Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 22 1

Advertisement

Admin

Admin
Member
பிரண்ட்ஸ் ஒரு பார்ட் தான் இன்னைக்கு இன்னொன்னு நாளைக்கு எழுதி முடிக்க முடியலை.


அத்தியாயம் இருபத்தி இரண்டு :

ஒன்றுமில்லை என்று நினைத்தால் ஒன்றுமில்லை, எல்லாம் இருக்கின்றது என்று நினைத்தால் எல்லாம் இருக்கின்றது.

அங்கை ராஜனின் பிணக்கும் அப்படி தான். இவனும் அழைக்கவில்லை, அவளும் பேசவில்லை. “இதை பத்தி யாரும் என்கிட்டே பேசக் கூடாது” என்று அங்கை சொல்லிய பிறகு யாராலும் பேச முடியவில்லை.

இது அங்கையின் இன்னொரு பக்கம்! சொன்னதை எந்த அளவு கேட்பாளோ? அதே அளவு கேட்கவும் மாட்டாள். பிடிவாதம் பிடித்து விட்டால் மாற்றுவது என்பது இயலவே இயலாது, அவளாய் மனது வைத்தால் மட்டுமே.

நாச்சியிடம் யாருமில்லாத போது தெளிவாய் சொல்லி விட்டாள், “பாட்டி இதுக்காக உங்க மனசை கஷ்டப் படுத்திக்காதீங்க, என்ன நடக்குமோ அது தான் நடக்கும். நீங்க எப்பவும் போல இருங்க” என்று

கிட்ட தட்ட ஒன்றரை மாதம் மகள் வீட்டினில் சீராடிவிட்டு அவர் ஊர் வந்தார். அன்பழகனும் சொல்லித் தான் அனுப்பினார், “மா, நம்ம கைல ஒன்னுமில்லை, ரெண்டு பேருமே வளர்ந்த பிள்ளைங்க. இதுவரைக்குமே ஒரு கட்டாயம் குடுத்துட்டேன் அங்கைக்கு, இனி அதை குடுக்க மாட்டேன். அவளா வருவா, நாம சொல்லச் சொல்ல அவளுக்கு செய்ய வேண்டாம்னு தான் தோணும்”

“எப்படியும் சரியாகிடும், கவலை வேண்டாம், தானா நடக்கட்டும். நானும் ராஜியும் சொல்ல மாட்டோம். நீங்களும் சொல்லாதீங்க” என்று விட்டார்.

“ம்ம்” என்ற நாச்சியின் தலையசைப்பு இருந்தது. ஆனால் முன்பு போல ஒரு கலகல பேச்சு இல்லை. அதட்டல் உருட்டலும் இல்லை.

மனோ வந்தவன் அவன் தான் நாச்சியை அழைத்து வந்து ஊரில் விட்டான். அவன் கொண்டு வந்து விடும் போது, இரவை நெருங்கி இருந்தது.

மனோ எந்த கோபமும் காண்பிக்கவில்லை, நாச்சியை விட்டவன், பத்து நிமிடம் இருந்து பொதுவாய் சுவாமிநாதனிடமும் தமிழ்செல்வனிடமும் பேசி ஒரு காஃபி அருந்தி விட்டு எழுந்தான்.

தில்லை தான் “ஊர்ல எல்லாம் எப்படி இருக்காங்க” என்றார் அவன் எழுவதை பார்க்கவும்.

“நல்லா இருக்காங்க அத்தை”

“அங்கை எப்போ வருவா?” என்று கேட்டு விட,

“தெரியலையே அத்தை, அவ அதை பத்தி ஒன்னும் பேசலை”

“நீ கேட்கலையா மனோ?” என்றார் ஆதங்கமாக. ஆம்! ஆதங்கமாகத் தான். மனோ ஒரு வார்த்தை கூட ராஜராஜன் எப்படி இருக்கிறான் என்று கேட்கவில்லை.

அவன் கேட்க மாட்டான். எப்படி கேட்பான். அவனுக்குமே மனதினில் கோபம் தான். கரிஷ்மா சின்னதாய் முகம் தூக்கினால் கூட அவளின் பின்னேயே சுற்றி சரி செய்வான்.

அங்கை கோபித்து வந்தால் என்ன இவன் வரமாட்டானாமா என்ற ஆதங்கம் அவனுக்குமே இருந்தது. அதனால் அவன் எப்படி இருக்கிறான் என்று கேட்கவேயில்லை.

தில்லைக்கு மிகவும் வருத்தமாய் போனது. அன்னையாய் அவருக்கு தானே தெரியும் ராஜராஜனின் உள்ளமும் உடலும் உருகி கொண்டிருந்ததை. இப்படி மகன் இருப்பான் என்று தெரிந்திருந்தால், தமிழ்செல்வனாவது ஒன்றாவது, கணவனிடம் அடி வாங்கியிருந்தால் கூட அங்கையின் பின்னே ஓடி இருப்பாரே.

அந்த நிமிடம் அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. அதன் பின்னும் கூட பெரிதாய் தெரியவில்லை. கணவன் மனைவி சண்டை, வீட்டினரின் செயலுக்கு ராஜராஜன் சரி செய்து விடுவான் என்று. ஆனால் அவனோ எந்த முயற்சியும் செய்யவில்லை.

அங்கை இருப்பது பக்கமாய் இருந்திருந்தால் எல்லோரையும் மீறி கூட சென்றிருக்கலாம். ஆனால் அதுவே தூரம். சில முறை அங்கைக்கு கைபேசியில் அழைத்து பார்த்தார். அவள் எடுக்க வில்லை.

அதுவும் ரதி அவர் வளர்க்கும் குழந்தை, கண்ணுக்குள்ளேயே நின்றாள். அவளின் பிரிவு அவரையும் வாட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.

தில்லை தன் பதிலுக்காய் காத்திருப்பது புரிய எல்லோர் முன்னும் தான் சொன்னான். “அப்படி எல்லாம் அவ கிட்ட பேசிட முடியாது அத்தை. உன் வேலையை பார்த்துட்டு மூடிட்டு போடான்னு சொல்லிடுவா, நான் கலக்டரா இருக்கலாம், கரிஷ்மாக்கு பெரிய பின் புலம் இருக்கலாம், அதுக்காக எல்லாம் நாங்க சொல்றதை அவ கேட்க மாட்டா, அண்ணன்னு, அண்ணின்னு நாங்க சொன்னாலும் கேட்க மாட்டா, அவ சொல்றதை தான் நாங்க பெரும்பாலும் கேட்போம்” என்றவன் நடந்து விட்டான்.

அதுவே சொல்லாமல் சொன்னது இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது என்று. அவன் காரில் ஏறும் நேரம் ராஜராஜன் பைக் வந்தது.

சரியாய் நாற்பத்தி ஐந்து நாட்கள் இருக்கும் மனோ ராஜராஜனை பார்த்து , பார்த்ததும் “என்னடா இவன்?” என்று அதிர்ந்து விட்டான். இந்த நாட்களில் ஆளே மாறியிருந்தான். ஏதோ நோயில் விழுந்தவன் போல ஒரு தோற்றம். உடல் இளைத்து, கறுத்து.

உண்மையில் ராஜராஜனுக்கு வேலைகள் மிக அதிகம். முன்பு பாதி வேலை அங்கை பார்த்துக் கொள்வாள். இப்போது முழுவதும் அவனே அல்லவா. உணவும் சரியாய் உண்பதில்லை. அது உடலை வாட்டி இருந்தது.

இவனை பார்த்ததும் ராஜராஜனின் மனதிலும் உடலிலும் அப்படி ஒரு பரபரப்பு. கண்கள் வீட்டை நோட்டம் விட,

“பாட்டியை கொண்டு வந்து விட வந்தேன்” என்று விட்டான் உடனே மனோ அவனை புரிந்தவனாக.

“ஓஹ்” என்ற ராஜராஜனின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிந்தது.

“எப்படி இருக்கீங்க?” என்றான் சம்ப்ரதாயமாக.

“நல்லா இருக்கேன்” என்றவன், “வீட்லயும் எல்லோரும் நல்லா இருக்காங்க” என்றான் கேட்காத தகவலாக.

ராஜராஜன் சிரிக்க முற்பட்டாலும் சிரிப்பு வரவில்லை.

“அங்கை எப்படி இருக்கா? ரதி எப்படி இருக்கா?”

“அதை அவ கிட்ட கேட்க வேண்டியது தானே நீங்க” என்று மனோ உரிமையாய் சொன்னவன், “ஏன் இப்படி உடம்பை கெடுத்து வெச்சிருக்கீங்க, உங்க மனைவி உங்க கிட்ட வராம யார் கிட்ட வரப் போறா” என்றான்.

அதற்கு ராஜராஜன் பதில் எதுவும் சொல்லவில்லை.

“இன்னும் மூணு நாள்ல மண்டல பூஜை முடியப் போகுது, அத்தையும் மாமாவும் தானே பரிவட்டம் கட்டினாங்க, அவங்க கண்டிப்பா வரணும். நானே இன்னைக்கு நைட் உங்களுக்கு ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன், நீங்களே வந்துட்டீங்க” என்றான்.

“ம்ம் சொல்லிடறேன்” என்ற மனோ அவனின் மொபைலில் இருந்த சில படங்களை காண்பித்தான்.

அவன் ஊருக்கு சென்ற போது எடுத்தது. அங்கையையும் ரதியையும் பார்க்கவும் மனதை ஏதோ செய்தது. அதுவும் ரதி வளர்ந்து விட்ட மாதிரி ஒரு தோற்றம்.

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ராஜராஜனின் தோளை சுற்றி கையை போட்டவன், “உடம்பை பார்த்துக்கோங்க, உங்க மேல தானே அங்கையும் ரதியும் தூங்கறாங்க, ஸ்ருஷ்டியும் கூட சேர்ந்துக்கறா, தெம்பு வேண்டாமா?”

என்னவோ கண்கள் கலங்கி விடுமோ என்று தோன்ற, பைக்கில் வருவதால் சில சமயம் கண் கண்ணாடி அணிபவன், அது பாக்கெட்டில் இருக்க அதனை எடுத்து அணிந்து கொண்டவன், “நீங்க பாருங்க, எனக்கு ஒரு சின்ன வேலை மறந்துட்டேன்” என்று சொல்லி திரும்ப வெளியிலேயே கிளம்பிவிட்டான்.

மனைவி மகளின் பிரிவு என்பதனை விட, வீட்டினரின் செய்கை தான் அவனை முற்றிலும் நிலை குலைய வைத்திருந்தது.

“என் வீட்டினர் என்று தானே எல்லாம் செய்தேன். ஆனால் யாரும் அங்கை சென்ற பிறகு அவளை அழைத்து வருவதை பற்றி பேசவேயில்லை” நாச்சி இருந்தால் பேசியிருப்பாரோ என்னவோ அவரும் இல்லை. தில்லை மட்டுமே பேசுவார். அதுவும் யாரும் இல்லாத போது அவனிடம். “ஏன் அதை அப்பாவிடம் சொல்ல மாட்டாரா?” என்று அவன் நினைப்பான்.

என்ன சொல்ல? அதை தமிழ்செல்வனிடம் தனிமையில் சொல்லி அனேக ஏச்சுக்கள் பேச்சுக்கள் வாங்குவது தில்லைக்கு மட்டும் தானே தெரியும்.

“என்னுடைய வாழ்க்கை இவர்களுக்கு முக்கியமேயில்லையா?” என்பது அவனை வெகுவாக பலமிழக்க செய்திருந்தது. எதுவாகினும் அவர்களை எங்கேயும் விட்டு கொடுக்க மாட்டானே.

அங்கையும் எல்லோர் முன்னும் என் அப்பா சொன்னதற்காக தான் இந்த திருமணம் என்று சொல்லியது இன்னுமே வலித்தது.

அவனும் அவனின் தாத்தா சொன்னதற்காக தானே திருமணம் செய்தான். அதை அவனும் சொல்லியிருக்கிறான் தான் முன்பு.

ஆனால் சேர்ந்த வாழ்ந்து ஒரு பிள்ளை பெற்ற பிறகு, இந்த வார்த்தை வலித்தது. அப்போதும் அவனால் “நானும் என் தாத்தா சொன்னாங்கன்னு தான் கல்யாணம் பண்ணினேன்” என்று சொல்ல முடியவில்லை.

மில்லுக்கே சென்று விட்டான். ஊரே அடங்கி விட இரவும் வெகுவாய் ஏறிவிட,

மகனை காணாமல் தில்லை மட்டுமே அமர்ந்திருந்தார். வெகு நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியதால் உறக்கம் பிடிக்காமல் இருந்த நாச்சி இன்னும் உணவு கூடத்தில் விளக்கெரிவதை பார்த்து அவரின் அறையில் இருந்து வெளியே வந்தார்.

தில்லை அங்கே அமர்ந்திருப்பதை பார்க்கவும், “என்ன தில்லை, யாரு இன்னும் சாப்பிடலை, ராஜராஜனா?”

ஆம்! என்பது போல தலையசைத்தவர், “இன்னும் வீட்டுக்கு வரலை அத்தை” என,

“ஃபோன் போடு”

“போட்டேன், சுவிச் ஆப்ன்னு வருது”

“மில்லுக்கு போடு”

“அட, எனக்கு இது தோணலையே”

மில்லுக்கு அழைக்கவும் அங்கிருந்த வேலையாள் எடுக்க, நாச்சியிடம் தில்லை கொடுத்தார்.

“டேய், ஆருடா பேசறது. நாச்சி பேசறேன். என் பேரன் இருந்தா கூப்பிடு” என்றார் அதிகாரமாக.

அதை அவன் ராஜனிடம் சொல்ல, “நாச்சி” என்றதும் வந்தான்.

“என்ன கிழவி?”

“என்ன ராசா? கிழவி ஊருக்கு போனதும் மறந்துட்டியா? நான் வந்துட்டேன்! என்னை பார்க்கணும்னு தோணலையா? வீட்டுக்கு வர மாட்டியா?” என்று கேள்விகளை அடுக்கினார்.

“நீ என்ன என்கிட்டே சொல்லிட்டா போன, நான் எதுக்கு வரணும்? நான் வரமாட்டேன்!” என்று முறுக்கினான்.

“ஏலே வாய்யா, பாக்கணும் போல இருக்கு, கண்ணுக்குள்ள நிக்கற”

“அட கிழவி, ஊருக்கு போயிட்டு வந்து டைலாக் எல்லாம் விடற நீ” என்று சத்தமாக சிரித்தவன்.

“இப்போ முடியாது, லோட் ஏத்திட்டு இருக்காங்க, வேலைக்கு இருந்தவங்களை நான் பார்த்துக்கறேன்னு அனுப்பிட்டேன். நீ தூங்கு, நான் காலையில வர்றேன்” என்று விட்டான்.

காலையில் அவனை பார்த்ததும் நாச்சிக்கு தானாய் கண்கள் நிறைந்து விட்டது.

தில்லையை பிடித்து வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார்.

“என்ன உன் புருஷன் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிவானா, இந்த வயசுலையும் அவன் எப்படி இருக்கறான். அவனுக்கு மட்டும் வடிச்சு கொட்டரையோ? என் பேரனை என்ன நீ இப்படி ஆக்கி வெச்சிருக்க” என்று தமிழ்செல்வன் சுவாமிநாதன் என்று எல்லோர் முன்னும் தான் வாங்கினார்.

“கிழவி எங்கம்மாவை ஏன் பேசற?” என்று ராஜராஜன் சண்டைக்கு கிளம்ப,

“பின்ன பேசாம, நாளைக்கு என் பேத்தி வந்து கேட்க போறா? என் புருஷனை விட்டுட்டு போனா நீங்க எல்லாம் சேர்ந்து அவரை என்ன செஞ்சு வெசிருகீங்கன்னு” என்று குதி குதி என்று குதித்தார்.


ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
Last edited:
???

ஒரு பையன் வீட்டுக்காகவே உயிரை கொடுக்கிறான்........
கண்டுக்க நாதியில்லை.......... இது தான் நிதர்சனம்.......
பல நேரம் பிள்ளைகள் வாழ்க்கையை விட வீம்பு தான் பெருசா இருக்கும்.......
தங்கை & தங்கை பொண்ணுக்கு இந்த கதி.........

ராஜராஜனுக்கு ஒரு பாடம் இது.......... ஆயிரம் உறவு இருந்தாலும் மனைவிக்கு ஈடாகுமா???
குடும்பம் எல்லாம் வேணும் தான்........ அதைவிட நம்ம வாழ்க்கையும் முக்கியம்......

இப்போ தில்லை நாச்சி பேசி என்ன பலன்???
அடக்க வேண்டிய நேரத்தில் பாட்டி ரெண்டு பேரையும் அடக்கவில்லை.......
பெரியப்பா ஓகே......... அப்பாவும் இப்படி இருக்கிறது ஆச்சர்யம் தான்........

மண்டல பூஜைக்கு பொண்ணோட வரப்போறாரா அன்பழகன்???

மனோ தான் இடத்திற்கு தகுந்த பதில் கொடுக்கிறான்.......
அன்பழகன் நாச்சியிடம் சொல்றது(y)(y)(y)
அவங்க ரெண்டு பேரும் முடிவெடுக்கிறது தான் இனி சரி.......
எப்போ என்ன முடிவெடுக்க போறாங்க???
Waiting for the 2nd part மல்லி........
 
Last edited:
குடும்பத்துக்காக இவ்வளவு தியாகம் பண்ண ராஜனோட நிலைமையை சரியாக்க குடும்பத்தார் யாருக்குமே அக்கறை இல்லை ... :mad::mad:

ராஜனை யாருமே சரியாக புரிந்து கொள்ளவில்லை... :(:(

அங்கையை பிரிந்த ராஜனுக்காக...

என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன்
தூக்கத்த வாங்கல

உள்ள அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான்
வெளுத்து வாங்குறேன்

மானே என் நெஞ்சுக்குப்
பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு
வாவா பெண்ணே

பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
 
Last edited:
oh seiyarathukku matum rajan venum...avanoda family eppadi iruntha enna

tamilselvanukku ippo kuda paiyan life therila....

என்ன ஆளுங்கடா சாமீ

ராஜா இவங்களுக்காக நீ படிப்பை விட்டது கூட வேஸ்ட் தானோ

அங்கை எனஂன ஒரு மங்கை
ஸ்ட்ராங் இந்த தங்கை
அவளை அனுப்பினானே வேங்கை
அதனால கண்ணுல கங்கை
பிரிப்பானோ பங்கை
சேர்வானோ அங்கையை
 
Last edited:
Hi மல்லி,
சூப்பர் எப்பி
மனோ தான் ஆறுதலாக பேசினான்..
பாட்டியும் பாசம்..
பாவம் தில்லை..
பேத்திய பார்க்க முடியாம
மகன பார்த்தும் கவலை படும் ஜீவன்.
 
Last edited:
Hi மல்லி
பாவம் தில்லை மத்தளமா மாட்டிகிட்ட
பேத்தியையும் பாக்க முடில

பாட்டி கலக்கல்
இப்படி இன்னும் பையனையும் கேக்கணுமே

ஊருக்கு இளைச்சவங்க தில்லையா போயிட்டாங்க இங்க
 
Last edited:
Top