Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புலராதக் காதல் !- 1

praveenraj

Member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ். நான் பிரவின்ராஜ். ஏழு நாவல்களை எழுதியிருக்கிறேன். புலராதக் காதல் என்னுடைய மூன்றாவது நாவல். இந்தக் கதையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் காதல் - ஊடல் -கூடல் கொஞ்சம் ஃபேமிலி நிறைந்த கதை.படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. தினம் ஒரு பகுதி பதிவிடுகிறேன். நன்றி.


ஜெர்மனி மாலை 7 மணி

நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே

ஆயிரம் பூக்கள் தூவ தோணுதே
தோன்றிடும்போதே பாவம் தீருதே
காரிகை யாலே காற்றும் மாறுதே
வானிலை வெப்பம் தோற்றுப் போகுதே


என்று ஒலித்த தமிழ் பாடலானது ஜெர்மனியின் போன்( bonn ) பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின் அறையில் எதிரொலிக்க , பாத்ரூமில் இருந்தவன் அவசரஅவசரமாக துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்து எடுக்க 'மம்மி' என்று காட்டிய தொடுதிரையில் அவரது முகம் பார்த்ததும் அவனையும் அறியாது இதழில் குறுநகை தவழ அட்டென்ட் செய்தவன், அந்தப்பக்கம் பேசும் முன்னே,

"கீதா டார்லிங் குட் ஈவினிங் இங்க , குட் நைட் அங்க .எப்படி இருக்க ? சுந்தரம் உன்ன நல்லா பாத்துக்கறாரா ? இல்லன்னா சொல்லு தூக்கிடட்டும்மா ? ஹ்ம்ம் தூக்கிடட்டுமா ? என்ன சத்தத்தையே காணோம் ?"

"ஹலோ" ( ஆணின் குரலில் )

"அய்யையோ சரோஜா தேவி போன் பண்ணுச்சுனு எடுத்தா நம்பியார் பேசுறாரே.." என்று சத்தமாக சொல்ல,

"என்னது ?"

"இல்லப்பா நீங்க போன் பண்ணி இருக்கீங்களே அதுதான்..."

"ஏன் நானெல்லாம் போன் பண்ணக் கூடாதா என்ன ?"

"அப்படி இல்லப்பா ..கீதா டார்லிங் போனுனு உடனே.."

"என்னது ?"

"இப்போ எதுக்கு இத்தனை என்னது ? விஷயத்தைச் சொல்லுங்க ?"

"உனக்கெல்லாம் கொஞ்சமாச்சி பொறுப்பு இருக்கா ? 24 வயசாகுது என்ன பண்ற ? இதுல துரை மாஸ்டர்ஸ் வேற பண்றீங்க ? அதும் போன் (bonn )யூனிவெர்சிட்டில.."

"என்ன பண்றது எல்லாம் அந்த முருகேசனை சொல்லணும்.."

"எந்த முருகேசன் ?"

"வேற யாரு என் தாத்தன் , உங்க மாமனார் , என் தாயின் தந்தை தான் "

"இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம அவரை இழுக்கற ?"

"பின்ன சம்மந்தமே இல்லாம உங்க குடும்பத்துல சம்மந்தம் வெச்சி என் அம்மா வாழ்க்கையே காலி பண்ணதுமில்லாம என்னையும் வேற இப்படி பொறுப்பில்லாத பையனா ஆக்கியத்துக்கு.."

"என்ன கிண்டலா ? எனக்கு என்னடா குறைச்சல் ? அதும் நம்ம குடும்பம்.. சே சே.. எங்க குடும்பத்துல என்ன குறைய கண்டுட்ட ?"

"அவ்ளோ அறிவாளியான என் அம்மாவை இப்படி உங்க கையில... ஏதோ சொல்லுவாங்களே கிளியை வளத்து...."

"சொல்லுடா சொல்லு..ஏன் நிறுத்திட்ட ? குரங்கு கையில குடுத்தாங்கனு தானே சொல்ல வந்த ? நான் குரங்குனா அப்போ நான் பெத்த நீ யாருடா ?"

"ஐயோ போனை குடுங்க இங்க .எப்போ பாரு அவன் கிட்ட வம்பு இழுத்துகிட்டு கொஞ்சம் கூட அறிவே இல்ல .." என்றார் கீதா.

"ஆம் இப்படியே அவன் முன்னாடி என்னை சொல்லு... அப்புறோம் இன்னும் நல்லா மதிப்பான் என்னை .." என்றார் சுந்தரம் .

"போங்க அந்த பக்கம்..."

"ஏ நான் பேச வந்த விஷயத்தையே பேசல போனை குடு..."

"என்னைக்கு ஒரு வேலையை உருப்படியா செஞ்சி இருக்கீங்க .எல்லாம் எங்க அப்பாவை சொல்லணும். நல்ல இடம் நல்ல பையன்னு சொல்லி என்னை மாட்டிவிட்டுட்டார் .." என்றார் கீதா.

"ஏ என்னடி நீயும் உன் புள்ளை மாதிரி பேசுற ? அப்புறோம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? முடியாதுனு சொல்ல வேண்டியது தானே ?"

சங்கீதாவோ , "ஆம் சொல்லு கண்ணா சாப்பிட்டியா ?"

"ஏய் இங்க மனுஷன் நாயா கத்திட்டு இருக்கேன் கேட்கலையா ?"

"பாருங்க உங்க கிட்ட நான் எப்பொவேணுனாலும் பேசலாம் ஆனா என் புள்ள அப்படி இல்ல பேசாம போங்க .."

"நீ போனைக் குடு ஒரு நிமிஷம்" என்று பிடுங்கியவர் , "எப்போ இந்தியா வரதா உத்தேசம் ?"

"வரேன் வரேன் இப்போ என்ன அவசரம் ?"

"என்ன அவசரமா ? அண்ணனுக்கு கல்யாணம் பேசி முடிவு பண்ணி இருக்கோம். ஏற்கனவே பொண்ண பாக்க ,தடவழி பாக்கனு எதுக்கும் நீ இல்ல இப்போ நிச்சயதார்த்தம் வெக்கப் போறோம் .நீ இல்லாம எப்படி ? ஒழுங்கா வர வழிய பாரு.."

"அம்மாகிட்ட போனை குடுங்க"

"ஏய் நீயும் என்னடா உன் அம்மா மாதிரியே இருக்க பேசேன்டா என்கிட்ட"

"உங்களை யாரு அம்மா போன்ல இருந்து கூப்பிட சொன்னது ?"

"ஏன்டா என் நம்பர்ல இருந்து கூப்பிட்டா தான் நீ எடுக்கறதே இல்லையே ?"

"இப்போ அம்மாகிட்ட போனை குடுக்கறீங்களா ? இல்ல வெக்கட்டா?"

"இந்தா பிடி வீட்டுல பேருக்கு தான் நான் குடும்ப தலைவன் .யாராச்சு என்னை மதிக்கிறாங்களா? எல்லாம் என் நேரம்..."

"என்னவாம் வாத்திக்கு ? கொழுப்பைப் பாரேன் "

"அடிங்கு வந்தேன் பிச்சிபுடுவேன் பிச்சி.. மரியாதையா பேசு டா.. வாத்தி கீத்தின்னு வந்தேனா பாரேன் " என்றார் கீதா.

"ஏன் ப்ரோபஸ்ஸர் மேடம் இப்படி கோவிச்சிக்குறீங்க ? ஒத்துக்குறேன் நீங்க ரப்னே பனாதி ஜோடின்னு அதுக்குன்னு இப்படியா ?" என்றான் அவன்.

"அப்படினா என்னடா அர்த்தம் ?"

"ஹேம் மேட்ச் மேட் இன் ஹெவன் , சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்ட ஜோடின்னு அர்த்தம் கீதா .."

"நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நாங்க அப்படிதான் டா.."

"ஏ சங்கீதா அப்போ இவ்ளோ நேரம் சுந்தரத்தை நீ திட்டுனதெல்லாம் வெறும் நடிப்பா கோபால் நடிப்பா ? "

"அது எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். அதெல்லாம் உனக்கு எதுக்கு ? "

"ஓ கதை அப்படி போகுதோ ? நடந்து கீதா நடத்து . ஆயிரம் சொல்லு ஒரு மேத்ஸ் ப்ரோபஸ்ஸர் அதும் டாக்டரேட் ஆனா உனக்கு போயும் போயும் ஒரு தமிழ் வாத்தி ஹஸ்பண்டு. கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம் கீதா " என்றான் அவன்.

"டேய் கண்ணா.. உங்க அப்பாவை நான் கல்யாணம் பண்ணும் போது நான் வெறும் b.sc தான் . அவரு தான் என்ன m.sc ph.d படிக்க வெச்சது தெரிஞ்சிக்கோ .."

"என்ன பெருசா படிக்க வெச்சாரு ? அதுக்கு தான் மாசம் 2 லட்சம் சம்பாதிக்கறியே .அத வாத்திக் கிட்ட தானே தர. நீயா செலவு செய்யுற ?"

"மரியாதையா பேசுடா "

"சரி சரி அத விடு என்ன மேட்டரு ?"

"கண்ணா அப்பா சொன்னது தான் டா . அண்ணனுக்கு பொண்ணு செட் ஆகிடுச்சு. பொண்ணு வீட்டுல எல்லோரும் உன்ன தான் ரொம்ப கேட்டாங்க .நீயும் வந்து இருக்கலாம் .சரி அதை விடு நிச்சயதார்த்ததுக்கு நீ என்னப் பண்ணுவியோ ஏதோ அதெல்லாம் எனக்கு தெரியாது .நீ இங்க இருக்கணும் அவ்வளவு தான்." என்றார்.

"என்னைக்கு ?"

"இன்னும் 15 நாள் இருக்கு கண்ணா .டிக்கெட் போட்டு வந்துடுற அவ்வளவு தான் .புரிஞ்சுதா ?"

"சரி சரி கண்டிப்பா .நான் இல்லாமலா ? பொண்ணுக்கு தங்கச்சி யாராச்சியும் இருக்கா?"

"எதுக்கு கேக்குற?" (கொஞ்சம் கண்டிப்புடன் )

"அது எதுக்கு கேப்பாங்க .பின்னாடி நீ எனக்குன்னு பொண்ணு தேடி அலைய வேண்டாமுல்ல அதுக்கு தான்" என்றான் அமர்த்தலாய்.

"பிச்சிபுடுவேன் பாத்துக்க .அதெல்லாம் பொண்ணுக்கு ஒரே தம்பி தான் .நல்லவேளை பொண்ணு தப்பிச்சிச்சு."

"நீ எல்லாம் ஒரு தாயா ? உன் புள்ளைய நீயே இப்படி மதிச்சா வெளியில யாரு மதிப்பாங்க சொல்லு ?"

"சரி சரி ஜோக்ஸ் அபார்ட் , சாப்பிட்டயா ?"

"இல்ல மா. இனிமேல் தான் . இப்போ தான் வேலை முடிச்சி வந்தேன்."

"டேய் உனக்கென்ன டா தலையெழுத்து வேலைக்கு போயிட்டே படிக்கணும்னு .நாங்க பணம் அனுப்புறோம்னு சொன்னாலும் வேணாம்னு சொல்லுற ?" என்று வருந்தினார்.

"அம்மா இது அப்படி இல்லம்மா .இங்க எல்லோரும் அப்படித்தான் .அண்ட் இது எனக்கு ஒரு நல்ல அனுபவம் தான் . நீ ஒர்ரி பண்ணாத சரியா ?"

"ஹ்ம்ம்..."

"என் செல்ல கீதா இல்ல ? சந்தோசமா சொல்லேன் .ஏன் இப்படி டல்லா பேசுற ?"

"சரிப்பா நல்லா சாப்பிடு. உடம்ப பாத்துக்கோ . வர ட்ரை பண்ணு .இல்ல ட்ரை எல்லாம் இல்ல நீ இங்க இருக்கற."

"சரி சரி நீயும் இனிமேல் சன்டிவி விஜய் டிவி னு பாக்கர வேலையப் பாரு.."

"எதுக்கு டா ?"

"பின்ன மாமியார் ஆக போறல்ல? எப்படி எல்லாம் வர மருமகளைக் கொடும படுத்தலாம்னு இப்போ இருந்தே ப்ராக்டிஸ் பண்ணா தானே செட் ஆகும் ?"

"உன்ன வந்தன்னா அவ்வளோ தான்.."

"சரி சரி டைம் ஆச்சி போய் தூங்கு . வாத்திய நல்லா பாத்துக்கோ .அப்புறம் மேனேஜர கேட்டதா சொல்லு. பை வெச்சிடுறேன்"

"ஹே ஹே பொண்ணு போட்டோ பாத்த இல்ல ? கமெண்ட்ஸ் சொல்லு"

"நான் என்ன சொல்றதுக்கு இருக்கு ? அண்ணனுக்குப் பிடிச்சிருந்தா ஒகே தான்.."

"இருந்தாலும் உன் அபிப்ராயம் சொல்லேன்"

"அண்ணி சூப்பர் போதுமா ?"

"ஹ்ம்ம்..."

"குட் நைட் ....." (காதல் புலரும் !)
 




Banumathi jayaraman

Well-known member
Member
உங்களுடைய "புலராத
காதல்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரவீன்ராஜ் தம்பி
 




Last edited:




Top