Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-14

Advertisement

praveenraj

Well-known member
Member
லவாவுடைய கணீர் குரலில் அரண்டவள் மறுப்பேதும் பேசாமல் மீண்டும் தன் இடத்தில் அமர்ந்தாள். ஏனோ எப்போதும் போல் இல்லாமல் இம்முறை மொட்டு சற்று அவமானமாகவே உணர அதை உணர்ந்தவன் ஆறுதலாக அவள் கரம் பற்றிக் கொண்டு எதிரில் அமர்ந்திருக்கும் தன்னுடைய ட்வின் ப்ரதேரான குஷாவைப் பார்த்து,

"கரெக்ட் குஷா... நீ சொன்னதெல்லாம் சரி. மொட்டுக்கு அவ்வளவா படிப்பு வராது தான். அதை நான் மறுக்கலாம் போறதில்லை..." என்று சொல்ல ஏனோ லவாவின் இந்தப் பதிலுக்குப் பின்னால் ஏதோ திட்டம் இருக்கிறது என்று மற்றவர்கள் அனைவர்க்கும் புரிய அவர்கள் சற்று சுதாரித்தவாறே அமர்ந்திருந்தனர்.

"ஆனா படிப்பு ஒன்னு மட்டுமில்ல மற்ற எல்லா விஷயத்தையும் நாம கணக்குல எடுத்துக்கிட்டா மொட்டு அளவுக்கு திறமையானவங்க இங்க யாரும் இல்ல..." என்று லவா முடிக்கும் முன்னே அவன் கூற்றை மறுப்பவனாக தலையசைத்த குஷா,

"அவளை விட இங்க நிறைய பேர் திறமையானவங்களா இருக்காங்க... அண்ட் எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்கறது தான் உன் கணக்குப்படி திறமையவங்களா?" என்று கேள்வி கேட்டவன்,"கரெக்ட்... கரெக்ட் தான். இவ மாதிரி எங்க யாராலயும் இப்படி வெட்டியா பொழுதைக் கழிக்க முடியாது தான்..." என்று நகைத்தான்.

"ஓ அப்போ உங்களைப் பொறுத்த வரை மொட்டு எந்த வேலையும் செய்யுறதில்லை அப்படித்தானே? ஓகே வெச்சிப்போம்... நீங்க எல்லோரும் தான் கஷ்டப்பட்டு உழைக்கறவங்க ஆச்சே அப்போ ஏன் ஒரு இருபது நாள் அவளைப் போலவே அதாவது உன் கணிப்பு படியே நீயும் ஏன் அவளைப் போலவே வெட்டியா இருக்கக் கூடாது?" என்று லவா முடிக்கும் முன்னே அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அனுவுக்கு விளங்க உடனடியாக,"குஷா வேணாம்... அவ உன்னை ப்ரவோக் பண்றான்... இதுல என்னமோ ட்ராப் இருக்கு..." என்று அவன் காதுகளில் ஓதினாள். ஆனால் அதைக் கவனிக்கும் மனநிலையில் இல்லாத குஷாவிற்கு,'எந்த விதத்துல இவளை விட நான் திறமையில குறைச்சவன்?' என்ற எண்ணமே ஓட,

"ஏன் என்னால முடியாதா என்ன? இவளே செய்யும் போது எனக்கு என்ன? நான் செய்வேன்..." என்று குஷா ஆவேசமாகப் பேச இவர்களின் உரையாடல் அனைத்தும் ஒரு விவாதமாகவும் சண்டையாகவும் தெரிய கனகா தான் வைத்தியிடம்,"ஏங்க இதென்ன இவங்க இப்படிப் பேசுறாங்க? இது ஒன்னும் சாதரணமாத் தெரியல... முதல இதை எல்லாம் நிறுத்தச்சொல்லுங்க..." என்று சொல்ல லவா எதைப் பற்றி எதுக்காகப் பேசுகிறான் என்பதை ஓரளவுக்கு யூகித்த வைத்தி,"அதெல்லாம் ஒண்ணுமில்ல... இவங்க பேசட்டும்..." என்று சொல்லி கனகாவின் வாயை அடைக்க,

"பாரு குஷா இப்போ ஓகே சொல்லிட்டு நாளைக்குப் பேச்சு மாறக்கூடாது..." என்று லவா கேட்க நிச்சயம் லவா குஷாவை பெரிய வலையில் விழ வைக்கப் போகிறான் என்று அனுவிற்கு விளங்கியது.

"முன் வெச்ச காலை பின் வெக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அண்ட் அது எனக்கு பழக்கமும் இல்ல... எதுனாலும் நான் ரெடி... நான் என்ன செய்யணும் இப்போ?" என்று மீண்டும் குஷா கேட்க,

"அடப்பாவி அப்போ என்ன செய்யணும்னு தெரியாம தான் சவால் விட்டயா? அதான் சொன்னானே... வேணாம் குஷா. நோ சொல்லு..." என்று அனு கத்தவும் குஷா புரியாமல் விழிக்க லவா விஷமத்துடன் சிரித்து,

"இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ இருக்குல்ல? அதுல எப்படி நூறு நாள் வெளியுலக தொடர்பு இல்லாம இருக்கணுமா அது போல ஆனா அந்த அளவுக்கெல்லாம் கஷ்டப்படாம ஒரு இருபது நாள் வெறும் இருபதே நாள் மொட்டு கூடச் சேர்ந்து விவசாயம், தோட்டம், மாடு கோழி எல்லாம் பார்க்கணும்... என்ன முடியுமா ப்ரதர்?" என்று லவா வினவ அனு தான் யூகித்து சரியானது என்றதும் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தாள். அது போல் மொட்டுவும் லவா என்ன சொல்ல வருகிறான் என்று தெரிய ஆவலாய் இருக்க,

"ஓகே இதுக்கு நான் ஒத்துக்குறேன்..." என்று சொல்லவும் அனு,"நோ நோ குஷா..." என்று சொல்ல,

"நீ இரு அனு... பெட் இஸ் தி பெட்..." என்றவன் லவாவை நோக்கி,"சரி நீ சொல்ற மாதிரி இருபது நாள் நான் இவ செய்யுற எல்லாம் செய்யுறேன். ஆனா இதனால் எனக்கு என்ன லாபம்? ஓ இவங்க தான் எல்லோரைவிடவும் திறமை சாலினு சொன்ன தானே? எனக்கு பெருசா ஒன்னும் வேணாம். இவங்கள(மொட்டு) அதாவது இந்தத் திறமைசாலி இன்னும் ஒரே அட்டெம்ப்ட்ல அவங்க டிகிரிய முடிக்கணும். அப்படி ஒருவேளை நான் ஜெயிச்சிட்டா இவங்க சொல்றதுக்கு நான் ரெடி... என்ன ஓகேவா?" என்று இப்போது குஷா விஷமத்துடன் சிரித்தான்.

ஏனோ அவன் சிரிப்பு மொட்டுவிற்கு என்னவோ செய்தது. பின்னே ஏற்கனவே அவர்களுக்குள் இருக்கும் அந்த வன்மம் போதாதென்று இப்போது மேலும் அது கூடுமோ என்ற கவலை அவளுக்கு. அது போக மற்ற பேப்பர் எல்லாவற்றையும் க்ளியர் செய்ய முடிந்தவளால் அந்த ஒரே ஒரு பேப்பரை மட்டும் இரண்டு வருடங்களாக க்ளியர் செய்ய முடியவில்லை. இதில் எப்படி அதை ஒரே அட்டெம்ப்டில் க்ளியர் செய்வது? போதாக்குறைக்கு போன முறை அவள் எழுதிய அரியர் ரிசல்ட்டே இன்னும் வரவில்லையே? என்று அவள் யோசிக்க,

"குஷா நல்லா யோசிச்சு சொல்லு அப்பறோம் பேச்சு மாறக் கூடாது..." என்று சொன்ன லவாவின் தொடையைக் கிள்ளி,"இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் வேணாம்..." என்று கிசுகிசுக்க அது குஷாவின் செவிகளிலும் விழுந்தது.

"நான் ரெடி..."

"அப்போ நாங்களும் எங்க பெட்டை சொல்றோம் கேட்டுக்கோ, ஒருவேளை மொட்டு ஜெயிச்சிட்டா இனி உன் வாழ்நாள்ல என்னைக்கும் படிப்பை வெச்சோ இல்ல வேற எந்தக் காரணத்திற்காகவும் அவளைசி அவமானப் படுத்தக்கூடாது. அண்ட் நீ ஜெயிச்சிட்டா நீ சொல்றதுக்கு நாங்களும் ரெடி..." என்று லவா சொல்ல தன்னுடைய பெஸ்டி குஷா வசமாக மாட்டிக்கொண்டான் என்று அவனுக்காக அனுதாபம் கொண்டாள் அனு.

"அது இவ டிகிரியை க்ளியர் செய்யணும் லவா... இருந்தாலும் உனக்கு இவ மேல இவ்வளவு அசாத்திய நம்பிக்கை கூடாது..." என்று முடிக்கும் முன்னே,

"மொட்டு இந்தா உன்னுடைய போன். உன் ஃப்ரண்ட் யாரோ கவியாமே அவங்க காலையில உன்னைக் கூப்பிட்டிருந்தாங்க... நான் தான் அட்டென்ட் பண்ணேன். என்னனு கேளு..." என்று அலைபேசியை அவளிடம் கொடுத்து அனுவைப் பார்த்து,

"செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடி அனு... வஞ்சகன் லவாவடி... அனு வஞ்சகன் லவாவடி..." என்று ராகமாய் இழுத்துப் பாட அதில் என்னவோ விளங்க உடனே தன்னுடைய அலைபேசியை எடுத்து tnau(தமிழ் நாடு அக்ரி யுனிவர்சிட்டி) தளத்திற்குச் செல்ல அதில் நேற்றிரவு தான் செமஸ்டர் முடிவுகள் வந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அதிர்ச்சியில் அவள் லவாவைப் பார்க்க,

"என்ன கவி சொல்ற? நிஜமாவா? விளையாடலையே?" என்று ஆர்வம் பொங்க பேசிய மொட்டுவை எல்லோரும் பார்க்க,

"தாத்தா உங்க பேத்தி மொட்டு என்கின்ற பனித்துளி இனிமேல் பி.எஸ்.சி பார் இல்ல... அவ இப்போ பனித்துளி பி.எஸ்.சி அக்ரி..." என்று உரைக்கவும் மொட்டு அலைபேசியைத் துண்டிக்கவும் சரியாக இருந்தது. நடப்பதை எல்லாம் நம்ப முடியாமல் குஷா விழிக்க,

"நான் தான் சொன்னேன் இல்ல அவன் ஏதோ பிளான் பண்றான்னு... போ இப்போ நீ வசமா மாட்டிக்கிட்ட... நாமெல்லாம் ஏ.சி ரூம்லயே உடம்பு நோகாம வேலை செஞ்சி பழக்கப்பட்டவங்க... நாம எப்படி வயல்ல அதும் இந்த மார்ச் வெயில்ல... நோ வே..." என்று அனு சொல்ல இப்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரும் குஷாவை பாவமாகப் பார்க்க,

"என்ன பிரதர்? போட்டிக்கு நாங்க ரெடி... இன்பேக்ட் நீ வெச்ச கண்டிஷனையும் நாங்க நிறைவேத்திட்டோம்... இப்போ உன் டர்ன்... நீங்க எல்லோரும் அடுத்த இருபது நாளுக்கு மொட்டுகூட வேலை செய்யத் தயாரா? ஆம் இதுல நானும் இருக்கேன்... என்னையும் சேர்த்து தான்... உடல் நோக வேலை செய்ய தயாரா?" என்று லவா முடிக்க,

"ஐயோ அத்தான்... எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல... எல்லாம் குஷா அத்தானாச்சு நீங்களாச்சு..." என்று நழுவ பார்த்த அபியைப் பிடித்தவன்,

"அது எப்படி கண்ணா நியாயமாகும்? அப்படிப்பார்த்தா மஹாபாரத போர்ல எதுக்கு பீஷ்மர் துரோணர் எல்லாம் கலந்துக்கிட்டாங்க? என்னடா குஷா உன் சைட் இவ்வளவு வீக்கா இருக்கு..." என்று அவனை மேலும் வெறுப்பேற்றினான் லவா.

"ஓகே குஷா அப்போ ஈவினிங் அஃனாலேஜ்மென்ட் ஆப் டிபீட்னு ஒரு அக்ரீமெண்ட் கொண்டு வரேன் அதுல சைன் பண்ணிட்டு அடுத்த இருபது நாள் இல்ல இல்ல இனி எப்பயும் மொட்டு வழியில குறுக்க வரவே கூடாது... சவால்ல மொட்டு ஜெயிச்சிட்டான்னு ஒத்துக்கிட்டுப் போயிட்டே இருக்கனும்..." என்று லவா சொல்ல ஏனோ அவன் குஷாவை வம்பிழுத்து அவன் ஈகோவை மேலும் மேலும் தூண்ட,

"நாங்க இதுக்கு ரெடி. விவசாயம் செய்யுறதுல அப்படி என்ன கஷ்டம்னு நாங்களும் பார்க்குறோம்..." என்ற குஷா அங்கிருந்து நகர,

"வசமா பிளான் பண்ணி சிக்க வெச்சிட்டல?" என்ற அனுவுக்கு,

"நீங்க தான் லாக் டௌன் ரொம்ப போரா போகுதுனு சொன்னிங்களே... இனிமேல் போரா போகாது..." என்ற லவா அபி இசை ஆகியோரைப் பார்த்து,

"சாயுங்காலம் ஒரு டிக்கெட் குறைய கூடாது... அடுத்த இருபது நாள் நீங்க டோட்டலி எங்க கண்ட்ரோல்..." என்று சொல்லி அனுப்ப அவர்கள் எல்லோரும் சோகமாகச் சென்றனர்.

"ஏன்யா இப்படிப் பண்ண? அவங்களுக்கு இதெல்லாம் ஒத்து வராதுயா..." என்ற கனகாவிற்கு,

"அம்மாச்சி இந்த இருபது நாள் நாங்க எல்லோரும் இதைச் செஞ்சி பார்க்குறோம்... கண்டிப்பா எங்களுக்கு இது ஒத்து வராது தான்... ஆனா இனி ஒரு நாளும் படிச்சவங்கங்கற திமிர் யாருக்கும் வராது. அண்ட் எங்களுக்கும் இதொரு புது அனுபவமா இருக்கும்... இனி நீங்க எதுவும் பேசவேண்டாம். நடக்குறதை மட்டும் வேடிக்கை பாருங்க..." என்றவன்,

"ஹேய் மொட்டு எனக்கு ட்ரீட் எல்லாம் இல்லையா?" என்று கேட்க,

"ட்ரீட் என்ன ட்ரீட்? உனக்கென்ன வேணும் சொல்லு? நீ என்னுடைய லக்கி சார்ம்ங்கறதை திரும்பவும் நிரூபிச்சிட்ட... தேங்க் யூ லவா..." என்று கொஞ்சினாள்.

மதிய உணவு முடித்து எல்லோரும் கீழே அமர்ந்திருக்க லவா அக்ரீமெண்ட் என்று ஒன்றை கொண்டுவந்து அதை வாசித்தான். அடுத்த இருபது நாட்களுக்கு அனைவரும் காலை நான்கரை மணிக்கெல்லாம் விழித்து ஐந்தே கால் மணிக்கெல்லாம் தோட்டத்தில் இருக்க வேண்டும் என்றும் மொட்டு அவர்களுக்கு ஒதுக்கும் வேலையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்றும் அதில் இருந்தது. அவர்கள் பயந்ததைப் போல் அது முழு நாள் வேலை ஒன்றும் இல்லை. காலை ஐந்து முதல் பதினொன்று வரை இருக்கும் வேலையெல்லாம் செய்து திரும்ப மாலை நான்கு மணி முதல் ஆறு வரை உதவினால் போதும் என்று இருக்க,

"என்னது போதுமா? நீ சொன்னதே எட்டு மணிநேர வேலை தெரியுமா?" என்ற அனுவிற்கு,

"நாங்க அவ்வளவு மனசாட்சி இல்லாதவங்க எல்லாம் இல்ல..." என்று லவா சிரிக்க, அந்த ஒப்பந்தத்தில் எல்லோரும் கையெழுத்திட்டனர். பிறகு மாலை அவர்கள் எல்லோரும் வெளியே நடக்க,

"எதுக்கு லவா இதெல்லாம்? எதையும் கட்டாயப் படுத்தக்கூடாது..." என்ற மொட்டுவுக்கு,

"இன்னைக்கே லாக்டௌன்னு வேலைக்கு நிறைய பேர் வரல... மாடு இருக்கு பின்னாடி தோட்டத்துல பழம் காய்கறி எல்லாம் விளைஞ்சிடுச்சு... சும்மா செய்யட்டும்... இவங்களுக்கு டைம் பாஸ் ஆன மாதிரி இருக்கட்டும்..." என்று லவா சிரிக்க,

"ஆமா இதுக்கெல்லாம் எத்தனை நாள் திட்டம் போட்ட?" என்றவளுக்கு,

"திட்டமெல்லாம் போடல... ஆனா உன்னை எல்லோரும் மட்டமா நினைக்குறாங்கனு எனக்குப் பட்டுச்சு... எதுக்கு மத்தவங்கனு எல்லாம் என் உடன்பிறப்பு தான். சோ அவனுக்கு ஒரு பாடம் புகட்ட நெனச்சேன். பார்த்தா காலையில உன் ஃப்ரண்ட் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னாங்க. அதே மாதிரி குஷாவும் வம்பிழுத்தான். எல்லாம் திடீர்னு வந்த யோசனை. அது போக அனுவும் அபியும் ரொம்ப சோம்பேறியா இருக்காங்கனு தாத்தா ஃபீல் பண்ணாரு. சோ ஒரே கல்லுல பல மாங்கா... எப்படி என் பிளான்?"

"ஒருவேளை நான் பாஸாகம இருந்திருந்தா?"

"அப்பயும் எதாவது பண்ணியிருப்பேன்... அதை விடு... மதியத்துல இருந்து அவன் என்கிட்டப் பேசவே இல்ல?" என்று லவா சொல்ல,

"அப்பறோம் ஏன் இப்படிப் பண்ண?"

"அவன் ரொம்ப நல்லவன் மொட்டு... எனக்காக அவன் நிறைய சேக்ரிபைஸ் பண்ணியிருக்கான்... அவன் பொதுவா யாரையும் ஹர்ட்டோ இல்ல இன்சல்ட்டோ பண்ண மாட்டான்... உன் விஷயத்தைத் தவிர... என்னமோ அவனுக்கு இந்த ஒரு லெசனும் சொல்லிக் கொடுக்கணும்னு நெனச்சேன். நீ எப்படி எங்களை பிடிக்குதோ பிடிக்கலையா குறைந்த பட்சம் ஒழுங்கா ட்ரீட் பண்ற... அவன் ஏன் இப்படி இருக்கான்?" என்று லவா பேச பேச ஏனோ தனக்கும் குஷாவுக்கும் நடந்த ஆர்க்யுமெண்டும் அவன் பணம் கொடுத்ததையும் அதை இவள் பெற்றுக் கொண்டதையும் நினைத்தவளுக்கு ஏனோ அவளையும் அறியாமல் பயம் சூழ்ந்தது.

அங்கே பிள்ளைகள் எல்லோரும் விளையாட குஷா ஒருவன் மட்டும் தனியே அமர்ந்திருந்தான். அவனிடம் வந்த அனு,

"என்னாச்சு குஷா? ஏன் இங்கேயே உட்கார்ந்துட்ட?" என்றதும் அவன் முறைக்க,

"நான் தான் அப்போவே சொன்னேனே? நீ தான் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்ட... இப்போ பாரு நடுராத்திரி நாலு மணிக்கெல்லாம் எழனுமாம்..." என்று சொல்ல அவளைக் குட்டியவன்,

"அது அதிகாலை..."

"போடா... எனக்கு அதை நெனச்சாலே பக்பக்னு இருக்கு..."

"சரி நீ வர வேணாம் நான் பார்த்துக்கறேன் விடு..." என்று ஆதரவாய் அவன் சொல்ல,

"அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ மட்டும் கஷ்டப்படும் போது நான் எப்படி ஜாலியா இருப்பேன் சொல்லு?"

"பார்ரா என்னை அவ்வளவு பிடிக்குமா?" என்றதும் அவள் செல்லமாக முறைக்க,

"நீ என் லைஃப்ல ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா?" என்று சொல்லி,

"சரி விடு இதுவும் ஒரு புது அனுபவமா இருக்கும்... அண்ட் இதை தானே தினமும் மொட்டுவும் செய்யுறா? சோ கண்டிப்பா நம்மளும் செய்ய முடியும்..." என்று சொன்னவள்,

"ஆனா இந்த லவா எவ்வளவு ட்ரிக்ஸ்சா நம்ம மாட்டிவிட்டுட்டான் பார்..." என்று சொல்ல,

"சின்ன வயசுல இருந்தே அவனுக்கு கொஞ்சம் சமயோஜிதம் ஜாஸ்தி அண்ட் அதுபோக அவளுக்காக அவன் என்ன வேணுனாலும் செய்வான்..." என்று குஷா சொல்ல அனு யோசனைக்குச் சென்றாள்.
அன்றைய இரவு எல்லோரும் சீக்கிரம் உறங்குவதற்குச் சென்றுவிட கீழே தங்கள் அறையில் கனகா வைத்தியிடம்,"இதென்ன விளையாட்டு? நீங்களும் அதுங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க?" என்று காலை நடந்ததைப் பற்றிச் சொல்ல,

"எல்லாமே நல்லதுக்குத் தான். அது போக இதெல்லாம் நாளைக்கு நம்ம கனவுக்கு துணை நிற்கும்..." என்று வைத்தி சொல்ல,

"நீங்க எதைச் சொல்றிங்க?"

"வேற என்ன? நம்ம பேரன்களுக்கு பேத்தியை கல்யாணம் செஞ்சு வெக்கறத பத்தி தான்..."

"ஆமா நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்... இந்த லவா பையன் மொட்டு மேல அவ்வளவு பாசமும் அக்கறையும் காட்டுறான்... அதே மாதிரி குஷாவும் அனுவும் கூட ஜோடியா தான் சுத்துறாங்க..." என்று கனகா சொல்ல,

"அது தான் எனக்கும் கவலையா இருக்கு..." என்று வைத்தி முடிக்க,

"ஏன் என்ன கவலை?"

"உனக்கே தெரியும் லவா ஹைதெராபாத்ல வேலை செய்றான். ஆனா குஷா தான் ஜானுகூடவும் மாப்பிள்ளை கூடவும் இருக்கான். இத்தனை வருஷமா சமாதானம் ஆகாத மாப்பிள்ளைய இனிமேல் சமாதானம் செய்யணும்னா குஷாவுக்கும் மொட்டுவுக்கும் தான் கல்யாணம் ஆகணும்..." என்று சொல்ல,

"லவாவும் அவங்க பையன் தானே? அவனைக் கல்யாணம் பண்ணா என்ன?"

"என்ன தான் அவங்க ரெண்டு பேர் மேலயும் ஜானகியும் மாப்பிள்ளையும் பாசம் வெச்சாலும் குஷாவும் அவங்க அப்பாவும் கொஞ்சம் க்ளோஸ். அதே மாதிரி ஜானுவும் லவாவும் க்ளோஸ். அதனால் குஷாவும் மொட்டுவும் கல்யாணம் பண்ணா தான் இந்தக் குடும்பம் திரும்ப பழையபடி ஆகும்... ஆனா இது எல்லாத்துக்கும் மேல சம்மந்தப்பட்ட அந்த நாலு பேருக்கும் இதுல விருப்பமானு தெரியணும். அதுவும் போக இந்த குஷாவுக்கும் மொட்டுவும் எதுக்கெடுத்தாலும் சண்டை வந்துட்டே இருக்கு... அவங்க மனசுக்குள்ள என்ன இருக்கோ?" என்றவர் உறங்கினார்.
மறுநாள் காலை நான்கரை மணிகெல்லாம் அலாரம் கூவ முதல் அலறலிரே விழித்தவன் அருகே உறங்கும் தன் ரெட்டைக் கண்டு முணுமுணுத்தபடியே தயாராகி ஐந்தே கால் மணிக்குள் தன் ஜாகிங்கை முடிக்க சித்தமானான். அப்போதே அனு அபி முதலிய அனைவரின் அறைகளிலும் லைட்டை போட்டுவிட்டு ஃபேனை அமர்த்தியவன் ஓட எரிச்சலுடனே மற்றவர்கள் விழித்தனர். அவர்களுக்காகவே காத்திருந்த வைத்தி அவர்கள் எல்லோரும் தயாராகி வந்துவிட அபி தான் தூக்கம் தெளியாமல் இருக்க பாரி அவனை கலாய்த்தான்.

மணியைப் பார்த்த அனு தன் வாழ்நாளில் இவ்வளவு சீக்கிரம் எழுந்ததை எண்ணி வருந்தினாள். அவளெல்லாம் செமஸ்டர் எக்ஸாம் பொழுதே இரவு வரை படித்துவிட்டு காலை ஏழரை வரை உறங்குபவள். அவளைப் போய் நான்கு மணியைப் பார்க்க வைத்து கொடுமை படுத்தினர்.

வழக்கமாக தோட்ட வேலை செய்யும் யாரும் வராததால் அந்த இடமே வெறிசோடி இருந்தது. மொட்டுவும் செந்திலும் மட்டும் அங்கே இருக்க அவர்களுக்கு ருக்மணி உதவிகொண்டு இருந்தார்.

லவா அனு இருவரும் அங்கிருக்கும் வயல் வெளியில் நடக்க குஷா என்ன செய்வதென்று புரியாமல் நின்றான். அப்போது வந்த செந்தில்,"தம்பி அங்க ஹோஸ் இருக்கும் பாருங்க. அதை எடுத்து இதுல கனெக்சன் கொடுத்து என் பின்னாடி வாங்க..." என்று சொல்ல குஷாவும் அவர் சொன்னதை எல்லாம் பின்பற்றினான்.

முதல் நாள் என்பதால் அவர்களுக்குப் பெரிதாக வேலை எதுவும் வைக்காமல் என்ன செய்யவேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொடுத்தார். அங்கிருக்கும் பதினைந்து மாடுகளில் ஏழு மாடு பால் கறக்கும் என்றும் அவற்றை கறந்து ஏழு மணிக்குள் கொண்டு சென்றால் தான் பால் சொசைட்டியில்(கூட்டுறவு சங்கம்) வாங்குவார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருக்க ஏனோ அனு அபி இசை மூவரும் வேலையேதும் இல்லாததால் சற்று நிம்மதியுடன் இருந்தனர். லவா சிறிதுநேரம் சுற்றிப்பார்த்து விட்டு வர அதற்குள் மொட்டு கறந்த பாலில் வீட்டிற்குத் தேவையானதையெல்லாம் எடுத்துக்கொண்டு மற்றத்தை பெரிய பால் தூக்கில் ஊற்றிக்கொண்டிருந்தாள்.

அவர்கள் தோட்டத்தை ஒட்டி அருகே ஒரு காடு இருக்கிறது. அதாவது அவை புறம்போக்கு இடம் என்பதால் சரியாக பராமரிப்பு இல்லாமல் இருக்க அது வளர்ந்து ஒரு அடர் வனம் போல் இருந்தது. மாட்டிற்கு வேண்டிய மேவு அனைத்தும் அந்த வனத்தில் இருப்பதால் அவற்றை வெயிலுக்கு முன் ஓட்டிச் சென்று விட்டு வர வேண்டும். அதை எவ்வளவு உள்ளே அனுப்ப முடியுமா அவ்வளவு உள்ளே அனுப்பினால் தான் மாலை வரை மேய்ந்துவிட்டு வரும். இல்லையேல் மேய்ச்சல் குறைந்து பிறகு பாலும் குறைந்துவிடும். லாக் டௌன் என்பதால் சுற்றிலும் கனத்த மௌனம் இருக்க மாடுகளை காட்டிற்குள் அழைத்துச் செல்ல மொட்டு முடிவெடுக்க அவளுடன் குஷாவும் பாரியும் சென்றனர். நாளையிலிருந்து அவர்கள் தான் இதைச் செய்ய வேண்டும் என்பதால் அதற்கு ஒத்திகை காட்டினாள்.
பிறகு அங்கு இருந்த சாணியெல்லாம் அள்ளிய செந்தில் அபியை அழைத்து அதை இனிமேல் அவன் தான் எடுக்க வேண்டும் என்று சொல்ல,

"வாட்? சாணி அதும் என் கையில? உவே இன்பெக்சன் ஆகாதா?" என்று பந்தா செய்ய,

"ஏலே அபி, இந்த உலகத்துலயே மாட்டு சாணம் போல சிறந்த கிருமிநாசினி இல்ல..." என்று சொல்ல (வரும் முன் காப்பது தான் சாணத்தின் வேலை. ஆனால் மாட்டு சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வீரியம் இருக்கிறது. கொரோனா இவற்றுக்கெல்லாம் மசியாமல் இருப்பதை மக்கள் கணக்கிட தவறுகின்றனர்...)

"அப்பறோம் எதுக்கு சோப்பை போட்டு குளிக்குறோம்? எல்லாம் சாணத்தையே பூச வேண்டியது தானே?" என்று கடுப்பில் மொழிந்தவன் அதை கையில் எடுத்தவே அசூயைக் கொண்டான்.

அப்போது தான் வீட்டின் பின்னால் இருக்கும் காய்கறி மற்றும் பழத் தோட்டத்தைச் சுற்றி அனு, இசை, இனி பார்வையிட்டனர். மணவாளன் அவற்றுக்கெல்லாம் எவ்வாறு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று செய்முறை காட்டிக்கொண்டிருந்தான்.
(நேரம் கைகூடும்)
மக்கள் அனைவரும் கவனமாக இருங்கள். கடந்த நான்கைந்து தினங்களாக என் சொந்தத்தில் தெரிந்தவர்கள் என்று நிறைய நபர்களை கொரோனாவால் இழந்திருக்கிறேன். முடிந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்...
 
சூப்பர் பிளான் லவா... அதென்ன சும்மா சும்மா மொட்டு ஒண்ணுமே செய்யலன்னு சொல்றது.... இனி தெரியும்ல எல்லாருக்கும் விவசாயம் பாக்குறதுன்னா ஒன்னும் சும்மா இல்லனு ???

எஸ் ஜி.... எல்லாருக்கும் இதே அனுபவம் தான்... இப்போலாம் பகல்ல ஊர்லயிருந்து போன் வந்தாலே பயமா இருக்கு.... டிவி போன் எத தொறந்தாலும் நமக்கு தெரிஞ்சவங்க இழப்பு தான்.... அதனால எல்லாருமே தயவுசெய்து பத்திரமா இருங்க....
 
லவா??????????. மொட்டு சும்மாதான் இருக்கானு சொல்லிட்டு இருபது நாள் இவங்க அந்த வேலை எல்லாம் பார்த்து கஷ்டப்பட போறாங்க இதேமாதிரிதான் வீட்டுல இல்லத்தரசிகள் இருப்பாங்களே அவங்களையும் சும்மதான் இருக்கனு சொல்லி சொல்லி லாக்டவுன் அப்படி சொன்னவங்களாம் ஏன்டா சொன்னோம்னு நினைச்சுருப்பாங்க மொட்டு வேலையை பத்தி படிக்கும்போது மேல சொன்னதுதான் ஞாபகம் வந்தது. மொட்டு பாக்குற வேலைய படிக்கவே மூச்சு வாங்குது 20நாள் செய்றது???. லவாவோட பாரதிராஜா ஸீன் உண்மையா நடக்கும் போலயே.

எஸ் ரைட்டர் ஜீ போன கொரோனால செய்திலதான் இறப்பு செய்தி கேட்டேன் ஆனால் இப்ப தெரிஞ்சவங்க சொந்தகாரங்கனு கேட்டுட்டு இருக்கேன். நாம எங்கயும் போகலனாலும் பக்கத்துல இருக்குறவங்க போய்ட்டு இருக்காங்க(இந்த காரணத்துனால ஒரு இழப்பு எங்க செந்தத்துல). இதுவும் சிகரெட் மாதிரி தன்னையும் பாதிச்சு சுத்தி உள்ளவங்களையும் பாதிக்குது. நாமளும் சேஃபா இருக்கனும் சுத்தி இருக்குறவங்களையும் சேஃபா பாத்துக்கனும்னு எல்லோருக்கும் தோனனும். பாதுகாப்பா இருப்போம்.
 
Ellorum safe ah irunka.... Super ra pogudhu
 
Kusha tubelight, Lava vacha trapla warned aa poi maatikittane, Vaithi planlaam semma, ennama think panraar, agri oda importance, atanoda kashtamlaam ini ellorukkum puriyum, Kusha 20days endla enna aha poraano
 
சூப்பர் பிளான் லவா... அதென்ன சும்மா சும்மா மொட்டு ஒண்ணுமே செய்யலன்னு சொல்றது.... இனி தெரியும்ல எல்லாருக்கும் விவசாயம் பாக்குறதுன்னா ஒன்னும் சும்மா இல்லனு ???

எஸ் ஜி.... எல்லாருக்கும் இதே அனுபவம் தான்... இப்போலாம் பகல்ல ஊர்லயிருந்து போன் வந்தாலே பயமா இருக்கு.... டிவி போன் எத தொறந்தாலும் நமக்கு தெரிஞ்சவங்க இழப்பு தான்.... அதனால எல்லாருமே தயவுசெய்து பத்திரமா இருங்க....

லவா செம ஐடியா போ.... இப்படி மாட்டி விடுவன்னு நினைக்கவே இல்ல. அனு சொல்றத கேட்டு இருக்கலாம் குஷா....
தாத்தா ஆசை பட்டது தான் நடக்கும் கண்டிப்பா....
எனக்கும் பாஸ்... இந்த 4 மணி லா..... அய்யோ முடியவே முடியாது. நானும் எக்ஸாம் நடக்கும்போது கூட... சீக்கிரமா எந்திரிச்சுது கிடையாது. எங்கயாவது வெளியே போகணும்னா....மட்டும் ரொம்ப கஷ்டப்பட்டு நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சி ரெடியாகுவேன். அப்போ கூட எங்க அம்மாவைத் திட்டிக்கிட்டே தான் ரெடியாகுவ.

எஸ்எஸ் இப்போலாம் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரு டெத் நியூஸ் ஆஆஆஆஆஆ‌ இருக்கு. ஒன்னு வந்துச்சு இரண்டாவது வந்துருச்சு அது கூட இப்போ இன்னொன்னும் சேர்ந்து வருது இது இல்லாம மூன்றாவதா வேற ஒன்னு வெயிட்டிங்ல இருக்கா பாஸ்... நீங்களும் பத்திரமா இருங்க.
 
சூப்பர் பிளான் லவா... அதென்ன சும்மா சும்மா மொட்டு ஒண்ணுமே செய்யலன்னு சொல்றது.... இனி தெரியும்ல எல்லாருக்கும் விவசாயம் பாக்குறதுன்னா ஒன்னும் சும்மா இல்லனு ???

எஸ் ஜி.... எல்லாருக்கும் இதே அனுபவம் தான்... இப்போலாம் பகல்ல ஊர்லயிருந்து போன் வந்தாலே பயமா இருக்கு.... டிவி போன் எத தொறந்தாலும் நமக்கு தெரிஞ்சவங்க இழப்பு தான்.... அதனால எல்லாருமே தயவுசெய்து பத்திரமா இருங்க....
கண்டிப்பா ஒன்றை செய்து பார்த்தால் தான் அருமை தெரியும்! நானெல்லாம் ரொம்ப அப்செட் ஆகிட்டேன். be safe நன்றி?
 
லவா??????????. மொட்டு சும்மாதான் இருக்கானு சொல்லிட்டு இருபது நாள் இவங்க அந்த வேலை எல்லாம் பார்த்து கஷ்டப்பட போறாங்க இதேமாதிரிதான் வீட்டுல இல்லத்தரசிகள் இருப்பாங்களே அவங்களையும் சும்மதான் இருக்கனு சொல்லி சொல்லி லாக்டவுன் அப்படி சொன்னவங்களாம் ஏன்டா சொன்னோம்னு நினைச்சுருப்பாங்க மொட்டு வேலையை பத்தி படிக்கும்போது மேல சொன்னதுதான் ஞாபகம் வந்தது. மொட்டு பாக்குற வேலைய படிக்கவே மூச்சு வாங்குது 20நாள் செய்றது???. லவாவோட பாரதிராஜா ஸீன் உண்மையா நடக்கும் போலயே.

எஸ் ரைட்டர் ஜீ போன கொரோனால செய்திலதான் இறப்பு செய்தி கேட்டேன் ஆனால் இப்ப தெரிஞ்சவங்க சொந்தகாரங்கனு கேட்டுட்டு இருக்கேன். நாம எங்கயும் போகலனாலும் பக்கத்துல இருக்குறவங்க போய்ட்டு இருக்காங்க(இந்த காரணத்துனால ஒரு இழப்பு எங்க செந்தத்துல). இதுவும் சிகரெட் மாதிரி தன்னையும் பாதிச்சு சுத்தி உள்ளவங்களையும் பாதிக்குது. நாமளும் சேஃபா இருக்கனும் சுத்தி இருக்குறவங்களையும் சேஃபா பாத்துக்கனும்னு எல்லோருக்கும் தோனனும். பாதுகாப்பா இருப்போம்.
எஸ். கண்டிப்பா என் அம்மா இந்த ஒரு வருஷமாவே இதே டைலாக் தான் பேசுறாங்க... அதே மாதிரி இல்ல ஆனா வேற மாதிரி நடக்கும்... கூடவே சண்டைகளும் வரும். அதே தான் பாதுகாப்பா இருங்க??
 
Kusha tubelight, Lava vacha trapla warned aa poi maatikittane, Vaithi planlaam semma, ennama think panraar, agri oda importance, atanoda kashtamlaam ini ellorukkum puriyum, Kusha 20days endla enna aha poraano
ஹா ஹா ஆமாம் ஆமா. குஷா வசமா மாட்டிகிட்டான்... அக்ரிகல்சரை புரிஞ்சிப்பான்... நன்றி??
 
Top