Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 4


பளிச்சென்ற காலை வெயில் போர்வையை தாண்டி அவளது முகத்தில் அறைய நேரம் தாழ்த்தி தூங்கிய களைப்பும் உடன் சேர்ந்து கொள்ள சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்த காதம்பரியின் இன்றைய காலை பொழுது சற்று மந்தமாகவே இருந்தது.

படுக்கையை விட்டு எழுந்தவள் கைகள் இரண்டையும் தேய்த்து கண்களில் ஒத்தி எடுத்தபடி எழுந்து முதல் வேலையாக ஹாலுக்கு சென்றாள். போர்வை நெஞ்சு வரை மூடி கிடக்க சோஃபாவில் சேஃபாக உறங்கும் அருளை பார்த்த பிறகு தான் அவளது மனம் சாந்தி அடைந்தது. இரவு உண்ணாமல் படுக்க சென்றவனை " நீ வரேன்னு சொல்லாம போயிட்ட. எதுவும் சமச்சு வைக்கல. ப்ச்.. என்ன அருளே நீ. இப்டியா செய்வ? " என்று வசை பாடியபடி கூந்தலை அள்ளி முடிந்தபடி கிச்சனுக்குள் சென்றாள்.

" காது எனக்காக எதுவும் செய்ய வேணாம். எனக்கு பசிக்கல .. நீ போய் தூங்கு" என்றவனை திரும்பி பார்த்து முறைத்தவள் "போய் முகம் கழுவிட்டு வா.. இட்லிய கட் பண்ணி தாளிக்கிறேன். சாப்பிட்டு தான் படுக்குற இல்லன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்" கட்டளையாக சொல்லிவிட்டு அவனுக்கு உணவை தயார் செய்தாள். சூடாக ஆவி பறக்க கடுகு சின்ன வெங்காயம் கருவேப்பிலை தாளிப்புடன் அவன் முன் இட்லி பரிமாறப்பட அதை உண்ண கையை வைத்த அருள் "ஸ் ஸ்.." என்றது தான் கடன் காது காளியாக மாறி இருந்தாள்.

"கையில என்ன.. எங்க காட்டு" என்று பதறியவள் நீளவாக்கில் கிழிந்து ரத்தம் உறைந்திருக்கும் உள்ளங்கையை ஆராய்ச்சி செய்தவள் தலையை உயர்த்தாது கண்களை மட்டும் உயர்த்தி முறைக்க அருள் காது மடல் தேய்த்துக் கொண்டான். "அறிவு இருக்கா இல்ல அடமானம் வச்சிருக்கியா? ஆன்.. எத்தன தடவ சொல்லிருக்கேன் நிதானமா இருன்னு கேட்க மாட்டல்ல நீ" என்றவள் கையை சட்டென்று விட்டபடி எழுந்து சென்றவள் கையில் காக்கி கவருடன் திரும்பி வர " இது சாதாரண காயம் தான் காது.." என்று அவன் வாய் திறக்க ஒரு முறைப்பில் அவளை அடக்கினாள்.

"கைய காட்டு... அப்டி என்ன தான் உனக்கு நெனப்பு. எப்ப பாரு அடுப்பட்டு கை கால்ல தேச்சுட்டு வர" என்று வசை பாடியபடி பாண்டேஜை கையில் சுற்றியது நினைவு வர இப்போதும் கூட அவளுக்குள் சிறு துளி கோபம் மூண்டது தான். " இவனுக்கு பாவமே பார்க்க கூடாது.. எவ்ளோ சொல்லிருக்கேன். என் பேச்ச கேட்குறதே இல்ல " என்று வாய் விட்டு புலம்ப அவளது தோளை தட்டினாள் நர்மதா.

" என்னடி எழுந்து பல்ல கூட தேய்க்காம இங்க நின்னு தாங்குறவன் மூஞ்சிய பார்த்துட்டு இருக்க" கேட்டபடி டீயை உறிஞ்ச " வேற என்னக்கா நினைக்க போறேன். இவனுக்கு ஒரு நல்ல காலம் வராதா ன்னு தான் யோசிச்சேன். பாவம் க்கா அவன். அம்மா என்ன பார்த்துக்க அவன அனுப்புச்சு. ஆனா அவன் அத மட்டுமே முழு நேர வேலையா வச்சிருக்கான். படிச்ச படிப்ப நம்பாம கெடைக்கிற வேலை எல்லாம் செஞ்சுக்கிட்டு வீடு தங்காம சோறு தண்ணி பார்க்காம சுத்துறான்" பெருமூச்சுடன் முடித்தவள் நர்மதாவை இப்போதுதான் கவனித்தாள்.

" நர்சம்மா ரெடி ஆயிட்டீங்க போல?" அவள் கேட்க செவிலியருக்கே உள்ள பிரத்யேக வெள்ளை புடவையை ஏற்றி விட்டபடி " ஆமா இன்னிக்கு எனக்கு ஏர்லி மார்னிங் ஷிஃப்ட்., நைட் ஏழு மணிக்கு தான் வருவேன். நீங்க மட்டும் தான எதாச்சும் சிம்பிளா சமச்சுக்கோ. நீ இருக்க தைரியத்துல நான் சமைக்க லீவ் விட்டுட்டேன் " பேசியபடியே கப்பை காலி செய்தாள்.

"நல்லதா போச்சு..அப்போ நீ கெளம்பு. நான் பாப்பாவ பார்த்துக்குறேன்" என்றவள் கப்பை கையில் வாங்கி கொள்ள " ஸ்கூல் லீவ் தானேன்னு பதினொரு மணி வரைக்கும் தூங்குவா. தூங்க விடாத ரெண்டு அடி போட்டு எழுப்பு. நாளைக்கு எக்சாம். நாலு மணிக்கு படிக்க உக்கார வை. ஏமாத்த முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுவா... கொஞ்சம் கூட இடம் குடுத்துறாத.. அப்றம் தலையில ஏறி உக்காந்து மசாலா அரைச்சுடுவா" என்று மகளை பற்றிய விவரத்தை தந்தவள் கை பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்.

"ஆன்.. காதும்மா. நைட் சாப்பிட்டானா?" அக்கறையுடன் கேட்டவளுக்கு அதை வெளிகாட்ட மனம் இல்லாமல் போக காதம்பரி "அதான பார்த்தேன். என்ன தான் நீயும் அவனும் முறைச்சுட்டே திரிஞ்சாலும் விட்டு குடுப்பீங்களா? நடு ராத்திரியில் வந்து நாய் கதவ தட்டுதேன்னு தெறந்தா..அக்கா எங்க? சப்பிட்டுச்சான்னு அவன் கேட்குறதும்...விடிஞ்சும் விடியாமலும் இந்த அம்மா அவன அக்கறையா விசாரிக்கின்றதும். அப்பப்பப்பா.. முடியல என்னால. ஒருத்தரும் என்ன பத்தி கவலை படுற மாதிரி தெரியல.இதெல்லாம் ஓர வஞ்சனை சொல்லிட்டேன்." அவள் விளையாட்டாக குறைபட்டுக்கொள்ள தலையில் கொட்டி வைத்தாள் நர்மதா.

"கேட்டா கேள்விக்கு பதில் சொல்லி பழகு டி குந்தாணி" என்று பெரியவள் அதட்ட தலையை தேத்தபடி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டவள் "எரும..நல்லா கொட்டிக்கிட்டு தான் படுத்துச்சு. நீ போய் வேலைய பாரு ஆத்தா. எல்லாம் என் நேரம்" முணுமுணுத்தபடி வழி அனுப்பி வைக்க கையசைத்தபடி விடை பெற்றாள் நர்மதா.

ஹர்ஷா காலையில் உற்சாகமாக எழுந்தவன் குளித்து முடித்து நீல நிற டீஷர்டும் ஐஸ் புளு ஜீனும் அணிந்தவன் உடலை வாசனை திரவத்தால் மூழ்கடித்துக்கொண்டான். தலைமுடியை களைத்து கைகளால் சீவியபடி கையில் ஆர்மணியை மாட்டிக்கொண்டவன் ஒருமுறை அவனை கீழிருந்து மேலாக அவதானித்துவிட்டு கையில் ஃபோனை எடுத்தபடி ஸ்கிரீனை பார்க்க மணி காலை எட்டு பதினைந்து என காட்டியது.

"ம்ஹூம்.. இந்த கவின் உனக்கு எந்த வகையிலையும் செட் ஆக மாட்டான் ஹர்ஷா. நீ முன்னுக்கு வரனும்னா முதல் வேலையா இவன வேலைய விட்டு தூக்கனும்" என்று வாய் விட்டு சொல்ல "உங்களுக்கு அவ்ளோ சிரமத்த நான் தர விரும்பல சார்.. நானே வந்துட்டேன்." பற்கள் முப்பத்து இரண்டும் பளபளக்க சிரித்தமுகமாக முன்னாள் வந்து நின்றான் கவின்.

அவனை கண்கள் சுருக்கி முறைத்தவன் "பதினஞ்சு நிமிஷம் லேட்" என்றபடி கைகளை கட்டிக்கொள்ள " சார் அதுக்கு காரணம் உங்க டாடியும்... அவங்க டாடியும் தான்" என்றவனை வேற்றுகிரக வாசியை போல பார்த்து வைத்தான் ஹர்ஷா. "எதுக்கு அப்டி பார்க்குறீங்க.. நான் எட்டு மணிக்கே வந்துட்டேன். கேட்ல இருந்து ஃபஸ்ட் ஃபுளோர் வரத்துக்குள்ள... பதினஞ்சு நிமிஷம் ஆச்சு. இந்த உன்மைய தெரிஞ்சுக்காம ஒரு நிரபராதிய தண்டிக்க பார்த்தீங்களே இது பெரிய மனுஷ தன்மையா?" மகா நல்லவன் வேடம் தரித்தான் கவின்.

ஹர்ஷா அவனை நம்பாத பார்வை பார்த்தவன் "எல்லாம் சரி நைட்டு ரெண்டு மணிக்கு இன்ஸ்டாகிராம்ல என்ன பண்ணிட்டு இருந்த?" அவன் கேட்டுவிட்டு எழுந்து நடக்க அவன் பின்னோடு நடந்தபடி "அது.. சார் நான் ஒரு ரிசர்ச் ஸ்டூடண்ட். படிப்பு சம்பந்தமா எதாச்சும் பார்த்துட்டு இருந்திருப்பேன்" என்றவனை ஓர் கண்ணால் பார்த்த ஹர்ஷா "ஏன் அர்த்த ஜமாத்துல தான் ரிசர்ச்க்கு நல்ல நேரமோ" நக்கலாக கேட்டுவிட்டு சிரிக்க கவின் முகம் விளக்கெண்ணெய்யை விழுங்கியது போல அஷ்டகோணல் ஆனது.

இருவரும் டைனிங்கை அடைய ஹர்ஷா ஸ்லீவை மடித்தபடி "சரளாக்கா" என்று குரல் கொடுக்க கையில் உணவுடன் வந்தார் சரளா. நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவன் "செம்ம பசி..." என்றவனுக்கு தட்டில் உணவை பறிமாறினார் சரளா. கவின் ஒரு ஓரமாக நிற்க "நீ சாப்பிடல?" அவன் இட்லியை வாயில் வைத்தபடி கேட்க கவின் சில வினாடிகள் யோசனை செய்தவன் வேகமாக தலையை அசைத்தான்.

அவன் மறுத்த விதமே ஏதோ மனதை நெருட ஹர்ஷா உணவை உதறிவிட்டு எழுந்தவன் "சரளாக்கா இன்னொரு பிளேட் கொண்டு வாங்க" என்று விட்டு மற்றொரு நாற்காலியை இழுத்தவன் "கவின் நீ உக்காரு.." என்றான். கவின் "சார்.. நானா?" என்று கண்கள் விரிக்க "உன் பேர் தான கவின்..ம்ம்.. உக்காரு" அம்முறை கட்டளையாக வந்து விழுந்தது வார்த்தைகள்.

கவின் மறுப்பு சொல்லாமல் அமர்ந்தவன் சரளா இட்லியை அவன் தட்டில் அடுக்க மூன்றோடு "போதும்.. போதும்மா" என்றவன் உணவை உண்ண கையில் எடுக்கும் போது பட்டென்று சத்தம் கேட்டு கவினும் ஹர்ஷாவும் ஒரு சேர திரும்பி பார்த்தனர்.

பழச்சாறு கோப்பையை கீழே எறிந்திருந்தார் பத்மாவதி. அவரது கண்கள் கனலாக தகிக்க கவின் தானாக இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான். நடப்பவற்றை அமைதியாக பார்த்த ஹர்ஷா பேசவில்லை. "இங்க என்ன நடக்குது சரளா.. யாரு வேணா உக்காந்து சாப்பிட இது சத்திரமா இல்ல சாவடியா.. இத்தனை நாளா இந்த வீட்டுக்குன்னு இருந்த மரியாதை எங்க போச்சு. புதுசா வந்தவங்களுக்கு தான் தெரியாது. உனக்குமா தெரியாது? " அவர் அதட்ட ஹர்ஷா "கவின்.. சிட் டவுன்" என்றான் அழுத்தமாக.

கவின் பேச வாய் திறக்க "உனக்கு நான் பாஸா..? இல்ல அவங்க பாஸா?"
"நீங்க தான் சார்"

"அப்போ உக்காரு.. பொறுமையா சாப்பிடு"

"சரளாக்கா டிஃபின் அருமையா இருக்கு. ஒரே ஒரு சின்ன குறை.. புதினா சட்னி. அது என் ஃபேவரைட். இனிமே இட்லி பண்ணா மறக்காம சட்னி பண்ணிடுங்க" புன்முறுவலுடன் சொன்னவன் கையை கழுவிய படி எழுந்து பத்மாவதியை நெருங்கினான்.

" பத்மாம்மா... நீங்க பேசுன மாதிரியே என்னாலையும் உங்களுக்கு பதிலடி குடுக்க முடியும். யோசிச்சு பாருங்க நான் அப்டி செஞ்சா.. உங்க மரியாதை என்ன ஆகுறது. " என்றான்.

அவனது ஏளன முறுவல் பத்மாவின் கோவத்தை கிளற தான் செய்தது. பற்களை அவர் நரநரவென கடிக்க மேலும் சிரிப்பை அதிகப்படுத்திய ஹர்ஷா " இந்த வீட்டுக்கு நீங்க அழையா விருந்தாளியா வந்தாலும்.. உங்களுக்கு முன்னாடி இங்க உரிமையுள்ளவன் நான் தான். மறந்துட்டீங்களா... உங்களுக்கு நான் ஆறு வருஷம் சீனியர். புதுசா வந்து இந்த இடத்தையே ஆட்டி வைக்க ஆசைப்பட்டது நீங்களா? நானா?. ம்ஹூம்... இத நான் சத்தமா சொன்னா மானம் போயி.. ஒட்டிட்டு இருக்க கொஞ்ச நஞ்ச மரியாதையும் புஃப்..." விரலை குவித்து வெடிப்பதை போல பாவனை செய்தான்.

பத்மாவதி வாய் திறக்கவில்லை. ஹர்ஷா எதையும் செய்யக்கூடியவன் என்பதை அவனது ஆறு வயதில் இருந்தே அறிந்தவர் ஆயிற்றே. ஹர்ஷா உதட்டோரம் சிரிப்பை ஒளித்து வைத்தபடி "சரளாக்கா.. கவினிக்கு இன்னொரு இட்லி வைங்க" என்று பத்மாவதியின் கோபத்திற்கு தூபம் போட்ட கவின் விட்டால் போதும் என மறுத்து விட்டு எழவே இருவரும் பார்கிங்கை அடைந்தனர்.

கவின் "சூப்பர் சார் நீங்க. நான் கூட நீங்களும் உங்க அப்பா சார் மாதிரி... அமைதியா நின்னுட்டா. அசிங்க பட்டு போவேனோன்னு பயந்துட்டேன்" என்றான்.

ஹர்ஷா சிரித்தவன் "நீ எம்பிளாயி தான் கவின்...ஸ்லேவ் இல்ல. பேசிக்காவே இந்தியால வேலை குடுக்குறவன் பெரியவன்..வேலை செய்றவன் சின்னவங்குற ட்ரவுமால ஊறி போயிருக்கீங்க எல்லாம். ஃபிராங்கா சொல்லனும்னா உங்கள மாதிரி ஆளுங்கள திருத்தவே முடியாது" என்றபடி இருவரும் காரில் ஏறிக்கொள்ள ஹர்ஷாவே காரை ஓட்டினான்.

கார் சீரான வேகத்தில் செல்லவே ட்ராஃபிக் சிறிது இடையூறு ஏற்படுத்த தான் செய்தது. இதோ இருவரும் போலிஸ் குவாட்ரசை காருடன் நெருங்கியிருக்க கவின் அவனை ஓர பார்வை பார்த்தபடி வந்தான். அதை உணர்ந்த ஹர்ஷா "எதுக்கு இப்டி ஒரு அகோர பார்வை பார்க்குற கவின். இந்த பார்வைக்கு எப்டி அந்த சேட்டு பொண்ணு மடங்குச்சு?" என்றதும் கவின் முகம் மலர அதை கெடுக்கவே வேறு ஒரு நிகழ்வு அங்கே அரங்கேறியது.

" ஏடேய் எடுபட்ட பயலே. கண்ணு என்ன பொடனியில கெடக்கா. குருட்டு காக்கா இருட்டுல பறந்துச்சாம்னு உன் பாட்டுல வரவ. உனக்கு எவன்டே லைசென்ஸ் குடுத்தது." மூச்சு முட்ட முறைத்தபடி காரின் முன் நின்ற பெண்மணி தொண்டையை அகலமாக திறக்க அது எதுவும் ஹர்ஷாவின் கருத்தில் பதியவில்லை.

அவனது கருத்தை அருகில் இருந்த தள்ளு வண்டி காய்கனி கடையில் பதிந்திருக்க கவினோ "இன்னும் ஆர்ச்ச கூட தாண்டல அதுக்குள்ள அதிருதே... அந்தம்மாவ சொல்லி குத்தமில்ல. வில்லங்கம்ன்னு தெரிஞ்சும் விலை பேசி வாங்கிட்டு தான் ஆச்சுன்னு வந்தாருல...யாரு...நம்ம சாரு.. சார்..." பேசியபடி திரும்ப அங்கோ உறைநிலையில் ஹர்ஷவர்தனார்.
 
இன்ஸ்டா id கொடுத்த அருள் என்ன ஒரிஜினல் அட்ரஸ்யா சொன்னான்.. இப்போ வந்துது அருளை பாக்க தானே அப்புறம் ஏன் ஃப்ரீஸ் ஆகி இருக்க ஹர்ஷா ஒரு வேலை காதுவை பாத்த .. ஆமா இஷாரா எங்க ஆளையே காணும் அப்புறம் ..


திரும்ப திரும்ப சொல்லுறேன்னு தப்பா எடுக்க வேண்டாம் கதை ரொம்ப நல்ல போகுது.. பிளீஸ் அந்த font யையும் எபி நம்பர்யை போட்டா இன்னும் நல்லா இருக்கும்.. அது கூட ஸ்பெல்லிங் கொஞ்சம் செக் பண்ணிடுங்க.. ரொம்ப எல்லாம் இல்ல கொஞ்சமே கொஞ்சம் தான்
 
Top