Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கவர்ந்தவள் 4.1

Advertisement

Elampoorani

New member
Member
மனம் கவர்ந்தவள் 4 பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது.சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும். பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன.இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம்.அத்தகைய பொள்ளாச்சியை சேர்ந்த தான் நன்னியூர். அழகான கிராமம்.எத்தனை வெயிலிலும் குளிர்ச்சியை கொண்டிருக்கும் இடம். தென்னந்தோப்புகளும்., பல தோட்டங்களும் நிறைந்தது. இன்றும் நிறைய மக்கள் அங்கு விவசாயத்தையும் தோப்புகளையும் நம்பியே வாழ்கின்றனர். ஊரின் நடுவில் இருந்தது அந்த பெரிய வீடு. பழைய காலத்து வீடு உள்ளே நவீன வசதிகள் அனைத்தும் இருந்தது. பார்க்க அழகாகவும் இருந்தது. அன்று காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டின் தலைவர் செல்லத்துரை ஹாலில் அமர்ந்து தன் மனைவி வடிவழகி உடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த தன் பெரிய மருமகளிடம் ஜானகிமா பெரியவன் எங்க போயிருக்கான்.இன்னும் சாப்பிட வரல போல. தென்னந்தோப்புக்கு போயிருக்காங்க மாமா இன்னைக்கு தேங்காய் லோடு போச்சு அதற்காக சீக்கிரம் போயிட்டாங்க. அப்ப கால சாப்பாடு மா. இப்போ சாய் அங்க போயிட்டு அவங்கள மாத்தி விடுவான் மாமா. சரி நீ அவனை சீக்கிரம் போ சொல்லு. உன் வீட்டுக்காரன் பசி தாங்க மாட்டான் என்றார் வடிவழகி. சரிங்க அத்தை. அந்த முதிய தம்பதியர் மிகவும் பொருத்தமான ஜோடி. செல்லதுரை தாத்தா இந்த வயதிலும் கம்பீரமாக நல்ல உடல் கட்டுடன் இருந்தார். செல்லத்துரை பரம்பரை பணக்காரர். வயதாகிவிட்டதால் வேலைகளை தன் மகனிடமும் பேரன்களிடம் கொடுத்து விட்டு வீட்டில் ஓய்வெடுக்கிறார்.ஆனாலும் என்ன வேலைகள் எவ்வாறு நடக்கின்றன ஒவ்வொரு தகவல்களும் அவருக்கு பகிரப்படும். இப்போதும் எந்த முடிவு எடுத்தாலும் அவரிடம் கலந்து கொண்டு தான் எடுப்பார்கள். வடிவழகி பாட்டி அவருக்கு ஏற்றார்போல் கனத்த சரீரம் நல்ல ஆளுமையாக கம்பீரமாக இருந்தார்.அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.அவரை பார்த்தால் ஒரு பயம் தோன்றும்.பண்ணை வேலைகள் அனைத்தையும் மேற்பார்வை பார்ப்பார். செல்லதுரை தாத்தா உட்பட அனைவரும் பாட்டியின் பேச்சை கேட்பார்கள். அவரின் முடிவு தான் இந்த வீட்டில் இறுதியானது. தன் இரு மகன்களுடன் தன் மகளையும் தன் சொந்த அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து தன்னுடனேயே வைத்து கொண்டார். இப்போதும் தன் பேத்தியை தன் பேரனுக்கு திருமணம் செய்து கொடுத்து தன்னுடனே வைத்துக் கொள்ளவேண்டும் எனும் ஆசையில் இருக்கிறார். இதில் அந்தக் குடும்பத்தில் சிலருக்கு விருப்பமில்லை என்றாலும் வடிவழகி பாட்டியின் முடிவிற்காக அமைதி காத்து இருக்கின்றனர். அப்போது அங்கு வந்தார் அவரது சின்ன மகன் சேகர்.வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு நேற்று இரவுதான் வந்தார். உணவை முடித்துவிட்டு வந்து தன் தந்தையுடன் வேலை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மனைவி மல்லிகா அவருக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார். அங்கு வந்த அவரது தங்கை சாந்தி சின்ன அண்ணி எனக்கு ஒரு காபி எடுத்து வாங்க என்றார் அதிகாரமாக. சரி என்று அவர் சமையலறை சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த வீட்டின் வேலையால் பொன்னம்மா சாந்திக்கு காபியை எடுத்து வந்தார். அதைப் பார்த்த சாந்தி உன்னை யாரு காபி எடுத்து வர சொன்ன என்றார் கோபமாக. அப்போது சேகர் சாந்தி நீ காபி கேட்ட கொண்டு வந்துட்டாங்க.யார் கொண்டு வந்தா என்ன பேசாம காபியை குடி என்றார்.அதெப்படி நா அண்ணிகிட்ட தானே கேட்டேன் அவங்கள என்றார்.அண்ணி தான் கொண்டு வந்து கொடுக்கணும் நினைக்கிறது தப்பு. நீ இந்த வீட்டு பொண்ணு உனக்கு இங்க இவ்வளவு மரியாதை உரிமை இருக்கோ அதே மாதிரி தான் அவங்கலும் இந்த வீட்டு மருமகள். அவர்களுக்கு நீ மரியாதை தரணும். எப்பவும் அவங்கள வேலை வாங்காதே. இது தான் சேகர் எத்தனை உறவுகள் இருந்தாலும் எப்போதும் தன் மனைவியை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டார். அப்போது அவரது தந்தை சாந்தி அண்ணன் சொல்றது சரிதானே மா நீ இன்னும் மாற மாட்டேங்குற என்றார். ஒரு சாதாரண காபி தானே கேட்டேன் எல்லாரும் எவ்வளவு பேசுறீங்க என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அப்போது தான் தூங்கி எழுந்து அங்குவந்த அவரது மகள் தர்ஷினி அத்தம்மா வீட்டுல ரெண்டு பேரு வேஸ்ட்டா இருக்கீங்கள எழுந்து உடனே ஒரு காபி கொடுக்கிறீர்களா என்றாள். சாந்தி நல்லவர் என்றும் சொல்ல முடியாது அதற்காக கெட்டவர் என்றும் சொல்ல முடியாது இந்த வீட்டில் தன் தாயைப் போல் மற்ற எல்லாரையும் தானும் அதிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பார் . வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டார்.அண்ணிகளிடம் எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்.
 
மனம் கவர்ந்தவள் 4

'பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப் போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது.
சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.
பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன.
இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும்.
நல்ல வெப்ப நிலை உள்ள இடம்.
அத்தகைய பொள்ளாச்சியை சேர்ந்ததுதான் நன்னியூர்.
அழகான கிராமம்.
எத்தனை வெயிலிலும் குளிர்ச்சியை கொண்டிருக்கும் இடம்.
தென்னந்தோப்புகளும், பல தோட்டங்களும் நிறைந்தது.
இன்றும் நிறைய மக்கள் அங்கு விவசாயத்தையும் தோப்புகளையும் நம்பியே வாழ்கின்றனர்.
ஊரின் நடுவில் இருந்தது அந்த பெரிய வீடு.
பழைய காலத்து வீடு
உள்ளே நவீன வசதிகள் அனைத்தும் இருந்தது.
பார்க்க அழகாகவும் இருந்தது.
அன்று காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டின் தலைவர் செல்லத்துரை ஹாலில் அமர்ந்து தன் மனைவி வடிவழகி-யுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தன் பெரிய மருமகளிடம் "ஜானகிமா பெரியவன் எங்க போயிருக்கான்?
இன்னும் சாப்பிட வரல போல"
"தென்னந்தோப்புக்கு போயிருக்காங்க மாமா"
"இன்னைக்கு தேங்காய் லோடு போச்சு
அதற்காக சீக்கிரம் போயிட்டாங்க"
"அப்ப கால சாப்பாடு மா?
"இப்போ சாய் அங்க போயிட்டு அவங்கள மாத்தி விடுவான் மாமா"
"சரி நீ அவனை சீக்கிரம் போ சொல்லு"
உன் வீட்டுக்காரன் பசி தாங்க மாட்டான்" என்றார் வடிவழகி.
"சரிங்க அத்தை"
அந்த முதிய தம்பதியர் மிகவும் பொருத்தமான ஜோடி.
செல்லதுரை தாத்தா இந்த வயதிலும் கம்பீரமாக நல்ல உடல் கட்டுடன் இருந்தார்.
செல்லத்துரை பரம்பரை பணக்காரர்.
வயதாகி விட்டதால் வேலைகளை தன் மகனிடமும் பேரன்களிடம் கொடுத்துவிட்டு வீட்டில் ஓய்வெடுக்கிறார்.
ஆனாலும் என்ன வேலைகள்? எவ்வாறு நடக்கின்றன? ஒவ்வொரு தகவல்களும் அவருக்கு பகிரப்படும்.
இப்போதும் எந்த முடிவு எடுத்தாலும் அவரிடம் கலந்து கொண்டுதான் எடுப்பார்கள்.
வடிவழகி பாட்டி அவருக்கு ஏற்றார்போல் கனத்த சரீரம்
நல்ல ஆளுமையாக கம்பீரமாக இருந்தார்.
அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.
அவரை பார்த்தால் ஒரு பயம் தோன்றும்.
பண்ணை வேலைகள் அனைத்தையும் மேற்பார்வை பார்ப்பார்.
செல்ல-த்துரை தாத்தா உட்பட அனைவரும் பாட்டியின் பேச்சை கேட்பார்கள்.
அவரின் முடிவுதான் இந்த வீட்டில் இறுதியானது.
தன் இரு மகன்களுடன் தன் மகளையும் தன் சொந்த அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து தன்னுடனேயே வைத்து கொண்டார்.
இப்போதும் தன் பேத்தியை தன் பேரனுக்கு திருமணம் செய்து கொடுத்து தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஆசையில் இருக்கிறார்.
இதில் அந்தக் குடும்பத்தில் சிலருக்கு விருப்பமில்லை என்றாலும் வடிவழகி பாட்டியின் முடிவிற்காக அமைதி காத்து இருக்கின்றனர்.
அப்போது அங்கு வந்தார் அவரது சின்ன மகன் சேகர்.
வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டு நேற்று இரவுதான் வந்தார்.
உணவை முடித்துவிட்டு வந்து தன் தந்தையுடன் வேலை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் மனைவி மல்லிகா அவருக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார்.
அங்கு வந்த அவரது தங்கை சாந்தி "சின்ன அண்ணி எனக்கு ஒரு காபி எடுத்து வாங்க" என்றார் அதிகாரமாக.
"சரி" என்று அவர் சமையலறை சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து அந்த வீட்டின் வேலையா-ள் பொன்னம்மா சாந்திக்கு காபியை எடுத்து வந்தார்.
அதைப் பார்த்த சாந்தி "உன்னை யாரு காபி எடுத்து வர சொன்னா"என்றார் கோபமாக.
அப்போது சேகர், "சாந்தி நீ காபி கேட்ட" "கொண்டு வந்துட்டாங்க"
"யார் கொண்டு வந்தா என்ன? பேசாம காபியை குடி" என்றார்.
"அதெப்படி நா அண்ணி-க்கிட்டதானே கேட்டேன்
அவங்கள" என்றார்.
"அண்ணிதான் கொண்டு வந்து கொடுக்கணும் நினைக்கிறது தப்பு"
"நீ இந்த வீட்டு பொண்ணு
உனக்கு இங்க இவ்வளவு மரியாதை உரிமை இருக்கோ அதே மாதிரிதான் அவங்க-ளும் இந்த வீட்டு மருமகள்"
"அவர்களுக்கு நீ மரியாதை தரணும். எப்பவும் அவங்கள வேலை வாங்காதே"
இதுதான் சேகர்
எத்தனை உறவுகள் இருந்தாலும் எப்போதும் தன் மனைவியை யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார்.
அப்போது அவரது தந்தை "சாந்தி அண்ணன் சொல்றது சரிதானே மா
நீ இன்னும் மாற மாட்டேங்குற"என்றார்.
"ஒரு சாதாரண காபிதானே கேட்டேன் எல்லாரும் எவ்வளவு பேசுறீங்க"என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அப்போதுதான் தூங்கி எழுந்து அங்கு வந்த அவரது மகள் தர்ஷினி "அத்தம்மா வீட்டுல ரெண்டு பேரு வேஸ்ட்டா இருக்கீங்கள எழுந்து உடனே ஒரு காபி கொடுக்கிறீர்களா? " என்றாள்.
சாந்தி நல்லவர் என்றும் சொல்ல முடியாது
அதற்காக கெட்டவர் என்றும் சொல்ல முடியாது
இந்த வீட்டில் தன் தாயைப் போல் மற்ற எல்லாரையும் தானும் அதிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்.
வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டார்.
அண்ணிகளிடம் எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஸ்டோரி அப்டேட் இப்படி வரணும்ப்பா
 
Last edited:
thank you mam word problem. im typing in mobile. thats y like this. in my laptop i dont know to install tami font. im trying so surely i change it soon from next epi
 
thank you mam word problem. im typing in mobile. thats y like this. in my laptop i dont know to install tami font. im trying so surely i change it soon from next epi
நானும் மொபைலில்தான்ப்பா கரெக்ட் செய்திருக்கிறேன்
 

Advertisement

Top