Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-20

Advertisement

praveenraj

Well-known member
Member
அடுத்த நாள் வழக்கமாகவே நகர அன்றைய இரவு உணவைத் தயார் செய்ய கனகா மற்றும் சித்ரா ஆயத்தமானார்கள். ஏனோ இன்றைய பொழுது பிள்ளைகளுக்கு பெரிய வேலைகளின்றி கடந்ததால் மாலையில் இருந்தே கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மேலும் இதம் சேர்க்கும் பொருட்டு பகல் முழுதும் பல்லிளித்த ஆதவனால் கூடியிருந்த வெக்கையை மாலை நேரத்தில் தன் குளிர் நீரால் தணித்தது கோடை கால மழை. காலையில் இருந்த சூழல் மாறி மிக ரம்மியமாய்க் காட்சியளிக்க பிள்ளைகளும் மழையை ரசித்தனர். அக்கூட்டத்தில் இருந்து நழுவி மெல்ல சமையலறைக்கு பூனை போல உள்ளே நுழைந்த அனுவை அவளைப் போலவே பின் தொடர்ந்தான் குஷா.
"பெரியம்மா வாட் ஸ்பெஷல் டுடே?" என்று கண்களைத் துளாவியவாறு சென்றவளுக்கு,
"சப்பாத்தி டால்... பிடிக்கும் தானே?" என்று பதிலளித்தார் சித்ரா.
"இதெல்லாம் நீங்க தனியா வேற கேக்கணுமா அத்த? பட் ஆயிரம் இருந்தாலும் அனு கிட்ட எனக்குப் பிடிச்சதே இந்த ஒரு குணம் தான். அவளுக்கு சாப்பிட இது தான் இருக்கனும் அது தான் இருக்கனும்னெல்லாம் எந்த நிர்பந்தமும் இல்ல. சாப்பிட ஏதாவது இருக்கனும். அவ்வளவு தான். என்ன பூசணிக்கா சரியா?" என்று பதிலளித்தவாறு வந்தான் குஷா.
"சாப்பிடுற விஷயத்துல நமக்கெல்லாம் நோ சூடு நோ சொரணை..." என்றவள் அந்த சமையலறை திட்டின் மேல் ஏறி அமர்ந்தாள்.
வேண்டுமென்றே இடமில்லாததைப் போல் அவளை இடித்தபடியே அமர்ந்த குஷாவிடம் முகத்தைக் காட்டியவள்,
"எப்படித்தான் அண்ணனும் தம்பியும் இப்படி இரு துருவங்களா இருக்கீங்களா? அவன் என்னடானா சும்மா கை பட்டாலே அப்படி நெளியறான்... ஆனா இதுக்காகவே அத்தைக்கும் மாமாக்கும் நோபல் கொடுக்கலாம்..." என்று லவாவையும் குஷாவையும் மனதில் ஒப்பிட்டவாறு பதிலளித்தாள் அனு.
"ட்வின்ஸ்னா ஒரே மாதிரி தான் இருக்கணும்னு யார் சொன்னா? இங்க பெரும் பாலானவர்களுக்கு ஜீன்ஸ் படத்துல காட்டுன பிரசாந்த் மாதிரி தான் ட்வின்ஸ் இருப்பாங்கன்னு நினைக்கறாங்க... யு நோ வாட் அதே படத்துல வர நாசரும் ட்வின்ஸ் தான். எங்களுக்குள்ளும் எக்கசக்க முரண்கள் இருக்கு மா... அவன் கொஞ்சம் அமைதி ஷை டைப் நான் அப்படி இல்ல... எனக்கு வேணுங்கறதை நான் அப்படியே கேட்டு வாங்கிப்பேன்... என்ன அம்மாச்சி நான் சொல்றது சரிதானே?" என்ற குஷாவுக்கு,
"கரெக்ட் கரெக்ட் நீ அப்படியே உன் அம்மா ஜானகி மாதிரி. மனசுல பட்டதை வெளிப்படையாப் பேசிடுவ... அது போக உனக்கு அவளை மாதிரியே கோவமும் சுள்ளுனு வந்திடுது... ஆனா லவா அப்படியே உங்க அப்பா மாதிரி. எதிலும் பொறுமை நிதானம்..." என்ற கனகா சமையலில் தீவிரமாக இருக்க,
"பாரேன் எங்களைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சி வெச்சிருக்கையே அம்மாச்சி... அம்மாச்சினா அம்மாச்சி தான்..." என்று எழுந்தவன் அவர் கன்னத்தில் முத்தம் வைத்து கட்டிக்கொள்ள அப்போது பார்த்து அங்கே வந்த வைத்தி இவர்களின் உரையாடல்களைக் கேட்டு,
"டேய் யாருடா அவன் என் பொஞ்சாதியை முத்தம் வெக்குறது... வந்தேன்னா பாரு பிச்சிபுடுவேன்..." என்று சொல்லி பொய்க் கோபத்துடன் உள்ள வர,
"நான் தான் கொடுத்தேன். முத்தம் மட்டுமா என்ன நாங்க டூயட்டும் ஆடுவோம்... வா அம்மாச்சி நாம டேன்ஸ் ஆடலாம்..." என்று அவருடைய கைகளைப் பிடித்து ஸ்டெப்ஸ் போட்டான் குஷா. ஏனோ அப்போது மற்றவர்கள் அனைவரும் உள்ளே வந்து இதைக் கண்டு ஆரவாரமிட அந்த இடமே சிறிது நேரம் சிரிப்பலைகளில் நிறைந்திருந்தது.
"எப்படி அம்மாச்சி நீ இவரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச?" என்று குஷா அவர்களின் கடந்தகால கதைகளைக் கேட்க எண்ணி அதற்கு தூபம் போட்டான்.
"நான் எங்க சம்மதிச்சேன்? என் ஐயா வந்து உனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு... அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம்னு சொல்லிட்டார். பொறவு என்ன அடுத்த ஒரு வாரத்துல கல்யாணம் ஆகிடுச்சு..." என்று அவர் உரைக்க,
"அச்சச்சோ என்ன அப்பத்தா சொல்ற? அப்போ உன்னை இவர் பொண்ணு பார்க்க வந்து கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல சீன் எல்லாம் நடக்கலயா?" என்ற அனுவுக்கு,
"எந்த காலத்துல டி நீ இருக்க அது எல்லாம் நம்ம அப்பா அம்மா காலம். இது அதுக்கும் முன்னாடி... 'நான் பார்த்த பெண்ணை... நீ பார்க்கவில்லை... நீ பார்த்த பெண்ணை... நான் பார்க்கவில்லை...' என்ன தாத்தா சரியா?" என்றான் குஷா.
"ஓகே லெட்ஸ் ஹேவ் எ ஸ்மால் டெமோ... நீங்க ரெண்டு பேரும் முதன் முதலா நேர்ல சந்திச்சதை இப்போ நடிச்சு காட்டுங்க..." என்றான் குஷா.
"நான் கல்யாணத்துல தான் இவளைப் பார்த்தேன்..." என்று சொன்ன வைத்தியிடம்,
"அது எப்படி தாத்தா, பொண்ணு யாரு எப்படி இருப்பாங்கன்னு ஏதும் தெரியாம உன்னால கல்யாண மேடை வரை இருக்க முடிந்தது?" என்றான் லவா. ஏனோ அவனுக்கு பதில் அளிக்காமல் வெறும் புன்னகையை மட்டும்பி உதிர்த்தார் வைத்தி.
"அப்படி கல்யாணம் பண்ண நீங்க ஐம்பத்தி அஞ்சு வருஷம் எப்படி தாத்தா ஒன்னா இருக்க முடிஞ்சது? இப்போல்லாம் ஒரு வருஷத்தைக் கடக்க முடியாமலே பல கல்யாணம் தடுமாறுது..." என்றாள் மொட்டு.
"நீங்களாம் எதுக்கெடுத்தாலும் அவசரப்படுறீங்க. ஒரு மொட்டு பூவா உதிர்க்கவே ஒரு ராத்திரி தேவைப்படுது... இதுல எப்படி வாழ்க்கையில எல்லாமே சீக்கிரம் நடக்கும் சொல்லுங்க? இந்தத் தலைமுறைக்கு காத்திருப்பதனுடைய சுகமே தெரியாம போச்சு... எங்க நீங்களே இங்க வந்து லாக் டௌன் போட்டாச்சுனதும் ஐயோ இங்க எப்படி நாங்க இருப்போம்னு குதிச்சவங்க தானே? இப்போ இந்த பதினெட்டு நாள் முடிஞ்சு பத்தொன்பதாவது நாளும் முடியப்போகுது... உங்களுக்கெல்லாம் நான் ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ல ஆசைப்படுறேன். வாழ்க்கையில பொறுமை ரொம்ப முக்கியம். எதையுமே யோசிக்காம எடுத்த சில முடிவுகளால இப்போ எவ்வளவு சிரமம் இருக்கு பாத்திங்களா?" என்று இறுதியாய் வைத்தி முடிக்கும் போது அவர் எதைப் பற்றிச் சொல்ல வருகிறார் என்று அங்கிருந்த எல்லோர்க்கும் அது நன்றாகவே புரிந்தது.
"எனக்கு ஒரே ஒரு ஆசை தான்யா... நான் கண்ணை மூடுறப்ப இந்த வீட்ல என் சொந்தம் எல்லோரும் என்னைச் சூழ்ந்திருக்கனும்..." என்று அவர் உணர்ச்சிவசப் பட்டுவிட ஏனோ எல்லோருக்கும் ஒரு வித்தியாசமான உணர்வு வந்து சென்றது மட்டும் நிச்சயம். ஏனோ அச்சொல் குஷாவிற்கும் உயிரின் ஆழம் வரை சென்றது தான். ஆனால் அடுத்த கணமே அவரைக் கட்டித் தழுவும் மொட்டுவைக் கண்டவனுக்கு,'இந்த வீட்ல ஒரு வேளை சாப்பாடு சாப்பிடுறதுக்கே கணக்கு பார்க்கும் போது நீங்க நெனைச்சதெல்லாம் அவ்வளவு சுலபமா நடக்காது தாத்தா. ஏன்னா இந்த வீட்டு வாசலை நான் இனிமேல் தொடவே கூடாதுனு இருக்கேன் தாத்தா... சாரி' என்று மனதில் நினைத்து அங்கிருந்து நகர்ந்தான்.
*********
இதோ அதோ என்று அந்த நாளும் வந்துவிட்டது. இன்று லவா குஷா இருவரின் பிறந்தநாள். அதே போல் முழு லாக் டௌன் இன்றுடன் முடிகிறது. இதற்கு பிறகு தளர்வுகள் பல அறிவிக்கப்பட்டுள்ளதால் லவா குஷா இருவரையும் நாளை தங்கள் பணியில் சேர்ந்தாக வேண்டும் என்று அழைக்கப்பட்டிருந்தனர். லவா குஷா இருவருக்கும் சர்ப்ரைஸ் செய்ய வேண்டி மொட்டு மற்றும் அனு ஆகியோர் யூ டியூபில் பார்த்து கேக் ஒன்றை செய்திருந்தனர். பின்னே கேக் ஷாப் அனைத்தும் மூடப்பட்டு விட்டதே!
நல்ல வேளையாக பிள்ளைகள் எல்லோருக்கும் புத்தாடை எடுத்து வைத்திருந்ததால் (இங்கே ஊருக்கு வந்தால் எல்லோருக்கும் புது துணி பணம் முதலியவை தான் எப்போதும் கிடைக்குமே!) அதை அணிந்து வந்தவர்கள் வைத்தி- கனகா ஆகியோரிடம் ஆசீர்வாதம் பெற முன்பே அவர்களுக்கென்று வாங்கியிருந்த இரண்டு செயின்களை அணிவித்தனர்.
"இதெல்லாம் எதுக்கு அம்மாச்சி?" என்ற லவாவுக்கு,
"இது இப்ப எடுத்ததில்லை கண்ணுங்களா... அனு, மொட்டு, இசை எல்லோரும் பொண்ணா போனதால அவங்கவங்க சடங்குக்கு நாங்க இதெல்லாம் செஞ்சிட்டோம். ஜானகிக்கு தான் நீங்க ரெண்டு பேரும் பசங்களா போயிட்டீங்க. உங்களுக்கு நாங்க எதுவும் செய்யல. உங்க கல்யாணத்துல செய்யலாம்னு இருந்தோம். இப்போ தான் வந்திருக்கீங்களே அதான்..." என்றார். ஏனோ குஷாவிற்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை என்றாலும் அவர்களை நோகடிக்க விரும்பாமல் அதைப் பெற்றுக்கொள்ள பிறகு அவர்கள் கேக் வெட்டி கொண்டாட வழக்கம் போல அனு குஷாவுடனும் மொட்டு லவாவுடனும் கதையளக்க இன்று மதியமே இங்கிருந்து புறப்படவும் அவர்கள் தயாராகி இருந்தார்கள். என்ன தான் இன்றிரவு வரை ஊரடங்கு இருந்தாலும் நாளை பணியில் சேரவேண்டும் என்பதால் வழியில் கேள்விகேட்கும் பட்சத்தில் இதைச் சொல்லிச் சமாளிக்கலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள். பின்னே இன்று சீர்காழி சென்று காலையில் சென்னைக்குக் சென்றுவிட்டால் அங்கிருந்து லவா ஹைதராபாத் சென்று விட முடிவு செய்தனர்.
ஏனோ அவர்கள் புறப்படுகிறார்கள் என்றதும் பிள்ளைகளின் முகம் வாடியது. இருந்தும் எல்லோரலும் இங்கேயே தங்க முடியாதே? லவா குஷா இருவரும் மேலே செல்ல ஏனோ போகும் போதே குஷா அந்த செயினை கழட்டி விட்டு தன்னுடைய உடமைகளை அடுக்கிக்கொண்டிருந்தான். அவன் செயலில் ஒரு உச்சகட்ட பரபரப்பு இருக்க ஏனோ அவனுக்கு அணிவிக்கப்பட்ட அந்த செயினை மேஜையின் மீது கண்டவன்,
"என்ன குஷா இதை இங்க வெச்சிட்ட? ஏன் கழுட்டுன? எனக்கு ஒன்னும் உறுத்தலையே..." என்ற லவாவிற்கு,
"ஆனா எனக்கு பயங்கரமா உறுத்துது... அது போக இத போட எனக்கு துளியும் விருப்பமில்லை. அம்மாச்சி போட்டுவிடும் போது மூஞ்சில அடிச்ச மாதிரி வேண்டாம்னு எனக்குச் சொல்லத் தோணல... அதே நேரம் இதை இனிமேல் போடவும் என் மனசாட்சி இடம் கொடுக்கல..." என்று குஷா சொன்னதில் தான் அவன் சொன்ன உறுத்தல் என்பது உடலில் இல்லை என்றும் மனதில் இருக்கிறதென்றும் புரிந்துகொண்ட லவா,
"இன்னுமா நீ மனசு மாறல... அப்பாகும் தாத்தாவுக்கும் சண்டைனா அது அவங்களோட போச்சு... இதை நாம ஏன் தாத்தா கிட்டக் காட்டணும்? அவர் அப்படியா நம்மை நடத்தினார்?" என்ற லவாவுக்கு ஒரு வித்தியாசமான பார்வையைப் பரிசளித்தான் குஷா. அவன் பார்வையில் கோவத்தைக் கடந்தும் ஒரு எள்ளல் இருக்க,
"இப்போ எதுக்கு இப்படிப் பாக்குற குஷா? நான் ஏற்கனவே சொல்லிட்டேன் இது நமக்கு சொந்த இடமில்ல. நாம இங்க வெறும் கெஸ்ட். இந்த இருபது நாள்ல யாராச்சும் நம்மை விருந்தாளி மாதிரியா நடத்துனாங்க? நம்மையும் இந்த வீட்ல இருக்குற ஒருத்தர் மாதிரி தானே நடத்துனாங்க. ஏன் மாமா அத்தை கூட நம்ம கிட்ட ஒழுங்கா தானே பேசுனாக பழகுனாங்க?"
"நான் அவங்க மேல எந்தக் குறையும் சொல்லலயே?"
"அப்பறோம் எதுக்கு இந்த செயினை போட மாட்டேங்குற?"
"ஏற்கனவே ஓசியில சாப்பிட்டோம்னு பேச்சு வந்திடுச்சு... இன்னைக்கு தங்கம் விக்கிற விலைக்கு இதை வேற எடுத்துட்டுப் போயிட்டோம்னு பேரு வரணுமா என்ன?" என்று போகிற போக்கில் உரைத்தவன்,
"லவா பணம் வெச்சி இருக்கல்ல? வண்டிக்கு பெட்ரோல் போடணும். என்கிட்ட கேஷ் இல்ல கார்ட் தான் இருக்கு... இங்க கார்ட் வாங்குவாங்களானு தெரியல..." என்று அவன் உரைக்க,
"ஏன் என்னாச்சு நான் தானே அன்னைக்கு உன் வேலட்ல காசு வெச்சேன்?"
"அது செலவாக்கிடுச்சி..."
"பத்தாயிரத்துக்கு அப்படி என்ன செலவு?"
"பத்து இல்ல ப்ரதர் பனிரெண்டாயிரம்..."
"அப்படி என்ன டா செலவு?"
"இப்போ என்னடா தெரியணும் உனக்கு? இந்த வீட்ல எந்த மூஞ்சியை வெச்சிட்டு சாப்பிடுறிங்கனு ஒருத்தி கேள்விகேட்டா... இந்த வாட்டி நாம ஒன்னும் சும்மா சாப்பிடல தங்கவுமில்ல... தங்குனதுக்கும் சாப்பிடத்துக்கும் பணமும் கொடுத்தாச்சு நான் இங்க வேலையும் செஞ்சாச்சு... இனிமேல் இங்க வரதா இருந்தா தங்கலாம் கூடாது. வந்தோமா அம்மாச்சியைப் பார்த்தோமானு கெளம்பனும்... இல்ல இதையும் மீறி நீ வருவேன்னா நீ மட்டும் வந்து தங்கு..." என்றவன் தன்னுடைய உடமைகளை எடுத்து வைக்க,
"நீ யாரைச் சொல்ற குஷா? யார் அப்படிக் கேட்டது?" என்று லவா நிறுத்த,
"அதான் இந்த வீட்டு மகாராணி ஒருத்தங்க இருக்காங்களே?" என்று நக்கலாய்ச் சொல்ல,
"நீ மொட்டுவையாச் சொல்ற? இருக்காது... வாய்ப்பே இல்ல..." என்று லவா முடிக்கும் முன்னே,
"இதுக்குத் தான் நான் உண்கிட்டச் சொல்லல... நீ நம்ப மாட்ட. ஓகே எனக்கு அது அவசியமில்லை. ஆனா என்கிட்ட இப்போ பணமில்லை இந்தாப் பாரு..." என்று தன்னுடைய வேலெடை அவனிடம் தூக்கி வீசினான்.
"உண்மையிலே மொட்டு உன்கிட்ட பணம் வாங்குனாளா?" என்று இன்னும் நம்பாமல் லவா வினவ அப்போது தான் அவர்களுக்கென்று செய்த பதார்த்தங்களை எடுத்துக்கொண்டு அந்த அறை வாயிலில் வந்த மொட்டு அதைத் தவறவிட அவளுக்குப் பின்னாலே வந்த அனு, மணவாளன், பாரி மூவரும் இதைக் கேட்டு உறைந்து நின்றனர்.
பாத்திரம் கீழே விழுந்த சப்தத்தில் லவா குஷா இருவரும் வாயிலைப் பார்க்க,
"நம்பலைன்னா நீயே கேட்டுக்கோ... அதுக்கு அவ தம்பி தான் சாட்சி. ஒருவேளை அவங்க இதை மறுத்தா நான் ஒன்னும் பண்ண முடியாது... அண்ட் டைம் ஆச்சு ஈவினிங்க்குள்ள அப்பா வரச்சொன்னார்..." என்று சொல்லி குஷா அவனுடைய வேலையில் மூழ்க இப்போது அனு, பாரி, லவா மூவரும் மொட்டு மற்றும் மணவாளனைக் கேள்வியுடன் நோக்கினார்கள்.
மொட்டுவும் மணவாளனும் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் தவிக்க அவர்களின் தவிப்பை வைத்தே என்னவோ சரியில்லை என்று புரிந்துகொண்ட அனு மணவாளனை அருகே அழைத்து கைநீட்டி எச்சரிக்க,
"நான் வேண்டாம்னு தான் சொன்னேன் அக்கா தான்..." என்று முடிக்கும் முன்னே அனுவின் கரம் அவன் கன்னத்தில் பதிந்திருந்தது. ஏனோ அதை பாரியும் தடுக்க முன் வரவில்லை. மணவாளனுக்கு விழுந்த அறையிலே அனுவின் கோபத்தை மொட்டுவும் புரிந்துகொண்டு தவிக்க ஏனோ மொட்டுவின் செய்கையே நடந்தது உண்மை என்று லவாவுக்கு உணர்த்த மேற்கொண்டு ஏதும் பேசப் பிடிக்காமல் லவா அங்கிருந்து செல்லு மொட்டு தான் அவனது இந்த பாராமுகத்தைப் பார்க்க முடியாமல் தவித்தாள்.
எதுவெல்லாம் நடந்து விடக்கூடாது என்று எண்ணி மொட்டு பயந்தாளோ அதுவே நடந்தும் விட்டது. அவளோ தவிக்க இப்போது லவா ஏதும் பேசாமல் குஷாவுடன் இணைந்து தன் உடமைகளை எடுத்து வைத்து புறப்படத் தயாராக சுதாரித்தவர்கள் அவர்களிடம் சென்று சமாதானப் படுத்த முயன்றனர்.
"லவா ப்ளீஸ் அவளுக்காக நாங்க எல்லோரும் மன்னிப்பு கேக்குறோம். ப்ளீஸ் கோவிச்சிக்கிட்டு மட்டும் இங்கேயிருந்து போக வேண்டாம். ஏற்கனவே குடும்பம் அவ்வளவு இணக்கமாலாம் இல்ல..." என்று அனு அவர்களிடம் பேச அங்கே குஷாவுடன் பாரியும் மணவாளனும் பேசினார்கள்.
"என்னைக்குமே நாங்க இந்தக் குடும்பத்துக்கு வேண்டாதவங்க தானே? எனக்கொன்னும் இது புதுசு இல்ல... இவனுக்கு தான் இது புதுசு..." என்ற குஷா அங்கிருந்து நகர் ஏனோ மனமுடைந்த லவாவும் அவனுடைய கழுத்துச் சங்கிலியை எடுத்து அங்கே வைத்துவிட்டு புறப்பட ஆயத்தமானர்கள்.
"அதுக்கேன் செயின் எல்லாம் கழட்டி வெக்குறிங்க டா... டேய் நீங்க பண்றதைப் பார்க்கவே எனக்கு பயமா இருக்கு..." என்று அனு மன்றாட,
"உரிமை இல்லாத இடத்துல இருந்து எதையுமே எடுத்துட்டுப் போகக்கூடாது அனு. அது நாளைக்கு எங்களுக்கு திருட்டுப் பட்டம் கூட ஏற்படுத்திக் கொடுக்கும்..." என்று குஷா சொன்ன வார்த்தையில் ஏனோ எல்லோருக்கும் இதயத்தில் குருதி வழியுமளவுக்கு ரணம் கொடுத்தது.
"ப்ளீஸ் டா இப்படியெல்லாம் பேசி எங்களை அந்நியப்படுத்தாத குஷா..." என்பதற்குள் லவா இருவருடைய உடமைகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட குஷாவும் அவனைப் பின் தொடர்ந்தான்.
"இப்போ ஹேப்பியாடி உனக்கு? பர்த் டே அதுவுமா அவங்களை இப்படிப் பண்ணிட்டயே? இது தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் தெரிஞ்சா என்ன ஆகும்? அவங்க பேசுனதைக் கேட்ட தானே?" என்ற அனு கீழே செல்ல ஏனோ விளையாட்டாய் அன்று சொன்ன வார்த்தை இப்படி விஸ்வரூபம் எடுக்கும் என்று அவள் மட்டும் என்ன கனவாக் கண்டாள்? இப்போது அவளுக்கு இருக்கும் இந்த சொற்ப நேரத்தில் எப்படியாவது லவாவை சமாதானம் செய்ய வேண்டி விரைந்தாள்.
கீழே சென்ற லவா குஷா இருவரின் முகத்தை வைத்தே எதுவோ சரியில்லை என்றுணர்ந்த வைத்தி என்னவென்று விசாரிக்க அவர்கள் பதிலளிக்கும் முன்னே அங்கிருந்த மெல்லினி,
"அது ஒன்னுமில்ல தாத்தா இவ்வளவு நாளா ரெண்டு அண்ணாவும் ஜாலியா இருந்தாங்க இல்ல? இப்போ பழையபடி ரொட்டின் லைஃப் ஆரமிச்சிடுச்சில்ல? அந்தக் கவலையா தான் இருக்கும். என்ன அண்ணாஸ் நான் சொல்றது சரிதானே?" என்று கேக்க குஷா பொய்யாக ஒரு புன்னகை சிந்தினான்.
"எப்படி?" என்று இனி மெச்சுதலாக வைத்தியைப் பார்க்க,
"அதுக்கென்னயா பண்ண முடியும்? அவங்கவங்க ஜோலியும் முக்கியமில்ல?"
என்று சொல்ல அப்போது தான் அனு, மொட்டு, பாரி, மணவாளன் ஆகியோர் கீழே வந்தனர்.
"சரியா வாங்க வந்து சாப்பிட்டுப் போங்க..." என்று கனகா அழைக்க,
"இல்ல அம்மாச்சி பசியில்லை... எப்படியும் மூணு மணிநேரத்துக்குள்ள வீட்டுக்குப் போயிடுவோம்... அது போக அம்மாவும் அப்பாவும் எங்களுக்காக வெய்ட் பண்ணுவாங்க..." என்று லவா சொல்ல ஏனோ இது மொட்டுவுக்கு அதிர்ச்சியளித்தது. பொதுவாக இது போல் சாக்கு போக்கு எல்லாம் குஷாவின் வாயிலிருந்து தான் வருமே ஒழிய லவா இவ்வாறு நடந்துகொள்ள மாட்டான்.
அவர்களும் காலை உணவை தாமதமாகவே உண்ட காரணத்தால் அவர்களை மேற்கொண்டு வற்புறுத்தாமல் அவர்களுக்கு தேவையான உணவை பார்சல் செய்து கொடுக்க அதுபோக வழக்கமாக ஊருக்கு வந்து செல்லும் பொழுதெல்லாம் இங்கிருந்து கொடுத்தனுப்பும் விளை பொருட்களை வண்டியில் நிரப்பினார்கள். ஏனோ இவற்றை மறுக்க முடியாமல் இருவரும் திருதிருவென்று விழித்தனர்.
அந்த இடைவெளியில் லவாவுடன் பேசி புரியவைக்கும் பொருட்டு மொட்டுவும் அனுவும் கீழே வர அவர்களின் எண்ணம் புரிந்து சகோதரர்கள் ஒட்டாமல் விலக வேறு வழியின்றி லவாவை மொட்டுவும் குஷாவை அனுவும் தனியே அழைத்துச் செல்ல பெரியவர்கள் ஒருவரை ஒருவர் அர்த்தமாகப் பார்த்தனர்.
சபையில் மறுத்துப்பேச முடியாமல் அவர்களுடன் சென்றனர்.
"லவா, நான் சொல்றதைக் கொஞ்சம் ப்ளீஸ் பொறுமையாக் கேளு... எனக்கும் குஷாவுக்கும் அடிக்கடி இதுபோல வாக்குவாதம் வரும். ஆமா எனக்கு உன் அம்மா அப்பா மேல கோவமும் வருத்தமும் இருக்கு. தாத்தா இத்தனை வருஷமா உங்க குடும்பத்துக்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருக்காரு. இதனால அவர் எத்தனை நாள் தூக்கமில்லாம தவிச்சிருக்காரு தெரியுமா? ஆமா இந்தச் சண்டைக்கு நானும் ஒருவகையில் காரணம் தான். ஆனா நான் எதையும் தெரிஞ்சு செய்யல... அந்த வயசுல ஏதோ தப்பு பண்ணிட்டேன். நான் தெரியாம செஞ்சதுக்கு உன் அப்பா தெரிஞ்சு ஒவ்வொரு விஷேஷத்துலையும் வராம தவிர்க்கிறது நியாயமா? உங்க அப்பாவும் இறங்கி வரமாட்டேங்குறார்... தாத்தாவா இறங்கிப்போனாலும் பேச மாட்டேங்குறார். சரி உன் அம்மாவாச்சும் இதுக்கு ஏதாவது முயற்சி எடுத்தாங்களா? உங்களுக்கென்ன வருஷத்துக்கு பத்து நாளோ ஒரு மாசமோ வந்து தலையைக் காட்டிட்டுப் போயிடுறீங்க... ஆனா இங்க கிடந்து அவர் தவிக்கிறது உங்களுக்கு எல்லாம் தெரியுமா? அவம் மனசுடைஞ்சு கவலை பட்டு தவிக்கிறதை நீங்க யாராச்சும் பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன். எனக்கு இந்த உலகத்திலையே ரொம்பவும் பிடிச்ச ஆளுனா அது நம்ம தாத்தா தான். அதான் அவரோட இந்த வலியை இந்த வருஷமாச்சும் நீக்க முடிவு செஞ்சு எல்லோரையும் கூப்பிடும் சாக்குல உங்க அப்பாவையும் இங்க கூப்பிட்டு எப்படியாவது அவரை தாத்தாகிட்டப் பேச வைக்க நானும் மனோவும் பிளான் செஞ்சோம். ஆனா நடந்தது என்ன? அன்னைக்கு எல்லோரும் இருந்தும் உங்க அம்மா இல்லாததால் தான் அவர் மயக்கம் போட்டிருப்பார். அதான் உன் தம்பிக்கும் எனக்கும் சண்டை வரும். அவன் உங்க அப்பாவை ரொம்ப நல்லவர்னு சொன்னான்..."
"அதுல என்ன தப்பு? ஏ எங்க அப்பா ரொம்ப நல்லவர்..." என்று லவாவும் அவருக்கு பரிந்துபேச ஏனோ வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு,"அவ்வளவு நல்லவர் ஏன் தாத்தாவை மன்னிக்க முன்வரல? சரிப்பா தப்பு தாத்தாவே செஞ்சி இருக்கட்டும். அதுக்காக இப்படி இருபத்தி அஞ்சு வருசமாவா தண்டிக்கிறது? நீயே சொல்லு நம்ம தாத்தா என்ன அவ்வளவு கெட்டவரா? அதான் அன்னைக்கு அப்படியே பேச்சு மாறி எங்கெங்கோ போயிடுச்சு. தப்பு தான். நான் சொன்ன வார்த்தை ரொம்ப தப்பு தான். நான் மன்னிப்பும் கேட்டேன். ஆனா அவன் அன்னைக்கு முழுக்க சாப்பிடவே இல்ல... எனக்கு அன்னைக்கின சூழ்நிலைக்கு அவனை எப்படியாவது சாப்பிட வைக்கணும் தான் தோணுச்சு. அதான் எனக்கு வேற வழி தோணல..."
"ஏன் என்கிட்டச் சொல்லியிருக்கலாம் தானே? நான் என்ன செத்தாப் போயிட்டேன்?" என்று லவா கேட்டதில் தான் அதற்கு அப்படியொரு மாற்று வழி இருந்தது என்றே மொட்டுவுக்குப் புரிந்தது. அவள் ஏதும் பேசாது இருக்க,
"சொல்லு... அதுபோக பெரியவங்க பிரச்சனை பெரியவங்களோட போகட்டும். நீங்க எதுக்கு இதை வெச்சு சண்டை போட்டீங்க? எதையெதையோ என்கிட்டச் சொல்லத் தெரிஞ்ச உனக்கு உங்களுக்குள்ள இருக்குற இந்தப் பிரச்னையைப் பற்றி என்கிட்டச் சொல்லத் தோணல தானே? நான் இதை எதிர்பார்க்கல மொட்டு. பணம் ஒரு பொருட்டு இல்ல... ஆனா நீ எங்களை உங்கள்ல ஒருத்தனா நினைக்கல தானே? தெரியாதவங்க வீட்லயோ பேயிங் கெஸ்ட்டா தங்கலாம்... ஆனா இங்க? இப்போ வரை இதை என் சொந்த வீடா தான் நெனச்சேன்... ஆனா இப்போ... எப்படியிருக்கு தெரியுமா?" என்றவனின் குரல் இயலாமையையே பிரதிபலித்தது.
"இந்த வீட்ல என்னைக்குமே எங்களை ஒரு வேண்டாத விருந்தாளியா தான் நீங்க நடத்துவீங்கன்னு அவன் அடிக்கடி சொல்லுவான். நான் அதை எத்தனை முறை மறுத்திருக்கேன் தெரியுமா?" என்றவனின் வார்த்தை ஏனோ மொட்டுவிற்கு அழுகையையே வரவழைத்தது.
"ஓகே நம்ம வீடுங்கற உரிமையில வந்தோம். கெஸ்ட்டா போயிடுறோம். இனி தெரியாம கூட இங்க வரமாட்டோம்... தேங்க்ஸ்..." என்றவன் அங்கிருந்து நகர ஏனோ அவன் கரம் பிடித்த அவள் கரத்தை ஒதுக்கி விட்டுச் சென்றான் லவா.
அங்கே குஷாவுடன் பேசச் சென்ற அனு,
"குஷா அவ பண்ணதுக்கு நான் மன்னிப்பு கேக்குறேன்... ப்ளீஸ் எங்களை மன்னிச்சுடு குஷா. ஏற்கனவே அத்தையும் மாமாவும் இந்தக் குடும்பத்துல ஒன்றுவதில்லைனு அப்பா அடிக்கடி சொல்லி ஃபீல் பண்ணுவார். பெரியவங்க தான் அப்படி இருக்காங்கனா நாம எப்பயும் போல இருக்கலாம் குஷா..." என்ற அனுவுக்கு,
"அன்னைக்கு சொன்னதைத் தான் இப்பயும் சொல்றேன். இந்தக் குடும்பத்துக்கு நாங்கன்னா என்னைக்குமே ஒரு கிள்ளு கீரை தான். என்ன ஒன்னு எனக்கு இது எப்பயோ புரிஞ்சிடுச்சி... பாவம் அவன் ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தான். சரி இனிமேலாச்சும் எல்லாம் அவன் தெரிஞ்சிகட்டும்..."
"இதைப் பற்றி நீயாச்சும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே குஷா?" என்று ஆதங்கப்பட்டவளுக்கு கண்ணீர் சுரந்தது. அதை தன் விரல்களால் துடைத்தவன்,
"சில உரிமைகளைக் கேட்டு வாங்கலாம்... சிலதை போராடி தான் வாங்கனும்... ஆனா சிலது அடிப்படையிலே கிடைக்கணும்... அதைக் கேட்டு வாங்குனா ரொம்ப அசிங்கம்... அதை நான் செய்ய விரும்பல... நீ ஏன் டி அழற? எனக்கு உன்மேல எந்தக் கோவமும் வருத்தமும் இல்ல... இன் பேக்ட் இப்போ யோசிச்சா யாருமேலையும் எந்தக் கோவமும் இல்ல... சரி எப்பயும்நீயாவே தானே என்கிட்ட ஜோக் சொல்லுவ? இப்போ நான் கேக்குறேன் சட்டுனு ஒரு ஜோக் சொல்லு நான் கிளம்பறேன்..." என்ற பொழுது அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள் அனு. பிறகு அவன் காரில் ஏற அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த வேளையில் லவாவும் வந்துவிட இங்கு வரும் போது இருந்த உற்சாகத்தில் ஒரு விகிதம் கூட இல்லாமல் பயணப்பட்டனர். (நேரம் கைகூடும்...)
எல்லாம் இந்த அம்பானியால வந்தது மக்களே! ரெண்டு நாளா ஊர்ல நெட்டே சரியா இல்ல. இன்னைக்கும் காலையில டைப் பண்ண முடியாம இப்போ போடுறேன்... முடிஞ்சா புதன் அடுத்த எபிசோட் போடுறேன்...
 
ஓஓ... அம்பானி செய்யறது எல்லாருக்கும் ஒரே மாதிரி தானா.... நான் கூட எனக்கு மட்டும் தான் கிடைக்கலையோன்னு பயந்துட்டேன் :p :p

இந்த பயபுள்ள குஷா லவாவையும் மாத்திப்போட்டானே.... இப்புடி இருக்குறவங்க அப்புடி கல்யாணம் பண்ணற அளவுக்கு என்ன நடந்திருக்கும் ???
 
Epi potathe theriyala ?????????????. Pchh .. mottu pavam thana. Lavaa kuda kovama porane. Inine ivanga epdi meet pannipanga. Anu lavaa sema cute pair ?????. Intha kusha irukane.. pora annaiku amaithiya pogama ???.
Avanga avanga side la irunthu paakum pothu crct ta than irukku.
Na 19 epi padikama 20 scroll pannitu vanthana ???? ambani name etho story related nu nenachita ????.
 
story ya current situation, clima7te kooda connect panni lively ya kondu poreenga, interesting,Anu naanum un katchi saapadu vishayathula, Kusha amma maathiri,Lava appa maathiri, but Kusha thaan appa side nyathodu nikiraan, ivvalavu jovialaana paiyanaa Kusha,antha kaalathu marriage a kannu munnadi imagine panna vachiteenga,enna ji...Thatha moolamaa arivurai, thathuvamlaam thool parakuthu,
nallathaane poitrunthuchu ellam,oorukku pora nerathula ethukku intha akkapor,oh... Ithuthaan neenga sonna vithiya?
Ji.. enakku konjam kuzhappam, morning thaan Chennai povaanga,but Kusha evening kulla appa vara sonnanga nu solraan, travelling timd 3hrs aa?
Acho... paavam Manavaalan senjathu Mottu adivangrathu Manavalan,
Mottu Lava kitta solrathu sarinaalum affect aanathu Rahu thaan, enakku Valluvar sonnathu thaan " naavinaal sutta vadu',ithula yaara thappu solla,kaalam than marunthu ippavum ithathaan namburom,
parra...Ipa Kusha ilahuva kadanthu poraan, Lava irukkamaahitan,
Ungalukkum Ambaniyal thollai yaa,naa enakku mattumthaan nu nenachen
 
அச்சோ லவா அண்ட் மொட்டு☹️☹️☹️☹️. இந்த சதுரம் இருக்குதுல்ல அது எந்த பக்கமா பாத்தாலும் அதே மாதிரிதான் இருக்கும் அதுபோல ஒவ்வொருத்தர் சைடு இருந்து பார்த்தா ஒவ்வொருத்தர் நியாமும் ஈக்வலா இருக்கு என்ன பண்றது. இப்படி முட்டிட்டு ஊருக்கு போனவங்க எப்படி கல்யாணம் பண்ணாங்க அதும் இந்த குஷா மொட்டுவ கல்யாணம் பண்ணான். அந்த சீக்ரெட் உடையுர நாளுக்கு வெய்டிங். எபி ????
 
ஓஓ... அம்பானி செய்யறது எல்லாருக்கும் ஒரே மாதிரி தானா.... நான் கூட எனக்கு மட்டும் தான் கிடைக்கலையோன்னு பயந்துட்டேன் :p :p

இந்த பயபுள்ள குஷா லவாவையும் மாத்திப்போட்டானே.... இப்புடி இருக்குறவங்க அப்புடி கல்யாணம் பண்ணற அளவுக்கு என்ன நடந்திருக்கும் ???
அதே அதே... அதும் நான் இருப்பதோ கிராமம். சுத்தமா நெட் கனெக்சன் இல்ல? மாற்றம் எப்போ வேணுனாலும் ஏற்படலாம் இல்ல? சொல்றேன்? நன்றி?
 
Epi potathe theriyala ?????????????. Pchh .. mottu pavam thana. Lavaa kuda kovama porane. Inine ivanga epdi meet pannipanga. Anu lavaa sema cute pair ?????. Intha kusha irukane.. pora annaiku amaithiya pogama ???.
Avanga avanga side la irunthu paakum pothu crct ta than irukku.
Na 19 epi padikama 20 scroll pannitu vanthana ???? ambani name etho story related nu nenachita ????.
என்ன இருந்தாலும் லவாவுக்கு இது பெரிய ஏமாற்றம் தானே? போன எபிசோடுக்கு சொல்றிங்களா?? அவன் ஒன்னும் வேணும்னே சொல்லலையே? எஸ்... அம்பானி எல்லாம் இந்தக் கதையில இல்லைங்கோ?நன்றி?
 
story ya current situation, clima7te kooda connect panni lively ya kondu poreenga, interesting,Anu naanum un katchi saapadu vishayathula, Kusha amma maathiri,Lava appa maathiri, but Kusha thaan appa side nyathodu nikiraan, ivvalavu jovialaana paiyanaa Kusha,antha kaalathu marriage a kannu munnadi imagine panna vachiteenga,enna ji...Thatha moolamaa arivurai, thathuvamlaam thool parakuthu,
nallathaane poitrunthuchu ellam,oorukku pora nerathula ethukku intha akkapor,oh... Ithuthaan neenga sonna vithiya?
Ji.. enakku konjam kuzhappam, morning thaan Chennai povaanga,but Kusha evening kulla appa vara sonnanga nu solraan, travelling timd 3hrs aa?
Acho... paavam Manavaalan senjathu Mottu adivangrathu Manavalan,
Mottu Lava kitta solrathu sarinaalum affect aanathu Rahu thaan, enakku Valluvar sonnathu thaan " naavinaal sutta vadu',ithula yaara thappu solla,kaalam than marunthu ippavum ithathaan namburom,
parra...Ipa Kusha ilahuva kadanthu poraan, Lava irukkamaahitan,
Ungalukkum Ambaniyal thollai yaa,naa enakku mattumthaan nu nenachen
மிக்க நன்றி... இந்தக் கதையே திடீர்னு வந்தது தானே? என் பிளான்லேயே இல்லாத கதை இது... மைவிடு தூது தான் எழுத இருந்தேன்... பழக்கம் வேற பாசம் வேறவே... லவா அம்மா பையன் குஷா அப்பா பையன்... மொட்டு குஷா மேரேஜுக்கு பிறகு அவனோட இன்னொரு சைட் தெரியும்... எஸ் விதி இல்ல என் சதி? இன்னைக்கு அவங்க பர்த் டே அண்ட் ஜானு சீர்காழி லவா ஹைதராபாத் குஷா சென்னை ரகு வேலூர்னு ஆளுக்கொரு திசையிலே இருக்காங்க... சோ சீர்காழிக்கு போயிட்டு பிறகு ஊருக்குப் போகணுமில்ல? எஸ் சீக்கிரம் மாறும்... சுத்தமா நெட் இல்ல? நன்றி?
 
Top