Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனச தாடி என் மணிக்குயிலே-6

தீபா செண்பகம்

Well-known member
Member
மனச தாடி என் மணிக்குயிலே-6
சென்ற பதிவிற்கு, விருப்பமும், விமர்சனமும் தந்த அன்புள்ளங்களுக்கு நன்றி.

இன்று முக்கியமான நாயகன், தங்கப்பாண்டியன் ஐபிஎஸ், இந்த அத்யாயத்தில் அதிரடியாகயாக அறிமுமாகி வருகிறார். சல்யூட் டூ த ஆபீஸர். பாசக்கார அண்ணனும் கூட. சிக்கினான் வாசு.

வாசித்து விமர்சனம் தாரீர்
தீபா செண்பகம்.

manikuyil6 part-1
manikuyil6 part-2
 
Last edited:

Banumathi jayaraman

Well-known member
Member
அப்பாடா
இந்த அப்டேட் படிச்சுத்தான் கொஞ்சம் கவலை தீருது
வாசுவுக்கு இங்கே விருதுநகருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டாங்களா?
சூப்பர் சூப்பர்
சோலையம்மா நாசமா போறவள் என்ன புளுகு புளுகுகிறாள்?
அவள் வாயிலே நெருப்பைத்தான் வைக்கணும்
கருமம் பிடிச்ச வாசு இரண்டு மாசம் கழித்துத்தான் வருவேன்னு என்ன காரியம் பண்ணுறான்
ஏன் கடைசி கூடல்ன்னு சொல்லுறீங்க, தீபா டியர்?
வாசு இறந்து விடுவானா?
நோஓஓஓஓஓஓஓஓஓஓ
அவ்வளவு சீக்கிரமா வாசு சாகக் கூடாது
பூங்குயிலுக்கு இவன் செஞ்ச அட்டூழியங்களுக்கு வாசுவுக்கு சரியான தண்டனை கிடைக்கணும்
 
Last edited:

marymadras

Well-known member
Member
தங்கப்பாண்டியனுக்கு, வாசுவை பற்றி எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சு, வாசு செமையா மாட்டிக்கிட்டான்,ஊரில் வச்சே அவனுக்கு பொங்கல் வைக்க தயாராகிட்டாங்க சூப்பர்👏👏👏👏.

துரையும், தங்கப்பாண்டியும், வாசுவுக்கு விருதுநகர்க்கு மாற்றல் கிடைச்ச விஷயத்தை வீட்டில் உள்ளவங்களுக்கு சொல்லாம மறைக்கிறதுக்கு முன்னாடியே,கருத்தபாண்டியிடம் சொன்னதோடு ஊருக்கும் வர சொல்லிட்டாங்க👌👌👌👌.

பூங்குயிலும், வாசு அவட்ட பேசியதை வச்சு, இவன் சேர்ந்து வாழ மாட்டான் ,புரிஞ்சுட்டு எல்லாத்துக்கும் தயாரா இருக்கா🙁🙁🙁.

மூனு வருசம் கழிச்சு வந்துட்டு,ஆத்தா கூப்பிட்டவுடனே ஓடி வந்துட்டேன்னு சொல்லிட்டு, நீலிக்கண்ணீர் வடிச்சு நாடகமாடுது😠😠.ஒரு வாரம் வந்து தங்கிட்டு போ அப்புறம் பாத்துக்கலாம் , நம்மாளுங்க ரெண்டு தாரம் கட்டறதில்லையான்னு சொல்லுது இவ எல்லாம் மனுஷியா😈😈😈😈.

காட்டானா திரியலாம்,கட்டுனவளை விட்டுத்தான் ஊர் ஊரா சுத்தக்கூடாது👏👏👏.நீயும்,அழகியும் எனக்கு ஒன்னு தான் செல்வம் சொன்னதுக்கு கண்டபடி நெனச்சுட்டு,காட்டுக் குரங்குன்னு
திட்டுறியே பூவு😅😅😅😅.

இந்த தடவை மொத்தமா எல்லாத்தையும் தொலைச்சிடறேன்னு வாசு சொன்னது போல அப்படியே நடக்க போகுதுன்னா, சரயு,சரணும் அவனை விட்டு போய்டுவாங்களா🙄🙄🙄🙄.அம்மா,மகன் ரெண்டு பேரும் செய்த தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகுது,காண காத்திருக்கிறோம்☺☺
 
Last edited:

padhusbi

Well-known member
Member
எத்தனை காலம் ஏமாற்ற முடியும். வாசு மாட்டினான் . பாவம் அவன் பொண்டாட்டி சரயு. செல்வம் எப்போ குயிலுடன் சேருவான் . கதை நல்லா போகுது. very interesting
 
Top