Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனவீணையின் புதுராகமே விமர்சனம்.

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 003ன் மனவீணையின் புதுராகமே எனது பார்வையில். அதிர்துடியன் பல தொழில்கள் செய்து வருபவன். அவனது திருமணத்திற்காக திருவண்ணாமலையில் சில வேண்டுதல்களை நிறைவேற்றும் பொழுது யாழி மற்றும் அவள் சகோதரன் விஷ்ணுவையும் சில பிரச்சினைகளில் சந்திக்கிறான். இன்றைய இளையத் தலைமுறையினர் ஈடுபாடு கொண்டிருக்கும் சமூக வலைதளங்களின் பயன்பாடுகளை தங்கள் விருப்பப்படி தேவையில்லாத முறையில் பயன்படுத்துவதை விட்டு பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் இளைய சமுதாயம் முன்னேற்றம் அடையும் என்ற கருத்தினை வலியுறுத்தும் கதை. தன்னுடைய அன்றாட நடவடிக்கைகளை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி அதுதான் இன்றைய நாகரீகம் என்று இருக்கும் யாழியை திருமணம் செய்து கொள்கிறான் அதிர்துடியன். திருமணத்திற்கு பிறகு அவளின் பார்வையை மாற்றி அவளது அறிவினை ஆக்கப்பூர்வமான வழியை தேர்ந்தெடுத்து முன்னேற்றம் அடைய வைப்பதுடன் அவளது சகோதரன் விஷ்ணுவிற்கும் உழைப்பின் அருமையை உணர வைக்கிறான். யாழி மற்றும் விஷ்ணு உணர்ந்து நடந்துக் கொள்ளும் குணம் காரணமாக திருத்த முடிந்தது. கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் இளைய சமுதாயம் இப்படி திருந்தினால் நன்று. சமூகக் கருத்து சொல்லும் கதையாக இருந்தாலும் நகைச்சுவை மற்றும் காதல் கலந்து விறுவிறுப்பாக தந்திருக்கிறார். வாழ்த்துகள்.
 
Top