Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-3

Advertisement

Correctaa sonneenga ji... Sila place nammai light aa feel panna vaikkum thaan, village slang laam kalakureenga, generation songs laam semma, evvalavu a.c la irunthaalum iyarkai kaathunaa thani alathi thaan, athum gramathu la naa sollave vendaam, vayal veli, kaathu semma feel....
Rendu perum same 'avala' thaan nenachaangalaa? athu motta?
Lava.....En inamadaa nee.... ammachi... Very intelligent pola, thathaava easy aa kandu pidikka vachitaanga,
Orey pasa poraatamaalla irukku
நன்றி... கண்டிப்பா அது உண்மை! இது ஒரு புது முயற்சி தான்? முதல் பாதி இப்படித் தான் கிராமத்துல போகும்! சொல்றேன் இன்னும் நிறைய பாச போராட்டம் இருக்கு... இதொரு கமெர்சியல் பேமிலி ஸ்டோரி...
 
பாட்டு பத்தி ரொம்ப சூப்பரா சொன்னீங்க...உண்மையிலேயே நாம சின்ன பிள்ளைகளா இருந்த போது வந்த பாட்டுக்கள் தான் இப்போ வரைக்கும் நம்ம மனசுல நிக்கும்... அப்போ முதல்முதலா நாம அந்த பாட்டு கேக்கும்போது என்ன மனநிலையில இருந்தோமோ அந்த பீலிங் எப்போ அந்த பாட்டை கேட்டாலும் வரும்... அதனாலதான் எல்லாருமே அந்தக் காலத்துல நாங்க கேட்ட பாட்டு மாதிரி வருமான்னு பெருமை பேசுறது ?????????
 
பாட்டு பத்தி ரொம்ப சூப்பரா சொன்னீங்க...உண்மையிலேயே நாம சின்ன பிள்ளைகளா இருந்த போது வந்த பாட்டுக்கள் தான் இப்போ வரைக்கும் நம்ம மனசுல நிக்கும்... அப்போ முதல்முதலா நாம அந்த பாட்டு கேக்கும்போது என்ன மனநிலையில இருந்தோமோ அந்த பீலிங் எப்போ அந்த பாட்டை கேட்டாலும் வரும்... அதனாலதான் எல்லாருமே அந்தக் காலத்துல நாங்க கேட்ட பாட்டு மாதிரி வருமான்னு பெருமை பேசுறது ?????????
100% கரெக்ட்... பின் தொன்னூறுகளில் காலை எழுந்ததும் அந்த டேப் ரெக்கார்டரில் 90'ஸ் ஹிட்ஸ் ஆனா ஆசை, ரோஜா, இந்தியன், முதல்வன்னு ரஹ்மான் தேவாவுடன் தான் என் பொழுதையே தொடங்குவேன். இன்றைக்கும் ஒரு மோசமான மனநிலையிலும் அப்பாடல்களை கேட்க நேர்ந்தால் மனதில் இதம் கூடி ஒரு புத்துணர்ச்சி எழுவதை என்னால் தடுக்கமுடிவதில்லை... good old memories??? நன்றி 'புல்வெளி புல்வெளி என் பனித்துளி பனித்துளி...' என் all time favorite... அதான் ஹீரோயின்ஸ் பேரு புல்வெளி பனித்துளினு வெச்சேன்?
 
100% கரெக்ட்... பின் தொன்னூறுகளில் காலை எழுந்ததும் அந்த டேப் ரெக்கார்டரில் 90'ஸ் ஹிட்ஸ் ஆனா ஆசை, ரோஜா, இந்தியன், முதல்வன்னு ரஹ்மான் தேவாவுடன் தான் என் பொழுதையே தொடங்குவேன். இன்றைக்கும் ஒரு மோசமான மனநிலையிலும் அப்பாடல்களை கேட்க நேர்ந்தால் மனதில் இதம் கூடி ஒரு புத்துணர்ச்சி எழுவதை என்னால் தடுக்கமுடிவதில்லை... good old memories??? நன்றி 'புல்வெளி புல்வெளி என் பனித்துளி பனித்துளி...' என் all time favorite... அதான் ஹீரோயின்ஸ் பேரு புல்வெளி பனித்துளினு வெச்சேன்?
[/குரோட்டஸ்
100% கரெக்ட்... பின் தொன்னூறுகளில் காலை எழுந்ததும் அந்த டேப் ரெக்கார்டரில் 90'ஸ் ஹிட்ஸ் ஆனா ஆசை, ரோஜா, இந்தியன், முதல்வன்னு ரஹ்மான் தேவாவுடன் தான் என் பொழுதையே தொடங்குவேன். இன்றைக்கும் ஒரு மோசமான மனநிலையிலும் அப்பாடல்களை கேட்க நேர்ந்தால் மனதில் இதம் கூடி ஒரு புத்துணர்ச்சி எழுவதை என்னால் தடுக்கமுடிவதில்லை... good old memories??? நன்றி 'புல்வெளி புல்வெளி என் பனித்துளி பனித்துளி...' என் all time favorite... அதான் ஹீரோயின்ஸ் பேரு புல்வெளி பனித்துளினு வெச்சேன்?
ஹய்யோ எனக்கும் அது all time favorite... அந்த பாட்டு எங்க எப்ப கேட்டாலும் நின்னு அத கேட்டுட்டு தான் மறுவேலை... இப்போ தான் you tube இருக்கே கிட்சன்ல வேலை செய்ய தொடங்கும் போது முதல் பாட்டே இதுதான்.... முதல்ல தொடங்குற அந்த மியூசிக் கேட்டாலே மெய்மறந்து போறதுனு சொல்வாங்களே அந்த மாதிரி ஆகிடுவேன்???
இந்த பாட்டுக்கு எனக்கு ஒரு குட்டி பிளாஷ்பேக் கூட இருக்கு ??
 
ஹய்யோ எனக்கும் அது all time favorite... அந்த பாட்டு எங்க எப்ப கேட்டாலும் நின்னு அத கேட்டுட்டு தான் மறுவேலை... இப்போ தான் you tube இருக்கே கிட்சன்ல வேலை செய்ய தொடங்கும் போது முதல் பாட்டே இதுதான்.... முதல்ல தொடங்குற அந்த மியூசிக் கேட்டாலே மெய்மறந்து போறதுனு சொல்வாங்களே அந்த மாதிரி ஆகிடுவேன்???
இந்த பாட்டுக்கு எனக்கு ஒரு குட்டி பிளாஷ்பேக் கூட இருக்கு ??
antha chorus kooda soopera irukum...
 
மார்ச் 21,2020 சனிக்கிழமை

சீர்காழியில் இருந்து காலை ஆறு மணிக்கெல்லாம் தங்களுடைய மாருதி ஸ்விப்ட் காரில் ஏ.ஆர்.ரகுமானின் துணையுடன் பயணத்தைக் தொடங்கினார்கள் அவர்கள். வைத்தீஸ்வரன் கோவில், குத்தாலம், கும்பகோணம், பாபநாசம் வரை பைபாஸிலே வந்த அந்த வண்டி என்ன நினைத்ததோ அங்கிருந்து வலப்பக்கமாகத் திருவையாறு செல்லும் வழியில் திரும்பியது. அதுவரை சாலையை வேடிக்கை பார்த்தவாறே பாடலில் மூழ்கியிருந்தவன் சிந்தை வந்தவனாக,

"டேய் குஷா... நீ தப்பாப் போறனு நினைக்கிறேன்..." என்ற தன் கண்ணாடி பிம்பத்தைப் பிரதிபலித்தவாறு இருந்த லவாவுக்கு ஒரு புன்னகை சிந்தி,

"டேய் லவா இவ்வளவு தூரம் வந்து இந்த ஊரோட மிகப்பெரிய சிறப்பான கொள்ளிட ஆற்றங்கரையைப் பார்க்கலைனா எப்படிடா? இது எவ்வளவு ஸ்பெஷலான இடம் தெரியுமா? சின்ன வயசுல நாம சம்மர் வெகேஷனுக்கு வந்தா எப்போடா என்னை இங்க கூட்டிட்டு வருவாங்கனு ஆவலா இருப்பேன்னு நான் சொல்லித்தான் உனக்குத் தெரியனுமா? அது போக பொன்னியின் செல்வன்ல வந்தியத்தேவனோட பயணம் அப்படி இப்படினு எனக்கு இந்த இடத்து மேல சொல்ல முடியாத ஒரு க்ரஷ்... சில இடங்கள் நம்மை ரொம்ப லைட்டா உணரவைக்கும்... எப்படிச் சொல்ல? அங்கலாம் நாம... நம்முடைய மனசு இவ்வளவு பெரிய உடலைத் துறந்து என்னமோ காற்றில் பறக்கும் பலூனா பறக்கும் லவா... எனக்கு அப்படி ஒரு ஃபீல் தரக்கூடிய மூணு முக்கியமான இடங்கள்ல இதுவும் ஒன்னு..." என்ற குஷாவை கேள்வியாய்ப் பார்த்தான் லவா.

"தஞ்சாவூர் பெரிய கோவிலும் நம்ம அம்மாச்சி வீடும் தான் மத்த ரெண்டு இடம்..." என்று லவாவின் பார்வைக்கான விடையையும் சேர்த்துச் சொன்னான்.

அதற்குள் வண்டி நடுக்காவேரியை அடைய சில அடி தூரத்தில் பெரிய ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் பாய்ந்த அந்தக் கொள்ளிட ஆற்றையே சிறிது நேரம் ரசித்துக்கொண்டிருந்தான் குஷா எனப்படும் ஆழியன்.

அவன் ரசிப்பதை ரசித்த லவா,"உனக்கு சரியா தான்டா பேரு வெச்சு இருக்காங்க... ஆழியனுக்கு ஆழி, ஆறு, குட்டைனு ஏன் பாத் ரூம்ல ஷவரைப் பார்த்தல் கூட குஷியாடிடுற குஷா..." என்றவனின் குரல் செவியில் விழுந்தாலும் அதை மட்டும் ரசித்து கவனிக்கும் நிலையில் அவனில்லை. அதற்குள் லவாவின் போன் ஒலிக்கவும் அதைப் பார்த்தவன்,

"நடுக்காவேரியில இருக்கோம் தாத்தா... எப்படியும் இன்னும் ஒரு மணிநேரம் ஆகிடும் தாத்தா..." என்று மறுமுனையில் வைத்தியலிங்கம் கேள்வியை முன்வைக்கும் முன்னே அதற்கான பதிலை மொழிந்தான் லவா.

"எய்யா இப்போ என்னய்யா அங்க பண்றீங்க? காலைப்பொழுது வெய்ய நேரம் வேற... வெரசா வாங்கப்பா... பசியெடுக்கலயா?"

"ஐயோ தாத்தா! என்னையெல்லாம் விட்டா கவுண்டமணி வீட்டுக்கு சாப்பிட வந்த ராமராஜன் மாதிரி எல்லாத்தையும் ஒரு வெட்டு வெட்டுவேன்... கொலைப்பசி... இவன் என்னடானா மனுஷன் பசியைப் புரிஞ்ஜிக்காம காத்து மனசு பலூனு என்னனென்னவோ உளறிட்டு இருக்கான்..." என்னும் வேளையில் திரும்பி முறைத்த குஷா போனை கைப்பற்றி,"சுத்த ரசனை கெட்டவன் தாத்தா இவன்... இதெல்லாம் பாத்தா பசி தூக்கம் எல்லாம் வருமா?" என்று முடிக்கும் முன்னே,

"எனக்கு வரும் டா... நீ ஏன் பேச மாட்ட? நான் நைட் தான் அடிச்சிக்கோ புடிச்சிக்கோன்னு ஹைதராபாத்ல இருந்து ஊருக்கு வந்தேன்... நீ எப்பயுமே இங்கயே இருப்பவன் தானே?" என்ற லவாவுக்கு பதிலளிக்க வாயைத் திறக்கும் முன்னே,

"நீ சாவியைக் கொடு. நான் கிளம்பறேன்... நீ பொறுமையா பசியும் தூக்கமும் இல்லாமல் இங்கேயே ரசிச்சிட்டு கட..." என்று அவனிடமிருந்த சாவியைப் பெற முயன்றான் லவா. அதற்குள் மறுமுனையில் வைத்தியலிங்கம் எதையோ கூற சகோதரர்கள் இருவரும் புறப்பட்டனர்.

'டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா?
மெல்பர்ன் மலர் போல் மெல்லிய மகளா?
டிஜிட்டலில் செதுக்கிய உடலா?
எலிசபெத் டெய்லரின் மகளா?
ஜாகிர் உசேன் தபலா இவள் தானா?'
என்ற பாடல் ஒலிக்க,

"ஆயிரம் சொல்லு லவா 90ஸ் ரஹ்மான் பாட்டு போல இப்போல்லாம் ரஹ்மான் பாட்டு இருக்கிறதில்ல தானே?" என்று இறுதியில் சலித்த குரலில் குஷா உரைக்க,

"அப்படினு கன்பார்மா சொல்ல முடியாது குஷா... ஏன்னா எல்லோருக்கும் ஒவ்வொரு டைம் பீரியட் இருக்கு... இங்க பாட்டுங்கறது வெறும் வரியும் இசையும் மட்டுமில்ல... அது நம்முடைய எமோஷன்ஸ்... அதாவது நாம வாழ்ந்த காலகட்டத்துல நாம அனுபவிச்ச சந்தோசம், சோகம், உற்சாகம், கோவம், காதல்னு நிறைய இந்தப் பாடல்களோடு கலந்திருக்கு. சே, நம்ம தாத்தாவை எடுத்துக்கோ அவருக்கு எம்.எஸ்.வின் 'பார்த்த ஞாபகம் இல்லையோ?'ல அவருடைய காலத்துல அவருக்கு இருந்த எமோஷன்ஸ் ஏன் லவ் இப்படினு நிறைய அந்தப் பாட்டோட கனெக்ட் ஆகியிருப்பாரு... நம்ம அம்மாவுக்கு இளையராஜாவுடைய 'பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களேன்னு என் இனிய பொன் நிலாவே...' பாட்டு நிறைய மெமோரிஸ அவங்களுக்குள்ள வெச்சியிருக்கும்... இதுவே 2000க்கு பிறகு பிறந்த பசங்களைக் கேட்டுப்பார் அவங்களுக்கு 'முன்பே வா அன்பே வா' பேவோரைட்டா இருக்கும்... சோ இங்க பாடல்ங்கறது அந்த அந்த காலகட்டத்தோட மீள் விசை(எலாஸ்டிக் போர்ஸ்...) ரப்பர் பேண்ட் மாதிரி ஸ்ட்ரெட்ச் ஆகி அந்த நினைவுகளைக் கொடுத்து திரும்ப பேக் டு கரெண்டுக்கு வந்திடும்..." என்று லவா நீண்ட உரையைக் கொடுக்க அதை அவன் கேட்டுக்கொண்டிருக்கிறானா இல்லையா என்பதைக் கூட அறிந்திடாத நிலையில் லவா வந்தான். குஷாவோ ஏதேதோ நினைவுகளில் வண்டியை மீண்டும் பைபாஸில் விடாமல் தஞ்சாவூர் ஊருக்குள் விட,

"டேய் டேய் டேய் திரும்ப ஏன்டா ஊருக்குள்ள போற? பைபாஸ் புடிச்சா நாம நேரா சூரைக்கோட்டைக்கே போலாமே?" என்றதும்,

குஷா புன்னகைத்தவாறே பேசத் தொடங்கும் முன்,

"திரும்ப மனசு, பலூன், காத்துனு ஆரமிச்சிடாதடா... முடியல... கடவுளே உனக்கு என் மேல கருணையே இல்லையா?" என்று லவா மீண்டும் புலம்ப,

குஷாவோ வெளியிலிருந்து தெரிந்த பெரிய கோவிலின் கோபுரத்தையே பார்த்தவாறு சென்றான். உள்ளே நுழைந்ததால் ட்ராபிக் வேறு ஏற்பட்டுவிட,"இனிமேல் வண்டியை நான் ஓட்டுறேன்னு என்னைக்காவது சொல்லிப்பாரு அன்னைக்கு இருக்கு உனக்கு..." என்று கடுப்பில் லவா உரைக்க,

"ஏன் லவா பசிக்குதா?" என்ற குஷாவுக்கு அனல் பார்வை ஒன்றைச் செலுத்தினான் லவா.

"அதான் பின்னாடி ஸ்வீட்ஸ் ஸ்னேக்ஸ் எல்லாம் இருக்கு தானே? எடுத்து சாப்பிடு இன்னும் பிப்ட்டின் மினிட்ஸ்ல உன்ன வீட்ல விட்டுடுறேன்..." என்ற குஷா அதன் பின் வண்டியை வேகமெடுக்க பட்டுக்கோட்டை சாலையில் இடப்பக்கம் திரும்பி 'சூரக்கோட்டை' என்னும் பதாகை காட்டிய வழியில் சென்றது.

சுற்றியும் பச்சை பசேல் என்று வயலும் வரப்பும் அதில் அறுவடைக்கென்று விளைந்திருந்த நெல்மணிகளையும் பார்த்தவாறே அவர்கள் பயணிக்க காரின் ஏசியை நிறுத்தியது கண்ணாடியைத் திறக்க இயற்கை காற்று அவ்விருவருடைய முகத்திலில் செல்லமாய்த் தீண்டியது.

அந்தக் காற்றை சகோதரர்கள் இருவரும் பேசிவைத்தாற்போல் ஒருசேர நாசியில் இழுத்து ஆசுவாசம் அடைந்தனர். இதுவரை பசி பசி என்று குதித்த லவாவோ,"டேய் காரை நிறுத்து... நிறுத்து" என்றதும் குஷா நிறுத்த அருகே தெரிந்த வரப்பில் காலை நனைக்க வேண்டி அவன் மனம் கட்டளையிட அது யாருடைய நிலம் என்று கூடப் பாராமல் லவா இறங்கி அதை நோக்கிச் சென்றான். எதிரில் ஒரு ட்ராக்ட்டர் வருவதைக் கண்ட குஷா காரை ஓரங்கட்டி நிறுத்தி அவனும் இறங்க அங்கே வந்த பெரியவர் அவர்களைக் கண்டு,"தம்பி நீங்க யாரு?" என்றதும்,

"வைத்தியலிங்கம் ஐயாவோட பேரப் பசங்க..." என்று முடிக்கும் முன்னே,

"யாரு ஜானகியோட பசங்களா? ஆளே அடையாளம் தெரியலையேப்பா? சின்ன வயசுல பார்த்தது... ஹ்ம்ம் அம்மா அப்பாலாம் சௌக்கியமா?" என்று அவர் வினவ தன் பெற்றோர்களைப் பற்றி இவர் அறிந்திருக்கிறாரா என்ற ஆச்சர்யத்தில் குஷா பார்க்க அப்போது அங்கே வந்த லவாவையும் கண்டவர்,

"அப்பா ரெட்டைப்பிள்ளைங்கனாளும் பார்க்க அச்சு அசல் ஒன்னு போலவே இருக்கிங்களே? இதுல யாரு பெரியவன்?" என்று வழக்கமாய் இரட்டையர்களைப் பார்க்கும் போதும் ஏற்படும் அதே உற்சாக உந்துதல் அப்பெரியவருக்கும் ஏற்பட லவாவும் குஷாவும் தங்களை பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

"அப்போல்லாம் வருஷம் தவறாம வருவீங்க... இப்போல்லாம் மெத்த படிச்சிட்டு இந்த ஊரையே மறந்துடீங்க போல? ஒரு நல்லது கெட்டதுனா வந்து தலையைக் காட்டிட்டுப் போகக்கூடாதா? உங்க அம்மான்னா பெரியவருக்கு எம்முட்டு பிரியம் தெரியுமா? இப்போல்லாம் ஜானகி கூட வரதில்லையே? இனிமேலாச்சும் கல்யாணக் காட்சிகளுக்கு வந்து தலையைக் காட்டிட்டுப் போங்க அப்பு..." என்றவர் அங்கிருந்து விலகிவிட ஏனோ இதுவரை சகோதரர்கள் இருவரையும் ஆட்கொண்டிருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் மொத்தமாய் வடிந்திருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு இருவரும் வந்து காரில் ஏறி அதை உயிர்ப்பிக்க,

'ஹே ஒடக்கார மாரிமுத்து
ஓட்டைவாய் மாரிமுத்து
ஊருக்குள்ள வயசு பொண்ணுங்க சௌக்கியமா?'
என்ற பாடல் ஒலிக்க அது அவர்கள் இருவரையும் சற்று ரீ-சார்ஜ் செய்தது என்றால் அது மிகையில்லை...

'பட்டணத்து ஸ்டைலைக் கண்டா
பட்டிக்காடு மறந்திடுமா?
பள்ளிக்கூட நெனப்பிருக்கே
பாவி மனம் மறந்திடுமா?
பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்டை ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது...'
என்ற வரிகளை லவா-குஷா இருவரும் ஹை பிட்சில் உடலை ஆட்டியபடி கோரசாகவே பாடினார்கள். ஏனோ இந்த வரிகள் அவர்கள் இருவருக்கும் சில பசுமையான நினைவுகளையே ஞாபகப்படுத்த 'அவளை' நினைத்தே தான் சகோதரர்கள் இருவரும் பாடினார்கள். இருவருக்கும் அனிச்சையாக அவளின் அந்தக் கோலம் மனக்கண்ணில் தோன்ற அவர்களின் இதழில் குறுநகை தவழ்ந்தது.

அடுத்து வரப்போகும் அந்த இரண்டு வரிகளைப் பாட எண்ணி ஒவ்வொருவரும் தனித்தனியாக நினைத்திருக்க குஷா தொடங்கும் முன்னே,'மத்த கதை எனக்கெதுக்கு? என் குருவி எப்படியிருக்கு?' என்று லவா பாட ஏனோ குஷா அவனையே உற்றுப் பார்த்தான். பிறகு இருவரும் வீட்டின் முன் இருக்கும் 'களத்தில்' (அரிசி முதலிய தானியங்களை கதிர் அடிக்க இருக்கும் களம், களத்து மேடு) காரை நிறுத்த அங்கே நிழலில் ஒரு சாய்வு நாற்காலியில் செய்தித்தாள் வாசித்தவாறு இருந்த வைத்தியலிங்கம்,

"ஹே கனகா புள்ளைங்க வந்துட்டாங்க... திருஷ்டி சுத்த ஆர்த்தி எடுத்துட்டு வா..." என்று தன் மனைவிக்கு உத்தரவிட்டவாறே காரின் அருகில் வர லவா- குஷா இருவரும் அவரை நெருங்கி,

"வெய்ட்... எங்கள்ல யாரு லவா யாரு குஷானு கண்டுபிடி தாத்தா..." என்றான் குஷா.

உண்மையில் சற்று குழம்பித்தான் போனார் வைத்தியலிங்கம். பின்னே அடிக்கடி இங்கே வருபவர்களாயின் பார்த்த மாத்திரமே அவர் கண்டுபிடித்து விடுவாரே? அதுபோக ஒருவேளை அவர் உண்மையிலே இருவரையும் அடையாளம் கண்டுவிட்டாலும் அவரை ஏமாற்ற இவர்கள் மாற்றிக் கூறுவார்கள் என்று அவரும் அறியாததா என்ன?

அப்போது வந்த கனகா தன் கணவரின் மனதை அறிந்தவராக,"ஹே பிள்ளைகளா? வந்ததுமே உங்க விளையாட்டை ஆரமிச்சிட்டீங்களா? சரி ருக்கு நீ அடுப்பை அணை... இவங்க இப்போதைக்கு சாப்பிட வர மாட்டங்க போல..." என்று உள்ளே இருக்கும் வேலையாள் ருக்மணியை கனகா ஏவ,

"ஏ அம்மாச்சி... நான் விட்டா பசியில மயங்கிடுவேன்னு உனக்குத் தெரியாதா?" என்று அவசரப்பட்டு லவா உளறிவிட, கனகா பேசும் முன்னே வைத்தி தாத்தா அவர்களை கண்டுபிடித்து விட குஷா தன் ரெட்டையைக் கோவமாய் முறைத்தான்.

"சாரி டா பசி வேற டிபார்ட்மென்ட்... பயங்கரமா கொல்லுறான்..." என்ற லவாவை குஷாவுடன் சேர்த்து நிறுத்தி அவர்களுக்கு சுத்திப்போட்டவர் அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

"வாவ் பணியாரம், ஆப்பம் தேங்காய்ப்பால், பால் கொழுக்கட்டை... வாறே வா இன்னைக்கு எல்லாத்தையும் மொத்தமா ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்..." என்று குஷா ஆர்ப்பரிக்க லவாவோ வந்த வேலையை செவ்வென செய்யத் தொடங்கினான்.

"சித்ரா அத்தை கொழுக்கட்டை சூப்பர் போங்க..." என்று லவா சித்ராவைப் பாராட்ட,

"அதெப்படி இதை நான் தான் செஞ்சேன்னு கரெக்ட்டா கண்டுபிடிச்ச லவா?"

"இன்னைக்குத் தான் உங்க சமையலை எல்லாம் நான் முதல் முறையா சாப்பிடுறேனா என்ன? பணியாரம் எப்படியும் அம்மாச்சி தான் செஞ்சி இருக்கும்... அப்பறோம் தேங்காய்ப்பால் நீங்க தான் செஞ்சிருப்பீங்க... எல்லாமே ஒரு ரேண்டம் கெஸ் தானே அத்தை..." என்று லவா உரைக்க தங்களுக்கு எதிரில் அமர்ந்திருந்தாலும் எதையும் சாப்பிடாமல் இருக்கும் வைத்தியலிங்கத்தைப் அவர் பேரன்கள் இருவரும் கேள்வியாய்ப் பார்க்க,

"நீங்க ரெண்டு பேரும் இங்க வந்து எத்தனை வருஷம் ஆச்சுயா? இந்தத் தாத்தாவை மறந்துட்டீங்க இல்ல?" என்று அவர் கேட்ட தொனியிலே அவருடைய ஏக்கமும் பாசமும் சகோதரர்கள் இருவருக்கும் புரிய சாப்பிடுவதை நிறுத்திய குஷா அவர் அருகில் சென்று அமர்ந்து,

"சாரி தாத்தா... ரெண்டு பேருக்கும் ரொம்ப வேலை... லீவே கிடைக்கறதில்லை... அப்படியே கிடைச்சாலும் அவன் ஹைதராபாத்லையும் அம்மா காரைக்கால்லையும் நான் சென்னைலையும்னும் அப்பா வேலூர் காரைக்கால்னு மாத்தி மாத்தி ஆளுக்கொரு திசையிலே இருக்கோம்... இது எல்லாம் உங்களுக்கும் தெரியாதா என்ன? நேரம் கிடைச்சு நாங்க நாலு பேர் ஒன்னா மீட் பண்றதே அபூர்வம்... இதுல நாங்க எப்படி தாத்தா இங்க வர முடியும்? எங்க சூழ்நிலையை நல்லாவே புரிஞ்சிகிட்ட நீங்களே இப்படிச் சொன்னா அப்பறோம் மத்தவங்க எப்படிப் புரிஞ்சிப்பாங்க?" என்று குஷா நீண்ட விளக்கத்தைக் கொடுக்கவும் கொஞ்சம் அமைதி நிலவியது.
லவாவும் சாப்பிடாமல் அவர் அருகில் வந்து அமர,

"என்ன இது? புள்ளைங்க ரெண்டும் பசியில வந்திருக்குனு தெரியாதா? மொதல்ல அதுங்களை சாப்பிட விடுங்க எல்லாம் பொறவு பேசலாம்..." என்று கனகா பேரன்களுக்கு ஆதரவாய்ப் பேச,

"சரி சரி ஏம்மா சித்ரா பிள்ளைங்களுக்கு சூடா ஆப்பம் கொண்டு வாத்தா..." என்றதும் அவர்கள் தங்கள் இருக்கைக்குச் சென்று அமர இருவரையும் வாஞ்சையுடன் பார்க்கும் அவர்கள் அம்மாச்சியை இருவருக்கும் இடையில் அமர்த்திய லவா,

"அம்மாச்சி சின்ன வயசுல எங்க எல்லோரையும் வட்டமா உக்கார வெச்சு எங்களுக்கு ஊட்டிவிடுவையே அதுபோல இப்பயும் செய்..." என்று இருவரும் 'ஆ' காட்ட அவர்களுக்கு உணவை ஊட்டினார் கனகா.

"அப்போ எனக்கில்லையா?" என்றவாறு நோக்கிய வைத்தியைப் பார்த்து,

"ஓ ட்ராக் அப்படிப் போகுதோ? ஹ்ம்ம் ஹ்ம்ம் நாங்கல்லாம் எதையும் பார்க்கல கேக்கல..." என்ற குஷாவின் தொடையைக் கிள்ளிய கனகா,

"உங்களுக்கு கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லையா?" என்று தன் கணவரை ஏசியவாறே பேரன்களுக்கு உணவு ஊட்டினார் கனகா.

"ஆமா எங்க வேற யாரையுமே காணோம்?" என்று சுற்றி முற்றி பார்த்தவாறு லவா வினவ,

"மாமா வேலையா அரியலூர் வரை போயிருக்காரு லவா... மணவாளனுக்கு உங்க மாமா ஏதோ ஆடிட்டர் கிட்ட பைல் கொடுக்கும் வேலை சொல்லியிருக்கார்னு போயிருக்கான். மொட்டு விளைஞ்ச காய்கறியை எல்லாம் லோட் இறக்க தஞ்சாவூர் மார்க்கெட் வரை போயிருக்கா..." என்று முடிக்க ஏனோ அவர்கள் இருவருக்கும் அந்த இறுதியில் சொல்லப்பட்ட பதில் இருவேறு உணர்வுகளைத் தந்தது. அப்போது வெளியில் ட்ராக்ட்டர் வரும் சப்தம் கேட்டு பின் வாசலைப் பார்க்க அந்த ட்ராக்ட்டரை மிக இலகுவாக ஓட்டியவாறு ஒரு சிகப்பு வண்ண முழுக்கை சட்டையை கை மடித்தவாறு அணிந்து அதற்கு காண்ட்றாஸ்ட்டான வெள்ளை நிற பாவாடை அணிந்திருந்தவளின் தோரணை லவாவுக்கு வியப்பைத் தர அவன் மகிழ்ச்சியில் பேசத் தொடங்கும் முன்னே,

"இன்னும் இவ இப்படி பசங்க மாதிரி டிரஸ் பண்ணதையும் ஊர் சுத்துறதையும் விடலையா?" என்ற குஷாவின் பேச்சு அங்கிருந்தவர்களின் கவனத்தை மொத்தமாய் ஈர்த்தது.

தன் பேத்தியை அதும் தன் செல்லப் பேத்தியை கடுகளவேனும் யாராவது குறை கூறினாலும் அவர் மீது மலையளவு கோவத்தை வெளிப்படுத்தும் வைத்தியலிங்கமோ தற்போது எழுந்த அந்த அதிருப்தியையும் கோபத்தையும் தன் பிரியத்திற்குரிய பேரனாக குஷாவின் மீது காட்டவும் முடியாமல் அதே நேரம் அதை இலகுவாகவும் எடுத்துக்கொள்ள முடியாமல் ஒரு வித தர்மசங்கடமான சூழ்நிலையில் அமர்ந்திருந்தார்.

அந்த மௌனத்தைக் கலைக்க எண்ணிய லவா,"அம்மாச்சி எவ்வளவு நேரம் நான் ஆ காட்டிட்டே இருப்பேன்? சீக்கிரம் ஊட்டு..." என்றுரைக்க குஷாவோ உணவு மேஜையிலிருந்து எழுந்து கைகழுவச் சென்றான்.

"ஹே குஷா, உனக்காக தான் இந்த ஆப்பம் ஊத்தினேன்... இரு இரு..." என்ற சித்ராவுக்கு,

"எனக்கு எல்லாமே போதும்... வேணுனா அவனுக்கு வைங்க..." என்றவாறு தன்னுடைய செல்போனை நோண்டினான்.(நேரம் கைகூடும்...)
அடுத்த அத்தியாயம் வெள்ளி அல்லது சனிக்கிழமை வரும்...

Ponniyin selvan antha name a ketathume enaku time machine kidaicha nalla irukume intha thought than varum,,,,, enakum antha place lam kalki avanga ezhuthu moolama remba pidikum,,,,, 90's la varra songs mathiri ippa varrathillayana ,,, varuthu but 1 or 2 songs than,,, 90's appo eduthukitomna oru movie la ulla ella songs fav a irukum but ippa 1 or 2 songs than fav a iruku ithu AR ku mattum illa ella music directors kum than,,,, marupadiyum "aval" a already mudivili la vantha "aval" yarunu kandupidikanum nu guess panni guess panni oru valiya antha "aval" a crt a guess pannom, ippa marupadiyum athe "aval" varthai veru pennukku ithu yara irukum????,,,, epi ?????
 
Ponniyin selvan antha name a ketathume enaku time machine kidaicha nalla irukume intha thought than varum,,,,, enakum antha place lam kalki avanga ezhuthu moolama remba pidikum,,,,, 90's la varra songs mathiri ippa varrathillayana ,,, varuthu but 1 or 2 songs than,,, 90's appo eduthukitomna oru movie la ulla ella songs fav a irukum but ippa 1 or 2 songs than fav a iruku ithu AR ku mattum illa ella music directors kum than,,,, marupadiyum "aval" a already mudivili la vantha "aval" yarunu kandupidikanum nu guess panni guess panni oru valiya antha "aval" a crt a guess pannom, ippa marupadiyum athe "aval" varthai veru pennukku ithu yara irukum????,,,, epi ?????
எஸ் பொன்னியின் செல்வன் ஒரு பிரமிப்பின் உச்சம்❤ அப்போல்லாம் ம்யூசிக் ஆர்பாட்டமில்லாம கேட்க அமைதியா இருக்கும்... இப்போல்லாம் டம் டம் னு ஒரே அலறல் தான்... எஸ் சில நல்ல பாடல்களும் நடுவுல வருது தான்... ஹா ஹா முடிவிலி மாதிரி ரொம்ப கன்பியூசிங்கா எல்லாம் வராது... எல்லாம் சீக்கிரமே புரிஞ்சிடும்...? ஆஹா முடிவிலில உங்களை ரொம்ப படுத்தியிருக்கேன் போல? நன்றி?�
 
Top