Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - FINAL

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
2219


வணக்கம் மக்கள்ஸ்!! இதோ டும் டும் என் கல்யாணத்தின் நிறைவுப் பகுதி, இத்துடன் கதை முடிவடைகிறது.

டும்! டும் ! என் கல்யாணம் - 27(1)

டும்! டும் ! என் கல்யாணம் - 27(2)



இக்கதையில் உடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் :love: :love: :love: :love: :love:

இப்படிக்கு
ப்ரியா மோகன்.
 
Heyyyyyyyy priiiii


ஒரு நுட்பமான விஷயத்தை நகைச்சுவையுடன் அழுத்தமாக அழகா கொடுத்த உனக்கு என் பாராட்டுக்கள் :love: :love:
ஒரு நுண்ணரசியலை இயல்பா சொல்லிட்ட, இங்க ஆண்கள் என்ன வேணும்னாலும் செய்யலாம், அதை பெண்கள் ஒன்னு மறக்கனும் மன்னிக்கனும், இல்லை கடக்கனும் ஏத்துக்கனும், ஆனால் பெண்ணிடம் இருக்கும் குறைகளை பெண்களாலே ஏற்கமுடியறதில்லை, steoreotyped society!! prejudices:(:cautious::cautious::cautious:

ஆனா பெண் என்பவள் perfectionist ஹ இருக்கனும், அஷ்டா போல ஒரு அசட்டுப்பெண்ணை ஹீரோயினைப் போட்ட உன் ஐடியாவே அருமை.
இங்க எல்லாரும் சிங்கப்பெண்கள், தங்கப்பெண்கள் இல்லை.
ஆனா வீராவுக்கு அவன் மனைவி அரைவ்வேக்காடுனாலும் ஆஃப் பாயில் என்றாலும் கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்னு சொல்றான், சூப்பர்!!


கடவுள் விரலைப் போலவே ஒவ்வொரு மனிதனையும் மனிதியையும் ஒவ்வொரு விதமா படைச்சிருக்கார், இங்க good and good தான் இணையனும்னு இல்ல, good and worse, good and better நு இணையறாங்க, ஏன் விராவுக்கு ஒரு நல்ல பொறுப்பான பொண்ணுதான் கிடைக்கனுமா என்ன?

அவன் அவன் மனைவியை வளர்த்துப்பான் சொன்னது சூப்பர்!!!

AAnd நண்டு கதை செம!!
even I was ok with veera decision of sending Ashta out, human nature of course
But the explanation veera gives was really nice and I didn't think that way??

அஷ்டா இயல்பில் நல்ல மனம் உள்ளவள், ஆனாலும் நமக்குள்ளே எப்பவுமே ஒரு precautionary mind இருக்கும், அது ஓவரா வேலை செய்ற ஆள் அஷ்டா, ஒவ்வொருத்தர் லைஃப்ஃபும் ஒரு கதை, அஷ்டா ஜோதியோட கதையைப் பார்த்து தன்னோட கதைக்கு அதே க்ளைமாக்ஸ் வந்திரும்னு நினைக்க, everything collapsed.

யோசிக்காம இருக்கறதும் தப்பு, ஓவரா யோசிகக்றதும் தப்புன்னு அஷ்டா கேரக்டர் உணர்த்துது.

இங்க சண்முகமும் மங்களமும் ரொம்ப செல்லம் கொடுக்கிறாங்க, அதுக்கு ஒரு காரணம் சொல்லப்பட்டாலுமே காரணங்களே இல்லாம கூடவும் செல்லக் கொடுக்கிற ஆளுங்களும் இருக்காங்க,


ஒரு கருத்துள்ள கதையை காமெடியா சொல்ற கலை எல்லாருக்கும் வராது, அழுத்தமா அழ வைக்கிறதெல்லாம் ஈசி,

ஆனா சிரிக்க வைக்கிறது கஷ்டம், கடவுள் செட்டிங்க்ல உன் டிசைன் அப்படி இருக்கு, எப்பவும் அப்படியே இருக்கட்டும்!!

ப்ரியா கதை படிச்சா மனசு ப்ரியாடும்னு ஊர் சொல்ல எழுதுற, இன்னும் எழுத என் வாழ்ட்

என் செல்லக்குட்டி உறங்கும் நேரத்தில், அதிகாலையில் எழுந்து மைலோ குடித்து அடுத்த கதையை டைப் செய்யும்மாறு ஆர்டருடன் விடைபெறுகிறேன்.:whistle::whistle::whistle::whistle::whistle::love::love::love::love:
 
Last edited:
அருமையான பதிவு பிரியா???.வீராவுக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாதென லெட்டர் எழுதி வச்சுட்டு தான்,தற்கொலை பண்ண போனாலா???.முடிச்சு போடவும் தெரியலை,எதுக்கும் லாயக்கில்லன்னு தெரியுது???.லூசு,அரைவேக்காடுன்னு சொன்னா ரோஷம் வருது???.

இவங்க ரெண்டு பேரும் சண்டைய விட்டு சமாதானமா வாழ்க்கைய தொடங்கற நேரமே நல்ல நேரம் தான்,இப்ப போய் ஆடி மாசம்னு சொல்றீங்களே நீலா???. நீலா, அஷ்டாவை அடிபிண்ணியது ரொம்ப சந்தோஷம்???.சின்ன வயசுல இந்த அடிய கொடுத்திருந்தா ஒழுங்கா வளந்திருப்பா...

படிப்பை முடிச்சு வேலைக்கும் போகாம,வீட்டு வேலையும் செய்யாம,சும்மா உட்கார்ந்து தண்டசோறு திங்கறது கிழவிக்கு இப்பதான் தெரியுதா???.மங்களம் மனசு மாறியிருப்பது தெரியுது???.
விஜயா போல மாமியார் கிடைப்பது வரம்.அருமையான,அன்பான மாமியார்????.

தன் மகளை சரியா வளர்க்கலை என சண்முகம் வருத்தத்தில் பேசறதும்,அஷ்டா வழியில் சென்று அவளை புரிய வைக்க நினைத்தேன்,அவளும் தன் தவறை புரிஞ்சுட்டா என சொல்வதும், வீரா சொல்றதை கேட்டு பொண்ணு மட்டும் இல்லை அப்பாவும் ரொம்ப...நல்லவங்கன்னு புரிஞ்சுட்டாங்க????.

நல்லது சொல்லி கொடுத்து வளர்த்துக்கறேன்னு சொன்னது போல,அஷ்டாவ பங்க்ல மேனேஜர் வேலை பார்க்க சொல்லிட்டான்,நாலு பேரோட பழகுன நல்லது,கெட்டது புரிஞ்சுக்குவா????.
பொண்டாட்டி மனசை பத்தி புரிஞ்சுட்ட சண்முகம் அறுபதிலும் ஆசை வரும்னு நீலாவுக்கு மல்லிகைப்பூ வாங்கி கொடுத்து அசத்துறார்????.

தனக்கு வரும் மனைவி இப்படி வேண்டுமென நினைக்காமல்,அஷ்டாவை அவள் குறை, நிறைகளுடன் ஏற்றுக் கொண்ட வீரா கிடைத்ததில் அஷ்டா,அதிஷ்ட லட்சுமி தான்????.
அருமையான கதை.நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் பிரியா மோகன்????.
 
Last edited:
???


இப்ப பரவலா நடக்குற, கொஞ்சம் சிக்கலான விஷயத்தையும் நகைச்சுவை கலந்து ரொம்ப அழகா கொடுத்துட்ட பிரியா... கதை சிரிப்போட சிந்திக்கவும் வச்சது.... வாழ்த்துக்கள்.... முடிஞ்சா அடுத்த கதையோட மெதுவாவே வா...


 
Last edited:
Top