Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-6

Advertisement

இந்த எபி ல கருத்து கண்ணாயிரம் நிறைய எடத்துல வந்துட்டு போயிருக்காரு,,,,,எல்லாமே உண்மையான விஷயங்கள், நாம என்ன பண்ணமுடியும் னு யோசிச்சா வீட்டுக்கொரு மரம் வளக்கிரதுதான் நியாபகம் வருது,,,, அடுத்த தலைமுறைக்கு இப்படி இருக்கணும் சொல்லி மட்டும் கொடுக்காம, வாழும் எடுத்துக்காட்டா நாம இருக்கணும்,,,, அதானே ஒரு ப்ரொபஸ்ஸோரா இருக்கிற குஷாக்கு வெறும் எக்ஸாம் மார்க் அறிவை தீர்மானிகாதுன்னு தெரியாத என்ன??,,,,, பிடிச்ச வேலையே பார்க்கிறது ஒரு தனி சுகம்,,,,, இந்த லவா தம்பிக்காக ஷாக் ஆகுரானா இல்ல அவனுக்காக ஷாக் ஆகுராணானு தெரிய மாட்டேங்குது,,,,
மொட்டு மேல படிக்காமல் இருக்கிறதுல குஷாவோட பங்கு இருக்கும் போலயே????,,,,நல்லா முறைக்கனும் லவா ??????,,,,எபி ???????
ஹா ஹா நாம்ம கருத்து சொல்லலைன்னாதானே ஆச்சரியம்? ஆக்சுவல்லி இப்போ ரெண்டு மூணு பேரால சொன்னது என்னுடைய ஒரு புதிய கதைக்கான ஒன் லைன்... இருந்தாலும் அதை இப்போதைக்கு எழுத முடியுமான்னு தெரியல அதான் இங்க சொல்லிட்டேன்(ஏற்கனவே நிறைய பேக்லாக்ஸ் இருக்கு...) அது மொட்டு மீது அவனுக்கிருக்கும் ஒரு தனிப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு... ஹா ஹா சொல்றேன் சொல்றேன் நன்றி?
 
Mottukku ulaha arivu neraya irukkum polaye, Green house effect vara therinchu pesaraale,ji... neenga padichu padichu gnani ahiteenga,evlo messages intha epila,Kusha, Mottu rendu perum orutharukoruthar salaithavarhal illaye, kedaikira gapla laam kalaikiraanga,
Lava.... enna irunthaalum Mottu thambikku wife ahiruvaan, ivarukku kanne vaa? aanalum semma sweet Lava, ava instinct unakku athupadi aache, yeppa.. Mottu... ulaha maha nadipudaa sami..
Mottu marriage vishayathula hmm...Vaaipilla nee nenaikirathu nadakka, but after marriage Kusha antharbalti adipaano...Chance irukku...Pa.... Lava,Kusha over padips pola ungala maathiri ji... Professor vida Mottukku arivu konjam athihame
Kalakiteenga innaikku
என்ன பண்ண படிச்சதை எல்லாம் எங்கேயாவது யூஸ் பண்ணலுமில்ல அதான் ? இன்னும் கலாய்ப்பாங்க... அது அப்படி இல்ல அவ மேல லவாவுக்கு இருக்கும் லவ்வின் வெளிப்பாடு... எஸ் எஸ் அவ ஆசைப்பட்டதெல்லாம் நடக்காது? என்ன மாதிரியெல்லாம் இல்லை கடைசியில என்னை கலாய்ச்சிட்டிங்க? நன்றி
 
Semma ?....avlo azhaga iyarkaiya rasicha kusha ivanthana apdi doubt varuthe ..mottu and kusha rendy perum ivlo ethirun puthiruma irukanga.apram epdi marriage pannanga...... mottu ❤vera level.ennama pesara Azhagu pillai arivu pillai.mottu vishayamla Nan lava pakam than...... mottu lava bonding so cute......vaithi thatha APD ennathan panni vaichinga.cold war ku main reason unga sandai than polaye..... whatsapp group chat,antha cousins gang,athula oruthara ellarum kalaaikarathu Ellam ❤❤❤...village veetu,paati food Ellam super...Ellam ok .. sollapona enaku lava vida kusha va konjam adhigame pidichuthu antha aaru pathila pesarapo.but intha padipa solli Motta degrade panrathu than enaku konjam upset aguthu kusha mela.but humans nama apdithanla..... as usual unga timing movie dialogues Ellam super writer ji?....interesting ???
நன்றி... அது தான் சஸ்பென்ஸ் அதை இப்போவே சொல்லிட்டா எப்படி?? மொட்டு கேரக்டருக்கு ஒரு ரியல் லைஃப் இன்ஸபிரேசன் இருக்காங்க(யாருனு கேக்கதீங்கா சொல்ல மாட்டேன்?) ஹா ஹா கரெக்ட் இதுல வைத்தியின் பங்கும் இருக்கு... எல்லா வீட்டிலும் இதெல்லாம் நடப்பது தானே? உண்மையிலே குஷா செம ஜாலியான கேரக்டெர் மொட்டு மற்றும் சிலரிடம் தவிர்த்து... நன்றி?
 
"ஏய் அப்படி நாங்க என்னடி செய்யுறோம்?" என்ற லவாவுக்கு,

"என்ன செய்யுல? வீட்டுக்கு ஒரு வண்டிங்கற நிலை போய் ஆளுக்கு ஒரு வண்டிங்கற நிலையில் தானே சிட்டி எல்லாம் இருக்கு... இது போக ஏர் கண்டிஷனர், ரெஃப்ரிட்ஜ்ரேட்டர்னு ஒரே கார்பன் டை ஆக்சைடையும் க்ரீன் ஹவுஸ் கேஸஸையும் ரிலீஸ் பண்ணது போகாம வளர்ச்சிங்கற பேர்ல அங்கங்க கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் மரம், காடு, ஆறு மலைனு இருக்க இயற்கையை மொத்தமா அழிச்சிடுறிங்க... பொறவு மழையும் பெய்யாது... அப்பறோம் பூமி மட்டும் குளுகுளுனு இருக்குமோ?" என்று போறபோக்கில் மொழிந்தவள் அவீட்டை ஒட்டிய கொட்டகையில் இருந்த இளங்கன்றுகள் இரண்டிற்கும் தேவையான வைக்கோலை எதிரில் இருந்த வைக்கோல் குவியலில் இருந்து அள்ளி வைத்தாள்.

மற்றவர்களைப் போல் மொட்டின் திறமையிலோ இல்லை அவளுடைய அறிவாற்றலிலோ எல்லாம் என்றைக்குமே லவாவுக்கு ஐயம் எழுந்ததில்லை. ஒரு பரீட்சையா நம்முடைய அறிவையும் திறமையையும் தீர்மானிக்கிறது? இல்லைவே இல்லை. இன்றைய கல்விமுறை என்பது புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து அச்சு பிசகாமல் அதை வெள்ளை காகிதத்தில் காபி செய்து அதனால் பெரும் மதிப்பெண்களைக் கொண்டு ஒரு நல்ல நிறுவனத்தில் ஐந்து இலக்கத்திலோ இல்லை ஆறு இலக்கத்திலோ சம்பளத்தைப் பெற்று வாழ்க்கையை நிறைவு செய்யவேண்டும். இதைத்தான் இன்றைய கல்வி முறை நமக்கு உதவுகிறது. பின்னே பள்ளிக்கூடத்தில் சயின்ஸ் படித்தது போதாதென்று என்ஜினீயரிங்கில் என்விரான்மென்டல் சயின்ஸ் என்னும் ஒரு பேப்பரையும் ஏன் படிக்கிறோம் எதற்காகப் படிக்கிறோம் என்று யோசிக்காமல் ஒரு சிவில் என்ஜினீயராகவோ இல்லை மெக்கானிக்கல் என்ஜினீயராகவோ இல்லை சாஃப்ட்வெர் என்ஜினீயராகவோ பணியில் அமர்ந்து இங்க பூமியில் இன்னும் ஆங்காங்கே மிச்சமிருக்கும் பச்சையையும் செழுமையையும் வளமையையும் நவீன முறையில் சுரண்டி அதன்பால் தன்னுடைய நிறுவனத்திற்கு லாபம் பெற்றுத்தந்தது அதில் தானும் லாபம் அடைகிறோம். இந்நிலை தொடருமானால் 2050ற்குள் உலகில் வாழும் எழுபது விழுக்காடு மக்கள் கடும் தண்ணீர் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்கிறது ஒரு ஆய்வு.

"என்ன லவா சத்தத்தையே காணோம்?" என்று திரும்பிய மொட்டு அங்கே தூரத்திலே நின்ற லவாவைக் கண்டு அவனை நெருங்கி,

"என்னாச்சு? ஏன் இங்கேயே நின்னுட்ட?"

"நீ ரொம்ப திறமைசாலி மொட்டு..." என்று லவா உரைக்க,

"ப்ளஸ் டூல எட்டுநூத்தம்பது மார்க் வாங்கனவங்க தான் நம்ம ஊர்ல திறமைசாலிங்களா லவா?" என்ற குரல் வந்த திசையில் லவாவும் மொட்டுவும் திரும்ப அதைக் கூறிய குஷா ஒரு எள்ளலுடன் அங்கே வந்தான்.

"டேய் நாங்க ரெண்டு பேரும் என்னவோ பேசுறோம்... உனக்கென்ன? அண்ட் இங்க மார்க் மட்டுமே ஒருத்தவங்க திறமையை நிரூபிக்குற பெஞ்ச்மார்க் இல்லைனு நான் சொல்லித்தான் தான் உனக்குத் தெரியனுமா?" என்ற லவாவின் குரலில் தன்னை மீறிய ஒரு எரிச்சல் பிரதிபலித்தது. பின்னே எப்போதும் மொட்டுவை அவளுடைய படிப்பை வைத்து மட்டம் தட்டுவது என்பது குஷாவின் இயல்பு. முதலில் இவற்றை எல்லாம் விளையாட்டிற்குச் சொல்கிறான் என்று தான் லவாவும் நினைத்திருந்தான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அதில் ஒளிந்திருக்கும் பரிகாசத்தை லவாவால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாகவே குஷாவை நோஸ் கட் செய்ய ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் அதில் சரிவர தன்னுடைய கொடியை நாட்டிவிடுவாள் பனித்துளி. மேலே அறையில் கழுதையைக் கல்யாணம் செய்யுமாறு லவா சொன்னதும் மொட்டு வெடித்துச் சிரித்தது ஒரு உதாரணம்.

இதைக் கேட்டதும் குஷாவின் முகம் சிவந்தது. பின்னே வழக்கமாய் இரட்டையர்களுக்குள் இருக்கும் அந்த பாசமும் பிணைப்பும் விட்டுக்கொடுக்கா மனப்பான்மையும் இவர்களிடமும் இருக்கிறது தானே? அப்படியிருக்கையில் தன்னை தன் ரெட்டை அதும் தனக்குப் பிடிக்காதவளின் முன் அவமானப்படுத்தியதாகவே உணர்ந்தான் குஷா.
அதற்குள் அங்கு இருக்கும் கோழிகளும் சேவல்களும் கூவி கூச்சலிட அவ்விடத்தை விட்டு மொட்டு நகர்ந்தாள். அவள் போனதும் லவாவை முறைத்தவாறே அவனிடமிருந்த கார் சாவியை வாங்கிச் சென்றான் குஷா.

'வந்து ரெண்டு மணிநேரம் கூட ஆகல அதுக்குள்ள இதுங்க இப்படி முறச்சிட்டு இருக்குதுங்க... இதுல இன்னும் மூணு நாளை எப்படித் தான் கடத்துவதோ?' என்று லவா புலம்பியவன் எங்கே பனித்துளி கோவித்துக் கொண்டாளோ என்று எண்ணி அவளைச் சமாதானம் படுத்தச்சென்றான்.
அங்கே கோழிகளுக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்து எதையோ எடுத்து உணவாகப் போட்டுக்கொண்டிருந்தாள் மொட்டு.

"ஹூய் மொட்டு, என்ன கோழிக்கெல்லாம் தீனி போடுற?" என்று பேச்சை ஆரமிக்க,

"ஏன் நீ மட்டும் நல்லா பத்து ஆப்பத்தையும் பணியாரத்தையும் முழுங்குன இல்ல? இதுங்களும் சாப்பிட வேண்டாமா?" என்று சற்று முன் மேலே எதைச் சொல்லி தன்னை தன் உடன்பிறந்தவன் திட்டினானோ அதே வார்த்தையை இவளும் பிரயோகிப்பதைக் கேட்டு,"ஆயிரம் தான் முட்டிக்கிட்டாலும் உங்களுக்குள்ளும் ஒரு வேவ் லென்த் இருக்கத்தானே செய்யுது?" என்று உளறியவன் அவளின்,"என்ன?" என்ற கேள்விக்கு சமாளித்து,

"கோழிங்க அதுவே பீட் செஞ்சுக்காதா? அதான் எல்லாத்தையும் ப்ரீயா தானே விட்டிருக்க? ஐ மீன் கூண்டுல எல்லாம் அடிக்காம?" என்ற லவாவுக்கு,

"இது ஒன்னும் இல்ல லவா... மாட்டுக்கு கொடுக்குற மாவு தவிடு அதுபோக மிச்சமிருக்கும் காய்கறிங்க எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி போடுவேன்... ஹெல்த்தி ஃபூட்..." என்றவளுக்கு,

"பாரேன் இந்த ஊர்ல கோழிக்கெல்லாம் கூட ஹெல்த்தி ஃபூட் கிடைக்குது..." என்று லவா முடிப்பதற்குள்,

"இதைத்தான் நான் சொன்னேன்..." என்ற மொட்டுவிடம்,

"எதை?" என்றான் லவா.

"உங்க சிட்டி லைஃப்ஸ்டைலை பத்தி... நீங்க மட்டும் நல்லா சாப்பிட்டு நல்லபடியா வாழனும்... அதாவது இந்த பூமியே மனுஷங்களுக்கு மட்டும் தான் சொந்தம்னு நினைக்குற இந்த மெண்டாலிட்டி... இந்த பூமியில இருக்குற பலகோடி உயிரினகள்ல மனுஷனும் ஒருத்தன். இன்னும் தெளிவா சொல்லனும்னா மீன், தவளை, ஆடு மாடுக்கெல்லாம் பிறகு தோன்றியவன் தான் மனுஷன். ஆனா எல்லாத்திலும் உங்களுக்கு மட்டும் தான் பர்ஸ்ட் ப்ரிபெரென்ஸ் வேண்டுமில்ல? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புகனு படிச்சதில்லையா? சாரி கேள்விப்பட்டதே இல்லையா?" என்று மொட்டுவிடமிருந்து சூடாகவே வார்த்தைகள் விழுந்தது.

"ஸ்ஸ்ஸ்... தெரியாம சொல்லிட்டேன்... அதுக்குன்னு வை திஸ் கொலவெறி பேபி? அண்ட் பனித்துளினு குளுகுளுனு பேரை வெச்சிட்டு இப்படி சூரியன் மாதிரி சூடா பேசலாமா என் கண்ணே?" என்று கொஞ்சலாய் நிறுத்தினான் லவா,

நிமிர்ந்து ஒரு புன்னகை சிந்தியவள்,"சாரி கொஞ்சம் எமோஷனல் ஏகாம்பரம் ஆகிட்டேன்..." என்று தன் கன்னங்குழி தெரிய சிரித்து வைத்தாள் மொட்டு.

"எனக்கு என்னமோ அப்படித் தெரியலையே?" என்ற லவாவை என்னவென்பது போல் ஒரு பார்த்தவளுக்கு,

"என்னைப் போலவே சாயல்ல இருக்க ஒருத்தன் மேல உனக்கிருக்கும் வெஞ்சேன்ஸ் எல்லாம் என்னை வெச்சு தீர்த்துக்கிட்ட மாதிரியே ஒரு ஃபீலிங்ங்ங்கு..." என்று இறுதியில் வடிவேல் போல் இழுத்தான் லவா.

அதற்கு சிரித்தவாறே,"தெரிஞ்சிடுச்சா? எல்லாம் தெரிஞ்சிடுச்சா?" என்று காஞ்சனா லாரன்ஸ் போல் அவள் கேட்கவும்,

"அடி பிராடு... அப்போ உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா? என்னை ஆளை விடுங்க சாமிங்களா..." என்று கோவித்துக்கொண்டவன் போல் லவா நகர அதைத் தெரிந்தும் அவனை சமாதானம் செய்வது போல் அவன் கைபிடித்து கொஞ்சி கெஞ்சினாள் மொட்டு.

"சரி சரி என் செல்ல லவா இல்ல... சாயுங்களாம் உனக்கு வேணுனா ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தரேன் ஆனா அடம்பிடிக்காம சாப்பிடணும்..." என்று அவள் சொல்லவும் அவளை இழுத்துப் பிடித்தவன் அவள் நெற்றியில் செல்லமாய் முட்டி,"சரி வா மேல போலாம்... எத்தனை வருஷம் ஆச்சு இப்படி மனசு விட்டுப் பேசி... வா வா..." என்று அவள் கரம் பற்றி இழுத்துச் செல்ல மொட்டுவிற்கு வழக்கமாய் கொடுக்கும் மோருடன் அங்கே இருந்தார் கனகா.

"அதென்ன அம்மாச்சி இவளுக்கு மட்டும் ஸ்பெஷலா மோர்? ஏன் எங்களுக்கெல்லாம் கிடையாதா?' என்றதும் அவனுக்கும் ஒரு குடுவையைக் கொடுத்தார்.

"அதில்லை கண்ணா, தினமும் காலையில ஐஞ்சு மணிக்கு ஏழறவள் இன்னைக்கு லோட் இறக்கணும்னு நாலுக்கெல்லாம் எழுந்துட்டா... அதுபோக வெய்ய நேரத்துல தான் எப்பயுமே வேலை பார்க்குறது... அதுமில்லாம அது தான் வேலை செய்ய தோட்டக்காரங்க இருக்காங்க இல்ல? அதைச் சொன்னா கேக்கமா எல்லாத்தையும் இவளே தான் செய்யுறது... என்ன பொண்ணோ போ..." என்று சலித்துக்கொண்டார் கனகா.

"ஏன் அம்மாச்சி இதுல என்ன தப்பு இருக்கு? அவ அவளுக்குப் பிடிச்சதை ரொம்பவும் ரசிச்சு செய்யுறா... இங்க எல்லோருக்குமே அவங்களுக்குப் பிடிச்சதை மட்டும் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கறதில்லை அம்மாச்சி... நீங்க கோடி ருபாய் கொடுத்தாலும் இவ செய்யுறதுல பத்து பர்சென்ட் கூட என்னால செய்ய முடியாது தெரியுமா? கொஞ்ச நேரம் வெயில்ல இருந்ததுக்கே பாருங்க எப்படி ஊத்துது? அவளுக்குப் பிடிச்சதை அவ செய்யட்டுமே அம்மாச்சி..." என்று லவா பேச,

"சரியா சொன்ன பேராண்டி... இதை இன்னொருகா நல்லா உரக்கச் சொல்லு..." என்று தன் மனைவியையும் மருமகளையும் பார்த்தவாறு வைத்தி உரைத்தார்.

"நல்லா இருக்கே நியாயம்? நாளைக்குப் போற இடத்திலும் இதே மாதிரி இவளுக்குப் பிடிச்சதை மட்டும் தான் செய்வேன்னு சொன்னா ஒத்து வருமா?" என்று கனகா வினவ வைத்தி பேசத் தொடங்கும் முன்னே,

"நல்லா காது கொடுத்து கேட்டுக்கோ அப்பத்தா... நான் எனக்குப் பிடிச்சதை மட்டும் தான் செய்வேன். அண்ட் என்னை கல்யாணம் பண்ணிக்கறவனுக்கு என்னை மட்டும் பிடிச்சா போதாது... எனக்குப் பிடிச்சதை அவனுக்குப் பிடிக்கலைன்னா கூட எனக்குப் பிடிச்சதை நான் செய்யுறதுல இருந்து என்னைத் தடுக்காம இருக்கனும் சொல்லிட்டேன்..." என்று அமர்த்தலாய் உரைத்து விட்டு அந்த மோரை ஒரு மிடறில் பருகினாள்.

"ஏன்டி நீ சொல்றதைப் பார்த்தா உனக்கு கிராமத்துல தான் மாப்பிள்ளை பார்க்கணும் போல?" என்று தன் கனவு பலிக்காதோ என்ற அச்சத்தில் சித்ரா உரைக்க,

"இந்த கசகச ட்ராபிக் புகை, சப்தம், தீப்பெட்டி மாதிரி பிளாட் வாழ்க்கை அக்கம் பக்கத்துல யாரு இருக்காங்கனு கூடத் தெரியாம இருக்கும் சென்னை மாதிரியான சிட்டில வாழறதைக் காட்டிலும் ஒரு பட்டிக்காட்டுல நான் சந்தோஷமாவும் நிம்மதியாவும் வாழுவேன்... போதுமா?" என்றவளை விந்தையோடு கூடிய அதிர்ச்சியில் பார்த்தான் லவா.

அவனுடைய அதிர்ச்சியான முகபாவத்தைக் கண்டவள்,"நீ ஏன் இப்படி ஷாக் ஆகுற லவா? என்னைக் கட்டிக்கபோறவன் தான் இதுக்கு ஷாக் ஆகணும்..." என்று சொல்லும் வேளையில் தான் குஷா உள்ளே நுழைந்தான்.

"வாயா ராசா... எங்கய்யா போயிட்ட இவ்வளவு நேரம்?" என்ற குஷாவுக்கு,

"இல்ல தாத்தா கார் வெயில்ல இருந்தது. அதை நிழல்ல நிறுத்த போனேன்..." என்றவன் இடைவெளி விட்டு,"தாத்தா பின்னால ஒரு தோப்பு மாதிரி ஒரு இடம் இருந்தது அங்க தான் வண்டியை நிறுத்தியிருக்கேன். ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என்று குஷா கேட்க பதிலளிக்க முயன்ற தன் பேத்திக்கு முன்பாக,"நம்ம இடம் தான்யா ஒன்னும் பிரச்சினையில்ல..." என்று வைத்தி முந்திக்கொண்டார்.

குஷாவும் வந்து ஹாலில் இருந்த அந்த மோடாவில் அமர,"உங்க வேலையெல்லாம் எப்படியா போகுது? லவா நீ இன்னும் அந்த ஆராய்ச்சி கூடத்துல தான் இருக்கியா?" என்ற வைத்திக்கு,

"ஆமா தாத்தா அவன் இன்னும் அங்கேயே தான் இருக்கான். நான் சென்னையில அதே காலேஜ்ல தான் அசோசியேட் ப்ரொபெஸரா இருக்கேன். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல தாத்தா. எல்லாம் நல்லா தான் போகுது..." என்று குஷா சொல்ல,

"குஷா நீங்க படிச்சது என்னய்யா? திடீர்னு யாராச்சும் கேட்டா கூட எங்களால் பதில் சொல்ல முடியல..." என்ற கனகாவிற்கு,

"பயோடெக்னாலஜில பி.டெக் முடிச்சு எம்.டெக் படிச்சிருக்கோம். இப்போ நான் எம்.டெக் முடிச்ச காலேஜ்லயே ப்ரொபெஸரா இருக்கேன். இவன் ஹைதராபாத்ல இருக்கும் ccmbல (centre for cellular and molecular biology) எங்க ப்ரொபெஸர் செய்யும் ப்ராஜெக்ட்ல கூட இருந்து உதவிட்டு இருக்கான்... உங்களுக்குப் புரியுற மாதிரி சொல்லனும்னா இந்த உடம்புல இருக்கும் செல், dna போன்றதையும் இந்த கிருமி அதுக்கான மருந்து தயாரிக்கும் முறையைப் பற்றியுமான படிப்பு... புரிஞ்சுதா?" என்று குஷா தன் அம்மாச்சிக்கு சொல்லும் சாக்கில் மொட்டுவை சீண்டினான் என்பதை லவாவைத் தவிர அங்கிருந்தவர்கள் அறியவில்லை.

"அது போக ரெண்டு பேரும் பி.எச்.டி பண்ணிட்டு இருக்கோம். அநேகமா இந்த வருஷத்துல முடிச்சிடுவோம்னு நினைக்கிறன்... என்ன டா லவா?" என்றவன், "முடிச்சிடுவோம் தான?" என்று கேக்க,

"இதுல என்னடா உனக்கு டவுட்? இந்த வருஷம் முடிச்சே தீரணும்... இல்லாட்டி அம்மாவும் அப்பாவும் ருத்ரதாண்டவம் ஆடிடுவாங்க..." என்று லவா சிரிக்க,

"ஆமா ஜானகிசொல்றதுல என்ன தப்பு இருக்கு? காலாகாலத்துல உங்களுக்கு நல்லது செய்ய வேண்டாமா? இன்னுமா படிச்சிட்டே இருப்பாங்க?"

"படிக்க என்ன அம்மாச்சி வயசு இருக்கு? கல்வி கரையில கற்பவர் நாள் சில... எங்களை என்ன மத்தவங்க மாதிரி எல்லாத்தையும் பாதியிலே அரையும் குறையுமா நிறுத்த சொல்றியா?" என்றதும் இப்போது மொட்டுவை தான் குத்திக்காட்டுகிறான் என்று அங்கிருந்த எல்லோருக்குமே புரிந்தது. ஏனோ இம்முறை வைத்தி எதையோ கூற வாய்வரை வார்த்தை வந்தும் கனகா காட்டிய கண் ஜாடையில் அதைத் தவிர்த்தார் வைத்தி.

"சரி நான் போய் படுக்கறேன்..." என்று மொட்டு அங்கிருந்து எழ லவாவுக்கு அவளுடைய வருத்தமடைந்த முகம் என்னவோ செய்தது. இம்முறை தன் தம்பியிடம் திரும்பிய லவா அவன் மீது தீப்பார்வை ஒன்றைச் செலுத்திவிட்டு எழுந்து அவள் பின்னாலே சென்றான்.(நேரம் கைகூடும்...)


இந்தக் கதையின் கதாபாத்திரங்களில் குழப்பம் ஏதும் இல்லையே? எல்லாம் புரிகிறது தானே? அண்ட் கதை எப்படிப் போகுதுனு சொன்னா மேற்கொண்டு எழுத வசதியா இருக்கும் மக்களே! நன்றி.
Super ra poitu iruku... Kusha ku ena problm Mottu Va gap kedaikarapolam vechu seiyaran.... Ipolam mrk ah vechu thn intelligent level calculate panranka... Agriculture senjaavae etho kindal Panranka
 
Super ra poitu iruku... Kusha ku ena problm Mottu Va gap kedaikarapolam vechu seiyaran.... Ipolam mrk ah vechu thn intelligent level calculate panranka... Agriculture senjaavae etho kindal Panranka
thank you... and yes nowadays intelligence is calculated on one's marks rather than skills... solren???
 
Top