Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-9

Advertisement

praveenraj

Well-known member
Member
இரவு வீட்டிற்கு வரும் போது மணி ஒன்பதைக் கடந்திருந்தது. அனைவர்க்கும் பசி வயித்தைக் கிள்ள முன்பே வீட்டில் பணிபுரியும் ருக்மணியிடம் சொல்லியிருந்தால் அவர் எல்லோருக்கும் சேர்த்து உணவு தயார் செய்திருந்தார். ருக்மணியின் பாட்டியின் தலைமுறையிலிருந்து இந்த வீட்டில் அவர்கள் குடும்பம் வேலை செய்து கொண்டிருக்கிறது. மிகவும் நம்பிக்கைக்குரியவர். எந்த அளவுக்கு என்றால் வீட்டின் நகை பணத்தை கண்ணில் தெரியுமளவுக்கு வைத்துவிட்டுச் சென்றாலும் அதில் இம்மியும் குறையாமல் வைத்தது வைத்த இடத்திலே இருக்கும். கிட்டத்தட்ட ஜானகியும் ருக்மணியும் சமவயதை ஒத்தவர்கள். இதே ஊரிலே தன் தாய்மாமனான செந்திலைத் திருமணம் செய்து வசிக்கிறார். வைத்தியின் நிலங்களை மேற்பார்வை செய்வதும் தோட்டம் தொரவுகளைப் பார்த்துக்கொள்வதும் தான் அவர் வேலை.

உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாய்,"அப்பத்தா செம பசி..." என்று ரித்தீஷ் உரைக்க அவன் கன்னத்தை வாஞ்சையாய்த் தடவிய கனகா,"கை கால் கழுவிட்டு வா உடனே சாப்பிடலாம்..." என்று அனுப்பினார். தங்களுடைய பேரப்பிள்ளைகளிலே கடைக்குட்டி என்பதால் ரித்து மீது கனகா வைத்தி தம்பதியருக்கு சற்று பாசம் அதிகம். ஒன்பதாம் வகுப்பு தான் படிக்கிறான். அவனுக்கும் அவன் அண்ணனான அபிக்கும் ஐந்து வருட வித்தியாசம். கிட்டத்தட்ட அந்தக் கூட்டத்திலே தன் வயதுக்கு இணையாக யாரும் இல்லாதவன் என்றால் அது ரித்து ஒருவன் தான். ஏனெனில் லவா-குஷா, மொட்டு-அனு, பாரி-மணவாளன்-அபி, மெல்லினி-இன்னிசை-ஆனந்தி ஆகியோர் ஒரு ஈடாக இருக்க அதில் ரித்து ஒருவன் மட்டும் தனித்து விடப்பட்டான்.

நீண்ட நாட்கள் ஏன் சொல்லப்போனால் நீண்ட வருடங்கள் கழித்து அக்குடும்பத்தில் இவ்வளவு நபர்கள் ஒன்றாகக் கூடியிருப்பதைக் கண்டு மனம் பூரித்தார் வைத்தி. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு தவறாமல் ஒரு மாதமெனும் எல்லோரும் இங்கே வந்துவிடுவார்கள். அப்போதெல்லாம் இவ்வீடே ஒரு திருவிழாக் கூட்டம் போல் ஜெகஜோதியாய்க் காட்சியளிக்கும். ஆனால் கடந்த நான்கைந்து வருடங்களாக இவர்கள் எல்லோருமாக இங்கே ஒன்று கூடும் வாய்ப்பு அமையவில்லை. ஒவ்வொருவராய் பத்தாம் பனிரெண்டாம் வகுப்பு கல்லூரி என்று அடியெடுத்து வைக்க அவர்களைப் பெற்றவர்களுக்கும் தங்கள் குடும்பத்தையே கவனிக்க வேண்டிய பொறுப்பு வந்ததால் இங்கே வருவது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்திற்குப் பிறகு இவர்களின் பழக்க வழக்கங்கள் முழுவதும் வீடியோ காலிலே தேங்கிவிட மீண்டும் இவர்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்க்க முடியாமல் வைத்தி மிகவும் வருத்தப்பட்டார்.

ஆனால் இந்தக் கவலை வைத்திக்கு மட்டுமில்லாமல் இந்த 'கசின்ஸ்' கூட்டத்திற்கும் அதிகம் இருந்தது. ஆனால் அவர்கள் எல்லோரும் தங்களுக்கென்று ஒரு வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி அதில் நாளும் பொழுதும் தங்கள் உறவை நீர்த்துப்போகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் வேளையில் தான் அவரவருக்கு தத்தம் பணிச்சுமை கூடியதால் அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள எண்ணும் வேளையில் தான் வைத்தி-கனகா தம்பதியரின் ஐம்பத்தி ஐந்தாவது திருமண நாளை எவ்வளவு சிரமப்பட்டேனும் மிகச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுக்க அதன் பொருட்டே வார நாள் என்றும் பாராமல் இந்த வருடம் செவ்வாய்க் கிழமை வரும் அவர்கள் திருமண நாளைக் கொண்டாட ஒவ்வொருவராய் இங்கே படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனைவரும் உடைமாற்றிவிட்டு கீழே வர அவர்களுக்காக உணவு மேஜையில் வைத்தி மற்றும் நந்தகோபால் காத்திருந்தார்கள். சமைக்கப்பட்ட உணவுகளை சித்ராவும் கனகாவும் பரிமாற ஏதுவாய் அந்த மேஜையில் அடுக்க எல்லோரும் அந்த இருக்கைகளை ஆக்கிரமிக்க ரித்து ஒருவன் மட்டும் அமராமல் நின்றான்.

"என்னாச்சு ரித்து? பசி பசின்னு அந்த குதி குதிச்ச? வந்து உட்காரு..." என்ற மணவாளனுக்கு,

"இங்க வேணாம்... அப்பத்தா வெளியில திண்ணையில வெச்சு எனக்கு ஊட்டிவிடு அப்பத்தா... சின்ன பையன்ல எனக்கு அப்படித்தானே ஊட்டுவ?" என்றான் ரித்து.

"டேய் அது நீ சின்ன பையனா இருக்கும் போது... இப்போ இல்ல..." என்று அனு வார எல்லோரும் கலகலத்தனர். அவனோ கோவித்துக்கொண்டவன் போல் வெளியே திண்ணைக்குப் போக,

"ஏ ராசா இருயா வரேன்... உனக்கென்ன நான் ஊட்டணும் அம்முட்டு தானே?" என்று பின்னாலே கனகா அவனை சமாதானம் செய்யும் பொருட்டு கையில் உணவுடன் அவர் போக இந்த ட்விஸ்டை எதிர்பார்க்காத மற்றவர்கள் எல்லோரும் திருதிருவென விழிக்க அவர்ளுக்கு உணவு பரிமாற சித்ராவும் ருக்மணியும் முயலும் வேளையில்,

"யூ நோ இந்த விஷயத்துல நான் நித்யானந்தா பேன்... ஐ ஹேவ் நோ சூடு நோ சொரணை..." என்ற லவா எழுந்து கனக்காவைப் பின்தொடர்ந்து போக,

"நம்ம எல்லோருக்கும் வயசுல மூத்தவரே ஒத்துக்கும் போது எனக்கும் மட்டும் என்ன?" என்ற மணவாளன் பின்னால் போக அடுத்து ஒரு தொடர் வண்டியைப் போல் எல்லோரும் திண்ணையிலே ஆஜராகியிருந்தனர்.
எல்லோரையும் பார்த்து முறைத்த ரித்து,"நான் தான் சின்ன பையன்... நீங்க எல்லோரும் எருமை கிடா மாதிரி தானே இருக்கீங்க..." என்று சற்று முன் தன்னை எள்ளல் செய்தவர்களை அவன் வார,

"டேய் என்ன வாய் நீளுது?" என்று அவனுக்கு ஒரு கொட்டு வைத்தாள் அனு.

"ஏன் அம்மாச்சி... நாங்க எல்லோரும் சின்ன வயசுல இங்க லீவுக்குனு வந்தாலே எங்களுக்கு எப்பயுமே நீ தானே ஊட்டுவ? ஐ மிஸ் தோஸ் கோல்டன் டேஸ்..." என்றான் குஷா.

"அது இதே மாதிரி எல்லோரும் சுத்தி வட்டமா உட்கார்ந்து ஆளுக்கு ஒரு வாய்னு... எத்தனையோ இடத்துல சாப்பிட்டு இருக்கேன் அப்பத்தா ஆனா இது போல ஒரு நிறைவை எங்கேயும் கொடுத்ததே இல்ல..." என்றாள் அனு.
இவ்வளவு வளர்ந்தும் இவ்வளவு படித்தும் இந்த வயதிலும் இவர்கள் பழசை மறக்காது இருப்பதை எண்ணி மகிழ்ந்த கனகா, அங்கு கோழி கொறிப்பதைப் போல் சாப்பிட்ட ஆனந்தியைக் கண்டு,

"ஏன்டி இப்படிப் சாப்பிட்ட அப்பறோம் எப்படி உடம்பு ஏறும்? காலேஜ் படிக்குற பொண்ணு மாதிரியா இருக்க? உங்கம்மா இதெல்லாம் கண்டுக்கறதில்லையா?" என்று தன் பேத்தியின் மேல் இருக்கும் அக்கறையையும் தன் மருமகளின் பொறுப்பின்மையாய்க் கருத்துவதையும் சொல்லிக் குறைபட்டவர்,

"இதுக்குத் தான் சின்ன வயசுலயே உன்னை நாங்க வளர்த்துறோம்னு உங்க அப்பன் கிட்டக் கேட்டேன்... விட்டானா அவன்?" என்று தன் மகனான சுசீந்திரனை திட்ட,

"அம்மாச்சி நான் ஒன்னு கேப்பேன் பதில் சொல்லுவியா?" என்ற மொட்டுவுக்கு,

"கேளுடி சொல்றேன்..."

"அது எப்படி அம்மாச்சி ஆறு பிள்ளைங்களை நீ பெத்த?" என்று சீரியசாக அவள் கேக்க ஏனோ மற்றவர்கள் எல்லோரும் சிரித்தனர்.

"ஏன்டி வளர்த்தது தான் ஆறு பெத்தது எட்டு..." என்று கனகா இடைமறிக்க,

"அதெப்படி அப்பத்தா உன்னால நீ பெத்த பிள்ளையை இன்னொருவருக்கு தானம் கொடுக்க முடிஞ்சது?" என்று தன் தந்தையை தத்து கொடுத்ததைப் பற்றி அனு கேக்க,

உண்மையைச் சொல்லனுமா எனக்கு அதுல துளியும் விருப்பமில்லை... ஆனா உங்க தாத்தன் தான் பிடியா நின்னாரு..."

"ஓகே இது தான் ரொம்ப முக்கியமான கேள்வி... நீ பெத்த ஆறு பேர்ல உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் அம்மாச்சி?" என்றான் லவா.

"இதென்னயா கேள்வி? பெத்தவளுக்கு எல்லாமும் சமம் தான்... அதெப்படி ஒன்னு கூட ஒன்னு கொறச்ச ஆக முடியும் சொல்லு?" என்று பதிலளித்த கனகாவிற்கு,

"பாரு இதெல்லாம் எஸ்கேபிசம்... நான் நம்ப மாட்டேன்..." என்று மணவாளன் கிடுக்குபிடிப்போட அவரோ ஒரு புன்னகையில் அங்கிருந்து நகர்ந்தார்.

"உன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் அப்பத்தா? சொல்லிட்டுப்போ..." என்று கேட்டும் அவர் பதிலேதும் கூறாமல் சென்றார்.

இரவு நேர நிலவொளி அந்தக் கோழி கூண்டின் தகரத்தில் பட்டு எதிரொளிக்க எல்லோரும் அரட்டை அடித்தனர்.

"மாம்ஸ் கார்ட்ஸ் விளையாடலாமா?" என்ற அபிக்கு,

"நாளைக்கு விளையாடலாம்... இன்னைக்கு ட்ராவல் பண்ணது அது இதுனு ஒரே டையேர்டா இருக்கு... குட் நைட்" என்று குஷா எழும்ப,

"சரி காலையில பாப்போம்... எப்படியும் ரெண்டு நாள் இங்க தானே இருக்கப் போறோம்... அப்போ விளையாடலாம்..." என்று லவாவும் எழ ஏனோ தன்னையே ஒரு மாதிரி பார்க்கும் மொட்டுவைக் கண்டவன்,

"என்ன மொட்டு?"

"சாப்பிட்ட உடனே தூக்கமா? அப்படியே ஒரு ரவுண்டு வாக் போலாமா?" என்றதும்,

"எனக்கெல்லாம் நடந்தா திரும்ப பசியெடுக்கும்... என்னால முடியாது" என்று அபி செல்ல அவனுடன் மணவாளனும் அனுவும் சென்றனர்.

"நான் உங்க கூட வரேன்..." என்ற ரித்துவை சமாளித்து அனுப்பி விட்டு மொட்டுவும் லவாவும் பொடிநடையாக அங்கே வலம் வந்தனர்.

அவர்களுக்குத் துணையாக ஸ்கூபியும் உடன் வர மூவருமாக நடக்க,

"என்ன விஷயம் மொட்டு? ஏன் சாயுங்காலத்துல இருந்து ஒரு மாதிரி அப்செட்டா இருக்க?" என்றவனுக்கு,

"என்னமோ தெரியல லவா... ஒரு மாதிரி பீலிங்கா இருக்கு..." என்றவளுக்கு,

"என்ன உன் ரோமியோ உன்னைக் கண்டுக்காம அவ கூடச் சுத்துறான்னா?" என்று விஷமமாய்க் கேட்டவனின் புஜத்தைக் கிள்ளி,

"இவனைப் போய் நீ ரோமியோனு சொன்னதை ஷேக்ஸ்பியர் கேட்டிருந்தா ஏன்டா ரோமியோ ஜூலியட்டை எழுதினோம்னு தற்கொலை பண்ணியிருப்பாரு..." என்று சொல்லி கிளுக்கென சிரிக்க அவள் கூற்றில் துளியும் பொய் இல்லை என்பதை உணர்ந்தவன் பிறகு ஏன் அவள் வருத்தமடைந்தாள் என்று யோசிக்க,

"என்ன யோசனையையெல்லாம் பலமா இருக்கு?" என்று புருவம் உயர்த்த,

"அப்பறோம் ஏன் சாயங்காலம் டல்லா இருந்த?"

"ஏன் உனக்குத் தெரியாதா?"

"எனக்கு உண்மையிலே புரியல... என்ன விஷயம் மொட்டு?"

"போன வாட்டியே அவங்க என்னைக் கிண்டல் செஞ்சாங்க... என்னமோ இந்த வாட்டியும் அது போல..." என்னும் போது தான் கடந்த கால நினைவுகளை எண்ணியவன்,

"ஏ இன்னுமா அதெல்லாம் மறக்கல? அது தான்..." என்றவன் அவள் முகவாட்டத்தைக் கண்டு அவள் மோவாயைப் பிடித்து,

"அது தெரியாம நடந்தது..." என்று முடிக்கும் முன்னே அவள் முறைக்க,

"சரி சரி அது தெரிஞ்சே அவன் செஞ்ச வேலை தான்... ஆனா அனு அப்படியில்ல... அண்ட் அனுவுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை? அவ உண்மையிலே உன் சித்தி சித்தப்பாப் பொண்ணு தானே? ஐ மீன் அம்மா சைடும் அப்பா சைடும் சேர்ந்த சொந்தம்... அண்ட் குஷானா கூட உன்னோட வயசுல பெரியவன் ஆனா அனு அப்படியில்லையே? ஏன் நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க?"

"அனு என்கிட்ட எப்பயும் ஃப்ரீயா தான் பேசுவா... அண்ட் ஜாலி டைப்பும் கூட தான்... ஆனாலும் எனக்கும் அவளுக்கும் சின்ன வயசுல இருந்தே ஒரு அறிவிக்கப்படாதப் போட்டி இருக்கு... உனக்கு அதை எப்படி நான் புரியவெப்பேன்? ஏன்னா உனக்கு அப்பா சைட்லயும் சரி அம்மா சைட்லயும் சரி யாரும் போட்டியில்லை... குஷாவும் நீயும் அவ்வளவு ஒத்துமையா இருப்பிங்க... அண்ட் நீங்க ரெண்டு பேரும் எல்லா விஷயத்திலும் மோர் ஆர் லெஸ் ஒரே மாதிரி தான்... அதனால் பிரச்சனை இல்ல... ஆனா நானும் அனுவும் அப்படியில்லை... ஒவ்வொரு விஷயத்திலும் என்னையும் அவளையும் ஏதாவது ஒரு விஷயத்துல ஒப்பிடுவாங்க... அவ நல்லாப் படிப்பா இப்போ ஒரு சாப்ட் வேர் கம்பெனிலயும் வேலையில இருக்கா... எனக்கும் இதெல்லாம் அனவிஷயமான கற்பனைனு தெரியுது தான்... ஆனாலும் எப்போலாம் அனு இங்க வராளோ அப்போல்லாம் என்னை நானே ஒரு மாதிரி தாழ்வா ஃபீல் பண்றேன்... எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல... தாழ்வுன்னு கூடச் சொல்ல வேணாம் ஒரு வித இன் செக்கூரிட்டினு வெச்சுக்கலாம்... அதும் அவ கூட உன் உடன்பிறப்பு சேர்ந்துட்டானா அதான் என்னை ரிவெஞ் செய்ய ஏதாவது திட்டம் போட்டுட்டானோன்னு ஒரு கவலை..." என்று மொட்டு முடிக்க உண்மையிலே இப்போது தான் லவாவிற்கு இவர்கள் விஷயத்தில் சிறிது சிறிதாக தலையும் வாலும் விளங்க ஆரமித்தது. அதே நேரம் இப்படிப் பழிவாங்கும் அளவிற்கு இவர்களுக்குள் அப்படி அவ்வளவு பெரிய காரணம் என்னவாக இருக்க முடியும் என்று தவித்தான் லவா.

"எனக்கு உண்மையிலே புரியல மொட்டு... அனு யாரு உன் தங்கச்சி... அண்ட் நான் உனக்கொரு ப்ராமிஸ் பண்றேன்... ஒருவேளை அவங்க உன்னை எங்கேயாவது இன்சல்ட் பண்ற மாதிரி பிஹேவ் செஞ்சா கண்டிப்பா அவங்களை இந்த முறை நான் சும்மா விட மாட்டேன்... ஐ ப்ராமிஸ்... என் மொட்டுவ அழவெக்கவோ இல்ல வருத்தப்படவோ யார் முயற்சி செஞ்சாலும் அவங்க இந்த முறை அவங்க வாழ்க்கையில ஒரு பெரிய பாடத்தை... அதும் காலத்திற்கும் மறக்க முடியாத மாதிரி ஒரு பாடத்தை நான் கத்துக்கொடுப்பேன். பார்த்திடலாம் அவங்களா இல்ல நம்மளானு... என்ன ஓகே வா?" என்று சோகமாய் ஆரமித்து கோவமாய் உணர்ச்சிவசப்பட்டு இறுதியில் நிதானமாய் உரைத்தான் லவா.
ஏனோ இதைக் கேட்டவளுக்கு அவளையும் அறியாமல் ஒரு யானை பலம் வந்துவிட அதன் வெளிப்பாடாக அவன் கரத்தை இறுக பற்றினாள்.

"சரி வீட்டுக்குப் போலாமா? டைம் ஆச்சு... இந்நேரம் நீ நடக்கறதைப் பார்த்து உன் கொலுசொலியில யாராச்சும் ராட்சஷி உலா வருதுனு செய்வினை வெச்சிடப் போறாங்க..." என்ற லவாவை முறைத்து,

"என்னைப் பார்த்தா உனக்கு ராட்சஷி மாதிரி தெரியுதா?"

"அதுல என்ன சந்தேகம்?" என்றதும் அவனை அடிக்க கீழே எதையோ அவள் தேட,

"நீ ராட்சஷி தான் ஆனா அழகான ராட்சஷி...
அழகான ராட்சஷியே
அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடிமனசை அருவாமனையில் நறுக்குறியே..." என்று பாடலாகவே பாடி,

"அநேகமா வைரமுத்து இந்தப் பாட்டை எழுதுறதுக்கு முன்னாடி உன்னை எங்கையாவது பார்த்திருக்கணும்... இரு இரு அவர்கிட்ட நான் காபி ரைட்ஸ் கேக்குறேன் பாரு..." என்று சொல்ல செல்லமாக அவனைத் துரத்தினாள் மொட்டு.

அவர்களுக்காகக் காத்திருந்த வைத்தி,"எங்கய்யா போயிட்டீங்க? உங்களுக்காகவே கதவடைக்காம இருந்தேன்..." என்றதும் அவரவர் தங்கள் அறைக்குச் சென்றனர்.

காலையில் ஆதவன் தன்னுடைய பொன்னிற கதிர்களை வெளியிடும் முன்னே கூவிய சேவலின் ஓசையில் ஒவ்வொருவராய் விழித்தனர். அங்கே அலாரத்தின் ஒலியில் விழித்த குஷா ரெஃப்ரெஷ் ஆகி தன்னுடைய சகோவை அழைக்க அவனோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். இனி அவனை எழுப்பி பயனில்லை என்று அறிந்து குஷா கீழே வர அங்கே கனகா சித்ரா ஆகியோர் சமையலறையில் தீவிரமாக இருக்க,

"என்ன அம்மாச்சி அதுக்குள்ள?" என்றவனுக்கு,

"இல்ல எல்லோரும் வந்திருக்கீங்க அதான் நம்ம கருப்பனுக்கு ஒரு பொங்கல் வெச்சிடலாம்னு..." என்றதும்,

"இன்னைக்கு லாக் டௌன் இல்ல?"

"அட நம்ம தோட்டத்துக்குள்ள இருக்குற கோவிலுக்குப் போக யாருகிட்டயா உத்தரவு வாங்கணும்?" என்று அவர் பதிலளித்தார்.

"அப்படி என்ன திடீர் வேண்டுதல்?" என்று குஷா சிரிக்க,

"எத்தனை வருஷம் கழிச்சு பிள்ளைங்க எல்லோரும் வந்திருக்கீங்க அதான் உங்களுக்கு நோய் நொடி காத்து கருப்பு அண்டாம இருக்க..." என்னும் போதே குஷா சிரிக்க,

"சாமி விஷயத்துல கிண்டல் செய்யக்கூடாது குஷா..." என்று சித்ரா உரிமையாய்க் கண்டிக்க, அங்கிருந்து செல்ல முற்பட்டவனைத் தடுத்தவர்,

"போய் எல்லோரையும் எழுப்பி குளிக்க சொல்லுயா... நீங்களும் வந்து புத்துக்கெல்லாம் பால் ஊத்தணும்..." என்றதும் இதில் விருப்பமில்லா விட்டாலும் அவர்களின் நம்பிக்கையை வீணாக்க விரும்பாதவன் எல்லோரையும் கிளப்பினான்.

"வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்?" என்ற அபியை மொட்டு முறைக்கவும் பதில் பேசாமல் கோவிலுக்குச் சென்றனர்.
அங்கே பெரியவர்கள் பூஜை செய்து வழிபட நம்பிக்கை உடைய

சிறியவர்கள் ஒத்தாசை செய்யவே நம்பிக்கை இல்லாதவர்கள் அமர்ந்து அரட்டை அடித்தனர்.

"நான் நிம்மதியாத் தூங்குறதே ஞாயிற்றுக்கிழமை ஒன்னு தான்... அதிலும் இந்த அப்பத்தா மண்ணை அள்ளிப் போட்டுடுச்சு..." என்று அனு புலம்ப,

"வை பிளட் சேம் பிளட்..." என்றான் அபி.

அங்கே லவா மொட்டு ரித்து மாத்திரம் பெரியவர்களுடன் இருக்க வைத்தி கற்பூரம் காட்டி வேண்டுதல்களை முறையிட்டு அந்தச் சேவலை அறுக்க தீர்த்தமிட,

"இங்கப் பாரு சேவலை அறுக்க சேவல் கிட்டயே பெர்மிஷன்..." என்று குஷா கமெண்ட் அடிக்க,

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுயா சாமி கண்ணைக் குத்தும்..." என்ற கனகாவிற்கு,

"ஏன் அம்மாச்சி அப்படிப்பார்த்தா இந்த உலகத்துல பொய், திருடு, கொலை கொள்ளை கற்பழிப்புனு செய்யுற எவனும் உயிரோடவே இருக்கக்கூடாது..." என்று முடிக்கும் முன்னே,

"விருப்பம் இருக்கவங்க மட்டும் இங்க இருக்கலாம். இங்க எல்லோருக்கும் அவங்களுக்குமான நம்பிக்கை வழக்கம் பழக்கத்தைப் பின்பற்ற உரிமை இருக்கு... யாரையும் கட்டாயப்படுத்த மட்டும் தான் உரிமை இல்ல... விதண்டாவாதம் வேணாம்..." என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும் மொட்டு தன்னைத் தான் நோஸ் கட் செய்துவிட்டாள் என்று குஷாவும் உணர்ந்தான். அதில் அவன் பல்லைக் கடிக்க பிராத்தனையை முடித்துவிட்டு எல்லோரும் வீட்டிற்கு வந்தனர்.

"ஏய் மொட்டு சும்மா இருந்தவனை ஏன் டி சொறிஞ்சு விட்ட?" லவாவிற்கு,

"எனக்குத் தான் டிபென்சுக்கு பெரிய ஆளு இருக்கே?" என்று புருவம் உயர்த்தினாள்.

அங்கே முகத்தை உர் என்று வைத்திருந்த குஷாவைச் சமாதானம் செய்ய முயன்றாள் அனு.

"ஹேய் குஷா ஒரு ஜோக் சொல்லட்டா?"
குஷா முறைக்க,

"மரமே இல்லாத காடு என்ன தெரியுமா?" என்றதும் குஷா சற்று யோசித்து

"பாலைவனமா? இல்லையே அது வராதே?"

"சிம் கார்டு..." என்று அவள் இளிக்க முறைத்தவனைக் கண்டு,"சரி சரி இது வேணா வேற ஒன்னு சொல்றேன்..."ஒரு நாள் ஒருத்தன் பச்சை கலர் சட்டை போட்டு வெள்ள வேட்டி கட்டி ஒரு வீட்டுக்குப் போய் கதவைத் தட்டோ தட்டுன்னு தட்டினான் ஏன்?"

யோசித்தவன் அவள் கூறிய பச்சைக்கும் வெள்ளைக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமென்று யோசிக்க விளங்காதவன் அவளைப் பார்க்க,
அவளோ,"ஏன்னா அந்த வீட்ல காலிங் பெல் இல்ல..." என்றதும் புரியாமல் இருந்தவன் புரிந்து,

"இங்கபாரு அவ பேசுனதுல கூட நான் இவ்வளவு வெறுப்பாகல... ஓடிடு என்னை டென்ஷன் பண்ணாத..."

"ஒருத்தன் வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தான். அவனுக்கு கால் லெட்டரும் வந்தது ஆனா அவன் வேலைக்குப் போல ஏன்?"

"ஏன்? வேலை பிடிக்கலையா?"

"கால் லெட்டர் தானே வந்தது முழு லெட்டரும் வரட்டும்ன்னு இருந்தான்..." என்னும் போது கொலைவெறியில் அவளைத் துரத்தினான் குஷா.

பிறகு அவர்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிக்க அவர்களுடன் நீண்ட நேரம் வைத்தியும் கோபாலும் உரையாட மாலையில் திட்டம் போட்டப்படியே கார்ட்ஸ் ஆடத் தொடங்கினர். வரிசையாக ரித்துவே மூன்று ஆஷ் வாங்க தன்னை எல்லோருமாகச் சேர்ந்து ஏமாற்றுவதாய் எண்ணி கோவித்துக்கொண்டவனை சமாதானம் செய்யும் பொருட்டு அவன் கார்ட்ஸ் முழுவதையும் அனுவிடம் பரிமாற்றி அவளை வைத்துச் செய்தனர்.

இவர்கள் எல்லோரும் விளையாடுவதைப் பார்த்த கனகா,
"ஏன் டி இப்படித்தான் விளக்கு வெச்ச நேரத்துல நடுவீட்ல அதும் பொட்டபிள்ளைங்களும் சேர்ந்து சீட்டு ஆடுவிங்களா? அந்தக் காலத்துல எங்க அய்யனுக்கு சீட்டைப் பார்த்தாலே அவ்வளவு கோவம் வரும்..." என்று முடிக்கும் முன்னே,

"நீங்க விளையாடுங்க கண்ணுங்களா... அவ கிடக்குறா கெழவி..." என்று வைத்தி அவர்களுக்கு ஆதரவாகப் பேச அவரை முறைத்தார் கனகா.
"நம்ம பிள்ளைங்க எல்லாம் சும்மா சந்தோசத்துக்குத் தான் விளையாடுத்துங்க இதைப்போய் சூதோட ஒப்பிடுற? உள்ள போ..." என்று வைத்தி சொல்ல இதற்கு மேல் தன் வார்த்தை அம்பலம் ஏறாது என்று அறிந்து அவர் சென்றுவிட அடுத்த ஆட்டத்தில் கோபாலும் வைத்தியும் இணைந்து ஒன்றாக ரம்மி ஆடி அன்றைய பொழுதைக் கழித்தனர். (நேரம் கைகூடும்)

எங்க பாட்டிவீட்டுக்குப் போயிட்டா என் சித்திங்க மாமா அத்தை தாத்தாவோட எல்லோரும் ஜாலியா கார்ட்ஸ் விளையாடுவோம். இதே மாதிரி எங்க வீட்டுக்கு சித்தப்பா வந்தா விளையாடும் போது எங்க தாத்தா கனகா பாட்டி சொன்ன இதே டைலாக்கை சொல்லுவார்... good old memories... nostalgia
 
Memories ❤️apdiye childhood,native days, cousins atrocities Ellam nyabagam vanthuchu ? semma ..... shabaaaaa possesive sonene nan ??.... ithula ipdi oru reason ethirparkala...yappa lava dialogue ellam perusa iruke.athan ponna mathitingala??..... paatita keta question Ellam ?? Ellarum ketrupom....... sami kumbitta vishayamla mottu sonnathu correct.ellam avangavanga nambikai poruthu ?.... ipothan theriyuthu intha anuva yen epoparu Ellam kalaaikaranganu??? mudiyala over kadi?.....last playing cards ❤️ cards nale thatha paati solra same dialogue? super
 
எதுக்கு இப்படி எலியும் பூனையுமா இருகாங்க. அனுக்கும் மொட்டுக்கும் என்ன பிரச்சனையா இருக்கும் ?. இந்த மாதிரி ஜாயின் ஃபேமிலி யா இருக்கிறது எவ்ளோ நல்லா இருக்கும் ல ??. என்ன பண்றது நேஜத்துல நடக்க வாய்ப்பு கம்மி தான. இந்த அனுபவத்தை நான் உணர்ந்ததே இல்லை ????. என் பாட்டியும் தான் இருகாங்களே .....
இளம் தலைமுறை ஒண்ணா இருந்தாலே ஜாலி தான் ❤️❤️❤️. நாங்க சிஸ்டாஸ் இப்படி தான் ஒண்ணா இருக்கும் போது செமையா என்ஜாய் பண்ணுவோம். எனக்கு ரொம்ப பிடிச்ச ஜோனர்ல கதை எழுதுறீங்க நான் ரொம்ப ஹேப்பி பாஸ்.
 
Rukmani maathiri nambikaikuriya aal veetla iruntha jolly aa outing poittu nithaanamaa veetukku varalaam, but ivangala maathiri namakku kidaikkanume,, family onnu koodinaa antha edathula kalakalappukku panjam illathaan,
Mottu feel aha reason ithuvaa, irunthaalum Mottu feel aha koodaathunnu ipadi laam ama sami poda koodaathu Lava,
Che... ennada ithu mottukku vantha sothanai, ellar koodavum compare panraanga ( Kusha,Anu )
Lavakku vantha doubt enakkum irukku, enna periya reason? writer solren solren thaane,
Unmailaye namma pakkam support ku aal irunthaa yaanai balame, Lava pesi pesiye avala ilahuvaakkirraan,
Seval, keda vetrathellam avangavanga nambikkai saarnthathu,
Yen ippadi kadi joke,
Ji... same pinch... Naangalum velayaaduvoam cards
 
Super... Samy ku pongal adachal Ellamae seivom. Naanka Ellorum epo onu sendhalum cards thn???
 
Memories ❤apdiye childhood,native days, cousins atrocities Ellam nyabagam vanthuchu ? semma ..... shabaaaaa possesive sonene nan ??.... ithula ipdi oru reason ethirparkala...yappa lava dialogue ellam perusa iruke.athan ponna mathitingala??..... paatita keta question Ellam ?? Ellarum ketrupom....... sami kumbitta vishayamla mottu sonnathu correct.ellam avangavanga nambikai poruthu ?.... ipothan theriyuthu intha anuva yen epoparu Ellam kalaaikaranganu??? mudiyala over kadi?.....last playing cards ❤ cards nale thatha paati solra same dialogue? super
எல்லோருக்கும் அப்படி சில நினைவுகள் இருக்குமில்ல? ஹா ஹா அங்க தான் ட்விஸ்ட் இருக்கு சொல்றேன்....? எஸ் எஸ்... உண்மை தான் அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஹா ஹா அனு ஜாலி கேர்ள்?� எஸ் நன்றி?
 
Top