Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-19

Advertisement

praveenraj

Well-known member
Member
பழைய நிகழ்வுகள் எல்லாம் நேற்று நடந்ததைப் போல் ஒரு மாயை ஏற்படுத்த அது கொடுத்த வழியில் இருந்து யாரும் மீளவில்லை. உண்மையில் வைத்திக்கு ரகுவின் மீது அளவுகடந்த மரியாதையை இருக்கிறது. பின்னே எல்லாத் தந்தைக்கும் அவர் மகள் ஒரு இளவரசி தான். ஆனால் எல்லாக் கணவர்களும் தங்கள் மனைவியை ராணியாக நடத்துவதில்லையே? அப்படியிருக்கும் போது தன் மகளை ஒரு ராணியாகவே நடத்தும் ரகுவின் மீது அவருக்கு சொல்லிலடங்காத கர்வம் இருக்கிறது. ஏன் தன் மகனான நந்தாவே தன்னுடைய மனைவியைச் சரிசமமாக நடத்துவதில்லையே. வைத்தி தன்னுடைய வாழ்க்கையில் தான் சறுக்கியதாக நினைப்பது நந்தாவின் விஷயத்தில் தான். சிறு வயதிலே படிப்பு வரவில்லை. எவ்வளவோ சொல்லியும் எஸ்.எஸ்.எல்.சியை அவர் தாண்டவில்லை. அதனால் தான் அவரை விவசாயத்திற்குள் இழுத்து விட்டார்.

தன் சம வயது ஆட்களுடன் பழகி கூடா சகவாசம், தண்ணி, தம் என்று இருந்து வைத்தியின் வாழ்க்கை கவிதையில் எழுத்துப் பிழையாகவும் சந்திப் பிழையாகவும் மாறியிருந்தார் நந்தா. சரி அப்பேர்ப்பட்ட காந்திக்கே 'ஹரிலால்' என்று ஒரு மகன் இருந்தார் என்றால் தனக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? என்று இதை ஒதுக்கிவிட்டார் வைத்தி.
(ஹரிலால் காந்தியைப் பற்றி கூகுள் செய்து பாருங்கள். தன்னுடைய வாழ்க்கையில் காந்தி இறுதிவரை தான் தோற்றதாக நினைத்த ஒரே நபர் தன் மூத்த மகனான ஹரிலால் காந்தியிடம் தான்...)

ஒரு வயதிற்கு மேல் நந்தாவை கண்டிக்க முடியவில்லை. தன் மகன் தன் தம்பியின் கைப்பாவையாக மாறுவதை கண்கூடவே கண்டும் அதைத் தடுக்க முடியாத இடத்தில் அவர் இருந்தார்.

திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என்று சித்ராவை நந்தாவுக்குத் திருமணம் செய்தும் வைத்தார். அவர்களின் தொடக்க கால வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இதற்கிடையில் அவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து தான் மொட்டுவும் பிறந்தாள். இதோ மிகச் சமீபங்களில் தான் நந்தா தன்னுடைய வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ளதாக எண்ணி வாழ்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே அவ்வளவு இணக்கம் இல்லை. இதில் மகளின் கோவத்திற்கு ஆளானதில் இருந்து மகனை முற்றிலும் தவிர்க்க ஆரமித்து விட்டார் வைத்தி. அதனாலோ என்னவோ சிறுவயதில் இருந்தே மொட்டுவை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் வளர்க்க ஆரமித்தார். ஆனால் எல்லா விஷயத்திலும் தன் பேச்சைக் கேட்கும் மொட்டுவோ படிப்பில் மட்டும் தன் தந்தையின் வழியைத் தேர்ந்தெடுத்தாள்.

பிறகு ஒருவாறு அவளை ஒரு டிகிரி முடிக்கவும் வைத்துவிட்டார். தன்னுடைய காலத்திற்குள்ளாகவே நந்தாவையும் ஜானுவையும் பழையபடி உறவுகொண்டாட வைக்க வேண்டி முயற்சிக்கிறார். அந்தஓர் முயற்சியின் ஒரே நம்பிக்கை கீற்று என்றால் அது மொட்டு- குஷாவின் திருமணம் தான். அதனாலோ என்னவோ இன்றைய நிகழ்வுகள் அவரை மிகவும் பாதித்து விட்டது.

மறுநாள் பொழுது வழக்கம் போல் விடிந்தது. பிள்ளைகள் அனைவரும் தங்கள் வழக்கமான வேலையில் மூழ்கினார்கள். குஷாவிற்கு என்ன தான் மொட்டுவின் மீது கோவம் இருந்தாலும் தன்னுடைய பெட்டில் தான் வென்றே தீர வேண்டும் என்று முனைப்புடன் இருந்தான். நேற்றைய நிகழ்வுக்குப் பிறகு லவா மொட்டுவிடம் பேசவே இல்லை. மொட்டுவும் லவாவைச் சந்திக்கவே அஞ்சினாள். இதற்கிடையில் அனு மற்றும் லவா தங்களுடைய அன்றாட வேலைகளை செய்துகொண்டே வழக்கமான கிண்டல் கேலிகளுடன் பொழுதைக் கழித்தனர்.

அன்று மாலை கனகா வைத்தியிடம் நாளை நடைபெறவிருக்கும் திருமணத்தைப் பற்றி நினைவு படுத்தினார். வைத்தியின் பங்காளியுடைய பேத்தியின் திருமணம் அது. மொட்டுவை விட ஒரு வருடம் மூத்தவள். முன்பே திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்ததால் அந்த லாக் டௌனில் மிக எளிமையாக வீட்டில் திருமணம் செய்ய எண்ணி அதற்கான தகவலையும் கொடுத்திருந்தார்கள். சூரக்கோட்டையில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் நடைபெற இருந்தது.

வெளியூரில் இருந்து யாரும் கலந்துகொள்ள இயலாது என்பதால் வைத்தியை குடும்பத்துடன் அழைத்திருந்தார் அவர். இன்னும் சொல்லப் போனால் வைத்தியும் அவர் தம்பியும் மட்டும் தான் கலந்துகொள்ள முடியும். இதைப்பற்றி வீட்டில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க ஏனோ பிள்ளைகள் எல்லோரும் தாங்களும் நாளை திருமணத்திற்கு வருகிறோம் என்று அடம்பிடித்தார்கள். பின்னே கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக அவர்களும் அந்த வீட்டையும் தோட்டத்தையும் தானே சுற்றி வருகிறார்கள்? கிராமம் என்பதால் கெடுபிடிகள் இல்லாமல் போக குடும்பத்துடன் அங்கே செல்ல முடிவெடுத்தார் வைத்தி.

அன்று இரவு பொறுத்து பொறுத்துப் பார்த்த லவா மொட்டுவின் அறைகள் நுழைந்தான். அவனை அந்நேரத்தில் எதிர்பாராதவள் விழிக்க அவளை நெருங்கியவன்,

"எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிட்டு இருக்க மொட்டு? அன்னைக்கு நடந்தது ஒரு ஆக்சிடென்ட். நீ என்னைத் தள்ளி விட்டிருக்க மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதான் எனக்கு ஒண்ணுமில்லையே? அப்பறோம் ஏன் என்னை அவாய்ட் பண்ற?" என்று நேரிடையாக விஷயத்திற்கு வந்தான் லவா.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியில லவா. எனக்கே ஒரு குற்றயுணர்ச்சி. ஒருவேளை அன்னைக்கு உனக்கேதாவது ஆகி இருந்தா நான்..." என்றவளின் கண்கள் உண்மையில் கலங்கியிருந்தது."அதான் திரும்ப உனக்கேதாவது ஆகிடுமோனு நான் உன்கிட்ட நெருங்கவே இல்ல..."

"ஏய் லூசு? இதுக்கா என்ன அவாய்ட் பண்ண? அன்னைக்கு என்னமோ சொன்ன நான் தான் உன்னுடைய லக்கி சார்ம் அது இதுனு..." என்றவன் அவள் கன்னத்தைப் பிடிக்க அதில் இன்னமும் அவளுக்கு வலி இருந்தது.

"அவன் அடிச்சதுக்கு நான் உன்கிட்ட சாரி கேக்குறேன் மொட்டுமா... என் மேல இருந்த பாசத்துல எனக்கேதாவது ஆகிடுச்சோன்னு பதட்டத்துல அவன்..." என்று இடைவெளி விட்டவன்,

"ஆனா எனக்கு இதுல ஒன்னு மட்டும் தெளிவாப் புரிஞ்சது. உனக்கும் அவனுக்கும் இடையில தீர்க்க வேண்டிய பெரிய கணக்கு ஒன்னு இருக்குல்ல? என்னை மன்னிச்சுடு மொட்டு... அன்னைக்கு நான் அவனை மொக்கை பண்ணி இங்க வேலை செய்ய வெச்ச கோவத்துலயும் ஈகோலயும் இருந்தவனுக்கு அன்னைக்கு நடந்தது ஒரு நல்ல சான்ஸா போயிடுச்சு..." என்று லவா உரைக்க,

"இல்ல... அதில்ல லவா. அன்னைக்கு அந்த இடத்துல நான்னு இல்ல அனுவோ இசையோ இனியோ யார் இருந்திருந்தாலும் அவன் அவங்களை கண்டிப்பா அடிச்சிருப்பான். அவன் அடிக்கும் போது அவன் கண்ல துளியும் வெறுப்பில்ல... உனக்கு என்ன ஆகியிருக்கோம்னு ஒரு பதட்டம் தான் இருந்தது. வாழ்க்கையில முதல் முறையா அவன் பண்ண ஒரு விஷயத்துல எனக்கு மாற்றுக்கருத்து இல்ல..." என்று மொட்டு சீரியசாகச் சொல்ல,

"ஓஓஓ... அப்படிப் போகுதா கதை? ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்..." என்று ராகமாய் இழுத்து கண்ணடித்தவன்,

"ஆனா உங்க லவ் ஸ்டோரி இவ்வளவு க்ளிஷேவா இருக்கும்னு நான் துளியும் எதிர்பார்கல... காலங்காலமா தமிழ் சினிமாவுல நடக்குற அதே சீன். நீ சூர்யா பேன் தான? அப்போ சிங்கம் படத்துல அனுஷ்காவை சூர்யா அடிச்சதுக்குப் பிறகு லவ் வர மாதிரி என் தம்பி உன்னை அடிச்சு லவ் வர வெச்சுட்டான் போல. அதான் ரெண்டு நாளா உன் கால் தரையிலே இல்லையா? காதல் வந்தாலே காலு ரெண்டு தன்னாலே காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே... ஹம் ஹ்ம் ஹ்ம்... இரு அவனை ஹாக்கி பேட் மீசையில நெனச்சு பார்க்குறேன்..." என்று லவா யோசிப்பதைப்போல் பாசாங்கு செய்ய,

"கருமம் கருமம்... அந்த மூஞ்சுக்கு ரொமான்ஸ் ஒன்னு தான் குறைச்சல்... அதும் என் சார்மிங் சூர்யா வா அவன்? சூர்யாவுக்கு அழகே சிரிப்பு தான். உன் தம்பி என்னைக்காவது சிரிச்சிருக்கானா? உர்ராங்கொட்டான்..."
"பாத்தியா அப்போ என் தம்பி சிரிக்க மாட்டேங்குறாங்கறது தான் பிரச்சனை. ஒருவேளை அவன் சிரிச்சா நீ டூயட் பாட ரெடின்னு சொல்ற ரைட்?" என்று லவா அவனை வார,

"இன்னைக்கு உன்ன உண்மையிலே பிடிச்சு கிணத்துல தள்ளி விடுறேன் பாரு..." என்று அவனைத் துரத்தினாள் மொட்டு.

ஏனோ இரண்டு நாட்களாக வீட்டில் இருந்த ஒரு அமைதி இவர்களின் இந்த நடவடிக்கையால் மாறி பழையபடி உற்சாகமாகியிருந்தது.

மறுநாள் காலையிலே வீட்டில் அனைவரும் புறப்படத் தயாராக பெரியவர்கள் நால்வரும் தங்களுடைய காரில் பயணிக்க பாரி, மணவாளன், அபி, ரித்து, ஆனந்தி, இசை, இனி ஆகியோர் ஒரு காரில் புறப்பட மொட்டுவும் அனுவும் லவா குஷாவோடு ஆளுக்கொரு பைக்கில் வருவதாக முடிவெடுத்தனர்.

இதொன்றும் புதியதல்ல. இங்கே வரும் போதெல்லாம் அருகிலிருக்கும் கோவில், குளம் முதலியவற்றுக்கு அவர்கள் பைக்கில் தான் ஜோடியாகப் பயணிப்பார்கள். லவா குஷா இருவரும் முன்னரே தயாராகி வந்து ஆளுக்கொரு பைக்கில் அமர்ந்திருக்க முதலில் தயாராகி வந்த அனு தாங்கள் போட்ட திட்டப்படி லவா அருகில் சென்று அவனோடு கதைத்தாள். அதைக் கண்ட குஷா கடுப்பாகி,

"ஹே அனு இங்க வா நாம போலாம்..." என்று அழைக்க வருவதாக சமிக்ஞை செய்தவள் லவாவுடனே பேசிக் கொண்டிருந்தாள். அப்போது தான் வீட்டை பூட்டிவிட்டு களத்திற்கு வந்த மொட்டுவைக் கண்ட லவா கண்ணசைக்க நொடியில் அவன் பின் ஏறி அமர்ந்தாள் அனு. இதைக் கண்டு குஷா மற்றும் மொட்டு இருவரும் ஒரே சமயத்தில் லவா மற்றும் அனுவை அழைக்க அவர்களா இவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பர்கள்? செயின் ஸ்னாட்ச் செய்த திருடன் எவ்வாறு நொடியில் வண்டியில் ஏறி மாயமாவார்களோ அதே போல் லவா அனு இருவரும் மாயமானார்கள். லவாவின் வண்டி நின்றிருந்த இடத்திற்கு வந்த மொட்டு அவனுக்கு முடிந்த அளவுக்கு வசைவுகளை பரிசளித்தான். பின்னே இன்றைய மணப்பெண்ணான வித்யாவும் மொட்டுவும் சீனியர் ஜுனியர் என்றாக இருந்தாலும் அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பும் புரிதலும் இருந்தது. அதனால் இத்திருமணத்தை மொட்டு தவிர்க்கவே முடியாமல் போனது. மொட்டுவுக்கு மட்டுமில்லாமல் லவா குஷா அனு ஆகியோருக்கும் அவருடன் நல்ல புரிதல் இருந்தது.
நேரமாவதை தன்னுடைய கைக்கடிகாரத்தில் பார்த்த மொட்டு எதிரில் இருக்கும் குஷாவுடன் போக மனமில்லாமல் இருந்தாள். என்ன தான் அவள் தன்னுடைய அந்தச் செய்கையை தவறென்று ஒப்புக் கொண்டாளும் அவனுடைய அன்றைய அடியை மறந்திருந்தாலும் தன்னிடம் அதற்காக ஒரு கர்ட்டெஸிக்கு கூட அவன் மன்னிப்பை வேண்டவில்லை என்ற ஆதங்கம் அவளிடம் இருப்பது உண்மை.

உண்மையில் குஷாவும் அதே போலொரு தவிப்பில் தான் இருந்தான். எந்தச் சூழ்நிலையிலும் வன்முறையைக் கையாளக் கூடாதென்பது ஜானுவின் மற்றும் ரகுவின் கூற்று. அதையே தான் தங்கள் மகன்களுக்கும் அவர்கள் போதித்திருந்தார்கள். குஷாவும் ஒன்றும் முரடன் அல்ல. அன்றைய இரவு லவாவும் அனுவும் அவனின் அந்தச் செயலுக்காக அவனை வறுத்தெடுத்து விட்டார்கள் என்பது வேறு கதை! தான் செய்தது தவறு என்று தெரிந்தால் அதற்கு குஷாவும் மன்னிப்பு வேண்டிவிடுவான் தான். ஆனால் இந்த விஷயத்தில் அவனுடைய வாதமானது இரண்டு தான். முதலில், அவன் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று தீர்க்கமாக நம்புகிறான். இரண்டு, அன்று அந்த இடத்தில் மொட்டுவைத் தவிர வேறு யார் இருந்திருந்தாலும் அவன் அதைத் தான் செய்திருப்பதாக நம்பினான். ஆனால் அவனுடைய இரண்டாவது வாதம் உண்மையில்லை. ஒரு வேளை அந்த இடத்தில் அனு இருந்திருந்தால் நிச்சயம் அவன் அவளை அடித்திருக்க மாட்டான். அது போன்ற ஒரு செயலை அவனால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. தான் செய்தது தவறு என்று தெரிந்தாலும் அதற்காக அவளிடம் போய் மன்னிப்பு கேட்பதா என்ற ஈகோவும் அவனுள் எழுந்தது. அதுவும் போக அன்றைய நிகழ்வுக்குப் பிறகு அதுவரை வீட்டில் இருந்த ஒரு இலகுவான சூழல் மீண்டும் ஏற்படவேயில்லை என்பது தான் உண்மை. எல்லோருக்குள்ளும் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை யாரும் வெளிகாட்டிக்கொள்ள வில்லை.
இவ்வாறே இருவரும் இரு வேறு மனநிலையில் இருக்க முதலில் சுதாரித்த குஷா நேரமாவதை உணர்ந்து ஹாரனை அழுத்தினான். அந்தச் சப்தத்தில் நிகழ்வுக்கு வந்தவள் அவனை பார்வையால் மட்டுமே தீண்டிக் கொண்டிருந்தாள்.

"வா போலாம்..." என்று அழைக்க அவனுக்கு ஈகோ,

"போலாமா?" என்று கேட்க அவளுக்கு ஈகோ.

அதற்குள் மொட்டுவுக்கு இசையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

"கிளம்பியாச்சா?" என்று மறுபுறம் கேட்ட கேள்விக்கு,

"ஆம் வீட்டைப் பூட்டிட்டேன் கிளம்ப வேண்டியது..." என்று அவனுக்கும் கேட்கும் படி மொழிந்தாள்.

மொட்டுவை புடவை கட்டுமாறு சித்ரா வற்புறுத்த அக்கூட்டத்தில் தானோருத்தி மட்டும் புடவை கட்டப் பிடிக்காமல் அனு, இனி, இசை ஆகியோருக்கும் கம்பெனி தருவதற்காக சல்வார் தான் உடுத்தியிருந்தாள். பிறகு ஏதும் பேசாமல் மொட்டு குஷாவை நெருங்க அவனும் அவளை ஏற்றிச்செல்ல தயாராக இருந்தது.

**********

"ஏன் புஜ்ஜு அவங்க ரெண்டு பேரும் கிளம்பியிருப்பாங்க இல்ல?" என்று வழியில் செல்லும் போது லவா கேட்க,

"இந்நேரத்துக்கு கிளம்பியிருக்கனும்... ஆனா என்ன பண்றாங்கனு தெரியலையே?" என்றவள் இடைவெளி விட்டு,

"ஆனா ஒன்னு மட்டும் கன்பார்மா தெரியுது. நம்ம ரெண்டு பேருக்கும் இன்னைக்கு டன் கணக்குல சாபம் கொடுத்திருப்பாங்க... என்ன சரியா?" என்று அனு புருவம் உயர்த்த அதை சைட் மிர்ரர் வாயிலாகக் கண்டவன்,

"இதெல்லாம் தனியா வேற கேட்கணுமா? ஆனா அன்னைக்கு நடந்த இன்சிடென்ட் நம்ம வீட்ல இருக்குற எல்லோருடைய மனசையும் பாதிச்சிடுச்சு புஜ்ஜு... தாத்தாவுக்கும் அம்மாச்சிக்கும் முகமே இல்ல... அதுங்க ரெண்டு ராசியாகலனாகூடப் பரவாயில்ல அட்லீஸ்ட் அவங்க ரெண்டு பேரும் பழைய படி மாறுனாலே போதும்..." என்ற லவாவின் கவனமெல்லாம் அவர்கள் மீதே இருக்க அப்போது எதிரில் இருந்த வேகத்தடையைக் கவனிக்காமல் அதில் அவன் வண்டியை ஏற்றிவிட எதிர்பாரா இந்நிகழ்வால் அனு அவன் முதுகில் சாய்த்து அவனை இடிக்கவும் இதுவரை தனக்கு ஏற்பட்டிடாத ஒரு கூச்சம் லவாவை ஆட்கொண்டது. லவா அதற்கு நெளியவும்,

"டேய் பிராடு தெரிஞ்சே தானே நீ ஸ்பீட் பிரேக்கர்ல விட்ட... செம கேடிடா நீனு..." என்று அவனைச் சீண்டினாள் அனு.
அதை உடனடியாக மறுத்தவன்,"ஹே என்கூட பைக்ல அம்மாவையும் மொட்டுவையும் தவிர ஏறுன மூணாவது லேடினா அது நீ தான்..." என்று ஸ்பான்டேனியஸாக அதற்கு பதிலளித்தான்.

"ஹே லவா நிஜமாவா? வேற எந்தப் பொண்ணையும் நீ பைக்ல ஏத்துனதில்லையா?" என்ற அனுவுக்கு,

"இல்ல... குஷா கூட எங்க அப்பாவோட ஃப்ரண்ட் டாட்டர் சாதனாவை ரெண்டு மூணு தடவை கூட்டிட்டுப் போயிருக்கான்..." என்று வெள்ளேந்தியாக லவா உரைக்க,

"அப்போ அந்தப் பொண்ணு சாதனாவை உன்கூட பைக்ல கூட்டிட்டுப் போகணும்னு நீ ஆசைப்பட்டிருக்க... அது நடக்கலனதும் இப்போ என்ன வெச்சு உன் ஆசையை எல்லாம் நிறைவேத்திக்குற... பாத்தியா நான் அன்னைக்கு சொன்ன மாதிரி உனக்குள்ள இருக்குற சைக்கோ கொஞ்சம் கொஞ்சமா வெளிய எட்டிப்பார்க்குறான்... போச்சு சைக்கோ படத்துல எப்படி அவன் லிப்ட் கொடுக்குற பொண்ணுங்களை கடத்தி கொலை பண்றானோ நீயும்..." என்று அனு முடிப்பதற்குள் வண்டியை ஓரங்கட்டியிருந்தான் லவா.

"இதென்னடி வம்பா போச்சு? ஒரு ஸ்பீட் பிரேக்கர்ல வண்டியை ஏத்துனது குத்தமா? நீ நிறைய சினிமா பார்த்து கெட்டுப்போயிருக்க... இனிமே உன்னை சினிமாவுக்கு அனுப்ப கூடாதுனு மாமாகிட்டச் சொல்றேன் பாரு..." என்று அவன் சீரியசாக சொல்ல,

"ஏன் லவா எப்பயுமே நீ இப்படித்தானா? இல்ல என்கிட்ட மட்டும் இப்படி அம்மாஞ்சியா நடிக்கறியா?" என்றதும்,
"யாரு அம்மாஞ்சி? நான் அம்மாஞ்சி எல்லாம் இல்ல... நான்... நான்..." என்று லவா மேற்கொண்டு பேசாமல் நிறுத்தினான். பின்னே தன் வாயைப் பிடுங்கி மேலும் மேலும் தன்னை கலாய்க்க வேண்டி கண்டென்ட்டுக்காக தன்னைச் சீண்டுகிறாள் என்ற உண்மையே இப்போது தான் லவாவுக்குப் புரிந்தது.

"பாரு இனிமேல் போற வரைக்கும் நான் எதுவும் உன்கிட்ட வாய்க்கொடுக்க மாட்டேன் அதே மாதிரி நீயும் கேள்வி கேட்கக்கூடாது... ஓகே?" என்னும் வேளையில் தான் தூரத்தில் குஷாவும் மொட்டுவும் வருவதைப் பார்த்தவர்கள் ஷாக் ஆகி நின்றனர்.

ஆம் கண்களில் தீ ஜுவாலைகளுடன் குஷா வர அவனுக்குப் பின்னால் 'தில்' பட லைலா போல் திரும்பி அமர்ந்தபடியே வந்தாள் மொட்டு. ஏனோ அதைப் பார்த்த மாத்திரமே அனுவுக்குள் சிரிப்பு மூட்டப்பட குஷாவைப் போல் அல்லாமல் வெகு கேசுவலாய் 'ஹாய்' காட்டிக்கொண்டு மொட்டு திரும்பி அமர்ந்திருந்தாள்.

"என்ன லவா இதுங்க இப்படிப் போகுதுங்க?" என்ற அனுவுக்கு,

"அட்லீஸ்ட் இப்படியாவது போகுதுங்களே? அதுவரை எனக்கு நிம்மதி..." என்றான் லவா. ஆனால் அவன் கண்களும் ரகசியமாய் மொட்டுவுக்கு கேலி புன்னகை சிந்தியது.

அங்கே இவர்களின் வருகைக்காகக் காத்திருந்தவர்கள் முன்னால் வரும் குஷா மொட்டுவைக் கண்டு அவர்களுக்குள் நகைக்க பின்னாலே அனுவும் லவாவும் வந்தார்கள். இதைப் பார்த்த மற்றவர்களுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தர வைத்திக்கும் கனகாவிற்கும் ஏனோ இதில் சிறு ஆறுதல் தான் தந்தது. அதன் பின் குடும்பமாய் அந்தத் திருமணத்தை நடத்திக்கொடுத்து மதியம் போல் எல்லோரும் வீடு திரும்பியிருந்தனர். இம்முறை மொட்டு காரில் வர குஷாவோடு பாரி வந்தான். ஆனால் எவ்வளவோ மறுத்தும் லவாவை விட்டுப் பிரியாமல் அவனை கலாய்த்தபடியே வந்தாள் அனு.
இந்த நிகழ்வுக்குப் பிறகு ஏனோ பழையபடி அந்த வீட்டில் சிரிப்பும் உற்சாகமும் வலம் வந்தது. அதில் மற்றவர்களைக் காட்டிலும் மொட்டுவுக்கு தான் ஆச்சரியமாக இருந்தது. ஆம் அவளை அந்த வீட்டில் இறக்கிவிட்டதும் செல்ல முயன்றவளை அவனுடைய கணீர் குரல் தடுத்தது.

"பனித்துளி..." என்றதும் ஒரு கணம் கனவா நிஜமா என்ற குழப்பத்தில் உழன்றாள் மொட்டு. அவளை பனித்துளி என்று பெயர் சொல்லி அழைப்பவர்கள் வெகு சிலரே. ஆனால் அவளுக்கோ மொட்டுவைக் காட்டிலும் பனித்துளியில் தான் அதிகப்படியான இஷ்டம். பனித்துளி என்று அழைக்க வினோதமாக இருக்கும் காரணத்தால் யாரும் அவளை அவ்வாறு அழைக்க மாட்டார்கள். அவள் இன்னும் அந்த மயக்கத்தில் இருக்க,

"நான் அன்னைக்கு அப்படி நடத்திருக்கக் கூடாது. நான் அந்தச் சூழ்நிலையை இன்னும் இலகுவா ஹேண்டில் செஞ்சியிருக்கணும். ஐ ரிஃரெட் ஃபார் வாட் ஐ ஹாட் டன்... ஆனா அன்னைக்கு தப்பு என் மேல மட்டுமில்ல..." என்றவன் மேற்கொண்டு எதையும் பேசாமல் இறங்கிவிட்டான். 'மன்னிப்பு' என்ற வார்த்தையை கவனாகவே தவிர்த்தவன் அதற்கு பதிலாக தான் வருத்தமடைந்தாகச் சொன்னான். பொதுவா இது போன்ற வார்த்தை பிரயோகங்களை அரசியல் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் தான் உபயோகிப்பார்கள். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லையாம்!

"தப்பு என் மேலயும் தான் இருக்கு..." என்று மட்டும் மொட்டு உரைத்தாள். ஆனால் இந்த உரையாடலானது சரியாக அனு மற்றும் லவாவின் செவிகளிலும் விழ ஏனோ அதை தாங்கள் கேட்டுக்கொள்ளாததைப் போல் அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் மனம் அவ்வளவு நிம்மதியாக இருந்தது. இனி எல்லாம் சுகமே என்று அவர்கள் நினைத்திருக்க அவர்களைப் பார்த்து விதி பல்லிளித்தது. (நேரம் கைகூடும்...)

அடுத்த அத்தியாயத்தில் கண்டிப்பா பிளாஷ்பேக் முடிக்கிறேன் மக்கா... நானும் கொஞ்சம் பிஸி. வாரம் இரண்டு அத்தியாயம் கட்டாயம் கொடுக்கிறேன். மூன்றாவதை கொடுக்க முயற்சிக்கிறேன்... நன்றி??
 
supersuper... Avunka bike scene imagine pani paathu enakum siripu vandhutu
 
Writer ji unmaiya sollunga.aju unga lady version thana.pinna enna neenga patha movies ellam mothama vaichu pavam lava ah nalla pali vangaringale???..apram nangalum surya fan than?. analum Singam padatha kalaichutingale?.....vaithi thatha feelings puriyuthu.unga asaiya unga perens niraivethitanga.athum vegu sirappa..... shabaaaaa intha mottu kusha irukangale mudiyala.haha that migavum varunthugiren arikkai vidrathu?epdiyo ithuvaraikachum pesinangale romba santhosham.... super ?vidhi siripa paka nangalum waiting
 
ஹா ஹா இது நல்லா இருக்கே? ஒரு வேளை என் சப் கான்ஷியஸ்ல நான் பொண்ணா இருந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு நெனச்சு எழுதியதா இருக்குமோ?? நான் எதையும் இன்டென்சனாலா செய்யல? எஸ்... ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லையே அதான் இப்படி? நன்றி?
 
Rahu ivvalavu nallavarnaa Kusha kovam nyayam thaan,koodaa natpu kedil mudiyum_ Nandha oru example,ji...enna solreenga, annaiku Mottu thaana Lavava kenathukulla thalli vittaa, Thalaiku aduthu enakkum Surya pidikum, engapa Anu... Lavaku Anu thaan correct, Mottuva romba kindal panraan,
Kusha Mottu scene vanthaale excitement athihamahuthu,
Anu Lavava paathu semaya ketta po,unnaalathaan avan vaaya easyaa adaika mudiyum,Anu very interesting character,
Mottu Kusha bike scene_ ennala sirippa adakka mudiyala,
Ennathu Panithuliya....aha Kusha yetho plan pannitaan, enakku avan mela oru doubt irunthute irukku,nalla act pannuvaan polaye,yen..yen.. ippadi,konjam happy aathaan epi end pannaa enna,
Unga situation understand panraen
 
தில் பட லைலா மாதிரின்னு படிச்சதும் சத்தமா சிரிச்சுட்டேன்:LOL::LOL::LOL:பக்கத்துல இருந்த என் பிள்ளைங்க ரெண்டு பேரும் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க:p:p

நல்லாத்தான போய்க்கிட்டிருக்கு அதுக்குள்ள இப்ப எதுக்கு இந்த விதி பல்லிலிக்குது ??
 
ஆமா... அவனும் கிணற்றின் நுனியில் தான் நின்றிருந்தான். அதனாலே உடனே விழுந்துவிட்டான். எல்லோரும் எல்லோரையும் கிண்டல் பண்ண முடியாதே?? எனக்கு தனித்தனியா ரெண்டு pairர எழுதும் போதெல்லாம் குஷி ஆகுது??? என்ன டௌட் இருக்கு? இந்த மாதிரி இடத்துல கட் பண்ணிட்டு தொடரும் போட்டா தான் நீங்களும் பரபரப்பா இருப்பிங்க...? அதுக்குத்தான். நன்றி?
 
தில் பட லைலா மாதிரின்னு படிச்சதும் சத்தமா சிரிச்சுட்டேன்:LOL::LOL::LOL:பக்கத்துல இருந்த என் பிள்ளைங்க ரெண்டு பேரும் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க:p:p

நல்லாத்தான போய்க்கிட்டிருக்கு அதுக்குள்ள இப்ப எதுக்கு இந்த விதி பல்லிலிக்குது ??
அச்சச்சோ???... ஏன்னா கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தனுமில்ல? அதுக்குத்தான்... சொல்றேன் சிஸ்...
 
Epi super ???lava and mottu bonding as always ????anu ma lava pavam yen intha paadu paduthura ithellam nalla illa. Ha ha ?? mottu kusha bike scene semma nenaichu patha semma siripu??. Paniththuli niyavathu antha pera vachchu koopduruye?? oru vela adi manasula mottuva special a koopidanumnu aasai irunthurukumo??? enna twist a aduthu enna twist. Epi????
Mail pannen but reply mail varala so vera account create panniten?
 
Advertisement

Top