Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூந்தென்றல் தீண்டுமோ-3

Advertisement

Samyukta Ram

Member
Member
கயல் அன்று காலைதான் குழலியின் வீட்டுக்கு வந்திருந்தாள்.வீட்டில் குழலியின் பெரிய மாமாவின் மனைவி சகுந்தாலாவும் மகன் விக்னேஷ் மற்றும் மகள் ஆனந்தி இருந்தனர்.மூத்த மகள் லக்ஷ்மி திருமணமாகி கணவன் வீட்டில் இருந்தாள்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் வீட்டு தலைவர் மறைந்திருந்தார்.இரண்டாமவர் வைகுந்தன் அவரின் மனைவி கமலா.அவர்களுக்கு மகள் திரிவேணி மற்றும் மகன் சதீஷ் இருந்தனர்.மீதமிருப்பது கணவன் இறந்தபின் தூரத்து அண்ணன் வீட்டில் அடைக்கலமான குழலியின் தாய் சிவகாமி.அவரின் மகன் இளஞ்சேரல் மகள் பூங்குழலி.இதையெல்லாம் குழலி முன்பே கயலுக்கு விளக்கியிருந்தாள்.

குழலியின் தோழி என்று அறிமுகமானவுடன் அனைவருமே அவளிடம் அன்பாக பேசினர்.ஒற்றையாக பிறந்த எழிற்கயலுக்கு அந்த பெரிய குடும்பம் பிரமிப்பை அளித்தது.கயலின் கலகலப்பானப் பேச்சிலும் அன்பான குணத்தையும் கண்ட குழலியின் குடும்பத்தவர்களுக்கு கயலை மிகவும் பிடித்துவிட்டது.சிறிது நேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்து விட்டு அவரவர் வேலைக்கு சென்றுவிட குழலியின் அறையில் அமர்ந்திருந்தாள் கயல்.தோழியிடம் அன்று வயலில் நடந்ததை கூறிவிட துடித்தது அவள் மனம்.ஆனால் ஏதோ ஒன்று சொல்லவிடாமல் தடை செய்தது.திடிரென அமைதியான தோழியை விசித்திரமாகப் பார்த்த குழலி,

"என்னடி திடிர்ன்னு சைலண்ட் ஆயிட்டே! என்னாச்சு?"என்று கேட்க,

"குழலி இந்த ஊர்ல பெரிய வீடுங்கறது எது?"என்று கேட்க அதற்கு இடுப்பில் கைவைத்து முறைத்த குழலி,

"ஏன்டி பெரிய வீட்லயே இருந்திட்டு பெரிய வீடு எதுன்னு கேக்குறியா! இந்த வீட்டை தான் ஊர்ல பெரிய வீடுன்னு சொல்வாங்க!"என்று கூற முகம் பூவாக மலர்ந்துவிட்டது கயலுக்கு.அப்போது அவன் இங்குதான் இருக்கிறானா? வீட்டில் குழலியின் அண்ணனைத் தவிர எல்லாரையும் அவள் பார்த்துவிட்டாளே!... அப்படியென்றால் இளஞ்சேரல்...?

"ஏன்டி திடிர்ன்னு வீட்டைப் பத்திக் கேட்ட?"

உன் அண்ணன் தான் என் பப்பி லவ் என்று அவள் எப்படி அவன் தங்கையிடமே கூறுவாள்.ஏதாவது கூறி சமாளிக்க எண்ணி,

"அதெல்லாம் ஒன்னுமில்லடி!அப்பா பெரிய வீடுன்னு ஏதோ வீட்ல பேசினாரு...வயல் விஷயமா அவங்க தான் ரொம்ப ஹெல்ப் பண்றாங்கன்னு சொல்லிட்டு இருந்தார்... அதான் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்"என்று உண்மையும் அல்லாமல் பொய்யும் அல்லாமல் கூறினாள்.ஆனால் அவள் தந்தை கூறியது நிஜம் தான்.எத்தனையோ நாட்களாக பேக்டரியில் வேலை செய்ததால் வயல் வேலைகள் பெரிய சவாலாக இருந்தது அவருக்கு.அதில் ஊருக்கு வந்ததில் இருந்தே பெரிய வீட்டு பையன் தான் தனக்கு மிகவும் உதவுவதாக நன்றியோடு கூறினார் மருதைய்யன்.

தோழியின் பேச்சை அப்படியே நம்பிய குழலி மேலே எதுவும் கேட்கவில்லை.கயலுக்கோ அவன் இங்கே தான் இருக்கிறான் என்று தெரிந்த மேல் அவனை உடனே பார்க்க வேண்டும் என்று துடிதுடித்தாள்.அவன்தான் என்பதில் அவளுக்கு சந்தேகமே வரவில்லை.கோடி கோடி மனிதர்கள் குவிந்திருந்தாலும் அவனை அதில் உடனே அடையாளம் கண்டுக் கொள்வாள்.மூன்று வருடங்களில் அது வெறும் அந்த வயதின் ஈர்ப்பு அவனை மீண்டும் பார்க்காமல் இருந்தால் அவனை மறந்து விடுவோம் என்றுதான் அவள் நினைத்திருந்தாள்.ஆனால் வருடங்கள் சென்றும் அவன் இன்னும் இன்னும் அவள் மனதில் ஆழமாகி வேரூன்றி இருந்தது அவளை திகைக்க வைத்தது.அதிலும் மீண்டும் அவனை உணர்ந்ததில் மடைதிறந்த வெள்ளமாக பொங்கியது ஆவல்.

ஆனால் அதற்காக அவனின் மனதை அறியாமல் தன் மனதில் இருப்பதை கூறவும் அவள் பெண்மை இடந்தரவில்லை.கண்களால் ஆசைதீர பார்க்க வேண்டும் என்ற ஆவலை மட்டும் அவளால் தாள முடியவில்லை.ஆனால் அவள் வருமுன்பே அவன் டவுனுக்கு சென்றுவிட்டதாக குழலி கூறினாள்.இரவு அவள் உணவுண்டு ஒன்பது மணி வரை அங்கேயே இருந்தும் அவன் வரவில்லை என்றதும் ஏமாற்றம் மனதைத் தைக்க குழலியோடு அவள் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.

பத்துமணி அளவில் அன்றைய நாளின் அலைச்சலில் சோர்ந்து போய் வீடு வந்தான் இளஞ்சேரல்.வாயிலில் செருப்பை கழற்றும் போதே புதுதாக பெண்ணின் செருப்பைக் கண்டு யார் வந்திருப்பது என்று யோசனையுடனே தான் உள்ளே வந்தான்.அவனுக்காக கதவைத் திறந்த சிவகாமியை கண்டவன்,

"கண்ணு முளிக்காதீங்கன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டீங்க இல்ல...அப்படி என்னமா புடிவாதம் உங்களுக்கு?" என்று கோபத்தோடு கேட்க எப்போதும் போல அதற்கு பதில் கூறாமல்,

"போய் முதல்ல உடுப்பு மாத்திட்டு சாப்பிட வா... அப்புறம் பேசலாம்"என்றதும் தன் அறைக்கு சென்று உடம்பு கழுவி வேறு உடை அணிந்து வந்தான்.அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவர் எதுவும் பேசவில்லை.உணவுண்டு கை கழுவி ஆனதும்,

"இல்ல காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்சு போனவன் ராத்திரி வர...சோறு தண்ணி இல்லாம ஏன் ராசா இப்படி அலையுற?"என்று வருத்தத்தோடுக் கேட்க,

"தினமா இப்படி ஆகுது... இன்னிக்கி தேங்காய் லோடு ஏத்தி விட்டு பஞ்சாயத்து ஆபிஸு போக வேண்டி இருந்தது.அந்த மனுசன் வர வரைக்கும் காத்திருந்து பேசிட்டு வந்தேன்.அதுக்குள்ள நம்ம மாரியப்பனுக்கு மரத்துல இருந்து விழுந்து அடிப்பட்டுடிச்சு அவனை அழைச்சிட்டு போய் ஆஸ்பத்திரில சேர்த்து அவனுக்கு அபாயம் ஒன்னுமில்லேன்னு தெரியற வரை அங்கேயே இருந்தேன்... அதான் நேரமாயிடுச்சு!"என்று தாயிடம் அன்றைய தினத்தை அவன் விவரிக்க

'உனக்குன்னு ஒருத்தி வீட்ல காத்திருந்தா நீயும் வேலை வேலைன்னு அலையாம நேரத்துக்கு வீட்டுக்கு வருவ...ஆனா நீதான் அதை ஒத்துக்க மாட்டியே!'என்று தனக்குள் வருந்தியவர் அதை மகனிடம் வெளிப்படையாகக் கூறவில்லை.ஏனெனில் திருமணம் என்ற பேச்செடுத்தாலே மகன் நெருப்பாக மாறி விடுவான் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.ஆனால் தாயின் மவுனமே அவர் மனதில் நினைத்ததை அவனுக்கு உணர்த்தியிருந்தது.அந்த விஷயத்தில் அவனால் அவருக்கு எந்த பதிலும் கூற முடியாது என்பதால் மேலே எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டான்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தோழிகள் சிறிது நேரம் கழித்தே எழுந்தனர்.நான்கு நாட்களில் சிறிய தேர்வு இருந்ததால் வீட்டின் பின்புறம் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.காலையிலிருந்தே கயலின் விழிகள் வீட்டை வட்டமடித்து எதையோ தேடுவதை உணர்ந்தாள் குழலி.இப்போதும் கையில் புத்தகம் இருந்தாலும் அவ்வப்போது சுற்றிலும் அவள் விழிகளை சுழற்றியபடியே இருந்ததை கவனித்தவள்,

"கயல் குறுந்தொகை மொத்தம் முன்னூறு பாட்டுதானே?"என்று கேட்க ஙேவென்று விழித்தாள் கயல்.அவள் தான் அவனின் தரிசனத்திற்காக விழிகளை சுற்றியபடி காத்திருக்கிறாளே இதில் பாட விஷயம் அவளுக்கு எப்படி தலையில் இருக்கும்.ஏதோ யோசனையில் ஆமாம் என்று அவள் தலையாட்ட இப்போது குழலிக்கு தன் சந்தேகம் ஊர்ஜிதமானது.

"என்னடி விஷயம்...ஏன் ஏதோ மாறி இருக்க?"என்று குழலிக் கேட்க,

"இல்லையே...நா.. நான் சரியாதானே இருக்கேன்!"என்று திக்கி திணற,

"இல்ல உன் மனசுல ஏதோ இருக்கு! என்கிட்ட சொல்ல மாட்டியா?"என்று குழலி வருத்தமாக கேட்க அவளை கையை பற்றிய கயல்,

"உங்கிட்ட சொல்லாம யார்டடி சொல்வேன்!எனக்கே தெரியாத குழப்பத்தை கொடுக்கிற விஷயத்தை நான் என்னன்னு சொல்வேன்!"

"அப்படி என்னடி குழப்பம்?"

"முதல்ல எனக்கு தெளிவு வரட்டும்டி அப்புறம் உன்கிட்ட கண்டிப்பா சொல்றேன்"என்று தோழி உறுதியளிக்க,

"சரி சரி பாடத்தை கவனி!"என்றவள் சிறிது நேரத்தில் நீர் குடித்துவிட்டு வருவதாக எழுந்து சென்றாள்.அதன்பின் சஞ்சலத்தை ஒதுக்கி படிப்பில் ஆழ்ந்தாள்.

காலை வயலுக்கு சென்று திரும்பி வந்த இளா தன் அறையில் பொருட்கள் அங்குமிங்கும் சிதறியிருக்க தங்கை தான் அப்படி செய்தது என்று கோபம் கொண்டவன் நேராக அவளை தேடி சென்றான்.கமலம் அத்தை அவள் ஊஞ்சலில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பதைக் கூற கோபத்தோடு அங்கே சென்றவன் அவள் புத்தகத்தில் கவிழ்ந்து படித்துக் கொண்டிருக்க நேராக சென்று அவள் தலையில் நங்கென்று குட்டினான்.

இந்த குழலி எங்கே சென்றுவிட்டாள் என்று நினைத்தபடி படிப்பில் ஆழ்ந்த கயல் பின்புறம் அரவம் கேட்க தோழிதான் வந்துவிட்டாள் என்று எண்ணியிருக்க தலையை அழுத்தமாக குட்டு விழவும் வலித்த தலையைப் பிடித்தபடி திரும்ப அங்கே கண்ணில் அதிர்வோடு நின்றிருந்தான் அவன்.

ஓங்கியிருந்த கையில் கடகத்தை கண்டவள் யாருக்காக மூன்று வருடங்களாக தவம் செய்தாளோ அவனை நேரில் பார்த்ததும் கண்கள் தாமாக நீரைப் பொழிந்தன.அவன் வாய் எதையோ முணுமுணுத்தது ஆனால் அது அவள் காதுகளை எட்டவில்லை.அப்போதுதான் அங்கே வந்த குழலி அதிர்ந்த முகத்தோடு அண்ணனையும் கண்ணில் நீரோடு தோழியையும் கண்டுத் திகைத்துப் போனாள்.

"கயல் ஏன்டி அழுவுற?...அண்ணா நீ ஏதாவது அவளை சொன்னியா? என்று தோழியின் கண்ணீரை பொறுக்காமல் அண்ணனை அதட்டினாள்.

"இல்லடி அவரு ஒண்ணும் சொல்லல எனக்கு காத்துல தூசி பறந்து கண்ணுல விழுந்திடுச்சு... அதான் கண்ணுல நீரு!"என்று சமாளித்தாள்.அதில் ஒருமுறை அவன் புருவம் ஏறி இறங்கியது.

"இல்ல குழலி!நான் நீன்னு நினைச்சு அவங்க தலைல குட்டிட்டேன்"என்று தமையன் தன் தவறை ஒத்துக் கொள்ள,

"என்ன குட்டினியா?...நீ தொட்டாலே வலிக்கும் இதுல குட்டினா மண்டைப் பொளத்திருக்க போவது... ரொம்ப வலிக்குதாடி...சாரிடி...போடா லூசு அண்ணா!"என்று தோழியிடமும் அண்ணனிடமும் மாறி மாறி பேசியவள் தோழியின் தலையைத் தேய்த்து விட்டாள்.கயலின் மனதிலோ அவன் தொட்டால் வலிக்குமா இல்லையே உயிர் வரை இனிக்குமே!என்ற எண்ணம் தோன்ற பழைய நினைவில் கன்னங்கள் சிவந்தது.தங்கையின் அதட்டலை விட நங்கையின் கன்ன சிவப்பு அபாயகரமாகத் தோன்ற,

"சாரி நான் குழலின்னு நினைச்சு அப்படி பண்ணிட்டேன்"என்று மன்னிப்பை வேண்டியவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் விருட்டென அங்கிருந்துச் சென்றுவிட்டான்.இன்னும் சிறிது நேரம் அங்கே இருக்க மாட்டானா என்று ஏங்கினாள் கயல்.ஆனால் அந்த சம்பவத்திற்கு பின் அவன் அவள் கண்ணில் படவேயில்லை.அன்று மாலை கயல் தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

இரவு உணவிற்கு எல்லோரும் அமர்ந்திருக்க பேச்சு முழுவதும் கயலை சுற்றியிருந்தது அங்கே.எல்லோருமே அவளின் கலகலப்பான சுபாவத்தையும் பெரியவர்களுக்கு அவள் கொடுக்கும் மரியாதையையும் புகழ்ந்தனர்.ஏனோ திடிரென பாதி சாப்பாட்டில் எழுந்து சென்றுவிட்டான் இளா.இவனுக்கு திடிரென என்ன ஆயிற்று?கயலின் பேச்சு வந்தாலே ஏன் இவன் முகம் மாறிவிடுகிறது என்று குழம்பினாள் குழலி.

மூன்று நாட்களுக்கு பிறகு மீனாட்சி சாமான் வாங்கிவர கயலை அனுப்ப அலைந்து திரிந்து அவள் சாமான் வாங்கிய போது மாலை ஆறு மணி ஆகிவிட்டது.கனமான சாமான் பையோடு பஸ்ஸுக்காக காத்திருந்தவள் கூட்ட நெரிசலைக் கண்டு தயங்கியே இரண்டு பஸ்ஸை விட்டுவிட்டாள்.வானம் வேறு மழை வர தயாராக மின்னிக் கொண்டிருந்தது.அடுத்த பஸ் வர ஒரு மணி நேரம் ஆகும்.ஆட்டோவுக்கோ டாக்ஸிக்கோ கொடுக்கும் அளவு அவளிடம் பணமில்லை.

பக்கத்தில் அதே பஸ்ஸுக்காக காத்திருக்கும் கூட்டத்தைக் கண்டு அடுத்த முறைக்கும் தன்னால் ஏற முடியாது என்றே தோன்றியது.தன் நிலைமையை எண்ணி அழுகை வரும்போல் ஆனது அவளுக்கு.கண்களில் திரண்ட நீர் கீழே விழுமுன் குனிந்து அதை சுண்டியபடி அவள் நிமிர ரோட்டிற்கு அந்த பக்கத்தில் தன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தான் இளா.எதிர்திசையில் செல்லும் அவனிடம் எப்படி உதவிக் கேட்பது என்று நொந்தவள் முன்னிலும் அதிகம் தளர்த்துப் போனாள்.இனி மேலே என்ன என்ற யோசனையில் இரண்டு நிமிடம் கண்மூடி அவள் நிற்க திடிரென அருகில் கேட்ட பைக் ஹாரன் ஒலியில் திடுக்கிட்டு கண்களைத் திறக்க அவள் அருகில் பைக்கை நிறுத்தி அவளையே பார்த்தபடி நின்றான் இளஞ்சேரல்.காண்பது கனவா என்று அவளை எண்ண வைப்பது போல் பைக்கை ஸ்டேண்ட் போட்டுவிட்டு வந்து இவள் சாமான் பையை எடுத்து சென்று பைக்கோடு சேர்த்துக் கட்டினான்.பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தவன் திரும்பி அவளைப் பார்க்க ஓடி சென்று பின்புறம் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்து செய்யும் பயணம் அவளுக்கு படபடப்பைக் கொடுத்தது.ஆனால் அவனுக்கு அதுபோல ஏதுமில்லையோ என்பது போல அமைதியாக ஓட்டினான்.அவனின் ஒதுக்கத்தால் அவன் மேல் படாமல் கவனமாக நுனியிலேயே அமர்ந்தாள்.அவர்கள் கிளம்பி சிறிது நேரத்திலேயே பிய்த்துக் கொண்டு கொட்டியது மழை.நிறுத்துவதா என்று மட்டும் ஒருமுறை அவன் கேட்க நேராமானால் வீட்டில் கவலைப்படுவார்கள் என்று அவள் கூறியதும் முடிந்தவரை வேகமாக சென்றான்.

வழியில் இருந்த பள்ளத்தை தவிர்க்க முடியாமல் அதில் வண்டியை விட பேலன்ஸ் தப்பிய கயல் முன்னே அவன் மேலேயே சாய்ந்து பயத்தில் அவனை கட்டிக் கொண்டு விட்டாள்.திடிரென நேர்ந்த நெருக்கத்தில் இருவரும் தடுமாறிப் போயினர்.அவன் ஏதாவது நினைத்தால் என்று கயல் அவனிடமிருந்து விலகி பின்னே நகர முயல,

"வேண்டாம் பிடிச்சுக்கோ இனிமே ரோடு இப்படியே தான் மோசமா இருக்கும்...கீழே விழுந்துட்டா கஷ்டம்"என்று அவன் கூற லட்டு திங்க ஆசையா மொமெண்ட் ஆகிப் போனது அவளுக்கு.தளர்த்திய கையை மீண்டும் இறுக்கினாள்.கொட்டும் மழையில் தன்னவனின் அணைப்பில் என கயலின் மனம் சொர்க்க சுகத்தில் திளைத்தது.ஊரின் எல்லையிலே அவளை விட்டவன் திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.அதைக் கூட கயல் தவறாக நினைக்கவில்லை.ஆனால் மறுநாள் அவன் வீட்டிற்கு சென்றவளை யார் நீ என்பதைப் போல அவன் பார்த்ததை தான் அவளால் தாங்க முடியவில்லை.

 
Nice epi dear.
Tq for coming with ud.
Kanna ladoo ellam ooruku porathu maathra ve veetula Aanadhi,Thiruveni nu randu ladoo irruku.
Athodu ammayda broomstick nalla condition la than irruku.
 
நல்லா இருக்கு
எதுக்கு இப்படி செய்றான்
 
Top