Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்கினேன் உன்னில் நானே 24 1

Admin

Admin
Member


24என் இதயத்துடிப்பின்

ஒவ்வொரு ஓசையும்

உன் பெயரை

மட்டுமே சொல்கிறதோ!

சந்தேகத்தில்

மீண்டும் மீண்டும் கேட்கிறேன்!

வெற்றியின் கைபோன இடமெல்லாம் கண்டபடி அடிகள் வளவனுக்கு. வெற்றி சற்று விவகாரமானவன் என்பது அவன் மனைவிக்குத் தெரியும். அதை இதுவரை நேரில் பார்த்ததில்லை. ‘என்னைக்காவது சிக்காமலா போவான். அப்பயிருக்கு அந்த வளவனுக்கு’ என்றோ வெற்றி கூறியது நினைவு வர‘மத்த பொண்ணுங்க விஷயத்துல சிக்கினாலே விடமாட்டான் என் மச்சான். அவன் மனைவியையேத் தொட நினைத்தால் சும்மா விடுவானா?’ என்று தோன்ற... “சூப்பர் மச்சான்!” விசிலடிக்க முயற்சித்து முடியாமல் திரும்பத் திரும்ப முயற்சித்தாள்.

வர்ஷினி அவளை கேவலமான லுக் விட.. அசட்டுச் சிரிப்பொன்றை அண்ணியவளுக்குக் கொடுத்து“கல்யாண மாப்பிள்ளைக்குச் சென்னையில் என்ன வேலை அண்ணி?” தன் முக்கியமான சந்தேகத்தைக் கேட்க...

“ம்.. மறந்து போன எதையாவது தேடி வந்திருப்பாராயிருக்கும். உனக்கு என்ன தோணுது?” என்றாள் பதிலுக்கு.

“வெற்றி மச்சானை பழைய வெற்றியா பார்த்த மாதிரியிருக்கு.”

“மாதிரின்றதை மனசுல வச்சிக்க. ஏற்கனவே நிறைய பல்ப் கொடுத்திருக்கார். எதிர்பார்ப்பைக் குறைச்சிக்க சாஹி.” கேலியில் ஆரம்பித்து சீரியஸாக முடித்தாள்.

“எனக்கென்னவோ அன்னைக்கு வந்த சந்தேகம் சரிதான்னு தோணுது அண்ணி. நினைவு வந்தும் என்கிட்ட நடிக்கிறாங்களோ?”

“நடிச்சி என்னாகப்போகுது. அதுவும் இன்னொரு பொண்ணோட கல்யாணம்ன்ற அளவுக்கு நடிப்பாங்களா? இதுல அந்தப் பொண்ணோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு. இதொண்ணும் விளையாட்டில்லை புரியுதா?”

“அப்ப என் சந்தேகம் தப்பா? அப்ப அன்னைக்கு என்கிட்ட ஏன்...” சட்டென்று வாயை மூடிக்கொள்ள... வர்ஷினி சுவாரசியமாய் நாத்தனாரின் பக்கம் திரும்ப... பின்னணி இசையாக வெற்றியின் அடியும்.. வளவனின் அலறலும் சங்கீதமாய் ஒலித்ததோ!

“சொல்லு சாஹி... உன்கிட்ட?”

“ஒ..ஒண்ணுமில்லையே! சு..சும்மா...” கோவை சரளா அவள் வாயில் நர்த்தனமாட...

“ஹேய் என்கிட்ட எதையோ மறைக்கிறல்ல. சொல்லு சாஹிமா. ம்ம்... சீக்கிரம்” என தன் ஆவலைக்கூட்டி அவளை அவசரப்படுத்த...

“அச்சோ அண்ணி! அதீதக் கற்பனை தேவையில்லை. நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்லை” என்று வெட்கிக் குனிய...

“ஹேய் சஹிப்புள்ள! நான் என்ன நினைச்சேன்னு நீ நினைச்ச.. ம்..? நீ படுற வெட்கத்தைப் பார்த்தா நான் நினைக்காததெல்லாம் நடந்திருக்கும் போலிருக்கே.”

“அண்ணி சஹிப்புள்ள சொல்லாதீங்க” என்று சிணுங்கி,“சும்மா கிஸ் பண்ண வந்தாங்க. நான்தான் தடுத்துட்டேன்.”

“ஏன் தடுத்த? அப்படி இப்படியாகி ஒரு பெரிய ரொமான்ஸே நடந்திருக்கும்ல” என்று வாலி பட வசனம் பேச...

அண்ணியவளை முறைத்து “ஃபெலிக்ஸா வந்தாங்க அண்ணி. ஃபெலிக்ஸ்... ப்ச்.. கொஞ்சமும் பிடிக்கலை அண்ணி. அவங்க குணத்துக்கு நான் முன்னப்பின்ன தெரியாதவள்னா கட்டிப்பிடிக்கிறது.. முத்தம் கொடுக்கிறது எல்லாம் நாட் பாசிபிள் அண்ணி. அதனாலதான் அவங்களுக்கு பழைய ஞாபகம் வந்திருக்குமா கேட்டேன்.”

“நீ சொல்ற எல்லாமே சரிதான் சாஹி. ஆனா இந்தக் கல்யாணம்..?” கேள்வியாய் நிறுத்த...

“ஈவ்னிங் மேரேஜ் ஆகிருச்சான்னு நேரா பார்த்து இன்பார்ம் பண்ணச் சொல்லியிருக்கேன் அண்ணி.”

“உண்மையாயிருந்தா..?”

“கடவுள் விட்ட வழிதான் கனடா இருக்கே. நாடு கடந்து போறதுக்கு முன்னாடி என்னோட நாயகன் காட்சி தர்றாங்கல்ல அதுபோதும். நான் யாரை என் கையால கொல்லணும்னு நினைச்சேனோ.. அவனை மச்சான் செய்யும்போது இன்னுமே திருப்திதான். என்ன ஒண்ணு அந்த வளவன் முன்ன நின்னு.. எங்களை எந்த ஜென்மத்திலும் பிரிக்க முடியாதுடான்னு சொல்லி நாலு அடிபோடணும்னு நினைச்சி முடியல.”

“சாஹித்யா” என்ற வெற்றியின் குரலில் சடனாகத் திரும்பியவளுக்கு அவனின் சாஹித்யா முழு ஏமாற்றத்தைத் தர முகம் இறுக அமர்ந்திருந்தாள்.

“இவனை உயிரோட எரிக்கணுமா? இல்ல கொன்னு எரிக்கணுமா?”

“வெற்றி.. வெற்றி என்னை விட்டுரு. நான் உன் வழிக்கே வரமாட்டேன். எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிடுறேன்” என்று வளவன் கதற...

“அப்ப கண்காணாத இடத்துக்குப் போறேன்ற?”

“ஆ... ஆமா வெற்றி. நான் போயிடுறேன் என்னை அனுப்பிரு” என்றான் வேகமாக.

“மாப்ள அவனே போறேன்னு சொன்னபிறகு நீங்க ஏன் நின்னுட்டிருக்கீங்க?”

“உங்க தங்கச்சி எதுவும் சொல்லலையே?” என்று அவளைக்காண...

அவனின் சாஹித்யாவிலேயே மனம் இறுக உழன்று கொண்டிருந்தவள் வெற்றிக்கு பதில் சொல்ல வேண்டுமென்பதை உணர்ந்து“பத்தினி சாபம் விட்டா பலிக்குமாமே! நீ சாபம் விட்டு இந்த காட்டையே அழிச்சிரு பார்க்கலாம் சொன்னான்” என்றாள்.

“ஓ... அப்ப கண்டிப்பா எரிச்சிரலாம்” என்று கைகால் இரண்டையும் அசையவிடாது கட்டி வாய்க்குள் துணி வைத்து அடைத்துப் படுக்கவைத்து அவன்மேல் கட்டைகளை அடுக்கி.. தீயின் ஜ்வாலையும் பிணமாய் எரியும் பொழுது வரும் நாற்றமும் அந்த குடோனைத் தாண்டி வெளியே செல்லாதிருக்க.. உள்ளுக்குள்ளேயே அவனை மூடினாற்போல் சிமெண்ட் சீட்டுகள் வைத்து.. சின்ன இடைவெளியில் பெட்ரோலை ஊற்றிய வெற்றிச் செல்வன் தீயையும் வைத்து“உன் ஆன்மா சாந்தியடையட்டும் வளவன்” என்றான்.

சாஹித்யாவிற்குள்ளும் நீண்டநாள் தன்னுள்ளிருந்த பழி வெறி மறைந்து நிம்மதியான உணர்வு.

வளவன் உடல் எரிந்து முடித்து சாம்பலாகும் வரை அங்கேயே நின்றிருந்து.. சாம்பல் மட்டுமே மிஞ்சுகையில் அதை அள்ளி செடியிலிட்டு அதுவும் கரைய தண்ணீர் விட்டு குடோனையும் கழுவி முடிக்க மதியம் இரண்டானது. கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பதற்கேற்ப.. அனைவரும் குளித்து உடுத்தியிருந்த துணிகளையும் எரித்து சாம்பலாக்கி ஹோட்டல் சென்று சாப்பிட்டு முடிய மூன்றானது.

இவர்கள் செயல்களை இன்னும் ஒருவன் பார்த்திருப்பதை ஏனோ அறியாமல் போனார்கள்.

அடுத்து ஃபெலிக்ஸ் பாண்டிச்சேரி செல்ல.. அவனைத் தொடர்ந்து சுதீப்பும் செல்ல... சத்யா கௌதம் உதவியுடன் வீடு வந்தான்.

தலை முழுக்குதான்.. சாஹித்யாவிற்கும் வர்ஷினிக்குமே! கணவனின் வருகைக்காக வர்ஷினி ஆவலுடன் காத்திருக்க.. தாயுடன் பிள்ளைகளை அவர்கள் வீட்டிற்கு அனுப்பியிருந்தாள். ராதாவிற்கு இங்கு நடக்கும் எதுவும் தெரியாது. அவரே ஓரளவு யூகித்திருந்தாலும் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. கிருஷ்ணமூர்த்தியிடம் கலந்துதான் சத்யா எதுவும் செய்வான் என்பதாலும்.. தங்கையின் வாழ்க்கையில் விளையாடியவனை தானே பழிவாங்க வேண்டுமென்றதாலும் அவனை அங்கே அனுப்பி தான் கம்பெனியைக் கவனித்துக் கொண்டார்.

சாஹித்யா ‘வெற்றி வருவானா.. மாட்டானா’ என்று உள்ளுக்குள் எழுந்த படபடப்புடன் காத்திருக்க அண்ணன் மட்டும் தனியே வருவது கண்டதும் தனக்குள் எழுந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள்.

வர்ஷினி ஓடிச்சென்று கணவனை அணைக்கத் தோன்றிய மனதை இடம் கருதி அடக்கி கைகளைப் பிடித்துப் பேச முடியாது நிற்க...

“நான் நாளைக்கு வர்றேன் சார்” என்று கௌதம் கிளம்பினான்.

தன் முன் மண்டியிட்டு அமர்ந்த மனைவியின் நிலை உணர்ந்தவனோ புன்னகைத்தபடி“என்னடா?” என்றான் தலைவருடி.

“நீ..நீங்க எழுந்து நின்னீங்க. நான் பார்த்தேன்” என்று தேம்பினாள்.

“ஏய் வர்ஷ்மா! உங்களுக்காக சீக்கிரம் சரியாகணும்னுதான் டெய்லி பிஸியோதெரபி பண்றேன். அதில் உள்ள சின்ன முன்னேற்றம்தான். அந்த டைம்ல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதால எழுந்துட்டேன். இப்ப ரொம்ப கால் வலிக்குது” என்றான் நிஜ வலியுடன்.

“இருங்க தைலம் தேய்ச்சி விடுறேன்” என்ற உருகல் மனைவியவளிடம்.

“சாய்மா ஏன் டல்லாயிருக்கா?”

“டல்லா இல்லன்னாதான் ஆச்சர்யப்படணும். அவள் மனசுல வெற்றி அண்ணா பற்றிய நிறைய கேள்விகள் இருக்கு. அந்த கேள்விக்கு விடை கிடைச்சா நிம்மதியா கனடா கிளம்புவா. ஈவ்னிங் அண்ணா மேரேஜ் வரைக்கும் அவரோட வருகைக்காகக் காத்திருக்கேன்னு சொல்லிட்டிருக்கா. இப்ப அண்ணா பாண்டிச்சேரி போயிட்டிருக்கிறதா நியூஸ் வர.. வெளியில நார்மலா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள நொறுங்கிட்டிருக்கா. நானுமே அண்ணா இங்க வருவாங்கன்னுதான் எதிர்பார்த்தேன். ப்ளீஸ் எதாவது பண்ணுங்களேன். என்னால அவளை இப்படிப் பார்க்க முடியலைங்க. சீக்கிரம் அண்ணாவை இங்க வரவைக்கப் பாருங்க ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.

“நான் பார்த்துக்கிறேன்மா. அவளை அப்படியே விட்டுறமாட்டேன். நீ அத்தைக்கு போன் செய்து ரிதியையும் தருண் வருணையும் கூட்டிட்டு வரச்சொல்லு. அப்படியே மாமாவும் வந்தா பெட்டராயிருக்கும். ஆமா ரிதி செம ஷார்ப்பாச்சே எப்படி கனடா போக ஒத்துக்கிட்டா?”

“அவள் எங்க ஒத்துக்கிட்டா. பாண்டிச்சேரியிலிருந்து வந்ததிலிருந்து அவள் அம்மாவைப் போட்டு பிச்சிப் பிடுங்கிட்டிருக்கா. ஏன் அப்பா நம்மகூட வரலை? ஏன் நாம இங்கயிருக்கோம்? ஏன் நாம வெளிநாடு போறோம்? அப்பா நம்மகூட வரலையா? எனக்கு அப்பாவைப் பார்க்கணும் போலிருக்குன்னு. அதிலும் பத்திரிக்கை வச்சிட்டுப் போன அன்னைக்கு ஏன்மா அப்பா போயிட்டாங்க? வாங்க கூட்டிட்டு வரலாம்னு... குழந்தைங்க அவ. அவளை எப்படி மறக்க முடிந்தது இந்த அண்ணாவால?”

“சாய்மா என்ன சொன்னா?” என்றான் யோசனையுடன்.

“என்ன சொல்வா... இத்தனை நாளா அப்பாவும் நீயும் தனியா இருந்த மாதிரி.. கொஞ்ச நாள் அம்மாவும் நீயும் தனியா இருக்கலாம் ரிதிமா. அங்கயிருந்து வந்ததும் அப்பாவைப் பார்க்கப் போகலாம் சொல்லி வச்சிருக்கா.”

“நான் சாய்கிட்ட பேசிட்டிருக்கேன்” என்றான் தங்கையின் மேல் பதிந்திருந்த பார்வையை அகற்றாதபடி.

“சரி பேசிட்டிருங்க நான் வர்றேன்” என்று கணவனை வீல் சேரிலிருந்து இறக்கி நாத்தனாரின் அருகில் உட்காரவைத்துச் செல்ல... தங்கையின் கவனம் எதிலும் இல்லாது வெறித்திருந்த பார்வை அவனுள் சிறு வலியைக் கொடுக்க“என்ன தெரியணும் சாய்மா?” என்றதில் மெல்ல தங்கையவள் திரும்ப...

“வெற்றி எப்படி அங்க வந்தார்னு தெரியணும். அவ்வளவுதான? நான் சொன்ன திருப்பம் அவர்தான்டா. கல்யாண விஷயமா ஃபாதரைப் பார்க்க சென்னை வந்ததா சொல்லி என்னை மீட் பண்ணக் கேட்டார். முக்கியமான வேலையிருக்கு டைம் இல்லன்னு சொல்லியும் கேட்கல. என்ன பண்றதுன்னு முழிச்சப்பதான் கௌதம் போனைப் பிடுங்கி இடத்தை சொல்லிட்டான்.”

“அடுத்த கால்மணி நேரத்திற்கெல்லாம் அங்க ஆஜராகிட்டார். அப்பதான் சுதீப் வளவனைக் கொண்டு வந்தான். அதைப் பார்த்து கேள்வியா கேட்க நடந்ததைச் சொல்ல வேண்டியதாகிருச்சி. அதைக் கேட்டதும் செம கோபம். ஏற்கனவே நீயும் சொல்லியிருந்தியாமே! இப்பவும் அவருக்கு உன்மேல ஒரு மரியாதை. ஒரு க்ரஷ்னு கூட சொல்லலாம். நான் அமைதியா கொஞ்சம் கொஞ்சமா அவனை சாகடிக்க நினைச்சா வெற்றி என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்குன்ற அர்த்தத்துல பேசி எல்லாத்தையும் முடிச்சிட்டுஈவ்னிங் வந்திருங்கன்னு கிளம்பிட்டார்.” தங்கையின் அமைதியும் அவ்வெறித்த பார்வையும் மாறாதிருக்க“என்னமா?” என்றான்.

“டைம் என்னண்ணா?”

என்ன திடீரென்று என நினைத்தாலும்“நாலாகப்போகுது” என்றான்.

“ம்... ஐந்தரையிலிருந்து ஏழு வரை எங்க வீட்லயிருக்கேன்ணா.” திரும்பவும் என்ன நினைத்தாளோ“ஆறு மணிக்கு மேல அந்த வீட்லயும்.. வெற்றி மச்சான் மேலயும் எனக்கு உரிமை இல்லல்லண்ணா. ப்ச்.. பரவாயில்ல ஒன் ஹவர்தான ஃபெலிக்ஸ் அட்ஜெஸ்ட் பண்ணிக்கட்டும்.”

“அங்கயிருந்து வீட்டுக்கு வந்து ஏழரைக்கெல்லாம் கிளம்பினா எட்டரைக்கு ஏர்போர்ட் போயிரலாம். ம்... மே மாதம் கடைசியாகிருச்சில்ல? ஏற்கனவே ட்ராபிக் ஓவராயிருக்கும். இப்ப சொல்லவே வேண்டாம். குறைஞ்சது இரண்டு மணி நேரமாவது ஆகிரும். ப்ளைட் டைமிங் ஒன்பதே முக்கால்னா.. ம்.. ஒண்ணு பண்ணுணா... இப்பவே என்னோட பேக்கிங் எல்லாத்தையும் கார்ல எடுத்து வச்சிடுறேன். நீங்க ஒரு ஏழு மணிக்கெல்லாம் அங்க வந்திருங்க. அங்கயிருந்துனா டூ ஹவர்ஸ்ல ஏர்போர்ட் போயிடலாம். முக்கால் மணிநேரம் மீதமிருக்கும். அதுபோதும் ஏர்போர்ட் பார்மாலிட்டீஸ் முடிக்க” என்றாள் தெளிவாக.
 
Top