Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மன(ண)ம் புரிந்தோம் 1

Advertisement

Admin

Admin
Member
ஓம் கணேஷாய நம:

அத்யாயம் 1

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்............
கடிகாரத்தின் ஓசையில் எழுந்தாள் யாமினி.


" மணி ஏழாஆஆஆஆ... கடவுளே... நித்யாஆஆஆஆஆ .. எழுந்திரு... கும்பகர்ணன போட்டியில உன்னால தான் தோக்கடிக்க முடியும்.."

"இல்ல.. இல்ல... என்னால மட்டும் தான் ஜயிக்க முடியும். " கையை நொடித்துக்கொண்டே எழுந்தாள் நித்யா.

இணை பிரியா தோழிகள் இரண்டு பேரும். கேரளாவில் எறணாகுளம் என்ற ஊரில் அரசு சட்ட கல்லூரியில் ஐந்து வருடம் ஒன்றாக படித்தவர்கள். அதற்கு பிறகு மேல்படிப்பு ஹைதராபாத்தில் நல்ஸார் என்ற பேர் கேட்ட கல்லூரியில். யாமினி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள். நித்யா இதற்கு நேர்மாறான குணம் என்று நினைத்து விடாதீர்கள். ஆனால் வரும் வம்பை சும்மா விட மாட்டாள்.

யாமினியும் சரி நித்யாவும் சரி சராசரி உயரம், பூசினார் போல உடல்வாகு என்று இருப்பார்கள். இவர்களுடைய கண்கள் தான் இவர்களின் பலம். ஒருவரை எடை போட தவறவே தவறாது. இது தான் நம் கதையின் நாயகிகள்.

குளித்து வந்த நித்யாவிற்கு தோசை பரிமாறிக்கொண்டே யாமினி கூறினாள், " நேற்று அம்மா பேசினார்கள். "
"எந்த அம்மா..?" என்று நித்யா கேட்க

"ஹாங்.. மனோரமா அம்மா.." என்று ப்ளேடு போட்டாள் யாமினி.

"தோடா.. கடி ஜோக்கா..."

"இல்லையா பின்ன. கடுப்பேத்த கூடாது. உன் அம்மா தான் கூப்பிட்டாங்க."

"என்னவாக இருக்கும் என்று நான் கேட்பேன் என்று நினைத்தாயா பேதைப்பெண்ணே. ஐ க்னோ(know) வை ஷீ ஹாட் கால்ட். ஏதாவது டாக்டரோ, அட்வொகேடோ, ஐ பி எஸ்ஸோ சிக்கியிருப்பான் அந்த யூஸ்லெஸ் தரகர் கிட்ட. அந்தாள் வந்து அம்மா கிட்ட சொல்லியிருப்பாரு. அதை இந்த கருணையின் வடிவமைப்பான என் தாயார் உன்கிட்ட சொல்லியிருப்பாங்க. அதானே.."

யாமினி வாய் பிளந்து நின்றாள்.

"எப்படி டி, இவ்வளவு கரக்டாக சொன்னாய்?"

"இதென்ன சிதம்பர ரஹஸியமா.. நீ வேற. எவரி அதர் டே ஷீ கால்ஸ் யூ டு டாக் எபௌட் திஸ்."

"சரி தான். லேட்டாகறது நிது. மேக் இட் ஃபாஸ்ட். அதுங்க ரண்டும் வந்து கொண்டே இருக்கும்."

"வந்து கொண்டே என்ன வந்து விட்டோம் நண்பிகளே."

இது யாமி-நிதுவின் கல்லூரி நண்பர்கள்; நிகில்-நகுல்.

இவர்கள் நண்பர்கள் மட்டும் அல்ல ஒரு லா ஃபர்ம் (வை 3 என்:- Y3N) க்கு பங்காளிகள் கூட.


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு .இது தான் இவர்களுடைய வாழ்க்கை தத்துவம். நல்ல உயரம், வசீகரிக்கும் தோற்றம், ஆளை துளைத்தெடுக்கும் கண்கள் என்று இருக்கும் நம் நாயகர்கள்.

"சரியா போச்சு. நீ சாப்பிட்டு முடிச்சு, நாம ஆபிஸ் போயி.. " என்று பெருமூச்செறிந்தாள் யாமி.

எல்லோரும் அவள் முகம் சுழித்து பெருமூச்செறிந்த விதம் பார்த்து சிரிப்பு வந்தது.
 
உங்களுடைய "மன(ண)ம்
புரிந்தோம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஸ்வேதா டியர்
 
Top