Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-4

Advertisement

praveenraj

Well-known member
Member
"ஹே குஷா... கண்ணா இன்னும் ரெண்டு வாயாச்சும் வாங்கிட்டுப் போயா..." என்று கனகா செல்லும் அவனையே பார்க்க,

"ஏ அம்மாச்சி இது உனக்கே ஓவரா தெரியல? நானும் பார்க்குறேன் எப்பயுமே எவன் ஒருவன் எனக்கு எதுவும் வேணாம்னு ஒதுங்குறானோ அவனையே தான் எல்லோரும் வற்புறுத்துவாங்க... அவன் என்ன பச்ச பிள்ளையா? இல்ல பசிச்சா அதைச் சொல்லத் தெரியாதா? பச்ச பிள்ளைங்க கூட பசி வந்தா வீறிட்டு அழும்... எனக்கு ஊட்டு அம்மாச்சி..." என்ற லவா அவரின் கையின் இவனாகவே இழுத்து தன் வாயில் திணித்துக்கொண்டான்.

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் இங்கு நடப்பதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதவன் போலே குஷா தன் அலைபேசியை நோண்டியவாறே செல்ல அப்போது தனக்கு வலப்புறமாக நிழலாடுவதைப் போல் உணர்ந்தவன் அந்தப்பக்கம் திரும்பவும் அந்நிழலுக்குச் சொந்தக்காரியோ ஒரு கணம் முகத்தில் எக்ஸைட் மென்ட் கூடி அவனை நோக்கி தன் கரத்தைத் தூக்க முனைந்தவள் போன் நோண்டிக் கொண்டிருந்தவனின் அந்த பத்து வினாடிகளுக்கும் குறைவான அவனது சலனமற்ற பார்வையில் எதையோ புரிந்தவளாக அவனைக் கண்டுகொள்ளாமல் வேகநடையில் உள்ளே நுழைந்தாள். ஏற்கனவே தன்னுடைய எரிச்சலுக்குக் காரணமானவளின் மீது கோவத்தில் இருந்தவனுக்கு அவளது தற்போதைய அலட்சியப் பார்வை அவனை மேலும் எரிச்சல் மூட்ட,"சரியான திமிர் பிடிச்சவ... ஏட்டிடூட் காட்டுறா பாரு... எல்லாம் தாத்தாவைச் சொல்லணும்... எல்லாம் அவர் தர இடம்..." என்று தனக்குள்ளே முணுமுணுத்தவனின் கவனம் தன்னை ஒரு பெயருக்குக் கூட அழைத்துச் சமாதானம் செய்யாத வைத்தி தாத்தாவின் மீதே சென்றது. 'சரி இத்தனை வருஷத்துல எங்க அப்பா கிட்டயே ஒரு முறை கூடப் பேசாதவர் தானே அவர்?' என்று தன் மனதின் ஏதோ ஒரு மூலையில் வைத்தியலிங்கத்தின் மீது தனக்கிருக்கும் அந்த அதிருப்தியும் எட்டிப் பார்த்தது என்னவோ நிஜம்.

குஷாவின் மனம் இவ்வாறான எண்ணத்தில் திளைத்திருக்க அங்கு உள்ளே நுழைந்தவளின் பார்வையோ தன் அப்பத்தாவுக்கு அருகில் அமர்ந்து அவர் ஊட்டுவதை விழுங்குபவனின் மீதே சென்றது. சித்ரா கொண்டு வந்த அந்தத் தேங்காய்ப்பாலில் ஊறிய ஆப்பத்தை எடுத்து தன் பேரனின் வாயை நோக்கிச் கொண்டுசென்ற கனகாவைக் கண்டவள் துரிதமாக லவாவின் வலது தோளில் தட்ட யாரென்று அவன் திரும்பும் வேளையில் அதை லாவகமாக தன்னுடைய வாயில் திணித்துக்கொண்டாள் மொட்டு என்கின்ற பனித்துளி.

அவளின் அரவம் கேட்டு வெடுக்கென திரும்பியவனின் கன்னமோ தனக்கும் கனகாவுக்கு இடையில் இருக்கும் சந்தில் குனிந்து நின்றவளின் கன்னத்தில் அழகாய் உரசியது. வெகு சாதரணமாய் தன்னுடைய கைகளைக் கொண்டு அவளைச் சுற்றி வளைத்தவன்,"அம்மாச்சி எனக்கு தானே கொடுத்தாங்க... உன்னை யாரு டி அதை வாங்கச் சொன்னது?" என்று உரிமை கலந்த செல்லக் கோபத்தில் லவா வினவ அதற்குள் மற்றுமொரு வாய் உணவையும் வாங்கியவள் அதைச் சிரித்தவாறே மென்று அருகிலிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அதில் அமர,

"ஒழுங்கா அதைத் துப்பு..." என்று அவளிடம் கலாட்டா செய்ய அவளுக்கு புரை ஏறியதும் முதல் ஆளாய் அவளுக்கு தண்ணீர் குடுவையை நீட்டியவன் அவள் சிரத்தைத் தட்டி விட்டு,"மெதுவா மெதுவா... பார்த்து சாப்பிடு மொட்டு..." என்றான் லவா.

"ஆமா எத்தனாவது ரவுண்டு இது? நாலா ஐஞ்சா?" என்ற லவாவுக்கு,

"ஹ்ம்ம் பத்தாவது... போதுமா?" என்று அழகு காட்டினாள்.

"அப்பறோம் பிசினெஸ் வுமன் ஆகிட்டீங்க போல? எப்படி டி இருக்க?" என்றவனுக்கு,

"ஹே அப்பத்தா இதென்ன இப்படி ஓரவஞ்சனை செய்யுற? இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா? நான் எப்பயாவது எனக்கு ஊட்டி விடுன்னு கேட்டா அப்படி சீன் போடுவ? அதுவே இன்னைக்கு சீமையிலே இருந்து உன் பேர பசங்க வந்துட்டாங்கனு மூணு கண்ணா வாடான்னு குழந்தைக்கு சோறு ஊட்டுவதைப் போல இப்படி ஊட்டி ஊட்டி விடுற?" என்று கேட்டவளின் காதைத் திருகினான் லவா.

"பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவ? அண்ட் ஆமா... என் அம்மாச்சிக்கு மத்த எல்லோரையும் விட நாங்கன்னா ஸ்பெஷல் தான்... அதுக்கு இப்போ என்ன பண்ணப் போற?" என்று பதிலுக்கு அவளிடம் வம்பிழுத்தான் லவா.
ஏனோ சித்ரா மட்டும் கனகா இருவரும் அவர்களையே பார்த்து அவர்களின் உரையாடலில் கலந்திருக்க வைத்தியலிங்கம் மட்டும் வேறு சில யோசனைகளில் மூழ்கியிருந்தார்.

"எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் லவா..." என்றாள் மொட்டு.

"என்ன?"

"உன் கூடப் பிறந்தவனுக்கு கொஞ்சம் கூட சிரிக்கவே தெரியாதா? இல்லை இந்த இடக்கரடக்கல் இல்ல இந்த கார்டெஸி எதுவுமே கிடையாதா?" என்னும் போதும் தன்னையும் அறியாமல் லவாவின் முகம் சிவக்க,

"ஒத்துக்குறேன் நீங்க ட்வின்ஸ் தான். இந்த 'கொடி' 'தடம்' படத்துல சொன்ன மாதிரி அவனைச் சொன்னா உனக்கு கோவம் வருது? அதெல்லாம் விடு அவன் ஏன் இப்படி இருக்கான்?" என்று தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டாள் மொட்டு.

"அவன் எல்லோர் கிட்டயும் அப்படி இல்லையே மொட்டு. இன் பேக்ட் நான் யாருடனும் ரொம்ப மிங்கில் ஆக மாட்டேன்... அதாவது கேட்டா கேட்ட கேள்விக்கு தான் என்கிட்ட இருந்து பதில் வரும். ஆனா அவன் தான் லொட லொட டைப்... ஆனா இங்க வந்தாலே அவன் சைலன்ட் ஆகிடுறான்... அது தான் ஏன்னு எனக்குப் புரியல?" என்றவன் புரிந்தவனாக அவளையே கண்ணிமைக்காமல் பார்க்க அதைப் புரிந்துகொண்டவள்,

"ஆமா உனக்கு சாப்பிட்டதும் சூடா காஃபீ குடிக்கணுமில்ல? இரு ருக்மணி அக்காகிட்டச் சொல்றேன்..." என்று அவள் பேச்சை மாற்ற லவாவும் அதற்கு மேல் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் இருவருக்கும் இடையில் சொல்லப்படாத அல்லது தீர்க்கப்படாத ஒரு ஈகோ க்ளாஷ் இருக்கிறது என்பது மாட்டு லவாவுக்குப் புரிந்தது. மேலும் இதைப் பற்றி இவ்விருவருக்குமே யாரிடமும் அதை ஷேர் செய்ய விருப்பமில்லை என்பதும் விளங்கியது. இதை ஒரு சின்ன ஈகோ க்ளாஸ் என்று மட்டும் நினைத்திருந்த லவாவுக்கு இது ஒரு 'கோல்ட் வார்'(பனிப்போர்) என்று தெரியவில்லை!

அங்கே மறுமுனையில் இந்த உரையாடல்கள் எதையும் தன்னுடைய செவிகளுக்குள் அனுமதிக்காதவன் தன்னுடைய கொலீக்கிடம் இருந்து வரவேண்டிய அழைப்புக்காகவே காத்திருந்த வேளையில் ஜானகி அவனை அழைத்திருந்தார்.

"சொல்லும்மா... சாரி சாரி வந்ததுமே போன் பண்ணலாம்னு தான் இருந்தேன்னா அதுக்குள்ள உன் தவப்புதல்வன் பசி பசின்னு கூப்பாடு போட்டானா உடனே அம்மாச்சி எங்களை நேரா சாப்பிட கூட்டிட்டுப் போயிடுச்சு..." என்று வந்ததும் தனக்கு இன்பார்ம் செய்யுமாறு அன்பு கட்டளையிட்ட அன்னைக்கு அதை மறந்ததற்காக சப்பு கட்டு கட்டினான்.

"என்ன சாப்பிட்டிங்க?" என்ற ஜானகிக்கு வேண்டுமென்றே சற்று குரலை உயர்த்தி,

"அம்மா இந்த தேவாமிர்தம் தேவாமிர்தம்னு சொல்லுவாங்களே? அதை நான் சாப்பிட்டதில்லை தான்... இருந்தாலும் அது எப்படி இருந்திருக்கும்னு இன்னைக்கு எனக்கு நல்லாவே புரிஞ்சது... அம்மாச்சி எனக்குப் பிடிச்ச பால் கொழுக்கட்டை ஆப்பம்னும் லவாவுக்குப் பிடிச்ச பணியாரம்னும் செம பீஸ்ட்... நல்லா கேட்டுக்கோ 'பீஸ்ட்'" என்று அதில் ஒரு அழுத்தம் கொடுத்து,"பீஸ்ட இப்பதான் சாப்பிட்டு முடிச்சோம்..." என்று தன்னுடைய அன்னையை வழக்கம் போல் வம்பிழுத்தான் குஷா. ஜானகி எதைச் செய்தாலும்,"நீ அம்மாச்சி மாதிரி ஏன் டேஸ்டாவே செய்யுறதில்லை ஜானு?" என்று ஜானகியைச் சீண்டுவான். அதற்கேற்றாற் போல் ஜானகிக்கு சமையலுக்கும் கொஞ்சம் தூரம். வேலையில் இருக்கும் காரணத்தால் அந்தப் பரபரப்பான காலை வேளையிலே பிரேக் ஃபாஸ்ட் மற்றும் லன்ச் ஆகிய இரண்டையும் செய்து அதை பேக் செய்து தருவதற்குள்ளே அவருக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். சமயங்களில் அதில் சிலது கூடவும் குறையவும் இருந்துவிடும். அப்படி ஏதாவது நிகழ்ந்து விட்டால் அன்றைய தினம் முழுவதும் தன் அம்மாச்சி புராணத்தையே பாடி ஜானகியை அதிகம் சோதித்து விடுவான். அது போக ரகுநாத் ஒன்றும் உணவை அவ்வளவு ரசித்து உண்ணும் நபராக இல்லாததால் அவரையும் போகும் போக்கில் கலாய்த்து விடுவான் குஷா. கடந்த ஒன்றறை வருடங்களாகத் தான் லவா குஷா இருவரும் முறையே ஹைதராபாத்திலும் சென்னையிலும் இருக்கிறார்கள். அதற்கு முன் அவர்கள் நால்வரும் ஒன்றாகத் தான் இருந்தார்கள். லவா உணவு நன்றாக இல்லை என்றாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள மாட்டான். எப்படியும் அவன் மனதில் இருப்பதை அவன் ரெட்டை அன்னையிடம் தெரியப் படுத்திவிடுவான் என்ற நம்பிக்கையே அது.

"இவ்வளவு ஆகிடுச்சு இல்ல? சேலஞ் டா... நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு துணை வருவாங்க இல்ல? அன்னைக்கும் இதையே சொல்லு... அப்போ கவனிச்சுக்கிறேன்..."

"ஹா நீ வேணுனா பாரு எங்களுக்கு வரப்போற பொண்ணுங்க சமையல்ல ஒரு மல்லிகா பத்ரிநாத்தாவும் ரேவதி ஷண்முகமாவும் தான் இருப்பாங்க..." என்று குஷா முடிக்கும் முன்னே,

"ஹ்ம்ம் ஹ்ம்ம் பார்க்கத்தானே போறேன்... அண்ணனும் தம்பியும் அன்னைக்கு வருவீங்கடா... அம்மா அம்மா நீ எவ்வளவு பெரிய செஃப்னு உன் அருமை எங்களுக்கு இப்போ தான் தெரியும்னு வருவீங்க... அன்னைக்கு வெச்சுக்குறேன்..." என்று ஒரு பொய் கடுமையைக் காட்டினார் ஜானகி.

"சான்ஸே இல்ல... உன் சாபம் பலிக்கவே பலிக்காது..."

"ஏன்டா உங்களுக்கு சமைச்சு போடுறதுக்குத் தான் பொண்ணுங்களா? ஏன் அவங்களுக்குனு ட்ரீம்ஸ் எல்லாம் எதுவும் இருக்க கூடாதா? உங்க அப்பா அப்படி நெனச்சி இருந்தா இன்னைக்கு நான் ஒரு நேஷ்னலைஸ்ட் பேங்க்ல சீனியர் மேனேஜரா இருந்திருக்க முடியுமா?" என்று கேள்வியில் முடிக்க அப்போது அலைபேசியில் ரகுநாத்தின் குரல் கேட்கவும்,

"சரி சரி அப்பாகிட்ட போனை கொடுங்க..." என்றான் குஷா.

"டேய் அம்மாச்சி இருந்தா கொடு நான் பேசணும்..." என்ற ஜானகியிடம்

"ஒரு நிமிஷம் கொடுமா நான் தரேன்..." என்றவன் தன் தந்தையிடம்,

"அப்பா கொள்ளிட கரைக்குப் போனோமே..." என்றதும் மறுமுனையில் ஆர்வம் பொங்கியவராக ரகுநாத் அவனிடம் அதைப் பற்றியே விசாரிக்க அதுவரை அங்கே தீவிர உரையாடலில் இருந்த கனகாவும் சித்ராவும் குஷா ரகுநாத்திடமும் ஜானகியிடம் தான் உரையாடுகிறான் என்று அறிந்து அவனிடம் போனை சமிக்ஞையில் கேக்க,

"அப்பா அம்மாச்சி உங்ககிட்டப் பேசணுமாம்..." என்றவன் மறுமுனையில் அவர் மறுப்பதை சட்டை செய்யாமல் கனகாவிடம் அலைபேசியைக் கொடுத்துவிட வேறு வழியின்றி ஓரிரு வார்த்தைகளை தன் மாமியாரிடம் பேசிய ரகுநாத் அலைபேசியை ஜானகியிடம் தந்துவிட ஏனோ அங்கிருந்த சித்ரா மற்றும் வைத்தி ஆகிய இருவருக்கும் முகம் வாடிவிட இருவரையும் மாறி மாறி பார்த்த பனித்துளி தற்போது நிமிர்ந்து குஷாவை ஒரு பார்வைப் பார்த்தாள். அப்பார்வையில் ஒரு கோவம் கொப்பளித்தது. ஒரு எரிமலை வெடித்தது. ஆனால் அதற்கெல்லாம் அசருபவனா குஷா? அதும் பனித்துளியின் பார்வைக்கு? அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் மொட்டு எழுந்து சென்றுவிட, இதுவரை இங்கு நிகழ்ந்ததை எல்லாம் ஒரு பார்வையாளனாகவே மட்டும் லவா பார்த்துக் கொண்டிருந்தான். பின்னே அவனால் வேறு என்ன செய்ய முடியும்? இந்த நிகழ்வுக்குப் பின்னால் அவன் அப்பா- அம்மா- தாத்தா- மாமா- பாட்டி ஏன் குஷா-மொட்டு ஆகியோருக்கும் கூடத் தெரிந்த ஒரு ரகசியம் இருக்கிறதென்று லவா அறிவான். ஆனால் அது என்னவென்று தான் அவனுக்குத் தெரியாது. ஏனெனில் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறதே?

வைத்தி என்றைக்கப்படும் வைத்தியலிங்கம் சூரக்கோட்டையில் பெரிதும் மதிக்கக்கூடிய ஒரு நபர். அதற்கு அவரிடம் இருக்கும் தோட்டம் தொரவுகளா? இல்லை இதற்கு முன் அவர் வகித்த ஊர் பிரசிடெண்ட் என்னும் பதவியா? இல்லை அக்காலத்திலே அஞ்சல் துறையில் ஒரு அரசாங்க ஊழியனாக பணிபுரிந்து ரிட்டையர் ஆனதாலா? இல்லை உதவி என்று யாரேனும் தன்னைத் தேடி வந்தால் தன்னால் முடிந்த அளவுக்கு அவருக்கு வேண்டியதை செய்துகொடுப்பதாலா? ஆனால் இன்னதென்று வரையறுக்க முடியாத ஏதோ ஒரு காரணத்தால் இன்றளவும் சூரக்கோட்டையில் வைத்தியலிங்கத்திற்கென்று ஒரு நற்பெயர் இருக்கிறது. அவருக்கு வயது எழுபத்தி ஐந்து ஆகிறது. தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் பதினாறு வயது நிரம்பிய ஒரு 'மைனர்'(இன்றைய காலத்தில் இது மைனர் தானே?) பெண்ணானா கனகா எனப்படும் கனகவல்லியை பெரியோர்கள் நிச்சயித்தபடி (இவருக்கும் அவர் மீது ஒரு பிடித்தம் இருந்தது என்னவோ உண்மை!) தன்னுடைய இல்வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார். அடுத்த ஓராண்டிலே தங்களுக்கு முதலாவதாகப் பிறந்த ஒரு பையனை ஆறுமாதத்திற்குள் இழந்துவிட அதன் பின் பிறந்தவர் தான் ஜானு எனப்படும் ஜானகிதேவி. ஜானகிக்குப் பிறகு முறையே பிறந்தவர்கள் தான் நந்தகோபால், சுசீந்திரன், நிர்மலா, சபாபதி மற்றும் உமா. அக்காலத்தில் ஒருவரின் புத்திரபாக்கியம் தானே பெரும் செல்வமாகப் பார்க்கப்பட்டது? அந்த வகையில் வைத்தி-கனகா தம்பதியர் பெரும் செல்வந்தர்களே!

அவர்களில் மூத்த மகளான ஜானகிக்கு ரகுநாத்துக்கும் பிறந்த இரட்டையர்கள் தான் ஆர்வலனும் ஆழியனும்.
நந்தகோபால் சித்ரா தம்பதியருக்குப் பிறந்தவர்கள் தான் பனித்துளியும் மணவாளனும்.

நிர்மலா கோபி தம்பதியரின் பிள்ளைகள் தான் பாரியும் மெல்லினியும்.

சபாபதி செல்வி ஆகியோரின் பிள்ளைகள் தான் அபிலேஷும் ரித்தீஷும்.

உமா திவாகரன் ஆகியோரின் ஒரே மகள் தான் இன்னிசை.

தன் பிள்ளைகளில் நந்தகோபால் ஒருவரைத் தவிர்த்து மற்ற அனைவரும் பணிநிமித்தமாகவும் திருமண நிமித்தமாகவும் வெவ்வேறு இடத்தில் வாழ்கிறார்கள். வைத்தியும் கனகாவும் தங்கள் மூத்த மகனான நந்த கோபாலின் குடும்பத்துடன் இந்த ஊரிலே வசிக்கிறார்கள்.

அன்னையிடமும் தம்பியின் மனைவியிடமும் உரையாடிய ஜானகி இறுதியாக தன் தந்தையிடம் உரையாடினார். அவருடைய குரலிலே அவர் மனநிலையை அறிந்த ஜானகி அவரை சமாதானம் செய்யும் பொருட்டு,

"அப்பா இந்த குஷா என்னை ரொம்பவும் ஓட்டுறான்..." என்று சற்று முன் அவனுடன் நிகழ்ந்த உரையாடலைக் குறிப்பிட அதில் சற்று ஆசுவாசம் அடைந்தவர்,

"அப்படியா சொன்னான் அந்தப் பையனை? விடு அவனை நான் கவனிச்சுக்கிறேன்... அவங்களை வளர்க்க நீயும் மாப்பிள்ளையும் எவ்வளவு சிரமப்பட்டீங்கனு எங்களுக்குத் தானே தெரியும்? அது போக அதனால் தானே..." என்று எதையோ உளற முற்பட்டவர் இதனால் தன் மகள் மீண்டும் கவலை கொள்ள நேரிடும் என்பதால் அதை அப்படியே நிறுத்தி வழக்கம் போல் இடைவெளி விட்டு,"அம்மாடி மாப்பிள்ளை நல்லா இருக்காரா? அவர் உன்னை நல்லா பார்த்துக்கறார் தானே?" என்று தன் மருமகனைப் பற்றி நன்கு தெரிந்தும் வழக்கம் போல் அக்கேள்வியைக் கேட்டார்.

"அப்பா என்னை நினைச்சு நீங்கி கவலைப்படவே வேணாம்... அண்ட் எனக்கென்ன நேத்தா கல்யாணம் ஆச்சு? அது போக நானே பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயசுல இருக்கன்... என்னைப் பார்த்து இப்படிக் கேக்கறீங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா?" என்று வழக்கம் போல் தந்தையை விளையாட்டாகச் சீண்டினார் அவருடைய செல்ல மகளான ஜானகி.

"நீ பேரன் பேத்தி எடுத்தா என்னடா? எனக்கு எப்பயுமே நீ என் பொண்ணு தானே?" என்று அதே சிரிப்பில் பதிலளித்தார் வைத்தியலிங்கம்.

ஜானகியிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவர் வழக்கமாய்த் தன்னைத் தாக்கும் அந்தக் குற்றயுணர்ச்சியில் அமர்ந்திருந்தார். அவர் முகம் கவலை ரேகைகளைக் கொள்ள அதை தூரத்திலிருந்து பார்த்த அவருடைய செல்லப் பேத்தியான மொட்டு அவர் கவலையைத் தீர்க்கும் வழியறியாமல் தவித்தாள். அதே வேளையில் அவளுக்கு தன் அத்தையான 'ஜானகி'யின் மீதும் அவர் மகனான குஷாவின் மீதும் கோவம் வந்தது. (நேரம் கைகூடும்...)
அடுத்த அத்தியாயம் திங்கள் அல்லது செவ்வாயில் வரும்...
 
Semmma Semmma.....
names Ellamae unique.... Ena problm ah irukum ??? waiting for next ud
 
Patti's eppavum grandchildren evvalavu valarnthavangalaa irunthaalum kozhanthaiyaave treat pannuvaanga,enna problem aa irukkum Kushakum,Mottukum idaila,Lava pasama thaan irukkan,Kusha..veg.specialist aa sollitaan,non.veg pidikkathu? Rahunath,Baithi,Chithra ivangalukkulla enna manathaangal,azhahana thamizh names except Abilesh, Rithish
Suspense thaanga mudiyalaye, innum episodes ku wait pannanume
 
of course... even my grandma used to do? ha ha storylaiyum nvyaa? but varum don't worry...solren... when all names are pure tamil words it will give a cringe feeling...isn't it??? ya i'll try to give it faster... thank u?
 
Twins nu sonnalum sonneenga yaru lava yaru kusha nu understand panna konjam late aaguthu,,,,, kusha dad's little princess mela ivlo nambikai vachurukkane,,,, oru vela grandpa's princess a irukrathunala exception a irupalo,,, nalla cooking pannuvalo,, irunthaalum irukum ammachi kooda thana iruka kathu kitu irunthurupa athan paiyan ivlo confident a solrana irukum,,, prblm oda main culprits mottu and kusha va irukumo,,,, ellarum apdi enna than pannanga, ithula mottu janu amma mela vera kova padra, thatha mela irukra pasathala biased a irukalo,,, pulveli ithula enga irunthu vantha eppa entry kudupa,,, epi????
 
Top