Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனச தாடி என் மணிக்குயிலே-7

தீபா செண்பகம்

Well-known member
Member
மனச தாடி என் மணிக்குயிலே-7

இந்த அத்யாயத்துக்கு நீண்ட இடைவெளி ஆகிவிட்டது மன்னிக்கவும். வேலைபளு , உடல் கோளாறுக்கும், இதுவும் என் ஆர்வக் கோளாறுக்கும் இடையில் போட்டி, அதில் மொபைல் வரை வந்த மணிக்குயில், சபை ஏறமுடியலை. ஒரு வழியா இன்று ஒரு அத்யாயத்தை பிரசிவிச்சாச்சு.
மாசிகளரிக்கு முன் நடக்கும் வீட்டு சூழல், லைவாவே போவோம் வாங்க.
எல்லா கதாபாத்திரங்களும் நம்மோடு வசிப்பர்களே, நான் தான் கொஞ்சம் பாலீஷ் போட்டு நல்லவங்களா காட்டுறேன், உண்மை இதைவிடவும் அப்பட்டமாக இருக்கு. அதை எழுத நிஜமாகவே எனக்கு கை வரவில்லை என சொல்லலாம்.
வாசித்து விமர்சனம் தாரீர்.
தீபா செண்பகம்.


manikuyil7 part-1
manikuyil7 part-2
 
Last edited:

marymadras

Well-known member
Member
அருமையான பதிவு தீபா😍😍😍😍.வாசு,பூங்குயில்க்கு பணத்த கொடுத்து அத்துவிடலாம்னு சொன்னா,சோலையம்மா தன் பொறந்த வீட்ட போல யாரும் தாங்க மாட்டாங்க ,சீர் செய்ய மாட்டாங்க ரெண்டு பேரோடும் இருக்க சொல்லுதே😠😠😠😠😠.

இன்னொரு குழந்தை பொறந்துட்டா உண்மை தெரிந்தாலும் உன்னை விட்டு போக மாட்டா,மதியழகி,
செல்வத்தை அப்பான்னு கூப்புடறா,நீ வேணாம்னு சொன்னாலும் அவளை கட்டிக்க ஆள் இருக்கு என வாசுவோட மனசுலே பொறாமையை,விஷத்தை கலக்குறா,என்ன ஜென்மமோ 😈😈😈😈.

செல்வம், வாசுவை பத்தி கோபமா பேசறதை பார்த்தா அவனுக்கும் வாசுவை பற்றிய உண்மை தெரியுமோ🤔🤔🤔.பேச்சி,மகள்,பேரன் பவுசு தெரியாம அவங்கள ரொம்பத்தான் தாங்கி பேசுது, உண்மை தெரியறப்போ பேச்சிக்கும் பொங்கல் தான்😠😠😠😠.

மாசமா இருக்கறப்போ விட்டுட்டு போனவன்,மூனு வருசம் கழிச்சு கூப்பிட வந்தா என்ன,ஏதுன்னு கேட்காம அனுப்ப முடியுமா,இதே அந்நியத்தில் செஞ்சிருந்தா வகுந்திருக்க மாட்டோம்,நல்லநாள் பார்த்து தெளிவா பேசி அனுப்பலாம்னு தாத்தா சரியா சொன்னார்👏👏👏👏.

வாசு தான் வேண்டாம் என்றது,அடுத்தவன் எடுத்தவன் எடுத்துக் கொள்வானோ என்ற கோபமும், பொறாமையும் கொண்டதோடு தாயின் வார்த்தைகளும் சேர்ந்து கொள்ள,வாசு,பூங்குயிலை பார்க்கும்
பார்வையே சரியில்லை😱😱😱😱.

நல்லவேளை இப்போது அவனோடு அனுப்பவில்லை,இல்லையென்றால் பழைய கதை தான் நடந்திருக்கும்😠😠😠😠.அழகி, செல்வத்தை அப்பானு அழைச்சுட்டு போறதே, வாசுவுக்கு சரியான செருப்படி தான்😀😀😀😀.
 
Last edited:

Banumathi jayaraman

Well-known member
Member
மாசிக் களரி வர்றதுக்குள்ளேயும் எனக்கு பொறுக்கலை
மொதல்ல இந்த சோலையம்மாளை வெட்டணும்
அடேய் தங்கபாண்டி
எங்கேடா இருக்கே வெரசா வாடா
வந்து வாசுதேவன் நாயை அப்புறம் பார்த்துக்கலாம்
அதுக்கு முன்னே உன் அயித்தையை ஒரே போடா போட்டுடுடா ராசா தங்கபாண்டி
எடுபட்ட நாயி சோலை கிழட்டு சிறுக்கி திருப்பியும் பூவு வாழ்க்கையை அழிக்கிறதுலேயே குறியா இருக்குது
எப்படியெப்படி?
அங்கே சரயூ இங்கே பூங்குயில் ன்னு இவ மவன் இரட்டை குதிரை சவாரி பண்ணணுமா?
இன்னொரு குழந்தை பிறந்தால் சரியாகி விடுமா?
எடு பிஞ்ச வௌக்குமாத்தை
வாசுவே பத்து லட்சம் பணத்துடன் அவள் கொண்டு வந்த சீரையும் கொடுத்து பூங்குயிலை அத்து விட்டுறலாம்ன்னு சொல்லுறான்
ஆனால் ஆத்தாக்காரி கேட்காமல் பூவு வாழ்க்கையை இன்னும் நாசம் பண்ண சொல்லுறாள்
இவளுக்கும் ஒரு பொண்ணு இருக்கே அவளுடைய புருஷன் இப்படி செஞ்சால் பரதேசி நாயி சோலை சும்மா இருப்பாளா?
ஆத்தாளின் அறிவுகெட்ட பேச்சைக் கேட்டு நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு வந்துட்டான் நாய்ப்பயல் வாசு
உரிமையாக் கூப்பிடாமல் கூப்பிட முடியாது கட்டின பொண்டாட்டியைத் திருட்டுத்தனமா பார்க்குது பொறம்போக்கு
இவனுக்கெல்லாம் எவன் போலீஸ் வேலை கொடுத்தான்?
செல்வ மணியை குட்டிப் பொண்ணு அப்பான்னு கூப்பிட்டால் எரியுதா?
நல்லா எரியட்டும்
இதுக்காகவே செல்வாவுக்கு பூங்குயிலை கல்யாணம் செஞ்சு வைக்கணும்
சரயூதான் சட்டபூர்வமான மனைவி ரிஜெஸ்டர் மேரேஜ் வேறு பண்ணியிருக்கான்
எங்கேயும் பூங்குயில் மனைவியாக பேசப்பட மாட்டாள்
அவளுக்கு பேரே வேறு
அருமை தங்கச்சிக்கு கண்ட பேர் வருவதை பாண்டியன் பிரதர்ஸ் விரும்புவாங்களா?
 
Last edited:

padhusbi

Well-known member
Member
வாசு வேண்டாம் குயிலுக்கு செல்வம் தான் பொருத்தம் . வாசுவின் இரட்டை வேடம் தெரிஞ்சு உதை வங்க வேண்டும். பாவம் குயில் .
 
Top