Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 21 2

Advertisement

Admin

Admin
Member
“கொஞ்சம் சண்டையாகிடுச்சு” என்று ராஜியை நோக்கி சொன்னவர்,

“அம்மு, இவ்வளவு கோபம் ஆகாது” என்று மகளிடம் திரும்ப,

கை உயர்த்தி பேச வேண்டாம் என்பது போல தந்தையிடம் சைகையில் சொன்னவள்,

அவரிடம் “நான் பண்ணினது தப்பா இருந்துட்டு போகட்டும் பா, எனக்கு அதுல எந்த வருத்தமும் இல்லை. நான் இப்படி தான். ப்ளீஸ் எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க, என்ன விளைவுகளோ அதை நான் பார்த்துக்கறேன். இனி இந்த விஷயமா நீங்களோ அம்மாவோ மனோவோ என்கிட்டே பேசக் கூடாது” என்று கராறாய் சொன்னாள்.

சொல்லும் போது கண்களில் இருந்து நீர் இறங்கிக் கொண்டே இருக்க,

“சரி நான் பேசலை, நீ அழாத” என்று அவர் சொல்ல

“அதை கூட நீங்க சொல்லக் கூடாது” என்று சொல்லி அங்கிருந்த ஒரு அறைக்கு சென்று கட்டிலில் படுத்துக் கொண்டு அழ ஆரம்பிக்க,

ராஜலக்ஷ்மிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்ன நடந்தது என்று கேட்க அன்பழகன் நடந்ததை சொன்னார்.

ரதியை அன்பழகனிடம் கொடுக்க முயல, அவர் கையில் இருந்து இறங்கியவள், அம்மாவை நோக்கி வேகனடையிட்டு சென்றவள், அம்மாவின் மேல் ஏறி அணைத்து படுத்துக் கொண்டாள்.

“அம்மு அழாத, ரதி பயப்படுவா” என்று அன்பழகன் சொன்ன போதும் அங்கை முகத்தை நிமிர்த்தவில்லை.

மகள் அழுவதை பார்த்த ராஜிக்கும் கண்கள் கலங்க “ஏன் இப்படி அழறா?” என்றார்.

அதற்குள் இவர்களை திருச்சி ஏர்போர்ட் அழைத்து செல்ல மனோ அனுப்பிய கார் வந்து விட்டது.

“உங்கம்மாவை அழ வெச்சிட்டு வந்து அழறா?” என்று அன்பழகன் சொல்ல,

“என்ன எங்கம்மா அழுதாங்களா?” என்றார் அதிர்ச்சியாய்.

“ம்ம்” என்று தலையாட்ட,

“என்ன அங்கை? என்ன பேசின?” என்று பதறி கேட்க,

அதற்குள் அழுது முடித்திருந்தவள் “பட்டு குட்டி அம்மாவை விட்டு இறங்குடா” என்றாள்.

அது அம்மா அழவும், இறங்குவேனா என்று இறங்காமல் இருக்க, ராஜி தூக்கவும், அப்படி ஒரு கத்து. “வீல்” என்று அவள் கத்திய கத்தலில் பயந்து கீழேயே விட்டுருப்பார். வேகமாய் அன்பழகன் பிடித்துக் கொண்டார்.

அங்கை எழுந்து மகளை கையில் வாங்க, அதன் பிறகே கத்தலை நிறுத்தினாள்.

“அம்மாடி, கண்ல தண்ணியே வராம இந்த கத்து கத்துற நீ” என்று ராஜி சொல்ல,

அப்போதும் மகள் அம்மாவை விடுவேனா என்பது போல கழுத்தை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

கார் காத்திருக்கவும் , மூவரும் கிளம்ப , “பா, என் மொபைல் அங்க இருக்கு வேணும்” என்றாள் அங்கை.

அதனால் அவர்களின் வீட்டிற்கே காரை விட, அங்கே சென்றதும் அன்பழகன் இறங்கப் போக,

“நான் போறேன்” என்று ராஜி இறங்கி உள்ளே செல்ல,

அவர் உள்ளே செல்லவும் எதுவும் பிரச்சனை செய்ய வந்திருப்பாரோ என்று மொத்த வீடும் பார்க்க,

“வாங்க” என்று சொல்பவர் கூட யாருமில்லை,

“அங்கை மொபைல் இங்க இருக்கு, எடுத்துட்டு போக வந்தேன்” என்றவர் “அம்மா எங்கே?” என்றார் தில்லையை பார்த்து.

அவர் ரூமை கை காட்ட, ரூமின் உள் செல்ல, நாச்சி அங்கே படுத்திருந்தார்.

“மா” என்ற ராஜலக்ஷ்மியின் குரல் கேட்டதும் அவர் அரக்க பறக்க எழ,

“மா, ஒன்னுமில்லை” என்று அருகில் வந்தவர்,

“நாங்க ஊருக்கு போறோம், அங்கையும் கூட வர்றா, கூட்டிட்டு போறோம்”

நாச்சி எதுவும் பேசவில்லை.

“எதுவும் பேசிட்டாளாம்மா, வருத்தப்படறீங்களா? அவளுக்கு உங்களை விட வாய் அதிகம், ரெண்டு வருஷம் அவளோட இருந்திருக்கீங்க தானே, உங்களுக்கு தெரியாதா?”

“வருத்தமெல்லாம் இல்லை, மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்று சொல்லியே விட்டார்.

“எங்களோட ஊருக்கு வர்றீங்களா?”

“நானா?” என்றார்.

“வேற யாரு நீங்கதான் வாங்க, கோவில் பூஜை எல்லாம் இங்க இருக்குறவங்க பார்த்துக்குவாங்க, நீங்க வர்றீங்க”

“அது மண்டல பூஜை” என்று அவர் ஆரம்பிக்க,

“அதெல்லாம் நல்லதாவே நடக்கும், ஒன்னும் பிரச்சனை ஆகாது. நீங்க வாங்க” என்றவர்,

வேகமாய் அவரின் உடைகள் சிலதை பேகில் போட்டு எடுத்துகிட்டு “வாங்க” என்று வெளியே வர

தில்லை அங்கையின் மொபைலை கொடுக்க, வாங்கியவர் “சொல்லிட்டு வாங்கம்மா” என்று நாச்சியை பார்த்து சொல்லியபடி நடக்க,

அங்கிருந்த சுவாமிநாதன் “என்னம்மா?” என்றார்.

“என்னை ஊருக்கு கூப்பிட்டாடா” என்று மகனிடம் சொல்லி நின்று, “அண்ணா கிட்ட சொல்லிட்டு போ” என நாச்சி சொல்ல,

“நான் உள்ள வரும் போது வாங்கன்னு கூட யாரும் சொல்லலை, அப்புறம் நான் எப்படி போயிட்டு வர்றேன்னு சொல்லுவேன்” என்ற ராஜலக்ஷ்மியின் குரலில் ஒரு பேதம்.

இதுவரையிலும் எந்த வித்தியாசத்தையும் காணபித்ததில்லை, முதல் முறை அதனை குரலில் கொண்டு வந்தார்.

நாச்சி “என்ன இது” என்பது போல மகன்களையும் மருமகள்களையும் பார்க்க,

“எதுக்கு அவங்களை பார்க்கறீங்க நீங்க , என் பொண்ணு தப்பே பண்ணியிருந்தாலும், இப்படி தான் வேகாத வெயில்ல ஒத்தையா அனுப்புவாங்களா? அவ வெளில வந்தா நிறுத்த மாட்டீங்களா? இன்னும் ரெண்டு மருமக இருக்காங்களே உங்களுக்கு, அவங்களை இப்படி பண்ணிடுவீங்களா? என் பொண்ணுன்னு அவ்வளவு இளப்பமா போச்சுல்ல”

“நான் சொன்னேன் அவ கிட்ட, அவ கேட்கலை, உன்னால அங்க இருக்க முடியாது, உன்னை சரியாய் நடத்த மாட்டாங்கன்னு, அவங்கப்பா பேச்சை கேட்டு கிட்டு வந்தா, அனுபவிக்கட்டும்” என்றவர் நடந்து விட,

“என்ன நாங்க நல்லா நடத்தலையா அவ பொண்ணை?” என்று சுவாமிநாதன் பொங்க,

“எனக்கு அது தெரியாது? ஆனா நீ என் பொண்ணை சரியா நடத்தலை. நான் கொஞ்சம் நாள் இருந்துட்டு வர்றேன்” என்று அவரும் கிளம்ப

“என்னடா இது?” என்று வீடே வேடிக்கை பார்க்க செய்தது, மாலை பூஜை முடிந்து வந்து மற்ற இரு மகன்களும் ஊர் கிளம்பிவிட, இரவு வரை ராஜராஜன் வரவில்லை.

இரவு தான் வந்தான், அவன் வந்த போது எல்லோருமே உறங்க போயிருக்க, தில்லை மட்டுமே அமர்ந்திருந்தார்.

சாப்பாடு மேஜை முன் அமர்ந்தவனிடம் ப்ளேட்டை எடுத்து வைக்க, “மா, கிழவி சாப்பிட்டிடுச்சா?” என்றான்.

“யாருக்கு தெரியும்?” என்றார்.

அவன் புரியாமல் பார்க்க, “அவங்க உங்க அத்தையோட ஊருக்கு போயிட்டாங்க” என,

“என்ன?” என்று விழித்தவன், பின் “அவளும் பட்டுக் குட்டியும் ஊருக்கு போயிட்டாங்களா?” என்றான். மனதில் ஓரத்தில் ஒரு ஆசை, வீட்டில் இருப்பார்களோ என்று. வெட்கம் கெட்ட மனது தானே!

“யாருக்கு தெரியும்?” என்றார் அதற்கும்.

“என்னமா?” என்று அவரிடம் எரிந்து விழுந்தவன், “என்ன நடந்தது தெளிவா சொல்லுங்க?” என்று கேட்க,

“நீ போனதும் எல்லோரும் உள்ள போயிட்டோம், அப்புறம் என்னவோ சத்தம், நான் எட்டிப் பார்த்தேன், அப்போ உன் பாட்டி அழுதுட்டு இருந்தாங்க, அவங்கப்பா அங்கையை அடிக்க கை ஓங்கிட்டு போனார், அதுக்குள்ள ரதி அழுதாளா, அவளை தூக்கிட்டு அங்கை வீட்டை விட்டு போயிட்டா!”

“நீ என்ன பண்ணின? ஏன் நிறுத்தலை?”

“நானா? நான் இங்கே நின்னேன், உங்கப்பா என் கையை பிடிச்சு இழுத்துட்டு போயிட்டார். அப்புறம் அவங்கப்பா அவள் பின்னே போனார். பின்ன உங்க பாட்டி போய் தூங்கினாங்க, அப்புறம் உங்க அத்தை வந்தாங்க, உங்க பாட்டியை கூட்டிட்டு போயிட்டாங்க, போகும் போது அவங்க பொண்ணை நாம சரியா பார்த்துக்கலைன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க” என்று கதை படிக்க,

“பின்ன அவங்க பொண்ணு போகும் போது ஒரு பேச்சுக்கு கூட நீங்க யாரும் நிறுத்தலையா? நாளைக்கு சௌந்தரி அக்காவோ விஜயா அக்காவோ இப்படி வந்தா நீங்க சும்மா இருப்பீங்களா?”

“நீதானே நீ என் மனைவி இல்லைன்னு சொல்லிட்டு போன”

“எனக்கும் அவளுக்கும் தானே சண்டை, உங்களுக்கு என்ன வந்தது, மத்தவங்க எப்படியோ? நீங்க என்ன பண்ணுனீங்க? நீங்க அவளை ஏன் நிறுத்தலை, இல்லை அவ கூட அவ வீடு வரைக்கும் ஏன் போகலை?” என்று அவரை தாளித்து தள்ள,

ஏற்கனவே ஒரு குற்ற உணர்ச்சியில் இருந்த தில்லை, அழவே ஆரம்பித்து விட, பின்னர் அவரை வெகுவாக சமாதானம் செய்து படுக்க அனுப்பினான்.

அவன் உண்ணவுமில்லை. அவனின் அறைக்கு வந்தவனுக்கு உறக்கம் தான் வரவில்லை, உறங்கா இரவாகிப் போனது.

அந்த இரவு மட்டுமல்ல, அதன் பிறகு வந்த பல இரவுகளும்!



ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்


 
Last edited:
:love: :love: :love:

அந்த வீட்ல ராஜன் & நாச்சிய விடுத்து, மற்ற எல்லோரும் நவகிரகங்கள் மாதிரிதான் ஒவ்வொருவரும் ஒரு ஒரு திசையில் இருக்காங்க...

உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தபோது, அன்பழகனும் மனோவும் வந்து தீர்த்து வைத்தார்கள்...
ஆனா நீங்க அவங்க வீட்டுக்கு பொண்ணுக்கு என்ன நியாயம்
செ‌ய்‌தீர்க‌ள்???

தில்லை, நீங்களாவது அங்கை வீட்ட விட்டு போகும் போது தடுத்து இருக்கலாம், இப்ப feel பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்ல...

அங்கைய பிரிந்த ராஜராஜனுக்கு..

பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ...
தஞ்சை நகரம் உறங்கும் நேரம்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ...
 
Last edited:
:cry::cry::cry:

ராஜராஜனை இப்படி feel பண்ணவிட்டுட்டாளே..........
பேசுறப்போ என்ன வேணா பேசுறது......... அப்புறம் feel பண்ணி என்ன பிரயோஜனம்???

நல்ல கேள்வி தான் கேட்கிறான் ராஜராஜன்........
மருமகள்னா விட்டுடீங்க......... பொண்ணுனா விடுவீங்களா???
ராஜலக்ஷ்மி அதுக்கு மேல........

வர்ற பொண்ணை வா ன்னு சொல்லல........ போறப்போ மட்டும் எதுக்கு சொல்லணும்.......

கடைசியில் எல்லாம் வந்து விடியுறது அம்மக்கள் மேலே........
நாச்சி...... தில்லை....... ராஜலக்ஷ்மி.......
அதுவும் RR வீட்டில் எல்லோரும் எவனுக்கு வந்ததோன்னு இருக்காங்க........

நாச்சி ராஜலக்ஷ்மி அங்கை ரதி......... 4 தலை முறை ரொம்ப rare........
என்ன முடிவு பண்ண போறாங்க???
பல இரவுகள்........ அப்போ பெரிய பிரிவு தான் போல......

யாராரோ வந்தாங்க என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பண்ண நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே........
 
Last edited:
:love:
என்ன தான் வேணும் இந்த அப்பா சித்தப்பாக்களுக்கு

ராஜிக்கு பேரன் வந்தப்புறம் கூட இன்னும் இப்படியா

ராஜராஜன் பீல் பண்ணறாப்புல
நடுல புகுந்து பேசாதே பேசாதேன்னு அங்க சொன்னதை கொஞ்சம் உன் மனசுக்கும்்சொல்லியிருக்கலாம்

இப்ப போண்டாடீய தேடினா ஆச்சா
அவ போடா போண்டான்னு போயிட்டா
இப்ப என்ன பண்ண போற
 
Last edited:
நிதானமா போயிருக்கலாமே..இப்படி நீங்க பொண்டாட்டி இல்லன்னு சொன்னதும் வீட்டுல இருக்க முடியுமா...

மீதி எல்லோரும் மரியாதை எப்படி தருவாங்க

ராஜராஜன் தப்பு பண்ணிடிங்க நீங்க
அப்புறம் தில்லைய கோவிச்சு என்ன use
 
Last edited:
Top