Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புதுத் தேடல்

Advertisement

சுதந்திரா

New member
Member
எது பிடிக்கும்
என்று யாராவது கேட்டால்
சொல்லத் தெரியவில்லை


அதெப்படி முடியும்
இத்தனை பெரிய உலகில்
இது மட்டும் தான்
என்று ஒரே வினாடியில்
கைகாட்டிட...


இப்பொழுது நான் உணரும் அமைதி
இருள் விளக்கிய இந்த நிலா
தென்னோலைகளின் அழகான உரசல்
என் அனுமதியே வேண்டாமல்
எனை தீண்டும்
இந்தக்குளிர் காற்று
அடிக்கடி அதை மொத்தமாய்
வாங்கிக் கொள்ள முயலும்
என் ஆழமான மூச்சுச் சத்தம்


அத்தனையும் பிடித்திருக்கிறது
இந்தக் கணத்தில்
இந்த மனநிலையில்


"பிடித்தது ஏதோ... கிடைக்கவில்லையே"
என்ற ஏமாற்றம் போலும்
இழப்புக்களின் முடிவில் தானே
தேடல்கள் துவங்குகின்றன!!!
 
Top