதிர்ந்த உருவமாக தெரியவில்லை. இறுக்கி கிடக்கும் அவனது பிடிக்குள்ளே நெளியும் அளவிற்கு வழு இருக்கிறது. அடர்த்தியான கேசம் தண்ணீர்ல் நனைந்து ஒன்றோடொன்று ஒட்டி கிடக்க ஹர்ஷா அவனது காதருகில் குனிந்து "யாரு நீ? என்ன அட்டாக் பண்ண வந்திருக்கியா?" அவன் சாதாரணமாக எதிர்பார்த்து காத்திருந்ததை போல கேட்க இத்தனை நேரம் தப்பிக்க போராடியபடி இருந்தவன் அவனது கைகளுக்கு நடுவில் அமைதியானான்.



ஹர்ஷா கைகளை தளர்த்தி அவனது முகம் பார்த்தான். அவன் ஒன்றும் சிறுவனல்ல. ஹர்ஷாவின் வயதிருக்கும். மாநிறம். "உன்ன தான் கேட்குறேன். யாரு பாஸு நீ?" இவன் மீண்டும் கேட்க சத்தமின்றி நின்றவன் உதடுகளை சிரமமின்றி வளைத்தபடி "பணக்கார பசங்க படு முட்டாளா இருப்பாங்கன்னு நெனச்சேன். பரவாயில்லையே ஆட்டு மந்தையில ஒரு ஓநாய்..உன்ன நான் கம்மியா எடை போட்டுட்டேன் " என்றவன் உடல் நடுக்கம் எடுக்க "ஸ் ஸ் ஸ்... எம்மா.. உனக்கு குளிரல?" அவனிடம் கேட்க ஹர்ஷா மெச்சுதல் பார்வை பார்த்தவன் தோளை ஏற்றி இறக்கியபடி "ம்ம்.. உனக்கு கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்.. அதாவது எனக்கும் குளிருது..இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன். வா.. உக்காந்து பேசுவோம்" என்றபடி குதித்து மேலே ஏற அந்த புதியவனும் அவனை பின் தொடர்ந்தான்.



இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி எதிர் எதிரே அமர்ந்திருக்க அந்த இடத்தில் ஒரு நீண்ட நிசப்தம். ஹர்ஷாவே "ஏன் என்ன முறைக்கிற.. நியாயமா பார்த்தா நான் தான் மேன் உன்ன முறைக்கனும். அது சரி.. யாரு நீ என்ன அட்டாக் பண்ண தான வந்த?" என்றான்.



எதிர் அமர்ந்திருந்தவனோ தலையை கையால் தட்டி உலர்த்தியபடி "அருள்..உன்ன கொல்ல தான் வந்தேன்" என்றான் மொட்டையாக. ஹர்ஷா புருவம் உயர்த்த "என் பேரு. நான் எதுக்கு வந்தேன்..உனக்கு இது தெரிஞ்சா போதும் சார். எங்கிட்ட சொல்ல வேற பதில் இல்ல. நான் ஒரு கூலி. உன்ன மாதிரி ஃபாரின்ல படிச்சுட்டுட்டு அப்பா சேர்த்து வச்ச சொத்த பாதுகாத்துட்டு வாழ்க்கைய ஓற்ற ஜீனி இல்ல. செல்ஃப் எம்பிளாயிமெனட்" என்றவன் வாகாக சாய்ந்து கொண்டான்.



ஹர்ஷா அவனது பேச்சில் கவரப்பட்டான் தான் அதை உடனே ஒத்துக்கொள்ள ஈகோ இடம் தரவில்லை. "நான் ஹர்ஷா " அவன் சொல்லி முடிக்கும் முன் " இதோ பார்ரா.. நீ யாருன்னு கூடவா தெரியாம உன்ன போட்டு தள்ள வெப்பனோட வந்திருப்பேன். தெரியும் சார்.. நீ ஹர்ஷா.. ராஜம் க்ரூபோட ஒரே வாரிசு. பிறந்த மண்ண எப்போவாச்சும் டைம் கெடச்சா வந்து தொட்டுட்டு போவ. அப்பறம்..." என்று அவன் தொடங்க அங்கே ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தான் ஹர்ஷாவின் பி.ஏ. கவின்.



"சார்.." அவன் பதட்டமாக அழைக்க ஹர்ஷாயுடன் சேர்ந்து அருளும் திரும்பி பார்த்தனர். "யூ ஆர் இன் டேஞ்சர்.. உங்கள அட்டாக் பண்ண ப்ளான் பண்ணியிருக்காங்க" அவன் சொல்லி முடிக்க ஹர்ஷாவும் அருளும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வெடித்து சிரித்தனர்.



"ஏன்டா டேய்.. ஒரு பொண்ண பார்க்கலாம் அதுக்குன்னு மூனு மணி நேரமாவாடா பார்ப்ப. என்ன சொல்றா உன் சேட்டு பொண்ணு சுஷ்மிதா?" அருள் சிரித்தபடி கேட்க ஹர்ஷா நடப்பவற்றை பார்வையாளராக இருந்து பார்த்தபடி கைகளை கட்டிக்கொண்டான்.



கவின் அசடு வழிய சிரித்தபடி " யாரு சார் இவரு?" என்று ஹர்ஷாவை சுரண்ட "அத என் கிட்ட கேளு. நீ தகவல் சொல்ல வந்தியே ஒரு அட்டாக். அத செய்ய வந்தவனே நான் தான். அட்டாக் முடிஞ்சு பதினஞ்சு நிமிசத்துக்கு மேல ஆச்சுடா என் சிப்ஸூ" என்றான்.



அவன் நடப்பவற்றை நம்ப சிரம்ப்பட்டவனாக ஹர்ஷாவை பார்க்க அவனோ தொளை குலுக்கினான். கவின் பதட்டம் பீடித்த நிலையில் ஹர்ஷாவின் உடலை ஆராய்ச்சி செய்ய "கவின் ரிலாக்ஸ். நான் நல்லா இருக்கேன்." என்று உறுதி அளிக்கவே கவினின் பார்வை அருளின் பக்கம் திரும்பியது.



"டேய் உன்ன.. இருடா.. போலிஸ்க்கு கால் பண்ணி உன்ன உள்ள தூக்கி போடுறேன்" என்று கத்த அருள் எதற்கும் அசைவதாக இல்லை. ஹர்ஷா அவனது சைகைகளை அணு அணுவாக அளந்து மனதில் பதித்துக்கொண்டவன் "கவின்.." என்று அவனை அடக்கியபடி " உன்ன யாரு இங்க அனுப்பினது அருள்?" என்றான். குரலில் அத்தனை நிதானம். ஏனோ ஹர்ஷாவின் எதற்கும் அலட்டிக் கொள்ளாத குணம் அவனுக்கு பிடித்திருந்தது.



" என்ன சார்..துரோகம் பண்ண சொல்றியா... நான் யாரு எதுக்காக வந்தேங்குற உண்மைய உன் கிட்ட சொல்லிட்டேன். அதோட முடிஞ்சு போச்சு. வேற எதையும் என்கிட்ட இருந்து நீ வாங்க முடியாது " என்றான்.



ஹர்ஷா புன்னகைத்தவன் "அது சரி.. சோ.. நீ சொல்ல மாட்ட.. கவின் அருள யாரு அனுப்பி வச்சதுன்னு எனக்கு உடனே தெரிஞ்சு ஆகனும்" என்று கட்டளையாக சொல்ல கவின் பேச வாய் திறக்கும் முன் அருள் பலமாக சிரித்தவன் "யாரு இவனா.. நான் உள்ள வந்ததே இவனுக்கு தெரியாது. இவன் என்ன அனுப்புனது யாருன்னு கண்டு பிடிக்க போறானா? சார் உன்ன கொல்ல வந்தவங்கிற உரிமையில சொல்றேன் கேட்டுக்கோ. இவனால ஒரு ஆணியையும் புடுங்க முடியாது" என்றான்.



ஹர்ஷா கவினை பார்க்க "உன்ன" என்றபடி அவன் பற்களை கடிக்க அருள் " நீ கண்டுபிடி.. இல்ல கண்டுபிடிக்காத.. அது உன் இஷ்டம். நான் வந்த வேலை முடிஞ்சுதுப்பா. நான் கெளம்புறேன். கேர்ஃபுல்லா இரு சார்.. நான் இல்லன்னா வேற ஆளே இல்லன்னு நெனச்சுக்காத. நம்ம பசங்க நெறைய வெளியில இருக்காங்கே. கொஞ்சம் அள்ளி தட்டுனா பார பச்சமே பார்க்க மாட்டாங்கே. எல்லாரும் அருள் இல்ல சார்.... எல்லா நேரமும் உனக்கு சாதகமா இருக்காது பார்த்து சூதானமா இரு.. வரட்டா " கையை அசைத்துவிட்டு அவன் எழுந்து செல்ல போகும் அவனையே பார்த்தபடி இருந்தான் ஹர்ஷா. கவினும் வாயை பிளந்த படி அவனை கண்களால் வழி அனுப்பினான்.



ஹர்ஷா " அருள் ஒரு நிமிஷம்" என்றபடி ஏதோ நியாபகம் வந்தவனாக எழுந்து செல்ல கவினின் மூளைக்கு தான் நடப்பவை எதுவும் எட்டவில்லை. அருளை நெருங்கிய ஹர்ஷா "நான் உன்ன காண்டாக்ட் பண்ணனும்னா.. ஐ மீன்... எனக்கு உன்ன மாதிரி திறமையான ஆள் தேவைப்பட்டா.. நான் உன்ன எப்டி உன்கிட்ட பேசுறது?" சற்று தயக்கத்துடன் கேட்டான்.



அவனது தயக்கம் புரிந்தவனாக" இத சொல்றத்துக்கு ஏன் புளிப்பு மிட்டாய் சாப்பிட்ட மாதிரி முகத்த வச்சிருக்க சார். ஐயோ.. ஐயோ.. உன்ன நான் தப்பா நினைக்க மாட்டேன். அருள் மித்ரன்." அவன் நிறுத்த ஹர்ஷாவின் கண்களில் ஆர்வம் தெரிய கையில் ஃபோனை எடுத்தான். அருள் புன்னகைத்தவன் "அது என் இன்ஸ்டாகிராம் ஐடி. டிபில என் ஃபோட்டோ இருக்கும்.... எனக்கு நிரந்தரமா ஒரு ஃபோன் நம்பர் கெடையாது. அப்போ அப்போ மாறிக்கிட்டே இருக்கும்.ஃபாலோ பண்ணிக்கோ சார் ..சரி பாக்கலாம்." என்றவன் அங்கிருந்து வெளியேற பயன்படுத்திய வழியை அறிந்ததும் பிரமித்து போனான் ஹர்ஷா.



கவின் "சார் அவன ஏன் போக விட்டீங்க சார். அவன போலிஸ்ல பிடிச்சு கொடுக்கனும்." என்று படபடக்க அவனது முகத்தை நிதானமாக ஏறிட்டுப் பார்த்த ஹர்ஷா "உன் கேர்ல் ஃபிரண்ட் பேருல இருந்து நீ ஒன்னுத்துக்கும் உதவ மாட்டேங்குற வரைக்கும் அப்டியே சொல்றான். போலிஸ்க்கும் கேஸ்க்கும் பயந்தவன் இன்ஸ்டா ஐடிய தூக்கி குடுத்துட்டு போக மாட்டேன். ஹீ ஹாவ் சம் ப்ளான். கொஞ்சமாச்சும் அறிவ வளர்த்துக்க ட்ரை பண்ணு கவின். நாளைக்கு நம்ம அருள மீட் பண்ணனும். ஷார்பா எட்டு மணிக்கு காட் இட்." என்றான்.



கவின் உதட்டை வளைத்தவன் ' அது என்ன எட்டு மணிக்கே.. ஐயோ.. சுஷ்மி காலேஜ் பஸ்க்கு வெயிட் பண்ணுற டைம் ஆச்சே. தேவதைய பார்க்க வேண்டிய டைம்ல தேவாங்க பார்க்க அப்பாய்ண்ட்மெண்ட் போடுறாரே' அவன் முணுமுணுக்க அதை சரியாக கணித்த ஹர்ஷா "நாளைக்கு மட்டும் என்ன பெருசா சாதிச்சுட போற சும்மா பார்த்துட்டே தான இருக்க போற" சொல்லிவிட்டு புருவம் நெறிய அவனை பார்த்தவன் "நாளைக்கு மார்னிங் எட்டு மணிக்கு" என்று விரலை நீட்டி சொல்லிவிட்டு அங்கிருந்து அறையை நோக்கி நகர்ந்தான். ஹர்ஷா தன்னையும் தன் காதலையும் கலாய்த்துவிட்டு சென்றதற்கு காரணமான அருள் மீது கொலை வெறியே வந்தது.



கவினின் மனதை குளிர்வித்த மாகராசனோ "அப்டி என்ன தான் உனக்கு நெனப்பு. எப்ப பாரு அடி பட்டு கால் கைய தேச்சுட்டு வர" என்ற வசை மொழிகளை வாங்கியபடி கையில் பாண்டேஜ் சுற்றும் தங்கையை ஆதுரமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
 
அடபாவி கொலை பண்ண வந்த ஆளா நீ.. ஆமா உனக்கு கொடுத்த அசைன்மெண்ட்யை நீ முடிக்கலையே கொடுத்த ஆள் கேட்டா என்ன சொல்லுவா பா நீ.. அருளோட நிதானம் தானே ஹர்ஷாக்கு பிடிச்சது நீங்க ஹர்ஷாவோடது னு போட்டு இருக்கீங்க..

font பெருசு பண்ணுங்க மா.....
 
Top