Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனச தாடி என் மணிக்குயிலே-4

தீபா செண்பகம்

Well-known member
Member
மனச தாடி என் மணிக்குயிலே-4
கடந்த மூன்று அத்யாயங்களுக்கு விருப்பமும், விமர்சனமும் தந்த சகோக்களுக்கு நன்றி.
பூங்குயில், சாதாரண கிராமத்து பெண் தான். ஆனால் தன்னைப் புறக்கணிக்கும் புருஷனின் மனம் அறியாது தவித்தப் பேதை. அவன் நிதர்சனம் தெரிந்தப் பின் என்ன செய்வாள். அந்தச் சூழ்நிலையை எப்படிக கையால்வாள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நல்ல வாக்குவாதங்கள் சமுதாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும். கதையோடு நிற்காமல் அதையும் சிந்திப்போம்.
வாசித்து விமர்சனம் தாரீர்.
தீபா செண்பகம்.

manikuyil -4-part-1
manikuyil-4 part-2
 
Last edited:

marymadras

Well-known member
Member
மிகவும் அருமையான பதிவு தீபா😍😍😍.பூங்குயில்,வாசுதேவனிடம் உங்களுக்கு மகள் இருக்கறது கூட தெரியுமா என கேட்பதும்,எனக்கு உங்க முகம் கூட மறந்து போச்சு,என் கூட வாழ வேணாம்,என் கழுத்திலே சுருக்கு கயிறு மாதிரி இருக்கிக்கிட்டு இருக்குற தாலியை மட்டும் கழட்டி என்னை விடுவிச்சு விடுங்க என கேட்பது கண்கலங்க வைக்கிறது😢😢😢😢😢.

தனக்கு மகள் இருப்பது கூட வாசுவுக்கு தெரியாது என பூங்குயில் நினைத்திருக்க,கருவை கலைக்க சொன்னவன்,குழந்தையை திருட்டுதனமாக பார்த்திருக்கான் அதற்க்கு சோலையம்மாவும் உடந்தை 😠😠😠😠.பூ,வாசுவிடம் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி தான்👏👏👏👏👏.

உசிலம் பட்டிகாரனைத் தேடினா,சினிமா ஹீரோ கணக்கா ஜம்முனு வந்து நிக்கறானா,மாமா, மச்சான் கூட்டணி கலகலப்பு😀😀😀.

பூ சந்தோஷமா இருந்தாலே போதும்னு நெனச்ச செல்வத்துக்கு அவளின் நிலையும்,வீட்டில் உள்ளவர்கள் இத்தனை வருடங்களாக பொறுமையாக இருந்தது கோபத்தை கொடுக்கிறது😠😠😠.

தங்கப்பாண்டி,தான்வி திருமணத்துக்கு ஓரளவு சம்மதமும் கிடைத்து விட்டது👌👌.வாசுதேவனை சுற்றி கட்டம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க,மாட்டிக்கிட்டா பொங்கல் தான்,சங்கு தான்😱😱😱. உண்மை தெரிய வரும் போது அம்மா,மகனின் நிலை என்னவாகும் காண காத்திருக்கிறோம்☺☺☺.
 
Last edited:

Banumathi jayaraman

Well-known member
Member
சபாஷ், பூங்குயில்
வாசுவிடம் தைரியமாக எல்லாவற்றையும் பேசி விட்டாள்
நல்லா வெட்கப்படுடா வாசு குடிகார நாயே

பூங்குயில் செல்லத்தை நினைத்துத்தான் எனக்கு ஒரே கவலையா இருந்தது, தீபா டியர்
இப்போ அவளே ஒரு தெளிவான முடிவு எடுக்கப் போறாள்
இப்போத்தான் எனக்கு நிம்மதியாச்சு

"ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி............"
அடுத்து என்ன செய்யணுமுன்னு செல்லம்மாள் அத்தையிடமும் ஆலோசனை கேட்டு ரெடியாயிட்டாள்
பூவு என்ன செய்யப் போறாள்?
மாசிக் களரி திருவிழா வரட்டும்

நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி செல்வ மணி மாமனை கேள்விகள் கேட்டான்
செல்வாவுக்கும் ஒரு சபாஷ்

அப்போ மாமன்களுக்கும் சகோதரியின் மகன் வாசுவின் பூளவாக்கம் தெரிந்துதான் இருக்கு
கௌசல்யா அருமையாக சொன்னார்

இந்த கௌசல்யா போல ஒரு ஆளு என் பூங்குயில் செல்லத்துக்கு மாமியாரா வந்திருக்கக் கூடாதான்னு எனக்கு ஒரே ஏக்கமாக இருக்குப்பா

இந்த அப்டேட்டில் பூங்குயில், செல்வ மணி இரண்டு பேரையும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு, தீபா டியர்
இவங்க இரண்டு பேரும் சேர்ந்தால் நல்லாயிருக்கும்ப்பா
சேர்த்து வைங்க, தீபா டியர்
 
Last edited:
Top