Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-21

Advertisement

praveenraj

Well-known member
Member
குஷா வண்டியைச் செலுத்த அவனருகில் உணர்ச்சிகளற்று இருந்தான் லவா. ஏனோ லவாவின் இந்தத் தோற்றத்தைக் காணப் பிடிக்காமல் அவனுக்குப் பிடித்த ஏ.ஆர் ரஹ்மான் பாடல்களை ஒலிபரப்பினான். சில தூரம் கடந்தும் அதே போல் இருந்த லவாவைக் கண்டவன் வண்டியை பெட்ரோல் பங்கில் ஓரம் கட்டி டேங்க் நிரப்பச் சொன்னவன்,
"ஏன் இப்படி இருக்க? இப்போ என்ன ஆச்சு?" என்ற குஷாவின் குரலில் நிகழ்வுக்கு வந்தவன்,
"எப்படி டா உன்னால ஈஸியா இருக்க முடிஞ்சது?" என்ற லவாவுக்கு,
"நான் தான் அடிக்கடி சொல்லுவேனே? இந்த உலகத்துல நம்ம மேல உண்மையான அக்கறையும் பாசமும் வெச்சியிருக்க சொந்தம்னா அது நம்ம அப்பா, அம்மா, அம்மாச்சி, சுசி மாமா, அனு, நிர்மலா சித்தி தான். அப்பறோம் அபி, பாரி போன்றவங்க. தாத்தா, உமா சித்தி, சபா மாமா எல்லாம் ஓரளவுக்கு பாசமா இருப்பாங்க. இது என்னோட கருத்து. சின்ன வயசுல இருந்து நான் பார்த்து பழகி தெரிஞ்சிக்கிட்டது. அதனால் தான் நான் எல்லோருடனும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். நீ தான் வெளுத்ததெல்லாம் பாலுனு நெனச்ச... ஓகே!"
"நீ ஏன் என்கிட்ட இதெல்லாம் முன்னமே சொல்லல? அண்ட் பெரியவங்க பிரச்சனையை நீங்க ஏன் தலையில சுமக்கறிங்க?" என்றான் லவா.
அதற்குள் பெட்ரோல் போட்டுவிட வண்டியை எடுத்தவன்,"லவா, உனக்கு நிறைய விஷயம் தெரியாது. உன்கிட்ட நாங்க எதையுமே சொன்னதில்ல... நான் சொல்றதை நீ பொறுமையா டென்ஷன் ஆகாம கேட்கறதா இருந்தா நான் எல்லாமும் சொல்லுவேன். எங்களுக்குள்ள ஏன் இந்தச் சண்டை இந்த ஈகோனு உனக்கே புரியும்..." என்றவன் மேலோட்டமாக தங்கள் தந்தைக்கும் நந்தாவுக்கும் நடந்தவற்றை அவன் மனம் நோகாதவாறு சொன்னான். அதன் பின் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் பொறுமையாக எடுத்துரைத்தான். ஆனால் இதை எந்தப் பக்கமும் சாராமல் ஒரு மூன்றாவது நபரைப் போலவே நடுநிலையாகச் சொல்லி முடித்தவன்,
"இப்போ சொல்லு தப்பு யாரு மேல? சரி தப்பு நம்ம அப்பா மேலயே இருந்தாலும் உன் மாமா அன்னைக்குச் சொன்ன வார்த்தை நியாயமா? சரி அவரு கூட போதையில சொல்லிட்டாரு. நடந்ததெல்லாம் தாத்தாவுக்கு பின்னாடி தெரிஞ்சதில்ல? போய் மன்னிப்பு கேட்டிருக்கணுமில்ல? சரி கொஞ்ச நாள் ஆறப்போட்டவரு எப்படியாவது அப்பாவைச் சமாதானம் செஞ்சி இருக்கணுமில்ல? இப்போ உனக்கும் எனக்கும் சண்டைனு வெச்சிக்கோ தப்பு என் மேல தான் இருக்கு. நீ இப்போ என்ன எதிர் பார்ப்ப? நானா வந்து உன்கிட்ட சாரி கேட்டு உன்னைச் சமாதானம் செய்யணும்னு தானே நினைப்ப? நான் ரொம்ப நாள் வராம இருந்தா நீ என்ன செய்வ? உனக்கும் ஈகோ இருக்குமில்ல? நான் வந்து கேட்டும் நீ பேசலனா நான் அப்படியே விலகி இருக்கறது சரியா? அப்போ நான் கடமைக்கு தானே உன்னைக் கூப்பிட்டேன்னு அர்த்தமாகிடும்?இன்னும் ஒரே ஒரு கேள்வி கேக்குறேன், இதுவரை நம்ம அம்மாக்கும் அப்பாக்கும் இதை வெச்சு ஏதாவது சண்டை வந்திருக்கா? நம்ம அப்பா இப்போ வரை ஒரு ஜென்டில் மேனா தான் நடந்திட்டு இருக்காரு... அவர் யாரும் வேணாம்னு ஒதுங்கனாலும் உன்னையோ என்னையோ ஏன் அம்மாவையே இவங்க யாருகிட்டயும் பேசக் கூடாதுனோ இல்ல இங்க வரக் கூடாதுனோ சொல்லியிருக்காரா? அவருக்குப் பிடிக்கல... ஏன் இதே தாத்தா நம்ம இனிக்கு கை உடைஞ்ச அப்போ திவா சித்தப்பா பேசாம இருந்தாரே அப்போ எப்படி அவர்கிட்டப் போய் சமாதானம் பேசுனாரு. அப்போ திவா சித்தப்பாக்கு ஒரு நியாயம் நம்ம அப்பாக்கு ஒரு நியாயம். நம்ம அப்பாக்குத் தான் சொந்தம்னு யாருமில்ல. சோ எங்க போயிடப் போறாங்கனு ஒரு மிதப்பு. இது தான் எனக்குப் பிடிக்கல. ஏன் இவரும் அவர் பையனும் நம்ம அப்பாகிட்ட வந்து பேசியிருந்தா அப்பாவைச் சமாதானம் செஞ்சி இருக்க முடியாதா? அன்னைக்கு அப்பாக்கு வேலையும் இல்ல. அம்மா தான் சம்பாதிச்சாங்க. சோ நம்ம பொண்ணு சம்பாதியத்துல தானே உட்கார்ந்து சாப்பிடுறாரு. இவருக்காக நாம ஏன் இறங்கிப் போகணும்னு ஒரு எண்ணமாக் கூட இருந்திருக்கலாம்... யாரு கண்டா? இன்னைக்கு நம்ம அப்பா நல்ல நிலையிலே இருக்காரு. இவங்க யாரு தயவும் இல்லாம... இன்னைக்கு வந்து பல்லை இளிச்சா எல்லாம் பேசிடுவாங்களா? அன்னைக்கு என்னை அவர் பொண்ணு ஊசியில குத்திட்டான்னு தெரிஞ்சதும் எப்படி வழிய வந்து பேசுனாரு அவ அப்பா... ஏன்? நாம இன்னைக்கு நல்ல வேலையில நல்ல நிலையில இருக்கோம். எல்லாம் வேஷம் டா. எனக்கு அதனால் தான் இங்க வரவே பிடிக்கறதில்லை. ஆனாலும் நான் இங்க வர ஒரே காரணம் நம்ம அம்மாச்சி ஒன்னு தான். அதுக்கு ஒன்னு தான் சுட்டுப் போட்டாலும் சூது வாது தெரியாது... அதோட கள்ளங்கபடமற்ற பாசத்துக்காக மட்டும் தான் நான் இன்னும் இந்த ஊருக்கு வரேன்... அதுக்கு அப்பறோம் சுசி மாமா. அவர் அப்படியே நம்ம அம்மாச்சியே... அதே பாசம் அதே வெள்ளேந்தி குணம். அதே மாதிரி அவர் பொண்ணு அனு. ஏன் ஆனந்தியும் அப்படித்தான். இதுல அவளுக்கு அப்படியே அவ அப்பாவோட திமிர்..." என்றதும் லவா புரியாமல் பார்க்க,
"அதான் அந்த வீட்டு மகாராணி... சரி விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்?" என்று பேசியபடியே சீர்காழி வந்தடைந்தனர். ஏனோ லவா வேகமாக வீட்டிற்குள் நுழைய எதிரே தென்பட்ட ரகுவைக் கண்டவன் அவரை அணைத்துக்கொள்ள அப்போது பார்த்து அங்கே வந்த குஷா மற்றும் ஜானு ஒன்றும் புரியாமல் விழித்தனர்.
"என்ன ஆச்சு கண்ணா?" என்ற ரகுவுக்கு,
"ஒன்னுமில்லப்பா... ஐ மிஸ்ட் யூ சோ மச்..." என்றான். ஜானகி அவனைப் பார்த்துச் சிரிக்க,
"மா நான் கூட மிஸ் யூ..." என்று அவரை அணைத்துக்கொண்டான். பிறகு பிள்ளைகள் இருவருக்கும் ஸ்வீட் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்கள். மகன்களின் நடவடிக்கையிலே எதுவோ சரியில்லை என்று அறிந்துகொண்டவர்கள் மேற்கொண்டு எதையும் பேசாமல் இருக்க மறுநாள் இருவரும் தங்கள் பணிக்குச் சென்றனர்.
முன்பு பேசியதைப் போல லவா குஷா இருவருக்கும் இந்த வருடமே திருமணம் செய்ய முடிவெடுத்திருந்த ரகு ஜானகியிடம் அதைப் பற்றிப் பேச நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குள் மனவருத்தம் உண்டானது. அதற்குக் காரணம் ரகு முன்வைத்த யோசனை. அஃதாவது குஷாவுக்கு அனுவைக் கேட்கலாம் என்றும் லவாவுக்கு வெளியே பார்க்கலாம் என்றும் அவர் முன்வைத்த கருத்து. ஏனோ இதைக் கேட்ட மாத்திரமே ஜானகிக்கு இதில் உடன்பாடில்லை.
"அதெப்படி ஒருத்தனுக்கு உள்ளயும் ஒருத்தனுக்கு வெளியையும் எடுக்கறது? செஞ்சா ரெண்டு பேருக்கும் சொந்தத்துல இல்ல ரெண்டு பேருக்கும் வெளிய... நீங்க சொல்றது சரிப்பட்டு வராது..." என்று ஒரே முடிவாய் அவர் உரைக்க,
"அப்போ உன் தம்பி பொண்ண இந்த வீட்டு மருமகளா கொண்டு வர ஆசைப்படுற இல்ல?" என்றவருக்கு,
"நான் அப்படிச் சொல்லல... பார்சியலிட்டி வேண்டாம்னு சொல்றேன்..."
"சுசியும் நந்தாவும் ஒன்னில்லை..."
"ஆனா எனக்கு லவாவும் குஷாவும் ஒன்னு தான். என்ன பேசுறிங்கனு நீங்க தெரிஞ்சு தான் பேசுறிங்களா? இப்படி ஒருத்தனுக்கு சொந்தத்துலயும் ஒருத்தனுக்கு வெளியையும் எடுத்தா நல்லாவா இருக்கும்? அதுபோக நாளைக்கு அனுவை நாம நடத்துற விதத்துல வெளியேயிருந்து வரும் பொண்ணுக்கு தேவையில்லதா காம்ப்ளக்ஸ் வரும். அது பின்னால பசங்களுக்குள்ள மனஸ்தாபத்துல வந்து நிற்கும்..."
"நீ என்ன பேசுற ஜானு? அப்போ எனக்கு மட்டும் பசங்க ஒன்னில்லையா? நான் என்னைக்கு பசங்களைப் பிரிச்சு பார்த்திருக்கேன்?"
"இதுவரை பார்த்ததில்லை... ஆனா இனிமேல் நடந்திடுமோனு பயமா இருக்கு..."
"அது தேவையில்லாத வீண் கற்பனை..."
"முடிவா சொல்றேன். எடுத்தா ரெண்டு பேருக்கும் சொந்தத்துல இல்ல ரெண்டு பேருக்கும் வெளிய... அவ்வளவு தான்..." என்றவர் சென்றுவிட ஜானகியின் ஐயம் ரகுவிற்குப் புரிந்தாலும் நந்தாவை சம்பந்தியாகக் கொண்டுவர ரகுவுக்கு மனம் ஒப்பவில்லை அதேநேரம் சுசியையும் அனுவையும் இழக்கத் தயாராக இல்லை. அவரோ ஆழ்ந்த குழப்பத்திற்குச் சென்றார்.
*****************
அங்கே லவா குஷா இருவரும் புறப்பட்ட பின்னர் மொட்டுவும் அனுவும் ஆளுக்கொரு திசையில் அமர்ந்து கவலையில் உழன்றனர். மொட்டுவுக்கோ தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து லவா தன்னிடம் இவ்வளவு கடுமையாகவும் ஒட்டாமலும் பழகியதே இல்லை. அப்பேர்ப்பட்டவன் இன்று பேசிய வார்த்தைகளைக் காட்டிலும் இறுதியாக தன்னுடைய கையை உதறிவிட்டுச் சென்றது அவளுக்கோ சொல்லில் அடங்காத வேதனையைத் தந்தது. சின்ன வயதிலிருந்து தான் என்ன செய்தாலும் அதில் தனக்கே தெரியாத நல்லவைகளை எடுத்துச் சொல்லும் ஒருவனை இனி தன்னுடைய வாழ்வில் சந்திக்கவே இயலாதோ என்ற தவிப்பில் ஆழ்ந்திருந்தாள் மொட்டு.
இவள் ஒருபுறமிருக்க அங்கே அனுவோ இறுதியில் குஷா கூறிச் சென்ற வார்த்தைகள் கொடுத்த உணர்விலிருந்து மீளாமல் இருந்தாள். அவன் கோவமாகப் பேசியிருந்தால் கூட அவனை அவள் சமாதனம் செய்திருப்பாள். ஆனால் அவனோ விரக்தில் பேசியது தான் அவளுக்கு என்னவோ தவறாக உரைத்தது.
இவ்வாறு பெண்கள் இருவரும் களையிழந்து காணப்படுவதைக் கண்டு வைத்தியும் கனகாவும் வேறு சில திட்டங்களைப் போட்டார்கள்.
"நீங்க அன்னைக்குச் சொல்லும் போதுகூட நான் நம்பல... ஆனா இன்னைக்கு பிள்ளைங்க ரெண்டும் மனசே இல்லாம ஊருக்குப் போனதைப் பார்தததும் எழுந்த சின்ன சந்தேகம் இதுங்க ரெண்டும் ஆளுக்கொரு திசையிலே உட்கார்ந்து மருக்குறதைப் பார்க்கும் போது எல்லாம் ஊர்ஜிதமாகுது... இன்னும் எதுக்கு காலம் தாழ்த்தணும் சீக்கிரம் ஜானகிகிட்டேயும் மாப்பிள்ளை கிட்டயும் பேசிட வேண்டியது தானே? எப்படியும் நந்தாவும் சுசியும் நம்ம முடிவுக்கு குறுக்க நிக்கமாட்டாங்க. பிள்ளைங்களுக்கும் வயசாகுதுல்ல? அதும் போக இப்போயிருந்து பேச ஆரமிச்சா தான் மாப்பிள்ளையை நம்மால சமாதானம் செய்ய முடியும்... நான் பாட்டுக்குப் பேசிட்டு இருக்கேன் நீங்க என்ன யோசனையில இருக்கீங்க?" என்று தன் கணவரின் தோளில் தொட்டு நிகழ்வுக்கு அழைத்துவந்தார் கனகா.
"நானும் அதைப் பத்தி தான் யோசனையில இருக்கேன். அடுத்த வாரத்துல நாம ஜானகியைப் போய் பார்த்துட்டு வருவோம். இதைப் பத்தி நீ யாருகிட்டயும் வாயைத் திறக்காத..." என்றவர் அங்கிருந்து அகன்றார்.
அடுத்தடுத்த நாட்கள் அந்த நால்வருக்கு மிக மெதுவாகவே நகர்ந்தது. பின்னே ஹைதராபாத் சென்ற லவாவோ எவ்வளவு முயன்றும் தன்னுடைய வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் திண்டாடினான். அடிக்கடி மொட்டுவுடன் ஊரில் அவன் செய்த சேட்டைகளும் அனுவுடன் ஒன்றாக அமர்ந்து பணிபுரிந்த நொடிகளுமே அவனை வட்டமடித்தது. இது எல்லாம் ஒரு கனவு போல இறுதியில் கலைந்து விட்டதே என்று நினைக்கையில் அவன் மிகவும் பலகீனமானான்.
அதே தான் குஷாவிற்கும். ஊரில் வயலிலும் சேற்றிலும் இருந்த நாட்கள் கொடுத்த இதம் இந்த ஏ.சி அறையும் அகன்ற கல்லூரி வளாகமும் கொடுக்கவில்லை. இதற்கிடையில் தங்களுக்கு திருமணதிக்காகப் பெண் பார்க்கும் படலம் தொடங்கிவிட்டது என்றும் அதனால் தன் தந்தைக்கும் தாய்க்கும் சிறு மனவருத்தம் உண்டானதும் குஷாவிற்கே தெரியவில்லை. அதனால் இவை லவாவிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
**************
இடையில் அனுவும் ஊருக்குச் செல்ல நேர்ந்ததால் அன்று புறப்படத் தயாரான வேளையில் மொட்டு அவளிடம் பேச வர அதுவரை அவள் மீதிருந்த கோவம் விலகி,
"நடந்ததையே நெனச்சு ஒர்ரி பண்ணாத மொட்டு. உங்களுக்குள்ள இப்படியொரு பிரச்சனை இருக்குனு யாருக்குமே தெரியாம போயிடுச்சு. இப்போ யோசிச்சு பார்த்தா நீங்க விளையாட்டுக்குப் பண்ணதா நாங்க நெனச்சிட்டு இருந்த பல விஷயம் உள்ளர்த்ததோடு நடந்திருக்குனு புரியுது. குஷா ஏன் இந்த 'பெட்'ட இவ்வளவு சீரியஸா எடுத்துகிட்டான்னு இப்ப தான் புரியுது. ஏற்கனவே குடும்பத்துல இருக்குற பிரச்சனை போதாதுன்னு நீங்க வேற... அப்பாவும் பெரியப்பாவும் அடிக்கடி இதைப் பத்தி தான் பேசுவாங்க. நான் கேட்டிருக்கேன். ஒருவேளை நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருந்திருந்தா இதைப் பத்தி நீயும் நானும் ஷேர் பண்ணியிருப்போமோ என்னவோ? ஓகே இனிமேலாச்சும் நாம ஒத்துமையா இருப்போம். ஏன்னா அவங்களோட பலமே அவங்க ஒத்துமை தான். சோ நாமளும் ஒற்றுமையா இருந்தா இதைக் கண்டிப்பா சால்வ் பண்ணிடலாம் மொட்டு. அண்ட் என்னை மன்னிச்சிடு. நான் கூட விவசாயம் ரொம்ப ஈசினு நெனச்சுட்டு இருந்தேன். என் பீல்ட்ல நான் திறமைசாலினா உன் பீல்ட்ல நீ திறமைசாலி... எனக்கு உன்மேல எப்பயும் ஈகோவும் பொறாமையும் இருந்தது இல்ல... டேக் கேர். ஒருவேளை உன் போனை அவங்க யாராச்சும் எடுத்தாலோ இல்ல ரிப்ளை செஞ்சாலோ எனக்குச் சொல்லு... நானும் சொல்றேன். கால் பண்ணிட்டே இருப்போம் கண்டிப்பா எடுப்பானுங்க... வரேன்..." என்று அனுவும் ஊருக்குக் கிளம்பினாள்.
ஏனோ அனுவுடைய இந்த ஆறுதல் வார்த்தை அவளுக்குள் சிறு நம்பிக்கையை உண்டு செய்தது.
*************
ரகுவும் அடுத்தடுத்த நாட்களில் வேலூருக்குச் சென்றுவிட ஜானகியும் ரகுவும் அன்றைய நிகழ்வுக்குப் பின் பெரியதாகப் பேசிக்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக பிள்ளைகளின் திருமணப் பேச்சை எடுக்கவே இல்லை.
ரகுவுடைய பார்ட்னரும் நெருங்கிய நண்பனுமான வடிவேல் வழக்கத்திற்கும் மாறாக அன்று தீவிர யோசனையில் இருக்க,
"என்ன வேலு பயங்கர யோசனையில இருக்க?" என்றதும்,
"வேற என்ன கவலை இருக்கப்போகுது? எல்லாம் குடும்பத்தைப் பத்தி தான்..."
"என்னாச்சு வேலு வீட்ல என்ன பிரச்சனை?"
"ஸ்ரீதரை நான் தனிக்குடித்தனம் வெச்சிட்டேன் ரகு..." என்றதும் ரகு உண்மையிலே அதிர்ந்தார். ஸ்ரீதர் வேலுவின் ஒரே மகன். மிகச் சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது.
"என்ன சொல்ற வேலு? இப்போ தானே கல்யாணம் ஆச்சு. என்ன ஆறு மாசம் இருக்குமா?"
"என்ன பண்றது ரகு. ஒரே பையன்னு பார்த்து பார்த்து தான் செஞ்சோம். நான் அப்பயே என் சொந்தத்துல கேட்ட பொண்ணை எடுக்கலாம்னு சொன்னேன். ரஞ்சி தான் சொந்தத்துல வேண்டான்னு சொன்னா... இப்போ பாரு, மாமியாருக்கும் மருமகளுக்கும் சுத்தமா ஒத்து வரல... இதால ஸ்ரீ தான் ரொம்ப நொந்துட்டான். சரி இதுக்கு ஒரே முடிவுனா அது தனிக்குடித்தனம் தான்னு அவனை வேற வீட்டுக்குப் போக சொல்லிட்டேன். இப்போ தோணுது பேசாம சொந்தத்தில கேட்ட அப்போவே ஓகே சொல்லியிருக்கலாம். நெட்டையோ குட்டையோ தெரிஞ்ச குடும்பம் தெரிஞ்ச மனிதர்கள் தெரிஞ்ச சுபாவம்... சரி இதுக்கும் மேல என்ன ஆகப்போகுது?"
"கூப்பிட்டுப் பேசிப்பார்த்திருக்கலாம் தானே?"
"அதும் செஞ்சிட்டேன். தப்பு அந்தப் பொண்ணு மேல மட்டுமில்ல. ரஞ்சிதாவும் தான் தப்பு செய்யுறா... மகன் மேல யாரு பாசம் அதிகம் வெச்சியிருக்காங்கனு கணக்கு போட வேண்டிய விஷயமா? அதும் சரிதான் மருமகளா இருந்து தானே இவங்களும் மாமியார் ஆகுறாங்க? என்னவோ போ..." என்று வேலு புலம்ப ரகுவோ ஆழ்ந்த யோசனைக்குச் சென்றார்.
"என்ன யோசனை ரகு?" என்ற வேலுக்கு நடந்த அனைத்தையும் சொல்ல,
"அட என்னப்பா நீ? கையில வெண்ணை வெச்சிட்டு நெய்யுக்கு அலையுற? சிஸ்டர் சொன்னதுல என்ன தப்பிருக்கு? ஒரு பையனுக்கு சொந்தத்துலயும் இன்னொருவனுக்கு வெளியையும் எடுக்குறது சுத்த அபத்தம். அதும் ரெட்டைப் பசங்களுக்கு? பசங்க மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுட்டு முடிவெடு அவ்வளவு தான் சொல்லுவேன்..." என்று அவர் சென்றுவிட ரகுவோ யோசனைக்குச் சென்றார்.
மறுவாரம் தன்னுடைய தொழிலின் நிமித்தமாய் ஒருவரைச் சந்திக்கவேண்டி சென்னைக்கு வந்தார் ரகு. அன்று குஷாவுக்கு கல்லூரி இருந்ததால் வீட்டுச் சாவி வாங்க அவனை அழைக்கவே, தந்தையுடன் அன்றைய பொழுதை செலவழிக்க அவன் விடுப்பு எடுத்து வந்தான். தந்தையும் மகனும் மதிய உணவை முடித்துவிட்டு சினிமா பார்க்க வண்டியில் செல்லும் வேளையில் அன்று அவனுடன் பைக்கில் மொட்டு அமர்ந்து வந்ததைப்போல் ஒரு சிறுவன் ஆமர்த்தவாறு செல்ல ஏனோ அவன் இதழோரத்தில் சிறு புன்னகை படர்ந்தது.
மாலை பீச்சுக்கு சென்று லூட்டி அடித்து அவர்கள் வீடு திரும்பினார்கள். குஷா தன் தந்தையுடன் எடுத்த போட்டோஸ் எல்லாவற்றையும் வாட்ஸ் அப்பில் ட்ரைனாக விட கீழே,
பிகு: இதைப் பார்த்து விட்டு மிஸ்ஸஸ் ரகுவும் லவா ரகுவும் ஆளுக்கொரு ஜெலுசில் சிரப் வாங்கிப் பருகவும். அப்போதும் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை என்றால் டாக்டரை அணுகவும்...
என்று எழுதியிருக்க அதைப் படித்த ஜானுவும் லவாவும் அவனை போன் செய்து வறுத்ததெல்லாம் வேறு கதை! ஏனோ எதேர்சையாக அதைக் கண்ட அனு அவனுக்கு அழைக்க அவளுடன் சிறிது கதையளந்தான். அதே சமயம் இந்த ஸ்டேட்டஸை மொட்டுவும் பார்த்துவிட்டாள் என்று தெரிந்துகொண்டவனுக்கு ஆனந்தமாய் இருந்தது. பின்னே இப்போதாவது என் தந்தையைப் பற்றித் தெரிந்து கொண்டால் சரி என்று எண்ணினான். நம்மில் அநேக நபர்கள் இவ்வாறு ஸ்டேட்டஸ் வைப்பதே பலபேருக்கு பதிலடி கொடுப்பதற்காகத் தானே?(நான்லாம் வெச்சி இருக்கேன்பா!?)
அன்று ரகு எதோ வேலை செய்ய குஷாவின் லேப்டாப் வாங்க அதில் ஸ்க்ரீன் சேவராக சூரக்கோட்டையில் அவர்கள் எல்லோருமாக இணைந்து எடுத்த போட்டோ இருக்க குஷாவின் அருகில் டிபிகல் வெற்றிக்குறியைக் காட்டியவாறு அஷ்டகோணலாய் முகத்தை வைத்து போஸ் கொடுத்தாள் அனு. அதேபோல் மறுபுறம் லவாவின் கைக் கோர்த்து போஸ் கொடுத்தாள் மொட்டு. பின்னால் மற்றவர்கள் நிற்க பல நாட்கள் கழித்து அவர்களைக் கண்டார் ரகு. அதையே சிறிது நேரம் அவர் வெறிக்க வெளியில் குஷாவும் அனுவும் பேசிக்கொண்டிருந்தது அவருக்கும் தெரிந்தது. மற்றவர்களைக் காட்டிலும் ஏனோ மொட்டுவையே சில நொடிகள் பார்த்தார். அவளருகே புன்னகை முகமாக நின்ற லவாவைக் கண்டவர் மேற்கொண்டு மற்ற படங்களையும் பார்த்தார்.
அப்போது வந்த குஷாவிடம் எல்லோரையும் பற்றி விசாரித்து வேண்டிய தகவல்களைப் பெற்றுக்கொண்டவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு சீர்காழி சென்றார்.
*************
அங்கே அவருக்கு முன்பாக வைத்தியும் கனகாவும் வந்திருந்தார்கள். அவர்களோ ஜானகியிடம் லவா குஷா திருமணத்தைப் பற்றி விசாரிக்க ஜானகியோ அன்று தனக்கும் ரகுவுக்கும் நடந்த வாக்குவாதத்தை எண்ணியவாறு,
"இல்லப்பா இனிமேல் தான் ஜாதகம் எழுதி வைக்கணும்..." என்று சொல்லி,"அதான் நிறைய மேட்ரிமோனி இருக்குல்ல?" என்று சொல்லி அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பின்னே தன் பெற்றோர்களின் எண்ணத்தை அவர் மட்டும் அறியமாட்டாரா என்ன? ஏனோ இதைப்பற்றி மேலும் பேச அவர்களுக்கும் விருப்பமில்லை. அன்று வீட்டிற்கு வந்த ரகு வைத்தியையும் கனகாவையும் எதிர்பார்காதவராக திகைக்க பின் சமாளித்து வழக்கம் போல் தன் மாமியாரிடம் மட்டும் பட்டும்படாமல் பேசிவிட்டு நகர்ந்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஜானகியும் ரகுவும் அன்றைய வாக்குவாதத்திற்குப் பிறகு சகஜமாய்ப் பேசிக்கொள்ளவே இல்லை. அதனால் ரகுவும் ஜானுவும் தேவையில்லாத குற்றயுணர்ச்சியில் இருந்தார்கள். தங்களுக்குள் இருக்கும் மனவருத்தத்தை வைத்திக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ள முயன்றாலும் வைத்தியின் மனதிற்கு என்னவோ தவறென்று புரிந்தது. அதற்கேற்றாற் போலவே ரகு ஒரு அவசர வேலையின் காரணமாய் மீண்டும் வேலூருக்குச் செல்ல தாங்கள் வந்ததால் தான் அவர் புறப்படுகிறார் என்று வைத்தி ஊர்த் திரும்ப முயல அவர் மனதை அறிந்துகொண்ட ஜானு வைத்தியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டார். எல்லாம் கேட்டவர் இந்தத் திருமணங்கள் நடக்கா விட்டாலும் கூடப் பரவாயில்லை இதனால் மகளுக்கும் மருமகனுக்கும் வீண் மனவருத்தம் கூடாதென்று எண்ணி,
"ஜானு, அப்பாக்கு இதுல ஒன்னும் வருத்தமில்லை... நீங்க தான் பெத்தவங்க... நல்ல காரியத்தை வேண்டா வெறுப்பா செய்யக்கூடாது... நீங்க முதல கலந்து பேசி முடிவெடுங்க... எதுனாலும் எனக்கு சந்தோசம்..." என்று சென்றுவிட்டார்.
***************
அங்கே அனு குஷாவை சமாதனம் செய்திருந்தாள். அவள் லவாவுடனும் பேசத் தொடங்கியிருக்க மொட்டு தான் லவாவிடமே பேசமுடியாமல் திண்டாட இதில் எவ்வாறு குஷாவுடன் பேசுவது? ஆனால் அனு தான் எல்லாவற்றையும் மொட்டுவிற்குத் தெரியப்படுத்தியிருந்தாள்.
இம்முறை எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஊருக்கு வந்த ரகு ஜானகியிடம் பேச ஜானகியோ அவருக்கும் முன்பாக மேட்ரிமோனியில் தான் உருவாக்கி இருந்த ப்ரோபைலை காட்ட அதில் அதிர்ந்தவர் வேலுவிடம் பேசியது முதல் குஷாவின் லேப்டாப்பில் தான் கண்ட புகைப்படங்கள் வரை எல்லாம் சொல்லி பிள்ளைகளை விட அவர்களின் நலன்களை விட தனக்கு எதுவும் பெரியதில்லை என்று சொன்னார்.
ரகுவின் இந்த மனமாற்றம் ஜானுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க அதற்குள்,
"ஆனா ஒன்னு, இதனால நான் எல்லாத்தையும் மறந்துட்டதா அர்த்தமில்லை... நான் கல்யாணம் சம்மந்தமா சுசி, காவேரி, சித்ரா, அத்தை இவங்ககிட்ட தான் பேசவேன். உன் அப்பாக்கிட்டயும் தம்பிகிட்டயும் நீதான் பேசணும். முக்கியமா பசங்களுக்கு இதுல விருப்பம் இருக்கனும். அவங்கள இந்த வாரம் ஊருக்கு வரச் சொல்லு... அவங்ககிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு மேற்கொண்டு என்ன பண்ணணுமோ செய்யலாம். இப்போ ஹேப்பியா?" என்று பிள்ளைகள் மேல் அக்கறை கொண்ட தந்தையாகப் பேசிய ரகுவை அதிகம் நேசித்தார். ஆனால் அந்த வாரம் ஊருக்கு வந்த லவாவும் குஷாவும் பெற்றோர்களின் இந்த முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இருந்தும் இதைப் பற்றிப் பேசும் போது ஆனந்த தாண்டவமே ஆடிய அன்னையின் நடவடிக்கையைக் கண்டு மறுக்கவும் முடியாமல் அதேநேரம் இதை ஏற்கவும் முடியாமல் தவித்தனர்.
"என்னடா எதுவும் பேசமாட்டேங்குறீங்க? ஓ இதுக்கு எப்படி அப்பா ஓகே சொன்னார்னு யோசிக்கறீங்களா? அவர் எப்பயுமே நமக்காகவே தான் யோசிப்பார். அண்ட் இந்த பிளான் ஓகே ஆச்சுன்னா அப்பாவும் தாத்தாவும் பேசிக்கக்கூடிய நாட்கள் தூரத்துல இல்ல... எதுனாலும் நல்லா யோசிச்சு நாளைக்கு நல்ல முடிவா சொல்லுங்க..." என்று அவர் சென்றுவிட பிள்ளைகளோ தாங்கள் எடுத்த சபதம் முக்கியமா இல்லை பெற்றோர்களின் ஆசை முக்கியமா என்று குழம்பினார்கள். அது போக யார் யாரைத் திருமணம் செய்ய நேருமோ என்றும் அஞ்சினார்கள். பின்னே இருவரும் தற்போது பேசிக்கொள்ளும் நபர் என்றால் அது அனு ஒருத்தியே! பின்பு யார் தான் மொட்டுவைத் திருமணம் செய்வது? (நேரம் கைகூடும்...)
திரும்ப அதே பிரச்சனை. நெட்டே இல்ல?
 
ethukku mottu mela ungalukku evlo kovam boss. antha ponna mattum eppa paaru thaniyaave viduringa. pavam mottu ava mattum venumne vaaaaaaaa panna. kusha lavaa 2 perum rmba panranga boss sollidunga.
aama naanum neraiya status poduva .... appo thana avanga paathu verupaavanga . enna 2 perum anu va katttikka ok solluvangala ...
kusha anga avlo pesittu aprm enna sirippu.
 
Super epi?...kusha namala vida bayangaramana observer ah irupan polaye?ellarayum epdi note pannirkan.analum prachanaiya 3rd person pola sollitu final touch la avan view sonnane anga nikkaran kusha.analum vaithi thatha apdi pattavara Iruka mataru than.but thiva chithapa vishayam yosika vaikuthe. anyhow kusha sonnathula last sila thavira mathathellam acceptable than.....raghupa character semma.enaku starting la irunthe one of the fav.nalla appa nalla husband ?... Anu wow character❤️.kuzhanthai thanama Iruka namma anuva ithu.enna oru matured character.evlo azhaga ellarayum handle pandra.mottu mela takunu korai solli othukama evlo theliva pesi puriya vaikara.anuma ❤️vera level nee.......haha thatha patti nalla yosichinga ponga... marriage matter la janu than correct..haha kusha note? ama ama nanum kusha pola nallave train viduven ?parkatumnu....adapavigala apo 2 perukum anu ok.last kelvi ??
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பு சொல்ல முடியவில்லை ??
 
Sema epi...paavampa mottu.....dei kushaa...ippadi Lava-va kozhappi vittiye ngayamaa?
thank u... விடுங்க இதுக்கும் சேர்த்து மொட்டு பின்னாடி குஷாவை வெச்சு செய்வா? நன்றி?
 
ethukku mottu mela ungalukku evlo kovam boss. antha ponna mattum eppa paaru thaniyaave viduringa. pavam mottu ava mattum venumne vaaaaaaaa panna. kusha lavaa 2 perum rmba panranga boss sollidunga.
aama naanum neraiya status poduva .... appo thana avanga paathu verupaavanga . enna 2 perum anu va katttikka ok solluvangala ...
kusha anga avlo pesittu aprm enna sirippu.
ஹா ஹா சும்மா... அப்போ தானே கதை எழுத கொஞ்சம் குஜாலா இருக்கும்? ஆனா இதுக்கெல்லாம் சேர்த்து மொட்டு பெர்பார்ம் பண்ணுவா... அவங்க தானே ஹீரோஸ் சோ போகட்டும்? அடுத்தவங்கள வெறுப்பேத்துற சுகமே தனி? அப்படி இல்ல மொட்டுவை ஹேண்டில் செய்ய பயப்படுறாங்க... சிரிப்பு வேற டிபார்ட்மென்ட் கோவம் வேற டிபார்ட்மென்ட்... நன்றி?
 
Top