Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-27

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்று இரவும் வேலையெல்லாம் முடித்தவள் உறங்க வர அவளுக்கு முன்பே அங்கு இருந்தான் குஷா. அதும் அவளுடைய படுக்கைக்கு மிக அருகில் இருவருக்கும் இடையில் இருக்கும் தலையணைகள் அனைத்தும் மறுபுறம் இருந்தது. இவன் என்ன இவ்வாறு படுத்திருக்கிறான் என்ற பாவனையோடு அங்கே வந்தவள் அவனையே முறைக்க,
"என்ன பனி தூங்கலையா?" என்று சாதரணமாகக் கேட்டு தன்னுடைய செல்போனை நோண்ட, இப்போதெல்லாம் அடிக்கடி தன்னை 'பனி' என்று அழைக்கும் அவனது எண்ணத்தையும் செய்கையையும் புரியாமல் திண்டாடுகிறாள் மொட்டு. இப்படித்தான் அன்று மாலை கிச்சனில் வேலை செய்துகொண்டிருந்துக்கும் வேளையில் ஹாலில் பாடல் ஓடிக்கொண்டிருக்க தன்னுடைய ஆஸ்தான ஹீரோவான சூர்யாவின் 'காட்டுப்பயலே' பாடல் ஓடிக்கொண்டிருக்க அவளையும் அறியாமல் அதை அவள் பாடியவாறே சமையலில் மூழ்கியிருந்தாள்.
'நான் வெளைஞ்சு நிக்கும் பொம்பள
வெக்கம் கெட்டு நிக்குறேன்
உச்சு கொட்ட வெக்குறியே வாடா...' என்று ஹை பிட்சில் பாடுபவளில் குரல் ஏனோ ஹாலிலிருந்த குஷாவின் செவிகளைத் தீண்ட பூனை போல் சப்தமில்லாமல் உள்ளே சென்றவன் சமையலறையின் வாசலில் சாய்ந்தவாறு நின்று அவள் செய்கையை ரசித்துக்கொண்டிருந்தான். அப்போதும் பின்னால் அவன் நிற்பதைக் கவனிக்காமல் அவள் போக்கில் பாடிக்கொண்டிருந்தவள்,
'நீ தொட்டுப் பேசு சீக்கிரம்
விட்டுப் போகும் என் ஜுரம்
வெட்டிக்கதை பேச வேண்டாம் வாடா...
நான் ஓலைப்பாயை விரிக்கிறேன்
உனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டுப் போடா..." என்றவள் எதற்ச்சையாகத் திரும்ப அங்கே வாயிலில் தன்னையே கண்கொட்டாமல் உதட்டில் சிறு குறும்புடன் பார்க்கும் குஷாவைக் கண்டதும் ஒருகணம் மொட்டு ஜெர்க் ஆகி முழிக்க,
"பரவாயில்லையே நல்லாப் பாடுற... சூப்பர்..." என்றவன் முதலடியை எடுத்து அவளை நோக்கி வர மொட்டுவிடம் இதுவரை இருந்த தைரியம் முதன் முறை ஆட்டம் கண்டது.
"பொதுவா நம்ம மனசுக்குப் பிடிச்சதோ இல்லை என்னவெல்லாம் நடக்கனும்னு ஆசைப்படுறோமோ அது தான் பாடலா வெளிவரும்... அந்தக் காலத்துல தன்னுடைய ஆசைகளை எல்லாம் வெளிப்படையாச் சொல்லாம இப்படித்தான் குறிப்பால் உணர்த்துவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்... சோ இதை உன்னோட ஆசைகளா எடுத்துக்கலாமா?" என்றவன் இப்போது அவளை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் நின்றான்.
"நீ எதுக்கு தயங்கி நிக்குற? என்னை ஒதுக்கி வெக்குற? சும்மா முரண்டு பிடிக்குற கட்டி அள்ளுடி..." என்று எசப்பாட்டுப் பாடியவாறே அவளை நெருங்கியிருந்தான்.
"அப்படியெல்லாம் இல்ல... நான்... சும்மா தான்... பாடுனேன்... நீ ஏன்... இவ்வளவு நெருங்கி நிக்குற?" என்று அவளுடைய உதடுகள் தந்தியடிக்க முதல் முறையாக அவள் தன்னுடைய வழக்கமான திமிர் அடாவடி ஏதுமின்றி பதட்டத்தில் நிற்பதை ரசித்தவன்,
"ஏன் இப்படிப் பதறுற பனி? கல்யாணம் தான் உன் சம்மதம் இல்லாம நடந்தது... கண்டிப்பா இனி நடக்கப்போற எல்லாமே உன் விருப்பதோட தான் நடக்கும்... ஐ அம் வெயிட்டிங்..." என்று திரும்பியவன் நொடியில் மீண்டும் அவள்புறமாகத் திரும்பி அவள் காதோரம் வழியும் வேர்வையை தன்னுடைய கைக்குட்டையால் துடைத்து,
"பொதுவா அழகும் நல்ல குரல் வளமும் எல்லோருக்கும் சேர்ந்தாப்புல அமையாது... ஆனா உனக்கு ரெண்டும் இருக்கு... கீப் இட் அப்..." என்று சொல்லி மேலும் அங்கிருந்து அவளை அவஸ்தை செய்ய விரும்பாது அகன்றான்.
அவன் சென்றதும் சிறிது நேரம் பிரமை பிடித்தவள் போல் இருந்தவள் தற்போது நடந்ததெல்லாம் கனவா நிஜமா என்று புரியாமல் திண்டாடினாள். தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் குஷாவின் நடவடிக்கைகளை மொட்டுவும் கண்டு கொண்டாள் தான். ஆனால் இதற்கெல்லாம் அவனுடைய குற்றயுணர்ச்சி தான் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு அவனது இந்த திடீர் செய்கை மேலும் அதிர்ச்சியளித்தது. அவன் சொன்னதைப்போல இவள் உள்ளர்த்தம் ஏதும் இல்லாமல் தான் பாடினாள். ஆனால் பதிலுக்கு அவன் பாடியதில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருப்பதாகவே அவளுக்குப் பட்டது.
அதைப் பாடும் வேளையில் அவன் கண்களில் மிளிர்ந்த குறும்பு அவளுக்கு வித்தியாசமான ஒரு குஷாவைக் காட்டியது. அக்குறும்புடன் இன்னொன்றும் ஒளிந்திருந்ததை அவள் உணர்ந்தாள். ஆனால் அதை காதல் என்று புரிந்துகொள்ளாமல் இணைந்து வாழ்வோமா என்று அவன் கேட்பதாகவே அவளுக்குப் பட்டது. அதெப்படி காதல் இல்லாமல் கடமைக்கென்று சேர்ந்து வாழ முடியும் என்று யோசித்தவள் அடுத்த சில நாட்களுக்கு மந்திரித்து விடப்பட்ட கோழி போல் வலம் வந்தாள். இவ்வாறு இருக்க இன்று தன்னுடைய அறையில் அதும் தன்னுடைய படுக்கையில் அதும் தன்னுடைய இடத்தில் ஒய்யாரமாக இருப்பவனை முறைத்தவாறு நின்றாள்.
"என்ன நைட் முழுக்க இப்படியே நிக்குறதா உத்தேசமா?" என்றவன் தான் அவளுடைய படுக்கையை ஆக்கிரமித்ததால் தான் அவள் நிற்கிறாள் என்று உணராமல் கேள்வி கேட்டு தன்னுடைய வேலையில் மூழ்க,
"என் பெட் ஷீட் கொடு... நான் அந்த ரூமுக்கு போறேன்..." என்றவள் அவனுக்கு அடியில் இருக்கும் அவள் பெட் ஷீட்டை இழுக்க ஒதுங்குவதைப் போல் ஒதுங்கி அவள் இழுக்கும் வேளையில் இவனும் அதை இழுக்க அதில் தடுமாறி அவன் மீதே விழுந்தாள் மொட்டு.
அவளோ கடும் கோபத்துடன் அவனை எதிர்நோக்க அவனோ மறுபுறம் ஒதுங்கி அவளை அந்தக் கட்டிலில் படுக்க வைத்தான்.
"எதை மனசுல வெச்சுட்டு நீ இப்படியெல்லாம் நடந்துக்குற குஷா?" என்று கேட்டவளை புரிந்தும் புரியாததைப் போல் ஒரு பார்வை பார்க்க,
"உனக்கு நான் எதைக் கேட்க வரேன்னு நல்லாவே புரியுது... சோ நடிக்காம உண்மையைச் சொல்லு... நீ என்கிட்ட என்னத்த எதிர்பாக்குற?"
இதுவரை விட்டத்தை நோக்கியவாறு படுத்திருந்தவன் தன்னுடைய அலைபேசியை ஓரமாக வைத்து அவள் புறமாகத் திரும்பிப் படுத்தான். இருவருக்கும் இடையில் இரண்டடி இடைவெளி தான் இருந்தது. ஒருவரின் மூச்சுக்காற்று மற்றொருவரின் மீது உரசிச்செல்ல,
"நமக்கு கல்யாணம் ஆகி நாப்பது நாளாகப்போகுது தெரியுமா?" என்றவனுக்கு,
"அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்ற?"
"ஏன் என்ன பண்ணனும்னு தெரியாதா?" என்று மீண்டும் குறும்போடு அவளைச் சீண்ட,
"அவ்வளவு ஆசை இருக்கறவன் என்னைக் கல்யாணம் செஞ்சு இருக்கக்கூடாது..."
"உனக்கு இன்னுமா என்னைப்பற்றிய அபிப்ராயம் மாறல?" என்றவனுக்கு,
"எப்படி மாறும் குஷா? நீயும் நானும் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எப்போ கடைசியாப் பேசுனோம் யோசிச்சுப்பாரு?" என்றவள் நிறுத்திவிட்டு,
"நாம கடைசியா அன்னைக்கு சூரக்கோட்டையில சண்டை போட்டதோட சரி... இதுநாள் வரை என்னைக் கண்டாலே எரிஞ்சு விழுந்து என்கிட்ட வெறும் சண்டை போட்டு என்னை அறஞ்சிட்டு திடீர்னு என் கழுத்துல தாலி கட்டி... அதும் எப்படி? நான் உன்னை லவ் பண்ணதா சொல்லி ஏமாத்துன உன்னைப் பற்றிய பிம்பம் இந்த நாப்பது நாளுல மாறிடுமா என்ன? அதும் நீ முன்னாடி நடந்ததுக்கும் இப்ப நடந்துக்கறதுக்கும் இருக்குற வித்தியாசமே எனக்கு இன்னும் குழப்புது... இதெல்லாம் நீ தப்பு செஞ்சிட்டோங்கற குற்றயுணர்ச்சியில செய்யுறயா இல்ல என்னனு எனக்கு விளங்கவே இல்ல... எனக்குப் பிடிச்ச தையல் மெஷின் எனக்குப் பிடிச்ச பூச்செடி வீட்ல ரெண்டு பூனைக்குட்டி ஒரு நாய்க்குட்டி வாங்கி வெச்சா நான் உடனே உன்கூடச் சேர்ந்து வாழணுமா? ஐ மீன் நீ எதிர்பாக்குறத..."
"சரி உன் பேச்சுக்கே வருவோம்... இப்போ இதெல்லாம் நான் செஞ்சிருக்க கூடாதுனு சொல்ற ரைட்? உன்னை அப்படியே அம்போன்னு விட்டுட்டுப் போகணும் ரைட்?"
"அப்படி இல்ல குஷா... உனக்கு நான் சொல்ல வரது புரியுதா புரியலையா? நீ ஏன் என்னைக் கல்யாணம் செஞ்ச? அதாவது உனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்காத உன் கூட எப்பபாரு சண்டை போட்டுட்டு உன்னை வெறுப்பேத்தி உன் அப்பாவைத் திட்டி உன்னைத் திட்டி உன்ன ஊசியில குத்தி காயப்படுத்தி இன்னும் ஓப்பனா சொல்லனும்னா நீ உன் தாத்தா வீட்ல சாப்பிட உன்கிட்டயே காசு வாங்குன என்னை ஏன் நீ கல்யாணம் செஞ்ச? ஒன்னு உனக்கு என் மேல காதல் இருக்கனும்..." என்றதும் குஷா ஒருகணம் அதிர,
"ஆனா பாரு அதுக்கு தான் வாய்ப்பே இல்ல... சூரியன் மேற்குல உதிச்சா கூட உதிக்குமே தவிர உனக்கு என்னைப் பிடிக்க மட்டும் செய்யாதுன்னு எனக்கே தெரியும்... இல்ல என்னைப் பழிவாங்க கல்யாணம் செஞ்சு இருக்கனும்... நீ செய்யுற ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் போது இதுக்கும் வாய்ப்பில்லை... வாய்ப்பில்லை தானே?" என்று இறுதியில் அவள் கேள்வியாக நிறுத்த ஏனோ அது குஷாவை சற்று வருந்த வைத்தது தான். பின்னே அவள் எவ்வளவு இன்செக்குரிட்டியில் இருக்கிறாள் என்று அவனுக்கும் புரிந்தது.
"இப்போ சொல்லு குஷா... என்னை ஏன் கல்யாணம் பண்ண? கண்டிப்பா லவா அனு கல்யாணம் நடக்கனுங்கறதுக்காகவோ இல்ல நம்ம குடும்பம் அவமானப் படும்னோ மட்டும் நீ இதைச் செய்யல... உன் பாஷையிலே சொல்லனும்னா உனக்குப் பிடிக்காத ஒரு பட்டிக்காடை நீ ஏன் கல்யாணம் செஞ்ச? இல்ல எந்த தைரியத்துல என்னைச் சமாளிக்கலாம்னு முடிவுபண்ண? எனக்குப் புரியல குஷா..." என்றவள் அவனையே பார்க்க,
அவளைச் சுற்றி அவன் கையை வைத்தவன் தன்னோடு அவளை இழுத்து தங்களுக்குள் இருந்த இரண்டடி இடைவெளியை ஓரடியாகக் குறைத்து,
"நீ யாரையாவது லவ் பண்றயா மொட்டு?" என்றதும் அவனை முறைத்தாள் பனித்துளி.
"நீ தான் லவாவை விரும்பவே இல்லையே அப்பறோம் ஏன் அவனை கல்யாணம் செய்ய சம்மதிச்ச? நான் சொல்லட்டா? உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வர காதலை விட கல்யாணத்துக்குப் பிறகு வரும் காதல் மேல தான் நம்பிக்கை... சரியா? அதும் போக உன் அப்பா அம்மா எப்படி இருக்காங்களோ அப்படித்தான் நீயும் இருக்கபோறன்னு நீ நெனச்ச... கண்டிப்பா இங்க எல்லா புருஷன் பொண்டாட்டியும் கடைசி வரை வெறும் ரொமான்ஸ் மட்டுமே செய்யப்போறதில்லை... சண்டை சமாதானம், புரிதல் அன்பு இதெல்லாம் வேணும்... நான் என் அப்பா அம்மாவைப் பார்த்து வளர்ந்தவன். அவங்க ஒன்னும் லவ் மேரேஜ் இல்ல... ஆனா அவங்களுக்குள்ள ஒரு அற்புதமான கெமிஸ்ட்ரி இருக்கு... நான் பார்த்திருக்கேன்... சமயங்கள்ல இவங்க லவ் பண்ணியிருப்பாங்களோனு நான் யோசிச்சும் இருக்கேன்... அப்போ தான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்... நாம லவ் பண்றவங்கள எல்லாம் கல்யாணம் செய்ய முடியாது மொட்டு... ஆனா கல்யாணம் செய்யறவர்களை கண்டிப்பா லவ் பண்ணலாம்... லவா அனு லவ் பண்ணாங்க சோ கல்யாணம் பண்ணிகிட்டாங்க... நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்... சோ இனிமேல் லவ் பண்ணலாம்... அண்ட் நீ ஒன்னு மறந்துட்ட... என்னதான் நமக்குள்ள ஆயிரம் சண்டை வந்திருந்தாலும் அதுல எதுக்குமே நீயும் நானும் நேரடியா காரணமானதில்லை... நீ தாத்தாவுக்காகப் பேசுவ நான் என் அப்பாவுக்காகப் பேசுவேன்... ஆனா நம்ம ரெண்டுப் பேருக்குள்ள என்ன பிரச்சனை இருந்தது? யாரோ ஒரு மூணாவது மனுஷங்களுக்காக நாம சண்டை போட்டிருக்கோம்... இதுல நியாயமா சண்டை போடவேண்டிய என் அப்பாவும் உன் அப்பாவுமே சம்மந்தி ஆகும் போது நாம ஏன் புருஷன் பொண்டாட்டியா வாழ முயற்சி செய்யக்கூடாது? அதும் போக உன்னோட கொள்கையிலும் உன் தரப்பு நியாயத்திலும் தான் எனக்கு முரண்பாடு இருக்கே தவிர உன்மேல எனக்கு எந்த முரண்பாடும் இல்ல... நீ பட்டிக்காடா இருந்தாலும் படிச்சிருக்க போல்டா இருக்க... அழகாவும் இருக்க..." என்று சொல்ல மொட்டுவையும் அறியாமல் அவள் கன்னம் வெட்கத்தில் சிவந்தது.
பேச்சு வாக்கில் அவளை தன்னுடன் இறுக்கிக்கொண்டவன்,"வீணா தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு குழம்பிகாத... உன்னை நான் பழி வாங்கப்போறதில்லை... கண்டிப்பா நமக்குள்ள நல்ல புரிதல் வரும்... அப்போ நீ புரிஞ்சிப்ப... இப்ப அமைதியாப்படு... இன்னும் மூணு நாள்ல அப்பா அம்மா வந்திடுவாங்க... அதுக்கு இப்போயிருந்தே ஒரே ரூம்ல படுத்தா தான் செட் ஆகும்... அண்ட் அவங்கள பொறுத்தவரை நாம லவ்வர்ஸ்... ஞாபகமிருக்கட்டும்... குட் நைட் பனித்துளி..." என்றவன் அவளை அணைத்தவாறே உறங்க சிறிது நேரம் கழித்து தான் அதை உணர்ந்தாள் மொட்டு.
'நான் எப்படி இவ்வளவு நெருங்கி வந்தேன்... இல்லையே...' என்று முயன்று திரும்பி படுக்க அடுத்த நொடியே அவளை மீண்டும் தன்னோடு அணைத்திருந்தான் குஷா. ஆனால் அந்த அணைப்பு அவளை எந்த விதத்திலும் உறுத்தவில்லை. அதில் கல்மிஷம் ஏதும் இல்லை. அதனால் அவளும் வாகாக உறங்கினாள்.
*****************
அங்கே திட்டமிட்டபடியே அனுவும் லவாவும் அந்த வார விடுமுறையை கோல்கொண்டா கோட்டைக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். நிறைய போட்டோஸ் செல்பீ எடுத்து மாலை வரை அங்கிருக்கும் சிறு சிறு இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்து வீட்டிற்குத் திரும்பினார்கள். நீண்ட நாட்கள் கழித்து ஆசை தீர ஊர் சுற்றியதாலோ என்னவோ இருவரும் அதிகபடியான சோர்வுக்கு உள்ளாகினார்கள். லவா பைக்கை செலுத்த அவனுக்குப் பின் அமர்ந்து வந்தவளுக்கோ உடல் சோர்வடைய அவன் முதுகில் சாய்ந்துகொண்டாள் அனு.
அதுவரை வேகமாக வந்தவன் அதன் பின் அவளுக்காக வண்டியை மெதுவாகச் செலுத்தினான். முதல் முறையாக தன்னுடன் உரிமையாகப் பயணித்தவளை எண்ணி லவாவுக்கு அவள் மீதான ஸ்பார்க் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. அதும் போக நீண்ட நாட்கள் கழித்து இன்று அவனை தன்னுடைய கேள்விகளால் திக்குமுக்காடச் செய்தாள் புல்வெளி.
காலையில் அவளை ஓரிடத்தில் அமரவைத்து அவளுக்காக உணவு வாங்கிவர லவா சென்றிருக்க அப்போது அவனுக்கு அருகில் ஒரு நார்த் இந்தியன் பெண்மணி நின்றவாறு அவனையே டாவடித்து கொண்டிருந்தாள். அதை தூரமிருந்து பார்த்து அனுவுக்கு என்னவோ செய்தது. லவா குஷா இருவரும் பார்த்ததும் கண்களைக் கவரும் ஆடவர்கள் இல்லை என்றாலும் அவர்களைப் போன்றவர்களுக்கென்று சில பெண் விசிறிகள் கட்டாயம் இருக்கிறார்கள். சராசரியை விட சற்று உயர்ந்து வெள்ளையும் அல்லாமல் கறுப்பும் அல்லாமல் மாநிறத்தில் எப்போதும் சிரித்த முகமாய்க் காட்சியளிப்பார்கள். அதிலும் குஷாவைக் காட்டிலும் லவா முகத்தில் ஒரு அமைதியும் புன்னகையும் எப்போதும் குடியிருக்கும். அந்தப் பெண் லவாவை நோக்கி ஒரு சிரிப்பை உதிர்க்க பதிலுக்கு லவாவும் புன்னகைத்தான். அதன் பின் உணவை வாங்கி இருக்கைக்கு வந்து அமர்த்தவனிடம்,
"ஹே லவா அந்தப் பொண்ணு உன்னையே சைட் அடிச்சிட்டு இருந்ததே கவனிச்சயா?" என்று கேசுவலாக கேட்டு ஜூஸை உறிஞ்சினாள் அனு.
'ஆஹா இப்போ ஆமா சொல்லனுமா இல்ல கவனிக்கலனு சொல்லனுமா?' என்று லவா யோசிக்க,
"என்ன சொல்லலாம்னு யோசிக்கறயா லவா?" என்று கேட்க, அதில் ஜெர்க் ஆகி,
"இல்ல அனு... அது வந்து கவனிச்சேன்..." என்று சொல்ல,
"இதுக்கேன் லவா இவ்வளவு பயப்படுற? நான் என்ன இதைக் காரணமா வெச்சு உன்கிட்ட சண்டபோடுவேன்னு யோசிக்கறையா?"
அவனோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று விழிக்க,
"சரி வா..." என்று அவனை வேகமாகக் கிளப்பியவள் அவன் கரம் கோர்த்து அந்தப் பெண்ணின் முன்னால் நடக்க லவாவோ நடப்பதைப் புரியாமல் விழித்தான்.
"என்ன பாக்குற? நான் அந்தப் பெண்ணை வெறுப்பேத்த இதைச் செய்யல... யார் யாரோ உன்னை சைட் அடிச்சு உன்கிட்டப் பேச நினைக்கும் போது உன்னை உயிருக்குயிரா நேசிச்சு போராடி உன்னைக் கல்யாணம் செஞ்ச நான் உன்கூட இப்படி ஜாலியா கைகோர்த்து நடக்கக்கூடாதா என்ன? அண்ட் ரிமெம்பெர், நீ தான் இன்னும் எனக்கு ஓகே சொல்லல ஆனா நான் உனக்கு எப்பயோ ஓகே சொல்லிட்டேன்..." என்று அன்றைய பொழுது முழுவதும் அவன் கையை விடாமல் கோர்த்தவாறே திரிந்தாள் அனு.
லவாவுக்கு இப்போது தான் மனம் சற்று லேசானது. அன்றைய இரவு வைத்தியிடம் அனு அழுததைப் பற்றி குஷா உரைத்த நொடியே லவாவுக்கு இதயத்தை என்னவோ சுருக்கென்று தைத்தது. அப்படியிருக்க இன்று அவள் வதனத்தில் தெரிந்த உற்சாகம் ஏனோ அவனையும் தொற்றிக்கொண்டது.
இரவு வீட்டிற்கு வந்ததும் அலுப்பில் அவள் உறங்கிவிட உறங்கும் அவளிடம்,"உன்னை எனக்கு எப்பயுமே பிடிக்கும் அனு... ஆனா அன்னைக்கு சூழ்நிலை என்னை அமைதியா இருக்க வெச்சிடுச்சு... ரொம்ப சீக்கிரம் உன்மேலான என் லவ்வை என் கண்கள்ல உனக்கு காட்டி நான் புரியவெக்குறேன்... இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசு அனு... அதும் இன்னைக்கு என் கைகோர்த்து நீ நடந்த அப்போ உன் கண்ணுல தெரிஞ்ச அந்தக் கர்வம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டி..." என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன் உறங்கினான்.
அடுத்த இரண்டு நாட்களில் அனுவிற்கு ஒரு நிறுவனத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைக்கப்பட அன்று அவளுக்காக அரைநாள் விடுப்பு எடுத்தவன் அவளை அழைத்துச் செல்ல அவளோ இன்டெர்வீவுக்கான பரபரப்பு துளியும் இல்லாமல் வெகு இலகுவாய் வேடிக்கை பார்த்தவாறு வந்தவளிடம்,
"ஹே அனுமா, நாம ஊர் சுத்திப்பார்க்க போகல... கொஞ்சமாச்சும் சீரியஸா இரு... உன்னால இன்டெர்வியுக்கு உண்டான மரியாதையே போயிடும் போலே?"
"ஹே லவா நான் ஏன் டென்ஷனா இருக்கனும் சொல்லு? டென்ஷன் ஆனா தான் நமக்குத் தெரிஞ்சதெல்லாம் கூட மறந்துபோயிடும்... மிஞ்சி மிஞ்சி போனா என்ன கேட்பானுங்க? ப்ரோக்ராம் எழுத சொல்லுவானுங்க இல்ல அதுல இருந்து கேள்வி கேட்பானுங்க... தெரிஞ்சா பதில் சொல்லப்போறேன் தெரியாட்டி தெரியலைனு சொல்லப்போறேன்... இதுக்கேன் நான் டென்ஷன் ஆகி அதனால் பயந்து தெரிஞ்சதும் மறந்து வாய் குழறி எதுக்கு இதெல்லாம்?" என்று சொன்னவள் மீண்டும் வேடிக்கை பார்க்க,
"நீ எப்பயுமே இப்படித்தானா அனு?"
"இப்படித்தானானா?"
"டேக் இட் ஈஸி டைப்பா?"
"அப்படித்தான் நானும் நெனச்சேன்... ஆனா எல்லாத்துக்கும் ஒரு விதிவிலக்கு இருக்குமில்ல? அது மாதிரி என்னோட விதிவிலக்கு நீ... ஆமா லவா... என்னுடைய மறுபக்கத்தை எனக்கே உணர்த்திய பங்கு உனக்கிருக்கு..." என்னும் வேளையில் அவளது அலுவலகம் வந்துவிட அவளை இறக்கிவிட்டவன் அவளுக்காக அருகில் காத்திருந்தான். ஆனால் அவனுடைய ஒவ்வொரு அணுவும் அனுவைச் சுற்றியே இருந்தது.
சிறிது நேரத்தில் கட்டை விரலை உயர்த்தியவாறே வந்தவளின் செய்கையில் மனம் நிறைந்தவன்,"ஓவர் கான்பிடென்ஸ் உடம்புக்கு ஆகாது அனுமா" என்று அவளைச் சீண்டினான்.
"அவங்களுக்கு கேள்வியே கேக்க தெரியில லவா... என்னவோ ப்ரெஷர ட்ரீட் பண்ற மாதிரி செஞ்சானுங்க... அதான் நானும் செஞ்சிட்டேன்... இதுக்கு ஓவர் கான்பிடென்சுன்னு அர்த்தமில்ல... மேல்மாடி ஸ்ட்ராங்கா இருந்தா போதும்..." என்று சொல்ல லவாவோ அவளை வைத்தகண் எடுக்காமல் பார்த்தான்.
பிறகு அங்கிருந்து வீட்டிற்குச் செல்லும் வேளையில்,"எப்படியோ ஒரே கல்லுல ரெண்டு மங்கா அடிச்சிட்ட? வேலைக்கு வேலையும் ஆச்சு சாப்பாட்டுக்கு சாப்பாடும் ஆச்சு..." என்று கிண்டல் செய்தான். வீட்டிற்குச் சென்றதும் அவளை அழைத்தவன் அவள் சுதாரிக்கும் முன் அவளுக்கு முத்தம் வைத்து,"இன்னைக்கு என் மனசு மூளை எல்லாமே நீ தான் ஆக்கிரமிச்சு இருந்த அனு... நான் கொஞ்ச கொஞ்சமா உன்னை நெருங்குறேன்... இதை நானே உணருறேன்... நான் ப்ரொபோஸ் பண்ணா உடனே ஏத்துக்கோ அனு... நான் ஏற்கனவே ஹார்ட் வீக் ஆனவன்... என்னை மேலும் வீக் ஆக்கிடாத..." என்றவன் அவளை விடுவிக்க அனுவுக்கோ லவாவுடைய இந்தச் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தது.(நேரம் கைகூடும்...)
 
எபி ரெம்ப யதார்த்தமா இருக்கு. உங்களோட ஸ்பெஷல் டச் அந்த யதார்த்தம் இந்த எபில இருக்குறதா தோனுது அதுக்குனு மத்த எபி எல்லாம் அப்படி இல்லையானு கேக்காதீங்க அது எல்லாத்துலையும் யதார்த்தத்தை விட வேற ஒரு ஃபேக்டர் ஹைலைட்டா இருந்தது. குஷா அண்ட் பனி???? சூப்பர். பனித்துளி கன்பியூஸ் ஆகி கேள்வி கேட்டது?? அதுக்கு ஆழியனோட பதில் ??????. லவா அண்ட் அனு❤️❤️❤️❤️ லவா கொஞ்சமா வளந்துருக்கான். எபி???????? ஒரு டவுட் குஷா பேசுற டயலாக்ஸ்ல "..." இந்த மாதிரி 3டாட்ஸ் எதுக்கு வச்சுருக்கீங்க?
 
Wow? lovely epi .....nan kuta kushava Himalaya ku anupiruvingalonu ninaiche mottu activities pathu.finally bulb eriya vaichu kusha vazhkaiya light vara vaichutinga....analum intha mottu irukale?ellame ivalave confess pandidara ipdi apdinu.....kusha❤️ professor professor than..ennama pesaran?avan sonnathum unmai thane.mottu too nalla munnetram.sonnathum yosichu purinjukara...antha katupayale singing scene?superu......anuma❤️ always nee super ma.cool girl.... correct bayanthu tension anathan Ellam maranthu pogum?...lava propose panla analum pannita madhri than iruku...ithula mukkiya kurippu vera?super?
 
இப்போதான் கடைசியா ரெண்டு எபிசோடு படிச்சேன். எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது.... குட் பாய் பிரவீன் ராஜ் மறஞ்சி பிளபாய் பிரவீன் ராஜ் வந்துட்டாங்க. லவா குஷாவ வச்சி நல்லா என்ஜாய் பண்றிங்க ????. ஒன்னு சரி இல்லையே... மைண்ட்ல அவ்ளோ பிரஷர். இப்போ அது கொஞ்சம் கம்மியா இருக்கு. ரொம்ப எதார்த்தமா ரெண்டு ஜோடிய பார்த்த மாதிரி இருக்கு. குஷா இப்ப எல்லாம் உன்னோட கோபத்தை ரொம்ப மிஸ் பண்றேன். திரும்பவும் பழைய மொட்டு குஷா கான்வர்சேஷன் வேணும்..????????. குஷா அம்மா அப்பா வரத வச்சி ஈசியா கரெக்ட் பண்ணிடுவ போல. லவா உனக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னனா ஐயோ புல்லரிச்சு போச்சு. தம்பியை விட நீ ஓவர் ஸ்பீடு.

பாஸ் பச்ச பிள்ளை எல்லாம் ஸ்டோரி படிக்குது பார்த்து...?????????????????????????????????
 
அன்று இரவும் வேலையெல்லாம் முடித்தவள் உறங்க வர அவளுக்கு முன்பே அங்கு இருந்தான் குஷா. அதும் அவளுடைய படுக்கைக்கு மிக அருகில் இருவருக்கும் இடையில் இருக்கும் தலையணைகள் அனைத்தும் மறுபுறம் இருந்தது. இவன் என்ன இவ்வாறு படுத்திருக்கிறான் என்ற பாவனையோடு அங்கே வந்தவள் அவனையே முறைக்க,
"என்ன பனி தூங்கலையா?" என்று சாதரணமாகக் கேட்டு தன்னுடைய செல்போனை நோண்ட, இப்போதெல்லாம் அடிக்கடி தன்னை 'பனி' என்று அழைக்கும் அவனது எண்ணத்தையும் செய்கையையும் புரியாமல் திண்டாடுகிறாள் மொட்டு. இப்படித்தான் அன்று மாலை கிச்சனில் வேலை செய்துகொண்டிருந்துக்கும் வேளையில் ஹாலில் பாடல் ஓடிக்கொண்டிருக்க தன்னுடைய ஆஸ்தான ஹீரோவான சூர்யாவின் 'காட்டுப்பயலே' பாடல் ஓடிக்கொண்டிருக்க அவளையும் அறியாமல் அதை அவள் பாடியவாறே சமையலில் மூழ்கியிருந்தாள்.
'நான் வெளைஞ்சு நிக்கும் பொம்பள
வெக்கம் கெட்டு நிக்குறேன்
உச்சு கொட்ட வெக்குறியே வாடா...' என்று ஹை பிட்சில் பாடுபவளில் குரல் ஏனோ ஹாலிலிருந்த குஷாவின் செவிகளைத் தீண்ட பூனை போல் சப்தமில்லாமல் உள்ளே சென்றவன் சமையலறையின் வாசலில் சாய்ந்தவாறு நின்று அவள் செய்கையை ரசித்துக்கொண்டிருந்தான். அப்போதும் பின்னால் அவன் நிற்பதைக் கவனிக்காமல் அவள் போக்கில் பாடிக்கொண்டிருந்தவள்,
'நீ தொட்டுப் பேசு சீக்கிரம்
விட்டுப் போகும் என் ஜுரம்
வெட்டிக்கதை பேச வேண்டாம் வாடா...
நான் ஓலைப்பாயை விரிக்கிறேன்
உனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டுப் போடா..." என்றவள் எதற்ச்சையாகத் திரும்ப அங்கே வாயிலில் தன்னையே கண்கொட்டாமல் உதட்டில் சிறு குறும்புடன் பார்க்கும் குஷாவைக் கண்டதும் ஒருகணம் மொட்டு ஜெர்க் ஆகி முழிக்க,
"பரவாயில்லையே நல்லாப் பாடுற... சூப்பர்..." என்றவன் முதலடியை எடுத்து அவளை நோக்கி வர மொட்டுவிடம் இதுவரை இருந்த தைரியம் முதன் முறை ஆட்டம் கண்டது.
"பொதுவா நம்ம மனசுக்குப் பிடிச்சதோ இல்லை என்னவெல்லாம் நடக்கனும்னு ஆசைப்படுறோமோ அது தான் பாடலா வெளிவரும்... அந்தக் காலத்துல தன்னுடைய ஆசைகளை எல்லாம் வெளிப்படையாச் சொல்லாம இப்படித்தான் குறிப்பால் உணர்த்துவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்... சோ இதை உன்னோட ஆசைகளா எடுத்துக்கலாமா?" என்றவன் இப்போது அவளை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் நின்றான்.
"நீ எதுக்கு தயங்கி நிக்குற? என்னை ஒதுக்கி வெக்குற? சும்மா முரண்டு பிடிக்குற கட்டி அள்ளுடி..." என்று எசப்பாட்டுப் பாடியவாறே அவளை நெருங்கியிருந்தான்.
"அப்படியெல்லாம் இல்ல... நான்... சும்மா தான்... பாடுனேன்... நீ ஏன்... இவ்வளவு நெருங்கி நிக்குற?" என்று அவளுடைய உதடுகள் தந்தியடிக்க முதல் முறையாக அவள் தன்னுடைய வழக்கமான திமிர் அடாவடி ஏதுமின்றி பதட்டத்தில் நிற்பதை ரசித்தவன்,
"ஏன் இப்படிப் பதறுற பனி? கல்யாணம் தான் உன் சம்மதம் இல்லாம நடந்தது... கண்டிப்பா இனி நடக்கப்போற எல்லாமே உன் விருப்பதோட தான் நடக்கும்... ஐ அம் வெயிட்டிங்..." என்று திரும்பியவன் நொடியில் மீண்டும் அவள்புறமாகத் திரும்பி அவள் காதோரம் வழியும் வேர்வையை தன்னுடைய கைக்குட்டையால் துடைத்து,
"பொதுவா அழகும் நல்ல குரல் வளமும் எல்லோருக்கும் சேர்ந்தாப்புல அமையாது... ஆனா உனக்கு ரெண்டும் இருக்கு... கீப் இட் அப்..." என்று சொல்லி மேலும் அங்கிருந்து அவளை அவஸ்தை செய்ய விரும்பாது அகன்றான்.
அவன் சென்றதும் சிறிது நேரம் பிரமை பிடித்தவள் போல் இருந்தவள் தற்போது நடந்ததெல்லாம் கனவா நிஜமா என்று புரியாமல் திண்டாடினாள். தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் குஷாவின் நடவடிக்கைகளை மொட்டுவும் கண்டு கொண்டாள் தான். ஆனால் இதற்கெல்லாம் அவனுடைய குற்றயுணர்ச்சி தான் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு அவனது இந்த திடீர் செய்கை மேலும் அதிர்ச்சியளித்தது. அவன் சொன்னதைப்போல இவள் உள்ளர்த்தம் ஏதும் இல்லாமல் தான் பாடினாள். ஆனால் பதிலுக்கு அவன் பாடியதில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருப்பதாகவே அவளுக்குப் பட்டது.
அதைப் பாடும் வேளையில் அவன் கண்களில் மிளிர்ந்த குறும்பு அவளுக்கு வித்தியாசமான ஒரு குஷாவைக் காட்டியது. அக்குறும்புடன் இன்னொன்றும் ஒளிந்திருந்ததை அவள் உணர்ந்தாள். ஆனால் அதை காதல் என்று புரிந்துகொள்ளாமல் இணைந்து வாழ்வோமா என்று அவன் கேட்பதாகவே அவளுக்குப் பட்டது. அதெப்படி காதல் இல்லாமல் கடமைக்கென்று சேர்ந்து வாழ முடியும் என்று யோசித்தவள் அடுத்த சில நாட்களுக்கு மந்திரித்து விடப்பட்ட கோழி போல் வலம் வந்தாள். இவ்வாறு இருக்க இன்று தன்னுடைய அறையில் அதும் தன்னுடைய படுக்கையில் அதும் தன்னுடைய இடத்தில் ஒய்யாரமாக இருப்பவனை முறைத்தவாறு நின்றாள்.
"என்ன நைட் முழுக்க இப்படியே நிக்குறதா உத்தேசமா?" என்றவன் தான் அவளுடைய படுக்கையை ஆக்கிரமித்ததால் தான் அவள் நிற்கிறாள் என்று உணராமல் கேள்வி கேட்டு தன்னுடைய வேலையில் மூழ்க,
"என் பெட் ஷீட் கொடு... நான் அந்த ரூமுக்கு போறேன்..." என்றவள் அவனுக்கு அடியில் இருக்கும் அவள் பெட் ஷீட்டை இழுக்க ஒதுங்குவதைப் போல் ஒதுங்கி அவள் இழுக்கும் வேளையில் இவனும் அதை இழுக்க அதில் தடுமாறி அவன் மீதே விழுந்தாள் மொட்டு.
அவளோ கடும் கோபத்துடன் அவனை எதிர்நோக்க அவனோ மறுபுறம் ஒதுங்கி அவளை அந்தக் கட்டிலில் படுக்க வைத்தான்.
"எதை மனசுல வெச்சுட்டு நீ இப்படியெல்லாம் நடந்துக்குற குஷா?" என்று கேட்டவளை புரிந்தும் புரியாததைப் போல் ஒரு பார்வை பார்க்க,
"உனக்கு நான் எதைக் கேட்க வரேன்னு நல்லாவே புரியுது... சோ நடிக்காம உண்மையைச் சொல்லு... நீ என்கிட்ட என்னத்த எதிர்பாக்குற?"
இதுவரை விட்டத்தை நோக்கியவாறு படுத்திருந்தவன் தன்னுடைய அலைபேசியை ஓரமாக வைத்து அவள் புறமாகத் திரும்பிப் படுத்தான். இருவருக்கும் இடையில் இரண்டடி இடைவெளி தான் இருந்தது. ஒருவரின் மூச்சுக்காற்று மற்றொருவரின் மீது உரசிச்செல்ல,
"நமக்கு கல்யாணம் ஆகி நாப்பது நாளாகப்போகுது தெரியுமா?" என்றவனுக்கு,
"அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்ற?"
"ஏன் என்ன பண்ணனும்னு தெரியாதா?" என்று மீண்டும் குறும்போடு அவளைச் சீண்ட,
"அவ்வளவு ஆசை இருக்கறவன் என்னைக் கல்யாணம் செஞ்சு இருக்கக்கூடாது..."
"உனக்கு இன்னுமா என்னைப்பற்றிய அபிப்ராயம் மாறல?" என்றவனுக்கு,
"எப்படி மாறும் குஷா? நீயும் நானும் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எப்போ கடைசியாப் பேசுனோம் யோசிச்சுப்பாரு?" என்றவள் நிறுத்திவிட்டு,
"நாம கடைசியா அன்னைக்கு சூரக்கோட்டையில சண்டை போட்டதோட சரி... இதுநாள் வரை என்னைக் கண்டாலே எரிஞ்சு விழுந்து என்கிட்ட வெறும் சண்டை போட்டு என்னை அறஞ்சிட்டு திடீர்னு என் கழுத்துல தாலி கட்டி... அதும் எப்படி? நான் உன்னை லவ் பண்ணதா சொல்லி ஏமாத்துன உன்னைப் பற்றிய பிம்பம் இந்த நாப்பது நாளுல மாறிடுமா என்ன? அதும் நீ முன்னாடி நடந்ததுக்கும் இப்ப நடந்துக்கறதுக்கும் இருக்குற வித்தியாசமே எனக்கு இன்னும் குழப்புது... இதெல்லாம் நீ தப்பு செஞ்சிட்டோங்கற குற்றயுணர்ச்சியில செய்யுறயா இல்ல என்னனு எனக்கு விளங்கவே இல்ல... எனக்குப் பிடிச்ச தையல் மெஷின் எனக்குப் பிடிச்ச பூச்செடி வீட்ல ரெண்டு பூனைக்குட்டி ஒரு நாய்க்குட்டி வாங்கி வெச்சா நான் உடனே உன்கூடச் சேர்ந்து வாழணுமா? ஐ மீன் நீ எதிர்பாக்குறத..."
"சரி உன் பேச்சுக்கே வருவோம்... இப்போ இதெல்லாம் நான் செஞ்சிருக்க கூடாதுனு சொல்ற ரைட்? உன்னை அப்படியே அம்போன்னு விட்டுட்டுப் போகணும் ரைட்?"
"அப்படி இல்ல குஷா... உனக்கு நான் சொல்ல வரது புரியுதா புரியலையா? நீ ஏன் என்னைக் கல்யாணம் செஞ்ச? அதாவது உனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்காத உன் கூட எப்பபாரு சண்டை போட்டுட்டு உன்னை வெறுப்பேத்தி உன் அப்பாவைத் திட்டி உன்னைத் திட்டி உன்ன ஊசியில குத்தி காயப்படுத்தி இன்னும் ஓப்பனா சொல்லனும்னா நீ உன் தாத்தா வீட்ல சாப்பிட உன்கிட்டயே காசு வாங்குன என்னை ஏன் நீ கல்யாணம் செஞ்ச? ஒன்னு உனக்கு என் மேல காதல் இருக்கனும்..." என்றதும் குஷா ஒருகணம் அதிர,
"ஆனா பாரு அதுக்கு தான் வாய்ப்பே இல்ல... சூரியன் மேற்குல உதிச்சா கூட உதிக்குமே தவிர உனக்கு என்னைப் பிடிக்க மட்டும் செய்யாதுன்னு எனக்கே தெரியும்... இல்ல என்னைப் பழிவாங்க கல்யாணம் செஞ்சு இருக்கனும்... நீ செய்யுற ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் போது இதுக்கும் வாய்ப்பில்லை... வாய்ப்பில்லை தானே?" என்று இறுதியில் அவள் கேள்வியாக நிறுத்த ஏனோ அது குஷாவை சற்று வருந்த வைத்தது தான். பின்னே அவள் எவ்வளவு இன்செக்குரிட்டியில் இருக்கிறாள் என்று அவனுக்கும் புரிந்தது.
"இப்போ சொல்லு குஷா... என்னை ஏன் கல்யாணம் பண்ண? கண்டிப்பா லவா அனு கல்யாணம் நடக்கனுங்கறதுக்காகவோ இல்ல நம்ம குடும்பம் அவமானப் படும்னோ மட்டும் நீ இதைச் செய்யல... உன் பாஷையிலே சொல்லனும்னா உனக்குப் பிடிக்காத ஒரு பட்டிக்காடை நீ ஏன் கல்யாணம் செஞ்ச? இல்ல எந்த தைரியத்துல என்னைச் சமாளிக்கலாம்னு முடிவுபண்ண? எனக்குப் புரியல குஷா..." என்றவள் அவனையே பார்க்க,
அவளைச் சுற்றி அவன் கையை வைத்தவன் தன்னோடு அவளை இழுத்து தங்களுக்குள் இருந்த இரண்டடி இடைவெளியை ஓரடியாகக் குறைத்து,
"நீ யாரையாவது லவ் பண்றயா மொட்டு?" என்றதும் அவனை முறைத்தாள் பனித்துளி.
"நீ தான் லவாவை விரும்பவே இல்லையே அப்பறோம் ஏன் அவனை கல்யாணம் செய்ய சம்மதிச்ச? நான் சொல்லட்டா? உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வர காதலை விட கல்யாணத்துக்குப் பிறகு வரும் காதல் மேல தான் நம்பிக்கை... சரியா? அதும் போக உன் அப்பா அம்மா எப்படி இருக்காங்களோ அப்படித்தான் நீயும் இருக்கபோறன்னு நீ நெனச்ச... கண்டிப்பா இங்க எல்லா புருஷன் பொண்டாட்டியும் கடைசி வரை வெறும் ரொமான்ஸ் மட்டுமே செய்யப்போறதில்லை... சண்டை சமாதானம், புரிதல் அன்பு இதெல்லாம் வேணும்... நான் என் அப்பா அம்மாவைப் பார்த்து வளர்ந்தவன். அவங்க ஒன்னும் லவ் மேரேஜ் இல்ல... ஆனா அவங்களுக்குள்ள ஒரு அற்புதமான கெமிஸ்ட்ரி இருக்கு... நான் பார்த்திருக்கேன்... சமயங்கள்ல இவங்க லவ் பண்ணியிருப்பாங்களோனு நான் யோசிச்சும் இருக்கேன்... அப்போ தான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்... நாம லவ் பண்றவங்கள எல்லாம் கல்யாணம் செய்ய முடியாது மொட்டு... ஆனா கல்யாணம் செய்யறவர்களை கண்டிப்பா லவ் பண்ணலாம்... லவா அனு லவ் பண்ணாங்க சோ கல்யாணம் பண்ணிகிட்டாங்க... நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்... சோ இனிமேல் லவ் பண்ணலாம்... அண்ட் நீ ஒன்னு மறந்துட்ட... என்னதான் நமக்குள்ள ஆயிரம் சண்டை வந்திருந்தாலும் அதுல எதுக்குமே நீயும் நானும் நேரடியா காரணமானதில்லை... நீ தாத்தாவுக்காகப் பேசுவ நான் என் அப்பாவுக்காகப் பேசுவேன்... ஆனா நம்ம ரெண்டுப் பேருக்குள்ள என்ன பிரச்சனை இருந்தது? யாரோ ஒரு மூணாவது மனுஷங்களுக்காக நாம சண்டை போட்டிருக்கோம்... இதுல நியாயமா சண்டை போடவேண்டிய என் அப்பாவும் உன் அப்பாவுமே சம்மந்தி ஆகும் போது நாம ஏன் புருஷன் பொண்டாட்டியா வாழ முயற்சி செய்யக்கூடாது? அதும் போக உன்னோட கொள்கையிலும் உன் தரப்பு நியாயத்திலும் தான் எனக்கு முரண்பாடு இருக்கே தவிர உன்மேல எனக்கு எந்த முரண்பாடும் இல்ல... நீ பட்டிக்காடா இருந்தாலும் படிச்சிருக்க போல்டா இருக்க... அழகாவும் இருக்க..." என்று சொல்ல மொட்டுவையும் அறியாமல் அவள் கன்னம் வெட்கத்தில் சிவந்தது.
பேச்சு வாக்கில் அவளை தன்னுடன் இறுக்கிக்கொண்டவன்,"வீணா தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு குழம்பிகாத... உன்னை நான் பழி வாங்கப்போறதில்லை... கண்டிப்பா நமக்குள்ள நல்ல புரிதல் வரும்... அப்போ நீ புரிஞ்சிப்ப... இப்ப அமைதியாப்படு... இன்னும் மூணு நாள்ல அப்பா அம்மா வந்திடுவாங்க... அதுக்கு இப்போயிருந்தே ஒரே ரூம்ல படுத்தா தான் செட் ஆகும்... அண்ட் அவங்கள பொறுத்தவரை நாம லவ்வர்ஸ்... ஞாபகமிருக்கட்டும்... குட் நைட் பனித்துளி..." என்றவன் அவளை அணைத்தவாறே உறங்க சிறிது நேரம் கழித்து தான் அதை உணர்ந்தாள் மொட்டு.
'நான் எப்படி இவ்வளவு நெருங்கி வந்தேன்... இல்லையே...' என்று முயன்று திரும்பி படுக்க அடுத்த நொடியே அவளை மீண்டும் தன்னோடு அணைத்திருந்தான் குஷா. ஆனால் அந்த அணைப்பு அவளை எந்த விதத்திலும் உறுத்தவில்லை. அதில் கல்மிஷம் ஏதும் இல்லை. அதனால் அவளும் வாகாக உறங்கினாள்.
*****************
அங்கே திட்டமிட்டபடியே அனுவும் லவாவும் அந்த வார விடுமுறையை கோல்கொண்டா கோட்டைக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். நிறைய போட்டோஸ் செல்பீ எடுத்து மாலை வரை அங்கிருக்கும் சிறு சிறு இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்து வீட்டிற்குத் திரும்பினார்கள். நீண்ட நாட்கள் கழித்து ஆசை தீர ஊர் சுற்றியதாலோ என்னவோ இருவரும் அதிகபடியான சோர்வுக்கு உள்ளாகினார்கள். லவா பைக்கை செலுத்த அவனுக்குப் பின் அமர்ந்து வந்தவளுக்கோ உடல் சோர்வடைய அவன் முதுகில் சாய்ந்துகொண்டாள் அனு.
அதுவரை வேகமாக வந்தவன் அதன் பின் அவளுக்காக வண்டியை மெதுவாகச் செலுத்தினான். முதல் முறையாக தன்னுடன் உரிமையாகப் பயணித்தவளை எண்ணி லவாவுக்கு அவள் மீதான ஸ்பார்க் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. அதும் போக நீண்ட நாட்கள் கழித்து இன்று அவனை தன்னுடைய கேள்விகளால் திக்குமுக்காடச் செய்தாள் புல்வெளி.
காலையில் அவளை ஓரிடத்தில் அமரவைத்து அவளுக்காக உணவு வாங்கிவர லவா சென்றிருக்க அப்போது அவனுக்கு அருகில் ஒரு நார்த் இந்தியன் பெண்மணி நின்றவாறு அவனையே டாவடித்து கொண்டிருந்தாள். அதை தூரமிருந்து பார்த்து அனுவுக்கு என்னவோ செய்தது. லவா குஷா இருவரும் பார்த்ததும் கண்களைக் கவரும் ஆடவர்கள் இல்லை என்றாலும் அவர்களைப் போன்றவர்களுக்கென்று சில பெண் விசிறிகள் கட்டாயம் இருக்கிறார்கள். சராசரியை விட சற்று உயர்ந்து வெள்ளையும் அல்லாமல் கறுப்பும் அல்லாமல் மாநிறத்தில் எப்போதும் சிரித்த முகமாய்க் காட்சியளிப்பார்கள். அதிலும் குஷாவைக் காட்டிலும் லவா முகத்தில் ஒரு அமைதியும் புன்னகையும் எப்போதும் குடியிருக்கும். அந்தப் பெண் லவாவை நோக்கி ஒரு சிரிப்பை உதிர்க்க பதிலுக்கு லவாவும் புன்னகைத்தான். அதன் பின் உணவை வாங்கி இருக்கைக்கு வந்து அமர்த்தவனிடம்,
"ஹே லவா அந்தப் பொண்ணு உன்னையே சைட் அடிச்சிட்டு இருந்ததே கவனிச்சயா?" என்று கேசுவலாக கேட்டு ஜூஸை உறிஞ்சினாள் அனு.
'ஆஹா இப்போ ஆமா சொல்லனுமா இல்ல கவனிக்கலனு சொல்லனுமா?' என்று லவா யோசிக்க,
"என்ன சொல்லலாம்னு யோசிக்கறயா லவா?" என்று கேட்க, அதில் ஜெர்க் ஆகி,
"இல்ல அனு... அது வந்து கவனிச்சேன்..." என்று சொல்ல,
"இதுக்கேன் லவா இவ்வளவு பயப்படுற? நான் என்ன இதைக் காரணமா வெச்சு உன்கிட்ட சண்டபோடுவேன்னு யோசிக்கறையா?"
அவனோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று விழிக்க,
"சரி வா..." என்று அவனை வேகமாகக் கிளப்பியவள் அவன் கரம் கோர்த்து அந்தப் பெண்ணின் முன்னால் நடக்க லவாவோ நடப்பதைப் புரியாமல் விழித்தான்.
"என்ன பாக்குற? நான் அந்தப் பெண்ணை வெறுப்பேத்த இதைச் செய்யல... யார் யாரோ உன்னை சைட் அடிச்சு உன்கிட்டப் பேச நினைக்கும் போது உன்னை உயிருக்குயிரா நேசிச்சு போராடி உன்னைக் கல்யாணம் செஞ்ச நான் உன்கூட இப்படி ஜாலியா கைகோர்த்து நடக்கக்கூடாதா என்ன? அண்ட் ரிமெம்பெர், நீ தான் இன்னும் எனக்கு ஓகே சொல்லல ஆனா நான் உனக்கு எப்பயோ ஓகே சொல்லிட்டேன்..." என்று அன்றைய பொழுது முழுவதும் அவன் கையை விடாமல் கோர்த்தவாறே திரிந்தாள் அனு.
லவாவுக்கு இப்போது தான் மனம் சற்று லேசானது. அன்றைய இரவு வைத்தியிடம் அனு அழுததைப் பற்றி குஷா உரைத்த நொடியே லவாவுக்கு இதயத்தை என்னவோ சுருக்கென்று தைத்தது. அப்படியிருக்க இன்று அவள் வதனத்தில் தெரிந்த உற்சாகம் ஏனோ அவனையும் தொற்றிக்கொண்டது.
இரவு வீட்டிற்கு வந்ததும் அலுப்பில் அவள் உறங்கிவிட உறங்கும் அவளிடம்,"உன்னை எனக்கு எப்பயுமே பிடிக்கும் அனு... ஆனா அன்னைக்கு சூழ்நிலை என்னை அமைதியா இருக்க வெச்சிடுச்சு... ரொம்ப சீக்கிரம் உன்மேலான என் லவ்வை என் கண்கள்ல உனக்கு காட்டி நான் புரியவெக்குறேன்... இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசு அனு... அதும் இன்னைக்கு என் கைகோர்த்து நீ நடந்த அப்போ உன் கண்ணுல தெரிஞ்ச அந்தக் கர்வம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டி..." என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன் உறங்கினான்.
அடுத்த இரண்டு நாட்களில் அனுவிற்கு ஒரு நிறுவனத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைக்கப்பட அன்று அவளுக்காக அரைநாள் விடுப்பு எடுத்தவன் அவளை அழைத்துச் செல்ல அவளோ இன்டெர்வீவுக்கான பரபரப்பு துளியும் இல்லாமல் வெகு இலகுவாய் வேடிக்கை பார்த்தவாறு வந்தவளிடம்,
"ஹே அனுமா, நாம ஊர் சுத்திப்பார்க்க போகல... கொஞ்சமாச்சும் சீரியஸா இரு... உன்னால இன்டெர்வியுக்கு உண்டான மரியாதையே போயிடும் போலே?"
"ஹே லவா நான் ஏன் டென்ஷனா இருக்கனும் சொல்லு? டென்ஷன் ஆனா தான் நமக்குத் தெரிஞ்சதெல்லாம் கூட மறந்துபோயிடும்... மிஞ்சி மிஞ்சி போனா என்ன கேட்பானுங்க? ப்ரோக்ராம் எழுத சொல்லுவானுங்க இல்ல அதுல இருந்து கேள்வி கேட்பானுங்க... தெரிஞ்சா பதில் சொல்லப்போறேன் தெரியாட்டி தெரியலைனு சொல்லப்போறேன்... இதுக்கேன் நான் டென்ஷன் ஆகி அதனால் பயந்து தெரிஞ்சதும் மறந்து வாய் குழறி எதுக்கு இதெல்லாம்?" என்று சொன்னவள் மீண்டும் வேடிக்கை பார்க்க,
"நீ எப்பயுமே இப்படித்தானா அனு?"
"இப்படித்தானானா?"
"டேக் இட் ஈஸி டைப்பா?"
"அப்படித்தான் நானும் நெனச்சேன்... ஆனா எல்லாத்துக்கும் ஒரு விதிவிலக்கு இருக்குமில்ல? அது மாதிரி என்னோட விதிவிலக்கு நீ... ஆமா லவா... என்னுடைய மறுபக்கத்தை எனக்கே உணர்த்திய பங்கு உனக்கிருக்கு..." என்னும் வேளையில் அவளது அலுவலகம் வந்துவிட அவளை இறக்கிவிட்டவன் அவளுக்காக அருகில் காத்திருந்தான். ஆனால் அவனுடைய ஒவ்வொரு அணுவும் அனுவைச் சுற்றியே இருந்தது.
சிறிது நேரத்தில் கட்டை விரலை உயர்த்தியவாறே வந்தவளின் செய்கையில் மனம் நிறைந்தவன்,"ஓவர் கான்பிடென்ஸ் உடம்புக்கு ஆகாது அனுமா" என்று அவளைச் சீண்டினான்.
"அவங்களுக்கு கேள்வியே கேக்க தெரியில லவா... என்னவோ ப்ரெஷர ட்ரீட் பண்ற மாதிரி செஞ்சானுங்க... அதான் நானும் செஞ்சிட்டேன்... இதுக்கு ஓவர் கான்பிடென்சுன்னு அர்த்தமில்ல... மேல்மாடி ஸ்ட்ராங்கா இருந்தா போதும்..." என்று சொல்ல லவாவோ அவளை வைத்தகண் எடுக்காமல் பார்த்தான்.
பிறகு அங்கிருந்து வீட்டிற்குச் செல்லும் வேளையில்,"எப்படியோ ஒரே கல்லுல ரெண்டு மங்கா அடிச்சிட்ட? வேலைக்கு வேலையும் ஆச்சு சாப்பாட்டுக்கு சாப்பாடும் ஆச்சு..." என்று கிண்டல் செய்தான். வீட்டிற்குச் சென்றதும் அவளை அழைத்தவன் அவள் சுதாரிக்கும் முன் அவளுக்கு முத்தம் வைத்து,"இன்னைக்கு என் மனசு மூளை எல்லாமே நீ தான் ஆக்கிரமிச்சு இருந்த அனு... நான் கொஞ்ச கொஞ்சமா உன்னை நெருங்குறேன்... இதை நானே உணருறேன்... நான் ப்ரொபோஸ் பண்ணா உடனே ஏத்துக்கோ அனு... நான் ஏற்கனவே ஹார்ட் வீக் ஆனவன்... என்னை மேலும் வீக் ஆக்கிடாத..." என்றவன் அவளை விடுவிக்க அனுவுக்கோ லவாவுடைய இந்தச் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தது.(நேரம் கைகூடும்...)
super super...
 
Top