Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-10

Advertisement

praveenraj

Well-known member
Member
வாரத்தின் முதல் நாளான அத்திங்கட்கிழமை வழக்கமான பரபரப்பும் ஆர்ப்பாட்டமும் இன்றி அந்த வீட்டில் மிக அமைதியாகவே புலர்ந்தது. எப்போதும் போல் காலையிலே விழித்த குஷா தன்னுடைய சகோவை அழைக்க அவனோ,"நான் வரல... நீ போ..." என்று கண்களைத் திறக்காமலே பதிலளிக்க சந்தேகம் கொண்டவன்,

"ஆமா டேய் லவா நீ காலையில ஜாகிங் போறையா இல்லையா? எனக்கென்னமோ நீ நல்லா இழுத்துப் போர்த்தி தூங்க தான் செய்யுறேன்னு தோணுது..." என்றதும்,

"அதெல்லாம் போறேன் குஷா... என்னைப் பார்த்தா என்ன வெய்ட் போட்ட மாதிரியா தெரியுது? இந்த வீட்டுக்கு வந்தாலே என்னமோ தெரியில தூக்கம் அப்படிச் சொக்குது... நான் வரல..." என்றவன் இம்முறை அப்போர்வையை இழுத்துப் போர்த்த ஏதும் பேசாமல் லவா கீழே சென்றான். இவ்வளவு காலையில் வந்தவனைக் கண்ட சித்ரா,

"ஹே குஷா இன்னைக்கும் வாக்கிங் போகணுமா? அதுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்குறது..." என்றவருக்கு,

"அத்தை இந்த உலகத்துலயே கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? நாம வாங்கி யூஸ் பண்ண ட்ரெஸ்ஸை நம்மால் திரும்ப போடமுடியாத அப்போ வரும் பாருங்க ஒரு எரிச்சல்... அண்ட் அதை விட கொடுமை தினம் தவறாம காலையில வாக்கிங் போறது... ஒரு நாள் சோம்பேறித்தனம் பட்டேன் அப்பறோம் அதுவே வாடிக்கை ஆகிடும்... சோ நோ வே... அண்ட் நான் ஒன்னும் சிக்ஸ் பேக் வெக்க ஓடல... ஃபேமிலி பேக் வந்துடக் கூடாதுனு ஓடுறேன்... இன்னும் ஒரு இருபது வருஷம் கழிச்சு என் கல்யாண ஆல்பம் எடுத்துப்பார்த்தா அதுல இருக்குற மாதிரியே நான் எப்பயும் இருக்கணும்னு நெனைக்கிறேன்..." என்று சொல்லிச் சிரிக்க ஏனோ அங்கிருந்த நந்த கோபால் தன்னையும் அறியாமல் ஹாலில் இருக்கும் தன் திருமணப் புகைப்படத்தைப் பார்க்க அதைக் கவனித்த வைத்தி தனக்குள்ளே சிரித்துக்கொண்டு,

"சரியா சொன்னய்யா... ஆனாலும் நம்ம குடும்பத்துல யாரும் அவ்வளவு குண்டெல்லாம் இல்ல..." என்று முடிக்கும் முன்னே,

"ஏன் தாத்தா இப்படி காலங்காத்தால பொய்ச்சொல்றிங்க? அதான் இருக்காங்களே உங்க பேரன் பேத்தி... ஐ மீன் அபியும் அனுவும்..." என்றதும்,

"அனு கொஞ்சம் பூசனாப்ல தான் இருக்கா... ஆனா அது ஒன்னும் பருமன் இல்ல... ஆனா இந்த அபி பையன் கொறைச்சே தீரணும்..." என்னும் வேளையில் எதையோ எடுப்பதற்காகத் தோட்டத்திலிருந்து உள்ளே வந்தாள் மொட்டு.

"ஏம்மா நீ வேணுனா இந்த அபி பையனை உன் கூட ஒரு மாதம் வெச்சு வேலை வாங்கு... அப்போவாச்சும் உடம்பு குறையுதான்னு பார்க்கலாம்..." என்றதும் குஷா ஏதும் பேசாமல் அங்கிருந்து வெளியேற,

"கொழுப்பு அதிகமா இருக்கவங்க ஓடித்தான் தீரணும் தாத்தா... ஆனா சிலர் என்னதான் முட்டினாலும் அவங்க கொழுப்பு ஒன்னும் குறைஞ்சாப்ல தெரியலையே..." என்று உதடு சுளிக்க ஏனோ அவ்வார்த்தைகள் குஷாவின் செவிகளில் தவறாமல் ஒலித்தது. அவன் கோவத்தில் திரும்பி உள்ளே பார்க்க இப்போது அதைப் புரிந்த வைத்தி மொட்டுவைப் பார்க்கவும் சுதாரித்தவள்,

"அதாவது அதுக்கு வாயைக் குறைக்கணும்னு சொல்ல வந்தேன்... வாயையும் வயித்தையும் குறைச்சாலே கொழுப்பு தன்னால குறைஞ்சிடும்..." என்று மீண்டும் இரட்டைப் பொருளிலே குஷாவைத் தாக்கினாள் மொட்டு. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத வைத்தி,"அதும் சரிதான்... இந்தக் காலத்துல யாரு தான் அவங்க சாப்பாட்ல கவனமா இருக்காங்க சொல்லு? இந்த பேக்கரி ஐட்டமா தின்னா எப்படிக் குறையும்?" என்று கேட்க அவளிடமிருந்து நேற்று வாங்கிய நோஸ் கட்டிற்கே கொலைவெறியில் இருந்தவனுக்கு இப்போது அளவுக்கதிகமாக ரத்தம் கொதித்தது. அதைத் தன்னுடைய ஓட்டத்தில் காட்டினான் குஷா.

அதன் பின் ஒவ்வொருவராக அங்கே வர மொட்டு வழக்கம் போல் தன்னுடைய வேலையில் தீவிரமானாள். அபியைத் தவிர்த்து அனைவரும் குளித்து உடை மாற்றியிருக்க,'இந்தப் பையன் மட்டும் ஏன் இப்படியே இருக்கான்?' என்று வைத்தி சலித்துக்கொள்ள அதை உணர்ந்த நந்தகோபால்,

"ஏன்டா அபி உன் அம்மா இதெல்லாம் கண்டுக்க மாட்டாளா?" என்று தன் வழக்கமான அந்தக் கரகரப்புக் குரலில் வினவ அவனோ எப்படிச் சமாளிப்பதென்று புரியாமல் தவித்தான். அக்குடும்பத்திலே எப்போதும் பரபரப்பாகவும் கண்டிப்பான முகத்துடனும் உலா வருபவர் தான் நந்தகோபால். மாறாக சுசீந்திரன், சபாபதி ஆகியோர் பழகுவதற்கு மிகவும் இலகுவானவர்கள். உமா, நிர்மலா, ஜானகி ஆகியோரும் இவ்வகையே. ஆனால் அவர் தன்னுடைய அந்த 'கமேண்டிங்' எண்ணத்தைத் தவிர்த்து இரைஞ்சும் குரலில் பேசுவது ஜானகி மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே. இதன் வெளிப்பாடாகவே தான் நேற்று லவா மற்றும் குஷாவிடம் அவ்வளவு தன்மையுடன் உரையாடினார்.

"அதில்லை மாமா... வந்து..." என்று திருதிருவென அபி விழிக்க அவனுக்கு ஆதரவாய்ப் பேசி டாபிக்கை மாற்றினார் கனகா.

அதற்குள் அனைவரும் சாப்பிட அமர மொட்டு மட்டும் அக்கூட்டத்திலிருந்து மிஸ் ஆனாள். அனைவர்க்கும் பரிமாறிய சித்ராவிடம்,

"அத்தை மொட்டு எங்க காணோம்?" என்ற லவாவுக்கு,

"தெரியலையே... பின்னாடி தோட்டத்துல எங்கேயாவது இருப்பா... அதுபோக அவ சாப்பிட இன்னும் நேரமிருக்கு. நீங்க சாப்பிடுங்க..." என்று பரிமாற லவா மட்டும் மொட்டுவைத் தேடி அங்கிருந்து அகன்றான்.

"வேலையெல்லாம் எப்படித்தா போகுது?" என்ற வைத்திக்கு,

"அதுக்கென்ன தாத்தா... சும்மா ஜம்முனு போகுது... நாம பார்த்துப் போகுறது தானே?" என்று அசட்டையாக மொழிதாள் புல்வெளி.

"உன் ஆபிஸ்ல கேன்டீன் ஃப்ரீதானே அனு?" என்ற குஷாவிற்கு,

"உனக்கு எப்படித் தெரியும்?" என்று உணர்ச்சிவசத்தில் உரைத்தவள் குஷாவின் சிரிப்பைக் கண்டு,"நான் ஒன்னும் சும்மா ஓசியில சாப்பிடல... அண்ட் உன்னைப் போல நான் ஒன்னும் ப்ரிப்பேர் பண்ணாமல் பசங்களுக்கு பாடம் எடுக்கல... சாப்ட்வேர்ல வேலை செய்யுறேன்... தினமும் ஒன்பது மணிநேரம் சிஸ்டம் முன்னாடி இருக்கேன்... நான் உழைக்கிறேன் சாப்பிடுறேன் உனக்கென்ன?" என்றவள் குஷாவின் தட்டில் இருந்த இனிப்புகளை லாவகமாக எடுத்து விழுங்கினாள்.

"எனக்கும் அதே டௌட் தான்... நீ சாப்ட்வேர்ல வேலை செய்யுறையா இல்ல சாப்பிட்டுக்கிட்டே வேலைசெய்யுறையா?" என்று சிரிக்க,

"ஹி ஹி ஹி... பொட்டுக்கல்ல வேர்க்கல்ல நிலக்கடலை நீ சொன்ன ஜோக்குக்கு சிரிப்பே வரல... போடா டேய்..." என்றவள் மீண்டும் தன் உணவில் கான்செண்ட்ரேட் செய்து அருகில் இருந்த லவாவின் தட்டிலிருந்தும் ஸ்வீட்டை அபேஸ் செய்தாள்.

"நீ சாப்பிடுறதைப் பார்த்தா உனக்கு ஏதாவது பேக்கரி ஓனரைத்தான் கல்யாணம் செய்யணும் போல? பாவம் எங்க இருக்கானா?" என்று மீண்டும் அவளைச் சீண்டினான் குஷா.

"அந்தக் கவலை உனக்கு வேணாம்... நானாச்சு என் புருஷனாச்சு..." என்று அனு உரைக்கவும் செல்லமாகக் குட்டிய கனகா,

"நீ சொல்றதைப் பார்த்தா ஆளை ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணிட்ட போலயே?" என்றான் அபி.

"டேய் வயசுக்குத் தகுந்த பேச்சைப் பேசு..." என்றதும்,

"என் அக்கா கிட்ட மாட்டிகிட்டு முழிக்கப்போற மாமா இப்போ எங்க எப்படி இருக்காரோ?" என்று அபி சொன்ன தொனியில் அனைவரும் சிரித்தனர்.

"ஏய் அனு இந்த வேலையெல்லாம் இங்க வேணாம். உனக்கு இல்ல இல்ல நானும் உங்க தாத்தாவும் உசுரோட இருக்குற வரை உங்க எல்லா நல்லது கெட்டதிலும் நாங்க தான் முடிவெடுப்போம்..." என்று கனகா சொல்ல எல்லோரும் ஒரு மாதிரி உணர்ந்தனர். அது மகிழ்ச்சியா இல்லை வருத்தமா என்று அவர்களுக்கே வெளிச்சம். எதிர்பாராத மௌனம் நீடிக்கவும் அதைக் கலைக்க வைத்தி தொடர்ந்தார்,

"உங்க அப்பத்தா சொல்றதை தான் நானும் சொல்றேன் ஆனா அதுல ஒரு சின்ன மாற்றம் இருக்கு. நாங்க எங்க விருப்பத்தை என்னைக்கும் உங்க மேல திணிக்க மாட்டோம். அதே நேரம் நீங்க சொல்றதுக்கெல்லாம் ஆமா சாமியும் போட மாட்டோம்... இங்கிலிஷ்ல செக்ஸ்(checks) அண்ட் பேலன்ஸ்னு ஒன்னு இருக்கே அது மாதிரி தான்..." என்று வைத்தி எல்லோரையும் சமாதானப் படுத்த முயல,

"அப்போ நீங்க சொல்றதைப் பார்த்தா இன்னாருக்கு இன்னார்னு நீங்க ஏற்கனவே முடிவு பண்ணிட்டீங்க போல?" என்று குஷா சொல்ல அவனுக்கு பதில் சொல்ல நினைத்த நேரத்தில் மொட்டுவும் லவாவும் கரம் கோர்த்தவாறு சாப்பிட வந்தனர்.

தங்களுக்குள் எதையோ பேசியவாறு வந்தவர்கள் இன்னும் எல்லோரும் இருப்பதைக் கண்டு,"சாரி..." என்ற லவா அனு தன்னுடைய தட்டில் இருந்தையெல்லாம் காலி செய்திருந்ததைப் பார்த்து முறைக்க,

"எவ்வளவு நேரம் தான் நீ வருவன்னு காத்திருக்கிறது... பிளேட்ல வெச்சதெல்லாம் வேஸ்ட்டா போயிடும்னு..." என்று சொல்ல எதிரில் குஷா காலையில் நடந்ததை எண்ணி கொலைவெறியில் அமர்ந்திருந்தான்.

அவர்கள் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் பாரி அவர்களுக்கு வீடியோ கால் செய்ய இங்கிருந்தவர்கள் அவனை வெறுப்பேற்றினார்கள். பிறகு உணவை முடித்து ஹாலில் அமர்ந்து கதையளக்கவும் மொட்டுவுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவள் சிறு வேலையின் காரணமாக தஞ்சாவூர் வரை செல்ல வேண்டும் என்று சொல்ல அவளிடம் என்னவென்று விசாரித்தார் வைத்தி.

"அதில்ல தாத்தா நான் கொஞ்சம் ஆட்டு எருவு கேட்டிருந்தேன். அதான் நேத்து தஞ்சாவூர் போகும் போதே ஆவுடை மாமா கிட்டச் சொல்லியிருந்தேன். அவருக்குத் தெரிஞ்சவங்க கிட்ட எருவு இருக்காம் அதான் போன் பண்ணாரு..." என்று மொட்டு காரணத்தைச் சொல்ல,

"சரி அப்போ நம்ம செந்திலைப் போய் எடுத்துட்டு வரச் சொல்லு..." என்று வைத்தி சொல்லவும்,

"இல்ல தாத்தா மாடு சினைக்கு வந்திடுச்சி... அதை டாக்டர் கிட்டப் பிடிச்சிட்டுப் போகணும்... நான் சும்மா தானே இருக்கேன் நானே போறேன் தாத்தா..." என்று மொட்டு உரையாட ஏனோ இந்த உரையாடல் எதிலும் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

சில காலம் முன்பு வரை நந்தகோபால் தான் இந்த விவசாயம் முழுவதையும் பார்த்துக்கொண்டிருந்தார். இடையில் தன்னுடைய நண்பர்களுடன் இணைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியதால் அவருக்கு இப்போதெல்லாம் இதை கவனிக்க நேரம் இல்லை என்பது தான் நிதர்சனம். அதே நேரம் மொட்டுவிற்கு இதன் மேல் அலாதி பிரியம் என்பதால் தங்கள் நிலம் அதில் பயிரிடுவது பராமரிப்பது தோட்டம் என்று அனைத்தையும் வைத்தியின் உதவியுடன் மேற்பார்வை செய்கிறாள்.

என்னதான் மொட்டு மீது அலாதி நம்பிக்கை இருந்தாலும் ஒரு வயதிற்கு வந்த பெண்ணை இவ்வாறு தனியே அனுப்புவதற்கு வைத்திக்கு சிறிது பயம் இருக்கத்தான் செய்தது. அதனால் பெரும்பாலும் பேத்திக்குத் துணையாக அவரே சென்றுவிடுவார். இல்லையெனில் மணவாளனை உடன் அனுப்பிவிடுவார். இது தஞ்சாவூரைத் தாண்டி சிறிது தூரம் செல்ல வேண்டும் என்று எண்ணி வைத்தி யோசிக்க,

"என்ன தாத்தா யோசிக்கறீங்க? ஆட்டு எருவு நம்மகிட்ட இல்ல. அதும் போக நமக்கு அது அவசியம் தேவை. ரேட்டும் கம்மியா இருக்கு..." என்று சொல்ல ஏனோ தாத்தாவுக்கும் அது சரியென்று பட்டது.

"சரி கிளம்பு போய் எடுத்துட்டு வந்திடலாம் வா..." என்று அவர் எழும்ப ஓரளவுக்கு இதைப் புரிந்துகொண்ட லவா,"தாத்தா மொட்டுக்குத் துணையா நான் வேணுனா போயிட்டு வரேன்னே... இந்த வெயில்ல நீங்க எதுக்கு கஷ்டப்படணும்..." என்று சொல்ல அவருக்கும் அது சரியென்று பட அவர்கள் இருவரையும் பத்திரமாகச் சென்று வருமாறு அனுப்பி வைத்தார். ஏனோ டிராக்டரை தான் ஓட்டுவதாகச் சொல்லி லவா செலுத்த அவன் அருகில் அமர்ந்தவாறு மொட்டு பயணித்தாள்.

அவர்கள் சென்றதும் இங்கே அனு, குஷா, அபி, ரித்து, ஆனந்தி ஆகியோர் வழக்கம் போல் கார்ட்ஸ் ஆடத் தொடங்கினர். அவர்கள் சென்றதும் தான் நினைவு வந்தவர்களாக கேக்கைப் பற்றிய நினைவு வர லவாவை அழைத்து நினைவு படுத்தினாள் அனு.

"என்ன வண்டி ஓட்டுற லவா இப்படி ஆடுது..." என்ற மொட்டுவுக்கு,

"உன் அளவுக்கெல்லாம் எனக்கு ட்ராக்ட்டர் ஊட்டி சர்விஸ் இல்ல... ஆனா ட்ராக்ட்டர் ஓட்டணும்னு ரொம்ப நாள் ஆசை... ஏன் மொட்டு பயிருக்கு இதெல்லாமே போடுங்க?" என்று தன்னுடைய அறியாமையை லவா காட்ட வெடித்துச் சிரித்தவள்,

"ஐயோ பயிருக்கு இல்ல லவா. பின்னாடி நம்ம தோட்டம் இருக்குல்ல அதுக்கு தான் இந்த உரம்..."

"எந்தத் தோட்டம்?"

"என்ன தெரியாத மாதிரி கேக்குற? நேத்து உன் ரெட்டை காரை ஒரு தோட்டத்துப் பக்கத்துல நிறுத்தினேனு சொன்னானே?" என்றாள்.

"ஆமா நேத்து போன கோவிலுக்குத் தாண்டி இருந்ததே அதுவா?" என்று கேட்டவனுக்கு,

"அதே தான் லவா... எனக்கு ரொம்ப நாளா இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசை. அதுக்காக தாத்தா கிட்டச் சொல்லி அந்த இடதுல பயிர் செஞ்சதை நிறுத்தி மூணு வருஷம் சும்மா விட்டுட்டேன்..."

"மூணு வருஷமா?" என்று அதிர்ந்தான் லவா.

"ஆமா அப்போ தானே இதுவரை அதுல இருந்த உரம் எல்லாம் மக்கியிருக்கும்..." என்றவள் தான் இந்த ஆறு வருடத்தில் தன்னுடைய கனவை எந்த அளவிற்கு முன்னின்று நடத்தியிருக்கிறாள் என்று கேட்டு வியந்தான்.

"என்ன போட்டிருக்க?"

"வாழை, மா, கொய்யா, வெண்டைக்காய், வெங்காயம்னு இப்போ தான் எல்லாம் கொஞ்ச கொஞ்சமா வெச்சியிருக்கேன்..."

"அறுவடை செஞ்சிட்டியா?"

"வெண்டைக்காய் மூணு வருஷமா வருது. மீதி எல்லாம் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் வருது... எனக்கு இருக்குற ஆசை என்ன தெரியுமா? எனக்குன்னு கொஞ்ச நிலம் ஒதுக்கி அதுல நான் இருக்குற வரை என்னால முடிஞ்ச வரை முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் செய்யணும்... எனக்கு இந்த எண்ணம் இருந்ததால தான் நான் அக்ரி படிச்சேன். நான் செய்யுறதுல என் அப்பாக்கு துளியும் விருப்பமில்லை. அது போக சுமார் நாலு ஏக்கரா நிலத்தை மூணு வருஷம் சும்மா விட்டுட்டேன்னு அவருக்குக் கோவம். எப்படியாவது அந்த நாலு ஏக்கரா முழுசா நான் இயற்கை விவசாயம் செஞ்சு என் அப்பாக்கு காட்டணும் ஒரு வைராக்கியம்..."

"என்ன உரமெல்லாம் அதாவது இயற்கை உரம் என்னவெல்லாம் போடுவ?"

"அமிர்தகரைசல், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், எல்லாம் நானே ரெடி பண்ணுவேன். அதுக்கு தான் உரமெல்லாம் வாங்கப்போறோம்..." என்று கண்களில் கனவுகள் மின்ன பதிலளித்தாள் மொட்டு.

வண்டியை ஓரங்கட்டியவன் அவளையே ஆச்சர்யமாகப் பார்க்க,"என்ன சார் வண்டியை நிறுத்திட்டீங்க?" என்றவளுக்கு,

"இதைப் பத்தி ஏன் என்கிட்ட நீ ஒருமுறை கூடச் சொல்லல மொட்டு?" என்றதும் அவள் சிரிக்க,

"அப்போ என்னை நீ நம்பல தானே? என்னை யாரோ போல தானே நீ நெனச்சிட்டு இருக்க?" என்று லவா கேட்ட கேள்வியில் ஏனோ மொட்டு சற்று அதிர்ந்தாள்.

"ஐயோ அப்படியெல்லாம் இல்ல லவா... பலமுறை உன்கிட்டச் சொல்லணும்னு நான் நெனச்சிருப்பேன்... அதுக்குத் தான் உன்ன அடிக்கடி எப்போ இங்க வருவ லவானு கேட்டுட்டே இருந்தேன். நீ தான் இங்க வந்து மூணு வருஷத்துக்கு மேல ஆகுதே?" என்று அவள் உரைக்க, அவனோ மேற்கொண்டு எதையும் பேசாமல் வண்டியைச் செலுத்தி எரு ஏற்றவேண்டிய இடத்திற்குச் சென்று ஓரம் அமர்ந்தான். அங்கே சென்றதும் எருவை பார்வையிட்டு வண்டியில் ஏற்றி கணக்குப் பார்த்து மீண்டும் வண்டியை எடுக்க ஏனோ அவளுக்கு லவாவின் இந்தப் பாராமுகம் என்னவோ செய்தது. எதையும் பேசாமல் வீட்டிற்கு வந்தவர்கள் சிறிது ஓய்வெடுக்க தற்போது லவாவின் அறையை அடைந்தவள்,

"லவா கேக் வாங்கவே மறந்துட்டோம்... வா போயிட்டு வரலாம்..." என்று அழைக்க அவனோ,

"நீ போயிட்டு வா நான் வரல..." என்றான். உண்மையில் திரும்பி வரும் பொழுது அவளுக்கு கேக்கைப் பற்றிய நினைவு நன்றாகவே இருந்தது. ஆனால் அப்போது வாங்கியிருந்தால் லவாவைச் சமாதானம் செய்ய முடியாது என்று மறந்தவள் போல் பாசாங்கு செய்து தற்போது அழைக்கிறாள்.

"இப்போ நீ என்கூட வரலைனா எல்லோரும் என்னைத் தான் திட்டுவாங்க. வா லவா வாங்கிட்டு வரலாம்..." என்று கைபிடித்து அழைக்க அப்போது அங்கே வந்த அபி கேக்கை பற்றி விசாரிக்க பின்னாலே குஷாவும் அனுவும் வந்தார்கள். கேக் இல்லை என்றதும் எல்லோரும் சொல்லிவைத்தார் போல் மொட்டுவை முறைக்க அதுவரை இருந்த வீம்பெல்லாம் மறைந்து அவளுடன் சென்றான் லவா.

இங்கே வைத்திக்கும் கனகாவிற்கு தங்கள் பேரப்பிள்ளைகள் இதற்காகத் தான் வந்திருக்கிறார்கள் என்று தெரியாமலே இருந்தனர். அப்போது தான் அழைத்த பாரி நாளை காலை அவர்கள் எல்லோரும் வந்துவிடுவதாகச் சொன்னான். இன்று இரவே எல்லோரும் வந்துவிட்டால் சர்ப்ரைஸ் பற்றி வைத்தியும் கனகாவும் கண்டுகொள்ள நேர்ந்திடும் என்று அதைத் தவிர்த்தனர். அவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராய் வாங்கியிருந்த பரிசுகள் அனைத்தும் காரிலே புதைந்து இருந்தது.

அதேபோல் நாளை சபாபதி, நிர்மலா, சுசீந்திரன், உமா ஆகியோரும் தங்கள் துணையுடன் இங்கு வர முடிவெடுத்தனர். அங்கே ஜானகி ஒருவர் மட்டும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவும் முடியாமல் அதே நேரம் ஒதுக்கவும் முடியாமல் தவித்தார்.

பைக்கில் செல்லும் போதும் உம்மென்றெ வந்தவனை சமாளிக்க முடியாமல் தவித்தவள் அந்த கேக் ஷாப்பில் ஒரு இருக்கையில் இருவருக்கும் கேக் ஆர்டர் செய்து பேசத் தொடங்கினாள்.

"என்கிட்டப் பேசு லவா..." என்றதும் முறைத்தவனைக் கண்டு,

"உன்கிட்ட எதையும் மறைக்கணும்னு எல்லாம் நான் மறைக்கல... முந்தியெல்லாம் தவறாம வருஷத்துக்கு பத்து நாளாச்சும் இங்க வருவ... ஆனா இப்போ அதுவும் இல்ல. சரி உனக்கும் ஹைதராபாத்ல வேலை கிடைச்சு நேரமே இல்ல..." என்று முடிக்கும் முன்னே,

"நான் என்ன ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் தான் உன்கிட்டப் பேசுறேன்னா மொட்டு? இந்த மூணு வருஷம் நான் இங்க வரல தான்... ஆனா வாரத்துக்கு ரெண்டு முறை குறைஞ்சது ஒரு வாட்டியாவது நாம பேசுறோமா இல்லையா? சோ அப்போவாச்சும் நீ என்கிட்டச் சொல்லியிருக்கலாமே? அண்ட் நீ சொல்லியிருந்தா நான் இதுக்காகவே வந்திருப்பேனே... இங்கபாரு நான் உன் அத்தைப் பையன் மட்டுமில்ல... நான் தான் உன்னோட பிலோசோபேர், கைட், வெல் விஷேர் அப்படி இப்படினு நீ தானே ஆவுனா டைலாக் விடுவ?" என்றவனின் குரலில் தன்னையும் அறியாமல் பெரும் ஏமாற்றம் வெளிப்பட்டது.

"அதெல்லாம் டைலாக் இல்ல லவா... உண்மை..."

"சரி நேத்து முழுக்க இருந்தேனே அப்போ கூடச் சொல்லத் தோணல தானே?"

"ஐயோ உனக்கு நான் சர்ப்ரைஸ் தரலாம்னு..." என்று முடிக்கும் முன்னே,

"இதுவும் சர்ப்ரைஸ் தான்... நான் உனக்கு யாருனு இப்போவாச்சும் தெரிஞ்சதே..." என்னும் போது அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது.

அதுவரை எதிரில் இருந்தவள் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் அருகில் அமர்ந்து,"லவா இப்பயும் சொல்றேன் என் லைஃப்ல என்னை ரொம்ப நல்லாப் புரிஞ்சிகிட்டது ரெண்டு பேர் தான். ஒன்னு வைத்தி தாத்தா இன்னொன்னு நீ. ப்ளீஸ் என்னை அவாய்ட் பண்ணாத லவா. பிராமிசா உனக்கு நான் சர்ப்ரைஸ் தரலாம்னு தான் இருந்தேன். நீங்க எல்லோரும் இங்க வரதே திடீர்னு முடிவாச்சு... சோ உன்னை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு இருந்தேன். நேத்து உன்னைக் கூட்டிட்டுப் போலாம்னு இருந்தேன் ஆனா அதுல சின்ன சின்ன வேலைங்க இருந்தது. எனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்கு எனக்கு ரொம்ப பிடிச்சவனை ரொம்ப பிடிச்ச நாளான நாளைக்குக் காட்டலாம்னு இருந்தேன். ஐ ப்ராமிஸ்..." என்று சொல்ல ஏனோ லவாவுக்கு அவளுடைய குற்றயுணர்ச்சி நன்கு புரிந்தது. அதுபோக இது போலொரு சாதாரண விஷயத்திற்கு அவளை மேலும் கெஞ்சவைப்பதில் அவனுக்கு உடன்பாடும் இல்லை. அப்போது எதிரில் இருந்த சாக்கோ லாவா கேக்கை ஸ்பூனில் எடுத்து அவளுக்கு ஊட்டி அவளுடன் சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிட்டான்.

பிறகு அங்கிருந்து வீட்டிற்குச் சென்றவர்கள் கேக்கை பத்திரப்படுத்தி நாளைய சர்ப்ரைஸுக்காக திட்டமிட்டு உறங்கச் சென்றனர்.

மறுநாள் காலை எழுந்து வழக்கம் போல் கனகாவும் வைத்தியும் தங்கள் அன்றாட வேலையை செய்ய ஒவ்வொருவராய் வெளியே வந்து ஏதும் தெரியாதது போல் உலா வந்தனர். திட்டமிட்டபடியே வைத்தியை மொட்டு தோட்டத்திற்கு அழைத்துச் செல்ல கனகாவை குஷா கதைபேசி சமையல் அறையினுள் முடக்கினான். வெளியே மற்றவர்கள் எல்லோரும் அலங்காரக் காகிதங்கள் வாழ்த்துக்கள் அது இது என்று அந்த ஹாலை டெக்கரேட் செய்ய சபாபதி முதலிய வைத்தியின் பிள்ளைகள் எல்லோரும் சர்ப்ரைஸாக அமர்ந்து கொண்டார்கள். எல்லாம் திட்டமிடப்பட்டதும் வீட்டில் டிவியை அதிக சப்தத்துடன் ஆன் செய்ய அந்த அலறல் கேட்டு கனகாவும் வைத்தியும் அங்கே வந்தார்கள்.(நேரம் கைகூடும்...)
 
உண்மைதான் அதும் அந்த ட்ரெஸ் நமக்கு பிடிச்ச ட்ரெஸ்ஸா இருந்தா அவ்வளவு தான் டோட்டலா மூடு ஆஃப் ஆகிறும்.
இருபது வருஷம் கழிச்சு பாத்தாலும் அதே மாதிரி இருக்கனுமா??? வேண்டிய விஷயம். அட மொட்டுமா கிரைம் ரேட்ட கூட்டிட்டே போறியேமா. அடடா கரெக்டா தப்பான நேரத்துல என்ட்ரி குடுத்துடீங்களே மொட்டு அண்ட் லவா தாத்தா ஜோடிகளை பத்தி சொல்ல வந்தாரு போச்சு எல்லாம்?. லவா அண்ட் மொட்டு பாண்டிங்??????. ஒருவழியா சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க ஆனா எனக்கு என்னவோ தாத்தாவும் பாட்டியும் எல்லாருக்கும் சர்ப்ரைஸ்(ஷாக்) குடுப்பாங்களோனு தோனுது பார்க்கலாம். எபி?????????
 
True thaan, athuvum namaku pidichu dress vaangirupoam, atha wear panna mudiyalanaa kodumai thaan, Kusha avan appava maranthutaan pola, poachu po... Correct aa thappaana timela solraale Mottu, vachu seiya poraan,
Anuma naa un katchi thaan, pechu pecha irunthaalum vayithukku vanchanai seiya koodathu,kalaikirathulayum sapdra item aa, vera level Anu,
Vaithi thaththa already decide pannirukaar polaye, halfway la interrupt ahi nikkuthu, Mottu really great, thoughts laam semma,Lava, Mottu purithal fantastic,
Vaithi, Kanaha ivangalukellam grand parents, avanga ivangalukku surprise vachrukaangalaa or shock kodukurangala paarpoam
 
உண்மைதான் அதும் அந்த ட்ரெஸ் நமக்கு பிடிச்ச ட்ரெஸ்ஸா இருந்தா அவ்வளவு தான் டோட்டலா மூடு ஆஃப் ஆகிறும்.
இருபது வருஷம் கழிச்சு பாத்தாலும் அதே மாதிரி இருக்கனுமா??? வேண்டிய விஷயம். அட மொட்டுமா கிரைம் ரேட்ட கூட்டிட்டே போறியேமா. அடடா கரெக்டா தப்பான நேரத்துல என்ட்ரி குடுத்துடீங்களே மொட்டு அண்ட் லவா தாத்தா ஜோடிகளை பத்தி சொல்ல வந்தாரு போச்சு எல்லாம்?. லவா அண்ட் மொட்டு பாண்டிங்??????. ஒருவழியா சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க ஆனா எனக்கு என்னவோ தாத்தாவும் பாட்டியும் எல்லாருக்கும் சர்ப்ரைஸ்(ஷாக்) குடுப்பாங்களோனு தோனுது பார்க்கலாம். எபி?????????
கண்டிப்பா நான் இந்த லாக் டௌன்ல பீல் பண்ண விஷயம்?� எஸ் என்னுடைய குறிக்கோளும் அது தான்...? எஸ் இனிமேல் தான் அவங்களுடைய அலப்பறையே இருக்கு? நன்றி... ஷாக் இப்போல்லாம் கிடையாது பின்னாடி தான் வரும்... நன்றி?
 
Top